“Thatha I wanna take a leak”
"அப்டீன்னா"
"குழாய் லீக்காகறதுங்கறானோ என்னம்மோ...அது அப்படித் தான்டா செல்லம்...உங்க தாத்தா மாதிரி லூஸாயிடுத்து ...குழாய்காரன வரச் சொல்லுவோம்"
"ஐய்யோ அம்மா அவனுக்கு பாத்ரூம் போகணுங்கிறான்...டேய் தாத்தா பாட்டி கூட பேசும் போது தமிழ்ல தான் பேசணும்ன்னு சொல்லியிருக்கேன்ல"
"இருக்கட்டும்டீ குழந்தைய வையாத..என்னமா பொளந்து கட்றான் என் செல்லம்.."
"ஐ...சீ.........ஐ டேக் யுவர் பாத்ரூம்...கம் வித் மீ...."
"....அப்பா நீ வேற ஏன்ப்பா இங்கிலிஷ்ல பேசிக் கொல்ற...தமிழ்ல பேசுப்பா அப்போ தான் அவனுக்கு வரும்"
"இதேதுடா தமிழ்ல பேசினாத் தான் வருமா...அவனுக்கு அல்ரெடி வந்தாச்சு சொன்னானே..."
"ஸப்பா...கஷ்டம்.."
"நீ விடுடீ...இவாத்துக்காராளே இப்படித் தான்... அஞ்சு பைசாக்கு பிரயோஜனமில்லாத பிலுக்கு...ஜானவாசத்துக்கு கோடு போட்ட கோட்டு வாங்கலைன்னு இவா மாயவரம் பெரியப்பா தாட் பூட் தஞ்சாவூர்ன்னு இங்கிலீஷ்ல ஆரம்பிச்சுட்டார்.....அப்புறம் தலை தீபாவளிக்கு..."
"அம்மா...நீ சொல்லி நிறைய கேட்டாச்சு"
"அதுக்கு இல்லடீ கூஜால காப்பி போட்டு தரேன் எஸ்.எஸ்.எல்.சி பாஸ் பண்ணுங்கோன்னு தலையா அடிச்சிண்டேன் கேட்டாரா மனுஷன்"
"போடி போக்கத்தவளே...இவ கூஜால காப்பி போட்டு குடிச்சுட்டு ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணிட்டா...கிரிஜா உங்க அம்மாவ கையழுத்து போட்டு பாங்குலேர்ந்து பத்து ரூபாய் பணம் எடுத்துண்டு வரச் சொல்லு பார்ப்போம்..."
" நான் ஏன் போகணும்...எங்க மாமனார் என்ன தள்ளி நில்லுன்னு ஒரு வார்த்தை சொன்னதில்லை....அவர் சொன்னா பாங்க் மேனேஜர் ஆத்துக்கு வந்து சலாம் போட்டுட்டு பைசா குடுத்துட்டுப் போவார்"
"அப்படி வா வழிக்கு...இங்கிலீஷாம் இங்கிலீஷ்....சப்ரிஜிஸ்தர் ஆபிஸுல ரமணி இஸ் எங்க போடணும் வாஸ் எங்க போடணும்ன்னு எங்கிட்ட வருவான் தலைய சொறிஞ்சிண்டு"
"போறுமே...குழந்தைய ஒன்னுக்கு கொண்டு விடச் சொன்னா வேண்டாத வியாக்யானம்"
"ஐய்யோ போறும் ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்தறேளா..."
"என்னுதிது மரத்த பிடுங்கி எடுத்துண்டு வரேள்..."
"சிண்டுவுக்கு மாம்பழம் வேணுமாம்....கன்னு நட்டா நாளாகும்ன்னு சின்ன மரத்தையே பதியம் பண்ணி எடுத்துண்டு வந்துட்டேன்...பிள்ளையார் தோப்பு மரம் ஒரு பயலுக்கும் குடுக்க மாட்டான்...நான் கைல கால்ல விழுந்து கெஞ்சி கொண்டு வந்திருக்கேன்...அடுத்த வருஷம் சிண்டு வரும் போது பூத்துடும்.."
"அப்போ அடுத்த ஹாலிடேஸ்க்கு வரும் போது மேங்கோ இருக்குமா தாத்தா"
"ஆமாம் பாரு...அடுத்த வருஷம் நீ வரும் போது மேங்கோ வாங்கோ வாங்கோன்னு கூப்பிடும்...வேணுங்கிறது திங்கலாம்..."
"பாட்டி பல்லு ப்ரோக்...tooth fairy ராத்திரி பைசா குடுப்பா"
"ஓ பல்லு விழுந்தாத் தான் குடுப்பாளா ஃபேரி கடங்காரி...நம்ம மஹாலெஷ்மிட்ட வேண்டிண்டா...கூரைய பொளந்துண்டு கொட்டுவாளே....ஸ்லோகம் சொல்லு கோந்தே மஹாலெஷ்மீச்ச...தீமஹீ"
"அவன் கீழ பெட்ல போட்டுக்கோப்பா...ஏன்பா தோள்லயே வைச்சிண்டு இருக்க.."
"இருக்கட்டும்டீ...குழந்தைக்கு ஜலதோஷம் மூக்க அடைக்கறது தூங்காம கஷ்டப்படறான்..எனக்கும் தோளுக்குக்கு இதமா இருக்கு...நான் இப்படியே தூங்கிடுவேன்.."
"தாத்தா வாட்ஸப்"
"ஐ ஆம் ஃபைன்...ஹவ் டு யூ டூ.."
"அப்பா...சிண்டுவுக்கு தமிழ் சொல்லிக் குடுக்கச் சொன்னா...அவன் உங்களுக்கு இங்க்லீஷ் சொல்லிக் குடுத்துண்டு இருக்கான்"
"அதுக்கென்ன அவனுக்கு பேஷா சொல்லிக் குடுத்துட்டா போச்சு...சொல்லுடா கோந்தே ஓரொண்ணு ஒன்னு...ஈரெண்டு நாலு.."
"ஆ...அப்பா தமிழ் சொல்லிக்குடுக்கச் சொன்னேன்பா...வாய்ப்பாடு இல்லை..."
"அதுவும் சொல்லித் தரேன்...சொல்லுடா கோந்தே தண்டையும் சிலம்பும் சிலம் பூடுருவப் பொருவடி..."
"நான் சொல்லல...இவாத்துகாராளுக்கே பிலுக்கு ஜாஸ்தி..."
"கோந்தைக்கு விழுந்த பல்லு முளைக்கறதே....சாயங்காலம் பல்லு கொழக்கட்டை பண்ணித் தரேன்...பிள்ளையார் கோவிலுக்கு போலாம் என்ன.. தேங்கோழல் பண்ணித் தரேன் சீப்பலாம்"
"சிண்டு இதோ பாரு என்ன வாங்கிண்டு வந்திருக்கேன்.. ..கோலிக்காய்"
"ஹை மார்பிள்ஸ்"
"மார்பிள் இல்லைடா கோந்தே ...கண்ணாடி.."
"தாத்தாக்கு பல்லு இருக்கா பாரு ஆ... உங்க பாட்டி பண்ணிக்குடுத்த சீடைய கடிச்சு கடிச்சே பல்லெலாம் விழுந்துடுத்து"
"ஆமா சின்னக்குழந்த மாதிரி நாப்பது வயசு வரைக்கும் சாக்லேட்ட தின்னா?... அதான் அப்பவே விழுந்துடுத்து ராமானுஜம் டாக்டர் சொன்னார். கேக்கல..மண்டைல முடியும் கொட்டிடுத்து. யார் சொல்றது யார் கேக்கறதுன்ன இப்படித் தான்"
"ஐ...Cow!!!"
"வெறும் cow இல்ல..ஹோலி கவ். உம்மாச்சி ! தொட்டு ஒத்திக்கோ”
"கிரிஜா சித்திரத்தையும் அதிமதுரப் பொடியையும் கலந்து வைச்சிருக்கேன்...ஜலதோஷம் உடம்பு வலின்னு வந்தா குழந்தைக்கு தேன்ல கலந்து கொடு...நிமிஷமா போயிடும்"
"வாரா வாரம் ஃபோன் பண்ணனும்... நிலா நிலா ஓடி வா பாடிக் காட்டனும் சரியா"
"விளக்கேத்தி சொல்லிக்குடுத்த ஸ்லோகத்த மறக்காம சொல்லச் சொல்லு"
ப்ளைட் இறங்கியதும் கேட்டேன் "அடுத்த ஹாலிடேஸ்க்கு ஊருக்கு போலாமா வேண்டாமா?"
"ஓ யெஸ் ஐ லவ் மாம்பழம், ஐ லவ் கொழக்கட்டை ஐ லவ் கவ்ஸ், ஐ லவ் மார்பிள்ஸ்"
"..............."
"haa haa நான் சும்மா டீஸ் பண்ணினேன்மா ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ் தாத்தா பாட்டி ஐ மிஸ் தெம்... அன்ட் அவாள பார்க்கனும் "
ஓடி வந்து கட்டிக் கொண்டான். சந்தோஷமாய் இருந்தது.

48 comments:
"haa haa நான் சும்மா டீஸ் பண்ணினேன்மா ஐ லவ்வ்வ்வ்வ்வ்வ் தாத்தா பாட்டி ஐ மிஸ் தெம்... அன்ட் அவாள பார்க்கனும் "
ஓடி வந்து கட்டிக் கொண்டான். சந்தோஷமாய் இருந்தது.
...How sweet! ஏக்கங்கள்.......!!!
தாத்தா பாட்டி ஒரு வரம்.
இப்போ அவர்களும் இல்லை அவர்கள் வாழ்ந்த சிந்துபூந்துறையும் இல்லை
பாட்டிஇன் மஞ்சள் வாசம், தாத்தா கொண்டுவரும் இனிப்பு பச்சரசி மாங்காய் மறக்கவே முடியாது .
Lovely post... kids tend to forget things but they get attached & blend in too easily... very nice write up... :))
வெளிநாடு மட்டுமல்ல வெளியூரில் இருந்தாலுமே இதுதான் நிலை.
இதான் டுபுக்குத்தனமா பண்றதுங்கிறது. நாங்களே செம ஃபீங்கில இருக்கோம், நீ வேற ஏன்யா விரலை பாய்ச்சுற?
தல
எனக்கு முன்னோட்டம் மாதிரி இருக்கு. அருமை தல.
யோவ் இளா இதுக்கு எந்த பித்தலாட்டம்? நீரு லோகன் ஏர் போர்ட்ல "என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு " குத்தாட்டம் போட்டதைத்தான் பாஸ்டன் மெட்ரோ பேப்பர்ல போட்டிருக்கிறானே?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//மெட்ரோ பேப்பர்ல போட்டிருக்கிறானே?//
ம்க்கும் அது ஒன்னுதான் குறைச்சல். ஏர்போர்ட்ல எங்கே நம்ம முகத்துல சந்தோசத்தை தங்கமணி பார்த்துட்டா சிக்கலாகிருமேன்னு நான் பட்ட கஷ்டம் யாருக்குத்தெரியும்? இப்பவெல்லாம் spy எங்கே இருக்காங்கன்னே தெரியறது இல்லே. உள்ளத்தை அள்ளித்தாவுல மணிவண்ணன் சொன்ன மாதிரி மனசுக்குள்ள சிரிச்சுகிட்டே வெளியே பேசிட்டு இருந்தேன்
அருமைங்க.. செம புஃளோ :)
//இப்பவெல்லாம் spy எங்கே இருக்காங்கன்னே தெரியறது இல்லே.//
என் பின்னூட்டத்தைப் படிச்சுமா இந்த சந்தேகம்??
நாந்தான் ஏர்போர்ட்டுக்கு வரலியே, சந்தோசமா இருக்க வேண்டியதுதானே??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//நாந்தான் ஏர்போர்ட்டுக்கு வரலியே//
இப்பத்தானே ஒன்னு தெரிஞ்சிருக்கு, இன்னும் தெரியாதது எத்தனையோ??
//இப்பத்தானே ஒன்னு தெரிஞ்சிருக்கு,//
ஐயையோ, நாந்தான் வாயை விட்டுட்டேனா?
நான் சொன்னதையெல்லாம் ரப்பர் போட்டு அழிச்சிடுங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கலக்கிட்டீங்க தலைவா ... எப்படி இப்படி எல்லாம் ...
எங்க அம்மா அப்பா எக்ஸாக்ட்டா இதே மாதிரி சண்டை போடுவாங்க
எங்க பாட்டி தாத்தா இந்த மாதிரி பேசி பாக்கலை ...
கரெக்டா ஒரு ஜெனெரேஷன் அப்படியே படம் புடிச்சிட்டீங்க வார்த்தையில :) எங்க அம்மாவும் அப்பாவும் காட்டுத் தனமா வாருவாங்க ஒருத்தரை ஒருத்தர் ... அவங்க அக்கா தங்கச்சிங்க வாங்கிறது வேற ஸ்பெஷல் எஃபெக்ட்! எப்பவும் கல்யாணம் சீர்ல போய் ஒரு இடி இடிச்சுதான் ஆரம்பிக்கும் வாரும் கலை!
பேரப் பிள்ளைங்க மேலையும் இந்த மாதிரி கன்னா பின்னா அன்பும் உண்டு. சூப்பரா எழுதிட்டீங்களே. சுத்திப் போடுங்க.
//இவா மாயவரம் பெரியப்பா தாட் பூட் தஞ்சாவூர்ன்னு இங்க்லீஷ்ல ஆரம்பிச்சுட்டார்// ஆ../ஊ-ன்னா ஏன் எல்லோரும் மாயவத்துகாரங்ககிட்ட வம்பிழுக்கிறேள்? கேட்க யாரும் இல்லைன்னு நினைக்கிறேளா?
கலக்கல்...அருமை... தாத்தா பாட்டி ராக்ஸ்.
languagela humor, themela sogam, romba nanna vandurukku ...
LK சொல்லியருப்பது போல்
வெளிநாடு மட்டுமில்லை. வெளியூரில் இருக்கும் குழந்தைகள் கூட தாத்தா பாட்டியை ரொம்ப மிஸ் செய்கிறார்கள்.
சொந்த மண்ணில் இருக்கும் தாத்தா பாட்டியும் அடுத்த விடுமுறைக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்!!!
அருமையான பதிவு!
வழக்கம் போல கலக்கிட்டீங்க தலைவரே! நெஞ்சு நெகிழ்கிறது!...
“ஒரு விதத்தில் பார்த்தால், Abraham Maslow சொன்ன Hierarchy of Needs லே Self Actualization Needs பூர்த்தி ஆகிற நிலை தான் தாத்தா, பாட்டி!” அப்படின்னு தொடங்கி, பின்னூட்டம் போடப் போய் அது ஒரு பதிவாகவே ஆகிவிட்டது...அதனால் அதை என் தளத்திலேயே எழுதி விட்டேன்: http://thirandhamanam.blogspot.com/2011/03/blog-post.html
கலக்கல் , அற்புதம்
வெறும் cow இல்ல..ஹோலி கவ்."
hahahahahha... :)
நகைச்சுவை இழையோடினாலும் அந்த தாத்தா பேரன் உறவு அதி அற்புதமாய் இருந்தது.. தாத்தாவின் சந்தோஷம் பதிவெங்கிலும் தெரிந்தது.. சூப்பெர்ப். ;-))))
//தாட் பூட் தஞ்சாவூர்ன்னு//
இது..இது..உண்மை..உண்மை... ;-))
நல்லாக் குலுங்கக் குலுங்க சிரிக்க வச்சிட்டு, கடைசியிலே அழவைச்சுட்டீங்களே தாத்தா, பாட்டி எல்லாரையும், இது உமக்கே நல்லாருக்கா?
மிகவும் நல்லதொரு பதிவு இது. படித்தேன். மகிழ்ந்தேன். பாராட்டுக்கள் உங்களுக்கும், உங்களின் இந்தப் பதிவைப் பார்த்து இதே போல சுவையான மற்றொரு பதிவு இட்டிருக்கும், தங்கள் நண்பர்
மனம் திறந்து... (மதி) அவர்களுக்கும்.
நீங்கள் சொல்லுவது யாவும் நூற்றுக்கு நூறு உண்மை, என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தவன் நான்.
துபாயிலிருக்கும் என் பேரனோ பேத்தியோ வாரம் ஒருமுறையாவது என்னுடன் பேசாமல் போனால் எனக்கு அழுகை வந்து விடும். அவர்களுக்கும் அப்படியே.
வருஷம் ஒரு முறை வருவார்கள். பெரும்பாலும் என்னுடன் தான் பழகுவார்கள், பேசுவார்கள், கதை கேட்பார்கள், கட்டிப் பிடிப்பார்கள், என் தொந்தியில் தலை வைத்துப் படுப்பார்கள்.
அந்த நம் பேரனையோ பேத்தியையோ பார்ப்பதோ, பழகுவதோ, பேசுவதோ, அவர்களின் மழலைச் சொல்லைக் கேட்டு மகிழ்வதோ ”யாழ் இனிது குழலினிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதார்” என்ற வள்ளுவரின் வாக்கு போல வெகு அழகானது தான்.
அந்தக் குறளில் வரும் “தம்மக்கள்” என்ற சொல் மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.
பிறர் குழந்தையைக் கொஞ்சுவது இன்பம்!
நம் குழந்தையைக் கொஞ்சுவது பேரின்பம்.
தன் வாரிசின் குழந்தையைக் கொஞ்சுவது என்பது
அதற்கு வார்த்தைகளே எதுவும் கிடையாது. அந்த வார்த்தைகளே இல்லாத ஒரு மிகப் பெரிய இன்பத்தை அனுபவிக்கக் கொடுத்து வைத்துள்ளவர்களாலேயே உணர முடியும்.
thatha paatinaaley super thaan thalai. arumaya irukku
anbudan
subha
சூப்பர்ன்னு சொல்லணுமா?
கலக்கல் தல
sigh!
very lovely post..romba realistic a u captured the moment...
//ஓ பல்லு விழுந்தாத் தான் குடுப்பாளா ஃபேரி கடங்காரி...நம்ம மஹாலெஷ்மிட்ட வேண்டிண்டா...கூரைய பொளந்துண்டு கொட்டுவாளே....//
hahahah...very nice! you have an excellent sense of humour!
An ultimate post, as always :)
//அடுத்த வருஷம் நீ வரும் போது மேங்கோ வாங்கோ வாங்கோன்னு கூப்பிடும்// hahaha...;))
@ Bostan nattamai - //sriram said...
தல
எனக்கு முன்னோட்டம் மாதிரி இருக்கு// congraaaats nattamai!!..:PP
Renga, nalla irukku. en paiyan thatha patti yoda enjoy pannindu irukkan. Timely post nu nenaikkaren. na idellam padichuttu adutha janmathileyavadu thatha paatigaloda (amma vodavum) konja naal vaazhanum nu vendikkaraen.
BTW, enakku blogspot mattum thaan open aaguthu. so, keep writing.
English-அ தப்பா பேசினா ரொம்ப தப்பாயிடுது. ஆனா யாராவது தமிழ் தெரியாதவா தமிழ தப்பா பேசினா நாம கிண்டல் பண்றது இல்லை! நாமளும் தமிழ் தெரியாதவாள கிண்டல் பண்ணினாத்தான் தமிழ் வளருமோ?
nice nice..Good stuff
//"....அப்பா நீ வேற ஏன்ப்பா இங்க்லிஷ்ல பேசி கொல்ற...தமிழ்ல பேசுப்பா அப்போ தான் அவனுக்கு வரும்"
"இதேதுடா தமிழ்ல பேசினாத் தான் வருமா...அவனுக்கு அல்ரெடி வந்தாச்சு சொன்னானே..."
//
வாய்விட்டு சிரித்தேன்! சப்ஜெக்ட்டும் எழுத்துநடையும் உங்களை ஓஹோ என்று உயரத் தூக்குகின்றன. வாழ்த்துக்கள். - ஜெ.
//ஆமாம் பாரு...அடுத்த வருஷம் நீ வரும் போது மேங்கோ வாங்கோ வாங்கோன்னு கூப்பிடும்...வேணுங்கிறது திங்கலாம்..."//
:-))
//"அதுவும் சொல்லித் தரேன்...சொல்லுடா கோந்தே தண்டையும் சிலம்பும் சிலம் பூடுருவப் பொருவடி..."//
// "நான் சொல்லல...இவாத்துகாராளுக்கே பிலுக்கு ஜாஸ்தி..."//
அப்படியே எழுத்தாளர் சுஜாதா நடை ...!
நொம்ப நாளைக்கு பிறகு உங்க trade மார்க்க குத்தி இருக்கீங்க.வாய் விட்டு சிருச்சோம்...!
Ultimate!!!
amazing post!!!!engal veetile anraadum nadakkum oru nigaizhiyai eduthu paditha madhiri irundhadhu!!!paati thatha vaaralgal dhhool!!!!
superb!!!
nivi.
Super boss... feelings... Living in boston???
Excellent writing Dubukku. Eppadi irukeenga. Indha pakkam vandhu romba naal aachu. We had our 2nd child in September, adhaan konjam busy.
Youth Vikatan la, indha postukku link pannirukaanga under Good Blogs. Congratulations!
Aama enakku enna vela nu kekkareengala Youth vikatan la? Adhu right dhaan naanu, Sriram, ellam Chutti vikatan padika vendiyavanga.
oru ranguski vaadai varuthu ithila. me likes.
-Munimma
அருமையாக முடித்திருக்கிறீர்கள்!
//naanu, Sriram, ellam Chutti vikatan padika vendiyavanga.//
இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே மதுரம்..
உங்களுக்கு உடனே கழகத்திலே ஏதாவது ஒரு பதவி கொடுத்திடறேன்... பொதுச் செயலாளர் புவனாக்காவுக்கு துணைப் பொதுச் செயலாளரா இருக்கீங்களா??
நாம படிக்கறதுக்கு சப் ஜூனியர் விகடன் ஆரம்பிக்கச் சொல்லலாமா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
மிக அருமை..:)
Lovely post renga.
Humourous but ended with a lump in the throat and made me simply stare at the monitor for many more minutes.
Kathir-Chennai
kallakkareenga thalaiva...
subbu,
Ivvalo nalla oru post ezhudhittu appuram oru masam kaanama poidareenga??
சித்ரா - மிக்க நன்றி மேடம். ஆம் ஏக்கங்கள் நான் உட்பட :))
வாசகன் - ரொம்ப கரெக்ட் தாத்தா பாட்டிக்கு இணையில்லை ஹும்ம்ம்ம்
அப்பாவி - மிக்க நன்றி மேடம்
எல்.கே - கரெக்ட்...எந்த ஊரானாலும் இதே தான் :(
இளா - யோவ் அதான் ஊருக்கு போய் என்சாய் பண்றீருல்லா அப்புறமென்ன :))
ஸ்ரீராம் - ஆமாம் ஆமாம் உங்களுக்கு முன்னோட்டம் தான் :))) ஓகோ இளா இந்த வேலையெல்லாம் பார்க்குறாரா போடுய்யா போன :)))
இளா - இதோ சொல்றேன் :))
இராமசாமி - மிக்க நன்றி நண்பரே.
கூக்கபுரா - அதே அதே அவங்க அடிச்சிக்கிறதும் புடிச்சிக்கிறது ரொம்ப ஜாலியா இருக்கும் பார்க்க. எஅன்கப்பாவும் அம்மாவும் சமயதுல்ல இப்படி தான் :)))
அரசூரான் - ஹீ ஹீ எனக்கு திருநெல்வேலிங்கோவ்...ஒன்னும் பண்ணமுடியாது தானா வருது :P பாரட்டுக்கு மிக்க நன்றி நண்பரே
பாவை - மிக்க நன்றி மேடம்.
வித்யா - அதே அதே வெளியூரும் அப்படி தான்... தாத்தா பாட்டி எல்லாரும் மிஸ் பண்ணுகிறோம் ஹூம்ம்ம்
மிடில்க்ளாஸ் மாதவி - ஆமாங்க பாவம் அவங்களும் விடுமுறை எப்போ வரும் பேரக்குழந்தைகள எப்போ பார்ப்போம்ன்னு காத்துகிட்டு இருக்காங்க!!
மதி - கலக்கலா ஒரு பதிவு பொட்டு அதுல தியரி எல்லாம் சேர்த்து ரொம்ப நெஞ்ச தொட்டுட்டீங்க போங்க :))
ராம்ஜி - மிக்க நன்றி
ஸ்ரீதர் - :)))
ஆர்.வி.எஸ் - மிக்க நன்றி தல. தஞ்சாவூர் நீங்களும் திருநெல்வேலி பக்கமா :))
மதி - ஆனா தாத்த பாட்டி ஃபீலிங்க்ஸ் உண்மை தானே
கோபாலகிருஷ்ணன் - வாங்க சார். மிக்க மகிழ்ச்சி ஒரு தாத்த வாயால் இதைக் கேட்பதற்கு. உங்கள் அனுபவமும் பின்னூட்டமும் நெகிழ வைக்கிறது. மிக்க நன்றி. உங்கள் பின்னூட்ட வரிகள் ஒவ்வொன்றும் முத்து !!! மிக்க நன்றி தன்யனானேன்.
சுபாஷினி - மிக்க நன்றி மேடம்
கார்க்கி - :)) மிக்க நன்றி தல.
பூ - ஹீ ஹீ எனக்கும் ரொம்ப பொறாமை இந்த உறவில்
பூர்ணிமா - அட ரொம்ப சந்தோஷம் இங்க வந்து கமெண்டியமைக்கு :)) நீங்களெல்லாம் உங்க தாத்த பாட்டி வீட்டுல வந்து ஆட்டம் போட்டது தான் நியாபகத்துக்கு வருது !! அருமையான தாத்தா பாட்டி உங்களுக்கு
கோபிகா - முதல்ல உங்க பெயர் சூப்பர் பொருத்தம்ங்க :)) (ரங்கமணி பெயர் ரமணன்ன்னு நினைக்கிறேன் கரெக்ட்டா?) மிக்க நன்றிங்க உங்க பாராட்டுக்கு
தக்குடு - :)))
ஷ் - ஹூம் உங்க பையன் குடுத்து வைச்சவன்ங்க...எனக்கு தாத்த கூட தான் நிறைய இருக்கும் வாய்ப்பு கிட்டியது. பாட்டி (அப்பாவின் அம்மா )கூட ரொம்ப நியாபங்கள் இல்ல.ஆனாலும் கொஞ்ச நாள்னாலும் என்று நிறைய அலம்பல் செய்திருக்கிறேன். எங்கப்பா மிரட்டும் போதெல்லாம் பாட்டி பின்னால் போய் ஒளிந்து கொள்வேன் :))
நிகாந்த் - நீங்க சொல்றது ரொம்ப ரொம்ப ரொம்ப கரெக்ட் :))
பிலீவர் - மிக்க நன்றி
ஜெகன்னாதன் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. ஊக்கமாய் இருக்கிறது.
வெட்டிப்பையன் - சுஜாதா நடையா...:)))ஹூம் வாத்யார் எதத் தான் விட்டு வைச்சிருக்கார். மிக்க நன்றிங்க
பரத் - மிக்க நன்றி ஹை
நிவி - அட உங்க வீட்டுலையும் இப்படி தானா குடுத்து வைச்சவங்க ஹூம்ம்ம் மிக்க நன்றி
சக்தி - மிக்க நன்றி. இல்லீங்கோவ் லண்டன்
மதுரம் - வாங்க எப்படி இருக்கீங்க. அட வாழ்த்துகள்!!! அப்போ கிச்சனுக்கு கொஞ்ச நாள் லீவா... மனமார்ந்த வாழ்த்துகள் !! நீங்க சொல்லி தாங்க எனக்கு விகடன் மேட்டர் தெரியும். ரொம்ப நன்றி. என்னங்க நாமெல்லாம் இன்னும் யூத்து தானுங்களே!!
முனிம்மா - ஹீ ஹீ மிக்க நன்றி ஹை
ஸ்ரீராம் - நான் யூத்துலயே இருந்துக்கிறேன் நீங்க சுட்டி சைடு போய்க்கோங்க
தேனம்மை லெக்ஷ்மணன் - மிக்க நன்றி
கதிர் - மிக்க நன்றி தல பாராட்டுக்கு. எப்படி இருக்கீங்க...?
சுப்பு - மிக்க நன்றி ஹை .
பொயட்ரீ - நடுவுல நிறைய பட வேலைகள் வந்து விட்டது அதான் இங்க தல காட்ட முடியல...மன்னிக்கவும் இப்போ ஒன்னு ரிலீஸ் பண்ணியாச்சுல திரும்பவும் வந்தாச்சு இப்போ :)))
\\இவா மாயவரம் பெரியப்பா தாட் பூட் தஞ்சாவூர்ன்னு இங்க்லீஷ்ல ஆரம்பிச்சுட்டார்\\ :-)))))))))))))) பெரியப்பான்னாவே மாயவரம் தானா??:-)))))) செம கலக்கல் போங்க!
Post a Comment