Saturday, March 13, 2010

சுவாமிஜியும் மாமிஜியும் - திரை விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்த வரையில் சில படங்கள் பார்த்த மாத்திரத்திலேயே "என்ன படம் எடுத்திருக்காங்க வெங்காயம்"ன்னு காறித் துப்பத் தோன்றும், சில படங்கள் பார்த்தவுடனேயே மனதுக்கு பிடித்து "சூப்பரா எடுத்திருக்கான்பா"ன்னு மெச்சத் தோன்றும். இன்னும் சில படங்கள் பார்த்த அடுத்த அரை மணிநேரத்திற்கு எந்த வார்த்தையும் பேசத் தோன்றாது அதன் தாக்கத்தில் அப்படியே நம்மை வீழ்த்திவிடும்.

சமீபத்தில் சன்-நக்கீரன் கோ-டிஸ்ட்ரிபியூஷனில் வெளியாகி கலக்கோ கலகென்று கலக்கி கல்லாவிலும், சில பேர் மனதில் நெருப்பையும் அள்ளிக் கொட்டியிருக்கும் சுவாமிஜியும் மாமிஜியும் காவியம் இதில் மூன்றாம் வகை (அட்லீஸ்ட் என்வரையில் :) ). படத்தின் தாக்கத்திலிருந்து இன்னும் மீள வில்லை. படத்தில் கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை. டெக்னிகல் எக்ஸலன்ஸ் என்று ஹாலிவுட் துரைமார்கள் நாக்கை சுழட்டி சொல்லும் தொழில் நுட்ப மேலான்மையும் அவ்வளவாக இல்ல, பெரிய செட்டு, ஆர்ட் என்று அதுவும் ரொம்ப இல்லை. முதலில் கொஞ்சம் அதிகமாக இருக்கும் காஸ்டியூம்ஸும் கூட போக போக துண்டக் காணும் துணியக் காணும் என்று குறைந்து அதுவும் அதிகமாக இல்லை - இப்படி எத்தனையோ இல்லை இல்லாமல் இருந்தாலும் படத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை.

நியோரியலிஸம் ஜெனரில் நேச்சுரல் லைட்டிங் வகையாறாவில் படம் நெடுக படமாக்கப் பட்டிருக்கிறது. கேமிரா செவ்வன கடமையாற்றியிருக்கிறது. படமாக்கப்பட்ட விதம் சுமார் தான் என்றாலும் கேமிரா யுக்த்திகள் ஹாலிவுட் ரேஞ்சிற்க்கு இருப்பது பிரமிக்க வைக்கிறது. நடிகர்கள் நடிக்கவில்லை, வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் சுவாமிஜி ஒருவிதமான கிறக்கமான சிரிப்பில் மாமிஜியை கொஞ்சும் போது அவருடைய நடிப்புத் திறமையில் பார்ப்பவர் நெஞ்சை கொள்ளை கொண்டு போகிறார். குறிப்பிட்டு ஒரு காட்சியை சொல்லவேண்டுமானால்...சுவாமிஜி கடமையாற்றுவதற்கு முன் "ஜிங்ங்" என்று காலை மேலே தூக்கி ஒரு குதி குதித்து எழும்புகிறார் பாருங்கள்...அடடா என்னவென்று சொல்லுவது. சுவாமிஜி யோகாவில் விற்பன்னர் என்று இந்த ஒரு காட்சியில் டைரக்டர் பொடி வைத்து நமக்கு சேதி சொல்லுகிறார்.

அதே காட்சியில் சுவாமிஜி காவிக்கு மேட்சாக கோடு போட்ட வெள்ளை கலர் ஜெட்டியணிந்து தமிழ் சினிமாவில் நெடுங்காலம் இருந்து வந்த "லங்கோடு" க்ளீஷேவை கிழித்து தொங்கப் போட்டுவிடுகிறார். மிக ரசனையாக காஸ்டியூம் தேர்ந்தெடுத்த காஸ்டியூம் டிசைனருக்கு இந்த ஒரு காட்சிக்காகவே ஒரு ஷொட்டு.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த காவியத்தில் குறைகளே இல்லையா என்று கேட்டால் ஏன் இல்லை. போஸ்ட் ப்ரொடக்க்ஷனில் சேர்த்திருக்கும் வாய்ஸ் ஓவர் சுத்தமாக ஒத்து வரவில்லை. சுவாமிஜி வருகிறார்...வருகிறார் வந்துவிட்டார். மாமிஜி தண்ணி எடுக்கிறார், எடுத்துவிட்டார். கூஜாவை திறக்கிறார் திறந்துவிட்டார் என்று கிரிக்கெட் கமெண்டரி போல உயிரை வாங்கும் சுரத்தே இல்லாத வர்ணனைனையால் படத்தோடு நம்மால் ஒன்ற முடியவில்லை. ஒரு விஷுவல் மீடியாவில் இவ்வளவு புளி போட்டு விளக்கவேண்டிய கட்டாயமென்ன? பிண்ணனி இசையை என்னவென்று சொல்லுவது... இடம் என்ன பொருள் என்ன காட்சி என்ன ஃபீலிங் என்ன என்று தெரிந்து மீசிக் போடவேண்டாமா....சும்மா எல்லாத்துக்கும் டைங் டைங்ன்னு பயமுறுத்துகிற மீசிக் போட்டு நிம்மதியாய் படம் பார்க்க விட மாட்டேன்கிறார் மீசிக் டைரக்டர்.

இருந்தாலும் இந்தப் படம் மொழி, கலாச்சாரம் தாண்டி இன்டர்நேனஷனல் சென்சேஷனாகி இருப்பது நம்முர் திறமையை பறைசாற்றுகிறது. தெலுங்கு, மலையாளம் ,கன்னடா மற்றும் “சுவாமிஜி அவுர் மாமிஜி” ஹிந்தி டப் உள்பட பல்வேறு மொழிகளில் வெளியாகியிருக்கும் இதே படத்தை, எதாவது காட்சியை மாற்றி இருக்கிறார்களா என்று கன்பர்ம் செய்து கொள்ளதற்காக பார்த்தேன்..சீன் பை சீன் அப்படியே எடுத்திருக்கிறார்கள். நக்கீரனில் ஹை டெபனிஷனில் ரிலீஸ் செய்திருக்கிறார்களாம். வருடாந்திர சந்தா கேட்டதால் ஹை டெபனிஷன் பிடிக்காமல் ரெண்டுங்கெட்டான் டபனிஷனிலேயே பார்த்துத் தொலைய வேண்டியிருந்தது. ஆனாலும் நிக்கிறான்ல தமிழன்...யாருகிட்ட நம்ம கிட்டயேவா..

54 comments:

தக்குடு said...

vadai yenakkuthaan.....:)

ராம்ஜி_யாஹூ said...

உலகத் தமிழர்கள் அனைவரையும் நித்தி நடித்த ரஞ்சிதாயணம் , கவர்ந்து உள்ளது என்பதற்கு தங்களின் விமர்சனமே சான்று.

நித்தி நடித்த இரண்டாவது படம் எண்ணெய் அபிஷேகம் (எண்ணெய் காப்பு) பார்த்து விட்டேர்களா.

Ananya Mahadevan said...

:-)) mudiyala!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//. ஆனாலும் நிக்கிறான்ல தமிழன்...யாருகிட்ட //

துள்ளிக்குதித்து நிக்கிறான்..( விடுபட்ட வார்த்தைகள் )

ஆனாலும் கொஞ்சம் லேட்டா வந்துட்டீங்க சார்..
( நாங்க மாமிக்கு வளைகாப்பு எப்ப பண்ணலாமுனு பேசிட்டு இருக்கோம்..
சரி .. பரவாயில்லை.. அடுத்த கியரைப் போட்டு, ஸ்பீட் எடுங்க..)

பத்மநாபன் said...

இவ்வளவு சிரியஸா நகைச்சுவை விமர்சனம் இந்த படத்துக்கு இப்பதான் வந்திருக்கு ... எதையும் விடாமல் டெக்னிக்கல் நோண்டல் அசத்தல் ... அதுலயும் ''ஜிங்கு'' கமெண்ட் ... எப்பா ... இந்த கோணத்துல இந்த விஷயத்த டீல் செய்து பதிவு போட்டு சிரிக்கவைத்ததுக்கு
வாழ்த்துக்கள் ....

Narmadha said...

kadavuley....ingey nadandhadhu ulagengum gabbaagiduthaa....maana kedaa irukkey...

sriram said...

அருமை டுபுக்கு, ரசித்தேன் சிரித்தேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ramesh said...

மார்க் போடலையே...

hayden panni kutty said...

nathir thinna song-oda paakkalaya? BGM kalakkal. semma kalaaichal kalaaichiteenga.
title-m pramaadham (very rhyming)
as usual dubukku rocks.

Porkodi (பொற்கொடி) said...

dubukku in full form!! indha padatha inspirationa vechu nextu padam eduthudadhinga! :)

(naan posta 0 comments irukum podhe padichutten, irundhalum apo kaiyil idli maavu irundha padiyal..)

hayden panni kuttya!!!! hello mr/miss hayden panni kutty.. nalla irukula boss?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இது கலக்கல் விமர்சனம்

பத்மா said...

http://kadugu-agasthian.blogspot.com/
மொதல்ல இத வாங்கிக்குங்க வந்து இடுகைய படிக்கிறேன்

shubakutty said...

i didn"t expect this from u.நீங்கள் ஞானி எழுதியதை கட்டயம் படித்திருபப்பீர்கள் . நான் அவர் கட்சி. இதில் அதிகம் பதிக்கப்பட்டது ரஞ்சிதா தான். அவன் ஊரை ஏமற்றியது உன்மை தான். ஆனால் ஏன் ஒவ்வறு சாமியார் பின்னாடியும் இவ்வளவு கூட்டம். ஏன் ஒவ்வறு முறையும் ஏமாற்றம். இதற்கு என்னைப் போல் சாமி கும்பிடாம்மல் இருப்பது கரைக்டா. கட்டாயம் இது காமடிக்கான மாட்டர் இல்லை.

balutanjore said...

DEAR DUBUKS
AS USUAL KALAKKITTEL
DIRECTOR PATHHI ONNUME SOLLALLIYE

BALASUBRAMANYAN VELLORE

Uma Krishna said...

varugirar, varugirar vandhu vittar nu sonnadhum namba ipswich cruise trip la lindsie ezhudhi iyakkiya nanga nadicha (?!) dhan nyabagathukku vandhadhu :-)... Uma

அறிவிலி said...

ஸ்வாமியின் லீலைகள் பற்றி ஆயிரம் பதிவுகள்னு நெனைச்சப்போ, உங்களோடது வித்தியாசமா ஹ்யூமர் டச்சோட..... சூப்பர்..

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

வினோதமான முயற்சி.

நித்தியானந்தாவின் புகழை மட்டும் பாடியிருப்பதாக தோன்றுகிறது. அவரை விடவு்ம மிகவும் கஸ்டப்பட்டு நடித்த ரஞ்சனிக்கு தேசிய அவார்டு கொடுக்க நண்ப்ரகள் சிபாசு செய்யவும்.

ஏதோ ரஞ்சிதாவுக்கு ஒன்றும் தெரியாதது போலவும், அவர் மிகவும் பாவம் என்கிறது போலவும் சில நணப்ரகள் கருத்துகள் தெரிவித்திருக்கின்றார்கள். விடியோவை கொஞ்சம் பார்த்துவிட்டு வரவும்.

Dubukku said...

தக்குடுபாண்டி - அடடா..இந்த வடை போராட்டம் தாங்கமுடியல

ராம்ஜி - இல்லை கேள்விபட்டேன் ஆனால் பார்க்கவில்லை இல்லை இந்த முதல் படமும் அது கையாளப்பட்ட விதத்திலிருந்தும் என்னால் இன்னும் விடுபடமுடியவில்லை.

அநன்யா - :))

பட்டாபட்டி - ரொம்ப கரெக்ட். கொஞ்சம் லேட் தான்

பத்மநாபன் - :)) கொடுமை எத்தனை சாமியார் வந்தாலும் திருந்த மாட்டேங்கிறாங்களேன்னு இருக்கு

நர்மதா - ஆமாங்க அத விட கொடுமை இன்னும் சில பேர் நம்பிக்கிட்டு இருக்காங்க பாருங்க

ஸ்ரீராம் - :)) அண்ணாச்சி என்ன சில நாட்களா குட்டு போடமலே இருக்கீங்க :))

ரமேஷ் - ஹீ ஹீ :))

ஹேடன் பன்னிக்குட்டி - இதென்னங்க சூப்பர் புனைப்பெயர் :))) அடடா ரீமிக்ஸ் வேர்ஷன் வேற வந்தாச்சா

பொற்கொடி - அதெல்லாம் இந்தப் பட சாயலே இருக்காதுங்க :))) என்னது மாவு அரைக்கும் போதும் ப்ளாக் படிக்கிறீங்களா...கலக்குறீங்க (ரெண்டு பக்கமும்)

யோகன் - மிக்க நன்றி ஹை அண்ணாச்சி

பத்மா - உங்களுக்கு கோடானு கோடி நன்றி. நானே அவர கொஞ்ச நாளா தொடர்பு கொள்ள எண்ணி இருந்தேன். மிக்க நன்றி

Dubukku said...

சுபாக்குட்டி - இத இத இதத் தான் எதிர்பார்த்தேன். யாராவது இத டச் பண்ணுவாங்கன்னு. (அதுனால தான் அவசர அவசரமா இன்னிக்கே பதிலுரை :)) )
முதலில் ஒன்றை தெளிவு படுத்திவிடுகிறேன் - இந்த பதிவை மீண்டும் ஒரு முறை முழுவதும் படித்துப் பார்க்கவும். இந்தப் பதிவில் நான் கிண்டலடித்திருப்பது ரெண்டு விஷயங்களை ஒன்று முக்கியமாக அந்த சாமியாரை. இன்னொன்று இந்த வீடியோவை வியாபர சிந்தனையில் அசால்ட்டாக கையாளப் பட்டிருப்பதை.(ஆனால் இந்த வியாபார யுகத்தில் அதை தவரிப்பது கொஞ்சம் கஷ்டம்) எனக்கு பிடித்த ஒரு கோட் (யாரு சொன்னதுன்னு ஞாபகம் இல்லை) கடவுள் இருக்கார்ன்னு சொல்றவனையும் ஏத்துக்கலாம், கடவுள் இல்லைன்னு சொல்றவனையும் ஏத்துக்கலாம் ஆனா நான் தான் கடவுள்ன்னு சொல்றான் பாரு அவன மட்டும் ஏத்துக்கவே முடியாது (கோட் அப்படியே இல்லாமல் கொஞ்சம் வார்த்தைகள் திரிந்திருக்கிறது).

ரஞ்சிதா பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பதை நானும் ஏற்றுக்கொள்கிறேன். அதுவே என்னுடைய கருத்தும். ரஞ்சிதாவை பற்றி நான் எங்கேயும் மேற்கோள் சொல்லவில்லையே? கல்யாணம் என்ற கட்டைத் தாண்டி ரஞ்சிதா உறவு கொண்டார் etc etc என்பதெல்லாம் அவர் தனிப்பட்ட விஷயம். அதில் கருத்து சொல்வதற்க்கு கூட எனக்கு விருப்பமில்லை because its totally a private matter between her and Samiyar. ஆனால் நான் தான் கடவுள்ன்னு சொல்லி ஊரை ஏமாத்தும் சாமியாரையெல்லாம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. இந்த யோகா என்பதே இன்று வியாபார நோக்குடன் மட்டுமே கையாளப் படுகிறது. பதஞ்சலி முனிவர் முதலானோர் சொன்னாலும் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் இது பெரிய கார்ப்பரேட் இன்டஸ்ட்ரியாகிவிட்டது. நிற்க இந்த 'நான் கடவுள்' சாமியார்களை விட அவர்களை நம்பி காசைக் கொட்டுகிற கூட்டத்தைப் பார்த்தால் தான் எரிச்சல் வருகிறது. முன்னாடியெல்லாம் பாம்பு சாமி, டேன்ஸ் சாமியார்ன்னு ஊர ஏமாத்தினாங்க இப்போ யோகா, குண்டலினின்னு ஊர ஏமாத்துறாங்க...அவ்வளவே....

Anonymous said...

unga veetu paathalaa? intha padatha!!!

Dubukku said...

பாலு - நன்றி ஹை டைரக்டரைப் பத்தி என்ன சொல்ல :))))

உமா - ஹா ஹா ஐய்யோ இதையும் அதையும் கம்பேர் கூட பண்ணாதீங்க :)))))))

அறிவிலி - வேண்டாம்னு தான் நினைச்சே ...என்னால தாங்க முடியல அதான் :)

ஜகதீஸ்வரன் - வாங்க. தவறாக நினையாதீர்கள் என் தனிப்பட்ட கருத்தில் ரஞ்சிதா பற்றி சொல்ல ஒன்றுமே இல்லைங்க. அவங்க சாமியாரோட இருந்தாங்கன்னா அது அவங்க தனிப்பட்ட விஷயமாக தான் என்வரையில் பார்க்கிறேன். அவங்க அட்லீஸ்ட் ஊரை ஏமாத்தலை அத்தோட இந்த விஷயத்தில் அவங்களோட நேர்மையான பதிலும் பிடித்திருந்தது. ஆனா அதுவே சாமியாரைப் பொருத்தவரையில் வேற விஷயம். வெளில "நான் கடவுள்"ன்னு சொல்லி இரண்டு வேஷங்கள் போட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அவர் "இதெல்லாம் தப்பே இல்லை நான் இப்படித் தான் இருப்பேன்ன்னு முதல்லையே சொல்லி" அதற்கப்புறம் கூட்டம் சேர்ந்திருந்தால் அது வேற விஷயம். ஆனால் என்க்கு இந்த ஏமாறுகிற கூட்டத்தை நினைத்தால் தான் ஜீரணிக்க முடியவில்லை. நான் இங்கு யூ.கே.வில் வேறு ஒரு கட்டாயத்தில் இவர்களுடைய பக்தர்களின் கூட்டத்திற்கு போயிருந்தேன். இவரோட பிறந்தநாளை அங்கு கொண்டாடி கேக் நைவேத்தியம் செய்து எத்தனை பேர் இவரை தெய்வமாய் உருகி கையிலிருந்து பத்து பதினைந்தாயிரம் டாலர் செலவழித்து...சரி...விடுங்க என்னிக்கு திருந்தப் போறாங்களோ... ஹூம்ம்ம்ம்

அனானி - //unga veetu paathalaa? intha padatha!!! //
- Yes dude

டகிள் பாட்சா said...

டுபுக்கு!
சூப்பரப்பு!

ஸ்வாமிஜி ‘கதவை மூடு! காமம் வரும்’ங்கற தத்துவத்த சொல்ல படமெடுத்து post production முடியறதுக்குள்ள திருட்டு vcd பண்ணி TVயிலேயே போட்டுட்டாங்களே! தெரியாமத்தான் கேக்குறேன்! இவங்க மேல தமழக அரசின் ‘குண்டர் சட்டம்’ பாயவே பாயாதா!

JustATravellingSoldier said...

சே எவ்ளோ பெரிய சாமியார்.
இப்படி போயும் போயும் ரஞ்சிதா தான் கிடைச்சாளா ?

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அட கடவுளே...ஒரு நிமிஷம் நெஜமாவே ஏதோ சினிமா விமர்சனம்னு நெனைச்சுட்டேன். chance ஏ இல்ல டுபுக்கு சார், எங்கேயோ போய்டீங்க

ஒரு கருத்து - இந்த மாதிரியான ஆளுகளை (சாமிய சொன்னேன்...) சவுதி அரேபியா மாதிரி நடு ரோட்ல சுட்டு கொல்லணும்னு சட்டம் வரணும்

Balaji S Rajan said...

Dubukku,

Now I understand why you hesitated when I called you and said "I am speaking from Ashram". I am reading your post only now. It is very humourous in your own style. I should not have selected to read this at 23:51 on Sunday night while everybody is sleeping. I could not laugh out loudly.

Apart from joke, even I am of the same opinion that people should open their eyes and stop believing others start believing themselves. I want to avoid another post. So stopping here...

Anonymous said...

You are in form Dubukku... having said that, let me play the devil's advocate- did the swamiji and mamiji ever tell us that they wont sleep with each other and did they do it in a public place creating nuisance, was anyone of them coerced into it? why are we so upset about something that happened in the bedroom of someone.

swami uncle is not a paedophile nor he did not rape anyone - in fact it is sun tv that is showing this soft porn and corrupting innocent minds of people like us (lol) .. .paavai

Upcoming-anantha said...

Aen Swamigaloda Jattiyellam note pannirukeenga?

appdina...........rightu vidunga...

emohansydney said...

sun pictures proudly presents nithiyanandha in and as- தீராத விளையாட்டுப் பிள்ளை

சக்திவேல் விரு said...

சுவாமி கலக்கலா பேட்டி கொடுத்து இருக்கார் பார்த்தேளா .அவரு சமாதி நிலையில இருந்தாராம் ...? (அப்பவே இந்த போடுநா?)

என்னை பொறுத்தவரை சாமி செஞ்சதுல எந்த தப்பும் (I AM NOT MEAN THAT WHAT HE HAD DONE ON THE VEDIO) இல்ல . தப்பு செஞ்சது சிந்திக்க தெரியாத முட்டாள் ஆட்டு மன்தை
கும்பல் தான் (நானும் அதில் ஒருவன்). இவர்கள் தான் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் . சாமிஜி ஒரு போதும் தண்டிக்க படகூடாது.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

டுபுக்ஸ்,பதிவின் நகைச்சுவை நல்லா இருக்கு...

ஆனால் பல முற்போக்கு morons மாதிரியே நீங்களும் ரஞ்சிதா மேல தப்பு இல்லை;பொண்ணு ரொம்பப் பாவம் என்று பீஃலிங்ஸ் விடுவதுதான் சரியில்லை..

நித்யாவுக்கு தான் சாமியார் என்று ப்ரீச் செய்து கொண்டு இந்த வேலைகளில் ஈடுபடுகிறோமே என்று எந்த அளவுக்கு மனக்குத்தல் இருக்க வேண்டுமோ அதே அளவு ஒரு சாமியார் என்று அறியப்பட்டவனுடன் உறவுத் தொடர்பு வைத்துக் கொள்கிறோமே என்ற மனக்குத்தல் இருக்க வேண்டும்;அந்தப் பெண் ஏதாவது தொழிலதிபரிடம் இருந்து' இந்த மாதிரி வீடியோ வெளியாகி இருந்தால் யாரும் ஒன்றும் நிந்திக்கப் போவதில்லை..

She is equally accountable.

MyFriend said...

ஏன் இந்த கொலவெறி??? :-))))

Dubukku said...

டகிள் பாட்சா - வாங்க திருட்டு விசிடிங்கிறது பெயர் ரொம்ப சரியாத் தான் இருக்கு இதுக்கு :)))

ஜஸ்ட் அ ட்ராவலிங் சோல்ட்ஜர் - இந்த காலத்துல சாமியார்களுக்குத் தான் மவுஸு போல இருக்கு

அப்பாவி தங்கமணி - எத்தனை சாமியார் பாத்தாச்சு...இன்னமும் மக்கள் ஏன் இந்த சாமியார் பின்னாடி அலையறாங்கன்னு தெரியலை...:((( ம்ஹூம்ம்

பாலாஜி - ஆமாங்க நீங்க ஆஷ்ரமத்துலேர்ன்து பேசரீறீங்கன்னு சொன்ன உடனே எனக்கு கொஞ்சம் பயமாகிடிச்சு :)))) நீங்க வேற நாடகத்துல போலி சாமியார் வேஷம்லாம் போட்டிருக்கீங்க உன்க கிட்ட வெச்சுகலாமா..:))) உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

Dubukku said...

Paavai - vaanga romba naal aachu indha pakkam vandhu :) hope you are fine. Thanks for the healthy challenge..I agree with the cheap publicity which SunTV is portraying (playing every 30 mins or so..:) )

//why are we so upset about something that happened in the bedroom of someone. //

I would go with your argument if it was anyone else but Swamiji. Again had Nithyananda adapted little openness and had not preached bramachariyam etc etc including "Naan Kadavul" rubbish I think the public would have not cared. Had that happened, I bet 90% of his lot would have hesitated even to remotely associate themselves with the Ashram/Swami. It was pathetic that a lot of women (including here in the UK) were shocked to say the least by this video. One woman from Ashram even was defending on the interviews in the initial days Swami will come clean out of this controversy. While I had been here in the UK to their devotees meet (a friend requested amd invited us for Thangamani giving a barathanatyam dance performance in that bif function). All women were young and all of them were addressed witha "Maa" prefix to their names. Hence I feel Nithyananda has decieved his devotees so far. But If he still manages to keep his following there is nothing more to comment on this issue (except that my stand on human worship would be undetered) :))

அப்கமிங் அனந்தா - அண்ணாச்சி...தெய்வமே உங்க காலக் காட்டுங்க :))))))))))))))))))))

Dubukku said...

மோகன் - :))))))) கரெக்டான டைட்டிலு தான் :))

வேலுபையன் - எத்தனையோ சாமியார் வந்தாச்சு...சிட்பண்ட் கம்பெனி மாதிரி மக்களும் இன்னும் ஏமாந்துகிட்டு தான் இருக்காங்க...என்னத்த சொல்ல :))))

Dubukku said...

அறிவன் - வாங்க. உங்க கருத்துக்கு மிக்க நன்றி. நான் உங்கள் கருத்திலிருந்து வேறுபடுகிறேன். அந்த நடிகை விஷயம் அவரும் அவருடைய கணவரும் மட்டுமே சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விஷயம். இதில் கருத்து சொல்வதற்கு கூட (என்வரையில்) எனக்கு உடன்பாடு இல்லை. நீங்கள் கருத்து சொல்வது உங்கள் இஷ்டம்/ உரிமை. நீங்களும் என்னைப் போல் நினைக்கவேண்டும் என்று நான் எண்ணவும் இல்லை :)) (வார்த்தைகள் இங்கே புண்படுத்த நினைப்பது போல் இருந்தால் மன்னிக்கவும் அவை அந்த நோக்கத்தில் எழுதப்படவில்லை என்று புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன் sometime words do not reflect the tone or spirit intended :)) )

மைஃப்ரண்ட் - சும்மாத்தேன் :))

Anonymous said...

I am good, thanks for asking. I do blog sporadically though.

I completely agree with you that there is bound to be a sense of let down in people who are even remotely connected to him. My point is that we cant make a legal issue out of it since it is about two consenting adults.

I truly wonder if it is the deep rooted belief in the guru shishya parampara that pushes people to reach out to someone like this rather than depend on their inner reserves... Paavai

Porkodi (பொற்கொடி) said...

amama! adhan avare solitare "we have not done anything illegal" nu.. :) and apparently, he is now going into "silence healing"..! :))

Ashwin said...

The biggest culprits are Sun TV and Nakkeeran. If 2 people had cheap taste and kept it between themselves, what would we call some entities that decided to broadcast in prime media. Wont families with kids that endorsed this media be dissappointed?

Journalism in India is taking extremes with NDTVs on one side and SunTVs on the other..

I wish there is some social responsibility!

Raj said...

இவென் அவென் இல்லே ......

எனக்கு அன்பர் அஜினோ மோட்டோ வின் குண்டலினி–A சிறுகதை தான் நினைவுக்கு வருகிறது:
http://ajinomotto.posterous.com/a-3

//
"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்............. என் குஞ்சை யாருடா அமுக்குனது" ஓங்கார ஒலிக்கிடையே வாழ்க்கையை வெறுத்தவன் ஓங்கிக் கத்தினான்.

அவன் பின்னாலிருந்து ஒரு குரல் "முன்னாடி காவி டிரெஸ் போட்டுருக்காரே அவர கேளூ....."
//

Sathya said...

super comment

Anonymous said...

Who said it is not illegal? Actress Ranjitha denies that she has divorced her husband and says that there is no rift between them. If that is the case, then this relationship between the actress and nithyanand is clearly adultery. So this is illegal and both are punishable by law.

Anonymous said...

Nithya inimae "Kadhavai thira kaatru varattum" ezhudha koodaadhu..."Gillunnu kaathu! Jannala Saathu!" ezhudha aaramichidanum...

srikumar said...

sometimes i wonder how come there is no censorship in tv. some of the real life things we get to see in TV r a lot worse than whats seen in movies.

I also get the feeling that swamiji will get away with a 420 case or a prostitution case at max. i'm reminded of al capone case :-)

To think about this issue, this is not something which happens only in hinduism or its priests. It happens in christianity as well, not so sure of other religions. i guess as long as ppl need a crutch to hold onto in times of trouble, such ppl will always be around. There is no avoiding or sidestepping this issue or ppl becoming aware suddenly.

c'est la vie !!

கார்த்திகேயன் said...

நல்லாதானே போயிட்டு இருந்திங்க ஏன் திடிர்னு இந்த மாத்ரி மகா மொக்கை பதிவு, நாம ரூட்டே வேற தானே.வேணாம் விட்ருங்க அண்ணா.

Dubukku said...

Pavai - //I truly wonder if it is the deep rooted belief in the guru shishya parampara that pushes people to reach out to someone like this rather than depend on their inner reserves//

I sometimes feel the same, but I am on a strong belief that gone are those days of the true selfless gurus etc etc. Even if one of those selfless true Gurus are today I would have respect for them but may not worship still ...

Porkodi - //and apparently, he is now going into "silence healing"..! :))// :))) yes probly ;)

Ashwin - yes I am equally amazed that there is no control over these channels on the broadcasting standards. There is supposed to be a watchdog who should be monitoring on the content being telecasting. It was a free watch the soft porn with family on a prime time bonanza

ராஜா - :)))) கொஞ்சம் ஓப்பனாவே இருக்கு ஆனா நெத்தியலடித்த மாதிரி :))

Anonymous - Are you a lawyer :)) பயங்கரமா லீகல் பாயிண்ட பிடிக்கறீங்க...ஆனா எனக்கு குருஜி குருஜின்னு கண்மூடித்தனமா பணத்த கொட்டுகிற பக்த கோடிகளை நினைச்சா தான் வயித்தெரிச்சலா இருக்கு

Anony2 - //Nithya inimae "Kadhavai thira kaatru varattum" ezhudha koodaadhu..."Gillunnu kaathu! Jannala Saathu!" ezhudha aaramichidanum...// title soopera irukku ...:))

Srikumar - I share your views on censorship as in my reply to Ashwin above. Is there a watchdog for TV broadcasting in India? Also this issue is across religions and not just hinduism

Karthikeyan - //நல்லாதானே போயிட்டு இருந்திங்க ஏன் திடிர்னு இந்த மாத்ரி மகா மொக்கை பதிவு,// :))) உங்களுக்கு இது மொக்கையா தெரியுதா...:))

Partha said...

அசத்தல் ..நல்ல நடை ....

சுவாமிஜிக்கு மாமிஜி இப்போ தான் எண்ணெய் தேய்த்து கங்கா ஸ்நானம் செய்தார்கள் .கண்டு களித்தோம் .. You Tube வாழ்க ....

Partha said...

Sorry. கண்டு (முகம்) சுளித்தோம்ன்னு சொல்றது தான் சரி ... இப்போதாவது மக்கள் திருந்துவார்களா ?

அபி அப்பா said...

இதுடாண்டா டுபுக்கு!! அசத்தல் விமர்சனம்.

லங்கினி said...

Kalakkal.

chinathambi said...

சுவாமிஜி கதவை திற Police வரும்.
Nice comments...
http://chinathambi.blogspot.com

Naresh Nanda said...

U gaved a comment in my blog http://ekalevaanimationstudio.blogspot.com/
if u hav any free lance job in animation contact me 9962630769 this is my number free feel to talk

quadhirababil said...

LET'S RECOMMEND IT FOR OSCAR AWARD

tamil soriyan said...

சுவாமிஜி கடமையாற்றுவதற்கு முன் "ஜிங்ங்" என்று காலை மேலே தூக்கி ஒரு குதி குதித்து எழும்புகிறார் பாருங்கள்...அடடா என்னவென்று சொல்லுவது

SAMIJI ADUTHA PADATHULA UNGA DIALOG WRITER RA POTHA MOVIE SUPER HIT.. :)

ARUMAIYANA PATHIVU :)VAZTHUKKAL :)

Sh... said...

சொல்ல வார்த்தை இல்லை. கலக்கிட்டீங்க.

Post a Comment

Related Posts