Tuesday, February 15, 2011

Black Swan

சைக்காலஜிக்கல் திரில்லர்/ ட்ராமா என்பது கொஞ்சம் ட்ரிக்கியான ஜானர். சில விஷயங்களை ரொம்பவே ஜீரணிக்க முடியாத அளவுக்கு ராவாக காட்டுவார்கள். அத்தோடு நேர்கோடு புரிதல் இல்லமல் பார்ப்பவரை குழப்பும் ஒரு ஸ்க்ரீன் ப்ளே இருக்கும். அதனாலே இந்த மாதிரி ஜானர் படங்கள் அனேகமாய் ஜனரஞ்சகமாக இருக்காது. ஆளவந்தான் படத்தில் கமல் இந்த விஷயத்தை இலாவகமாக கையாண்டிருப்பார் ஆனால் அந்த படத்தில் நிறைய காம்ப்ரமைஸும் இருக்கும்.

சமீபத்தில் வந்த ப்ளாக் ஸ்வான் ட்ரைலர் பார்த்த போதே வசீகரமாய் இருந்தது. அத்தோடு படத்தின் கையாளப் பட்டிருந்த பாலே நடன பிண்ணனியும் ஒரு வரிக் கதையும் பயங்கர ஆர்வத்தை தூண்டியது. படம் துளியும் ஏமாற்றவில்லை. உச்ச ஸ்தாயியில் ஜன்னி வந்த மாதிரி நடுங்கிக் கொண்டு பாடும் ஓபராவிற்க்கும் எனக்கும் ரொம்ப தூரம். அதே போல் பாலே நடனத்தின் அருகாமையையும் அண்டியதில்லை. இந்த படத்தில் பாலே பற்றி டெக்னிகலாய் தாக்கியிருப்பார்களோ என்று ஒரு பீதி இருந்தது. ஆனால் படம் ஆரம்பித்து பத்து நிமிஷத்திலேயே இது இந்தோளமா, யமன் கல்யாணியா என்று ராகம் பற்றி தெரியாமலே அனுபவிக்க முடியும் கச்சேரி என்று பிடித்துப் போய்விடுகிறது.

படத்தின் கதையை சொன்னால் படம் பார்க்கும் அனுபவத்திற்கு பாதகமில்லை என்பதால் சில விஷயங்களை விவரித்திருக்கிறேன். கதை பற்றி தெரிய விருப்பமில்லாதவர்கள் இத்துடன் நிறுத்திக் கொள்வது சொஸ்தம்.

ஒரு வரிக் கதையாக சொல்ல வேண்டும் என்றால் நியூயார்க்கில் இருக்கும் ஒரு கம்பெனியின் பாலே நடன ஷோவுக்கு கதாநாயகி பாத்திரத்திற்கு படத்தின் நாயகி முயற்சித்து வெற்றி பெறுகிறார்.  நல்லதையும் கெட்டததையும் ட்யூயல் பெர்சனாலிட்டியாய் பிரதிபலிக்க வேண்டிய ஒரு பாலே பாத்திரம்.  இதில் நல்லதை பிரதிபலிக்கும் வொயிட் ஸ்வானின் முகபாவம், அங்க மற்றும் நடன அசைவுகளும் பாவங்கள் சுளுவில் வர, தன்னுடைய மன இறுக்கம், கூச்சம், பாலியல் ரீதியான இறுக்கங்கள் காரணமாக கெட்டதை பிரதிபலிக்க வேண்டிய ப்ளாக் ஸ்வானின் பாத்திரததை செய்ய திணறுகிறார் நாயகி. இதற்கு நடுவில் அவருடைய அம்மாவின் கட்டுப்பாடு வேறு. கருத்தரித்ததின் காரணமாக தன்னுடைய பாலே கனவுகளை மூட்டை கட்டி வைத்த தாயின் பாலே தாகம் மகளின் மீது கட்டுப்பாடுகளாய் விடிகிறது. இதற்கு நடுவில் பளாக் ஸ்வான் பகுதியை சரிவர செய்ய முடியாததினால் வாய்ப்பு பறி போய்விடும் அபாயம். இவ்வளவும் சேர்ந்து அவருக்கே எதிரியாய் மனபிறழ்தலாய் மாறுகிறது.

கதாநாயகி நடாலி போர்ட்மேன் சும்மா புகுந்து விளையாடி இருக்கிறார். லட்டு மாதிரி ஒரு சான்ஸ். கிடைத்த சான்ஸை துளி கூட வேஸ்ட் செய்யாமல் அசத்தியிருக்கிறார். இவரின் நடிப்பு நம்மை மெய்மறந்து போகச் செய்கின்றது அந்த அளவிற்கு படம் நெடுக இவரின் ஆக்கிரமிப்பு. தன் அம்மாவை அவர் எதிர்க்கும் இடமாகட்டும், பாலியல் ரீதியாய் அவர் தனது சுய கட்டுப்பாடை உடைக்க முடியாமல் அவதிப் படும் இடமாகட்டும் அவ்வளவு கனகச்சிதமாய் நடித்திருக்கிறார். இந்த வருட ஆஸ்கர் இவருக்குத் தான் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் நம்புகிறேன். சிறந்த நடிகைக்கான பாஃப்டா அவார்ட் அல்ரெடி அவருக்கு கிடைத்தாயிற்று.

இயக்குனர் டாரன் அர்னோஃவ்க்ஸ்கி. இந்த மாதிரி ஒரு மனரீதியான போராட்டத்தை மிக அழகாகவும் ஜனரஞ்சகமாகவும் சொல்லுவது மிகக் கடினம். மனப் போராட்டத்தை சுவாரசியம் சிறிதும் குறையாமல் கதையில் நகர்த்தியிருக்கிறார். . பல இடங்களில் இவர் காட்சியமைப்புகளிலேயே பல விஷயங்களை நம்மையுமறியாமல் மனதில் புகுத்தியுள்ளார். உதாரணமாக வொயிட் ஸ்வான் பகுதியில் இருக்கும் காட்சியமைப்பும், ப்ளாக் ஸ்வான் அமைப்பில் இருக்கும் காட்சியமைப்பும் நம்மையே அறியாமல் நல்லதையும் கெட்டதையும் மனதில் புகுத்தும். அந்த காட்சியமைபுகளில் உபயோகப்படுத்தியிருக்கும்  வண்ணங்கள், கேமிரா கோணங்கள், கலர் க்ரேடிங்குகள் அனைத்தும் காட்சியில் சொல்ல வந்ததை சொல்லாமல் நம்மை உணரச்செய்யும்.

கேமிரா இரண்டு இடங்களில் என்னை அசத்தியது. கதாநாயகி தோழியுடன் அம்மாவை மீறி பப்புக்கு சென்று குடித்துவிட்டு போதையின் உச்சத்தில் புதிதாய் அறிமுகமாகும் நபருடன் ஈடுபட்டு , தீடீரென்று அவரின் உள்ளுணர்வு அவரை உசுப்பி சுயநினைவுக்கு வருவதை மிக அற்புதமாய் காட்சிப் படுத்தியிருப்பார். அதே போல் க்ளமாக்ஸில் அவர் ப்ளாக் ஸ்வானாக மாறும் காட்சியையும் மிக அற்புதமாய் காட்டியிருப்பார். படம் முடியும் போது கைத்தட்டுமளவிற்கு நம்மை ஒன்றிப் போகச்செய்வதில் சினிமேட்டோகிராபி மிக முக்கிய பங்களித்ததாய் நான் உணர்ந்தேன்.

டாரன் அர்னோஃவ்க்ஸ்கியின் முந்தைய படங்களில் "Pi" மட்டுமே பார்த்திருக்கிறேன். ப்ளாக் ஸ்வான் இவரின "Requiem for a Dream"  படத்தை பார்க்கவேண்டும் என்று ஆர்வத்தை தூண்டியிருக்கிறது.

நிற்க இந்தப் படம் குழந்தைகளுடன் போவதற்கு எதுவானது அல்ல. பாலியல் உணர்வை தூண்டாத் பல பாலியல் காட்சிகள் படத்தில் இருக்கின்றன. அத்தோடு ரத்தத்தைப் பார்த்தாலே உறைந்து போகக்கூடியவர்களுக்கும் இந்தப் படம் கொஞ்சம் ஷாக்கிங்காய் இருக்கலாம். இவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எந்த விதமான தொந்தரவோ நச்சரிப்போ இல்லாமல் பார்க்க வேண்டிய ஒரு படம். சினிமாவை ரசித்துப் பார்க்கும் ஓவ்வொரு ரசிகருக்கும் இந்த படம் ஹைலி ரெக்கமெண்டட்.

25 comments:

Chitra said...

Good review!

எல் கே said...

/ஆளவந்தான் படத்தில் கமல் இந்த விஷயத்தை இலாவகமாக கையாண்டிருப்பார் //

ஆம் ஆமாம் அதுதான் படம் ஊத்திக்கிச்சு

Porkodi (பொற்கொடி) said...

வித்தியாசமான படங்கள் வரணும் அதை பார்க்கணும்னு தான் வழக்கமா தோணும், ஆனா ஏதோ பேய், பாராநார்மல்னா கூட பராவயில்லை, இந்த மாதிரி ரியலிசம் கலந்த ஓவர் காம்ப்ளிகேஷன் எதுக்குன்னு தோணுது இப்பல்லாம்.

Porkodi (பொற்கொடி) said...

//நிற்க இந்தப் படம் குழந்தைகளுடன் போவதற்கு எதுவானது அல்ல//

கரெக்ட், அதான் போகலை! =)

//இவர்களையெல்லாம் தவிர்த்துவிட்டு எந்த விதமான தொந்தரவோ நச்சரிப்போ இல்லாமல் பார்க்க வேண்டிய ஒரு படம்.//

எச்சூஸ்மீ, யாரை சொல்றீங்க? தில் இருந்தா பேர் சொல்லுங்க பார்க்கலாம்? :P

மனம் திறந்து... (மதி) said...
This comment has been removed by the author.
மனம் திறந்து... (மதி) said...

அழகான விமர்சனம்! ஆனால் நீங்களும் அன்னப் பறவை மாதிரியே பாலை மட்டும் எடுத்துக் கொண்டு வந்திருக்கீங்களே, தண்ணீர் பற்றிய தகவலும் கொஞ்சம் கலந்திருந்தால் நிறைவாக இருந்திருக்குமோ!? அது சரி, நீங்க black ஆ, white ஆ, இல்ல black&white ஆ?! இந்தக் கேள்விக்கு வேலு நாயக்கர் மாதிரி பதில் சொன்னா பஞ்சாயத்தைக் கூட்டிடுவோம், ஜாக்ரதை!

மனம் திறந்து... (மதி) said...

பதிவுலக தர்மத்தைப் பேணிக் காப்பதில் உங்களுக்கு நிகர் நீங்களே தானோ? சில கொலை வெறி மிகுந்த பதிவர்கள் நம்ம பின்னூட்டங்களையும் குழி தோண்டிப் புதைச்சிட்டு, ஒண்ணுமே நடக்காத (தெரியாத) மாதிரி அடுத்த பதிவு போட்டு விடுகிறார்கள்! அண்ணே, ஆட்டோ சவுண்டு கேக்குது... மீ எஸ்கேப்பு........!

பத்மநாபன் said...

நல்ல விமர்சனம்... வாய்ப்பு வசமா கிடைக்கிறப்ப பார்த்திடலாம்..

இப்பல்லாம் முழுப்படத்தையும் பொறுமையா உட்கார்ந்து பார்க்க முடியமாட்டிங்குது.... இந்த மாதிரி விமர்சனங்கள் கிடைக்கும் பொழுது , படத்துல பார்க்க வேண்டியத பாத்துக்கலாம்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//நிற்க இந்தப் படம் குழந்தைகளுடன் போவதற்கு எதுவானது அல்ல//
அப்போ நான் போக முடியாது... ஒகே... நன்னிஹை உங்கள் தகவலுக்கு... :) (எனக்கு இந்த மாதிரி படம் ரெம்ப அலர்ஜி பாஸ்... அப்புறம் கனவு எல்லாம் வந்து....ஸ்ஸ்ஸ்பப்பா.... நான் இல்ல... )

கொடி சிஸ்டர் - கொஞ்சம் போஸ்ட் போடுங்க அம்மணி... இப்படி கடைசி பகுதி போடாம பழி வாங்கறது ஞாயமா?... :)
(டுபுக்கு - மன்னிடுங்க, அவங்க ப்ளாக்ல போஸ்டர் ஓட்டினா கண்டுக்க மாட்டேன்கறாங்க...அதான் இங்க போட்டுட்டேன்...:)

Sh... said...

"சொஸ்தம்" எனக்கு புது வார்த்தையா இருக்கு. ஆனா படிச்சப்போ அர்த்தம் புரிந்தது.

அது சரி நீங்க ஏன் முன்ன மாதிரி இப்போ எழுதுவதில்லை? I mean why only movie reviews, gilpaans etc?

Philosophy Prabhakaran said...

ஆளவந்தான் எனக்கு மிகவும் பிடித்த படம்... சிறந்த படங்களில் ஒன்று என்றும் கூறுவேன்... நீங்களும் அவ்விதம் தானே...

Porkodi said...

//சொஸ்தம்// - sujatha! :))

Appavi, weekdayla epdi neenga post expect panringa? joke ku oru alavu illaiya??

Arun Prakash said...

நான் ஆவலோடு எதிர்பார்த்த இந்த படத்தை இன்னும் பார்க்கவில்லை, அதனால் ஆரம்ப பத்திகளையும் முடிவு பத்தியையும் மட்டுமே படித்தேன்.
Darren Aronofsky-யின் Requiem for a Dream-யை பார்த்து வியந்திருக்கிறேன். Addiction (especially, drug addiction) வாழ்கையை எப்படி பந்தாடுகிறது என்பதை Raw-வாகவும் surreal-ஆகவும் அருமையான screenplay-வால் காட்டி இருப்பார்கள். நீங்க பார்த்து கண்டிப்பாக ரசிப்பீர்கள்.

Arul Kumar P அருள் குமார் P said...

//அத்தோடு ரத்தத்தைப் பார்த்தாலே உறைந்து போகக்கூடியவர்களுக்கும் இந்தப் படம் கொஞ்சம் ஷாக்கிங்காய் இருக்கலாம்//
saw , Girls Hostel , இந்த படத்தை விடவா ரத்தம் காட்டிவிட போகிறார்கள். நல்ல அழகான விமர்சனம். படம் பார்க்கும் ஆசையை தூண்டி விட்டு உள்ளீர்கள். ( மறுக்கா ரெபிடெக்ஸ் இங்கிலிபீசு புக்க மனப்பாடம் பண்ணனும் ...ஹும்..!)

ஆமா கொஞ்ச நாளா வூட்டுல நொம்ப போர் ஆகுதுன்னு நெனக்குறேன் அது தான் ஒரே படமாய் பார்த்து தள்ளுரிங்க. என்சாய்...!

Vasagan said...

Cinema not much interested. so no comment about post.
One request
பின் நவீனத்துவம் என்றால் என்ன ? உங்கள் பாணியில் என்னை மாதிரி ஞாணசூன்யன்க்களுக்கு புரியற மாதிரி one post please.

vetti said...

Ennamo Dubukku....ennavarum naanum theatre-ku poga mudiyaadhu-nu veettukku CD vaangindu vandhu paarthom....nagam pinju poradhum mudhugula edho punnu varradhum...avalum edho velakkennai kudicha maadhiriye alainja...entertainment-kaaga paarkka ukkaarndha ennamo vedhanaiya irundhadhu...adhaan appadiye stop pannittom...

Anonymous said...

hi D,
i believed ur blog n saw the movie..but it wasn't the greatest..may be if u saw with least expectation it would have been ok..i could have easily watched it in DVD peacefully..instead of an evening at the movies...
jey

ராம்ஜி_யாஹூ said...

nice review, thanks ji

ராம்ஜி_யாஹூ said...

அது சரி நீங்க ஏன் முன்ன மாதிரி இப்போ எழுதுவதில்லை? I mean why only movie reviews, gilpaans etc?

awesome comment

தக்குடு said...

//மழை பெஞ்சா தானே மண் வாசம், உன்னை நினைச்சாலே பூ வாசம் தான்// மாதிரியான வரிகளை பீலிங்கோட பாடிண்டு (பேக்ரவுண்ட்ல லாலேலா லாலே லாலா போடுக்கோங்கோ) படம் பாத்து பழகிட்டதால இந்த மாதிரி படம் பத்தி எல்லாம் ஒன்னுமே தெரியாது டுபுக்கு சார்! அதனால ஒரு ஆஜர் மட்டும் போட்டுக்கரேன்!

இப்படிக்கு,
'நாட்டாமை' தம்பி பசுபதி

மனம் திறந்து... (மதி) said...

Thalaivare!

Do you have a separate mail-id which I can use, if, as a blogger I wish to contact you. I don't think it is proper to use the other id you have shared in some other context.

Anbudan,
மனம் திறந்து...(மதி)

பால்கி said...

அன்புள்ள டுபுக்கு அவர்களுக்கு , நான் தங்களின் வலைப்பதிவை ஒரு வாரத்திற்கு முன் தான் பார்த்தேன் . தொடக்கத்தில் உங்களின் எழுதியதில் (உங்களுக்கும்) பிடித்தவை தான் படிக்க தொடங்கினேன் . பிறகு உங்கள் எழுத்தின் ஈர்ப்பால் அனைத்து பதிவுகளையும் இரு நாட்களில் படித்து முடித்து விட்டேன் . உங்களின் எழுத்தில் சுஜாதா அவர்களின் சாயல் நன்றாகவே தெரித்தது .நீங்கள் உங்கள் தங்கமணி உடனும் இரு குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக நீண்ட நாட்கள் வாழ திருசெந்தூர் முருகனிடம் வேண்டி கொள்கிறேன் . நன்றி...



புத்தக பிரியர்களுக்கு புத்தக ப்ரியனின் வணக்கங்கள் . நான் பாலகிருஷ்ணன் . ஊர் தென்காசிக்கு அருகில் உள்ள பாவூர் சத்திரம் . . என்னிடம் சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட புத்தகங்கள் சொந்த சேமிப்பில் உள்ளது . பொன்னியின் செல்வன் , புளியமரத்தின் கதை , சுஜாதா எழுதிய இருபது புத்தகங்கள் , ..... இன்னும் பல . எங்கள் ஊரில் உள்ள சின்ன நூலகத்தால் எனக்கு தீனி போடா இயலவில்லை .என்னிடத்தில் உள்ள புத்தகங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் . என்னை போல் சொந்த சேமிப்பில் புத்தகங்கள் வைத்துள்ள திருநெல்வேலிகாரர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம் . எனது புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுக்கவும் மற்றவரின் புத்தகங்களை நான் பயன்படுத்தவும் ஆர்வமாக உள்ளேன் . mail :ultrabalki@gmail.com ,,,,,,,mobile no . 9976669049

தக்குடு said...

//இந்த வருட ஆஸ்கர் இவருக்குத் தான் கண்டிப்பாக கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்//

நீங்க ஒரு தீர்க்கதரிசிதான் டுபுக்கு அண்ணாச்சி!! ஆஸ்கார் விருது இவங்களுக்கு கிடைச்சாச்சு...:)

Dubukku said...

சித்ரா - மிக்க நன்றி

எல்.கே - :))) படம் ஊத்திக்கினத பத்தி நான் ஒன்னும் சொல்லலையே :))

பொற்கொடி - அடடா நீங்க குழந்தையா :))) என்னங்க இப்படி சொல்லீடீங்க பச்சைக் குழந்தைன்னுல நினைச்சிக்கிட்டு இருந்தேன் :) உங்க மத்த கொஸ்டீனெல்லாம் சாய்ஸ்ல விட்டுட்டேன் :P

மதி - விவகாரமாத்தேன் கேக்குறீக...நான் ப்ளாக் அன்ட் வொயிட் :))) இப்ப என்ன பண்ணுவிங்க :P
//சில கொலை வெறி மிகுந்த பதிவர்கள் நம்ம பின்னூட்டங்களையும் குழி தோண்டிப் புதைச்சிட்டு// - என்ன மேட்டர்ங்க இது..மெயில்ல கெக்க மறந்து போயிட்டேன். ஏதாவது சுவாரசியத்த மிஸ் பண்ணிட்டேனா :P

பத்மநாபன் - ஹூம்ம் வாய்ப்பு கிடைச்சா கண்டிப்பா பாருங்க பிடிக்கலாம் :)

அப்பாவி - அப்போ ரங்குவ மட்டும் படத்துக்கு அனுப்பி வைங்க :)

ஷ் - சொஸ்தம்னா நலம் அல்லது குணமாக்றதுன்னு அர்த்தம் படற மாதிரி நிறைய பழைய எழுத்தாளர்கள் எழுதியிருக்காங்க...எனக்கு பிடிச்ச வார்த்தையும் கூட :) நடுவில சில பல வேலை வந்துட்டதால நார்மல் போஸ்ட் போட முடியல

பிரபாகரன் - எனக்கும் படம் பிடித்தது. ஆனால் அதை விட பல படங்கள் பிடித்தன :)

பொற்கொடி - சுஜாதா இல்ல...அதற்கு முன்னால் தேவன் நிறைய யூஸ் பண்ணியிருக்கார் இந்த வார்த்தைய. கல்கியும் உபயோகப் படுத்தியதாய் நினைவு. (அவருடைய சமூக கதைகளில்)

அருண் - அந்தப் படம் கண்டிப்பாய் பார்க்கவேண்டிய லிஸ்டில் இருக்கிறது கூடிய சீக்கிரம் பார்க்கனும் :)

வெட்டிப்பையன் - ம்ம்ம் எனக்குப் பிடித்தது உங்களுக்கும் பிடிக்கலாம். நிறைய படங்கள் ஹீ ஹீ அப்படியெல்லம் இல்ல..சொன்னேனே அன்லிமிடெட் தியேட்டர் பாஸ் வாங்கி வைச்சிருக்கேன் :)

வாசகன் - ஆஹா விவகாரமான கேள்வி. உண்மையச் சொல்லனும்ன்னா எனக்கும் தெரியாது ஆனா தெரிஞ்சிகிட்டு சொல்லப் பார்க்கிறேன் :)

வெட்டி - அடடா உங்களுக்கு பிடிக்கலையா சாரிங்க..அந்தக் காட்சிகள் அதான் எச்சரிக்கை பொட்டிருந்தேன். ஆனா முடிவு க்ளைமாக்ஸ் டான்ஸும் நடிப்பும் எனக்கு ரொம்ப பிடித்தது.

ஜெய் - ஹையோ உங்களுக்கும் பிடிக்கலையா...சாரி. இனிமேல் பரிந்துரையில் இந்த டிஸ்கியையும் போட்டுவிடுகிறேன் :))

ராம்ஜி - மிக்க நன்றி. நடுவில கொஞ்சம் வேலை வந்துவிட்டது அதான் பதிவுல கவனம் செலுத்த முடியல

தக்குடு - :)))

பால்கி - நம்மூர்காரரா வாஙக வாங்க. மிக்க நன்றி உங்கள் அன்பான வாழ்த்துக்கு. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் அதே வாழ்த்துகள். நான் ஊர்ல இருந்தேன்னா அப்படியே உங்க புஸ்தகங்களை லபக்கி இருப்பேன் :P

தக்குடு - ஹப்பாடா...யாருமே அத கண்டுக்கலையேன்னு நினைச்சேன்...சபாஷ் :))) உன் அட்டென்ஷன் டு டீட்டெயில பாராட்டுறேன் :))) மிக்க நன்றி ஹை

மனம் திறந்து... (மதி) said...

ஹலோ! நீங்க ரொம்ப புத்திசாலித்தனமா தப்பிச்சுட்டதா நினைக்காதீங்க! நீங்க "Black and White" பார்ட்டி தான்னு உங்க வாயாலேயே ஒப்புதல் வாக்கு மூலம் குடுத்துட்டீங்களே! ஹைய்யா! :))))

அந்தக் கொலைவெறி பதிவர் வேற யாரும் இல்லேங்க! வர்றவங்க போறவங்க எல்லாரையும் போட்டுத் தள்ளி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்னு சொல்லிப் பொதைக்கிற நம்ம கேடியக்கா தாங்க!

ஆனா என்ன கொடுமை பாருங்க, பாவம்! நாம இந்த மாதிரி சொல்லப் போக, அவங்களுக்கு ஆணி புடுங்கிற தொல்லை தலைக்கு மேல போய், அதனால உடம்பே சரியில்லாமப் போச்சோ என்னவோ, ரொம்ப நாளா ஆளையே காணமுங்கோ! உங்களுக்கு எதாச்சும் தெரிஞ்சா சொல்லுங்க ப்ளீஸ்! எல்லாருக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும்! மற்ற கழகக் கண்மணிகளுக்கும் சேர்த்துத்தான் இந்த வேண்டுகோள்!

Post a Comment

Related Posts