Sunday, January 10, 2010

வயலின்

வயலின் இசை கேட்டிருக்கிறீர்களா? மனதை என்னவோ செய்யும். வயலின் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாளாய் ஆசை. நீரோ மன்னன் ரோம் பற்றிக் கொண்டு எரிந்த போது வயலின் வாசித்ததில் எனக்கு அப்படி ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. அந்த வாத்தியம் அப்படி, அதில் எழும் நாதம் அப்படி. இளையராஜா இசையில் வயலின் கேட்டிருக்கிறீர்களா? மனுஷன் பின்னிப் பெடெலெடுப்பார். இசை காது மடல் துடிக்க உள்ளே போய் நரம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும். ஹை டு நேம் இட் கேட்டிருக்கிறீர்களா? வயசுப் பெண்ணை வித விதமாய் கொஞ்சுவது மாதிரி இருக்கும். அனேகமாய் ராஜாவின் பேவரிட் வாத்தியம் வயலினாய் தான் இருக்கும். அதிலும் "மேட் மூட்.." டெய்லி கேட்டால் தான் எனக்கு நாளே ஆரம்பிக்கும். புகுந்து விளையாடி இருப்பார்.

எனக்கும் வயலின் கற்றுக் கொள்ளவேண்டும் என்று க்ளாஸ் சேர்ந்துவிட்டேன். மூன்றே பேர் தான் க்ளாசில். சௌகரியமாய் இருக்கிறது. 'ச.ரி.க.மா.'-வில் ஆரம்பித்திருக்கிறோம். அடுத்தது கட்டம் 'சரி சரி சரி கமா'. இரண்டாம் கட்ட வேகத்தில் வாசிக்கும் போது நுனி விரலில் கொஞ்சம் நரம்பு அறுக்கிறது. போகப் போக சரியாகிவிடும் என்று டீச்சர் சொல்லி இருக்கிறார். "உனக்காவது கொஞ்சம் விரல் தான் அறுக்கிறது நீ வாசித்தால் எங்களுக்கு கழுத்தே அறுந்து வந்துவிடும் போலிருக்கு"ன்னு கணேஷ் ஏகப்பட்ட ஊக்குவிப்பு. கணேஷ் என் ரூம்மேட். சுத்த ஞான சூன்யம். விவேகானந்தரை ஆராதித்து லோக தத்துவ விசாரங்களை விவாதிக்கும் எக்சப்ஷன் கேட்டகரி. எல்லாத்துக்கும் ஒரு விளக்கம் இருக்கும் கணேஷிடம். தெரியாவிட்டாலும் தேடி ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்து விவாதிக்கும் டைப். "விவேகானந்தருக்கு வயலின் பிடிக்குமா..?" என்ற கேள்விக்கு மட்டும் இன்று வரை பதில் இல்லை. ரொம்ப தொனத் தொனவென்றால் இந்தக் கேள்வியைத் தான் கேட்பேன். அப்படியே ஆஃப் ஆகிவிடுவான்.

லால்குடியின் "வல்லபா நாயகா" மனதை என்னவோ செய்யும். குன்னக்குடி "துன்பம் நேர்கையில்" கேட்டு நானும் ஒரு தரம் அது மாதிரி ரூமில் சாதகம் செய்து பார்த்தேன்.

"என்னடா எதாவது பாட்டு வாசிக்கிறீயா?"

"ஆமா 'துன்பம் நேர்கையில்'"

" கரெக்ட்டு தான் "

"சரியா வருதா..."

"நான் சிச்சுவேஷன சொன்னேன்.."

"நம்ம வாசிப்பு எப்படி இருக்கு.."

"கரெண்டு கம்பத்துல கோழி சிக்கிக்கிட்ட மாதிரி இருக்கு...நீ திருந்தவே மாட்டியா"

"போடா போய் நான் கேட்ட கேள்விக்கு பதிலக் கண்டுபிடிக்கிற வழியப் பாரு.." வயலின் வாசிப்பில் ஒரு நளினம் இருக்கு. அந்த டெக்னிக்கை மட்டும் கரெக்டா பிடிச்சிட்டோம்னா அவ்வளவு தான். ஒரு நாள் நானும் வல்லப நாயக்கா வாசிக்கத் தான் போறேன். சவால் விட்டிருக்கிறேன்.

கணேஷ் இரண்டு வாரம் பாண்டிச்சேரிக்கு அன்னை இல்லத்திற்கு போயிருந்தான். திரும்பி வந்தவனுக்கு ஷாக் ஆஃப் ஹிஸ் லைப்.

"டேய் இதென்ன கலாட்டா...அதுவும் ரெண்டு வார கேப்புல..."

"பாருடா இன்னும் மூனு வாரம் தான் அசந்தே போயிடுவ.."

"டேய் நான் அல்ரெடி அசந்தாச்சு... வயலின் எங்க..? இதென்ன புதுசா ப்ளூட்...? ரூம்ல மருந்துக்கு கூட வயலின் வாசனையே அடிக்கலையேடா...ஏதோ வல்லப நாயக வாசிக்கப் போறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே...என்னாச்சு..."

"இல்ல இனிமே ப்ளூட் தான்...நீ புல்லாங்குழல் இசை கேட்டதே இல்லையே..அதுவும் ஹரிப்பிரசாத் சௌரேஷ்ஷியான்னு ப்ளூட் மேதை வாசிச்சு கேட்டதில்லையே...மூனாவது ட்ரால அவரோட சி.டி ஒன்னு இருக்கு போடறேன் கேட்டு பாரு"

"வாட்...!!!"

"மனுஷன் தொன்னூறுகளிலேயே என்னமா வாச்சிச்சிருக்கார் தெரியுமா..."

"டேய்ய்ய்ய்ய்ய்!!!....வயலின் என்னாச்சு..?.வல்லப நாயக என்னாச்சு....? ஆன்சர் மீ !"

".....நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன்...உனக்கும் தான் தெரியுமே நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன்னு...எல்லாம் வேஸ்டாப் போச்சு...போன வாரம் போனா எனக்கு கல்யாணம் நிச்சியமாகிடிச்சுன்னு பத்திரிக்கை வைக்கிறாங்க டீச்சரம்மா...சே நான் முந்திக்கிறதுக்குள்ள எவனோ டெல்லி ம்யூசிக் காலேஜ் ப்ரொபசராம்...முந்திக்கிட்டான்...பார்த்துக்கிட்டே இரு இதே வல்லப நாயகவை ப்ளூட்டுல வாசிக்கிறேன்..."

"...!!!"

"இந்த தரம் தெளிவா கேட்டுட்டேன்...இவங்க பெங்காலி இன்னும் மூனு வருஷம் கழிச்சு தான் கல்யாணம்ன்னு தெளிவா இருக்காங்க... அதுக்குள்ள வல்ல்ப நாயகவை..."

"டேய் உனக்கு வெட்கமே இல்லையாடா..வாழ்க்கையில..ஒரு."

விவேகானந்தருக்கு ப்ளூட் பிடிக்குமான்னு கேட்டதற்க்கு அப்புறம் கணேஷ் என்னை தொந்தரவே செய்யவில்லை. ப்ளூட் ஒரு அற்புதமான வாத்தியம். ராத்திரி ஊரடங்கி ஓசையெல்லாம் ஒய்ந்த அப்புறம் ரூமில் ஒரு ஊதுபத்தி ஏத்திவிட்டு காதில் வாக்மேனை போட்டுக்கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ப்ளூட் இசை கேட்டுப் பாருங்கள்....சொக்கிப் போய்விடுவீர்கள். மனுஷன் பின்னிப் பெடெலெடுப்பார். இசை காது மடல் துடிக்க உள்ளே போய் நரம்பெல்லாம் அப்படியே ஜிவ்வுன்னு இருக்கும். அனேகமாய் ரஹ்மானின் பேவரிட் வாத்தியம் ப்ளூட்டாய்த் தான் இருக்கும்.

58 comments:

Porkodi (பொற்கொடி) said...

boniya? :P

Porkodi (பொற்கொடி) said...

sari adhan vadai vangiyache.. inime edhukku posta padikkanum? ;)

Porkodi (பொற்கொடி) said...

//அனேகமாய் ரஹ்மானின் பேவரிட் வாத்தியம் ப்ளூட்டாய்த் தான் இருக்கும். // rendu chinna video eduthutta periya mani ratnama nu nenapo?

//டேய் உனக்கு வெட்கமே இல்லையாடா..// sariyana vakiyam! ;)

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

உங்க மார்க் இல்லை பதிவில்..

சுஜாதா தன் இசை கற்றுக் கொண்ட அனுவங்களை ஒரு பத்தியில் எழுதி இருந்தார்...படிதிருக்கிறீர்களோ?

Vijay said...

நானும் மிருதங்கமெல்லாம் ஒரு காலத்தில் கற்றுக்கொண்டேன். ஒரு புண்ணியமும் இல்லை :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

போங்கப்பு..

தவறா நினச்சுக்காதீங்க
பதிவுல உங்க "டச்" இல்லை..

இன்னும் ஒயினடிச்சது இறங்கல போலிருக்கு..

ரோஸ்விக் said...

ஏண்ணே! அந்த கணேஷ் உங்ககிட்ட... அந்த டீச்சருக்கு விவேகானந்தரை புடிக்குமான்னு கேட்டு உங்களை மடக்காம இருக்காரே... அவரு ஞான சூனியம் தானோ?? :-))

அவங்க மூணு வருஷம் டயம் கொடுத்திருந்தாலும் நீங்க டக்குனு காரியத்தை முடிங்க. இல்லையின நீங்க புளூட்டு வச்சு மயக்குற நேரத்துல எவனும் புல்லட்டை வச்சு கடத்தீரப் போறாங்க. :-)

சிங்கக்குட்டி said...

நீரோ மன்னன் வாசித்தது யாழ் மக்கா...

நானும் பெரிய குன்னக்குடி இல்ல, அதுல வாசிக்க குச்சி இருக்காது, வயலின் வாசிக்க நார் கோர்த்த குச்சி இருக்கும், இது மட்டும் தான் தெரியும் :-)

இதுக்கு தான் ஒயின் மப்புல எங்கையாவது போக கூடாது.

sriram said...

இதுக்குத்தான் அப்பப்போ வந்து எதையாவது கிறுக்கிட்டு போகணும்.. இல்லன்னா இப்படித்தான் டச் விட்டுப் போயிடும், யார் யாரெல்லாம் ப்ளாக் ஆரம்பிச்சி இருக்காங்கன்னு பாத்து அதையே ஒரு பதிவா போடுற டெக்னிக்க அம்பியப் பாத்து கத்துக்கோஙக..

ஒரே பின்னூட்டத்தில டோட்டல் ஃபேமிலி டேமேஜ் - எப்படி என் சாமர்த்தியம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அறிவிலி said...

எனக்கும் உங்களுக்கும் தெரிஞ்ச ஒரு பதிவர் கீ போர்ட் கத்துக்கற முயற்சியில இற்ங்கியிருக்காருன்னு உளவுத்துறை மூலமா தகவல் வந்ததுது.

எதுக்கும் ஒரு எச்சரிக்கையா இருக்கட்டும்னுதான் சொன்னேன்.

:)))

குப்பன்.யாஹூ said...

இளையராஜா தபேலா (தாளக்கட்டில் மன்னன்) அதுதான் பல ஹிட்டுகளுக்கு காரணம் என சொல்லலாம்.

முத்து மணி மாலை, வாடி வெத்தலை பாகு மாத்திப்போம்...ரஹ்மான் கி போரில் கிங், ரஹ்மானும் தாளக்கட்டில் சிறப்பு.

Dubukku said...

Porkodi - //rendu chinna video eduthutta periya mani ratnama nu nenapo? //
I think you didn't get the point that this post is a fiction story and the "me" here is not really me. Have been wanting to say this for sometime now. To keep things healthy on our e-friendship, I think I should let you know that some of your comments about me (personally) and my appearance (FB) are a bit hurting. I would appreciate if we limit the critcisms to my blog personality and my posts. Negative comments on my blog posts are most welcome but please let that not hurt my real personality. Sorry I hate to say this in my blog where I am a very very light hearted and would have least preferred to say this. But after a few occurences, I think, I should explain how I feel about it to keep things healthy. I hope you would understand. Thanks.

Now about ManiRatnam - On a serious note - you never know I might become better than him and thats where I am eyeying too. :)))

அறிவன் - உங்கள் எதிர்பார்ப்புக்கு பதிவு இல்லை என்பதை தெரிவித்தற்கு மிக்க நன்றி. அடுத்த தரம் முயற்சி செய்கிறேன்.

விஜய் - ஹீ..ஹீ ....எனக்கு மிருதங்கம் வாசித்து தான் தங்கமணி கிடைத்தார்....:))))

பட்டாபட்டி - ஹலோ இதுக்கெல்லாம் தப்பாவே எடுத்துக்க மாட்டேங்க...தாராளமா துப்பலாம் :))

ரோஸ்விக் - //அந்த டீச்சருக்கு விவேகானந்தரை புடிக்குமான்னு கேட்டு உங்களை மடக்காம இருக்காரே// அட சூப்பரா மடக்குறீங்களே...நல்லவேளை கணேஷ் அந்த அளவு விவரம் இல்லை :))

சிங்கக்குட்டி - //நீரோ மன்னன் வாசித்தது யாழ் மக்கா// நாங்க படிச்ச போது பிடில்ன்னு சொன்னாங்க நானும் பிடில்ன்னா வயலின்னு நினைச்சேன்..இப்போ சிலபஸ மாத்திட்டாங்களா...:)) ஆனா யாழ் வாசிக்கிறதையும் பிடிலிங்குன்னு சொல்லக் கேட்டிருக்கேன்...நீங்க சொன்னது தான் கரெக்டா இருக்கலாம்.

ஸ்ரீராம் - அண்ணே டேமேஜ் பண்றதுக்கு உங்களுக்கு சொல்லியா தரனும்.:))))..நீங்க யாரு...கிங்குல்ல :))) :P இந்த மாதிரி குப்பை நிறைய முன்னமும் எழுதியிருக்கிறேன் :)))எனக்கு மனதுக்கு பிடித்ததை சும்மா கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் :))) என்னம்மோ இதுக்கு முன்னாடி எல்லாம் சுப்பர் போஸ்ட் மாதிரி சொல்றீங்களே

அறிவிலி - அடடா அப்படியா...அவங்க வீட்ல இந்த விஷயம் தெரியுமா...ஃபோனப் போட்டு சொல்லிடுவோம் :)))

குப்பன் - உண்மை. நான் சும்மா கதைக்காக அப்படி எழுதினேன். எனக்கு ஆனால் இளையராஜாவின் இசையில் வயலின் ரொம்பவே பிடிக்கும். ஏ.ஆர் ரஹ்மானின் தாளக்கட்டு சொல்லவும் வேண்டுமா மனுஷன் லெவல் காட்டுவார்...

The Print Lover said...

hahha. Sontha exerience vechu eluthina mathiru iruku :-P

Rams said...

Renga..Andha pazahaya flow varalai innum..Indha commentoda niruthikaren..adutha warning enakkunnu bayamaa irukku..

sriram said...

டுபுக்காரே...
தாங்கள் நல்ல போஸ்ட் போடும்போது முதலில் பாராட்டுபவனும் நானே, மொக்கை போடும்போதும் / அப்ஸ்காண்ட் ஆகும் போது கலாய்ப்பவனும் நானே (இங்க எல்லாமே இவர்தான் போலருக்கு ஒரு அசரீரி எனக்கு கேக்குது, உங்களுக்கு கேக்குதா?)

பிரசவம் கதை இன்னும் மனப்பாடமா நியாகம் இருக்கு, டிஷ் வாஷர், GPS போன்ற பதிவுகள் இன்னும் மனசை விட்டு அகல வில்லை.. அடிக்கடி எழுதுங்க.. ஒடனே மனநிலை, வானிலை எல்லாம் சரியா இருக்கணும், குவாலிடி / குவாண்டிடின்னு க்ளாஸ் எடுக்காதீங்க..

அப்புறம் பொற்கேடி நீங்க இதுக்கெல்லாம் அசர மாட்ட்டீங்கன்னு தெரியும், இப்போ விட்டா நானும் எப்போதான் கருத்து கந்தசாமி ஆகிறது - அண்ணன் டுபுக்கார் ஏதோ மூட் அவுட் போலிருக்கிறது, lets take his feedback in the right spirit and continue to encourage him to write more, after all, we all like his sense of humor and we all got the inspiration to scribble from him..
may be we can (need to) tone down our கலாய்த்தல்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..

ரஙகா - ஒரு விண்ணப்பம், நாளைக்கு (பொற்கேடி ஒரு வெட்டி ஆபிஸர்- கண்டிப்பா திரும்ப திரும்ப வந்து கமெண்ட்ஸ் படிப்பாங்க, நாளைக்குள்ள இதயும் படிப்பாங்க)
உங்க பதிலையும், என் இந்த பின்னூட்டத்தையும் தூக்கிடுங்க, இது நீங்கா வடுவாக இருக்க வேண்டாம்..

Porkodi (பொற்கொடி) said...

Sriram, ipove padichutten.. :) nijamave velai vetti iruku nu padikama irundhu irundha??? :O

Dubukku,

neenga thavaraga eduthukra madhri naan pesinen nu enaku uraikave illai idhu varaikkum! Am extremely sorry! Naan sollum podhe udanuku udan neenga solli irundha inum purinju irukumo enavo, but you have said that you waited for some time before pointing out. So, am very sorry again! If you are offended anytime, you can always delete it and email me or point out right there. I wouldnt take offence.

Also, you are not Sujatha or a nver-miss prolific writer, but, I agree with every line of Sriram. dhinamum unga blogla pudhu post vandhuruka nu check pannama thungradhu kidaiyadhu, which is not the case with any of the other blogs. So just like I feel I 'know' Sujatha, I got carried away that I 'know' Dubukku. Andha urimaila thaan pesiruppene thavira, never meant anything offensive.

Sriram, naan eniko expect pannen namma gummiku aapu varum nu.. :) 'cos the gummi does dilute the comments section and i myself am not very fond of it. my expectation was he would post more often if we overpower him in his blog (:D), i hope we did it in only kamidi mokkai posts and not in 'serious posts'. but naan dubukku feel panra madhri personally hurtinga enna eppo sonnen nu yosichutu irukken. btw, ungalaiyum edavadhu hurtinga solli irundha neengalum thapa eduthukadhinga, pls. point out, i will avoid that next time.

ama ipo enna vetti aapicer nu sonnadhuku naan hurt agalama koodadha? enna koduma saravanan! (ambi inneram sandhoshathula aatam potutu iruparu.. sari avarum evlo nalaiku thaan kaneer viduvar vengayam urichu..)

ada pavi rams, escape ayitingla? (innum neenga boston than enbadhu en nambikkai :P)

sari romba seriousa ezhuditen, kilambaren!

Porkodi (பொற்கொடி) said...

hmmmm... naanum mudinja varai thiruppi poi naan pesinadhu ellam pathen, ipovum where did i hurt nu purialai. aprama ungluku time irundha/ gnabagam irundha ennanu oru email pannunga. will be helpful for me.

Sriram, am very happy to find that you have echoed exactly the same that I wanted to convey. Collegela ore nerathula ore madhri pesina, jinxed nu solli gift kudukkanum.. "jinxed"!

Mahesh said...

வயலின் இசை கேட்டா கடலை நல்ல சாகுபடி ஆகுமாமே? அப்பிடியா?

அறிவிலி சொல்றதை நம்பாதீங்க :)))

இன்னும் நம்ம வீட்டுப்பக்கம் வரக்காணோம்.... எம்5ல சொல்லணுமா?

Anonymous said...

hi porkodi,
i think the way you handled the comments from dubukku has been exceptional. in some sense, dubukku is also responsible for what he has brought it for himself. beyond everything, i think he has been my favourite author for quite some time now. sujatha or no sujatha, mani or no mani, it doesn't matter, if he does make a movie, he'll find one loyal fan :-)

சிங்கக்குட்டி said...

//இப்போ சிலபஸ மாத்திட்டாங்களா...:)) //

இது...இதுதான் டுபுக்கு :-)

sriram said...

பொற்கொடி மேடம் (This one is from the bottom of my heart)- as one அனானி pointed out, the way you handled Ranga's feedback is exceptional - shows that you have a matured head placed firmly on your shoulder, not sure as how I would have reacted if I had to hear that- Hats off to you.

அமாவாசை சோறு ஒரு நாளைக்குத்தான், அது போலத்தான் மேடமெல்லாம், எனக்கும் அம்பிக்கும் நீங்க என்னிக்குமே பொற்கேடிதான்..
அப்புறம், ஓவர் செண்டி ஒடம்புக்கு ஆகாது, என்னை எவ்வளவு கலாய்ச்சாலும் நான் தாங்குவேன், கவலை வேண்டாம், தங்கள் சேவையை தொடருங்கள்.. jinxed சொல்லிட்டீங்க, Gift அனுப்புவீங்கதானே? தனிமடல் எழுதுங்க, அட்ரஸ் தர்றேன்.

ரங்கா, Now its your turn to reciprocate, I would request you to delete all these comments and move forward...

கடைசியாக ஒண்ணு சொல்லி என் சிற்றுரையை முடிக்கிறேன், ராம்ஸ் வேற நான் வேற, அவர் இருப்பது கனக்டிகட், நான் இருப்பது Massachusetts. ரெண்டு பேரிலும் ராம் இருக்கிறது, இருவரும் வசிப்பது நியூ இங்கிலாந்தில், அவ்வளவே..
ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்பா யாராவது சோடா குடுங்கப்பா

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Rams said...

Thanks for the clarification Sriram..As you rightly mentioned lets get this over with..Renga..Hope you agree..If so please respond and delete these comments after sometime..arasiyal vaazhkaila idhellaam sagajam appaa..potruvaar potralum thootruvaar thootralum pogattum kannanukke..(thathuvam thathuvam..Dei Ramsuu..eppadi daa idhellam..ennamo podaa)

Rams said...

appuram..Yaaru indha Kannan..please give his email id appadinnu ketta pechu ellaam pesa koodhaadhu..if u still insist send email to Lord.Krishna@Gokulam.com.

JustATravellingSoldier said...

Dubukku sir,
How to name it -- unforgettable
Flute from ARR -- fantastic
also add to the list
Sax from Kathiri. :)

Naanum thaan key board vasikka try panninaen. Ennala mudinchathu 123 123 1 2 3 thaan. Athukke en ponnu ( 4 years ) avaloda toy key boarda thirumbi vaangitta. :(

Dubukku said...

பொற்கொடி - Firstly, thanks for your response and I sincerely hope you would understand that wrote that comment out of good will on our e-friendship. நான் ஆங்கிலத்தில் அடித்த கமெண்டும்

கோபத்தினாலோ மன உளைச்சலினாலோ அல்ல. உங்களின் சில கமெண்டுகள் என்னது தன்மானத்தை லேசாக உரசுகின்றன, அதை உங்களுக்குத் தெரிவித்தால் அதை நாம் தவிர்கலாமே என்ற எண்ணத்தில் ப்ரெண்ட்லியாகத் தான் கமெண்டி

இருக்கிறேன். நீங்கள் என்னை காயப்படுத்தும் எண்ணத்தோடு இந்த கமெண்டுகளை போடவில்லை என்பதும் எனக்கு மிக நன்றாக தெரியும். Thats why I thought I should atleast let you know so as you can avoid them in the

future.

Now I owe a very big explanation about what rubbed my self esteem. இதை நான் உங்களுக்கு தனிபட்ட மெயிலில் அடிக்க எண்ணி இருந்தேன் ஆனால் எனது தனிப்பட்ட லாபம் கருதி with other comments (so as anyone reading this chain

can atleast know where it might rub my selfesteem)இங்கேயே விளக்குகிறேன்.

எனது டுபுக்கு ப்ளாகில் நான் போடுவது கோமாளி வேஷம். எல்லா கோமாளிகளைப் போலவே இங்கே எனக்கு மானம் வெட்கம் சூடு சுரணை இல்லாமல் நான் பெரும்பாலும் என்னையே எள்ளி நகையாடி கேலிக்கூத்துக்குள்ளாக்குகிறேன். உதாரணத்திற்கு

நான் என்னை உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி சொல்லிக் கொள்வெதெல்லாம் காமெடிக்கு. அதைக் கேட்டு நாலு பேர் வெகுண்டு என்னை கேலிசெய்வார்கள் என்பது எனக்கு மிக நன்றாகத் தெரியும் and to be precise thats what

exactly I ask for. But I ask for that in that context and take absolutely no offense on whatso ever comment recieved on those.
நீங்கள் பேஸ்புக்கில் என் மனைவியிடம் தமிழ் சினிமாவில் தான் டுபுக்கான ஆள் ப்ரபோஸ் செய்தால் ஒத்துக்கொள்வார்கள் நீங்களுமா இவரை போய் அப்படி ஒத்துக்கொண்டீர்கள் என்று கேட்டது எனக்கு கொஞ்சம் உரசியது. That was totally out

of context in a different forum. நீங்கள் என்னை அங்கிள் என்றும் நான் பதிலுக்கு உங்களை ஆன்ட்டி என்று கூப்பிட்டாலும் எனது ப்ளாக் அல்லாத ஒரு கான்டக்ஸ்டில் எனது சோஷியல் சர்கிள் மற்றும் எனது ப்ளாக் பற்றி தெரியாத நண்பர்

வட்டத்தில் அதைக் கேட்ட போது எனக்குத் தன்மானம் உரசியது உண்மை. ஆனால் அதிலும் கோபம் எல்லாம் வரவில்லை.bcos I know your general kalasals. (கோவமாயிருந்தால் உங்களுக்கு தனி ஈ.மெயில் அடித்திருப்பேன்).


இந்தப் பதிவில் என்னை உரசியது "ரெண்டு சின்ன வீடியோ எடுத்தவுடன் மனசுல பெரிய மணிரத்னம்ன்னு நினைப்பா" கமெண்டும் அடுத்த //டேய் உனக்கு வெட்கமே இல்லையாடா..// sariyana vakiyam! ;) கமெண்டும் தான். இதை நீங்கள்

வழக்கமான கலாய்க்கும் தொனியில் தான் சொல்லி இருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும் ஆனால் நான் எங்கயுமே என்னை மணிரத்னம் என்றோ சுஜாதா என்றோ சொல்லிக்கொள்ளவேஇல்லை.(எனது வீடியோக்கள் எனது பொக்கிஷம் என்பது வேறு

விஷயம்) and because this comment was not again not in the context of the post, I felt a bit rubbed on my self esteem . நீங்கள் எதுவுமே சொல்லாமல் வேறு ஏதோ பேசிக்கொண்டிருக்கும் போது "உங்களுக்கு

என்ன மனசுல பெரிய ஐஸ்வர்யாராய்ன்னு நினைப்பா"ன்னு யாராவது சம்பந்தமே இல்லாமல் கேட்டால் எப்படி கொஞ்சம் உரசுமோ அதே போல் தான். Another reason is My shortfilms are not in the context of comedy pls. I am

a serious player on that front and I intend to be directing a film this year or next year. Again even here You have every right to comment on my films that they are no good but pls not

about my aspirations.


Having said all these நீங்கள் சொன்னது எதுவுமே தவறே இல்லை. நாம் ஒருவரை ஒருவர் ஓட்டிக்கொண்டு தான் இருக்கிறோம் அந்த ஸ்பிரிட்டில் தான் சொன்னீர்கள் என்பது எனக்கு மிக மிக நன்றாகத் தெரியும். ஆனால் உங்களில் சில அவுட் ஆப் காண்டெக்ஸ்ட் வரிகள் என் தன்மானத்தை லேசாக உரசுகின்றன வேண்டாமே ப்ளீஸ் என்பதை உஙகளுக்குத் தெரிவித்தால் ஃப்யூச்சரில் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையை தவிர்கலாமே என்ற நல்லெண்ணத்தில் தான் , "நீங்கள் முன்னமே சொல்லி இருக்கலாமே" என்று நீங்கள் சொன்ன அதே விஷயத்தைத் தான் நான் எனது முதல் பதிலில் செய்திருக்கிறேன். மற்றபடி உங்களை காயப்படுத்தவோ அல்லது கோபத்தில் அடித்த பதிலோ அல்லவே அல்ல. I totally mean no offense or have taken none from your comments. I just have given an explanations on which trips me occasionally purely to avoid in future. I am sorry if my earlier comment had upset you without this explanation.

Dubukku said...

ஸ்ரீராம் - அண்ணாச்சி...நீங்க கலாய்க்கிறதெல்லாம் நான் ஒன்னுமே சொல்லிலியே..நீங்க நல்லெண்ணத்தோட கருத்து கந்தசாமி ஆகியது மிக்க மகிழ்ச்சி. ஆனால் அதே உரிமையில் நான் ஒன்று சொன்னால் தவறாக நினையாதீர்கள் ப்ளீஸ். எனது முதல் பதிலை படித்துப் பாருங்கள் நான் கோபத்திலோ வருத்ததிலோ அடித்தது அல்ல.. Just to avoid some future uneasiness its just a safety precaution on a very friendly tone to Porkodi. Thats it. சில சமயம் சமாதானம் செய்யும் போது விஷயம் ஊதி பெரிதாகிவிட வாய்ப்பிருக்கிறது. உங்கள் நல்லெண்ணம் எனக்கு மிக நன்றாகத் தெரியும் ஆனால் இதையும் யோசித்துப் பாருங்கள்.யோவ் எனக்கு ஆபிஸில ப்ளாக் பார்க்க முடியாதுய்யா...அதுக்குள்ள நீங்க வேற ரிப்ளை போட்டு ப்ரஷர் எடுத்துக்கிட்டு :)))))

இந்த ஆரோக்கியமான கருத்துப் பரிமாறுதலில் தவறு ஏதும் இருப்பதாக எனக்கு எதுவும் படவில்லை. இங்கு மெட்டி ஒலி ரேஞ்சுக்கு செண்டி படம் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இதை டிலீட் செய்து செய்து இங்கு என்னம்மோ பெரிய சர்ச்சை நடந்தது மாதிரி காட்டிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. தவறாய் நினையாதீரகள். But I totally agree lets not get bogged by this and lets move forward. (munnadi thane :))) )

Dubukku said...

அனானி - ஆஹா....உங்க பாராட்டுக்கு ரொம்ப நன்றி மேடம். அதுவும் அந்த படம் பார்க்க ஒரு ஆள் இருக்கேன்னு சொன்னீங்களே..புல்லரிச்சிடிச்சி போங்க இந்த வருஷமோ அடுத்த வருஷமோ கண்டிப்பா படம் எடுக்கறதா இருக்கேன் (உங்களையெல்லாம் நம்பித்தான் :))) )

மகேஷ் - இதோ வந்துகிட்டே இருக்கேன் தல...இதுக்கெல்லாம் எம்.ஐ.5வ...அப்புறம் கீ போர்ட் க்ளாஸ்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு?:))))

ராம்ஸ் - உங்க முதல் கமெண்டு பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சேன்...என்னாம்மா எஸ்ஸான தல...எஸ்ஸாறது எப்படின்னு உங்ககிட்ட தான் கத்துக்கனும் :)))))))

மக்களே - மற்றபடி இந்த கும்மி ஜெனரல் கலாய்த்தல் நீங்க போடற போஸ்ட் நீங்க எழுதறது சுத்த வேஸ்டு, தூ இதெல்லாம் ஒரு போஸ்டா இதுக்கு நாலு நயந்தாரா படத்த போட்டிருக்கலாம் போன்ற உங்கள் அபிமான கமெண்டுகள் போடுவதற்கெல்லாம் தயங்கவே தயங்காதீர்கள்.

Dubukku said...

பொற்கொடி - நீங்களும் இதுக்காக எல்லாம் கமெண்டு போடறத நிப்பாட்டிடாதீங்க...அப்புறம் கல்லால வர்ற ஒன்னு ரெண்டு கமெண்ட்டும் வராம போயிடும். நீங்க நாலஞ்சு கமெண்டு போடற வள்ளல் வேற,,,பார்த்து பண்ணுங்க தாயி

Porkodi (பொற்கொடி) said...

Thanks for the detailed reply Dubukku! I emailed you, periiiiya email.. onum illa, adhe sorry thaan konjam virivaa.. :)

comment remove panna ellam onum illai, i agree. in fact, pinnadi evanavadhu idhe madhri vandha, naan anikke 4 comment la 400 varthai pottu explain pannen paaruda nu stats kudukalam..

comment podradha nirutha poren nu naan sollve illaiye?

// மற்றபடி இந்த கும்மி ஜெனரல் கலாய்த்தல் நீங்க போடற போஸ்ட் நீங்க எழுதறது சுத்த வேஸ்டு, தூ இதெல்லாம் ஒரு போஸ்டா இதுக்கு நாலு நயந்தாரா படத்த போட்டிருக்கலாம் போன்ற உங்கள் அபிமான கமெண்டுகள் போடுவதற்கெல்லாம் தயங்கவே தயங்காதீர்கள்.// - nakkalu? dai evanavadhu solluvinga vaaya thorandhu?

just kidding, i will still make fun of your posts, but adhu epdi to stop before i make fun of you nu inime thaan yosikkanum... sabbbaa indha kutti moolaiku evlo velai da saami..

boston ku enna kavalai na, ungalai yaarum thavaraga ninaithu vida koodadhu.. adhukaga avar kavalai padra alavu neengalo unga thanguvo kooda kavalai pada matinga! parunga unglukuga evlo urugaranga nu.. kuduthu vecha asami.

Porkodi (பொற்கொடி) said...

//இதை டிலீட் செய்து செய்து இங்கு என்னம்மோ பெரிய சர்ச்சை நடந்தது மாதிரி காட்டிக்கொள்வதில் //

aahaa.. boss naan idhu varaikum oru log ulaga sarchaila kooda sikkinadhu illa.. ellathulayum audience thaan. idhu konjam safe'ana case a irukku.. please.. neenga first indha comments delete pannunga, apram naan oru padhivu podaren, neenga oru edhir padhivu, boston oru jingchak padhivu.. kalakkala irukkum boss.. apram "namalum rowdy thaan"! :P

துபாய் ராஜா said...

அடுத்தது தேவாவா..... :))

Dubukku said...

பொற்கொடி - தேவர் மகன் ரேவதி பாணியில் "ஐய சாமி நீங்க ஏன் சாரி...நாந்தேன் சாரி.." ***இந்த இடத்துல நம்ம பாஸ்டன் அண்ணாச்சி டயலாக்கு கொஞ்சம் கேப் குடுக்கனும் ****
இருந்தாலும் அந்த தனிப் பதிவு, பதில் பதிவு, ஜிங்க்சக் பதிவு - உங்க ஐடியா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனா இந்த ஜிங்க்சக் பதிவ நம்ம கந்தசாமிக்கு குடுத்தீங்கண்ணு தான் புரியல இதுல ஏதாவது உள்குத்து உண்டா?ட்ராவலிங் சோல்ஜர் - கத்ரியோட சாக்ஸ் ஆமாம் முற்றிலும் உண்மை. உங்க கீப்போர்ட் திறமை என்னை மெய்சிலிர்க்க வைக்குது :)))

துபாய் ராஜா - ஆமாம்...அப்புறம் யுவன் சங்கர் ராஜா..அப்பிடியே போய்கிட்டே இருக்கவேண்டி தானே

Porkodi (பொற்கொடி) said...

bosston bosston! neenga ivar pecha kekkadhinga..! naanum ivarum thaan "sandai" neenga samadhana kodi veesinadhala neenga jingchak thavira oru ulkuthum illa.. venumna neengalum oru "sandai" arambinga apo dubukku jingchak agiduvar.. sari thane?

sriram said...

அலோ அலோ மைக் டெஸ்டிங்... என்ன நடக்குது இங்க?? For a Change (சில்லறை காசுக்காக இல்லீங்க,ஒரு வித்தியாசத்துக்கு) இன்னிக்கி ஆபிஸ்ல ஒரே ஆணி, இந்த பக்கமே வரமுடியல, அதுக்குள்ள, என்னிய வெச்சி ஒரு படமே எடுத்து முடிச்சிட்டீங்க... நான் என்ன ஜிங்சாக் பதிவரா???
ரெண்டு பேரும் எப்படியோ முட்டிக்கோங்க, எனக்கு என்ன வந்திச்சின்னு போயிருக்கணும், மூக்க நொழச்சதுக்கு ஜிங்சாக் பட்டம் தந்ததுக்கு நன்றி,,,
நல்லா இருங்கடேய்ய்ய்ய்ய்...
ராம்ஸ் நீங்க கூட என் சப்போர்ட்டுக்கு வரவில்லையே....
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

///இதை டிலீட் செய்து செய்து இங்கு என்னம்மோ பெரிய சர்ச்சை நடந்தது மாதிரி காட்டிக்கொள்வதில் ///
என்னது காட்டிக் கொள்வதிலா?? அப்போ இங்க சண்ட எதுவும் இல்லயா?? வட போச்சா?? ஏதோ பிரச்சனை இருக்கு, பஞ்சாயத்து பண்ணி நாமும் நாட்டாமை ஆகிடலாம்னு நான் நெனச்சது எல்லாம் வீணாப் போச்சா.. அவ்வ்வ்வ்....
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

maari maari soda kudichu pesardhula oru important point me the forgot:

maniratnam nu nenapa nu kettadhu, neenga unga sondha kadhaiya thaan ezhudharinga, adhula rahman pathi in and out therinja madhri dialogues varudhe, valarthu vitta mani ratnam nu nenapo? nu adichurukkanum.. apdi adichurundha innum 4 adi kooda vizhundurkuma illa kurainjurkuma? enna koduma sir idhu? kadhakalatchebam nu label onna pakkadha kutrathukku ivlo periya rounda..? sssshabbbaaa.. ama indha koothula ambi enga kanom?

apram, Rams, neenga epdi correcta "Renga" nu spell panringa? apo Duukku must know Rams? enna koduma sir idhu? idlivadaiya kooda kandu pidikkalam Rams yaru nu puriya matengudhe..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

யப்பா,கதை வசனம் ஒன்னும் பிரியலை...ஆனா இரண்டு வேண்டுகோள்கள் மட்டும்...

பாஸ்டன் ஸ்ரீராம்க்கு பொற்கொடி மேல என்ன கோபமோ தெரியலை,ரெண்டு மூணு எடத்துல 'கேடி' ஆக்கிட்டார்;பின்னூட்ட அக்கப்போர் வேற நடக்குதா,யாராவது நிஜமாவே அம்மணி கேடி'ன்னு நினைச்சுக்கப் போறாங்க..ஸ்ரீராம்..வேண்டாம்..

அப்புறம் பொற்கொடி'யம்மா..ஒண்ணு தமிழ்ல டைப்புங்க...இல்ல ஆங்கிலத்துல டைப்புங்க..ஆனா இப்படி தமிழ ஆங்கிலத்துல டைப்பாதீங்க..படிக்க தாவு தீருது..

நன்னி,ரெண்டு பேருக்கும்!

Porkodi (பொற்கொடி) said...

Arivan, I like your innocence, pls. join my akila ulaga appavigal munnetra kazhagam. :))

Dubukku, Bosston - all listen - here afterwards, me not commenting. No software installs in office box.. but i too want vadai no? so in hungry, i am coming and posting in thanglish, everybody is asking kostins about the same. how many times to answer? no more comments, no more thanglish. :)))

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

{Arivan, I like your innocence, pls. join my akila ulaga appavigal munnetra kazhagam. :))}

சை,ரொம்ப புகழறீங்க..வெக்கமா இருக்குது !

அப்புறம்,அந்த அ.உ.அ.மு.க எங்கேன்னு சொல்லுங்க..சேர்ந்திருவோம் !

{everybody is asking kostins about the same. how many times to answer?}
சொன்னேனே,கதை வசனம் பிரியலன்னு..டுபுக்கு பதிவயே நான் இரண்டு வாரமாகத்தான் படிக்கிறேன்..அப்புறம் எப்படி?

{no more thanglish. :)))}

ஆங்ங்..இது நல்ல பிள்ளைக்கு அழகு....

மென் பொருள் நிறுவ அலுவலக கணனியில் வழி இல்லையென்றால்,ரீஜனல் செட்டிங்ஸ்ல் மொழித் தேர்வில் தமிழை(யும்) தேரந்தெடுத்தால் தமிழையும் தேர்ந்தெடுத்து உபயோகிக்க முடியும்;ஆனால் டாம்99 விசைப்பலகைதான் வரும்,தமிங்கில விசைப்பலகை வராது.

இல்லை,இன்னொரு வழி,நான் பெரிய பிஸ்த்து என்று அலுவலக சிஸ்டம் அட்மினை நம்ப வைத்து லோக்கல் அட்மின் உரிமைகளை வாங்குவது!

{no more comments,}
ஆனால் இது தப்பாச்சே...

அப்புறம் டுபுக்கு..வீடீயோ பத்தி ரொம்ப நேசமுடன் பேசுகிறீர்களே..அவையெல்லாம் பார்வைக்கு கிடைக்குமா? இணையத்தில் எங்கே..?

Porkodi (பொற்கொடி) said...

என்னாது லோகல் அட்மினா ஆகணுமா?? நான் அட்மின் தான் என் பாக்ஸுக்கு.. ஆனா பாருங்க அது ஒரு பெரிய சோகக் கதை. நான் இருக்கற கொம்பெனில வெளியிடுற விஷயம் ரொம்ப அத்தியாவசமானது மாதிரி ஒரு சீனு (Seenu இல்லைங்க scene.. பாருங்க இங்கிலீஷையும் தமிழில் எழுத முடியலை..) இதனால OS, IE தவிர வேற எதுவும் வெச்சுருக்கறது இல்ல.. அப்புறம் எதுல bug எதுல mugனு எப்படி தெரிஞ்சுக்கறது.. அதுக்கு தான் பண்ணுறது இல்ல. வீட்டுக்கு வந்து இப்படி சாவகாசமா அடிக்கலாம்னா பஞ்சாயத்து தீர்ப்புனு நேரம் ஓடிடுது.. ஒரு காலத்துல தமிழ்ல தாங்க கிறுக்கிட்டு இருந்தேன்.. எல்லாம் உங்க நல்ல நேரம்.. :)

டுபுக்கு எந்த நேரத்துல பதிவ போட்டாரோ நான் பாட்டுக்கு கட்சி தலை(வலி)வி ரேஞ்சுக்கு பேசிக்கிட்டே இருக்கேன் நேத்துலருந்து.. எனக்கும் ஒரு சோடா உடைங்கப்பா..

சரி இவ்வளவு பேசினதுக்கு எதுனாச்சும் நடக்க போவுதா இல்லியா? அதான் பதிவு - எதிர் பதிவு - எதிரெதிர் கவுஜ - ஜிங்சக் பதிவு.. யாரெல்லாம் ஆட்டத்துக்கு வர்றீங்க, என்ன ரோல் எடுத்துக்க போறீங்க, கால்சீட் எவ்ளோனு பேசிடுவோம் இப்போவே.. ஒரு 2 வாரம் கழிச்சு எல்லாரும் ஒரு சைடு எடுத்து பதிவு போட்ட பிறகு, எல்லாம் சும்மா லுலுலாயிக்குனு சொல்லி கடுப்பேத்திக்கலாம்..

sriram said...

அதானே பாத்தேன், கேடியாவது கமெண்ட் போடாம இருக்கறதாவது? மண்ட வெடிச்சிடாது? மண்ட வெடிக்கறதப் பத்தி கூட கவலைப் பட மாட்டாங்க, அப்போ உள்ள மூளை இல்லாத்து உலகத்துக்கு தெரிஞ்சிடுமேன்னு கவலைப் படுவாங்க..

அறிவன் : கேடி மேட்டர் பத்தி தெரிஞ்சிக்கணும்னா bostonsriram.blogspot.com மற்றும் ammanchi.blogspot.com மொத்தமா படிக்கணும், ஸ்ஸ்ஸப்ப்பா கடைக்கு ஆளுங்கள வர வெக்குறதுக்கு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்...

Anonymous said...

யக்கா நீங்க பொற்கொடியா இல்ல போர்கொடியா ?

Rams said...

My god..The comments section here has become more popular than the actual blog itself..

Porkodi, Enna kandu pidikka avalavu aarvamaa..thedikitte irunga..

Sriram, idhenaal naan therivapathu ennavendral ennudaya aadharavu ungalukku endrum undu..

Dubukks, Porkodi kitta namma nexus pathi marandhu kooda sollidadheenga (ahaa..naanaa dhaan ularitenaa..AAAvvvvvv)

Porkodi (பொற்கொடி) said...

என்னாங்கடா இது.. இதுக்கு மேல பேசக் கூடாதுனு நினைச்சாலும் விடாது கறுப்பு மாதிரி துரத்திக்கிட்டே வருது..

பாஸ்டன்: நான் தான் மேலேயே சொல்லிருக்கேனே எனக்கு சின்ன/பிஞ்சு மூளைனு, அப்புறம் நீங்க வேற எதுக்கு ஜிங்சக்? :P

அனானி2: நீங்க அம்பியா இல்ல கீதா பாட்டியா? அதுவும் அவங்க சூட்டின பேரு தான். எமக்கு பல திருநாமங்கள் உண்டு.. :))

ராம்ஸ், அது என்ன அடிக்கடி யாராவது ஒருத்தர் வந்து ப்ளாகை விட கமெண்ட்ஸ் பாப்புலரா இருக்குனு சொல்லிட்டு போறீங்க?? எந்த stats அடிப்படைல இந்த அறிவிப்புனு சொல்லுங்க, நானும் தெரிஞ்சுக்குறேன்..!

சரி நான் ஆணி புடுங்கிட்டு வரேன்.. என்ன ஒரு 45 கமெண்ட்ல 12- 13 கமெண்ட் என்னோடதா இருக்கும்.. கொஞ்சம் பாத்து போட்டு குடுங்க டுபுக்கு..

Dubukku said...

ஸ்ரீராம் - கந்தசாமி அண்ணாச்சி ஒன்னும் கோவமில்லையே நான் சொன்னது பற்றி. என்றும் அன்புடன் நீங்க அப்படியே கலாய்ச்சிக்கினு இருக்குனும் அது தான் நாம வேண்டுவது :)))

பொற்கொடி - எப்பா...எனக்கு ஒரு நீளமான பின்னூட்டம் போடவே கண்ணக் கட்டிடிச்சு,.....உங்க எனர்ஜி லெவல் என்னை மெய்சிலிர்க்க வைக்குது :))) கலக்குங்க.

அறிவன் - ஜோதில வந்து ஐய்க்கியமானதுக்கு ரொம்ப நன்றி

அனானி - சந்தடி சாக்குல ஊசிப் பட்டாசை வீசுறீங்களேயா

ராம்ஸ் - நான் சொல்லவே இல்லையே :)))

Anonymous said...

athaaane...

தூ இதெல்லாம் ஒரு போஸ்டா இதுக்கு நாலு நயந்தாரா படத்த போட்டிருக்கலாம்

பாலா said...

யோவ்...

தமிழ் ப்லாகில, தமிழ்ல அடிங்கய்யா...!!

எழுத்துக் கூட்டி படிக்கறதுக்குள்ள தாவு தீருது.

பாலா said...

எதுக்கும் கொஞ்சம் ஸ்மைலி போட்டுக்கறேன்.

:) :) :) :) :) :) :) :)

Porkodi (பொற்கொடி) said...

ஆலிவுட்டு! அது எப்படி சைனாக்காரன் தமிழ் ப்லாக்ல வந்து சைனீஸ்ல பேசலாம் நாங்க தங்கிலீஷ்ல பேச கூடாதா?

"என்றும் அன்புடன்",
ஒண்ணுத்துக்கும் வழி இல்லாமல் பொட்டி தட்டுவோர் சங்கம்.

Porkodi (பொற்கொடி) said...

50! bubye! :)

பாலா said...

ஏங்க... ஆங்கிலத்தை... 'இங்லீசு’-ன்னு அடிங்க வேணாங்கலை.

ஆனா கருமம்.. இந்த தமிழை...

‘nee en yaa ippadi pannure. eei nee summaa iru. kaiya kattu. vaaya poththu'

- ன்னு எழுதினாதான் பத்திகிட்டு வருது.

சண்டை போடுறீங்கன்னா.. தெளிவாக... எங்களுக்கு புரியற மாதிரி சண்டை போடுங்க. அப்பத்தானே... நாங்க படிச்சி பஞ்சாயத்து சொல்ல வசதியாயிருக்கும்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

டுபுக்கு சார்....
ஒரு வழியா பிச்சர் ட்யூப் போன டீவி-ல ஜாக்கிஜான் படம் பாத்த பீலிங் வந்துருச்சு..


அடுத்த பதிவைப் போடுங்க..
ஓ.கே.. ரைட்டு.. ஸ்டார்ட் மீஜிக்...

Anonymous said...

"டேய்ய்ய்ய்ய்ய்!!!....வயலின் என்னாச்சு..?.வல்லப நாயக என்னாச்சு....? ஆன்சர் மீ !"

".....நானும் எவ்வளவோ ட்ரை பண்ணிப் பார்த்தேன்...உனக்கும் தான் தெரியுமே நான் எவ்வளவு கஷ்டப் பட்டேன்னு...எல்லாம் வேஸ்டாப் போச்சு...

reminded me of my guitar class !! till i read the following lines at least :-)

லங்கினி said...

Unga 'vayalin'! post kuduthha thembula naan Hindustani music class sendhu irukken.. carnatic music -lam poye pochu..
ippadiye motivate pannuga...yenakku guitar,keyboard-lam kathukka micham irukku..
btw unga post-lam office-la padikkave mudiyalai..satthama siricha kevalama pakkaranga..

mohan kumar said...

this is my first visit to the blog..... i really find it interesting ,both the posts and comments........ keep rocking:)

shubakutty said...

அட செல்லங்களா, அடிச்சிக்காதீங்கள், i over came all my upsets and frustrations by reading both the posts and comments. i always want to be as a proud participant of dubukku blog.am suggesting it to many.இப்ப தான் வந்திருக்கார் டுபுக்கு . வெரடீரதீங்கப்பு.

SurveySan said...

யாரோ தப்பா சொல்லியிருக்காங்க உங்களுக்கு, ராசாவி ஃபேவரைட் இன்ஸ்ட்ரூமெண்ட்டு, கிட்டாரு.

http://surveysan.blogspot.com/2008/04/blog-post_03.html

Anonymous said...

ரொம்ப லேட்டா வந்திருக்கேன், ஆனாலும் பரவாயில்லை, நல்ல வேளை இந்த ப்ளாக்கை கண்டு பிடிச்சேன். தமிழ்ல ப்ளாக்கைத் தேடினாலே அடிதடி, அரசியல், சினிமான்னு அரை வேக்காடா இருக்க சொல்லோ, இது ஒரு ஆனந்த ஆச்சர்யம். நீங்க ஜெமினிங்கறது கரெக்டா இருக்கு பாத்தீங்களா? மாற்றம் ஒன்றே நிரந்தரம்னு பிரம்மா தலைல எழுதிடுவார் ஜெமினிகளுக்கு. நானும் அப்படித்தேன்!

Post a Comment

Related Posts