Thursday, May 19, 2011

ஜில்பான்ஸ் – 190511

சமீபத்திய சினிமா
கொஞ்ச நஞ்சமில்லை ஐந்து வாரங்கள் (ஹீ ஹீ சரி மூன்று வாரங்கள்) வேலை பின்னிப் பெடலெடுத்துவிட்டது. ரொம்ப அலுப்பாயிருக்கும் போது சாப்பாட்டுக்கு அப்புறம் சினிமா போனால் சொஸ்தமாகிவிடும் என்று டாக்டர் சொல்லி இருக்கிறாரே என்று சினிவேர்ல்ட் இணையத்தைப் பார்த்து அரக்கப் பரக்க அவசரமாய் போய் "சார் எச்சூஸ்மீ ஐ அம் தி அர்ஜென்ட்"ன்னு உட்கார்ந்தால் தலைப்பு ஜிலேபி ஜிலேபியாய் இருந்தது. சரி இது ஒருவேளை ரொம்ப அட்வான்ஸ்ட் டைட்டில் டிசைன் போல நமக்குத் தான் புரியவில்லை என்று பார்த்தால் எல்லோரும் மலையாளத்தில் சம்சாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்தா இது குருவாயூரப்பா !! நான் தான் தியேட்டர் மாறி வந்து உட்கார்ந்துவிட்டேனோ என்று வாயிலில் போய் என்ன சினிமா என்று திரும்பப் பார்தால் உறுமி என்று ஆங்கிலத்தில் போட்டிருந்தார்கள். "டேய் தமிழன அப்பரஸ் பண்ணுறீங்களாடா...கூப்பிடுடா தியேட்டர் மேனேஜர"  என்று சவுண்டு விடுவதற்கு முன்னால் எதற்கும் தங்கமணியைக் கூப்பிட்டு கேட்போம் என்று கேட்டதில் உறுமி ஒரிஜினல் அக்மார்க் மலையாளப் படம் தான் என்று கன்பர்ம் செய்தார். அதற்குள் ஜெனிலியா, வித்யா பாலன், நித்யா மேனன் என்று டைட்டில்ஸ் ஆங்கிலத்தில் போட்டார்கள். இந்த வாரம் எதிர்பாரா சந்தோஷம் மும்மடங்கு வாய்க்கும்ன்னு இதைத் தான் தினமலர்ல சொன்னாங்க போல என்று சேரநன்னாட்டிளம் பெண்களுடனே செட்டில் ஆகிவிட்டேன்.

சந்தோஷ் சிவன் கேமிரா மற்றும் இயக்கம். வித்யா பாலன் குனிந்து நிமிர்ந்து ஒரு ஐயிட்டம் சாங் ஆடுகிறார். கஷ்ட காலம் தொப்பையை வைத்துக் கொண்டு இப்படி ஆடுவதற்கு பதில் புடவையை உடுத்திக் கொண்டு பூப்போல சிரித்தாலே நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நித்யா மேனன் மனதையும் அள்ளி வூட்டுக்கு வந்து கூகிளிலும் சித்தித்தார், தித்தித்தார் (கவித கவித). ஜெனிலியா இடுப்பு கச்சத்தை ட்ராயர் மாதிரி அணிந்து கொண்டு பாய்ந்து பாய்ந்து சண்டை போடுகிறார். ப்ரித்விராஜ் ஆர்ம்ஸ் காட்டுகிறார். ஜெனிலியா அவர் பக்கத்தில் கோழிக் குஞ்சு மாதிரி இருக்கிறார். வாஸ்கோடகாமா காலத்து நல்ல களம். திரைக் கதை தான் கொஞ்சம் வள வளவென்று ஆகிவிட்டது போல் தோன்றியது. கலையும் கேமிராவும் குடுத்த காசுக்கு வசூல். மூன்று கதாநாயகிகள் பொங்கல் போனஸ். வசனம் புரியவில்லை ரெண்டாந்தரம் போனால் தான் புரியும் என்று வீட்டில் வாய்தா வாங்குவதற்குள் படத்தை தூக்கிவிட்டார்கள். நல்ல படங்களை நாம் ஆதரிக்கும் லட்சணம் இவ்வளவு தான்.

அடுத்த நாள் லைப்ரரிக்கு போனால் இந்த வாரம் சந்தோஷ் சிவன் வாரம்ம்ம்ம்ம்ம்  என்று "Before the Rains" டிவிடி முழித்துக் கொண்டு இருந்தது. அதில் நந்திதா தாஸ் வெள்ளைக்காரனுடன் ஜல்ஸா சீன் எங்கேயோ பார்த்த நியாபகம் கீற்றாய் வந்து தொலைக்க...என்னா சினிமேட்டோகிராபி தெரியுமா... பார்த்து கத்துக்க ஏராளமா இருக்குன்னு லைப்ரரியனிடம் சொல்லி எடுத்துவந்தேன். படம் ஆரம்பித்து ஐந்தாவது நிமிடமே நான் சொன்ன சினிமேட்டோகிராபி சீன் வந்து விட்டது. ஆனால் படம் ரொம்ப சிம்பிளான நேர்கோடு கதை. புதுமை பண்ணுகிறேன் பேர்வழி என்றில்லாமல் அருமையாய் எடுத்திருக்கிறார். நந்திதா தாஸ் நறுக்கு தெரித்தாற் போல அட்டகாசமாய் நடிக்கிறார். எல்லா ஏமாற்றப்பட்ட அழகான கதாநாயகிகளும் கடைசியில் துறவறம் போவது மாதிரி பிரம்மச்சாரினியாய் ஆவது தான் கொஞ்சம் க்ளீஷேவாக இருக்கிறது. படத்துலயாவது இவங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையக்கூடாதா.

இந்த வார படிப்ஸ்சித்திரங்களும் கொஞ்சும் சினிமாவும் - முனைவர் கு.ஞானசம்பந்தன் எழுதிய புத்தகம். தமிழ் இலக்கியப் பாடல்களையும், சினிமா பாடல்களையும் அவர் மாணவர்களோடு சுற்றுலா போகும் இடங்களில் பொருத்தி மேற்கோள் காட்டி ஜாலியாக கொண்டு போயிருக்கிறார். ரொம்ப வித்தியாசமான சுவாரசியமான புத்தகம். இன்னும் முடிக்கவில்லை பாதி தான் படித்திருக்கிறேன்.

இந்த வார கேள்விரொம்ப நாளாயிருந்தாலும் Kookaburra “ஆம வடைக்கு ஏன் அப்படி பெயர் வந்தது” என்று கேட்ட கேள்வியை மறக்கவில்லை. இதை கொஞ்சம் நோண்டிப் பார்த்ததில் இது காரணப் பெயராய் இருக்கலாம் என்று தான் தோன்றுகிறது. ஆமையின் ஓடு மாதிரி இந்த பருப்பு வடையின் வெளிப்புறம் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லுவதாய் புருடாவுட்டிகீறேன்பா :)) தப்புன்னு தெரிஞ்சவங்க சொன்னா கன்னத்துல போட்டு திருத்திக்கறேன்.

இந்த வார போஸ்டர்
தற்போது குறும்படத்திற்க்கு சின்னதாய் ஒரு தரமான நல்ல டீம் அமைந்திருக்கிறது. இந்தியா, யூ.எஸ், யூ.கே என்று மூன்று நாடுகளிலிருந்தும் வெர்ட்சுவலாய் வேலை செய்கிறோம். தொடர்ச்சியாய் குறும்படங்கள் எடுப்பதாய் திட்டம்.  அடுத்த படம் ஒரு காமெடி என்று ஸ்கிரிப்ட் லெவலில் இருக்கிறது. ஏற்கனவே அஃபீஷியலாய் ப்ரொடெக்க்ஷன் கம்பெனி ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய உபகரணங்களும் வாங்கிக் கொண்டிருக்கிறோம். தற்போது போட்டோஷாப், எடிட்டிங், சவுண்டு மற்றும் மிக்ஸிங் தவிர மிக முக்கியமாய் சினிமேட்டோகிராஃபிக்கு ஆட்கள் தேடிக் கொண்டிருக்கிறோம். இதில் சினிமேட்டோகிராஃபிக்கு யூ.கேவில் இருக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. மற்றவர்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம். சம்பளமாய் எதுவும் தர இயலாத இந்த நிலையில் ஆர்வமும் passion-ம் இருப்பவர்களுக்கே இவை பொருத்தமாய் இருக்கும். பெரிய பிராஜெக்ட் எடுக்கும் பட்சத்தில் வரும் வருவாயை பகிர்ந்தளிக்கும் வாய்ப்பிருக்கிறது. தற்போது ஒரு கலாசலான டீம் என்ற நிலையிலேயே இருக்கிறோம். பிஸினெஸ் ப்ளானோடு காம்பிளானையும் கலக்கிக் குடித்தால் சீக்கிரமே கார் காரேஜில் ஆரம்பித்த கூகிள் மாதிரி பெரிய கம்பேனியாக வளர வாய்ப்பிருப்பதாக கும்மிடிப் பூண்டி ஜோஸ்யர் சொல்லி இருக்கிறார். (சம்பந்தப்பட்ட) தொழில் தெரிந்த ஆர்வலர்கள் தொடர்பு கொள்ளவும் (r_ramn at yahoo dot com)ஆர்வமிருக்கும் சினிமா கல்லூரி மாணவர்களும் தொடர்பு கொள்ளலாம்.

21 comments:

Chitra said...

நல்ல ரவுண்டு அப்பு! :-))))

எல் கே said...

ஹ்ம்ம் ஓகே ஓகே

ராம்ஜி_யாஹூ said...

குறும்படம் பற்றி எனது சிறு வேண்டுகோள்.
தயவு செய்து வெளிப் புறப் படப் பிடிப்பு நடத்துங்கள்.

உங்களின் தேர்தல் வாக்கு அளிக்கும் கடமை படம், அமெரிக்க பதிவர் கனவு காதலி பற்றிய படம், ஆசியா நெட்டில் மணல் தேசம், விஜய் டி வியில் சிங்கப்பூரில் ஒரு நெடும் தொடர் ஆகிவை யாவும் வீட்டிற்கும், ஹோட்டலுக்கும் உள்ளேயே எடுத்து சுவை அற்றதாக்கி விட்டனர்.

அமுதா கிருஷ்ணா said...

கம்பேனி பெயர் என்னப்பா??

middleclassmadhavi said...

பதிவை ரசித்தேன்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Joopar... nadathunga nadathunga... nice round up too...:)

மனம் திறந்து... (மதி) said...

//சேரநன்னாட்டிளம் பெண்களுடனே செட்டில் ஆகிவிட்டேன்.//

அப்படீன்னா... இனிமே, காலா காலத்துக்கும் தெருத் திண்ணையிலேயேதான் சாப்பாடு தூக்கமெல்லாம்னு சொல்லுங்க...! அப்படித்தானே தங்கமணி மாமி? :)))
வீதியிலே போகிறவங்க உங்களைப்பத்தி குறும்படம் எடுத்து உடப்போறாங்க நெட்டிலே!:)


//வித்யா பாலன் குனிந்து நிமிர்ந்து ஒரு ஐயிட்டம் சாங் ஆடுகிறார். கஷ்ட காலம் தொப்பையை வைத்துக் கொண்டு இப்படி ஆடுவதற்கு பதில் புடவையை உடுத்திக் கொண்டு பூப்போல சிரித்தாலே நன்றாக இருக்கும் என்று தோன்றியது//

இதுக்குத்தான் சொல்றது... பெரியவங்க பேச்சைக் கேட்கணும்னு... எங்கே வித்யாவுக்குத் தெரியலையே!

//நித்யா மேனன் மனதையும் அள்ளி வூட்டுக்கு வந்து கூகிளிலும் சித்தித்தார், தித்தித்தார்//

சித்தித்தார், சரி... அது என்னது தித்தித்தார்? ...எங்கயோ இடிக்குதே! உங்க மேல கொஞ்சம் நல்ல அபிப்ராயம் இருக்கு கழகத்திலே... இப்படியெல்லாம் பண்ணீங்கன்னா அப்புறம் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டி வரும் ஜாக்ரதை! 2G, 3G எல்லாம் தாண்டி நீங்க 4G க்குப் போய்க்கிட்டு இருக்கிற மாதிரியில்ல இருக்கு?:)))

Paavai said...

Isnt the movie Before the rains, about a bridge construction with Rahul Bose also playing a key role? If its this movie doesnt Nandita Das die in it.. sorry if I am confusing two different movies here.

தக்குடு said...

டுபுக்கு அண்ணாச்சி, கம்பெனி பேர் என்ன "டுபுக்கு டாக்கீஸ்"-ஆ இல்லைனா "ஓஹோ புரொடக்ஷன்ஸ்"-ஆ? எதுவா இருந்தாலும் பிரமாதமா வரணும்னு உம்மாச்சிகிட்ட வேண்டிக்கறேன்.

நீங்க சொன்னதுலேந்து அந்த படம் மேல ஒரு 'நல்ல' அபிப்ராயம் வந்துருக்கு, பாஸ்டன் நாட்டாமை ஏற்கனவே 5 தடவை பாத்து இருப்பார், நான் இந்த வாரம் முயற்சி பண்ணறேன்.

கார்க்கிபவா said...

த‌லை,

என்னையும் சேர்த்துப்பிங்க‌ளா?????

sriram said...

//சம்பளமாய் எதுவும் தர இயலாத இந்த நிலையில் ஆர்வமும் passion-ம் இருப்பவர்களுக்கே இவை பொருத்தமாய் இருக்கும்.//

தல, உப்புமா கம்பேனிங்கறத இப்படியும் சொல்லலாமோ?

//பாஸ்டன் நாட்டாமை ஏற்கனவே 5 தடவை பாத்து இருப்பார்//
தக்குடு- இன்னொரு முறை என்னை வம்புக்கிழுத்தா RVS அண்ணாகிட்ட பிடிச்சுக் கொடுத்திடுவேன்.

//என்னையும் சேர்த்துப்பிங்க‌ளா?????// கார்க்கி, நீங்க ராஜேந்தர் மாதிரி எல்லாத்தையும் ஒரே ஆளா செய்யறவராச்சே, உங்களுக்கு எதுக்கு டீம் :))))

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

The registration for the CINE Workshop (on Filmmaking) organized by the Entertainment Society of Goa (ESG) will commence on 27thMay till 5th June 2011. This 25 days workshop will be held from 6thto 30th June 2011, 11.00 a.m. till 1.00 p.m. and 2.00 p.m. till 4.00 p.m. at Maquinez Palace Auditorium.

The workshop will feature eminent film personalities from Indian Cinema who will teach the students on the creative and technical aspects of film making.

The Trainer are, Shaji Karun Internationally acclaimed Indian Film Maker and Cinematographer from Kerala whose films like "Piravi" has won many International and National Awards including Camera O'dor at Cannes Film Festival., Sudhir Mishra Acclaimed Indian Film Maker and Screenplay Writer, Rahul Dholakia Acclaimed Indian Film Maker whose films like "Perzania" won National Awards., Vipin SharmaAcclaimed Actor, Meeta Vasisth -acclaimed actor for films like "Drohkaal", "Dil Se", "Rudaali" and "Ghulaam", Sanjay Chouhan -acclaimed Indian Film Maker whose films like "Perzania" won National Awards., Prof. A.S. Kanal,-Professor of Cinematography, Film & Television Institute of India, Pune.



Criteria for registration is 18years and above, the course fee for the entire Workshop is Rs. 500/- and Rs. 100/- per module and is on first come first serve basis. For registration kindly email info@iffigoa.org or contact the office of the Entertainment Society of Goa, during office hours from 10.00 a.m. till 5.30 p.m.

Anonymous said...

ஆ நான் வடைக்கு நன்றி ஹை போட்ட கமென்ட காணோம் :( ... மேல போட்ட கமென்ட்டு உபயோகமான்னு தெரியல - கோவாவுல மழை கொல்லுற மாசம் ... ஆனா நல்ல வர்க் ஷாப் மாதிரி இருக்கு - இப்ப இல்லன்னாலும் அடுத்த வருஷம் உங்க கம்பெனி ஸ்பான்ஸர்ஷிப்ல யாராச்சும் அட்டென்ட் பண்ணலாம்!!

Porkodi (பொற்கொடி) said...

aama vadai - velila crispy and ulla softa irukradhunala vandha namesake irukalam.. :)

Porkodi (பொற்கொடி) said...

கழகக் கண்மணிகளே! என்ன இது இவ்வளவு தானா உங்களுக்கு கட்சியின் மீதுள்ள பற்று?! போதாது! :(

Arul Kumar P அருள் குமார் P said...

@ company nangu valara vaalthukkal .

Syam said...

நல்ல சினிமாடோக்ராபி இருக்கும் படங்கள் இன்னும் நாலு பேரு சொன்னா நாங்களும் கொஞ்சம் அறிவ வளர்துக்குவோம் இல்ல... :-)

Anonymous said...

வழக்கம் போல கலக்குறீங்க...
வழக்கம் போல காணாம போயிர்றீங்க..

Reverie

http://reverienreality.blogspot.com/
(இனி தமிழ் மெல்ல வாழும்)

Dubukku said...

சித்ரா - மிக்க நன்றி :)

எல்கே - -ஹூம்ம்ம் :)

ராம்ஜி - உங்கள் கருத்தை தெரிவித்தற்கு மிக்க நன்றி கட்டாயம் கவனத்தில் கொள்கிறேன்.

அமுதா - ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...சொல்றேன் :)

மாதவி - சுருக்கமாய் அட்டெண்டன்ஸ் போட்டுட்டீங்க :)

அப்பாவி - மிக்க நன்றி ஹை

மதி - நல்லாத் தான் மேற்கோள் காட்டி காட்டி கிண்டறீங்க :)) ரொம்ப நோண்டி நோண்டி பாயிண்ட பிடிக்கறீங்க லாயாரா ஆகியிருக்க வேண்டியவர்ங்க நீங்க :)


பாவை - நீங்களே புலவர். நீங்கள் சொன்னது தான் மிகச் சரி. நான் தான் ஏகப்பட்ட படத்தைப் பார்த்து குழம்பி பதிவில் பிதற்றி இருக்கிறேன். மன்னிக்கவும்,

தக்குடு - வாழ்த்திற்கு மிக்க நன்னி

கார்க்கி - :))) மெயில்ல :))

ஸ்ரீராம் - உப்புமா கம்பேனியே தான் :)))

Kookaburra - மிக்க நன்றி மேடம். சொன்ன மாதிரி எனக்கில்லாட்டியும் இங்க வர்ற யாருக்காவது உபயோகமாய் இருக்கலாம்.

பொற்கொடி - கட்சியா..அப்டீன்னா..நீங்க வேற :)

வெட்டிப்பையன் - மிக்க நன்றி உங்கள் வாழ்த்துக்கு

ஸ்யாம் - -ஹீ ஹீ நீங்க என் மேல நிறைய நம்பிக்கை வைச்சிருக்கீங்க போல. நான் ரசித்தவற்றை கண்டிப்பாய் பகிர்ந்துகொள்கிறேன்

Reverie - மிக்க நன்றி காணாம போறது நம்பளுக்கு புதுசா :)))

Thamira said...

ஆமையின் ஓடு மாதிரி இந்த பருப்பு வடையின் வெளிப்புறம் இருப்பதால் இந்தப் பெயர் வந்திருக்கலாம் //

மை காட்.! போனவாரம் தற்செயலா மோட்டுவளையப்பாத்து இதே வரியை திங்க் பண்ணிகிட்டிருந்தேன். வாட் அ கோஇன்ஸிடெண்ட்.!

Rajasekaran Bose said...

ada vidunga boss... theeya vela pakranga....

Related Posts