Wednesday, April 29, 2009

ஜொள்ளித் திரிந்த காலம் - 2.8

இந்த தரம் ஒரு குறும்படம்.

தேர்வு சமயம், தொடர்ந்து படிக்க வேண்டிய கட்டாயம்/ கால கட்டம், உறைய வைக்கும் மைனஸ் நான்கு டிகிரி குளிர்...தொடர்ந்து அரைமணி நேரம் வெளியே நின்றால் நடுவில் முடிந்த போது காரிலோ பக்கத்தில் இருக்கும் கடையிலோ வீட்டிலோ போய் ஹீட்டரில் கை கொஞ்சம் குளிர் காய்ந்து ஏகப்பட்ட கமிட்மெண்டுடன் நடித்துக் கொடுத்த மூவருக்கும் மனமார்ந்த நன்றி. அதை விட ஏதோ கத்துக்குட்டி கேட்கிறானே என்று பெருந்தன்மையாய் அவர்களை நடிக்க அனுமதித்த அவர்களது பெற்றோர்களுக்கு கோடானு கோடி நன்றி.

இது மூன்றாவது குறும்படம் தான். இன்னும் கற்றுக்கொள்ளும் மாணவனாய் எடுத்த படம் தான்.எந்த வித பொரஃபஷனல் உபகரணங்களையும் உபயோகப் படுத்தாமல் சாதாரண கேம்கார்டரில் எடுத்த படம் தான். ஏதோ பார்த்து பெரிய மனது பண்ணி உங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கள், நன்றியுடையவனாய் இருப்பேன். இப்பொழுது வெகு சமீபத்தில் கேமிரா உட்பட பொரபஃஷனல் சமாச்சாரங்கள் வாங்கியுள்ளேன் அதனால் அடுத்த குறும்படத்தில் ஒலி மற்றும் ஒளி இன்னும் கொஞ்சம் தரமாகவே இருக்கும் என்று நம்புகிறேன் (படத்தின் தரம் அல்ல :) ). மற்றபடி அதே படபடப்பு மற்றும் எதிர்பார்ப்புடன் உங்கள் பின்னூட்டத்திற்கு காத்திருக்கிறேன்.

40 comments:

Anonymous said...

kalakalls - come out really nice n can see your improvement film on film. all the best!

Kavitha said...

Very interesting twist - though I was expecting one - laughed out loud at the girls' expression :). Some more improvement on lighting would make it better.

ILA (a) இளா said...

Super-ஆ இருக்கு(ம்).

வூட்டுக்கு போயி பார்த்துட்டு இன்னொரு சூப்பர் சொல்றேன்

ஜியா said...

கலக்கல் தல... அருமையா வந்திருக்குது... எப்படித்தான் ஆடாம, அசையாம படம் புடிக்கிறீங்களோ?? :)

Anonymous said...

என்னய்யா இது நிலவரம் புரியாம குறும்படம் எல்லாம் போடுற, ரொம்ப நாள் பதிவுலக பக்கம் வரலியா. இப்போ ஈழம் தான் முக்கியமான தலைப்பு அது பத்தி ஏதுன்னா இருந்தா ஒன்ன வுடு
வன்னிய ஒற்றுமை ஓங்குக

sriram said...

வழக்கம் போல ஒண்ணும் புரியல, ஒவ்வொரு படத்துக்கும் கூட ஒரு கோனார் நோட்ஸ் போடவும். கலக்கல், மானே, தேனே பின்னூட்டம் போட்டவர்கள் எதாவது புரிந்திருந்தால் இந்த மடையனுக்கு (எனக்கு) தெரிவிக்கலாம்
என்றும் அன்புடன்
ஸ்ரீராம் Boston USA

Anonymous said...

:-))

அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

Ayya Dubukku, Enakku Avanga enna pesaranganne puriyala.. Sub title podungappa..

Srini
Sharjah

கார்த்திகேயன் said...

டுபுக்கு அண்ணா,தலைப்பை வைத்து வந்ததற்கு... அத விடுங்க,படத்தின்(?)காட்சி கோர்வைகள் மிகவும் மோசம்.காமிரா கோணங்கள் சரியாக இல்லை.கத்திரி பிடிப்பதற்கு இன்னும் பயிற்சி தேவை.அடுத்த முறை பார்க்கலாம்.(என்னடா "ஜொள்ளித் திரிந்த காலம்" வர வர ரொம்ப மொக்கைய போய்டிருகேனு பார்த்தேன், உங்க கவனம் முழுவதும் "இயக்குனர் இமயம்" ஆவதற்கு போய் விட்டதா?):)

குப்பன்.யாஹூ said...

தல படம் சூப்பர் . அதுவும் ஒளிப்பதிவு, லொகேஷன் , காச்த்யும்ஸ் சூப்பர்.

நம்ம கோடம்பாக்கம் (எம் ஜி ஆர, விஜய் ) ஸ்டைல் மாதரியே, ஹீரோ எப்போதும் பொண்ணுங்ககிட்ட லவ் சொல்ல மாட்டாரு அல்லது, ஹீரோ ஹீரோஇன் பின்னால சுத்த மாட்டாரு. அங்கதான் இடிக்குது லாஜிக் .

முழுவதும் இசை இல்லாமல், வசனங்களும் இருந்து இருந்தால் இன்னும் அருமையாக கூட இருந்திருக்குமோ., ஆனால் நல்ல பின்னணி இசை தேர்வு.

ஹீரோ பார்ப்பதற்கு கிரிகட் சடகோபன் ரமேஷ் போல இருக்கிறான்.

இறுதி டைட்டில் தவறு உள்ளது.

கதை, திரைக்கதை, இசை, வசனம், இயக்கம், ஒளிப்பதிவு, விநியோகம், விளம்பரம்

இயக்குனர் எவரஸ்ட் டுபுக்கு

என்று இருந்து இருக்க வேண்டும்.

விமர்சன குழு மதிப்பெண்கள் - 68.

இந்திய தொலைகாட்சி வரலாற்றில் முதலில் எந்த தொலைகாட்சியில் வர போகுது உங்களின் இந்த காவியம்.(வலைக்கு வந்து sila மாதங்களே ஆன).


குப்பன்_யாஹூ

Kathir said...

நல்லாயிருந்தது தல....

:))

குப்பன்.யாஹூ said...

The starting music remembers OUTSOURCED film.

Munimma said...

first nammala izhukarathu, super bg muzic. kalaks.

konjam emotions alai mothichu, but adjust pannikarom.

steady camera. editing was a bit jerky, may be you meant it that way. yeah?

you stayed true to your style with the theme.

Anonymous said...

Hi Dubbuku,

The short film is very good. The photography is much clear this time(Thanks to your new camera). The editing shows very good improvements. The girls acted very natural compared to the guy. Overall I could see very good improvements. Hats off to you Dubukku. Keep rocking!!!

Regards,
Sakthi

Anonymous said...

நல்லாயிருந்தது தல....

:))


அன்புடன்
கார்த்திக்

Bhaskar said...

The punching of fist in the last shot did made me to watch padaiyappa again !!. I know its not too appropriate to mention thalaivar to unnal mudiyum thambi.. still !!.

I am not sure if the entire clip features one day (the dress didnot change, so maybe a day's events) and its hard to imagine that he is following her for such a long time, since the last shot is shown after street lights are on..

The first shot shows the guy coming out of airport/station with a suitcase, to justify his dialogue of being new to the place and trying to get direction for indian store, the last scene of fist pumping, showing his true intention is drooling, totally goes against the first one !!. Logically not making too much sense..In UK terms, maybe I am daft and not understood it correctly!!

Its a very good effort from you and hearty congragulations.. It is so much easy to just post critical comments !!!.

Veera said...

Dear டுபுக்கு...

இந்த குறும்படம் அருமை.. எல்லாம் நன்றாக வந்திருக்கு... ஒலி.. ஒளி... காட்சி அமைப்பு... எல்லாம்... அந்த பெண்களோட ஆங்கில உச்சரிப்பு perfect... ஆனா கதாநாயகனோட ஆங்கில உச்சரிப்பு கொஞ்சம் சரி இல்லையோ-ன்னு தோணுது... உதாரணம்.. சாரி...

தவறாக நினைக்க வேண்டாம்.. என்னோட வட இந்திய நண்பர்கள் என்னை இதற்காகத்தான் கிண்டல் செய்வார்கள்...ஆங்கில உச்சரிப்பு... சாரி.. சாக்லேட்... இப்படி எல்லாம்... எப்படியும் படம் எடுக்கும்போது ரெண்டு மூணு டேக் போயிருக்கும்... கொஞ்சம் கவனமாக இருக்கலாமே... இவ்ளோ கஷ்டப்பட்டு படம் எடுத்து இதை மட்டும் ஏன் விடணும்.... it is not a mandatory thing...but if it is also there, film will be still good...

மறுபடியும்....

தவறாக நினைக்க வேண்டாம்... என்னடா இவன் வெறும் குத்தம் சொல்றதையே பொழப்பா வச்சிருக்கானே-ன்னு.....

வீரா....

dubukudisciple said...

ellam nalla irunthuchu... ana enaku thaan onnume puriala....
bgm remba nalla irunthichi....

dubukudisciple said...

ellam nalla irunthuchu... ana enaku thaan onnume puriala....
bgm remba nalla irunthichi....

Anonymous said...

dear dubukku sir,

back ground music and clear visuals are simply great,vasanam konjam puriyala illa ennoda audiola problem irukkannu theriyala.good effort.i really do appreciate the sincerity in learning and mastering the subject.all the best.you will certainly win.
nivi.

ஜொள்ளுப்பாண்டி said...

தல கலக்கலா இருக்கு கான்செப்ட்... நல்லா சிரிச்சேன்..:))) Congrats...!!

rapp said...

hi anna, super. but concept konjam, jhumpa lahiri yoda 'hell heaven' la varra maadiri konjoondu irukku:):):)

but naan ipdillaam kurai kandupidikirennaa, neenga periya director listla senthutteengannu artham:):):)

roguegene said...

Hi Dubuku.. Unga short film nalla irundhuchu... amateur work a irundhalum.. nariya vishyam nallave irundhuchu.. camera angles.. editing.. bckgrnd song selection.. dialogue pesura scenes thavira matha edathula acting nalave irundhuchu... adutha dadavai.. backgnd score ku .. fulla sound track podama.. konjam interspersed a irundha nalla irukum...

Girl of Destiny said...

dubukku anna... this effort is much better than your Holiday. Apparently you're better in drooling than in holidaying! ;-)

Kidding apart, I liked the style of editing which I felt was in tune with the BGM.
Plus it didn't strain the eyes.. though you had put up disclaimers, the pic quality except the for last scenes was very good!

You're getting better and better! Congrats on a good effort.

Dubukku said...

அனானி - மிக்க நன்றி உங்க ஊக்கமான பின்னூட்டத்திற்கு. ஒரு டம்மி பேராவது வெச்சிக்கலாமே?

பொயட்ரீ - மிக்க நன்றி மேடம். லைட்டிங்...முக்கியாமாக அந்த ரயில்வே ஸ்டேஷனில் சில இடங்களில் இல்லாமல் இருக்கிறது ஆனால் அங்கு பெர்மிஷன் மற்றும் இன்ஷூரன்ஸ் இல்லாததால் அதெல்லாம் மேனேஜ் செய்யமுடியவில்லை. அடுத்த தரம் கவனம் கொள்கிறேன் நன்றி.

இளா - இந்த நக்கலு தானே...இன்னும் வீட்டுக்கே போகலையா...இல்ல சொல்ற மாதிரி ஒன்னும் பெரிசா இல்லையா :))

ஜி - மிக்க நன்றி தல. ட்ரைபாட் உபயோகப் படுத்தினால் ஷேக் ஆகாதே...

அனானி - வந்து கருத்து சொன்னதுக்கு மிக்க நன்றி.

ஸ்ரீராம் - யோவ்...இதெல்லாம் ரொம்ப ஓவர் நக்கலு...இதுல புரியறதுக்கு என்ன இருக்குங்கோவ்....ஒரு பையன் பொன்னு பின்னாடி சுத்தறத தான் சொல்லியிருக்கேன்...ஏனுங்க ஆபிஸ்ல ஒளிச்சு ஒலிச்சு பார்த்தீங்களா? :)

கார்த்திக் - மிக்க நன்றி ஹை தல.

ஸ்ரீனி - அண்ணே அந்த இடத்துல அந்த டயலாக் ரொம்ப முக்கியமில்லைங்கிறதால தான் மீசிக் வால்யூம கூட்டியிருந்தேன் அந்த இடத்துல. அவங்க ஜஸ்ட் நேரா போய் பீச்சாங்கை பக்கம் திரும்புன்னு வழி சொல்றாங்க அவ்வளவு தான்

கார்த்திகேயன் - மொத்தமா விளாசி தள்ளிட்டீங்க...மனதில் பட்டத்தை சொன்னதிற்க்கு மிக்க நன்றி. இமயம்லாம் இல்லீங்கோவ்....ஜஸ்ட் லைட்பாயாவது மக்கள் நம்மள ஒத்துப்பாங்களான்னு முயற்சி பண்ணிப் பார்க்கிறேன் அவ்வளவு தான்

குப்பன் - வாங்க சார். டயலாக் மட்டுமே உள்ள படம் ஒன்னு அடுத்து முயற்சி செய்யனும் பார்ப்போம். உங்க தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. எவரெஸ்ட் - ஏங்க மசாலா படம்ன்னு சொல்லாம சொல்றீங்களா :))

கதிர் - மிக்க நன்றி ஹை

முனிம்மா - வாங்க மேடம். மிக்க நன்றி ஹை ஆமா எடிட்டிங் அப்படி இருக்கனும்ன்னு முடிவு செஞ்சு செய்தது. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.

சக்தி - வாங்க சக்தி. இது புது கேமிரா வைச்சு எடுத்ததில்லை. அடுத்த படம் தான் புது கேமிரா வைச்சு எடுக்கனும். உங்க ஊக்கமான பின்னூட்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஒரு சிலருக்காவது பிடிச்சிருக்குன்னு நினைக்கும் போது கொஞ்சம் சந்தோஷமா இருக்கு.


பாஸ்கர் - அந்த கடைசி ஷாட் அந்தப் பையன் விடலைப் பருவத்திற்கே உரித்தான குறும்புத்தந்துடன் இருக்கிறான்னு காட்ட தான். அதுவும் வேணும்னே ரொம்ப மோசமான ஆக்சன்ட் போட்டு நடிக்கிறது எல்லாமே குறும்புக்காத் தான். மத்தபடி நீங்க சொன்ன மாதிரி ரொம்ப லாஜிக் எல்லாம் யோசிக்காம ஜாலியாக இருக்கட்டும்ன்னு எடுத்தது அவ்வளவு தான். கிரிட்டிக் கமெண்ட் போடுவதற்க்கெல்லாம் யோசிக்காதீர்கள். தவறாகவே எடுத்துக்கொள்ள மாட்டேன்.

வீரா - கவலையே படாதீர்கள். தவறாகவே எடுத்துக் கொள்ளமாட்டேன். மனதில் பட்டதை தாராளமாக சொல்லலாம். அந்த உச்சரிப்பு வேண்டும் என்றே அந்தப் பையன் கேலிக்காக செய்வது மாதிரி சித்தரிக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் நக்கல் விட மாட்டோமா அது மாதிரி அந்தப் பையன் வேண்டும் என்று செய்கிறான். அது புரிகிற மாதிரி இலையோ...எனது தவறாக இருக்கலாம்.


டிடி - வாங்க மேடம் ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கீங்க..உங்களுக்கும் புரியலையா...சும்மா ஒரு பைய்யன் பெண்களை கலாசுகிறான் அவ்வளவுதான். பிஜியெம் - யுவன் சன்க்கர் ராஜ பின்னி எடுத்திருக்கிறார் எனக்கும் ரொம்ப பிடித்தது இந்த பிஜியெம்.

நிவி - மிக்க நன்றி மேடம் உங்க வாழ்த்துக்கு. அந்தப் பெண்களின் வசனம் ரொம்ப முக்கியமில்லை என்று தான் அங்கே பிஜியெம் கொஞம் தூக்கலாக இருக்கிறது. அந்தப் பையனோடு வசனம் புரிந்தது தானே?

ஜொள்ளுப்பாண்டி - வாங்கண்ணெ மிக்க நன்றி நீங்க ரசித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ராப் - ஐய்யைய்யோ மேடம் இப்படி அனயாசமாக குண்டைத் தூக்கி போடுறீங்களே...அந்த ஆள் யாருன்னு கூட தெரியாது எனக்கு :))) மிக்க நன்றி நீங்க குறை கண்டுகினதுக்கு ;)

க்ரீன் ரோக் - மிக்க நன்றி வாத்யாரே. நீங்க சொன்ன மேட்டர் யோசித்தேன் ஆனால் அது எடிட்டிங்கில் போட்டு பார்த்த போது த்ரிப்தியாக இல்லை அதனால் இப்படி கட் செய்துவிட்டேன். அடுத்த தரம் கண்டிப்பா முயற்சி செய்கிறேன்.

கேர்ல் ஆஃப் டெஸ்டினி - மிக்க நன்றி மேடம். நீங்க சொல்ற மாதிரி ஒவ்வொரு குறும்படமும் கத்துகிறதுக்கு தான் எடுக்கிறேன். அடுத்த முயற்சி ரொம்பவே சின்சியராய் இருக்கும் அதில் தான் எனக்கு ரொம்பவே எதிர்பார்ப்பு இருக்கும் பார்ப்போம்.

Thirumaran said...

Good Movie...
Background music is superb.
where you got that music?
could you please tell me the background music file name.

deepa gowtham said...

Hi Ram,

Marupadiyum oru nalla muyarchi. Padam sirikka vaithathu. Cinematography is improved a bit this time. BG Score also came out well. The first part of the music is not too impressive i should say.

On the shot - after the girls exclaim "What" and start directing him, the camera focussed the guy and there is a bulb behind his head. If it could have been on the other end - the girl's side, could have been much symbolic (for the tamil audience) and been hilarious too. Neat job. We really enjoyed the movie.

Anonymous said...

டுபுக்கு அண்ணா,வாங்க... நாங்களும் புதுசா கம்பெனி தொடங்கி இருக்கோம். அப்படியே வந்து பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.

Costal Demon said...

அண்ணே அண்ணே படம்லாம் ரொம்ப நல்லாயிருக்கண்ணே.... அடுத்த படத்துல எனக்கு ஒரு சான்சு கொடுங்கண்ணே... வில்லன் ரோலெல்லாம் நல்லா பண்ணுவேண்ணே... காலேஜுக்கு லீவெல்லாம் போட்டு நடிச்சுக் கொடுக்கிறேன்ணே.... :‍)

இப்போ சீரியஸ் மேட்டர். உங்க படத்துலேயே எனக்குப் பிடிச்ச படம்னா அது உங்க ரெண்டாவது படம்தான். கலக்கலா இருந்தது. சீரியசா படம் பண்ணனும்னு ஆரம்பிச்சுட்டீங்க... கலக்குங்க... அப்படியே நம்ம நடிப்பார்வத்தையும் கண்டுக்கங்க....:‍)

இராம்

JustATravellingSoldier said...

Unga Jolli thirintha kaalam experience ithula use aaguthu pola ?? :)

Dubukku said...

திருமாறன் - மிக்க நன்றி. இது புதுப்பேட்டை படத்தில் யுவன் சங்கர் ராஜா போட்டது.

தீபா கௌதம் - வாங்க மிக்க நன்றி உங்க டீட்டெயில்ட் பின்னூட்டதிற்கு. ம்யுசிக் யுவன்சங்கர் ராஜா புதுப்பேட்டை படத்திற்கு போட்டது. அந்த பல்பு ஐடியா மிகவும் ரசித்தேன். ஆனா அதை எடிட்டிங் போதோ படமெடுக்கும் போதோ கவனிக்கவில்லை :))) படம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி,

ராசுக்கண்ணு - வாங்கண்ணா இதோ வந்துக்கிட்டே இருக்கொம்...கம்பெனிக்கு வாழ்த்துக்கள்.

ராம்ஸ் - ஆஹா நீங்களும் இங்கன தானா. ஹாலிடே படம் பற்றி உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. எனக்கும் அது மிக பிடித்தது. நடிக்கிறதுக்கு சான்ஸ் குடுக்காமலா...நீங்க எப்படி முதல்ல வில்லனா பண்ணிட்டு ஹீரோவா ஆகுறீங்களா இல்ல டைரக்ட்டா ஹீரோவாவே இறங்கிடறீங்களா:))

JustATravellingSoldier - வாங்க சார். ஆமா நாம விட்ட ஜொள்ளுல ரெண்டு மூனு தேம்ஸ் தேத்தலாமே... :))

Anonymous said...

Dubukku sir, Camera kannai uruthama irukku. Dialogues en romba kuraiva vaikkireenga? Audio recording panrathula siramama? Illai visual effects-ku mukkiyathuvam kodukka asai padureengala? Ennoda personal opinion... humor is your strength. So neenga kooduthal dialogues podanumnu thonuthu enaku. Recently I watched some episodes of a sitcom "Two and a half men." Though most of the jokes are adult jokes, it was very impressive compared to the pathetic excuses of jokes we find in present day tamil movies and TV serials. I wish you will make such sitcom videos in tamil... of course, adult jokes illama, something clean like Mr.Bean. All the Best in whatever you do!

Vg said...

Really nice to watch ur video.. Excellent try.. :)
The gals expression when he asked for grocery was so cool.. :)

Voice clarity is not there.. :) Pls look into tat.. :)

Unknown said...

aha... arumaiii..... neer anga poi vutta mudal jolla ipdi sola varingalo...... kalakiteer voi.......(Goldmani Anni Note This Point) Dubukku Anna super naaaaaaaaaa.......

SurveySan said...

ஒன்னியும் புரீல. :(

துபாய் ராஜா said...

இதுல பாருங்க முதலாளி, (ஜொள்ளு) தொழில் ரகசியம் நல்லாருக்கு... :))

Anonymous said...

நன்றாக வந்து இருக்கிறது குறிப்பாக சரியான விகிதத்தில் வரும் முகக்காட்சிகள்(closeup), படகோண அசைவுகள்(Panning). என்ன அந்த கடைசி காட்சிக்கு முன்பு வருகிறதே அந்த ஆண் காட்சியின் அருகிலும், பெண்கள் உள்ளிருந்து வருவதை போல், தொடர்பு இல்லாமல் இருக்கிறது(left entry and exit, right entry and exit என்று சொல்வார்களே). ஒரு வேளை இப்படியே கொஞ்சம் நாள் என்று சொல்ல வந்தீர்களோ என்னவோ, தெளிவாக இல்லை. மற்றபடி அருமை.

வாழ்த்துகளுடன்,
பனிமலர்.

வல்லிசிம்ஹன் said...

real cool:)

Unknown said...

nice attempt Dubukku :)

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

ஹாய்! உங்க குறும்படம் குரும்பாக முடிந்துவிட்டது.ஆமா! அது எந்த ஊருப்பா?
http://andamantamizhosai.blogspot.com
அன்புடன்
க.நா.சாந்தி லெட்சுமணன்

Post a Comment

Related Posts