Thursday, August 06, 2009

நியாபகங்கள்


உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்.

"ஐய்யைய்யோ சமையலா..நீங்களா..?...நான் கூட நின்னு எடுத்தாவது தரேன்"

"இதோ பாரு சிங்கம் என்னிக்கும் சிங்கிளாத் தான் சமைக்கும்"

"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...நோ வே..போன தரம் பால்கோவா கிண்டறேன்னு எவர்சில்வர் குக்கர நான் ஸ்டிக் குக்கர் மாதிரி கரிச்ச உங்க பிரதாபம் போதும்..முதல்ல இடத்த காலி பண்ணுங்க" - நான் சமையல் அறை பக்கம் சமைக்க வந்தாலே தங்கமணி டெரர் ஆகிவிடுவார்.

அப்புறம் எதாவது சொல்லி சமாதானப் படுத்தி "அன்னிக்கு ஒரு நாள் சப்பாத்திக்கு செஞ்சியே கோபி மஞ்சூரியன் அத எப்படி செஞ்ச சொல்லு...? கரெக்டா செஞ்சியான்னு செக் பண்ணிக்கறேன்" என்று ஒரு ரெசிப்பி கேட்பேன். உடனே தங்கமணியும் மணாளனே மங்கையில் பாக்கியம் அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்.

நான் செய்யும் எல்லா டிஷ்ஷிலும் கட்டாயம் உருளைக்கிழங்கு இருக்கும். முதலாளி...அதில் ஒரு தொழில் ரகசியம் என்னான்னா... என் மகள்கள் இருவருக்கும் உருளைக்கிழங்கு ரொம்ப பிடிக்கும். வெறும்ன வெந்து மேஷ் செய்து குடுத்தாலே "எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள். தங்கமணி முன்னால் சொன்ன கோபி மஞ்சூரியன் ரெசிபியை கொஞ்சம் உல்டா செய்து, உருளைக்கிழங்கை வெந்து ஒரு கப் மாதிரி குடைந்தெடுத்து கோபி மஞ்சூரியனை அதில் போட்டு இட்டாலியன் டிஷ் என்று குடுப்பேன். "எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்" என்று தங்க்ஸ் மங்களம் பாடி விடுவார்.

நிற்க. என்னாடா சினிமா விமர்சனமாய் இருக்குமோன்னு பார்த்தால் திரும்பவும் சொந்தக் கதை சோகக் கதைய சொல்றானேன்னு நினைக்காதீங்க. என் சொந்தக் கதை பிசினெஸ் மாடலுக்கும் ஞாபகங்கள் பட பிசினெஸ் மாடலுக்கும் வித்தியாசம் அதிகமில்லை ஜென்டில்மேன்.

ரெயின் கோட் படத்தை லேசாக உல்டா செய்து அதை நண்பனின் சொந்தக் கதை என்று பேக் செய்திருக்கிறார்கள் அவ்வளவு தான். முடிவு மட்டும் நண்பனின் கதையா இல்லை படம் முழுவதுமேவா என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம்.

இது பா.விஜய்யின் முதல் படம். முதல் படத்திற்கு பரவாயில்லை. எடுத்த விஷயத்தில் ரொம்ப கத்தி போட்டு போர் அடித்து பாதியிலேயே படத்தை விட்டு எழுந்து போகுமளவுக்கு செய்யாமல் ஓரளவுக்கு கொண்டு போயிருக்கிறார்கள். இதையும் டைரக்டருக்கு முதல் படம் என்பதால் மட்டுமே சொல்லமுடிகிறது. மற்றபடி இதைக் கருத்தில் கொள்ளாமல் மற்ற படங்களோடு ஒப்பிட்டால் ரொம்பவே சுமார் ரகம் தான். பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம். பாட்டு டேன்ஸ் என்று வரும் போது ரொம்பவே பொறுமையை படம் சோதிக்கிறது. படம் நெடுக வருபவர்கள் ரொம்பவே செயற்கையாக வசனம் பேசுகிறார்கள். ஹீரோவும் கவிதை எழுதுபவர் என்று திரைக்கதையை வைத்துக்கொண்டு தனிபட்ட முறையில் குடுக்கவேண்டியவர்களுக்கெலாம் கணக்கு செட்டில் செய்துவிட்டார் போலும். ஏதோ ஒரு பெருந்தலையை வேறு சாடுகிறார். மனுஷன் யாருன்னு தான் பிடி பட மாட்டேங்குது.

பா.விஜய் நடிப்பில் சேரனை இமிடேட் செய்கிறாரா என்று தெரியவில்லை அழும் போது அவரை மாதிரியே (கேவலமாக) இருக்கிறது. இதை கொஞ்சம் கவனித்தால் நலமாயிருக்கும். அவருடைய கவிதை வரிகள் வழக்கம் போல் நன்றாக வந்துள்ளன. கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரிசையில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....அடுத்த படத்திற்க்கு கூட நல்ல துடிப்பான அசிஸ்டெண்ட் டைரக்டர்களை வைத்துக் கொள்ளுங்கள் விஜய்...

27 comments:

rapp said...

me the first anne:):):) innum ithupol parpala padangal paarthu vimarsanam seyya vaazhthukkal:):):)

துபாய் ராஜா said...

//உலகமே வெறுத்து யாரையாவது நாலு பேரை போட்டுத் தள்ளிடலாம் என்றளவுக்கு வெறுப்பு தட்டும் போதெல்லாம் தவறாமல் சமையல் பக்கம் போவேன். இதே மாதிரி தங்கமணிக்கும் மூட் அவுட்டாகி குறைந்தபட்சம் மூனு பேரையாவது போட்டுத் தள்ளிட தோன்றும் போதெல்லாம் புதுசாக ஏதாவது ஒரு டிஷ் ட்ரை பண்ணுவார்//

குடும்பமே கொலைவெறியோடத்தான் திரியறீங்களா... ??!! :))

//"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்.//

//"எப்படிப்பா இப்படி டேஸ்டியா சமைக்கிற"ன்னு சிங்கத்துக்கு சிடுக்கெடுத்து விடுவார்கள்.//

//"எப்படீப்பா இப்படி சூப்பரா.." என்று மகள்கள் திரும்பவும் ஆரம்பிக்கும் போது "இதெல்லாம் ரொம்ப ஓவர்டி...சிங்கத்துக்கு ரொம்ப தான் சிங்கியடிக்கிறீங்க ரெண்டு பேரும்"//

வாய்விட்டு சிரித்தேன். :))))

சிங்கம் மறுபடியும் களம் எறங்கிடுச்சிடோய்.../கல்லூரி விழாவில் கவிதை வாசிப்பது, வாசிக்கும் போது திணறுவது, திணறும் போது முதல் வரிசையில் மூனாவது ஆளும், நாலாவது வரியில் ஆறாவது ஆளும் எழுந்து நின்று குடுத்த காசுக்கு தெம்பா திரும்பிப் போன்னு சொல்லுவது உடனே ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது//

ண்ணா,ஹீரோயின் பேரு சக்தியாண்ணா ??!! :))

நல்லதொரு நகைச்சுவை பதிவு.

முன்பு போல் அடிக்கடி டுபுக்குங்கள்.

Unknown said...

Instead of watching dis movie u could have tried some new recipe and impressed manni. ur review of the movie is better than the movie itself :)

Hema said...
This comment has been removed by the author.
Porkodi (பொற்கொடி) said...

//பா.விஜய் டைரக்க்ஷனோடு நிப்பாட்டிக்கொண்டு ஹீரோவாய் வேறு யாரையாவது போட்டிருக்கலாம் என்பது என் தனிபட்ட எண்ணம்.// hahahaha irunga naan poi oru round nalla sirichuttu varren :D

Porkodi (பொற்கொடி) said...

enna panradhu thala indha kalathula ellarume thaan best hero nu nenakranga.. :P

வெட்டிப்பயல் said...

சிங்கம் களம் இறங்கிடுச்சிடோய்!!! :-)

அறிவிலி said...

இந்த படத்த பாக்கலாம்னு முடிவெடுத்த உங்க தைரியத்த முதல்ல பாராட்டணும்.

குப்பன்.யாஹூ said...

As arivili said, You have lot of pateince and interest on cinemas. Only such persons could be able to watch these type of movies.

Mahesh said...

எப்பிடி? எப்பிடி இதெல்லாம்? இந்தப் படத்தையெல்லாம்....? சிங்கம் சிங்கிளாப் பாத்துச்சா இல்ல "சிம்பா"க்கள் கூடவா?

Karthik said...

ஹா..ஹா. செம பதிவு. :)))

சிங்கக்குட்டி said...

//ஹீரோவிற்கு சக்தி வந்து அருவி மாதிரி கொட்டுவது ஹைய்யோ ஹைய்யோ....//

ஸ்ஸ்ஸ்ஸ்.....தமிழ் படத்தோட மொத்த ரகசியத்தையும் சொல்ல படாது ...:-))

sriram said...

வெட்டிப்பயல் பாலாஜி, சிங்கம் நிஜமாகவே களத்தில் இறங்கிட்டா மாதிரி தான் தெரிகிறது, நமக்கெல்லாம் கொண்டாட்டம்தான். வேதாளம் மறுபடியும் முருங்கை மரம் ஏறாமல் இருந்தா சரிதான்.

டுபுக்கு, எப்படி film reviews களை fillers மாதிரி எழுத சொல்லி இப்படி ஒரு சூப்பர் போஸ்ட் கரந்திட்டேன் பார்த்தீங்களா? விமர்சனத்திற்கு முன்னாடி அனைத்தும் simply superb. படம் எப்படி இருந்தா நமக்கு என்ன......

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

mothathiila naalu pera pottu thallanum nallannam vandhal dhhan samayalarai pakkam etti paarpingla??romba aniyayam....oru vishayathila otthumai....naan enna thaan vagai vagaiyai samaichalum,naan petra rathinathukku appa (ore naalil)neiyyai aasayai kotti seiyum thagidu thattham samayal dhhan pidikkum.aadikku orudharam,ammavasaikku orudharam nuzaindhu..naangallellam nalamaharaja vaarisu enru rengamani udhar vidum nerathil mattum,naan vera vazhi illamal,aamam aamam periya ayya...enru ppatttu padi kondirukkiren...ella thangamanisum vaangi vandha varam...grrr....
padam paarka aasai illai...ungal vimarsaname podhum enru rengamani solla sonnar...
nivi.

ஸ்ரீதர், USA said...

டுபுக்காரே!

என்னட இது1 சுய சமயலைப் பற்ரி முதலில் எழுதிவிட்டு பின்னாடியே சினிமா விமரிசனமும் எழுதுறாரே என்ன connectionன்னு யோசிச்சேன். இப்போதான் புரியுது, இந்த சினிமாவும் உங்க சமையலைப் போலே அரை வேக்காடுன்னு சொல்ல வரீங்கன்னு! ரொம்பதான் குறும்பு!

you are back in full swing.

SAABBU said...

nice review sir.. good comparison..

shubakutty said...

u are doing a grt job man. after my hectic routine i use to log on to have some hilarious comedy. best wishes. write often. suggesting yr blog to all my freinds.

ச.சங்கர் said...

இந்தப் படத்தைப் பார்த்து விமர்சனம் எழுதுன உங்களுக்கு வாழ்த்துக்கள்..

Anytime one can be ready to risk eating your cooking rather than watching this movie I suppose:)

பாசகி said...

பதிவிலிருந்த ஸ்டில்லை பார்த்து பயந்துட்டு ரெண்டு மூணு தடவை படிக்காமயே போயிட்டேன்.

நீங்க இந்த மாதிரி படத்தை பார்த்தது மட்டுமில்லாம, ஸ்டில்லை போட்டு எங்களயும் பயமுறுத்தறீங்களே :)

ambi said...

//அஞ்சலி தேவி மாதிரி தேம்பி தேம்பி ரெசிப்பியை சொல்லுவார்//

:)))

இந்த சீனை நெனச்சு பாத்தேன், சிரிப்பை அடக்க முடியல. (சாரி மன்னி) :))

Anonymous said...

Potatoes are the real saviors .. i remember when i started cooking i used to ask how to cook different stuff when there are only a few vegetables and after a lot of grrrrrr ... i was told that the vegetables will be the same, but we need to cook them differently ... i will try your uralai kizhangu cup and become a lioness .... great post .. paavai

Unknown said...

eagerly waiting for ur next post anna...

nrispot said...

thanks for making me laugh like crazy.....Singam and Pannikutty adaptation was great....

கார்த்திக் பிரபு said...

தல நலமா மறுபடி வந்துருக்கேன் சில பதிவுகள் போட்டிருக்கே நேரம் இருக்கும் பொது பாருங்க

Dubukku said...

ராப் - வங்கக்கா...நலமா...வாழ்த்துறதா பார்த்தா நக்கல் விடற மாதிரி இருக்கே :)

துபாய் ராஜா - ஆமாங்க கொலவெறியோட தான் திரியறோம்...:)) சிங்கம் - நக்கல் ஜாஸ்திங்கோவ் உங்களுக்கு. அடிக்கடி டுப்புக்க முயற்சி செய்கிறேன் :))

காயத்ரி - புது ரெசிப்பியா..கண்டிப்பா தங்கமணி கிச்சன் உள்ள விட மாட்டார் :))

பொற்கொடி - வாங்க....நீங்க சாம் ஆண்டர்சன் ரசிகப் பேரவையா..?:)) அவரப் பார்த்தது இல்லையா?:)) அவருக்கு இவர் எவ்வளவோ பரவாயில்லீங்க

வெட்டிப்பயல் - சிங்கமா....உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா

அறிவிலி - எல்லா மொக்கை படமும் நான் பார்ப்பேங்க

ராம்ஜி - ஆமாங்க எல்லா மொக்க படமும் பார்ப்பேங்க...தொழில் கத்துக்கிற ஆர்வம் தான் :)))

மகேஷ் - நீங்க வேற நான் படம் போட்ட பத்தாவது நிமிஷத்துல எல்லாரும் ப்ளாட்...சோ சிங்கிளா தான்

கார்த்திக் - நன்றிங்கோவ்

சிங்கக்குட்டி - ஓ அப்பிடியா...ஸ்ஸ்ஸ் சரி :))

பாஸ்டன் - ஹீ ஹீ :)) உங்க கண்ணு படக்கூடாதுன்னு தான் நடுவுல ஒரு வாரம் கேப் விட்டேன் பார்த்தீங்களா :))) ஜோக்ஸ் அப்பார்ட்...உங்க எதிர்பார்ப்பு கிலியைக் கிளப்புகிறது எனக்கு

நிவி - ஆஹா உங்க வீட்டுல ரங்கமணி நெய்ய விட்டு சமாளிப்ஸா...சூப்பர் ஐடியாவா இருக்கே இது...ரங்கமணிக்கு தாங்க்ஸ் சொல்லுங்க..மனுஷன் கிட்ட நிறைய கத்துக்கனும் போல இருக்கே

ஸ்ரீதர் - ஐய்யையோ என் சமையலையும் சேர்த்து அரைவேக்காடுன்னு சொல்லீட்டீங்களே இப்படி...:(((

சாபு - மிக்க நன்றி நண்பரே

சுபா - ரொம்ப டேங்க்ஸ்ங்கோவ் மெயிலில் சொன்ன மாதிரி உங்க தொடர்ந்த ஆதரவுக்கு மிக்க நன்றி.

சங்கர் - அவ்வளவு ரொம்ப மோசம் இல்லீங்க இந்தப் படம். கொஞ்சம் ஒரிஜினல் சரக்கையும் சேர்த்து வேற நடிகர்களையும் போட்டிருந்தாங்கன்னா தேறியிருக்க வாய்ப்பிரிந்திருக்கும்.

பாசகி - ஹி கீ

அம்பி - ஹா ஹா உனக்கு இருக்குடி :)))

பாவை - ஹா ஹா ...நீங்களும் சமையலரசியாக வாழ்த்துகள். ராயலிட்டியை மறந்திராதீங்க

காயத்ரி - சாரி நடுவுல ஹாலிடே போயிட்டேன் அதான்

என்.ஆர்.ஐ பாட் - மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு

கார்த்திக் - வணக்கம்ண்ணா - உங்க புண்யத்துல நல்லா இருக்கேன்...கண்டிப்பா வருகிறேன்.

மங்களூர் சிவா said...

/

"கிழிக்கும்...சிங்கம் சிங்கிளா சமைச்சா...கிச்சன் பன்னிங்க கூட்டமா வந்து கும்மியடிச்சிட்டுப் போன மாதிரி ஆயிடும்...
/

:)))))))))))
வாழ்க அண்ணி

மங்களூர் சிவா said...

மத்தபடி சினிமாவிமர்சனம் பத்தி , கண்டிப்பா இந்த படம் பாக்கப்போறதில்ல அப்புறம் எதுக்கு
:))

Post a Comment

Related Posts