Sunday, November 06, 2011

மாலை

இந்த பிறந்த நாள் இருக்கிறதே பிறந்த நாள் அது நமக்கு வந்தால் தேவலாம். லைப் பார்ட்னருக்கு வந்தால் பரிசாய் என்ன வாங்கிக் குடுப்பது என்ற குழப்பம் இருக்கே ஸ்ஸ்...சிண்டை பிடித்துக் கொள்ள வைத்துவிடும். சூப்பரா இருக்கணும், அவரிடம் இல்லாததாய் இருக்கணும், அவருக்கு  ரொம்பப் பிடித்ததாய் இருக்கணும், ஹைய் இத இதத் தான் ரொம்ப நாளா வாங்கணும்ன்னு நினைச்சேன் என்று கூவ வைக்கக் கூடியதாய் இருக்கணும் ஆனால் எல்லாத்துக்கும் மேலாக விலை நம்ம பட்ஜெட்டில் இருக்கணும், முடிந்தால் கொஞ்சம் மிச்சமும் வரணும்” - இந்த ஸ்பெசிவிகேஷனை கடைக்காரரிடம் சொன்னால் “தம்ப்ரீ...நேரா போய் லெப்ட்ல திரும்பினா வெளியே போற வழி வரும்..போகும் போது ரைட்டுல தண்ணி வைச்சிருப்பாங்க குடிச்சிட்டு போய்ச் சேரு”ன்னு தெளிவாய் சொல்லிவிடுவார்.

ஆனால் என்ன மாயமோ தெரியவில்லை எனக்கு வாங்குவது என்றால் மட்டும் தங்கமணிக்கு எதாவது சுளுவாய் மாட்டும். என் பிறந்தநாளுக்கு ஒருதரம் கழுத்தில் போட்டுக்கொள்ளும் ஒரு ஸ்டைலான மாலை வாங்கித் தந்தார். இந்த மென்ஸ் ஜுவெல்லரியில் எனக்கு அப்படி ஒ்ன்றும் பெரிய ஆர்வம் இல்லை என்றாலும் “ஹைய்ய்ய்”ன்னு ரியாக்‌ஷன் குடுத்து போட்டுப் பார்த்ததில், அழகுக்கு அழகு சேர்த்த மாதிரி இருந்ததால் எனக்கும் பிடித்துவிட்டது. முதலில் கொஞ்ச நாள் வீட்டில் மட்டுமே போட்டுக் கொண்டேன். “வீட்டுல மட்டும் போட்டுக்கறதுக்கு இதென்ன நைட்டியா...இனிமே வெளியில் போகும் போது கழுத்துல மாலை இருக்கணும்..இல்ல” என்று தங்கமணி அன்பாய் சொல்ல. அப்பீல் ஏது? ஆனால் அங்கே ஆரம்பித்தது ஒரு இம்சை.

பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஏனோ பார்வை என் கழுத்தில் போய் நிற்கும். நான் குடுக்க வேண்டிய “ஹைய்”ரியாக்‌ஷனோடு “இதென்ன புதுசா மாலை” என்று ஆரம்பிப்பார்கள். முதலில் எல்லாம் “சும்மாத்தேங்...” என்று ருதுவான பெண் மாதிரி வெட்கத்தோடு நெளிந்து கொண்டிருந்தேன். சில இடங்களில் அது ஒர்க் அவுட் ஆகாமால் “தொண்டைல கட்டி இந்த மாலையை மூனு வேளை  அணிந்தால் கரைஞ்சிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” என்று மெடிக்கல் ரீசன் குடுக்க ஆரம்பித்தேன். இதெற்கெல்லாம் அவசியம் இல்லாமல் வெகு சில இடங்களில் “கௌன் பனேகா க்ரோர்பதி” மாதிரி அவர்களே “யானை முடியா, பூனை கடியா”ன்னு என்று அவர்களே நிறைய சாய்ஸ் குடுப்பார்கள், நானும் எதாவது ஒன்றை “லாக் கர் தீஜீயெ” சொல்லி தப்பிப்பேன்.

ஆனால் சினிமாவில் சி.பி.ஐ ஆபிஸராய் நடிக்கப் போகவேண்டிய சிலர் இருக்கிறார்களே, துளைத்தெடுப்பது மாதிரி பார்த்துக் கொண்டு பதிலுக்கு வெயிட் பண்ணுவார்கள். நான் வேறு வழியில்லாமல் கடைசியில் "ஹீ ஹீ ஸ்டைலுக்குத் தான் போட்டிருக்கிறேன்" என்று வாக்கு மூலம் குடுக்கும் வரை விடமாட்டார்கள். பதிலுக்கு நூற்றுப் பதினைந்து சதவீதம் "ஓஹ்ஹ்ஹ்ஹோ..." என்று  உதட்டோர புன்முறுவலோடு ஒரு பெரிய நக்கல் கிடைக்கும். உண்மையச் சொன்னா நக்கல் விடற இந்த சமுதாயம் இருக்கும் போது ஓசோன்ல ஏன் ஒட்டை விழாதுன்னு அதற்கப்புறம் இந்தக் கேள்வியை சாய்ஸ்சில் விட்டுவிட்டு “அடேங்கப்பா பில்டிங் என்னம்மா இழைச்சுக் கட்டியிருக்கான் , கண்ணாடியெல்லாம் ஜொலிக்கிறது” என்று ஏதாவது சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனாலும் சில விடாக் கொண்டர்கள் விட மாட்டார்கள். திரும்பவும் கேள்வியே காதில் விழாதமாதிரி கொஞ்ச நாள் நடிக்க ஆரம்பித்தேன்.  ஒரு தரம் ஒரே ஒருவர் மட்டும் "துளசி மாலையா" என்று எடுத்துக் குடுக்க ஆமாம் என்று அன்றிலிருந்து கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.

இருந்தாலும் நமக்கென்று வந்து சேர்வார்களே அகராதிகள்.

“துளசி மாலையா...? பார்த்தா தெரியலையே. என்ன துளசி” என்று ஆரம்பித்துவிடுவார்கள்.

“இது காட்டுத் துளசி பார்த்திருக்கமாட்டேள்.” 

“காடா ...அப்படி என்ன நான் பார்க்காத காடு”

ம்ம்ம் சுடுகாடு என்று நொந்து கொண்டு “இது விஷ்வ துளசி. அந்தக் காலத்துல போதி தர்மர் இத கழுத்துல மாலையா போட்டு காவி உடுத்தி...சூர்யா மொட்டையடிச்சிண்டு கம்ப தூக்கிண்டு போதி தர்மரா நடிச்சிருக்கார் பாருங்கோ...சைனா காரனே தொப்பி போட்டுண்டு பிச்சை வாங்கறான்னா பார்த்துகோங்கோளேன்...” ஸப்ப்பா..... சமாளிப்பதற்குள் எனக்கு நாக்கு தள்ளி விடும்.

சில சமயம் விதி வீட்டிற்கு வந்து சோபாவில் உட்கார்ந்து கொண்டு விளையாடும். “என்ன இன்னும் கல்யாண ஷோக்கு குறையலையோ.. இன்னும் மாலையும் கழுத்துமா இருக்கியே அதான் கேட்டேன்” போன்ற அரத ஜோக்குகளுக்கெல்லாம் “எப்படீங்க இப்படியெல்லாம்” என்று சம்பிரதாயமாய் சிரித்துவிட்டு “மாமாக்கு சீக்கிரம் காப்பி போட்டுக் குடுமா... இந்த மாதிரி மொக்கை போடறதுக்கு இன்னும் ரெண்டு வீடு இருக்காம்”ன்னு பேக்கப் சொல்ல வேண்டியிருக்கும்.

ஏனோ நடுவில் இப்போ கொஞ்ச நாள் இந்த மாலை சம்பிரதாயம் இல்லாமல் இருந்தது.

சமீபத்தில் காசு குடுத்து சோற்றுக்கடன் ஆற்ற ஒரு க்யூவில் நிற்க வேண்டிய நிர்பந்தம். முன்னால் ஒரு மாமி நின்று கொண்டிருந்தார். என் மகள் ஏதோ என்னிடம் கேட்க, திரும்பிப் பார்த்தவர் சினேகமாய் சிரித்து "கழுத்தில் என்ன துளசி மாலையா" என்று ஆரம்பித்தார்.

ஆஹா கூப்பிடுடா போதிதர்மரைன்னு நான் உஷாராகும் போது  "துளசி மாலை மாதிரியே இல்லையே ஸ்டைலாய் உங்களுக்கு ரொம்ப நன்றாக இருக்கிறதே" என்று சொன்னார். இப்பேற்பட்ட நல்ல மனிதர்கள் இருக்கும் போது ஓசோன்ல எப்படீங்க ஓட்டை விழுது?

45 comments:

Akhila said...

Aaagaaa! Agaradhi kku ithanai usage-aaa? :)))))
Super... but thangamani kku enna vangineenga nnu sollave illaiye? Topic engayo aaarambichu eppadiyoo poiduthe? :)

Porkodi said...

ivlo kashtam vandhadhe thangamani pottukka sonnadhala thaan, illena prachanaiye vandhurukaadhu thala!

Sh... said...

நீங்க ஏன் ரெகுலரா எழுதறதில்லேன்னு (திருப்பித் திருப்பிக்) கேக்கறவாளுக்கு என்ன பதில் சொல்வேள்?

பினாத்தல் சுரேஷ் said...

இப்படி எழுதற ஆளு அடிக்கடி வனவாசம் போனா, ஏன் ஓசோன்லே ஓட்டை விழாது?

middleclassmadhavi said...

அந்த மாலையோட ஃபோட்டோ போட்டிருக்கப் படாதோ?!! :-))

Anonymous said...

hmmm.... for your "level" only a mami appreciated and not a young girl!! thats why ozonela ottai!:)))).after a long time dubuks!!nice one. sasisuga203

Anonymous said...

indha post eppadi ..kalakkal - lock kar dheejiye - Paavai

bandhu said...

நன்னா எழுதறேள்.. கொஞ்சம் அடிக்கடி தான் எழுதுங்களேன்.

Anonymous said...

kalakkal thala :))))

anbudan
karthik...

DaddyAppa said...

உங்க தங்கமணி வாங்கி தறாங்கலேன்னு சந்தோஷப்படுங்கோ!

நம்ம தங்கமணி எல்லாம் வாங்கினாலும் ...நம்ம கிரெடிட் கார்டு statement ல தான் வரும்.

அது கூட சகிச்சுக்கலாம்....எங்க பாஸ் (lady) i -phone கிப்ட் husband கிட்ட வாங்கிட்டு ...அவருக்கு ஒரு புன்னகை மட்டும் ரிட்டன் பண்ணிருக்காங்க...

நம்ம புஜ்ஜி, கோல்டி, மணி க்கெல்லாம் செயின் வாங்கரதில்லையா ?!! :-))))

Munimma said...

thangamanikkitte adikadi vaaya koduthu maatippeenga pola, avarum ivar periya minor paaruntu, chain vaangiruppanga. Athulayavathu irukkatumentu.

aaramba paragraph enna aachu?

Anonymous said...

Super renga! S malai enge vaanginalam?

Lak

R. Jagannathan said...

இவ்வளவு பேர் பார்த்து ஜாரிச்சிருக்கா, அப்படின்னா அடுத்த பொறந்த நாள் வந்துண்டிருக்கு.. இப்ப என்ன வரும், கடுக்கனா? ஐய்யோ இந்த பேரழகருக்கு (அதான் ஆல்ரெடி அழகுக்கு மேல் அழகாயாச்சே) எப்படி தேடி தேடி வாங்கரன்னு உங்க தங்கமணிட்ட கண்ணைவிரிச்சு நீங்க சொல்லப்போறது எனக்கு இப்பவே தெரியறது. - ஜெ.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Someone(!) I know says "Buying gifts for spouse is complicated than rocket science"...:) Nice post..:)

Anonymous said...

நான் ரொம்ப நாளா உங்க எழுத்துக்களை படிச்சுண்டு இருக்கேன், ஆனா இது வரைக்கும் பின்னூட்டம் போட்டதில்ல. அது எப்படி இப்படி எல்லாம் எழுதறேள் ? அதெல்லாம் அப்டியே வரது தான் இல்ல ? MMKR ராஜு மாதிரி. அடிக்கடி எழுதுங்க. வாழ்த்துக்கள். Very nice entertaining in typical dubuku style.
Lakshmi

balutanjore said...

dubukku sir
sowkyama
nanum ungalaipol konja naal kanamal poyvitten(hi hi)
innum ezhudungo sir
nannaithan irukku

adutha postil sandikkiren

தக்குடு said...

யாருக்கெல்லாம் நம்ப டுபுக்கு அண்ணாச்சி அந்த அபூர்வ மாலையோட இருக்கும் படத்தை பாக்கனும் கையை தூக்குங்கோ! :)) thakkudu83@gmail.com -ku மெயில் அனுப்பினா படம் கிட்டும். எல்லா செல்வத்தையும் கூரையை பிச்சுண்டு கொட்டக்கூடிய அந்த படம் 'ஸ்பெஷல்' ஆஃபரா வெறும் $10 டாலர்தான் :P

Anonymous said...

kanamal ponor sangathil nanum member!! So good to read your post again........btw, birthday ungakllukka illai Thangamanika? Athey sollave illaye?
Revolver Rita

shobana said...

yen yar ketalum thulasi maalai,medical maalai nu doopu vidarel....dhariyama sollungolen.."ithu en wife gift ah thandha"nu....
P.s. : quotes kulla irukara line ah ketutu ava namutu siripu siricha, im not responsible.. :)

Sowmya said...

“தொண்டைல கட்டி இந்த மாலையை மூனு வேளை அணிந்தால் கரைஞ்சிடும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்” -- D haha...Romba rasitha varigal..

Title : Maalai enai vaatuthu ! vechirukalame ..

Superb post :D

ashok said...

ahaa...:)

sriram said...

வாத்யார்,
உங்க பிஸி ஷெட்யூல் தெரியும், இருப்பினும் எல்லாரும் கேக்கறா மாதிரி அடிக்கடி எழுது வாத்யார், நானும் நெறய ப்ரஷர்ல இருக்கேன், அப்பப்ப இங்க வந்து இளைப்பாறிப்பேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Suresh Subramanian said...

அட இப்படி கூட எழுத முடியுமா....அருமை...

நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்

www.rishvan.com

Nivi said...

I really enjoyed reading that! Made me LOL! Simply superb =D

Anonymous said...

what is this thala? why no post for long time ???again busy with short film ah?

Anonymous said...

what is this thala? why no post for long time ???again busy with short film ah?

Anonymous said...

Where are you dubukku?We miss yr post - TV Akka

Priya said...

Dubukku Sir...Nice Posts..Keep Writing...

Rajesh said...

software Testing Blog


http://www.testing4easy.blogspot.com/

gwl said...

Nice posts.http://www.giftwithlove.com

Anonymous said...

Dubukku - Since you have many followers, may I request you to do a post on Barnevernet which is a child protection service agency in Norway? This agency has taken away two Indian children (4 months and 3 years) from their parents and placed them in two different foster homes. Reasons mentioned are that the mother was feedind the boy with her hand and not a spoon !!!!! etc. You may want to google Abhigyan and Aishwarya (children) and Anurup and Sagarika Ghosh (parents). Anurup as I understand is a geoscientist in Norway.

roses said...

Lol...
rosesandgifts.com

Anonymous said...

Hi Dubukku.. What happened for this 3 months period.. Awaiting everyday..

--Srini
Tirunelveli

Raju said...

Hi Dubukku,

Cheena Thana maama, Kingkong maami pondra paergalum, paer karanangalum (nomenclauture) vaithu oru round varalame?

Rajesh

uthra said...

Very nice, and very jovial and also enjoyable. chance-a illa. sirichu vayiru punnayiruchu....lol

Anonymous said...

Its been 3months!! Wake up !!
- VikramBalaji

Technology blog said...

எல்லாத்துக்கும் மேலாக விலை நம்ம பட்ஜெட்டில் இருக்கணும் - ithuthan aangalin ennam.

Anonymous said...

>>>
Its been 3months!! Wake up !!
>>

repeatttttt,....

Anonymous said...

Superb...
picturebite.com

Anonymous said...

have you shifted your blag elsewhere? All members +Anonymus members are waiting for your post

Dubukku said...

அல்லாரும் மன்னிச்சிக்கோங்க கொஞ்சம் வேலை அப்பிடி இப்படியா இருக்கு. இன்னும் ஒரு வாரத்துக்குள்ள கண்டிப்பா திரும்ப வந்துடறேன்.

Anonymous said...

unga oorla oru varaththukku pathu naalo?
Naan thoothukkudi,anga yelu naalu than.
VikramBalaji

Dubukku said...

அகிலா - :) அதெல்லாம் அப்படி தான் என்னிக்கு சொல்ல வந்ததை கரெக்ட்டா சொல்லியிருக்கேன் :)

பொற்கொடி - நீங்க தெகிரியமா சொல்லிட்டீங்க :))

ஷ் - -ஹீ -ஹீ உங்களுக்குத் தெரியாததா :)

பினாத்தல் - அண்ணாச்சி காலக் காட்டுங்க :)

மாதவி - :)) போட்டிருக்கோமே பேஸ்புக்குல

சசிசுகா - மிக்க நன்றிங்க. உங்களுக்கு தெரியறது அந்த யங் கேர்ல்ஸ்க்கு தெரியல பாருங்க. சே என்ன உலகம்டா இது !!

பாவை - மிக்க நன்றிங்கோவ்

பந்து - கண்டிப்பா முயற்சி செய்கிறேன் எதாவது பிரச்சனை நடுவில் வந்து விடுகிறது அதான் இல்லாட்டி இங்க விட்டு எங்க போறேன் :)

கார்த்திக் - மிக்க நன்றி தல

டேடிஅப்பா - ஹீ ஹீ அதே அதே என்ன இருந்தாலும் அந்த மாலையோடு மகிமை அப்புறம் தான் தெரிஞ்சுது (அதாவது அவங்க வாங்கிக் குடுத்த அப்புறம்)

முனிம்மா - அப்படியே கிட்ட இருந்து பார்த்த மாதிரியே சொல்றீங்க !!

லக்‌ஷ்மி - இங்க மென்ஸ் ஜுவெல்லரி ஷாப் ஒன்னு இருக்கு அங்க தான்

ஜே - ஹா ஹா நம்பினா நம்புங்க கடுக்கன் மாதிரி காதுல எதாவது தோடு போட்டுக்கோங்கன்னு ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதான் பேஷனாம். நம்மள ஒரு வழி பண்ணாம விடமாட்டங்க போல

அப்பாவி - மிக்க நன்றி. நான் அது யாருன்னு கேக்கவே மாட்டேனே :)) ரொம்ப கரீக்டா சொல்லியிருக்காங்க

லக்‌ஷ்மி - முதல் கமெண்டுக்கு மிக்க நன்றி. எல்லாம் உங்கள மாதிரி ஊக்குவிற்பதால் தான். பெயர்ல ஏதாவது வித்யாசம் வைச்சுக்கோங்களேன் ஏகப்பட்ட லக்‌ஷ்மி தெரியும் எனக்கு இங்க ப்ளாக்ல. ஐடெண்டிபை செய்வது ஈசியாய் இருக்கும்.

பாலு - வாங்க நலம் நீங்களும் நலமா. பாருங்க நானும் காணாமபூட்டேன் :(

தக்குடு - குறும்பு குறும்பு இன்னுமா குறையல :P

ரிவால்வர் ரீட்டா - யெக்கோவ் எப்டீருக்கீங்கோவ். பர்த்டே எனக்கே தான் அது அப்போ

ஷோபனா - கரிக்ட்டு சொல்லலாம் தான் இருந்தாலும் என்னமோ கூச்சம் (அட இங்க பார்டா லவ்ஸன்னு சொல்லீட்டா :P

சௌம்யா - மிக்க நன்றி நீங்க சொன்ன தலைப்பு ரொம்பவே பொருத்தமா இருக்கு :)

அஷோக் - அடடே :)

ஸ்ரீராம் - உங்களுக்குத் தெரியாததா..சமுத்திரத்தில அலை எப்ப ஓய்ஞ்சு எப்ப குளிக்கிறதுன்னு இன்னிக்கு குதிச்சுட்டேன்

ரிஷ்வான் - மிக்க நன்றி நண்பரே. நானும் உங்கள் பக்கத்திற்கு வருகிறேன் (கஷ்டம் இப்ப தான் பதில் கமெண்டே போடறன்னு நினைச்சிக்காதீங்க ப்ளீஸ்)

நிவி - மிக்க நன்றி மேடம்

அனானி - விசாரிப்புக்கு மிக்க நன்றி தல. இல்லீங்கோவ்
சில பல வேலைகள் ஆகிவிட்டது அதான்


டி.வி அக்கா - மன்னிச்சிக்கோங்கோவ். கொஞ்சம் கேப் ஆகிடிச்சு. இதோ வந்துட்ட்டேன்


ப்ரியா - மிக்க நன்றி மேடம் உங்கள் ஊக்குதலுக்கு

அனானி - வேளையில் பதிலளிக்காததற்கு மிக வருந்துகிறேன். தயவு செய்து தவறாக நினையாதீர்கள் அந்த வழக்கைப் பற்றி ஆராய்ந்துவிட்டு பதிகிறேன்.


ஸ்ரீனி - மிக்க நன்றி நெல்லை நண்பரே. கொஞ்சம் இடைவெளி ஆகிவிட்டது. உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி

ராஜு - சில பெயர் காரண்ங்கள் அவர்களை காட்டிக் கொடுத்துவிடும் அது எனக்கு வம்பாகிவிடும் அதான் :)))

உத்ரா - மிக்க நன்றி மேடம்

விக்ரம்பாலாஜி - மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் பாலோஅப்பிற்கும். கடமைப் பட்டுள்ளேன். சில சமயம் சில பல விஷயங்கள்/வேலைகள் தடையாக வந்துவிடுகிறது அதனால் தான் வரமுடிவதில்லை. Thanks for the nudge.

டெக்னாலஜி - இல்லையா பின்ன

அனானி1 & அனானி 2 - மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கு

Sriram said...

“வீட்டுல மட்டும் போட்டுக்கறதுக்கு இதென்ன நைட்டியா..." Fell off my chair!!

Anonymous said...

super...... sirichu sirichu vayir ellam punna pochu !!!

Post a Comment

Related Posts