Monday, January 10, 2011

சாட்டிங் சாட்டிங்

நான் படித்த ஸ்கூலில் கான்வென்ட் ரேஞ்சுக்கு 'மேடம் குட்மார்னிங்' சொல்லும் பழக்கத்துக்கு அடுத்த படியாக கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கத்தில் தலையாயது வகுப்பில் இருக்கும் சக பெண் மாணவியரோடு சகஜமாய் பேசலாம். இது என்னவோ ரொம்ப பெரிய விஷயம் மாதிரி "உங்க ஸ்கூல்ல என்னப்பா முட்டி வரை ஸகர்ட் போட்ட கேர்ல்ஸ் கூடலாம் பேசுவீங்க சேர்ந்து நடந்து போவீங்க"  என்று மத்த ஸ்கூல் மாணவர்கள் வயத்தெரிவார்கள்.

இப்படி சம வயது பெண்களுடன் பேசுவதற்கு பெயர் "கடலை" என்று தமிழ் கூறும் நல்லுலகம் நாமகரணம் சூட்டிய போது நான் காலேஜில் அடியெடுத்து வைத்திருந்தேன். முதல் வருடம் ஒரு பெண்ணும் பேசாமல், கடலை வாடையே மறந்து போயிருந்தது. இரண்டாம் வருடம் கடலை டச் விட்டுப் போய் யாரிடமாவது பேசவேண்டும் என்றாலே உதறல் எடுக்க ஆரம்பித்தது.  "இதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல.. யாரு கிட்ட வந்து ரவுசு விடற"ன்னு பெட் கட்டி ஒரு பெண்ணிடம் 'எச்சூஸ்மீ' சொன்ன பிறகு திரும்ப உதறல் வந்து "கொஞ்சம் அழி ரப்பர் கடன் குடுக்க முடியுமா என்னோடத மறந்து வீட்டுல வைச்சிட்டு வந்துட்டேன்"ன்னு பென்சிலை கடன் வாங்கி வந்திருக்கிறேன்.  காலேஜ் பேர்வல் பார்ட்டி வரை அந்தப் பெண்ணும் திரும்ப கேட்கவில்லை நானும் குடுக்கவில்லை.

பட்டிணம் பட்டிணம் தான் இல்லையா...சென்னை (என்) ஐ.ஐ.டி வந்த பிறகு விஷயமே தலைகீழ். கம்ப்யூட்டர் படிப்பு சம்பந்தமாய் பெண்களுடன் அடிக்கடி பேசவேண்டிய நிர்பந்தங்கள் நிறைய வந்தன. அந்த கால கட்டத்தில் வந்த புதுமையான விஷயம் தான் சாட்.  தட்டு நிறைய வெந்த கொண்டக் கடலையையும் வெங்காயத்தையும் இன்ன பிற அயிட்டங்களையும் சேர்த்து கொத்தமல்லி இலையை தூவி ஸ்பூனை சொருகி தரும் சேட்டுக் கடை சாட் வேறு, “யூ நோ இன் சுவீஸ் தே மேக் ஸ்னோ”ன்னு கம்ப்யூட்டரில் வெர்ட்சுவல் கடலை போடும் சாட் வேறு என்று திரும்பவும் ஞானோபதேசம் கிட்டியது இங்கே தான்.

"அதான் இங்கயே பேசறீங்களேடா ...அப்புறம் இதுல வேற என்ன"

"டேய் அது வேற இது வேற ...இதுல தெரியாதவங்க கூட ஃப்ரீயா பேசலாம் ஃபாரின்லேர்ந்து கூட வருவாங்க"

"ஓஹோ அவ்வளவு தூரத்துலேர்ந்து கூடவா...சரி என்ன பேசுவீங்க?"

"எங்க ஊர்ல பருப்பு புளி இன்ன விலை, உங்க ஊர்ல என்ன விலை...கோக்கோ கோலால ராத்திரி பல்ல போட்டு வைச்சா காலம்பற சுத்தமா அரிச்சுருமாமே அப்படியா...மூனு கிலோ வைக்கல் தின்னா எருமைமாடு எத்தன லிட்டர் பால் கறக்கும் இத மாதிரி நிறைய ஜெனரல் நாலட்ஜ வளர்த்துக்கலாம்"

"ஓஹோ இந்த சந்தேகத்தலாம் யாருகிட்டா கேப்பீங்க"

"லோன்லிகேர்ல், ஜஸ்ட் எயிட்டீன், எக்ஸ்மாடல், யுவெர்ஸ்_ஷகீரா, லவ்லி_ஸ்வேதா, யங்கேர்ல்வெயிட்டிங் இந்த மாதிரி நிறைய கற்ற மாதர்கள் இருப்பாங்க..அவங்க நம்மள அறிவு வழியில் கூட்டிட்டுப் போவாங்க.."

"ஆமாண்டா விஞ்ஞானம் நமக்கு அறிவ வளர்க்க எவ்வளவு சந்தர்ப்பங்களைத் தருது. 'We've arranged a civilization in which most crucial elements profoundly depend on science and technology' - ன்னு கார்ல் சாகன் சொல்லியிருக்கார் " என்று  எனக்கும் சாட்டிங்க் கருத்துப் பூர்வமாய் பிடித்துவிட்டது.

நான் சொல்லும் காலகட்டம் கூகிள் நிறுவனம் பற்றி தெரியாத காலகட்டம். யாஹூ மற்றும் 123இன்டியா மட்டுமே சாட்டிங் வசதிகள் வழங்கி வந்த காலம்.  நன்பேண்டான்னு என்று நண்பரே கூட வந்து லாகின் ரெஜிஸ்ட்ரேஷன் செய்ய உதவினார். டுபுக்கு இரண்டாம் ஆண்டு (என்) ஐ.ஐ.டின்னு போடுன்னு சொன்னது நண்பருக்கு சரியாய் வரும் என்று தோன்றவில்லை. லாகின் ஐடிலயே ஒரு ஃபயர் இருக்கனும்...பொண்ணுங்கள சுண்டி இழுக்கனும்ன்னு  எனக்காக ரொம்ப மெனக்கெட்டார். ‘கட்டிளங்காளை’ என்று அவர் போட "டேய் யாருடா அந்த கட்டிளங்காளை"ன்னு நான் கேட்க அப்புறம் நான் தான் கட்டிளங்காளைன்னு எனக்கே அன்றைக்கு தெரிந்து, கடைசியில் பெயர் ஜோராக முடிவாகியது. எல்லாத்தையும் பூர்த்தி செய்து பட்டனை அமுக்கினால் "Dude ஏற்கனவே ஏகப்பட்ட கட்டிளங்காளைகள் நம்ம சேட்டிங்ல சுத்திக்கிட்டு திரியுதுங்க...வேணும்னா கட்டிளங்காளை_7383749347 ஐ.டி இருக்கு, எடுத்துக்கோன்னு கம்ப்யூட்டர் நக்கல் விட்டது. ஆகா உண்மைத் தமிழன் ஐ.டி மாதிரி ஆயிடிச்சேன்னு ரொம்ப யோசித்தேன்.

"இதுக்கெலாம் மேஷம் மீனம் பார்க்காத எடுத்துக்கோ எல்லாம் கூடிய சீக்கிரம் சரியாகிடும்"ன்னு எனெக்கென்னம்மோ கேன்சர் வந்த மாதிரி அட்வைஸ் பண்ணி ரெஜிஸ்த்தர் பண்ணிவிட்டார் நண்பர்.

அடுத்த நாள் மவுண்ட் ரோடில் ஒரு ப்ரவுசிங் சென்டருக்கு பக்கத்தில் ஒரு முக்கியமான வேலை இருந்தது. ஒரு மணி நேரம் ஆகும் அதுவரைக்கும் பக்கத்திலிருக்கிற ப்ரவுசிங் சென்டரில் 123இன்டியா சைட்ல போய் சேடிங் பண்ணிட்டு வாங்கன்னு அவர்களே சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் ப்ரவுசிங் சென்டருக்கு போக வேண்டியதாகிவிட்டது. லாகின் ஸ்க்ரீன் பார்த்த போதே ஒரே கிளுகிளுப்பாய் இருந்தது. ஆனால் இளம் சமுதாயத்திற்கு தான் எவ்வளவு சோதனை - முந்தின நாள் ரெஜிஸ்தர் செய்த கட்டிளங்காளை 738 க்கு அப்புறம் வரும் நம்பர்கள் மறந்து போய் விட்டது. எனவே முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதாகிவிட்டது. இருபத்தி நாலு மணிநேரத்தில் கட்டிளங்காளைகள் ஜனத்தொகை அதிகமாகி இந்த முறை 8759362301 என்று வந்தது. கவனத்தை சிதறவிடாமல் நம்பரை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டேன். சீனியாரிட்டி முக்கியம் இல்லையா?

இந்த சந்தர்ப்பத்தில் பிள்ளையாரை விட முருகனே பெட்டர்ன்னு அவரை வேண்டிக்கொண்டு லாகின் செய்தால் முருகன் முருகன் தான். எனக்கு அடுத்த பெயராக லாகின் செய்தவர்கள் பட்டியலில் க்யூட்கரீஷ்மா பெயர் இருந்தது. நான் (என்) ஐ.டி.யில் படிக்கிறேன் 94% வைத்திருக்கிறேன்னு அறிமுகப் படுத்திக் கொண்டு மெசேஜ் அடித்தேன். நடுவில் வயர் ஏதாவது லூஸ் கணெக்க்ஷனாகி இருக்குப் போகிறது, மெசேஜ் சரியாய் போய்ச் சேரவேண்டுமே என்று ஒன்றுக்கு மூன்று முறை அனுப்பினேன். க்யூட்கரிஷ்மா என்ன க்யூட்டோ கருமாந்திரம் பதிலே வரவில்லை.

அதற்கடுத்தாக  என்னை ஈர்த்த பெயர் ஹார்னி19f. அந்தப் பெயரில் 19f இன்ட்ரஸ்டிங்காய் இருந்தது. " ஹலோ எங்க முந்திய வீட்டு நம்பரும் 19f . நம்க்குள்ள என்ன ஒரு ஒத்துமை பார்த்தேளான்னு" என்று அதிரடியாய் ஒரு மெசேஜை தட்டி இம்ப்ரஸ் செய்தேன். என் கெட்ட நேரம் ஹார்னி19f சாப்பாடுக்கு லாகவுட் செய்யாமல் வெளியே போய் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கட்டாயம் நான் அனுப்பிய அந்த அதிரடி மெசேஜுக்கு உடனே பதில் வந்திருக்கும். சரி 19f இல்லாவிட்டால் என்ன அப்போது குடியிருந்த 44a/76 வீட்டு நம்பருக்கு ஏதாவது லாகின் மாட்டுகிறதா என்று பார்த்தேன். அந்த நம்பரில் ஒருதரும் இல்லை.

அதுக்கப்புறம் இன்னும் சில பல பேருக்கு மெசேஜ் அடித்தும் பதில் வரவில்லை. நேரம் முடிவடைகிற தருவாயில் தான் எனக்கு மண்டையில் பல்பு எரிந்தது. பதில் வராததற்கு காரணம் ஒரு வேளை நான் உட்கார்ந்திருந்த கம்ப்யூடரில் கோளாறு இருக்கலாமென்று. அங்கே இருந்த சென்டர் சூப்பரவைஸரை கூப்பிட்டு இந்த மாதிரி இங்கேர்ந்து போகிற முத்து முத்துனா மெசேஜ்கள் போய் சேருகிற மாதிரி தெரியவில்லை பதிலும் வரவில்லை என்னைய்யா கம்யூட்டர் வெச்சிருக்கீங்க பில் கேட்ஸ்ட சொல்லட்டுமான்னு சரிபார்க்கச் சொன்னது அவருக்கு பிடிக்கவில்லை. ஒரு மணி நேரம் தான் முடிந்துவிட்டதே முதல்லயே காசு வாங்கியாச்சேன்னு என்று என்னை பார்த்து நக்கலாய் சிரித்துக் கொண்டிருந்தார். எனக்கு கன்ஃபார்ம்டா கம்ப்யூட்டரில் தான் பிரச்சனை என்று தெரிந்துவிட்டது. "இப்படியே பல்லக் காட்டிண்டு இரு… சென்ட்டர் விளங்கிடும்...முதலாளியப் பார்த்தா உன்னைப் பத்தி ஓகோன்னு சொல்றேன்"னு கோவமாய் வந்துவிட்டேன்.

அடுத்த நாள் தான் நணபர் விளக்கினார். 19f என்பது வீட்டு நம்பராய் இருக்காது அது அவரின் வயதையும் பெண் என்பதையும் குறிப்பதாய் இருக்கும் என்று. இருந்தாலும் அவர் சாப்பிடத் தான் போயிருந்திருப்பார் என்று மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். 94 பெர்சன்ட் எடுத்ததை முதலில் சொல்லக் கூடாது, அதற்க்குப் பதிலாக ASL என்று கேட்கவேண்டும் என்று பொறுமையாய்  பாடம் எடுத்துரைத்தார்.

அப்புறம் மதுரை முத்து மாதிரி சென்னை அழகன்னு பெயரை கேட்டாலே சுண்டி இழுக்கிற மாதிரி மாற்றி வைத்துக்கொண்டேன். அதற்கப்புறமும் இரண்டு முறை  மவுண்ட்ரோடில் வேறு இடத்தில் வேலை வந்து, மறுபடியும் தாமதமாகி, அவர்களும் 123இண்டியாவில் சேட் செய்யச் சொல்ல, வேறு வழியில்லாமல் வேற ப்ரவுசிங் சென்டருக்குப் போகவேண்டியதாகி விட்டது. இந்த ப்ரவுசிங் சென்ட்டரில் வயர் லூஸ் கனெக்க்ஷன் இல்லமல் நன்றாக முறுக்கி விட்டிருந்தார்கள் போலும். அத்தோடு புது பெயரும் நல்ல ராசியாய் இருந்தது. பெங்களூர் இஷாவை இரண்டாவது நிமிடம் சுண்டியிழுத்து பதில் வந்தது. ஆனால் இந்த உலகம் இருக்கே உலகம், எல்லாத்துலயும் ரொம்ப கலப்படம் ஜாஸ்தி. சேட்டிங்க செய்ய ஆரம்பித்த பதினேழாவது நிமிடம் பெங்களூர் ஈஷா ஆம்பிளை என்று தெரிய வந்தது. "ங்கொய்யால " என்று ஆரம்பித்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு "போடா போடா போய் வேற வேலையப் பாரு"ன்னு கனவான்கள் மாதிரி கைகுலுக்கி விடை பெற்றோம். அதே போல் அதற்கடுத்து வந்த ப்யூட்டிபுல் லில்லிf, மிஸ் ஜாஸ்மின்22f எல்லாமே பெண் பெயரில் வரும் ஆம்பிளைக் கபோதிகள் என்று தெரியவந்தது. "ஏண்டா உங்களுக்கெலாம் வெக்கமே இல்லையாடா... நாப்பது ரூபாய் குடுத்து ப்ரவுசிங்க் செய்வது சல்லிஸாய் போய்விட்டதா.. ரூபாயின் அருமை தெரியவில்லையா" என்று எனக்கு அவர்கள் மேல் ஆத்திரமாய் இருந்தது.

ஒரே ஒரு முறை தாய்லாந்திலிருந்து ரோஸ் என்ற பெண் மட்டும் உண்மையான பெண். டீச்சராய் இருந்தாராம். ஆனால் அவருக்கு வயது 58 என்று சொன்னவுடன் "குட்மார்னிங் மேடம்"ன்னு நான் படித்த கான்வென்ட் பழக்கத்தை பயன்படுத்தி "ஆஸ் ஐ அம் சபரிங் ஃப்ரம் பீவர்" படித்து ஓடி வந்துவிட்டேன்.. எப்பா ராசா இப்படி பொறுப்பில்லாத நேர்மை இல்லாத கூட்டத்தில் அவங்க ஊர் அரிசி பருப்பு விலை கேட்க ஒவ்வொரு தரமும் ப்ரவுசிங் சென்டருக்கு நாற்பதுரூபாய் அழ முடியாது என்று ஜகா வாங்கிவிட்டேன். அப்புறம் கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை கிடைத்த பிறகு  மவுண்ட் ரோடு ப்ரவுசிங் சென்டருக்கு பக்கத்தில் போக வேண்டிய வேலை வருவதும் நின்று விட்டது.

நிற்க இப்ப என்ன சொல்ற நீன்னு குழம்ப வேண்டாம். சும்மா உடாத நீ சேட்டிங்கே பண்ணலையான்னு கொதிக்க வேண்டாம். பதிவின் லேபிளைப் பாருங்க... அப்பிடீன்னா இந்தப் பதிவின் உட்கருத்து புனைவுன்னு அர்த்தம். கோக் எடு என்ஜாய் பண்ணு போதுமா சாமி. அவ்வ்வ்வ்வ்வ் நல்லாக் கேக்குறாய்ங்கய்யா டீட்டெயிலு....!!


தமிழ்மண விருதுகளில் - ஒரு கள்ளவோட்டு கூட போடாமல் வித்துவான் பதிவு உங்கள் ஏகோபித்த அன்பினால் கடைசி சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறது. வோட்டு போட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் மிக்க நன்றி. உங்களுடைய அன்பிற்கு மிக்க கடமைப்பட்டுள்ளேன் !!

50 comments:

Mahesh said...

laughing laughing !!!

சேலம் தேவா said...

//(என்) ஐ.ஐ.டி//

இப்படிதான் சொல்லிக்கணும் வேற வழி..!! :-)

Sathish Kumar said...

//"லோன்லிகேர்ல், ஜஸ்ட் எயிட்டீன், எக்ஸ்மாடல், யுவெர்ஸ்_ஷகீரா, லவ்லி_ஸ்வேதா, யங்கேர்ல்வெயிட்டிங் இந்த மாதிரி நிறைய கற்ற மாதர்கள் இருப்பாங்க..அவங்க நம்மள அறிவு வழியில் கூட்டிட்டுப் போவாங்க.."//

ஆமாங்க இந்த பேரெல்லாம் எப்படித்தான் இவங்களுக்கு தோணுதோ....! ஹா....ஹா...!//"ங்கொய்யால " என்று ஆரம்பித்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு "போடா போடா போய் வேற வேலையப் பாரு"ன்னு கனவான்கள் மாதிரி கைகுலுக்கி விடை பெற்றோம்.//

நல்லா நறுக்குன்னு நாக்க புடிங்கிக்கிறா மாதிரி கேட்டீங்க தல இந்த பயலுகல...! இவனுங்களால பல ரூவா நட்டமானது தான் மிச்சான். பணத்தோட அருமை தெரியாதவனுங்க...!

பதிவு கலக்கல்...தலைவா...!

அபி அப்பா said...

முழுசா அழகா திருப்தியா படிச்சேன். என்னை நீங்க திருப்திப்படுத்துட்டீங்கன்னு சொன்னா தப்பா வரும். அதானல இந்த பதிவால் நான் சந்தோஷமா சிரிச்சேன் என பொருள் கொள்ளவும்:-)))

கடைசி சுற்றுக்கு வந்தமைக்கு என் வாழ்த்துக்கள்! அப்படியே வெற்றி பெற்று முதலிடம் பிடிக்கவும் என் அன்பான வாழ்த்துக்கள் டுபுக்கு!

ராம்ஜி_யாஹூ said...

எனது யாகூ இணைய அரட்டை அடையாள பெயர்கள் சில

கணினிதாசன்
பைச்டாண்டர்

இணையதாசன்
குப்பன்_யாஹூ
குப்பன்_த்விட்டேர்

நண்பர்கள் சிலரின் ஐடி

கணினிப்பித்தன்,
ஈ கடவுள் (e_kadavul)
சொல்லாமலே
வெய்யில்
பாரதி_புதல்வன்
Sheila_26sg
Vasanthan_16
Valippokkan
Patdubai
Tamil_american_CA

ராம்ஜி_யாஹூ said...

இருபத்தி நாலு மணிநேரத்தில் கட்டிளங்காளைகள் ஜனத்தொகை அதிகமாகி இந்த முறை 8759362301 என்று வந்தது. கவனத்தை சிதறவிடாமல் நம்பரை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டேன். சீனியாரிட்டி முக்கியம் இல்லையா?

அமுதா கிருஷ்ணா said...

நல்லாயிருக்கு..

பிச்சைப்பாத்திரம் said...

ரொம்ப சிரிச்சேன். நன்றி. :-)

அஹ‌ம‌து இர்ஷாத் said...

:)))

Chitra said...

ha,ha,ha,ha,ha.... சிரிச்சு முடியல.

தமிழ்மண தேர்வுக்கு வாழ்த்துக்கள்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

பத்மநாபன் said...

நாங்கள் படித்த ''தாவணி பொற்கால''த்திலும் அப்படித்தான் பாட சம்பந்தமாக கூட பேசுவதற்கு தயக்கம் ... பெஞ்சில் ஓரு சைடில் உட்கார்ந்தால் சடாரென்று எழுந்து விடுவார்கள் ...பெயரெல்லாம் இல்லை... கேர்ல்ஸ் ..பாய்ஸ் தான்.. அப்படி அந்த காந்த சக்தியை மெயின் டெயின் செய்வார்கள் .. என்னிடம் கணக்கு சந்தேகம் கேட்கவந்த பெண்மணிகளை , நாதாரி நண்பர்கள் நக்கலடித்தே திரும்ப செய்தது இன்னமும் ஆறாத தீராத விஷயம்....

சேட்டிங் சேட்டை அமர்க்களம் ...''கட்டிளங்காளை'' பெயர் வைத்து வழிய , வழிய சேட்டி முடித்து எதிரிலும் க்கட்டிளங்காளை என்று தெரிந்தால் அந்த கம்ப்யுட்டரை உடைக்கும் கோவம் வரத்தான் செய்யும் ..

// உட்கருத்து புனைவுன்னு // திடீர் ன்னு கொளவிக்கல்லு ஞாபகம் வந்தமாதிரி இருக்கு ..இன்னமும் நேக்கா எடுத்து அதை தேம்ஸ் ஆத்துல வீசவில்லையா?

அறிவிலி said...

//ஆகா உண்மைத் தமிழன் ஐ.டி மாதிரி ஆயிடிச்சேன்னு ரொம்ப யோசித்தேன்//

அப்பவே உண்மைத்தமிழனுக்கு இதே ஐடிதானா????

கானகம் said...

//சேட்டிங்க செய்ய ஆரம்பித்த பதினேழாவது நிமிடம் பெங்களூர் ஈஷா ஆம்பிளை என்று தெரிய வந்தது. "ங்கொய்யால " என்று ஆரம்பித்து ஒருவருக்கொருவர் மரியாதை செய்து கொண்டு "போடா போடா போய் வேற வேலையப் பாரு"ன்னு கனவான்கள் மாதிரி கைகுலுக்கி விடை பெற்றோம். //

கலக்கல். வழக்கம்போல் அருமையான பதிவு.

Anonymous said...

what is ur secret id for chatting these days?! :) suggestions: london_lion, blog_bull !!!

Porkodi (பொற்கொடி) said...

தல ஃபார் ஏ சேஞ்ச் நீங்க ஏன் நல்லாயில்லாம பதிவெழுத கூடாது? இல்ல தெஇர்யாம தான் கேக்கறேன், நீங்க பாட்டுக்கு போஸ்ட் பின்னாடி போஸ்ட் இப்படி சிரிக்க வெச்சா, நாங்க என்னனு தான் கமெண்ட் பண்றது?? நல்லா படிக்கற புள்ளைக்கு விதம் விதமா எக்சாம் வெச்சு வகை வகையா கொஸ்டின் குடுத்து எல்லாத்துக்கும் ஒரே ஆன்சர்னு சொன்ன மாதிரி.. கொஞ்சம் எங்க நிலைமை யோசிங்க தல!

Kavitha said...

You made my day!!! From the dark introspection to the lightest and brightest laugh:) How do I pay you back??

Paavai said...

ari poorvamana kelvi - adhu ennanga ASL... madargal, gilugiluppu eppadi ippadi varthaigal select panna mudiyudu ungalale .... attagasam vazhakkam pol

Anonymous said...

@Paavai.....adhu vandhunga....ASL means...."Amba Samudram Lollu"....kareetta....ippa purinchi pochaa....? (Naattamaiyum kanmanigalum aamodhippaargal endru nambugiren!)

தக்குடு said...

ராம்ஜி அண்ணா, எனக்கு தெரிஞ்சு ஒரு ஐடி confused roosemilku...;)

டுபுக்கு தல, ஆபிஸ்ல வெச்சு முதல் 4 வரி படிச்சுட்டு தாக்குபிடிக்க முடியாம 'படக்'னு க்ளோஸ் பண்ணிட்டேன். எதுக்கா? இனிமே ஆபிஸ்ல தனியா சிரிச்சா ஊருக்கு அனுப்பிடுவாங்களோ?னு பயம் தான்....:)

Porkodi (பொற்கொடி) said...

தக்குடு, ரஜினி சிவாஜி ரேஞ்சுக்கு என் தங்கை ஒரு ஆலயமணி அறிவுச்சுடர் தங்கரதம்னு எல்லாம் தாங்கலைன்னாலும் ஏன் இந்த கொல வெறி? நல்லாத் தானே போயிக்கிட்டு இருநதுது?

அதுக்கு மேல இருக்க அனானி நீங்களா தக்குடுண்ணா? எப்படி எப்படி ASLனா அம்பா சமுத்திரம் லொள்ளு? ரைட்டு.

Anonymous said...

@Porkodi: Thanks for voting for ASL "Kediyakka". Andha anony nijamavey "anani" thaan. I have been following this "Galaatta Goshti" for the last one year. Innum blog ulagil passport, visa edhuvum vaangavillai. Adhaan. Adhu mattum illai...This is the first ever comment I made in the blog space.
Naanum vegu viraivil "jothiyil aikkiyamaagum abaayam" irukkiradhu....ushaar....ushaar...!

Anonymous said...

Porkodi said...//நல்லா படிக்கற புள்ளைக்கு விதம் விதமா எக்சாம் வெச்சு வகை வகையா கொஸ்டின் குடுத்து எல்லாத்துக்கும் ஒரே ஆன்சர்னு சொன்ன மாதிரி.. கொஞ்சம் எங்க நிலைமை யோசிங்க தல! //

Idhiley edho "ul kuththu" irukkira maadhiri theriyudhey?! Naaraayana...Naraayana....! Nattaamai konjam gavaninga!

Porkodi (பொற்கொடி) said...

ஆஹா.. இது வேறயா.. இப்படி தான் முன்னாடி ஒரு போலி சாமியார் வந்தார்! அவர் எங்களை போட்டு இப்ப படுத்துற பாடு இருக்கே.. ஸப்பா!! சரி அவரையே சமாளிக்கறோம் உங்களை சமாளிக்க முடியாதா? சீக்கிரமா பாஸ்போர்ட் விசா கிடைக்க வாழ்த்துக்கள்! நாட்டாமை இப்போலாம் கட்சியை திரும்பிக் கூட பார்ப்பதில்லை, அதனால் குழந்தைகள் அணி செயலாளர் ஆன கொடிக்குட்டி உங்களை வருக வருக என வரவேற்று.. சரி சரி நிறுத்திடறேன்.

Paavai said...

anony - chattu puttunu passport visa vangi jyothiyil iykkiyam agunga .. .. enakku nijamave ASLna ennanu theriyanum ... nallaa badil sonneenga.

Porkodi kooda sendhu naanum ungalai varuga varuganu blog ulaguthukku azhaikiren

Anonymous said...

@Porkodi and Paavai: thank you both for the warm welcome...hmmmm...Nammala vachchu "kamidi" pandrathunnu theermanam pannitteenga pola! varen...varen...viraivil varren.

@Paavai..andha ASL stands for (Age, Sex and Location) chattingley (andha aadham evaal kaalathil)idhu "raagam thaanam" madhiri....idhai vachchu thaan namakku moodu set aagum merkondu pallavi paada...Andhap pakkam adhu unmaiyile aanaa pennaa enbadhellam appuram thaan theriya varum. Ippallaam ASL kooda mukkiyamillai endru ninakkiren...sariyaaga bathil vandhu kondirunthaal podhum...makkal computeraiye kadhalikkath thayaaraaga irukkiraargal.

Nijak kaathaliley kooda appadith thaaney! Mudhal kaadhalil mattum thaane manithan kaadhaliyaik kaadhalikkiraan...adharkappuram avan kaadhalippadu kaadhalaith thaane!

Cross-cultural chatting sodhappalukku ennoda sondhak kadhai kooda onnu irukke! Oru tharam naan oru USA penmaniyudan chat seyyum bodhu aval than kuttip paappavin 'potty training' problem paththi pesa...naanum badhilukku 'aamam, aamaam.. engal patti kooda romba strictaagaththan engalai ellam valarththaargal' endru solli vazhindhen....!

- Arimugamaana "Anani"

Anonymous said...

@Dubukku: Thalaivarey! unga pettaila vandhu ungalaip patthi onnum sollama directaa "gummi" adikka aarambichutten endru kobiththuk kollatheergal. Naan ungal parama rasigan...for more than a year now. Ungal padhivugal anaiththaiyum padithirukkiren. Ungal padhivugalaip patri vimarsanam seyyum alavirku anubavamo alladhu asattu dhairiyamo innum varavillai. Please keep writing...to keep us also happy (I know you love writing).

- Arimugamaana "Anani"

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சில நேரங்களில் சில கேள்விகள்...

- //கான்வென்ட்// எதுங்க... நம்ம முன்னாள் முதல்வர் படிச்ச பள்ளிக்கோடமா?

- அந்த பொண்ணு குடுத்த அளி ரப்பர் உங்க collection பாக்ஸ்ல பத்திரமா இருக்கு... சரிதானே பாஸ்?

- //ஜஸ்ட் எயிட்டீன்// அவங்களுக்கு இப்ப 80 ஆச்சாமே, அப்படியா?

- 94 %????????????????????????

- அதெப்படி உங்களுக்கு ப்ரொவ்சிங் சென்ட்டர் இருக்கற ஏரியாலையே வெயிட் பண்ற மாதிரி வேலை அமையுது?

- புனைவு?????? ஒரு நாளைக்கு இவ்ளோ பொய் தான் சொல்லலாம்னு உங்க ஊர்ல லிமிட் எல்லாம் இல்லையா? அது சரி... நீங்க வீட்டுக்கு போகணும் இல்லையா... ஹா ஹா ஹா...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//இப்படி சம வயது பெண்களுடன் பேசுவதற்கு பெயர் "கடலை" என்று தமிழ் கூறும் நல்லுலகம் நாமகரணம் சூட்டிய போது நான் காலேஜில் அடியெடுத்து வைத்திருந்தேன்//
அந்த பெயர் சூட்டல் நடந்தப்ப தான் நீங்க காலேஜ் போனீங்களா? எங்க ஒண்ணு விட்ட பெரியப்பா கூட அந்த generation தான் (அடக்கடவுளே...இவர யூத்ன்னு நெனச்சு ஏமாந்துட்டமே இத்தன நாளா...ஹா ஹா..)

//யாரிடமாவது பேசவேண்டும் என்றாலே உதறல் எடுக்க ஆரம்பித்தது//
பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடைக்காது... ஆனா இந்த பொய் சொல்லலைனா இன்னிக்கி வீட்டுல போஜனும் இல்லைன்னு புரிஞ்சு பேசறீங்க... வெரி குட்...

தமிழ்மணத்தில் கடைசி சுற்றுக்கு வந்தமைக்கு என் வாழ்த்துக்கள்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

கழக கண்மணிகளே... (கொடி,தக்குடு,etc..),
என்ன நாட்டாமை ஆளையே காணோம்? பஞ்சாயத்து கூடி போய்டுச்சோ... தீர்ப்பு சொல்லி தீரல போல இருக்கே...
இப்படிக்கு,
என்றும் அப்பாவியாய்,
அப்பாவி கழக கண்மணி

Porkodi (பொற்கொடி) said...

ஆனானப்பட்ட முகவுக்கே வயசாகும் போது நம்ம நாட்டாமைக்கு ஆகாதா? அதான் ரிடயர்மென்ட்.. அப்பாவி நீங்க வேணா அடுத்த நாட்டாமை தேர்தலுக்கு நில்லுங்களேன்?

தக்குடு said...

ஹலோ கேடியக்கா, நான் எதுக்கு அனானியா வரபோறேன், அதான் சூப்பரா தக்குடுனு ஒரு நாமகரணம் இருக்கே நமக்கு.

@ நாட்டாமை - 2 பதிவுக்கு நீங்க வந்து 'என்றும் அன்புடன்' போடலைனா கழகத்துல எல்லாருக்கும் கவலையா இருக்கு, தீர்ப்பு எதாவது சொல்லர்துன்னா சட்டுபுட்டுனு சொல்லிட்டு இங்க வந்துசேர்ர வழியை பாருங்க! ஆன்டிகளோட ஆட்டம் தாங்க முடியலை நாட்டாமை!

என்றும் வம்புடன்,
தக்குடு

தக்குடு said...

@ அனானி அண்ணா - அந்த // நாராயண நாராயண// நம்ப ட்ரேட் மார்க்கு அதான் கொடி அக்கா கொழம்பிட்டாங்க, நீங்க சீக்கரம் பாஸ்போர்ட் விசா எல்லாம் வாங்கிண்டு கழக ஜோதில ஐக்கியமாகுங்கோ! நாட்டாமை கழக பணியா வெளில எங்கையோ போயிருக்கார், அவர் வரும் வரை நாட்டாமையோட நாற்காலில யாரும் உக்காந்துடாம என்னை பத்ரமா பாத்துக்க சொல்லி இருக்கார்.

@ டுபுக்கு அண்ணாச்சி - நானு,கேடியக்கா, அடப்பாவி அக்கா, நாட்டாமை(அட, வராமையா போயிடுவார்)என்ன கும்மி அடிச்சாலும் கடைசில வந்து //அந்த உண்டியல் கலெக்ஷன் மறந்துடாதீங்க//னு தான் சொல்லபோறேள் அதனால இப்பெல்லாம் பயமே இல்லை எங்களுக்கு..:)

sriram said...

அலோ அலோ மைக் டெஸ்டிங் 1234..

ரெண்டு நாள் கொஞ்சம் பிஸியா இருந்தா எனக்கு சங்கு ஊதிடுவீங்க போல இருக்கே? தக்குடு பயல் ஒருத்தனுக்குத்தான் உண்மையான அக்கறை, இந்த AUNTIES கும்பல் எப்படா தலைவர் பதவியைக் கைப்பற்றலாமுன்னு இருக்குங்க!!!!! :)

கழகக் கண்மணிகள் பொதுவில கண்ணியமா நடந்துக்க வேணாம்? இப்படி பொறுப்பில்லாம நடந்துகிட்டா படிக்கறவங்க கழகத்தைப் பத்தி தப்பா நினைப்பாங்க இல்ல? நான்சென்ஸ் ....

கேடியக்கா : நீங்க குழந்தை அணியா?? குட்டி போட்டிருந்தால் அதுவே இளைஞர் அணித் தலைவராகவோ தலைவியாகவோ ஆகியிருக்கும், அவ்ளோ வயசான நீங்க குழந்தை அணிண்ணு சொல்றது உங்களுக்கே ஓவராத் தெரியல?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்.
நிரந்தரத் தலைவர்
டுபுக்கார் முன்னேற்றக் கழகம்
தலைமையகம் : பாஸ்டன்

sriram said...

வாத்யார் : சிரிச்சு முடியல, புனைவுன்னு போட்டுட்டா பூரிக்கட்டை அடி பலமா இருக்காதுன்னு தைரியமா?
போன்பண்ணும் போது சொல்லுங்க, எங்க எங்க வீங்கி இருக்குன்னு?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

நாட்டாமைய காணோம்னு பொறுப்புள்ள கழக கண்மணியா விசாரிச்சது நான்... என்னை பத்தி "நல்லவி வல்லவி" சொல்லாட்டாலும் போகட்டும், தக்குடுவுக்கு பாராட்டா? என்ன கொடும சார் இது? ஹ்ம்ம்... எல்லாம் குளோபல் வார்மிங்கால வந்த வினை... (கலி முத்தி போச்சுனு எத்தன நாளைக்கு சொல்றது...ஹா ஹா)
இப்படிக்கு,
என்றும் அப்பாவியாய்
அப்பாவி தங்கமணி
(அதோட பொறுப்புள்ள கழக கண்மணி)

//Porkodi Said - அப்பாவி நீங்க வேணா அடுத்த நாட்டாமை தேர்தலுக்கு நில்லுங்களேன்?//
நீ என் மேல் கொண்ட நம்பிகையை மெச்சினேன்... ஆனா இதுக்கு மேல அடி வாங்க தெம்பில்ல ஆத்தா... ஹா ஹா ஹா

மங்களூர் சிவா said...

:)))
ROTFL

sriram said...

ATM : உங்க அப்ரோச் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
அக்கறைக்கு நன்றி. நீங்க நல்லவி ரொம்ப வல்லவி போதுமா?
உங்களையும் தக்குடுவையும் கொ ப ச ஆகவும் பொதுச் செயலாளராகவும் நியமிச்சிடறேன்.. சந்தோஷமா?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

அட அட ரெண்டு நாள் இநத பக்கம் வர முடியல அதுக்குள்ளே ஏன்ன அமர்க்களம் இது...:)) இநத நாட்டாமை வேற காணாம போயிட்டார். அனானி வந்து ஓவர் கும்மியா இருக்கே.. கழக அப்பிரசன்டியா லக்ஷணமா உங்களை வருக வருகன்னு வரவேற்கிறேன்.

//தல ஃபார் ஏ சேஞ்ச் நீங்க ஏன் நல்லாயில்லாம பதிவெழுத கூடாது? இல்ல தெஇர்யாம தான் கேக்கறேன், நீங்க பாட்டுக்கு போஸ்ட் பின்னாடி போஸ்ட் இப்படி சிரிக்க வெச்சா, நாங்க என்னனு தான் கமெண்ட் பண்றது?? நல்லா படிக்கற புள்ளைக்கு விதம் விதமா எக்சாம் வெச்சு வகை வகையா கொஸ்டின் குடுத்து எல்லாத்துக்கும் ஒரே ஆன்சர்னு சொன்ன மாதிரி.. கொஞ்சம் எங்க நிலைமை யோசிங்க தல!// கேடியக்கா முதல் கம்மண்டுலே சொன்னதை வழி மொழியறேன் அண்ணாத்தை. ஏதோ பார்த்து பண்ணுங்க...:))
அன்புடன்
சுபா

Porkodi (பொற்கொடி) said...

தல நீங்க மட்டும் எனக்கு இலவசமா கொடுக்க வேண்டியதை கொடுத்து இருந்தா நான் உங்களுக்கு ஓட்டு போட்டிருப்பேன் நீங்களும் கெலிச்சு இருப்பீங்க.. அடுத்த தடவையாவது சூதானமா இருக்க பாருங்க! :)

JAYAN BALAJI said...

Hi boss.. Extraordinary.. என் வாழ்வில் நடந்த விஷயங்களை புரட்டி பார்க்கிற மாதிரியே போவதுதான் ஆச்சர்யம்..

இப்படிக்கு

கட்டிளங்காளை_732323729501000000!@$@$%%@5

மேலும் பொங்க வாழ்த்துக்கள்..

Dubukku said...

மகேஷ் - நன்றி நன்றி :)

தேவா - ஆமாங்கோவ் :(((

சதீஷ்குமார் - மிக்க நன்றி
//நல்லா நறுக்குன்னு நாக்க புடிங்கிக்கிறா மாதிரி கேட்டீங்க தல இந்த பயலுகல...! இவனுங்களால பல ரூவா நட்டமானது தான் மிச்சான். பணத்தோட அருமை தெரியாதவனுங்க...!// - நீங்களும் ரொம்ப பாதிக்கப் பட்டிருக்கீங்க போல :)))

அபி அப்பா - ஹீ ஹீ குறும்பு :)) சக போட்டியாளராய் நீங்க வாழ்த்து சொன்ன பெருந்தன்மை புல்லரிக்குது :) ஆனா பாருங்க தல ரெண்டு பேருக்குமே ஆப்படிச்சிட்டாய்ங்க :))

ராம்ஜி - இதெல்லம் சொல்லிக்கிற மாதிரி ஐடின்னு எடுத்துவுட்டுட்டீங்க :)) நீங்களும் கட்டிளங்காளை குழுமத்துல உண்டா :P

அமுதா - மிக்க நன்றி மேடம்

சுரேஷ் கண்ணன் - மிக்க நன்றி தல

அஹமது இர்ஷார் - மிக்க நன்றி நண்பரே

சித்ரா - மிக்க நன்றி வாழ்த்துக்கு :)) ஆனா தமிழ்மணம் விருது புட்டுக்கிச்சி :))

முத்துலெட்சுமி - வாங்க மிக்க நன்றி. தமிழ்மண விருதுக்கு மனமர்ந்த வாழ்த்துகள்

பத்மநாபன் - அண்ணே மிக்க நன்றி ஆனாலும் கொளவிக்கல்ல எதுக்குண்ணே நியாபகப் படுத்துறீங்க :))))

அறிவிலி - இருந்தாலும் இருந்திருக்கும்ன்னு நினைக்கிறேன் :P

கானகம் - மிக்க நன்றிங்கோவ்

அனானி - அவ்வ்வ்வ்வ் சாட்டிங்கா அப்படீன்னான்னு கேக்க வேண்டி இருக்கு சோகக் கதைய ஏங்க கிளறறீங்க அவ்வ்வ்வ்வ் :((((

பொற்கொடி - வஞ்சப் புகழ்ச்சி கேள்விப் பட்டிருக்கேன் நீங்க சொன்னதுக்கு எத சொல்றது :)) மிக்க நன்றி திட்டற மாதிரி புகழ்ந்ததுக்கு :)

பொயட்ரீ - உங்கள் நாளை மகிழ்ச்சிகரமாக்கியது பற்றி மிக மிக சந்தோஷம். அத கமெண்டா போட்டு ஊக்கப் படுத்துறீங்க பாருங்க அதை மிக மதிக்கின்றேன் மிக்க நன்றி

பாவை - சாரி கொஞ்சம் லேட்டாகிடிச்சு ஆனா உங்க கேள்விக்கு பதில் குடுத்துட்டார் ஆனானி :)) ஆனாலும் நீங்க ரொம்பே நல்லவங்கங்கங்கங்க....:))))

அனானி - வாங்க சோதில ஐய்க்கியமாகிட்டீங்க வாழ்த்துகள் . அப்ரசண்டியா இருக்கும் போதே இந்தப் போடு போடுறீங்களே ...எனக்கு வயத்த கலகுதுங்க...சீக்கிரம் பதிவ ஆரம்பிங்க :)) பாஸ்போர்ட்ட எடுங்க சீக்கிரம்

தக்குடு - மிக்க நன்றி அண்ணாச்சி :)
கன்ப்யூசுடு ரோஸ்மில்க் எனக்கும் தெரிஞ்ச ஐ.டி தான் :))


அனானி - யோவ் நிறைய கமெண்டு வந்த மாதிரி இருக்கேன்னு பார்த்த நீரே எனக்கு ப்ராக்சி குடுக்க ஆரம்பிச்சிட்டீரா :))))) நடத்துங்க நடத்துங்க :)))

அப்பாவி - நான் வேணா உங்க ஊர்ல விழா எடுத்து உங்களுக்கு அப்பாவி பட்டத்த அபீஷியலா தர சொல்றேன்...அதுக்காக நீங்க இப்படியெல்லாம் நடிக்கப்பிடாது..

தக்குடு /ஸ்ரீரம் /பொற்கொடி/அனானி /பாவை /அப்பாவி /சுபா - கும்மிக்கு மிக்க நன்றி ஹை :)))


மங்களூர் சிவா - வாங்க :)) நன்றி.


பொற்கொடி - ஆமா இல்லாட்டாலும் அப்படியே செயிச்சிரப் போறேன் நீங்க வேற வெந்த புண்ல வேலப் பாய்ச்சிக்கிட்டு :)))

ஜெயன் பாலாஜி - ஆஹா நீங்களும் கட்டிளங்காளை குடும்பமா வாங்க வாங்க. மிக்க நன்றி பாராட்டுக்கு :)

Paavai said...

facebook, twitter, blog nu ulagam mari ponadala, chat panni romba varusham achu sir . Adanale marandu pochu ... nallavanga ellam illa .. :)

Anonymous said...

:)

மனம் திறந்து (மதி) said...

//அனானி - வாங்க சோதில ஐய்க்கியமாகிட்டீங்க வாழ்த்துகள் . அப்ரசண்டியா இருக்கும் போதே இந்தப் போடு போடுறீங்களே ...எனக்கு வயத்த கலகுதுங்க...சீக்கிரம் பதிவ ஆரம்பிங்க :)) பாஸ்போர்ட்ட எடுங்க சீக்கிரம்//

//அனானி - யோவ் நிறைய கமெண்டு வந்த மாதிரி இருக்கேன்னு பார்த்த நீரே எனக்கு ப்ராக்சி குடுக்க ஆரம்பிச்சிட்டீரா :))))) நடத்துங்க நடத்துங்க :)))//

//தக்குடு /ஸ்ரீரம் /பொற்கொடி/அனானி /பாவை /அப்பாவி /சுபா - கும்மிக்கு மிக்க நன்றி ஹை :)))//

இது...இது..இதைத் தான் எதிர் பார்த்தேன் தலைவரிடமிருந்து... உங்கள் certificate ஐக் காண்பித்த உடனே பாஸ்போர்ட் கொடுத்து விட்டார்கள். வந்து கலந்து விட்டேன் ஜோதியில்! விசா வாங்க இன்னும் கொஞ்சம் நாளாகும்.....!

தக்குடு, கேடியக்கா, பாவை, சுபா ஆகியோருக்கு என் நன்றி, வணக்கம்!

- மனம் திறந்து [மதி alias arimugamana anani]

Arun Prakash said...

had a good laugh!

Girl of Destiny said...

//(என்) ஐ.ஐ.டி
//கற்ற மாதர்கள்
//கட்டிளங்காளை_7383749347
//ஆஸ் ஐ அம் சபரிங் ஃப்ரம் பீவர்" படித்து ஓடி வந்துவிட்டேன்.

:-) :-) :-)

Ananya Mahadevan said...

super kosuvathi thala!!!!
Enjoyed this post thoroughly! ultimate fun!

நாஞ்சில் பிரதாப் said...

enjoyed...:)

Anonymous said...

Thala Superb!!!!!!!!!!!!!!
aa! aaah!! aaaahhh!!!!!
neengathaan andha "ngoyalaanu" aarambichu mariyaadha paniya karungaaliya.................
irundhaalum andha 9vadhu kettavaartha romba mosham.................
inime ippadiyellam thittakudaathu...............

By
Haji alias Bengalore Esha
Dubai

Post a Comment

Related Posts