Monday, April 27, 2009

உதவி - வருத்தங்கள்

போன பதிவில் வலையுலக நண்பி பொயட்ரீ சார்பாக ஒரு உதவி கேட்டிருந்தேன். வந்த பின்னூட்டங்களில் ஸ்ரீதர் நாராயணன் உங்களின் இந்த பதிவே பொறுப்பில்லாமல் இருக்கிறது என்று கூறியிருந்தார். அவரின் அந்த குற்றச்சாட்டை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். விஷயத்தை விவரமாய் கூறாமல் ஏனோ தனோ என்று போட்டதில் வட தென் துருவங்களுக்கு போய் வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமைக்கு பதில் அவர் ஏதோ அம்மாபட்டிக்கு போய் வந்த மாதிரி ஆகி, டி.வி.யில் அரைமணி நேர கச்சேரி ஸ்லாட்டுக்கு பிச்சையெடுப்பது மாதிரி ஆகிவிட்டது. பத்ரியின் அரைமணி நேர டி.வி. ஸ்லாட் பின்னூட்டம் எனக்கு மிக மிக எள்ளும் தொனியில் பட்டது (and felt very rude and offensive) ஆனால் தவறில் எனக்கும் பங்கு உண்டு. விஷயத்தை இன்னும் விவரமாய் பதிந்திருக்கலாம்.


விஷயத்துக்கு வருவோம். வட துருவத்துக்கோ தென் துருவத்துக்கோ ஏதோ ஒரு துருவத்துக்கு போவதே பெரிய விஷயம். இதைப் பற்றி சில ஹாலிவுட் படங்களே எடுத்திருக்கிறார்கள்.. ஆனால் சரஸ்வதி காமேஸ்வரன் ஏகப்பட்ட பிரயத்தனங்களுக்குப் பிறகு இரண்டே இரண்டு பெண்மனிகள் கொண்ட குழுவில் எந்த ஸ்பான்சரும் இல்லாமல் தன் சுயமுயற்சியில் இரண்டு துருவங்களுக்கும் 2007ல் போய் வந்திருக்கிறார். இவர் இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றிருப்பதாக நண்பி பொயட்ரீ கூறுகிறார்.

பத்ரீ மற்றும் ஸ்ரீதர் நாராயணன் கூறிய குறிப்புகள் பதிவுகள் அவர் அப்பொழுதே இங்கே மற்றும் இங்கே லைவாக விவரமாக அன்றாட குறிப்புகளாக படங்களுடன் பதிந்திருக்கிறார்.

இவரின் இந்த இரண்டு துருவங்களுக்கும் சென்று வந்த முதல் இந்தியப் பெண்மணி தகவல் சரியான முயற்சி இல்லாமல் இந்த பெருமை சரியாக வெளியே வராமல் போய்விட்டது. இப்பொழுது சமீபமாக 2010ல் இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் ஒரு பெண்மணிக்கு "இதே இரண்டு துருவங்களுக்கும் போகப் போகும் முதல் இந்தியப் பெண்மணி" என்ற தவறான பட்டத்தை ஊடகங்கள் வழங்குவதைப் பார்த்து நண்பி பொயட்ரீ கொதித்துப் போய் எழுந்து உதவ முடியுமா என்று கேட்டு வந்தார். அதுவும் எப்பொழுது.. செய்தியைப் பரப்பிக்கொண்டிருக்கும் எல்லா ஊடகங்களையும் ஆன மட்டும் தொடர்பு கொண்டு எழுதி பயனில்லாத போது.2010ல் பயணிக்கப்போகும் பெண்ணின் குழு அமைப்பாளருடன் பேசியும் பயனில்லை. எல்லாமே (Daily India, ANI International and Felicity Aston) கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது.

ஒரு விஷயத்தை தெளிவு படுத்திவிடுகிறேன் - முன்னால் அவர் எனது ப்ளாகில் பின்னூட்டம் இட்டிருந்தாலும் நண்பி பொயட்ரீயை எனக்கு இந்த விஷயத்தின் போது தான் அறிமுகம் கிடைத்தது. நம்மூர் பெண்மணியின் பெருமையை யாருக்கோ வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் ஆன மட்டும் முட்டிப் பார்த்துவிட்டேன் இப்பொழுது வலைப்பதிவுகள் மூலமாகவாவது செய்தியைப் பரப்பி உதவி கிடைக்குமா என்று கேட்ட போது உடனே பதியவேண்டும் என்று தோன்றியது.


நான் பதிவில் போட்டதை மற்றவர் உல்டா பண்ணிப் போட்டாலே கோவம் வருகிறது, பதிப்புலகில் இதுவே பெரிய சர்ச்சையாகுகிறது...ஆனால் ஒருவர் 2007ல் "முதல் இந்தியப் பெண்மணி" என்ற பெற்ற சாதனையை இப்பொழுது மறுக்கப்படும் பொழுது கொதிக்கவே செய்கிறது. இவரின் இந்த சாதனை முதலில் இமயத்தை தொட்ட இந்தியப் பெண்மணி, முதலில் விண்வெளிக்குப் போன இந்தியப் பெண்மணி என்ற வரிசையில் தான் நான் பார்க்கிறேன். இதுவே இதே இடத்தில் கல்பனா சாவ்லாவாக இருந்த்திருந்தால் உதவி புரிந்திருக்க மாட்டோமா? "ப்ளாக்ல போடு சந்தோஷப் படு அதுவே பெரிய சாதனை தான் ....ஐய்யோ வரலையேன்னு புலம்பக் கூடதூன்"னு பின்னூட்டம் போட்டிருப்போமா? அதுவும் பதிப்புலகில் இருக்கும் பத்ரி மாதிரியான ஆட்கள் இதைச் சொல்வது மிக மிக வருத்தமாய் இருக்கிறது. கல்பனா சாவ்லா மாதிரி சாதனையில் இது எந்த விதத்தில் குறைந்து விட்டது? உங்களால் உதவி செய்ய முடியாவிட்டாலும் பரவயில்லை...டி.வியில் அரைமணி நேர ஸ்லாட் என்றெல்லாம் அடுத்தவரின் சாதனையை ரொம்பவே கேவலப் படுத்தாதிர்கள்.

என் போன்ற ப்ளாகில் செய்தி வருகிறது என்பதால் அவரின் சாதனை எந்த விதத்திலும் குறைந்ததில்லை

16 comments:

Kavitha said...

Thank you for taking up the cause.

Kavitha said...

Sara(swathy) went to North Pole in the same team as Ajeet Bajaj. http://www.limcabookofrecords.in/record_gallery.asp?sid=4229&catname=The%20Human%20Story
Ajeet was sponsered by Indian govt and publicized by NDTV. But when we contacted NDTV, they did not even respond.

Sridhar Narayanan said...

Thanks a lot for the URLs. நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.

போன பதிவில் நிறைய பெயர்களுடன் பின்னூட்டங்கள் வந்திருந்தன. உங்களுக்கு மிகவும் உதவியாக இருந்திருக்கும். விடுபட்ட பெயர் உங்கள் நண்பர் உண்மைத் தமிழன். அவர் ஜெயா டிவியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன்.

ஒரு Marketing Flier போல கோப்பு ஒன்று தயாரித்து வெகுஜன பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களுக்கு அனுப்பலாம். NDTV-ல் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள் என்பதை கேட்கும்பொழுது வருத்தமாக இருக்கிறது.

Social Networking என்றால் Blogs மட்டுமல்ல. Orkut, Facebook, Linkedin, Twitter போன்ற பலவகையான இலவச சேவைகள் இருக்கின்றன.

Facebook/Orkut-ல் பிரபலபடுத்த முயற்சியுங்கள். நிறைய நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் Orkut-ல் இருக்கிறார்கள். கண்டிப்பாக கவனம் பெறும். அங்கேயே நிறைய முகவரிகளும் கிடைக்கும்.

உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துகள்.

Badri Seshadri said...

வருந்துகிறேன். அரை மணி நேர ஸ்லாட்டுக்குப் பிச்சையெடுக்கச் சொல்லவில்லை நான்.

அய்யோ, யாரும் கவனிக்கவில்லையே என்று அங்கலாய்க்கவேண்டாம். இணையம் மிகப் பெரிய மீடியம். இதில் நல்லபடியாக, சென்றுவந்த விஷயத்தை நிறைய பதிவுகளாகப் போட்டு, பல படங்களைச் சேர்த்தால், தானாகவே பத்திரிகைக்காரர்கள் வருவார்கள் என்றுதான் சொல்ல நினைத்தேன்.

பதிவுகள் வெறும் நான்கு பேருக்கு மட்டும்தான் போகிறது என்று நினைப்பது தவறு. எனக்குத் தெரிந்து பதிவுகளில் வருவதைப் பார்த்து தமிழ் தொலைக்காட்சிகளும் இதழ்களும் நேர்காணல் செய்வதை இப்போது ஆரம்பித்துள்ளனர்.

குப்பன்.யாஹூ said...

வருத்தப் படாதிஈவ அண்ணாச்சி.

கனிமொழி அக்காட்டா என் மனைவி மூலமா சொல்லிருக்கேன், முரசொலியில் வண்டு விடும். (முடிந்தால் முதல்வர் பார்வைக்கும் போகும் செய்தி).

அதேபோல வைகோ உதவியாளர் அருணகிரிக்கு மெயில் அனுப்பி இருக்கேன், சங்கொலியில் யும் வந்துரும். (spoke to arunagiri over phone as well)

எத்தனையோ பதிவுகள் எங்கள் சந்தோசத்திற்காக, பின்னிரவு விழித்து நீங்கள் எழுதியது உண்டு. அந்த நன்றி கடனுக்கு ௦.௦௦௦௦1% naan செய்யும் உதவி இது.

அன்புடன்

குப்பன்_யாஹூ

Kavitha said...

I knew R has readers who would be interested in helping for a real achievement. Thank you very much kuppan_yahoo.

Guruprasad said...

Swamy, just because I have few friends and you happen to be one of the unfortunate ones, I have tagged you for a post I have done...mudinja ethavathu paarthu pannunga! http://ahambaavam.blogspot.com/2009/04/most-versatile-acting-moments.html

Dubukku said...

பொயட்ரீ - திரும்பவும் நன்றி சொல்லுமளவுக்கு பெரிதாய் ஒன்றும் செய்துவிடவில்லை. உங்கள் நண்பிக்கு உரிய கௌரவம் கிடைத்தால் அதுவே மகிழ்ச்சி.

ஸ்ரீதர் - மிக்க நன்றி நீங்கள் நான் பொறுப்பில்லாமல் பதிந்ததை சுட்டிக்காட்டிய பின் தான் எனக்கும் உரைத்தது. சில திசைகளில் இப்பொழுது கொஞ்சம் விஷயம் நகர ஆரம்பித்திருக்கிறது...பார்ப்போம். உங்கள் மற்ற யோசனைகளுக்கும் மிக்க நன்றி.

பத்ரி- உங்கள் புரிந்துணர்வுக்கு மிக்க நன்றி. ஒருவேளை எனது பதிவு உங்களைப் புண்படுத்தியிருக்குமேயானால் வருந்துகிறேன். நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இங்கே விஷயம் கைமீறிப் போய்க்கொண்டிருப்பதால் தான் தெரிந்த நண்பர்கள் மூலமாக முயற்சி எடுக்கலாம் என்று பதிவு. உங்கள் யோசனைகளுக்கு மிக்க நன்றி.

குப்பன் யாஹு - வாங்க அண்ணாச்சி....என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உங்களுக்கு கோடானு கோடி நன்றி. எனது பதிவுகளுக்கு இப்படி ஒரு உபயோகம் இருப்பது பற்றி எனக்கே இன்று மகிழ்ச்சி :))) நீங்கள் ரொம்ப அடக்கமாக சொன்னாலும் இது மிகப் பெரிய உதவி...மிக்க நன்றி அண்ணாச்சி...நம்மூர் பெருமைய நிலை நாட்டிடீங்க :)))

குரு - ரொம்ப பிடித்த ஒரு விஷயத்தில் கூப்பிடிருக்க ....போடாமல் இருப்பேனா..கொஞ்சம் டைம் எடுத்தாலும் கண்டிப்பாக போட்டுவிடுகிறேன்.

கார்த்திகேயன் said...

டுபுக்கு அண்ணா, மன திருப்திக்காக செய்யும் காரியங்களுக்கு விளம்பரம் எதற்கு? (இது எனது சொந்த கருத்து.)

Dubukku said...

கார்த்திகேயன் - கார்த்திக் இது விளம்பரத்திற்காக அல்ல...முதல் இந்தியர் என்ற உரிய உரிமைக்காக அவரது நண்பர் எடுக்கும் முயற்சி. ( அப்புறம் இந்த அண்ணாலாம் வேண்டாமே...என்ன உங்கள விட இரண்டு வயது சின்னவன் தானே :) நானே உங்களை அண்ணான்னு கூப்பிடலை :))))

கார்த்திகேயன் said...
This comment has been removed by the author.
Kavitha said...
This comment has been removed by the author.
கார்த்திகேயன் said...

டுபுக்கு அண்ணா,மன்னிக்கவும்.தங்கள் வலை பூவினை விவாத மேடை ஆக்கியதற்கு,நிற்க.சகோதரி "POETRY",அவர்களே
நான் மீண்டும் கூறுவது அவரது முயற்சியை ஏளனம் செய்வது அல்ல.இந்தியாவில் இருந்து செல்வதால் ஊடகங்கள் அவருக்கு முக்கியத்தும் தருகின்றன.பொது நலன் கருதி செய்கின்ற செயல்கள் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நமது விவாதத்தின் முலம் சரஸ்வதி காமேஸ்வரன் முயற்சி மக்களிடையே சென்றடைவதில் மகிழ்ச்சி.தமிழர் & இந்தியர் என்பதனையும் கடந்து உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே என்பதில் மகிழ்ச்சி கொள்வோம்.நன்றி

Anand, Salem said...

Dear Dubukku,
please ask poetry to send mail to Charu nivethita at charunivedita@charuonline.com
charu.nivedita.india@gmail.com.
I heard dinamalar Ramesh is his best friend. He can help in this matter.

Kavitha said...

Sara has submitted the documents to Limca Book of Records. Will update after hearing from them.

Anand: Thank you for your suggestion. I'll write there too.

Raj said...

நீங்கள் அணுகிய ஊடகங்களை இனியும் நம்பிக் கொண்டிருப்பதை விட, அவற்றின் போட்டி ஊடகங்களான Reuter, Associated Press, PTI முதலியவற்றை அணுகலாமே. இன்னும், நம் நாட்டு TV சேனல்களான NDTV, Times Now, CNN-IBN ஆகியவற்றையும் அணுகலாமே.

Post a Comment

Related Posts