Monday, August 24, 2009

கசகசா

"ஹலோ டுபுக்கா...நான் குப்புசாமி பிரெண்டு கப்புசாமி பேசறேன்..."

"ஆங் சொல்லுங்க சார்...குப்புசாமி நேத்திக்கு தான் போன் பண்ணினார்...யூகேக்கு இப்போ தான் வந்திருக்கீங்கன்னு சொன்னார்...என்ன...செட்டிலாகிட்டீங்களா?"

"ஆங் இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா ஆகிட்டிருக்கோம்...அது விஷயமாத் தான் போன் பண்ணினேன்...எனக்கு தயிர்னா உயிர்...இங்க பக்கத்து கடையில வாங்கின தயிரு ரொம்ப புளிக்குது....அத்தோட பிரியாணிக்கு கசகசாவும் வேணும்...இங்க நம்ம ஊரு மளிகை கடை எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா..."

"**** ஆஹா கிளி கூண்டுக்குள்ள சிக்கிடிச்சு....*** நீங்க இருக்கிற ஏரியாலேர்ந்து வழி கொஞ்சம் காம்ப்ளிகேட்டட்...ஒன்னு பண்ணுங்க...நான் எங்க வீட்டுக்கு வழி சொல்றேன்..நீங்க பேசாம இங்க கிளம்பி வந்துருங்க...வந்தீங்கண்ணா..டீ குடிச்சிக்கிட்டே நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்..."

"அப்டீங்கிறீங்களா...அதுவும் சரிதான்..வந்திடறேன்."

ஆஹா இப்படி கசகசாவை வைத்து கிளியை பிடிக்க வழியிருக்கான்னு..பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே மனுஷன் வந்துவிட்டார். மனுசன் பிரியாணிக்கு ஏகத்துக்கு காய்ஞ்சி போய் இருந்தார் போல.

"இந்த கசகசா..."

"முதல்லலாம்...இந்த கசகசாவை கேரளாக்காரங்க ஏத்துமதி பண்ணிக்கிட்டு இருந்தாங்க...அது ப்ரான்ஸ் போயிட்டு வரும்...இப்போ கொஞ்ச நாளா...அங்க கெடுபிடி ஆகிட்டதுனால..சுவிட்சர்லாந்துக்கு தான் அதிகமா ஏத்துமதி பண்றாங்க..."

"ஐயைய்யோ..அப்போ இங்க யூகேல கசகசா கிடைக்காதா..."

"***என்ன கூண்டுக்கிளி மக்கர் பண்ணுது...**** இல்லீங்க இங்கயும் கிடைக்கும்...சுவிஸ்ல கசகசா சகாயவிலையில் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு சொல்ல வந்தேன்..."

"அப்பாடா நான் ஒரு நிமிஷம் பயந்தே போயிட்டேன்..."

"நீங்க...போன வாரம் ஃபோன் பண்ணியிருந்தீங்கன்னு வையுங்க உங்களுக்கு அலேக்கா அப்படியே ஒரு கிலோவோ ரெண்டு கிலோவோ கசகசா வாங்கி வந்திருப்பேனே..."

"இல்லீங்க நமக்கு அவ்வளவு தேவைப்படாது..."

"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..**** இல்லீங்க இங்க யூகேல இருநூறு கிராம் கசகசா வாங்குறதுக்கு சுவிஸ்ல ஒரு கிலோ வாங்கலாம்ன்னு சொல்லவந்தேன்..."

"ஓ...தயிரு புளிக்காம கிடைக்குமா..."

"சுவிஸ்ல பால்தாங்க விசேஷம்...சூப்பரா இருக்கும்...அப்போ தயிரு எப்படி இருக்கும்ன்னு பார்த்துக்கோங்களேன்..."

"இல்லீங்க நான் யூகேல கேட்டேன்..."

"*** இன்னிக்கு ஒரு கப்பு டீ வேஸ்டாயிடும் போல இருக்கே**** ஆங் இங்கயும் கிடைக்கும் கிடைக்கும்....ஆனா சுவிஸ் மாதிரி டேஸ்டா கிடைக்காது..."

"இங்க எங்க தயிர் கிடைக்கும்"

" ***** &($*&*$(£$*$( ***** ....."

"நீங்க சமீபத்துல சுவிஸ் போயிருந்தீங்களா...."

"*** எனக்குத் தெரியும் உழைச்ச காசுல போட்ட டீ என்னிக்குமே வேஸ்டா போகாதுன்னு எங்க தாத்தா அன்னிக்கே சொல்லியிருக்கார்**** ஆமாங்க சும்மா போய் சுத்தி பார்த்துட்டு வரலாமேன்னு போன வாரம் போயிருந்தேங்க....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...கண்மணி...பொண்மணி....சுவிஸ்....மானே தேனே பொன்மானே...சுவிஸ்...."

"சூப்பர்ங்க அப்போ சுவிஸ் சூப்பரா சுத்தினீங்கன்னு சொல்லுங்க..."

"ஆமாங்க நம்ம பதிவர் மகேஷ் கூட சுவிஸ்க்கு வேலை நிமித்தம் வந்திருந்தார்...வந்து சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன். மனுசன் ரொம்ப நல்லவர்ங்க... ஜெனிவால ரெண்டு நாள் தொடர்ந்து வந்து கைடு காசு மிச்சப் படுத்திட்டார்னா பார்த்துக்கோங்களேன்....""

"ஓ அப்பிடியா...கொஞ்சம் மளிகை கடைக்கு வழி சொல்றீங்களா..."

"இங்கேர்ந்து நேரா உங்க வீட்டுக்கு திரும்பி போங்க....கார நிப்பாட்டிட்டு லெப்ட் சந்துல அஞ்சு நிமிஷம் பொடி நடை நடந்தீங்கன்னா...சூப்பர் இந்திய மளிகை கடை இருக்கு...எல்லாம் கிடைக்கும்....

"....???????"

"இருங்க போயிடாதீங்க...கீழே இருக்கிற படத்த கிள்க் பண்ணி நல்லா பாருங்க...அதுல பனியில பின்னாடி கோடு போட்ட மாதிரி ஒரு பாதை தெரியுதா...அதுல அப்பீடீக்கா அஞ்சு நிமிஷம் போனா கசகசா விக்கிற கடை வந்துறும்...உங்களுக்கு வழி கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கக் கூடாதேன்னு தான் இந்த படம் காண்பிச்சேன்..."
*** நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ...அத பார்க்க வைக்கிறதுக்கு இன்னா கதவுட வேண்டியிருக்குடா சாமீ.....*******


பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.

78 comments:

Bhaskar said...

kodu pota sattai.karuppu kannadi..konjam nambiyaar adiyaal range.ku irukku!!

Sridhar Narayanan said...

//நம்மளுக்கு உன்னால் முடியும் தம்பிக்கு பக்கத்துல தேறுகிறதே ஆயிரத்துல ஒரு போட்டோ//

Enge Antha Photo? :))

இலவசக்கொத்தனார் said...

வாங்கின சாக்லேட்டில் என் பங்கை உடன் பார்சல் செய்து அனுப்பவும்!!

shrek said...

SEMMA STILL THALEEVA.........

இராம்/Raam said...

/இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்கன்னு வரும் கமெண்டுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.தங்கமணி மாதிரி காறித் துப்பும் பின்னூட்டங்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை. //

ஹி ஹி ஹி.. :)

துளசி கோபால் said...

போட்டோ சூப்பர். உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி(யே) இருக்கீங்கன்னு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!

Sampath said...

தலை .. ஏதோ ஒரு போட்டோ நல்ல வந்திருக்குன்னு சொன்னீங்கள்ள அத அப்லோட் பண்ணுங்க .... :) :) :)

Porkodi (பொற்கொடி) said...

enna irundhalum enga thala sam anderson pakkam kooda neenga nikka mudiyadhu! avar azhagu style ku munnadi unnal mudiyum thambiyavadhu kambiyavadhu :-)

மங்களூர் சிவா said...

பி.கு. சூப்பர்!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Enge Antha Photo? :))//

அதானே எங்கே அந்த போட்டோ? :)

இந்த கமெண்ட் அனுமதிக்கப்படற கமெண்ட் தான் போல.. :))

Karthik said...

ha..ha. kalakkals!! :))

Karthik said...

haiyo, naan post ah sonnen!!

ஆயில்யன் said...

செம அழகா இருக்கு போட்டோவும் & பேக்கிரவுண்டும்தான் :))

Mahesh said...

//மனுசன் ரொம்ப நல்லவர்ங்க..//

இதுல இருக்கற நுண்ணரசியலை ரசிச்சேன் :)))))

நீங்க கூட ரொம்ப நல்லவர்தான் :)))))))))

Mahesh said...

//இலவசக்கொத்தனார் said...
வாங்கின சாக்லேட்டில் என் பங்கை உடன் பார்சல் செய்து அனுப்பவும்!!
//

இன்னுமா உங்களுக்கு அனுப்பல?? மத்தவங்க எல்லாருக்கும் குடுத்துட்டாரே!! (அப்பாடா... சிண்டு முடிஞ்சுட்டேன்னு நினைக்கிறேன்.... ஜெனீவால உங்க கூட சாப்ட்ட சாப்பாடெல்லாம் ஜிரணம் ஆயிடும்..)

அமுதா கிருஷ்ணா said...

நிஜமாவே மலையாளத்துக்காரர் யாராவது அங்கு கடை வைத்து இருக்க போகிறார்.
ஆசை அஜித் மாதிரி இருக்கீங்க தம்பி...

குப்பன்.யாஹூ said...

சைடு போஸில் பார்த்தல் தான் உன்னால் முடயும் தம்பி உதய மூர்த்தி மாத்ரி உள்ளீர்கள். . நேராக பார்த்தால் வெற்றி விழா அல்லது விக்ரம் கமல் மாதிரி அல்லவா உள்ளீர்கள்.
.

B o o said...

ROTFLOL and humming பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு சொல்லு......!!!:D

வெண்பூ said...

உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி இருக்கீங்க...

உண்மையாவே.. பாருங்க நான் ஸ்மைலி கூட போடலை..

ILA (a) இளா said...

போட்டோவுல மனுசங்க படத்தை போடக்கூடாதா?

The Print Lover said...

"** மக்கர் கிளியா இருக்கேன்னு பார்த்தா சரியான மக்கு கிளியா இருக்கே..****

ROFL! Superb post.

அரசு said...

சூப்பர்!!!!
-இது போஸ்ட்டுக்கு

முடியல! வேணாம் அழுதுருவேன்!
-இது பிகுவிற்கு

-அரசு

Anonymous said...

dubukku sir,
ungal pakkathil, unnal mudiyum thambi seetha adhhan engal thangamani enge sir...innum ethana naalikku ippadi solo photos eduthu sandosha pattupeenglo....neenga allavandhan kamal maadhiriyee irukeenga.kamalnnu decide panniyachunna..unnal mudiyum thambiyaana enna aallavandhan kammalaana enna...adhe adhe...appadinnu thangamani solla sonnanga...
nivi.

பாசகி said...

ஏண்ணே, ஃபோட்டோ போட்டுருக்கேன் பாத்துட்டு(அ)பாக்காமயே நல்லா இருக்குன்னு சொல்லுங்கன்னா சொல்லிட்டு போறோம். அதுக்கு ஏங்க கிளி, கசகசா, சுவிஸ் இத்யாதி இத்யாதி எல்லாம் :)))

சரி ஃபோட்டோ பிரமாதமா இருக்கு, ஆனா ஒண்ணே ஒண்ணு மட்டும் மிஸ்ஸிங்கணா. என்னவா? அதான் கையில ஒரு ஸ்டிக் :)))

அறிவிலி said...

//சுவிஸ்ல இந்திய உணவகத்துக்கும் வழியெல்லாம் சொன்னாருன்னா பார்த்துக்கோங்களேன்//

மகேஷ் சிங்கப்பூர்ல வழி கரெக்டா சொன்னாதான் அதிசயம். முக்காவாசி நாளு அங்கதான் இருக்காரு

sriram said...

ஹாலிடேவுக்கு Semi Formal pant போட்டு, முழுக்கை சட்டை போட்டு அத்தையும் இன் பண்ணி அதுக்கு மேல பெல்ட் கட்டி போன ஒரே ஆள் நீ தான் தல.
என்னோட கமெண்ட் வரணுமுன்னா போட்டோ நல்லா இருக்குன்னு சொன்னாதான் வருமில்ல - தல போட்டோல SNOW ரொம்ப அழகா இருக்கு.

நீ சுவிஸுக்குன்னா போ இல்ல சிலுக்கலூர்பேட்டைக்குன்னா போ, ஆனா போகும் போது கூடவே பொட்டியை தூக்கிகின்னு போயி வாரத்துக்கு ரெண்டு பதிவு போடணும் - தெர்தா..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

sriram said...

கழுத தேஞ்சு கட்டெரும்பா ஆன கத தெரியுமா?
2004 ல 82 போஸ்ட், 2006 ல 62 போஸ்ட், 2007 ல 30 போஸ்ட், இந்த வருஷம் இது வரைக்கும் 15 போஸ்ட்- வெளங்கிறும்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

sriram said...

Quality / Quantity ன்னு வியாக்கியானம் பேசாம ஒழுங்கா பதிவு போடற வழியப் பாரு.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Hema said...
This comment has been removed by the author.
Porkodi (பொற்கொடி) said...

ada paavame boston srirama ipdi ramana vijayakanthu madhri stats eduka alaya vutteengale bossu!

Anonymous said...

Hi...

I'm a regular reader of ur blog...Fan of u and ur blog.. :-)
To be frank..ungaloda smartness konjam koranjuduchu... :-).... rumba azhaga iruntheeenga... ippo azhagathaan irukkeenga... vayasaaiduchu.. :-)

Anonymous said...

ரன் மாதவன் மாதிரில இருக்கிங்க மிரா அம்மன்தான் மிஸ்ஸிங்

அன்புடன்,
கார்த்திக்
த‌லைவ‌ர்
அகில உலக டுபுக்கு ரசிகர் மன்றம்

Aani Pidunganum said...

Hi Dubuks,

Unnal Mudiyum kamal madhiri irukingaahnu solla ennaku ok thaaan, KAMAL kitta sollama irundha , then unnal mudiyum kamal enna, avanga appa madhiri kuda irukinganu solla naaa ready......;)
Aani

vetti said...

Pacchai Pacchai-ya poyi sonnaa dhaan ennoda comment-ai allow pannuveenga-nna......................................................................................................parava illai sollidaren - 'Neenga unnaal mudiyum Thambi' Kamal maadhiriye irukkeenga...(kadavuley...enakku paava mannippu kudu...idhukkaaga enakku bojanam cut pannidaadhey...atleast oru naalaikku rendu velai full meals-aavadhu kudu...)

sriram said...

பொற்கொடி, நாம ரெண்டு பேரும் இந்தாள் பிளாக்ல இந்தாள விட அதிகமா எழுதறோம்.

ந்ண்பா அனானி, கொஞ்சம் மனசாட்சி இருந்தா அத டச் பண்ணி சொல்லு -
//To be frank..ungaloda smartness konjam koranjuduchu... :-).... rumba azhaga iruntheeenga... ippo azhagathaan irukkeenga.// - அது எப்போன்னு சொல்லு. இது ஆண்டவனுக்கே அடுக்காது.

//vayasaaiduchu.. :-)// - சொன்னதிலேயே இதுதான் உண்மை.

//ரன் மாதவன் மாதிரில இருக்கிங்க மிரா அம்மன்தான் மிஸ்ஸிங்//
கார்த்திக் - இதெல்லாம் ரொம்ப ஓவர் - சொல்லிட்டேன். இந்த விஷயம் மாதவனுக்குத் தெரியுமா ???

என்றும் அன்புடன் (ஆனால் இன்று கலாய்க்க செம மூடுடன்)
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Porkodi said...

Dubukku Uncle! ungluku oru scrap vitten.. ana neenga parpinglo illiyo theriala.. enaku unga email id venume? oka small help kavali! (may take 5 mins of your time!)

sriram said...

பொற்கொடி
இதுக்கும் நாந்தான் பாத்து ஒங்களுக்கு email ID அனுப்பனும்,டுபுக்கோட ID
r_ramn@yahoo.com.
Dubukku Uncle! -- இப்படி சொன்னீங்க பாருங்க - இதுக்காகவே உங்களுக்கு ஹெல்ப் பண்ண தோணிச்சு.

Porkodi (பொற்கொடி) said...

மிக்க நன்றி ஸ்ரீராம்.. நீ எப்படி குடுக்க போச்சுனு அங்கிள் ஒண்ணும் உங்களை கோச்சுக்க மாட்டாரே? அப்படி சொன்னா சொல்லுங்க அங்கிளை "மாமா தாத்தா" ஆக்கிடலாம். :D

அப்போவே நினைச்சேன் ஆர்குட்டும் பாக்க மாட்டாரு ப்ளாக்கும் பாக்க மாட்டாரு பேசாம அம்பியை கேட்டுட வேண்டியது தான்னு.. கடசில அவரை விட அவர் ப்ளாகை நம்மள மாதிரி ஆட்கள் தான் க்ளிக்கிட்டு இருக்கோம் போங்க..!

Porkodi (பொற்கொடி) said...

//பொற்கொடி, நாம ரெண்டு பேரும் இந்தாள் பிளாக்ல இந்தாள விட அதிகமா எழுதறோம். //

நீங்க ஏற்கனவே மேல சொல்லிட்டீங்களா! பாக்கல நான்.. அது சரி சுஜாதாவை பத்தி சுஜாதாவை விட தேசிகனுக்கு தான் நிறைய தெரியுமோனு நான் நினைப்பேன்.. அதே மாதிரி இதையும் நினைச்சுப்போம்.. என்ன சொல்றீங்க? :P

Senthil said...

sh sh sh!!!!!!!!!!!
mudiyala!!!

ambi said...

நான் பேச நினைப்பதெல்லாம் பாஸ்டன் ஸ்ரீராம் பேசிட்டாரு. அந்த பேர் வெச்சாலே உண்மைய மட்டும் தான் பேசுவாங்க போல. :))

புஃல் கம் டி-ஷர்ட் போட்டு எடுத்து இருந்தா பேக்ரவுண்டுக்கு போட்டோ சூப்பரா இருந்து இருக்கும்.

நிற்க, போட்டோன்னு தான் சொன்னேன்) :))

வேண்டுமென்றே டி-ஷர்டை எடுத்து வைக்காத மன்னியின் சாமர்த்தியத்தை எண்ணி வியக்கிறேன். ;p

பொற்கொடியும், ஸ்ரீயும் சேர்ந்து கமண்ட் செக்க்ஷனை சேட் செக்க்ஷனா மாத்திட்டீங்க போல. :))

sriram said...

பொற்கொடி,
அதெல்லாம் ஒண்ணும் கோவிச்சிக்க மாட்டார் நம்ம டுபுக்கு. கோவிச்சிக்கிட்டா நீங்க சொன்னா மாதிரி செஞ்சிடலாம்.
சுஜாதா - தேசிகன் -- இதில யாரு சுஜாதா? யாரு தேசிகன் - இதெல்லாம் கொஞ்சம் இல்ல இல்ல ரொம்பவே ஓவர்

sriram said...

வாங்க அம்பி, Welcome to dubukku chat room (latest competition to yahoo messenger)
நம்ம பேர் கூட சத்தியம் ஒட்டிக்கிட்டு வந்துறுது. என்ன செய்ய??
உங்க அண்ணா இந்த பக்கத்தில எழுதுறதே இல்ல, இப்படியே போச்சுன்னா, கூகிள் காரன் சர்வர்ல ஸ்பேஸ் வேஸ்டாவுதுன்னு கடையை மூடிடுவான்,அதனால நானும் பொற்கொடியும் இத சாட் ரூமா மாத்தி ஆக்டிவா இருக்கறா மாதிரி Google ஐ ஏமாத்திக்கிட்டு இருக்கிறோம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com

Ambika Rajesh said...

Dear Dubuku


Oru vellai t shirt pottal thoppai theriumnu formal pottingala(holidayla poi formals pottrukingale?)

Illa vayasai t shirta kullir thangama formals pottingala?

Whatever it is,nice blog
Ambika

டகிள் பாட்சா said...

சட்டை ஓர ஒளிக்கோடுகளைப் பாத்தா ஏதோ studioவில எடுத்த படத்த Graphicsல ஜிகினா வேலை செஞ்சு ஒட்டினாப்பல் இருக்கு. உண்மையாவே அங்க போனீங்களா இல்ல UKயிலேயே போத்தி படுத்திகிட்டு இந்த உட்டாலக்கடி postingஆ!

sriram said...

ரங்கா
இந்த பதிவுல உங்கள ரொம்பவே கலாய்ச்சிட்டேன்.
எழுதுவதில் உங்கள் சிரமங்கள் புரியுது.
கண்டிப்பாக உடலும் மனமும் ரிலாக்ஸ்டாக இருந்தால் மட்டுமே எழுத முடியும். நீங்கள் எழுதும்போது படிக்க நாங்கள் காத்திருக்கிறோம். பின்னூட்டங்களால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மன்னிக்கவும்.....

இப்படியெல்லாம் சொல்லத்தான் போன் செஞ்சேன்னும், வேலையில் பிஸியாக இருப்பதாக் பொய் சொன்னதால் பின்னூட்டமாக இடுகிறேன் என்றும் நினைத்தால், அது நடக்காது மகனே... கலாய்த்தல் தொடரும்...

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிங்கக்குட்டி said...

//நான் மேப் போட்டு கசகசா விக்கிற இடத்தைக் குறிச்சு தரேன்//

என்ன இது? அந்த மனுஷன் இன்னும் அங்க இருக்காரா இல்லயா?

Porkodi (பொற்கொடி) said...

ambi, chat panna oru kai kuraiyardhu.. varringla? oh diaper mathanuma.. seri seri :D

Porkodi (பொற்கொடி) said...

sriram, idhula enna ungluku doubtu? makkal podhuva sujatha epo novel ezhuduvar kadhai ezhuduvar nu thaane wait pannuvanga.. adhe pola ingayum wait panrom.. sujatha thannoda vasagargal kitta konjam distance maintain panuvar nu sila per abiprayam.. namma dubukku madhriye ;-) idhu podhadha?

Porkodi (பொற்கொடி) said...

rounda oru 50 potutu naan indraiya dhinathai thuvangugiren!

sriram said...

/// Porkodi (பொற்கொடி) said...
sriram, idhula enna ungluku doubtu? makkal podhuva sujatha epo novel ezhuduvar kadhai ezhuduvar nu thaane wait pannuvanga.. adhe pola ingayum wait panrom.. sujatha thannoda vasagargal kitta konjam distance maintain panuvar nu sila per abiprayam.. namma dubukku madhriye ;-) idhu podhadha?'''

காமராசர் பெரிசா படிக்கல, அண்ணாதுரையின் உயரம் ஐந்தடிக்கும் கம்மி, அதனால படிக்கதவனெல்லாம் காமராசர் மாதிரியும் குள்ளமா இருக்குறவனெல்லாம் அண்ணாதுரை மாதிரியும் வர முடியுமா???

எப்படி இதெல்லாமுன்னு கேக்கறீங்களா அதெல்லாம் ஒரு Flow ல வர்றதுதான்.

நல்ல வேளை சுஜாதா உயிரோட இல்ல, ஒரு தற்கொலை மிச்சமாச்சு...
என்றும் அன்புடன் (ஆமா இதுல ஒன்னும் குறைச்சல் இல்ல)
பாஸ்டன் ஸ்ரீராம்

Hema said...
This comment has been removed by the author.
Porkodi (பொற்கொடி) said...

hehehe aiyo aiyo.. dubukku maama paathukonga naan ungala pathi samatha thaan solliruken.. thappu ellam sriram mela thaan! :D

sriram said...

dubukku maama
இது ஒண்ணு போதாதா பொற்கொடி...

Dubukku said...

பாஸ்கர் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.பிள்ளையார் சுழி போட்டு விட்டுட்டீங்க...மக்கள் கும்மி கொதறிட்டாட்ங்க

ஸ்ரீதர் - வாங்க சாப்டாச்சா...இங்க இனிமே தான்

இலவசம் - அப்பாடா நீராவது சாக்லேட் பத்தி பேசினீங்களே...வந்துக்கிட்டே இருக்கு பார்சல்...வாசல் கதவையே பார்த்துக்கிட்டு இருக்குங்க

ஷ்ரெக் - வாங்க சார். நீங்க தான் சார் முதல் பாராட்டுப் பின்னூட்டம். போஸ்ட் போடும் போது ஒரு பின்னூட்டம் கூட இத மாதிரி வரும்ன்னு நினைக்கவே இல்லை. நெஞ்சில பால வார்த்தீங்க கோடானு கோடி நன்றி.

இராம் - சரி சரி...

துளசி - உன்னால் முடியும் தம்பி மாதிரியே இருக்கீங்கன்னு...முடிக்காமலே போயிட்டீங்களே அக்கா...நீங்களுமா...

சம்பத் - வாங்க நீங்களும் சாப்டாச்சா...? இங்க இனிமே தான்

பொற்கொடி - அது சரி உங்க தலை பக்கத்துலலாம் நான் வரவே மாட்டேன்

Dubukku said...

அமுதா - மிக்க நன்றி அக்கா. நீவீர் வாழ்க. ஆசை அஜீத் வரைக்கும் வந்துட்டீங்க...உன்னால் முடியும் தம்பியையும் அப்படியே...ப்ளீஸ்...

ராம்ஜி - அண்ணே....அவவ்வ்வ்வ்வ்வ் நீங்க நீங்க நீங்க தான்னே முதல்ல ஒத்துக்கிட்டு இருக்கீங்க...அவ்வ்வ்வ்வ் அண்ணனுக்கு ஒரு செட் ரொட்டி சால்னா பார்ச்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

பூ - பக்கத்துல ஸ்னேகா இல்லைன்னு பாட்டுல சொல்றீங்களா...:))

வெண்பூ - பெயர மாதிரி உங்க மனசும் வெண்பூயா...எப்படி நன்றி சொல்லுவேன்...அண்ணனுக்கும் ஒரு செட் ரொட்டி சால்ன்னா பார்சல்ல்ல்ல்ல்ல்

இளா - போடுவோம் போடுவோம்....தல மேலேயே ஒன்னு போடுவோம்

தி ப்ரின்ட் லவ்வர் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

அரசு - மிக்க நன்றி -இது உங்க பாராட்டுக்கு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் இது உங்க முடியலைக்கு அவ்வ்வ்வ்

நிவி - அந்த தம்பி ஆளவந்தான் கமலத் தானே சொல்றீங்க....வேணாங்க...உன்னால் முடியுமே போதும் எனக்கு...தங்கமணி இல்லாமலையா...இருக்கு ஆனா இங்க போடலை...ஹும்

பாசகி - குசும்பு...ஆங்...ஆனாலும் நல்லாருக்குன்னு சொல்லவே இல்லையே நீங்க...

அறிவிலி - ரொம்ப கரெக்ட்டுங்க...சிங்கப்பூர் டூ ஸ்விஸ்க்கு அவரு சீசன் டிக்கெட் வெச்சிருக்கார்ன்னா பார்த்துக்கோங்களேன்

Dubukku said...

மங்களூர் சிவா - அப்போ அந்த போட்டோ...எதுக்கு கேட்டுக்கிட்டு ..வேண்டாம் விட்றுங்க..

முத்துலெட்சுமி - அவ்வ்வ்வ் நீங்களுமா..

கார்த்திக் - இதுல ரெண்டாவது கமெண்ட் போட்டு தெளிவு வேற படுத்தனுமா... ஹும்ம்ம்

ஆயில்யன் - நல்லாத் தான் ஊத்துறீங்க ஆயில...பத்திக்கிட்டு எரியுது....ஹூம்

மகேஷ் - கலிகாலம்....ப்ளாக் படிச்சு படிச்சு கெட்டுப் போயிட்டீங்க...நான் உண்மையாத் தான் சொன்னேன்... இதுல சிண்டு முடியறது வேற...:)))

Dubukku said...

ஸ்ரீராம் - அது கார்கோ யா. நல்லா சோக்கா இருக்கு உங்க பாணி காறித்துப்பி பெண்ட நிமித்தி திட்டறதையெல்லாம் திட்டிட்டு கட்சீல கீழ என்றும் அன்புடன் வேற....ஆஹா இன்னா அன்புடா சாமி...

பொற்கொடி - வாங்க மேடம்...எப்படீங்க ரெண்டு பேரும் கரெக்ட்டா பேசி வைச்சிக்கிட்டீங்களா...நீங்க இந்தப் பக்கம் புகழற மாதிரி எடுத்து குடுக்கறதென்ன அவரு அத வைச்சி திட்டுறதென்ன...

அன்னானி - வாங்க வாங்க எப்படி இருக்கீங்க....அந்த கடைசி வரைக்கும் செம தூக்கலா கமெண்டிட்டு கடைசி வார்த்தையில ஒரே தூக்கு தூக்கிப் போட்டுட்டீங்களே நம்மள...இல்ல அந்த கடைசி வார்த்தைய மட்டும் வேற ப்ளாக்ல போடவேண்டி டைப் செஞ்சு தவறுதலா இங்க பேஸ்ட் பண்ணிட்டீங்க அப்படி தானே....? ஸ்ரீராமுக்கு பயந்து நீங்க என்ன பத்தி நினைக்கிற நல்லதையெல்லாம் சொல்லாம விட்டுறாதீங்க...:))) உங்கள் கமெண்டுக்கும் அன்புக்கு மிக்க நன்றி

கார்த்திக் - வாங்க தல....எப்படி இருக்கீங்க...என்ன சாப்பிடுறீங்க...கலாசிட்ட தல...அண்ணனுக்கு ஒரு செட் ரொட்டி சால்னா பார்சல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

ஆணி - ஏன் ஏன் ஏன்...போன தரம் பார்த்த போது கூட நல்லாத்தானே பேசிக்கிட்டு இருந்தீங்க...ஏதாவது குறை வைச்சிட்டேனா...எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம் தல...

நர்மதா - யூ டூ ப்ரூட்டீ....கலீலியோ உலகம் உருண்டைன்னு உண்மையச் சொன்ன போது அவரையும் இந்த உலகம் இப்படி தான் ஏளனம் செஞ்சிது...இது சத்திய சோதனை என்ன செய்ய...

ஸ்ரீராம் - ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி...இந்த நேரத்துல H1பி பத்தி நாலு பத்தி எழுதலாம்ல... யோவ்...ரெண்டு பேரும் பேசி வெச்சிக்கிட்டு கலாசறீங்களா...
நான் என்னிக்காவது என்ன சுஜாதா மாதிரின்னு கூட சொல்லியிருக்கேனா..அவகு எடுத்துக் குடுக்குறதும் நீங்க தர்ம அடி போடறதும்....நீங்க ரெண்டு பேரும் யூயெஸ் டையத்துக்கு கமெண்ட போட்டுட்டு நான் என்னம்மோ இடைவெளி கடைவெளின்னு...யப்பா சாமி முடியல கண்ணக் கட்டுது...கொஞ்சம் நிறுத்திட்டு அடிய கண்டினியூ பண்ணுங்கப்பா...ரொம்ப வலிக்குது

செந்தில் - பார்த்து அண்ணாச்சி

அம்பி - டேய் நீ வேற பக்கத்து சீட் பஞ்சாபி குதிரைக்கு ட்ரெஸ் ஐடியா குடுக்குற பழக்கத்துல நேரம் காலம் தெரியாம இங்கயும் வந்து ட்ரெஸ் ஐடியா குடுத்துக்கிட்டு....போய் கடல போடற வேலைய கண்டினியூ பண்ணு போ..போ...

ஸ்ரீராம் - இன்னிக்கு வீட்டுல ஏதாவது கோவமா...இல்ல ஆபிஸில ஏதாவது மனத்தாங்கலா...கலாசறேன்ங்கிற பேர்ல இங்க தர்ம அடி போட்டு பின்னிப் பெடலெடுத்துட்டீங்க...

அம்பிகா - சனங்க(ஸ்ரீராம்) போட்ட தர்ம அடியில நீங்க என்ன பாராட்டுறீங்களா இல்ல கலாசுறீங்களான்னே எனக்கு புரியல. எதுக்கும் ஒரு நன்றி சொல்லிக்கிறேன் :)

டகிள் பாட்சா - நீங்க வேற ஏதாவது கிளப்பி விட்டுக்கிட்டு...ஆனா உண்மையிலேயே நிறைய போட்டோல பின்னாடி பேக்கிரவுண்டு போஸ்டர் மாதிரி அத்தனை பிக்சர் பெர்பக்டா இருந்தது.


ஸ்ரீரம் - //ப்படியெல்லாம் சொல்லத்தான் போன் செஞ்சேன்னும், வேலையில் பிஸியாக இருப்பதாக் பொய் சொன்னதால் பின்னூட்டமாக இடுகிறேன் என்றும் நினைத்தால், அது நடக்காது மகனே... கலாய்த்தல் தொடரும்..//
-ஸ்ரீராம் உங்கள் மீசை மிக அழகாக இருக்கு அதில் மண்ணே ஒட்டவில்லை :))

சிங்கக்குட்டி - இல்லீங்கோவ்வ்......:))

பொற்கொடி - நடத்துங்க...எப்படீங்க இப்படி செந்தில் மாதிரி ஒன்னுமே தெரியாத மாதிரி எடுத்துக் குடுக்கறீங்க வரிக்கு வரி மாமான்னு வேற கூப்பிடுறீங்க...ஹூம்

dubukudisciple said...

Guruve..
Romba naal achu indha pakkam vanthu supera irukku...
(pothuva solliten.. eduku venalum vechikalaam...)

bhardwaj said...

ambi

romba naal aachuda kozhande

inime vaaravaaram edavadu nannaa

ezhududappa

nokkuthan nannaa thamizh ezhuda

varadolya anbudan balasubramanyan vellore

Anonymous said...

வர வர ப்ளாக்-ஐ விட பின்னூட்டம் நெம்ப டமாசா இருக்கு.... டுபுக்கு அவர்களே... கவனம் ப்ளீஸ்....

shubakutty said...

yr blog is getting famous. people r deadly fighting to praise u. and u really look better than kamal. But yr comedy writing is more delicious than anything else.

சிங்கக்குட்டி said...

என் பதிவில் உங்களுக்கு ஒரு நன்றி.

http://singakkutti.blogspot.com/2009/08/blog-post_31.html

என்றும் அன்புடன் - சிங்கக்குட்டி

Porkodi (பொற்கொடி) said...

//people r deadly fighting to praise u. and u really look better than kamal.//

dubukku uncle, how much money went under the table to shubakutty? :P

Sriram, irukingla? vaanga iniku accounta thorapom..!

Anonymous said...

அந்த படத்துல கமல் புல் கை சட்டை போட மாட்டார்'ங்க !!! அதே போல கூலிங் கிளாஸ் :)

sriram said...

//Sriram, irukingla? vaanga iniku accounta thorapom..//

பொற்கொடி, இந்த போஸ்ட்டுக்கு இவ்வளவு போதுமுன்னு நினைக்கிறேன்.
அப்புறம் அடுத்த போஸ்ட்டுக்கு சரக்கு இல்லாம போயிடும்.
மேலும் விழாத்தலைவர் ஏற்புரை வழங்குறதுக்கு முன்ன அல்லக்கையெல்லாம் என்ன வேணா பேசலாம், தலைவர் பேசினப்புறம் பேசுறது மறபல்ல, வரலாறு முக்கியம் அமைச்சரே...

Porkodi (பொற்கொடி) said...

சே.. என்ன ஸ்ரீராம் வார்றதுனு வந்த அப்புறம் அதுல எப்படி சரக்கு தீரும்? ;-) சரி அடுத்த போஸ்டுலயே வச்சுக்கலாம் மிச்ச கச்சேரிய.. எனக்கென்னவோ அங்கிள் இதுக்காகவே இன்னொரு போஸ்டு போட மாட்டாருனு பயமா இருக்கு :0

நானாவது சுஜாதா - தேசிகன்னு நல்ல விதமா சொன்னேன்.. நீங்க என்னடான்னா அல்லக்கைனுட்டீங்க.. :-((

அப்புறம், "மறபு" டைப்போ தானே? மரபை தானே சொல்றீங்க?

sriram said...

பொற்கொடி, மழை விட்டாலும் தூவானம் விடாத மாதிரி நீங்க விட மாட்டீங்க போலருக்கே..
அதெல்லாம் இல்ல, யாரோ ஒரு அனானி
வர வர ப்ளாக்-ஐ விட பின்னூட்டம் நெம்ப டமாசா இருக்கு.... டுபுக்கு அவர்களே... கவனம் ப்ளீஸ்... என்று சொல்லிட்டார் இல்ல (சத்தியமா நான் இல்லீங்க) அண்ணன் டுபுக்கார் அடுத்த பதிவில் ஒரு fitting reply (super comedy post) குடுப்பார் பாருங்களேன்..
sorry மறபு டைப்போ தான், மரபு தாம் சரி, சுட்டிக்காட்டியதற்கு நன்றி..

அடுத்த பதிவில் சந்திப்போம்...

M.G.ரவிக்குமார்™..., said...

இதுவரை உங்கள் பதிவுகள் எதையும் விடாமல் வாசித்து வந்திருக்கிறேன்!ஆனாலும் இதுவே என் முதல் பின்னூட்டம்!......உங்கள் எழுத்து எப்போதும் மகிழ்ச்சியே அளித்திருக்கிறது........உங்கள் திரைப்படத்திற்காக நானும் ஆவலாய் காத்துக் கொண்டிருக்கிறேன்.........உங்கள் லட்சியம் வெற்றி அடைய வாழ்த்துக்கள்!.......

ambi said...

@பரத்வாஜ், ஆஹா, நம்ம கடை ஆத்துக்கு கிழக்கால அந்தபக்கம் இருக்கு. அங்கன வாங்க. :))

பாராட்டுக்கு ரெம்ப நன்றிங்க.

ambi said...
This comment has been removed by the author.
சிங்கக்குட்டி said...

பதிவுலகில் நீங்கள் ஒரு ஸ்டார், இதோ உங்களுக்கு என் அன்பு பரிசு.

http://s1023.photobucket.com/albums/af360/singakkutti/?action=view&current=singakkutti-awad.gif

நன்றி.

Porkodi (பொற்கொடி) said...

evalavu adi vangiyum pudhu postu poda mattengrare.. dubukku romba kettavarupa!

Dubukku said...

டுபுக்கு டிசைப்பிள் - யெக்கோவ் வாங்க...நீங்களுமா நான் உங்களத் தான் மலை போல நம்பி இருந்தேன் கவுத்திட்டீங்களே நியாயமா :)))

பரத்வாஜ் - வாங்க எழுதறேண்ணா எழுதறேன் :)) உங்க ஊக்குவிப்பிற்க்கு மிக்க நன்றி.

அனானி - நல்லது தானுங்களே... :))

சுபா- ஹா ஹா பேமஸாவது ஒன்னாவது நீங்க வேற...சும்மா கலாசுறாங்க நம்மள...உங்க பாராட்டிற்கும் அன்பிற்க்கும் மிக்க நன்றி.

சிங்கக்குட்டி - உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி. உங்கள் அவர்ட்டை சிரம் தாழ்த்தி ஏற்றுக்கொள்கிறேன்.

பொற்கொடி - ஆத்தா என்ன கலாசுறதுக்கு செம ஃபார்முல இருக்கீங்க போல. சுபா இந்த ப்ளாக் மூலம் கிடைத்த என் இனிய தோழி..காசெல்லாம் குடுக்கலீங்கோவ்

அனானி - பரவாயில்ல கொஞ்சம் அட்ஜீஸ் பண்ணிக்கோங்க :)))

ஸ்ரீராம் - ஆஹா கலாசுறதுல ப்ரொடோகால் வேற ஃபாலோ பண்ணுறீங்களா :)) ஆத்தி உங்க ரெண்டு பேர் கிட்டையும் ஜாக்கிரதையாவே இருக்கேன் நான்.

நேசன் - உங்கள் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நேசன். ரொம்பவே ஆர்வமாய் இருக்கிறேன். ஆனால் முழுநேர வேலையாக தாவுவதற்க்கு தான் தெகிரியம் வரவில்லை இன்னும். பார்ப்போம்.

அம்பி - ஆஹா இங்க வந்து எனக்கு வந்த பின்னூட்டத்தையும் ஆட்டைய போடறீயா நீ...:)))

சிங்கக்குட்டி - அண்ணே நான் ஒரு பச்சா..நீங்க ஸ்டார்ன்னுலாம் சொல்லாதீங்க...ஆனாலும் உங்க அன்பிற்க்கு மிக்க நன்றி. தன்யனானேன்.

பொற்கொடி - //னக்கென்னவோ அங்கிள் இதுக்காகவே இன்னொரு போஸ்டு போட மாட்டாருனு பயமா இருக்கு //அதே அதே... :))

Anonymous said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க. உங்களோட பதிவுக்ள எல்லாம் படிச்சதில்லை, ஆனால் பொழுது போகாத போது புரட்டி பார்த்திருக்கிறேன், ஒன்றுக்கும் கமென்ட் அடிச்சதில்லை, அப்படி பார்த்தா படிக்கற எந்த பதிவுக்கும் பதில் போடறகு கொஞ்சம் கஷ்டமான விஷயம் எனக்கு, படிக்கறதோட சரி, ஆனால் இதுக்கு போடாமல் இருக்க முடியலை. எந்த அளவிற்க்கு அஃபெக்ட் ஆகி இருக்கின்றேன் என்றால், கனவில் கூட உஙகளோட போஸ்டும் நீங்களும் வர்ர அளவிற்க்கு :)

நீங்க வேண்டுமென்றால் இதை உங்க தங்கமணி கிட்ட சொல்லி பெருமை பட்டுக்கலாம்... கனவு முழுவதும் எனக்கு ஞாபகம் இல்லை, நீங்களே உங்க கற்பனாசக்தியை பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் ரீல் சுத்திக்கோங்க. ரீல் சுத்த வேறு உங்களுக்கு சொல்லிதரணுமா என்ன :)

நிஜமாகவே ரொம்பவே இன்ஸ்பிரேஷனல் எழுத்துநடை. சப்கான்ஷ்யஸாவது அஃப்க்ட் ஆகி எனக்கும் இது மாதிரி எழுத வருதா என்று பார்ப்போம் :)

ஜெயா.

ச.சங்கர் said...

///பி.கு - இந்தப் பதிவிற்க்கு போட்டோ சூப்பர்...போன்ற பின்னூட்டங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும்.///

அன்புள்ள டுபுக்கு

வணக்கம்

போட்டோ சூப்பர்..............

இப்படிக்கு
ச.சங்கர்

பி.கு .எந்த ஸ்டுடியோவில் எடுத்தது.. பேக்ட்ராப் மிக நன்றாக இருக்கிறது.எனக்கும் இப்படி ஒரு ஃபோட்டோ எடுத்துக் கொள்ளவேண்டும் என்று ரொம்ப நாளாகவே ஆசை.

Syam said...

indha polapukku....

photo super thala :-)

Ramesh said...

பாக்கட் உள்ள கைய வச்சியிருக்கிங்களே......துப்பாக்கி ஏதாவது இருக்கா?

Post a Comment

Related Posts