Thursday, July 15, 2010

ஊரிங் டூரிங்

இந்தியாவிற்க்கு லீவிற்க்கு அடுத்த வாரம் கிளம்புகிறோம். தங்கமணி மும்முரமாக பொட்டியைக் கட்டிக் கொண்டிருக்கிறார். நான் சில பல கடமைகளில் சிக்கி பிஸியாய் இருப்பது மாதிரி நடித்துக்கொண்டு பொட்டி கட்டும் வேலையிலிருந்து ஓ.பி அடித்துகொண்டிருக்கிறேன். வரும் வழியில் மும்பாயில் அரை நாள் தேவுடு காக்க வேண்டும். கிங்பிஷரில் சர்வீஸும் (ஏர் ஹோஸ்டஸும்) நன்றாக இருக்கும் என்று நாலு நல்லவர்கள் சொன்னதை நம்பி வானத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன். பார்ப்போம்.

ஊருக்கு போக முடியாமல் இருக்கும் போதெல்லாம் ஊரில் கல்யாணம், காது குத்துன்னு பத்து நாளுக்கு ஒருதரம் சொந்தத்திலிருந்து அழைப்பு வரும். நாங்களும் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு விசேஷ நாள் அன்று போன் போட்டால் சுத்த பத்தமெல்லாம் சாப்பாடு பந்தியில் இலையை வழிச்சு வாரி ஒரு கட்டு கட்டிக்கொண்டிருக்கும். இருக்கட்டும் இருக்கட்டும் நமீதாக்கு ஒரு காலம் வந்தா நயந்தாராக்கு ஒரு காலம் வரமலயா போயிடும்ன்னு கருவிக் கொண்டிருப்பேன்.

இப்போ ஊருக்கு வருகிறோம் யாராவது கல்யாணம் வைங்கப்பான்னு கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சிப் பார்க்கிறேன் ஹூம் எல்லாரும் கையை விரித்து விட்டார்கள். "ஏண்டி கல்யாணம்னா தாய்மாமா வர வேண்டாமா..ஊருக்கு வர்றதுக்கு எவ்வளவு செலவு ஆகுகிறது...எனக்கு வேற ஆபிஸ்ல பொறுப்பு கூடிக்கிட்டே போகுது இத விட்டா இன்னும் பத்து வருஷத்துக்கு லீவு எடுக்கமுடியாது பேசாம உன் பையனுக்கு ஆகஸ்டுல கல்யாணத்த வைச்சிடுன்னு அக்காவிடம் மன்றாடிப் பார்த்தேன். பத்தாவது படிக்கிற பையனுக்கு கல்யாணம் பண்ணக் கூடாதாம்... கறாராய் சொல்லிவிட்டார். சரி அவனுக்கு காதாவது குத்து என்று சொல்லிப்பார்த்தேன். கலிகால்ம்....தாய்மாமாவுக்கு மரியாதையே இல்லை. போகும் போது விஜய்குமார் டிவிடி ரெண்டு எடுத்துப் போய் போட்டுக் காட்டவேண்டும்.

என்னங்க ஒரு விக்கெட் கூட விழமாட்டேங்குதுன்னு தங்கமணிக்கும் ஒரே கவலை. இப்போதைய நிலவரப்படி நானே இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் தான் உண்டு போல இருக்கு. முத தரம் பண்றது  தான் ஆக்சிடெண்ட் ரெண்டாவது தரம் அது சூயிசைட்ன்னு கெட்டியாய் இருக்கிறேன். ஆகையால் வலைமக்களே ஆகஸ்டு மூன்றாம் வாரம் வரை ஏதாவது கல்யாணம் நடந்தால் சொல்லவும், அஜந்தா வால் க்ளாக் ஒன்றை வாங்கிக் கொண்டு தவறாமல் சாப்பாடுக்கு வந்து விடுகிறேன். (இப்பவும் இந்த கல்யாண கிப்டா குடுக்குறாங்களா?). சேட்டுக்கள் ஆடி மாதம் பார்ப்பார்களா தெரியவில்லை. இல்லாவிட்டால் அதே கடிகாரத்தை வாங்கிக் கொண்டு , சௌகார்பேட் பக்கமா ஒதுங்கி, எனக்கு ரொம்பப் பிடிக்கும் நார்த் இன்டியன் புஃபே சாப்பிடலாம் என்று பிரயாசை.

பெரும்பாலும் அம்பாசமுத்திரத்தில் பெற்றோருடனும், சென்னையில் கொஞ்ச நாட்களும் இருக்கப்போவதாய் ப்ளான்.  வலைமக்கள் சந்திப்பு எதாவது நடந்தால் சொல்லவும். அந்த சமயம் ஊரில் இருந்தால் வந்து ஜோதியில் ஐக்கியமாகிக் கொள்கிறேன்.

51 comments:

Porkodi (பொற்கொடி) said...

Happy journey! :D

Porkodi (பொற்கொடி) said...

//இப்போதைய நிலவரப்படி நானே இன்னொரு கல்யாணம் செய்துகொண்டால் தான் உண்டு போல இருக்கு. முத தரம் பண்றது தான் ஆக்சிடெண்ட் ரெண்டாவது தரம் அது சூயிசைட்ன்னு கெட்டியாய் இருக்கிறேன். //

கடசில ஒரு கொல‌ வுளாம போவாது போலருக்கே..

Porkodi (பொற்கொடி) said...

அபவுட் பொட்டி கட்டிங், நானும் ரங்குவும் இந்தியாவுக்கு போனப்போ 4 பொட்டில 3 காலி. :D திரும்பற போது ரொப்பிக்கிட்டு வந்தேன்னாலும் எல்லாமே வேஸ்ட்னு தோணுது! ஆனா குழந்தை(கள்) இருந்தா கதையே வேறங்கறது வேற விசியம்.

sriram said...

சந்தோஷமா போயிட்டு வா வாத்யார்.. ஊர்ல இருக்க சொல்லோ ஏதாவது குஜிலி மாட்டாமலா போயிடும்?? மாட்டிச்சினா மெட்ராஸ் பிரான்ச் ஒண்ணு ஓபன் பண்ணிடு வாத்யார் - ஒனக்கும் கண்ணாலத்தில கலந்து கிட்டு சாப்டா மாதிரியும் இருக்கும் அப்புறம் சென்னைக்கு போக வர இருக்கசொல்லோ உபயோகமாவும் இருக்கும்..
என்னா நான் சொல்றது??

என்னிக்கும் அன்போட
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

//Porkodi (பொற்கொடி) said...
அபவுட் பொட்டி கட்டிங், .. ஆனா குழந்தை(கள்) இருந்தா கதையே வேறங்கறது வேற விசியம//

கேடியக்கா.. நானே ஒரு கொழந்தைங்கறதால என்னோட ரெண்டு பொட்டி பொருட்கள் கொண்டு வர வேண்டியிருக்கு.. உங்கள மாதிரி aunty ங்க பாடு தேவல
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Mahesh said...

ஸ்வாமி.... பாத்து ஜாக்ரதையா போய்ட்டு வாங்கோ.. பாஸ்டன்காரா அட்வைஸெல்லாம் மன்னி கண்ல படாம பாத்துக்கோங்கோ...

sriram said...

//Mahesh said... ஸ்வாமி.... பாத்து ஜாக்ரதையா போய்ட்டு வாங்கோ.. பாஸ்டன்காரா அட்வைஸெல்லாம் மன்னி கண்ல படாம பாத்துக்கோங்கோ...//

மகேசு.. வாத்யார் அதிலெல்லாம் பலே கில்லாடி, மன்னியாண்ட நல்ல புள்ள வேசம் கட்டிபுட்டு படம் புடிக்கிற கில்லாடி. மன்னி கண்டுக்கினா படம் புடிக்கறதுக்கு ஹீரோயினி தேடுறேன்னு சொல்லுவார்.

ஒன்னோடவும் என்னிக்கும் அன்போட
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

//படம் புடிக்கறதுக்கு ஹீரோயினி தேடுறேன்னு சொல்லுவார்.//

வெங்காயமா போச்சு.. ஏன்யா பாஸ்டன், படத்துல நான் தான் ஹீரோயினின்னு தெரிஞ்சும் இந்த மாதிரி புரளி கிளப்புறது நல்லால்ல!

sriram said...

//Porkodi (பொற்கொடி) said...

வெங்காயமா போச்சு.. ஏன்யா பாஸ்டன், படத்துல நான் தான் ஹீரோயினின்னு தெரிஞ்சும் இந்த மாதிரி புரளி கிளப்புறது நல்லால்ல!//

கேடியக்கா ... அநன்யாவுக்கு சொன்ன பதில்தான் உங்களுக்கும் - வாத்யார் என்ன பேய்ப்படமா எடுக்கறார்? நீங்க எல்லாம் போயி வேஷம் கட்டுறதுக்கு?? ஜகன்மோகினி பார்ட் 3 எடுக்கும் போது சொல்லி அனுப்பறேன் அப்போ வாங்க

ஒங்ககூடவும் என்னிக்கும் அன்போட
பாஸ்டன் ஸ்ரீராம்

- யெஸ்.பாலபாரதி said...

:)))))


வாங்க தலைவா... சந்திப்பு வச்சுடுவோம்.

சேட்டுகள் ஆடி மாதம் பாப்பதில்லை. அதனால.. சௌக்கார்பேட்டையை சுற்றிவரலாம். :)))

ராம்ஜி_யாஹூ said...

பயணமும் விடுமுறையும் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.

உங்கள் நண்பரின் மகள் திருமணம் இருக்கே, சௌந்தர்யா ரஜினி யின் திருமணத்தை சொன்னேன்.

இல்லாவிடில் கோடா நாட்டு தலைவியிடம் சொல்லி விடுவோம்.. நூற்றி எட்டு ஜோடி திருமணம் செய்ய ஏற்பாடு செய்து விடுவார்.

நமீதாவிற்கு ஒரு காலம் வந்தால் நயன்டாரவிர்க்கு ஒரு காலம் வராமலா போய் விடும்- சூப்பர்


பதிவர் மாநாட்டிற்கு நீங்கள் வரும் பொழுது தலைவர் கன்னுக்குட்டி கணேசன் அவர்களையும் அழைத்து வருமாறு முக்கூடல் ஒன்றியம் சார்பில் கேட்டு கொள்கிறோம்.

சேலம் தேவா said...

எத சொல்றது எத விடறது .உங்க பதிவுகள் எல்லாம் சூப்பர்.என்னதான் உங்க தங்கமணிக்கு நீங்க லூசா தெரிஞ்சாலும் உங்களுக்குள்ள ஒரு அகிரோ க்ரோசொவோ ஒளிஞ்சு இருக்கிறார்.இதே மாதிரி கலாய்சிட்டே இருங்க.குறிப்பா அந்த doors குறும்படத்திற்கு பிடிச்சிருக்கு பட மியூசிக் use பண்ணி இருந்திங்க.நல்ல feel .

Sowmya Gopal said...

aha...ajantha clock...ungala madhri kekaravangalukku dhan naan oru post ezhudinen - http://sowmyagopal.blogspot.com/2009/12/time-is-precious-wall-clocks-arent.html

அறிவிலி said...

அஜந்தா க்ளாக்கெல்லாம் இன்னும் இருக்கு. ஒங்க 60 ஆம் கல்யாண்த்துக்கு அதான் குடுக்கலாம்னு இருக்கோம்.

இந்த ட்ரிப் வேஸ்டா போகாம முடிச்சிரலாமா?

ஆயில்யன் said...

//உன் பையனுக்கு ஆகஸ்டுல கல்யாணத்த வைச்சிடுன்னு அக்காவிடம் மன்றாடிப் பார்த்தேன். பத்தாவது படிக்கிற பையனுக்கு கல்யாணம் பண்ணக் கூடாதாம்.//

அவ்வ்வ்வ்வ்வ்
:))


பயணம் இனிமையாக குதூகலமாக அமையவும் - ஆடி மாசத்திலயும் - கண்டிப்பாக கல்யாண சாப்பாடு கிட்டவும் வாழ்த்துக்கள் பாஸ் :))

Rams said...

Have a nice trip!!

Arun Prakash said...

கல்யாணம் இல்லாட்டி என்ன, நம்ம ஊர்ல இல்லாத கோயில் அன்னதானமா?

வாங்க பாஸ்... நாம ரெண்டு பெரும் சட்டிய தூக்கீட்டு போகலாம்.

- யெஸ்.பாலபாரதி said...

//கல்யாணம் இல்லாட்டி என்ன, நம்ம ஊர்ல இல்லாத கோயில் அன்னதானமா?

வாங்க பாஸ்... நாம ரெண்டு பெரும் சட்டிய தூக்கீட்டு போகலாம்.//

:))

அருண் அன்னதானம் இருக்கோ இல்லையே... சென்னையில கூழ் நிச்சயம் கிடைக்கும். வாங்க... மூணு பேரும் தூக்கு வாளியை தூக்கிடுவோம். :)))
(வாத்தியாரே.. எண்ணிக்கை கூடுதோ..?)

மதுரை சரவணன் said...

அன்புடன் வரவேற்கிறோம்...

தக்குடு said...

தல நானும் வரேன்!...:) உங்க நிலைமையை நினைக்கும் போது கொஞ்சம் பரிதாபமாதான் இருக்கு. உங்களுக்காக நான் வேணுன்னா..........:)

என்றும் வம்புடன்,
தக்குடு

balutanjore said...

dear dubuks

welcome home

appidiye enga aathu pakkamum thala kattungo(vellore)

balasubramanyan vellore

அபி அப்பா said...

பிரமாதம். வாரும், அப்படியே சவுகார்பேட்டை கச்சேரி இருந்தா சொல்லிவிடும். இங்க லோக்கல் தேங்காமூடி கச்சேரி தான் ஓடிட்டு இருக்கு.பெரிய சபா கெடச்சா நானும் உங்க கூட சேர்ந்து ஸ்ருதி பெட்டியாவது போடலாம்ன்னு ஒரு ஐடியா!

sriram said...

//தக்குடுபாண்டி said...
தல நானும் வரேன்!...:) உங்க நிலைமையை நினைக்கும் போது கொஞ்சம் பரிதாபமாதான் இருக்கு. உங்களுக்காக நான் வேணுன்னா..........:)//

வாத்யார் - இந்த தக்குடு நெலமய ரோசிச்சா படா பேஜாராகீது வாத்யார். பாவம் அந்த புள்ள,
இதுக்கும் மேல ஒன்னான்ட வந்து கண்ணாலம் பண்ணி வைன்னு கேக்க முடியாது வாத்யார்.
ஊருக்கு வர சொல்லோ எல்லா ரெங்கராமன்களும் ஒண்ணா ஒக்காஞ்சி பேசி ஒரு நல்ல முடிவு பண்ணு வாத்யார்.
இன்னியும் நாப்பது வருசத்தில ஜனத்தொகைல சீனாவை கெலிக்கணுமாம், கவுர்மெண்ட்ல சொல்லிப்பூட்டாங்க, இந்தியாவுக்காக உழைக்கறதுக்காக இந்த தக்குடு பையன் ரெடி, பாத்து செய் வாத்யார்..

தக்குடுவாண்ட ஒரு பாத்ரூம் ஜோக் சொல்லிகிறேன், பொதுல சொல்ல முடியாது, அவனாண்ட கேட்டுக்கோ..
ஜோலி கீது நான் ஜகா வாங்கிக்கிறேன் வாத்யார், வர்ட்டா
என்னிக்கும் அன்போட
பாஸ்டன் ஸ்ரீராம்

Unknown said...

sirikkama dubukku post a padicha evvalavu vena roopa tharatha veetla ellar kittayum challenge panni irukken.idu varaikkum enakku selave illa. thanks... . welcome to india!

Ramesh said...

//கிங்பிஷரில் சர்வீஸும் (ஏர் ஹோஸ்டஸும்) நன்றாக இருக்கும் என்று நாலு நல்லவர்கள் சொன்னதை நம்பி வானத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்.//
எல்லாம் ஒல்லிப்பிச்சானுங்க...
நமீதா ரசிகருக்கு ஏமாற்றம் தான்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ஹா ஹா ஹா... எங்களை நல்லா சிரிக்க வெக்கறீங்க சரி... தப்பி தவறி இந்த போஸ்ட் உங்க தாங்க்ஸ் பாத்தா என்ன ஆகறது... அதுலயும் அந்த airhostess / இன்னொரு கல்யாணம் ரெண்டத்துக்கும் எதாச்சும் லிங்க் இருக்குன்னு அவங்களுக்கு தோணிச்சுன்னா....ஐயோ பாவம் நீங்க (நான் பாயிண்ட் எல்லாம் எடுத்து குடுக்கலை சாரே... ஹி ஹி ஹி)

Super post

சென்ஷி said...

:))


பயணம் இனிமையாக குதூகலமாக அமையவும் - ஆடி மாசத்திலயும் - கண்டிப்பாக கல்யாண சாப்பாடு கிட்டவும் வாழ்த்துக்கள் பாஸ் :))

கைப்புள்ள said...

வெல்கம் டு தமிழ்நாடு. நமிதா, நயந்தாரா, ஆடி மாசம், காது குத்து, சூசைட் எல்லாத்தையும் ரசிச்சேன். நானும் சென்னையில தான் இருக்கேன். சௌகார்பேட்டையில் நானும் உங்களை சந்திக்க முயற்சி பண்ணறேன் :)

பத்மநாபன் said...
This comment has been removed by the author.
பத்மநாபன் said...

//நான் சில பல கடமைகளில் சிக்கி பிஸியாய் இருப்பது மாதிரி நடித்துக்கொண்டு பொட்டி கட்டும் வேலையிலிருந்து ஓ.பி அடித்துகொண்டிருக்கிறேன்// நமக்கு அப்ப தான் விட்டு போன கடமைகள் எல்லாம் ஞாபகம் வரும்..பேக்கிங் எல்லாம் முடிஞ்சபிறகு நைசா உள்ள நுழைவோம்.
//கிங்பிஷரில் சர்வீஸும் (ஏர் ஹோஸ்டஸும்) நன்றாக இருக்கும் என்று நாலு நல்லவர்கள் சொன்னதை நம்பி வானத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறேன்// நல்லவங்க சரியாத்தான் சொல்லியிருக்காங்க , ஆன உங்க தங்கமணியொடல்ல பயணம் செய்யறிங்க..ஒன்றர கண்ணுல பார்த்து பார்த்து கண்ணுல்ல சுளிக்குக்கும்.

இந்திய பயணம் இனிமையாக அமையவும், உங்கள் ஆசைகள் , பிராயாசைகள் நிறைவேறவும் வாழ்த்துக்கள்.

Kavitha said...

Vacation...ooorukku poreenga...mmm..(romba sathama perumoochu) enjoy pannunga!

Ramesh said...

//நமீதாக்கு ஒரு காலம் வந்தா நயந்தாராக்கு ஒரு காலம் வரமலயா போயிடும்//
ம்ம்.....நானும் ஒரு ப்ளாக் வச்சிருக்கேன் எனக்கும் பொற்கொடி, ஸ்ரீராம் மாதிரி கும்மியடிக்க ஆள் கிடைக்காமலா போகும்.

Anonymous said...

ungal payanam inidhaga amaya vazhtukkal.
nivi.

Deekshanya said...

welcome to chennai brother. Nanum chennaila than irukain. intha thadava nan kandippa "present sir" koduthiruvain bloggers elam meet panna. Regards to anni and kiddos. Mail onnu thatti vidunga, about when you are in chennai, we'll plan something.

லங்கினி said...

Welcome to India Dubukku..Have a great trip!
Thakkudu - unga kasta puriyudhu...Dubukku nichayam sibarisu pannuvar-nu Dubukku rasigar mandra kolgai parappu seyalalar sonnar..dont worry..

DaddyAppa said...

ஹலோ டுபுக்கு!!!

நீங்க ஊருக்கு வந்துட்டு போற இந்த Vaccation-குள்ள, நான் உங்க எல்லா பதிவு-ம் படிச்சு முடிச்சாச்சு. 15 நாள் சும்மா Drug Addict-மாதிரி உங்க பதிவு-ம், துளசி அக்கா பதிவு-ம் படிச்சேன்.

வீட்டில எங்க தங்கமணி-க்கு ஒரே கோவம். "முன்னாடி சுஜாதா புக்...இப்போ எல்லாம் Blog...அப்படி என்னதான் இருக்கோ அதிலே!...அப்பப்போ சிரிப்பு வேற..பயித்தியம் மாதிரி" அப்படின்னு.

தங்கமணி is from Malaysia(ந்ம்ம அத்தை பொண்ணுதான்). தமிழ் வேகமா படிக்க வராது. மேலும், நம்ம சைடு நக்கல், குசும்பு எல்லாம் அவ்வளவு சீக்கிரம் புரியாது. அந்த "காய்சல்" வேற :-)))

ஆபிசில மெமோ கிடச்சா உங்களுக்கு redirect பண்ணறேன் :-))

வாய் விட்டு சிரிக்க வைத்து, கொஞ்சம் நோய் விட்டு போக உதவியதற்கு நன்றி.

பத்மநாபன் said...

//"முன்னாடி சுஜாதா புக்...இப்போ எல்லாம் Blog...அப்படி என்னதான் இருக்கோ அதிலே!...அப்பப்போ சிரிப்பு வேற..பயித்தியம் மாதிரி"// நம்ம கோஷ்டி உலகெங்கும் நீக்கமற நிறைஞ்சிருக்கு..

அப்புறம் தல ஊர் போய் சேர்ந்தாச்சா...கன்னுக்குட்டி கணேசன் எப்படி இருக்கார்.

Chitra said...

நெல்லை மைந்தனா? ராம்ஜி_யாகூ சார் சொல்லி தான் உங்கள் பதிவை பற்றி தெரிந்து கொண்டேன்.... அசத்துறீங்க.... வாழ்த்துக்கள்!

The Print Lover said...

"சரி அவனுக்கு காதாவது குத்து என்று சொல்லிப்பார்த்தேன்."
LOL! Paavam unga akka paiyan.

Have a nice trip Dubukku and family. And come back with lot of post ideas :)

ரசிகன் said...

//முத தரம் பண்றது தான் ஆக்சிடெண்ட் ரெண்டாவது தரம் அது சூயிசைட்ன்னு கெட்டியாய் இருக்கிறேன். //

:))))))))

சிங்கக்குட்டி said...

//நமீதாக்கு ஒரு காலம் வந்தா நயந்தாராக்கு ஒரு காலம் வரமலயா போயிடும்ன்னு கருவிக் கொண்டிருப்பேன்.//

ஹி ஹி நீங்களுமா? வாங்க வாங்க இந்தபக்கம் வாங்க :-)

Subramanian Vallinayagam said...

/*
அஜந்தா வால் க்ளாக் ஒன்றை வாங்கிக் கொண்டு தவறாமல் சாப்பாடுக்கு வந்து விடுகிறேன்.

vijaya kumar DVD..
*/
typical dubukku touch post.. I laughed a lot. thanks for keep posting..

Subramanian Vallinayagam
Bangalore

Subramanian Vallinayagam said...

have a nice trip.. post the trip experiences also in ur own writing style..

Subramanian Vallinayagam
Bangalore

இராமச்சந்திரன் said...

Welcome from USA to back to UK...

Anonymous said...

Welcome back.... when is the next one....

sri said...

hi,
not sure how i landed on your blog, but so glad I did...love the humor and the insight...(sorry for writing in English don't have a Tamil font installed, and i dislike writing Tamil in English - difficult to read).
Am slowly catching up on your archives. Kalyanam was FANTASTIC!
-sri

Dubukku said...

ஈரோயின் (மறக்கலை பார்த்தீங்களா) - மிக்க நன்றி ஹை. பொட்டி கட்டிங் ஐய்யோ அது பெரிய கொடுமைங்க

ஸ்ரீராம் - அண்ணாச்சி...நான் ஊருக்கு போய்டு வர்றேன்னு சொல்றேன்...நீங்க திரும்ப வரவுடமாட்டீங்க போல இருக்கே இருந்தாலும் ஐ லைக் உங்க திங்கிக்ங். இதுக்கே இன்னிக்கு வூட்டுல டின்னு தான் எனக்கு :)))

மகேசு - பாருங்க சார்...இந்த பச்சமண்னை ஸ்ரீராம் கண்டதையும் சொல்லி கெடுக்க பார்க்கிறார்.

ஈரோயின் - நீங்க கவலைய வுடுங்க...சமைக்கிற வேலைல கவனம் செலுத்துங்க...(நீங்க தானெ சொன்னீங்க நடிச்சும் குடுத்து சமைச்சும் போடறேன்னு :))))) )

பாலபாரதி - அண்ணாச்சி நான் தேன் ரொம்ப சாரி..ஊர்ல பல்வேறு குழப்பங்களினால் ஒருத்தரையும் சந்திக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அடுத்த தரம் கண்டிப்பாய் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன் பார்ப்போம்

ராம்ஜி - அண்ணாத்தே உங்களுக்கும் நாந்தேன் சாரி. பார்க்கமுடியாமல் போய்விட்டது. மிகவும் மன்னிக்கவும். ஒருத்தர கூட சந்திக்காதது எனக்குத் தான் மிகப் பெரிய நஷ்டம்.

தேவா - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு, நீங்க சொல்றதையெல்லாம் நம்பித்தான் ஓட்டிக்கிட்டு இருக்கேன். பார்ப்போம். மிக்க நன்றி

சௌம்யா - பயங்கர யூஸ்புல்லா எழுதியிருக்கீங்க...ஹீ ஹீ சரி இனிமே உங்க வீட்டு விசேஷத்துக்கு கண்டிப்பா அஜந்தா கடிகாரம் வாங்கிட்டு வந்துடறேன் :))))

அறிவிலி - யோவ்...அறுபதுக்கு இன்னும் முப்பத்திஒன்பது வருஷம் இருக்குய்யா...கடிகாரத்த பத்திரமா பார்த்துக்கோங்க :P

ஆயில்யன் - அவ்வ்வ்வ்வ்வ்வ் ஒரு கல்யாண சாப்பாடு கூட தேறல பாஸூ....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ராம்ஸ் - மிக்க நன்றி தல

அருண் - அது என்னமோ கரெக்ட்டு தான் இருந்தாலும் கல்யாண புஃப்பே இருந்தா நல்லாயிருந்திருக்கும் ஹூம்

Dubukku said...

பாலபாரதி - தல...எண்ணிக்கையா முக்கியம் சட்டில எவ்வளவு தேறுதுங்கிறதுல்ல முக்கியம் :)))

மதுரை சரவணன் - மிக்க நன்றி உங்க அன்புக்கு

தக்குடு - என்னப் பார்த்து நீ பரிதாபப் படுறியே இது தான் காமெடி...உனக்கு ரெக்கமென்டேஷன் வேணுமா வேண்டாமா?:))))

பாலு - உங்க அன்பிற்கு மிக்க நன்றி. ரொம்ப சாரி தல இருந்த குழப்படில ஒருத்தர கூட பார்க்க முடியலை

அபி அப்பா - டாடி...மொத்ததுல வத்திப் பொட்டி கூட தேறல டாடி .....ஒரே கன்பிசன் ஆகிப்போச்சு

ஸ்ரீராம் - தக்குடு ஊர்ல வந்து ரெக்கமெண்டேஷனுக்கு ஒரே அழுவாச்சி...ஏதோ உன்னால தான் நான் பெரிய மனசு பண்ணி ரெக்கமெண்டு

சசிகலா - ஆஹா தேறின அமௌண்ட்ல ஏதாவது போட்டு குடுங்க மேடம். மிக்க நன்றி உங்க நம்பிக்கைக்கும் அன்பிற்க்கும்.

ரமேஷ் - பரவாயில்லைங்க...நல்லாத் தான் இருந்தது ப்ளைட்..

அப்பவி தங்கமணி - இங்க எங்கவூட்டு தங்கமணி தேறாது முடிவு கட்டிபயிங்க்ஸ் தண்ணி தெளிச்சுபையிங்க்ஸ்...ஹீ ஹீ

சென்ஷீ - வாழ்த்துக்க்கு மிக்க நன்றி தல. ஆனா ஒன்னும் தேறல...எல்லாம் என்னால தான்

கைப்ஸ் - நான் மிக மிக சாரி. உங்களுக்கு இங்கே வந்த பிறகு தனி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் பார்த்தீர்களா தெரியவில்லை.

ஸ்வேதா - மிக்க நன்றி மேடம்.

பத்மநாபன் - மிக நன்றி தல ஹீ ஹீ அது என்னமோ கரெக்டு தான் :)) எல்லாம் பிராயசை தான்..

பொயட்ரீ - சே என்ன வேகேஷன்ங்க...சுத்த வேஸ்ட் திரும்ப கரெக்டா ப்ளான் பண்ணி போகனும்

ரமேஷ் - கோச்சிக்காதீங்க தல...கண்டிப்பா வர்றேன்..

நிவி - மிக்க நன்றி ஹை மேடம்

தீக்க்ஷண்யா - மிக மிக சாரி...ஈமெயில் ஹேக் ஆகி ஒருத்தரையுமே தொடர்பு கொள்ள முடியலை

லங்கினி - மிக்க நன்றி, நீங்களெல்லாம் சொன்னீங்கன்னு தான் ஏகப்பட்ட ரெக்கமெண்டு தக்குடுவுக்கு :))


டாடிஅப்பா - வாங்க வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஐய்யோ பார்த்து சார் ஆபிஸ் மெமோ வந்தாகூட பரவாயில்ல...தங்க்மணி கிட்ட ஒழுங்கா நல்ல பேரு வாங்குங்க :))

பத்மநாபன் - போயிட்டு வந்தே ஆச்சு :(((((( க.கணேசன் நலம்...:))) ஆனா அவர பத்தி எழுதறேன்னு அவருக்கு தெரியாது..கொண்ணே போடுவார்...:)))

சித்ரா - மிக்க நன்றி மேடம். ராம்ஜி சாருக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன் :))

தி ப்ரின்ட் லவ்வர் - ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு. :)))

ரசிகன் - ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல அந்த வரிய :)))

சிங்கக்குட்டி - ஹீ ஹீ பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் தானே

சுப்ரமண்யன் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.மிக ஊக்கமாய் இருக்கிறது.

இராமச்சந்திரன் - யோவ் என்னாதிது...அமைச்சர் மாதிரி வெல்கம்லாம் சொல்லிக்கீட்டு :))) மிக்க நன்றி

அனானி - டேங்க்ஸ் இதோ இதோ போட்டுட்டேன்

ஸ்ரீ - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.உங்களுக்கு எனது ப்ளாக் பிடித்தது பற்றி மிக மிக சந்தோஷம்.

Dubukku said...

பாலபாரதி - தல...எண்ணிக்கையா முக்கியம் சட்டில எவ்வளவு தேறுதுங்கிறதுல்ல முக்கியம் :)))

மதுரை சரவணன் - மிக்க நன்றி உங்க அன்புக்கு

தக்குடு - என்னப் பார்த்து நீ பரிதாபப் படுறியே இது தான் காமெடி...உனக்கு ரெக்கமென்டேஷன் வேணுமா வேண்டாமா?:))))

பாலு - உங்க அன்பிற்கு மிக்க நன்றி. ரொம்ப சாரி தல இருந்த குழப்படில ஒருத்தர கூட பார்க்க முடியலை

அபி அப்பா - டாடி...மொத்ததுல வத்திப் பொட்டி கூட தேறல டாடி .....ஒரே கன்பிசன் ஆகிப்போச்சு

ஸ்ரீராம் - தக்குடு ஊர்ல வந்து ரெக்கமெண்டேஷனுக்கு ஒரே அழுவாச்சி...ஏதோ உன்னால தான் நான் பெரிய மனசு பண்ணி ரெக்கமெண்டு

சசிகலா - ஆஹா தேறின அமௌண்ட்ல ஏதாவது போட்டு குடுங்க மேடம். மிக்க நன்றி உங்க நம்பிக்கைக்கும் அன்பிற்க்கும்.

ரமேஷ் - பரவாயில்லைங்க...நல்லாத் தான் இருந்தது ப்ளைட்..

அப்பவி தங்கமணி - இங்க எங்கவூட்டு தங்கமணி தேறாது முடிவு கட்டிபயிங்க்ஸ் தண்ணி தெளிச்சுபையிங்க்ஸ்...ஹீ ஹீ

சென்ஷீ - வாழ்த்துக்க்கு மிக்க நன்றி தல. ஆனா ஒன்னும் தேறல...எல்லாம் என்னால தான்

கைப்ஸ் - நான் மிக மிக சாரி. உங்களுக்கு இங்கே வந்த பிறகு தனி மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன் பார்த்தீர்களா தெரியவில்லை.

ஸ்வேதா - மிக்க நன்றி மேடம்.

பத்மநாபன் - மிக நன்றி தல ஹீ ஹீ அது என்னமோ கரெக்டு தான் :)) எல்லாம் பிராயசை தான்..

பொயட்ரீ - சே என்ன வேகேஷன்ங்க...சுத்த வேஸ்ட் திரும்ப கரெக்டா ப்ளான் பண்ணி போகனும்

ரமேஷ் - கோச்சிக்காதீங்க தல...கண்டிப்பா வர்றேன்..

நிவி - மிக்க நன்றி ஹை மேடம்

தீக்க்ஷண்யா - மிக மிக சாரி...ஈமெயில் ஹேக் ஆகி ஒருத்தரையுமே தொடர்பு கொள்ள முடியலை

லங்கினி - மிக்க நன்றி, நீங்களெல்லாம் சொன்னீங்கன்னு தான் ஏகப்பட்ட ரெக்கமெண்டு தக்குடுவுக்கு :))


டாடிஅப்பா - வாங்க வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஐய்யோ பார்த்து சார் ஆபிஸ் மெமோ வந்தாகூட பரவாயில்ல...தங்க்மணி கிட்ட ஒழுங்கா நல்ல பேரு வாங்குங்க :))

பத்மநாபன் - போயிட்டு வந்தே ஆச்சு :(((((( க.கணேசன் நலம்...:))) ஆனா அவர பத்தி எழுதறேன்னு அவருக்கு தெரியாது..கொண்ணே போடுவார்...:)))

சித்ரா - மிக்க நன்றி மேடம். ராம்ஜி சாருக்கு அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறேன் :))

தி ப்ரின்ட் லவ்வர் - ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு. :)))

ரசிகன் - ரொம்ப ரசிச்சிருக்கீங்க போல அந்த வரிய :)))

சிங்கக்குட்டி - ஹீ ஹீ பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம் தானே

சுப்ரமண்யன் - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.மிக ஊக்கமாய் இருக்கிறது.

இராமச்சந்திரன் - யோவ் என்னாதிது...அமைச்சர் மாதிரி வெல்கம்லாம் சொல்லிக்கீட்டு :))) மிக்க நன்றி

அனானி - டேங்க்ஸ் இதோ இதோ போட்டுட்டேன்

ஸ்ரீ - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு.உங்களுக்கு எனது ப்ளாக் பிடித்தது பற்றி மிக மிக சந்தோஷம்.

Geethanjali Navaneethakrishnan said...

Mr. Dubukku,

Enga kaliyanathula (2005) 5 wall clock vanthathu. pothaa kuraikku vantha show case saamaanlaiyum avarukkum enakkuma serthu 7 clock irunthuchu...ellathaiyum use pannanum ninaichomna tik tik tik nu DTS effect la thigil padam mathiri vazhkaiya ottiirukannum pola... ithanala makkal namakku enna sollavaraanganne puriyala ponga:(

ithanala sagalamanavarukkum oru vendukol thayavu seithu ini yarukkum clock gift pannatheenga... avanga romba paavam...present um vedaam punishment um vendaam..

Geethanjali Navaneethakrishnan said...

your blog is very interesting...ellame inaikke padichidanumnu avala irukku...

Post a Comment

Related Posts