அடடா எப்படி சொல்வது எங்கே ஆரம்பிப்பது. இந்த தரம் கலக்கலான இந்தியா ட்ரிப். செய்ய நினைத்தில் முக்கால் வாசி டிக்.போனஸாய் லிஸ்டில் இல்லாத சில அயிட்டங்களும் டிக் ஆனது எனக்கே வியப்பு. ஏர் இந்தியாவில் புக் செய்திருக்கிறோமே என்று வேண்டிக் கொண்டு போனால், இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்சரியப் படுத்தியது.அதாவது ஒரு சீட்டுக்கும் அடுத்த சீட்டுக்கும் நடுவில் போதிய இடைவெளி.ஏகப்பட்ட லெக் ரூம். ஏர் ஹோஸ்டட்ஸ் ராசி இல்லை என்று முடிவு கட்டியே போனால் ”ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ” என்று அம்சமாய் புது ரெக்ருட். (யோவ்...லிஸ்ட்ல இல்லாததும் டிக்குன்னு இத சொல்லல..சொல்லிட்டேன் ஆமா). சீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக பிரித்திருந்ததால் நான் மட்டும் தனியாக உட்கார நேர்ந்தது. ப்ளைட்டில் குடுத்த சாப்பாடு கேபிள் பாஷைல சொல்லனும்னா ”டிவைன்”.
இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று உட்கார்ந்த இடத்திலிருந்தே “உஸ் உஸ்ஸ்ஸ்” என்று ஜாடை மாடையாக அடி போட்டுக்கொண்டிருந்தேன். நான் கர்ம சிரத்தையாய் பாசந்தியை கேட்டுக்கொண்டிருந்ததை பின் வரிசை வெள்ளைக்கார மாமா வெட்கமே இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார். பார்த்தால் கூட பரவாயில்லை “தம்பி நான் பாசந்தியை தொடவே இல்லை, பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிட்டேன். அது தீர்ந்தவுடன் இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று நான் திரும்ப “உஸ்ஸ் உஸ்” என்று ஆரம்பித்ததை நல்லவேளை அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா கவனிக்கவில்லை.
போய் இறங்கிய முதல் இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப்ளேவேர்வர்ட் மில்க், ஸ்வீட் பான், கொத்துபரோட்டா,பருப்பு போளி, சப்போட்டா மில்க் ஷேக், பரோட்டா குருமா என்று வகை தொகையில்லாமல் வரிசை கிரமம் பார்க்காமல் வழியில் தென்பட்டதை எல்லாம் பகாசுரேஷ்வரா செய்ததில் `சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் மாதிரி தானா?` என்று ஆட்டோக்காரர் அன்பாக விசாரித்தார். ”நாளைக்கு கண்டிப்பா கடை தொறப்பேன் சார்” என்று கடைக்காரர் கெஞ்சியும், பாதி ஷட்டர் போட்டிருந்த கடையை திறக்கச் செய்து, வாயில் அரைத்துக் கொண்டிருந்த ஸ்வீட் பானை பாதியில் துப்பிவிட்டு நான் ஆவின் ப்ளேவர்ட் மில்க் குடித்ததை ஆட்டோக்காரர் ஒரு வேளை பார்த்திருப்பாரோ என்று தங்கமணிக்கு டவுட்டு.
முதல் நாள் பாண்டி பஜாரில் பேரம் பேசி வாங்கவேண்டுமே எங்கே ஆரம்பிப்பது என்று முழித்துக் கொண்டிருந்த போது ஒருவர் பெல்ட் வாங்க அவருடனே ஒட்டிக் கொண்டேன். அவர் வாங்கிய விலையை கவனித்து நான் கேட்டபோது அதையும் விட பத்து ரூபாய் குறைத்துக் கொடுத்த போது எனக்கு மயக்கமே வந்தது. சென்னை மால்கள் என்னை மாதிரி ஃபாரின் பிச்சைகாரர்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது. இந்த முறை என்ன தெய்வ குத்தமோ தெரியவில்லை நவநாகரிக யுவதிகள் அவ்வளவாக தென்படவில்லை. ஐநாக்ஸில் ஏர்போர்ர்ட்டை விட செக்யூரிட்டி பலமாய் இருக்கிறது. பையிலிருந்த எக்ஸ்ட்ரா பாட்டரியை வாங்கிக் கொண்டார்கள. “பைல முறுக்கு வைச்சிருக்கேன் அதொன்னும் பிரச்சனையில்லையே” என்று நக்கலாய் கேட்டது தப்பாய் போய்விட்டது, அதையும் வாங்கிவைத்துவிட்டார்கள் வெளி உணவு கூடாதாம். தெரிந்து கொண்டது நல்லதாய் போனது. திருட்டுத் தனமாய் கடத்திக் கொண்டு போன மைசூர் பாகு கூட கொஞ்சம் இனித்தது. முனி-2 தியேட்டரில் பெண்கள் வீல் வீல் என்று அலறிக் கொண்டே ரசித்துப் பார்த்தார்கள். தேவதர்ஷினி மாமியார் கோவை சரளாவை அடிக்கும் காட்சிகளில் பெண்கள் விசில் அடித்து ஆராவாரம் செய்கிறார்கள். தியேட்டர்கள் எல்லாம் அருமையாக இருக்கின்றன. இன்னொரு தியேட்டரில் சூச்சா போகுமிடத்திலும் டீ.வி வைத்திருக்கிறார்கள் என்று அக்கா பையன் சொன்னான். படம் அங்கேயே ஆரம்பித்துவிடுமா என்று கேட்டதில் இல்லை வெறும் அட்வர்டைஸ்மண்ட் மட்டும் தான் என்று பதில் வந்தது. தப்பித்தது. “உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகவிடமாட்டான் ” என்று சீனாதானா மாமா சொன்னது தான் நியாபகத்துக்கு வந்தது. தீர்க்கதரிசி.
சென்னை வாசத்தின் சந்தோஷம் பதிவர் சந்திப்பு . பாலபாரதியும் இன்னும் சில வலைபதிவர்களும் சந்திப்பு விஷ்யத்தைப் பரப்பி நிறைய வலையுலக நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்துல்லா எல்லாருக்கும் பிரியாணி ஏற்பாடு செய்தது சந்திப்பின் ஹைலைட். மனிதர் கொஞ்சம் கூட அலட்டலே இல்லாமல் இனிமையாக இருக்கிறார். கார்கி,யுவகிருஷ்ணா,சுரேகா மற்றும் பாலபாரதி முறைவாசல் வைத்து எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் பெயரை நியாபகம் வைத்துக் கொள்ளும் லட்சணம் எனக்குத் தெரியுமென்பதால் அமைதியாய் இருப்பதே நல்லது என்று சமத்தாய் ஓரமாய் உட்கார்ந்து கொண்டேன். தமிழ் அமுதன் மொபைலில் படமெடுத்தே கலாய்த்துக் கொண்டிருந்தார்.மோகன் குமார், ஆதி, எறும்பு ராஜகோபால்,ப்ரதீப், எல்.கே,ராம்ஜி யாஹூ என்று வலையில் பேசியிருந்த பல பேரை சந்திக்க முடிந்தது சந்தோஷமாய் இருந்தது. வந்ததில் பாதி பேர் திருநெல்வேலி மாவட்டம் என்பது ஸ்பெஷல் சந்தோஷம் :). என்னங்க இப்போல்லாம் வலைப்பதிவுகளில் சண்டையே இல்லாம சப்புன்னு இருக்கே ஏதாவது செய்யக்கூடாதான்னு வருத்தப்பட்டதில் கூகிள் பஸ் தான் இப்போ அதுக்கெல்லாம். வந்து ஜோதில ஐய்க்கியமாகிடுங்கன்னு அன்போடு வரவேற்றார்கள்.
ரிட்டர்ன் வரும் போது டெல்லி ஏர்போர்ட்டில் க்யூவில் அடுத்ததாய் நின்று கொண்டிருந்த தமிழருக்கு தமிழ் ப்ளாக் பற்றி தெரிந்திருந்தது.அடுக்காய் கேள்வியெல்லாம் கேட்டார். நாலாவது கேள்வி “அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டிருக்கீங்க?” - ஆஹா சரிதான்.

32 comments:
// ப்ளைட்டில் குடுத்த சாப்பாடு கேபிள் பாஷைல சொல்லனும்னா ”டிவைன்”. //
நல்லா நோட் பண்றீங்க மனுஷனை...
// இந்த முறை என்ன தெய்வ குத்தமோ தெரியவில்லை நவநாகரிக யுவதிகள் அவ்வளவாக தென்படவில்லை. //
நீங்க வார நாட்களில் சென்றிருப்பீர்கள்...
// பையிலிருந்த எக்ஸ்ட்ரா பாட்டரியை வாங்கிக் கொண்டார்கள. //
இப்போல்லாம் பேட்டரி வச்சிருக்குறவா தான் தீவிரவாதி தெரியுமோ...? தமிழ்நாட்டுல இருக்குறவால்லாம் தேசத்துரோகிங்க ஓய்...
அருமை.
இவ்ளோ விரைவா பதிவு போட்டதை நினைச்சா...
மற்றபடி உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ச்சி டுபுக்கு. நேரில் உங்களிடம் ஒரு உண்மையை சொல்லவில்லை. உங்களின் தங்கமணி பதிவுகள் பார்த்து தான் நானும் ப்ளாக் எழுத ஆரம்பிதேன். ஆரம்பத்தில் நானும் தங்கமணி குறித்து (நான் ஹவுஸ்பாஸ் என்பது வழக்கம்) சில பதிவுகள் எழுதி, வாங்கிய அடி தாங்க முடியாமல், பின் "சமூகம்" பக்கம் திரும்பி விட்டேன்.
ஒரே பாராவில் பதிவர் சந்திப்பை அழகாய் கவர் பண்ணிட்டீங்க தலைவா
Back to Form :)
2 மாசத்துக்கு ஒண்ணு போட்டாலும் மற்ற பதிவர்களைவிட மொக்கை அதிகமில்லாததால் வாழ்த்துகள். இந்த பதிவில் நகைச் சுவையும் கம்மிதான். 2, 3 பாசந்தி சாப்பிட்டும் போதவில்லை. - ஜெ.
:)))))
என்னடா இது இன்னும் அண்ணாச்சி போஸ்ட் போடலையேனு யோசிச்சுண்டு இருந்தேன். ப்ளைட்ல நீங்க தனியா போயிட்டீங்க ஓக்கே! பக்கத்துல யாரு இருந்தா?னு சொல்லவே இல்லையே.....:))
கலக்கிட்டிங்க....வெட்கம் பார்த்தா பாசந்தி கிடைக்குமா.... சோமலியான்னு ஆட்டோக்காரன் கேட்டது ஹைட்... லண்டன்ல அவ்வளவு காஞ்சுட்டிங்களா....
\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ், அவரு எப்ப ஃபார்ம் அவுட் ஆனாரு?. எப்போதும் அதே ஃபார்ம்ல இருந்து சிக்சர் அடிச்சுகிட்டு தான் இருக்காரு. அதனால back to blog ன்னு இன்னும் ஒரு கமெண்ட் போட்டு பிராயச்சித்தம் பண்ணிக்கோங்க:-)
ரொம்ப நல்லா இருக்கு டுபுக்கு எப்போதும் போல, அடிக்கடி எழுதுங்க.
உங்களைச் சந்திக்க மிகவும் முயற்சித்தேன் டுபுக்கு.. முடியவில்லை. வேலைல மாட்டிக்கிட்டேன்..! அடுத்த முறை பார்ப்போம்..!
என்னது? சென்னை வந்தீங்களா??
பிளைட் மேட்டர் அன்னிக்கு சொல்லவே இல்லையே
//சார் சோமாலியால வெயில் எல்லாம் எப்படி...நம்மூர் மாதிரி தானா?` என்று ஆட்டோக்காரர் அன்பாக விசாரித்தார்//
டுபுக்கு ஸ்டைல்... சூப்பர். :)
//“உலகம் போகிற ஸ்பீடுல இன்னும் கொஞ்ச நாள்ல ஒன்னுக்கு கூட ஒழுங்கா போகவிடமாட்டான் ”//
LoL...! Idhu onnum yaaro sonna theerka tharisana vaarathainga maadiri theriyalayae! Dubukkaar anubavam madiri theriyudhe! :-)
//இருக்கை அமைப்பே குடும்ப கட்டுப்பாடு ரீதியில் ஆச்சரியப் படுத்தியது...//
//அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா...//
Dubukkisms :))))
//போய் இறங்கிய முதல் இரண்டு நாட்களில்...வகை தொகையில்லாமல் வரிசை கிரமம் பார்க்காமல் வழியில் தென்பட்டதை எல்லாம் பகாசுரேஷ்வரா செய்ததில்//
அடுத்த இரண்டு நாட்கள் வீட்டை விட்டே வெளியில் வர முடியாமல் போனதே...(வாளியும் கையுமாய்) அதை ஏன் அவைக்குறிப்பிலிருந்து நீக்கி விட்டீர்கள், சுவாமி?! :)))
டெல்லி ஏர்போர்ட்டில், டுபுக்குவை அசரவைத்த அந்த நபரைப் பார்க்க வேண்டும் போலிருக்கிறது!:)))
//“அப்போ நீங்க இது வரைக்கும் எத்தன புஸ்தகம் போட்டிருக்கீங்க?” //
நாங்கள்ளாம் டைரெக்டா, சினிமாதான்னு சொல்லிட்டீங்களா, இல்லியா?
//பாலிதீன் பாக்கிங்கோட அப்படியே இருக்கு வேணுமா?” என்று வெட்கமே இல்லாமல் கேட்டார். நானும் வேறு வழியில்லாமல் வாங்கி சாப்பிட்டேன். அது தீர்ந்தவுடன் இரண்டாவது மகள் பாசந்தியை வேஸ்ட் செய்கிறாளே என்று நான் திரும்ப “உஸ்ஸ் உஸ்” என்று ஆரம்பித்ததை நல்லவேளை அந்த வெட்கம் கெட்ட வெள்ளைகார மாமா கவனிக்கவில்லை.//
வெக்கமேயில்லாம் அவரோட ஸ்வீட்டை வாங்கித் தின்னுட்டு அவரையே வெக்கங்கெட்டவர்னு சொன்ன உமக்கு அடுத்த ட்ராவலில் சாப்பாடே கிடைக்காது பாருங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
\\கைப்புள்ள said...
Back to Form :)\\ யோவ் கைப்ஸ், அவரு எப்ப ஃபார்ம் அவுட் ஆனாரு?. எப்போதும் அதே ஃபார்ம்ல இருந்து சிக்சர் அடிச்சுகிட்டு தான் இருக்காரு. அதனால back to blog ன்னு இன்னும் ஒரு கமெண்ட் போட்டு பிராயச்சித்தம் பண்ணிக்கோங்க:-)//
Back to blog...திருந்திட்டேன் அப்பாஜி :)
Google bus enral enna thalaivare ? I'm new to blog.
வணக்கம் சார்.. நான் வலைத்தளத்துக்கு புதுசு..
அது என்ன தலைப்பு காந்தி செத்துட்டாரா.. இந்த பட்டிக்காட்டானுக்கு புரியல.. இருந்தாலும் எழுதிய விதம் என்னைக் கவர்ந்தது.. முடிந்தால் இங்கேயும் வந்து பாருங்களேன்.. http://www.tamilpattikkattaan.blogspot.com/
சீட்டெல்லாம் ரஜினி ஸ்டைலில் மூன்று மூன்றாக -wow
அலாவ்.. யாராவது இருக்கீங்களா..
இந்த மாதிரி அப்ரூவல் எல்லாம் வெக்கறதுக்கு யாரு அப்ரூவல் கொடுத்தது??? சங்கம் எப்படி இதை அனுமதிக்கலாம்.. சரியான அராஜகமா இருக்கே..
//இரண்டு நாட்களில் கரும்பு சூஸ், பேல் பூரி,ஆவின் ப்ளேவேர்வர்ட் மில்க், ஸ்வீட் பான், கொத்துபரோட்டா,பருப்பு போளி, சப்போட்டா மில்க் ஷேக், பரோட்டா குருமா//
கேக்கறதுக்கு கலக்கலா இருக்கு சரி.. ஆனா வயிறு கலக்கல் எப்படி அதை சொல்லவே இல்லையே.. எல்லா ஏர் இந்தியா ஃப்ளைட்டும் நல்லா ஆயிடுச்சா இல்ல அது உங்களை மாதிரி வி.ஐ.பிக்காக ஸ்பெசலா தல?
அனானி ஆப்ஷன் தான் இல்லையே அப்புறம் எதுக்கு அப்ரூவல் வேற? (என்னை மாதிரி கொஞ்சம் அழகான பொண்ணுங்கன்னா தொந்திரவுன்னு ஒத்துக்கலாம்..) கன்னாபின்னாவென ஆட்சேபிக்கிறேன். :(
பிலாசபி பிரபாகரன் - :) அதே அதே வார நாட்களில் தான் போனேன். நீங்களும் நல்லா தான் நோட் பண்ணுறீங்க :)))
சார்வாகன் - மிக்க நன்றி ஹை
மோகன்குமார் - :))) எனக்கும் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.ஆஹா தன்யனானேன். ஆக அது தான் உங்க சமூகப் பார்வைக்கு காரணமா
கைப்புள்ள - உங்களிடம் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சி.(அதை எழுத விட்டுவிட்டது).அட நீங்க வேற ஓட்டிக்கிட்டு
ஜகன்னாதன் - மொக்கை - -ஹீ -ஹீ ஒன்னும் சொல்றதிக்கில்லை...நீங்க என் கிட்டேர்ந்து ரொம்ப எதிர்பார்க்கிறீங்க :)) ஆனாலும் பாராட்டுக்கு மிக்க நன்றி
கார்க்கி - :)))
தக்குடு - பக்கத்துல ஒரு பாட்டி இருந்த்தாங்க. அவ்வ்வ்வ் போதுமா?
பத்மநாபன் - அதே அதே வெட்கமா அப்படீன்னா என்ன? :))
அபி அப்பா - உங்களிடம் தொலைபேச விட்டுப் போய்விட்டது. சே...அடுத்த தரம் சந்திப்போம். இந்தக் கோவமா..ஐய்யா கமெண்ட்டில் இவ்வளவு ஓட்டக்க்கூடாது என்னை :) இருந்த்தாலும் மிக்க நன்றி ஹை
உண்மைத்தமிழன் - உங்களுக்கு ரொம்ப உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்களே?கண்டிப்பாய் அடுத்த முறை சந்திப்போம்
அமுதா - அட ஆமாங்க.உங்களுக்கு தெரியாதா. அடடா நான் ப்ளாக்ல எழுத முடியலை. சென்னை பதிவர்கள் தான் எல்லோருக்கும் தகவல் பகிர்ந்தார்கள்.
எல்.கே - பாசந்தி மேட்டரையா? புக் மேட்டர் வரும் போது :))
சதீஷ் - ரெண்டும் தான். சீனாதானா மாமாவும் இதே மாதிரி சொல்லுவார்.
மதி - அதே அதே ஆனால் இப்போதெல்லாம் வயிறு பற்றி கவலையே படுவதில்லை. சாப்பிடுவதை சாப்பிட்டுவிட்டு மாதிரையில் சமாளித்துக்கொள்ளலாம் என்ற கொள்கை தான் :)
பாஸ்டன் - -ஹ்லோ வெட்கமா..அப்புடீன்னா?
பாபு - வாங்க http://en.wikipedia.org/wiki/Google_Buzz இந்த லிங்கில் போய் பாருங்க. பேஸ்புக் மாதிரி இன்னும் சிலவற்றின் ஒரு கலவை.
பாலா - வாங்க வாங்க. தலைப்போடு அர்த்தம் செய்தியை ரொம்ப லேட்டா சொல்றேன்னு. கண்டிப்பாய் உங்கள் பக்கமும் வருகிறேன்.
பொற்கொடி - கேடியக்கா நெசமாலுமே ஏர் இந்தியா நல்லா இருந்தது. நீங்க சொன்ன அத்தனையயும் சரி பண்ணியாச்சு இப்போ :)
அப்பவே எங்க அம்மணி சொல்லுச்சி! AirIndia -வுல போகலாம் என்று! நான்தான் இரும்மா kingfisher -ஐ ட்ரை பண்ணுவோம் என்று சொன்னேன். நீங்க சொல்லறத பார்த்த ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன் போலே!
//சென்னை மால்கள் என்னை மாதிரி ஃபாரின் பிச்சைகாரர்களுக்கு எட்டாக் கனியாகிக் கொண்டிருக்கிறது//- Very True ; சாப்ட்வேர் -லே வேலை செய்யற நீங்களே இப்படி சொன்ன, எங்க நிலைமையே கொஞ்சும் யோசிச்சி பாருங்க.
Post a Comment