Tuesday, November 23, 2010
Guzaarish
மு.கு - இந்தப் பதிவில் படத்தின் கதை ஓரளவுக்கு வெளிப்பட்டு இருக்கிறது. ஆனால் அது படம் பார்க்கும் அனுபவத்திற்கு எந்த பங்கமும் விளைவிக்காது. கதையின் அவுட்லைன் கூட தெரிய வேண்டாம் என்று நினைப்பவர்கள் படிக்க வேண்டாம்.
************
புறக்கடையில் ஹெலிகாப்டரை நிப்பாட்டிவிட்டு, டென்னிஸ் மட்டையை தூக்கிக் கொண்டுவரும் ஹீரோ, எல்லை மீறிய பயங்கரவாததிற்கு உட்படுத்தப்பட்ட் ஸ்கர்ட் அணிந்துவரும் ஹீரோயின், பாத்ரூம் போவதற்க்கு கூட கோரஸாய் சிரித்துக் கொண்டு நெக்லெஸும் காக்ராவும் அணிந்துகொண்டு கூட்டமாய் போகும் பத்து பெண்கள்,லோகட் மாமியார்,ஹீரோவை நினைத்து ஏங்கும் இன்னொரு சூப்பர் ஃபிகர் என்று அடிக்கடி அபத்தமாய் பார்க்கும் ஹிந்தி சினிமா, வழக்கத்துக்கு மாறாக சமீபத்தில் நிறைய ஆச்சர்யங்களை கொடுத்து வருகிறது. இந்தப் படம் அந்த வகையைச் சார்ந்தது.
இணையத்தில் கதையின் முதல் வரி தெரியாமல் கண்ணில் பட்டுவிட இது "தி ப்ரெஸ்டீஜ்" படத்தின் உல்டாவோ என்று சந்தேகத்தோடு தான் தியேட்டரில் நுழைந்தேன். ஆனால் முதல் அரை மணிநேரத்திலேயே அது இல்லை என்று தெரிந்துவிடுகிறது. ஏனோ ஐஷ்வர்யா ராயை இப்போவெல்லாம் பார்த்தாலேயே அபிநய சரஸ்வதி பட்டம் தான் நினைவுக்கு வருகிறது. அத்தனை ஆர்ப்பாட்டமாய் இருக்கிறது அம்மணியின் சில அலட்டல்கள். அம்மணியோடு ராவணன் பேட்டி பார்த்தீகளா?...ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்கலடா சாமி அதிலிருந்து பிடிக்காமல் போனது கூட காரணமாய் இருக்கலாம்.
'ப்ளாக்' பார்த்த பிறகு சஞய் லீலா பன்சாலி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. இந்த படத்திற்கு பிறகு அது கூடி இருக்கிறது. இந்திய படங்களில் (மெல்லிய) உணர்வுகளை பிரதானப் படுத்தி எடுக்கப்படும் படங்கள் மிகக் குறைவு. அந்த குறைவான படங்களில் இந்தப் படமும் ஒன்று. ஈதுனேசியா/அசிஸ்டெட் சுயிசெய்ட்/மெர்சி கில்லிங் விஷயம் நம் பக்கங்களில் குறைவு. ஸ்பைனல் கார்ட்டில் அடிபட்டு கழுத்துக்கு கீழ் செயல்பாடட்ற்று இருக்கும் ஹ்ரிதிக் ரோஷன் ஈதுனேசியாவிற்க்கு போராடுகிறார். இதற்கு நடுவில் அவருடைய போராட்டங்கள், உணர்வுகள், அவருக்கும் நர்ஸாய் வரும் ஐஷ்வர்யாவிற்க்கும் மலரும் உறவு என்று ஒரே உணர்வுப் பூர்வமாய் இருக்கிறது கதை.
இந்த ஈதுனேசியா/ மெர்ஸி கில்லிங் என்பது முரண்பாடாயிருக்கக் கூடாதே என்று களத்தை மிக அழகாக கோவாவில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பம் என்ற சூழலில் பின்னியிருக்கிறார் சஞ்சய். படத்தில் வரும் வீடு ஆர்ட், காஸ்ட்யூம், கலாச்சாரம் அனைத்தும் இதே விஷயத்தை ரொம்ப சட்டிலாக மனதில் ஏறுவதால் ஈதுனேசியா முரண்பாடாக இல்லை.
படத்தின் ஹீரோ ஹ்ரித்திக் உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். இவரின் கதாபாத்திரம் ஒரு சிக்கலான கேரக்டர். கொஞ்சம் சொதப்பினாலும் கதையே கேலிக்கூத்தாகிவிடும் அபாயம். ஆனால் இதையெல்லம் அநயாசமாக ஊதித் தள்ளியிருக்கிறார் ஹ்ரிதிக். பரட்டை தலையும் தாடியும் மீசையுமாய் கோலம், உடம்பை அசைக்க முடியாமல் வெறும் முகத்தை மட்டும் வைத்து நடிக்க வேண்டிய கட்டாயம். முக்கால்வாசி படத்தில் கழுத்து வரை போர்வை, இவற்றுக்கு நடுவில் வெறும் முகத்தை மட்டும் வைத்துக் கொண்டும், கோபம், ஆற்றாமை, நக்கல் என்று வித்தியாசமாய் அதகளப்படுத்தியிருக்றார். இவருடைய வாய்ஸ் மாடுலேஷனும், டயலாக் டெலிவரியும் படத்தில் அசத்தலாய் இருக்கின்றன. இவருக்கு இந்த படம் ஒரு முக்கியமான மைல்கல்.
எனக்கு படத்தில் மிக மிக மிக பிடித்தது வசனங்கள். அதுவும் ஹ்ரிதிக் ஈதுனேசியா மனுவிற்காக கோர்ட் செல்லும் போது பாதிரியார் எதிர்பட்டு கடவுள் பெயரை சொல்லி நம்பிக்கை இழக்கக்கூடாது என்று அவர் மனதை மாற்றப் பார்ப்பார். அதற்கு ஹிரித்திக் தானும் கடவுளை நம்புவதாகவும் "Yes I am dying to meet him" என்று பதிலளிக்கும் டயலாக் பயங்கர நச். படம் நெடுக ஹிரிதிகின் வசனங்கள் எல்லாமே குறும்புத்தனத்துடனே அமைக்கப்பட்டிருப்பது அழகு. அதுவும் க்ளைமாக்ஸில் அவர் பேசும் வசனம் மிக மிக அழகாக எழுதப் பட்டிருக்கும். வசனகர்தாவிற்கு ஒரு மிகப் பெரிய ஷொட்டு போடலாம்.
அதற்கடுத்தபடியாக ஆர்ட் டைரக்க்ஷன் கலக்கலாயிருக்கிறது. படம் நெடுக அற்புதமான லைட்டிங்கில் காமிரா ஆர்ட்டை அப்படியே உள்வாங்கி மிக நன்றாக வந்திருக்கிறது. கொஞ்சம் சென்டிமென்டலான முடிவென்றாலும் ஒரு மிக நல்ல படம். கதையைக் கேட்டு பயந்துவிடாதீர்கள். படத்தின் ஸ்க்ரீன்ப்ளேயும் டயலாக்கும் மிக மிக சுவாரசியாமான ஒரு படம் பார்த்த திருப்தியைத் தரும். ஆனால் மனம் கணப்பதை என்னவோ தவிர்க்க முடியாது.
பார்க்க வேண்டிய படம்.
******
அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன்
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன்
//
இதுதான் எனக்கு பிடிச்சது.. அடிக்கடி எழுதுங்க பாஸ்..
Surprise surprise .. you are keeping up your words & coming often!! Keep it up.
தியேட்டர் பாஸ் வேலை செய்யுது!!! :))
ண்ணா நீங்க எழுதியிருக்கறதப்படிச்சா படம் ‘diving bell and the butterfly’ யை சுட்டு எடுத்ததுபோல இர்க்கு!
//இந்த ஈதுனேசியா/மெர்ஸி கில்லிங் என்பது முரண்பாடாயிருக்கக் கூடாதே என்று களத்தை மிக அழகாக கோவாவில் வசிக்கும் ஆங்கிலோ இந்திய குடும்பம் என்ற சூழலில் பின்னியிருக்கிறார் சஞ்சய்.//
புரியல, கோவா & ஆங்கிலோ இந்திய கலாச்சாரம் எப்படி உதவுது? இல்லன்னா என்ன முரண்?!
"dying to meet him"- படிக்கும் போதே நச்சுன்னு இருக்கே! :))
கழுத்துக்கு கீழே உணர்வு இல்லன்னு மெர்சி கில்லிங் கேட்டா, கை கால் வேறு உறுப்பு இல்லாதவங்களும் கேக்கலாமே.. எனக்கு தெரிஞ்ச வரை கோமாவிலோ அதற்கு ஈடான துளியும் சுயநினைவு நிலையிலோ இருக்கவங்களோட உறவுகள் தான் மெர்ஸி கில்லிங் கேட்டு பார்த்து இருக்கிறேன். ஆனா அப்படி வெச்சா ஹ்ரிதிக் எதுக்குன்னு மாத்திட்டாங்களோ?
எதுக்கு சொல்லறேன்னா, நேத்து தான் யாஹுவிலே பாத்தேன் bachelorette partyல் விளையாட்டாக செய்த காரியம் மணப்பெண்ணை இதே நிலைக்கு கொண்டு போய் விட்டதாம்! ஆனா பேசறாங்க.. மற்ற உணர்வுகள் கிடையாதாம்!!
//அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன்//
வாய்ப்பே இல்லங்குறேன், எவ்ள பெட்டு?
பார்க்கனும்.
ஐஸ்வர்யா ராய் - பாட்டியானாலும் பந்தாக்கு ஒன்னியும் குறைச்சல் இல்ல:)
ஹலோ!! சு நா பா நா வை கூட இருக்கவங்க உசுப்பேத்தர மாதிரி "டுபுக்கு" உங்களையும் மக்கள் உசுப்பேத்தி எழத வெயக்கறாங்க. இதை நம்பி அடிக்கடி எழுதாதீங்க. நமக்கு-னு ஒரு 'முறை' இருக்குல்ல :-)
நானும் பார்த்து ஒரு விமர்சனமும் போட்டாச்சு..ஹிரித்திக் ரோஷன் நடிப்பு சூப்பர்..
தமிழ் நாட்டுல கூடிய விரைவில் காமராஜர் ஆட்சி வந்துடுமோ?னு பயமா இருக்குங்கறேன்!!..:)சொன்ன மாதிரியே போஸ்ட் போட்டுடேளே!!..:)
எச்ஸூஸ்மி! டுபுக்கு அண்ணாச்சி நிரந்தரமா வேலையை ராஜினாமா பண்ணிட்டு கலை குளத்துக்குள்ள(எடிடிங்,இயக்கம் அந்த மாதிரி) தொபகடீல்னு குதிச்சிட்டீங்களா??...:)
//அடுத்த பதிவு --> 27 நவம்பர் அல்லது அதற்கு முன் // இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்..
சிங்கம் நெஜமாவே களத்தில குதிச்சிடுச்சிடோய்..
அடிக்கடி எழுது தல, இனிமே தமிழ் மண மகுடத்திலும் இண்ட்லி அதிக ஓட்டு லிஸ்ட்லேயும் உங்க ப்ளாக்தான் நிரந்தரமா இருக்கணும்..
தக்குடு : சூப்பர் கமெண்ட் கண்ணா, அண்ணாச்சி வேலையை விட்டுட்டாரான்னு எனக்கும் சந்தேகமா இருக்கு. உளவுத்துறையை வெச்சு விசாரிச்சி சொல்றேன்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
அப்புறம், 26ம் தேதியே அடுத்த போஸ்ட் போட்டு, இந்த கேடியக்கா மூஞ்சில கரியை பூசு வாத்யார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இந்திப் படங்களின் இலக்கணத்தையும் ,ஐஸக்காவின் தலக்கணத்தையும் நகைச்சுவையா எடுத்து விட்டுருக்கிங்க .. பார்க்க கூடிய படம்ங்கிறிங்க பார்ப்போம் டீ.வில வந்தா...
கும்மிகளின் உசுப்பல் வேலை செய்து போல..தல தேதி போட்டு பதிவு போடறாரு..
தல,
அடுத்த பதிவு வரணும்.
விடியறதுக்குள்ள! (அதாவது 27 ந் தேதி)
அது!!!!!
By
Haji
Dubai
First day ponen...bansali nala....
Padam romba seyarkaya irukkunne...adhuvum Aish nurse mariye illa...mathapadi...its a good attempt..
dear dubuks
romba nandringnna
dhinamum vanganna
balu vellore
இன்னும் 12 மணி நேரம் தான் இருக்கு.
நாமெல்லாம் கவரி மான் பரம்பரை. மைனா "கவரி மான் ராஜா" பரம்பரை இல்லை.
உயிரை விட மானம் தான் பெரிசுன்னு நினைக்கிற தமிழன் பரம்பரை.
நாக்கு போனாலும் வாக்கு தவற கூடாது.
இன்னும் 12 மணி நேரம் தான் இருக்கு.
லண்டன் ல இருக்கறதால உங்களுக்கு 16 மணி நேரம் தான் டைம்.
By
Haji
Dubai
Boston நாட்டாமை - வேலையெல்லம் விட்டுருக்கமாட்டாரு நம்ம ஆளு, ஆசான் துட்டு விஷயத்துல பயங்கர உஷாரு, வேலையை விட்டுட்டு பதிவு எழுதற நேரத்துல ரெண்டு ஆல்பத்துக்கு எடிடிங் பண்ணி கல்லால கலெக்க்ஷென் பாக்கர்துல அம்பைகாரங்க படு கில்லாடிகள் அதை நம்பி தான் நாங்க எங்க ஊர் அக்காவை கட்டி வெச்சுருக்கோம். ஆனாலும் . .??
ஷ் ஷ் ஷ் யப்பா !!! இன்னிக்கு தான் 27 . தலைவா! நான் சொன்ன மாதிரி இவங்க எல்லாம் உசுபபேத்தட்டும். நம்ம 'முறை' ய கடை பிடிப்போம். சனி, ஞாயர் ல தங்கமணி க்கு ஹெல்ப் பண்ணினோமா, நல்ல பேர் வாங்கினோமா னு இல்லாம, சபை மக்களை சந்தோஷப்படுத்த நினச்சா weekend அப்புறம் weak -எண்டு தான். சொல்லிபுட்டேன்.
பட்டாபட்டி - மிக்க நன்றி தல
மோகன் குமார்- ஒவ்வொரு தரமும் இதை நிறைவேற்ற நினைத்துக் கொள்வேன் நடுவில் எதாவது ஒன்று வந்துவிடும். இந்த தரம் பார்ப்போம்
பொற்கொடி - ஆமா பின்ன :). ஒரு தனிப் பதிவே போடுற அளவுக்கு கேள்வி கேட்டிருக்கீங்க:) மெர்சி கில்லிங், ஈதுனேசியாங்கிறதெல்லாம் நம்ம கலாசாரத்தில இன்னும் ஊறல. இது என்னைப் பொறுத்தவரையில் மேற்கத்திய கலாசாரத்தில் அக்சப்ட்டாய் இருக்கு. இதுவே ஆட்டயாம்பட்டியில் நடப்பதாய் சொல்லியிருந்தால் அவ்வளவு சிங் ஆகியிருக்காது. ஹ்ரித்திக்கின் அம்மா மேற்கத்திய பெண்மணி வகையாறா. //
கழுத்துக்கு கீழே உணர்வு இல்லன்னு மெர்சி கில்லிங் கேட்டா, கை கால் வேறு உறுப்பு இல்லாதவங்களும் கேக்கலாமே.. // மெர்சி கில்லிங் என்பது எவ்வளவு உறுப்புகள் இல்லை என்பதை விட அவர்கள் அந்த இழப்பால் படும் துயரைப் பொறுத்தது. அவர்களின் வாழ்வின் தரத்தைப் பொறுத்தது. படம் பார்த்தீகளானால் அந்த காரணங்களை சில காசிகள் மூலமாக இயக்குனர் கொண்டுவந்திருப்பார். பெட்டு நூறு அமெரிக்க டாலர். மெயில்ல அக்கவுண்ட் விபரங்கள் வருது அனுப்பிடுங்க :)) போஸ்ட் போட்டாச்சு
வித்யா - அதே அதே :))))
டாடிஅப்பா - - ஹா ஹா என்ன சொல்றீங்க...வேண்டாங்கறீங்களா?
அமுதா - ஆமாங்க ஹிரிதிக் நடிப்பு சூப்பர். அட சுடச் சுட விமர்சனம் போட்டுட்டீங்க போல.
தக்குடு - டாய் பைசா விஷயத்தில கெட்டின்னு நீ சொல்றியா....எல்லம் நேரம் சரிங்க ஆபிஸர்..கேட்டுக்கறேன்
ஸ்ரீராம் - அந்த ஆசையெல்லாம் இல்லீங்கோவ்...வந்தா வேணாம்ன்னு சொல்லப்போறதில்லை ;) கேடியக்கா நூறு டாலர் பெட்டு வைச்சு தராங்களாம் :))
பத்மநாபன் - யெஸ் பார்க்கக் கூடிய படம். ஏமாற்றாது.
ஹாஜி - ஹீஇ 27ன்னு சொன்னது ஆன் ஆர் பிஃபோர் :)) 27ம் தேதி முடியறவரைக்கும் வாய்தா உண்டு :))
ஸ்ரீநாராயணன் - ஓ உங்களுக்கு ரொம்ப பிடிக்கல போல? அந்த ஆங்கிலோ இந்திய குடும்பம்ங்கிறதால என்னால சில மேட்டர்கள் ஒத்துக்கொள்ள முடிந்தது.
பாலு - தினமும் கொஞ்சம் கஷ்டம் தல. அப்புறம் உங்களுக்கும் எனக்கும் அலுத்துடும் :))
ஹாஜி - அண்ணாச்சி அது எங்க ஊர் நேரம் 27ம் தேதி முடியரவரைக்கும் கெடு இருக்கு :)))) சில நேரம் யூ.எஸ் நேரமா கூட் மாறதுக்கு வாய்ப்பு இருக்கு :)) சரி அந்த கவரிமான் கவரிமான்ன்னு சொல்றீங்களே அப்பிடீன்னா?
தக்குடு - டேய் கல்லாவே தொறக்கல அதுகுள்ள அண்ணாச்சி காச பார்த்துறுவாருன்னு புரளியக் கிளப்பி கஷ்டமர விரட்டாதடா :))
டாடிஅப்பா - ஆமா இன்னிக்குத் தான் இங்கயும் 27...:)) நாள் முடியறதுக்குள்ள போட்டுட்டேன் :))) எவ்ளோ நாள் ஓடுது பார்க்கலாம்
Yes, this is a beautiful movie. I don't understand Hindi, but with English sub-titles and some of the dialogues being in English, the movie could be easily understood. Hrithik lived the role. Aiswarya did her part quite convincingly. But what impressed me was the role played by the woman lawyer. However, the last scene when everyone falls one over the other on Hrithik was a little dramatic. Otherwise, this is a once-in-a-movie, and must be seen to be enjoyed. The dialogues were very powerful. Excellent direction.
Thank you for the review, I really wanted to watch this one - Now, I will!
hi, thanks for the good review of guzarish. went and saw. liked it. but this movie is just remake(copy!!! you call it?)of spanish movie MAR ADENTRO, means the sea inside. sanjay bhansali!! you are great, what a good inspirer!1
//அம்மணியோடு ராவணன் பேட்டி பார்த்தீகளா?...ஸ்ஸ்ஸ்ப்பா...தாங்கலடா சாமி அதிலிருந்து பிடிக்காமல் போனது கூட காரணமாய் இருக்கலாம்.
//
எந்திரன் ஆடியோ ரிலீஸ்ல இன்னும் ஆர்டிஃபிசியலாகத் தெரிந்தது அம்மணியின் பேச்சும் நடவடிக்கைகளும் :(
Post a Comment