Tuesday, March 03, 2009

தமிழ்மண விருது - நன்றி

குழப்பங்கள் அதிகமாகும், மன உளைச்சல் தீவிரமாக இருக்கும். பணம் விரயமாவதை தவிர்த்தல் நல்லது. அடுத்த வீட்டுக்காரர் குட்மார்னிங் சொல்ல மாட்டார். வீட்டு ஆட்டுக்குட்டிக்கு சுகப்பிரசவம் ஆகும் என்று வரும் பேப்பர் ஜோசியம் மாதிரி கொஞ்சம் நிஜமாகவே குழப்பம் இருக்கிறது. கவனம் வேறு இப்போது வேறு பக்கத்தில் இருக்கிறது. அதனால் தான் இங்கே கொஞ்ச நாளாக எழுதவே இல்லை. இங்கே கூடுதலாக கொஞ்சம் லீவு போடலாம் என்று வேறு எண்ணம். இந்த சமயத்தில் தமிழ்மணம் விருதுகள் ரொம்பவே ஆறுதலாக இருக்கிறது.


வழக்கமாக போட்டி வெச்சிருக்காங்க ஐய்யா போய் வோட்டு போடுங்கன்னு சொல்லுவேன்...நீங்களும் உங்களுக்கில்லாமயான்னு போய் வோட்டு போடாம கரெக்ட்டா கவுதிருவீங்க. ஆனா இந்த தரம் என்னம்மோ சொல்லாமலே உங்கள ஏமாத்திட்டேன். பார்த்தா குறும்படத்துக்கு பர்ஸ்ட் ப்ரைசும், நகைச்சுவை பிரிவில் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. எனக்கே ஆச்சரியம் தாங்க முடியலை...பெரிய மனசு பண்ணி வோட்டு போட்டு செயிக்க வெச்ச அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா...!!!!!

எனக்கு இங்க எழுதாம முடியாது. இங்கே டெய்லி நிறைய பேர் வந்து பார்த்து ஏமாந்து கொண்டு இருக்கிறீர்கள் என்று எனக்கு தெரியும் ஸ்டட் கவுண்டர் சொல்லுது. உங்களை ஏமாற்றுவதற்கு ரொம்ப வருந்துகிறேன். ஆனால் ஏனோ தானோன்னு எழுதி கடுப்பேற்றுவதை விட இது எவ்வளவோ தேவலாம் என்று தோன்றுகிறது. நீங்களும் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன். பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ஸ்டேட்மென்ட் விடுவது மாதிரி தோன்றலாம் எனக்கும் தெரியும் ஆனாலும் இங்கே வந்து போய்க்கொண்டிருப்பவர்களுக்காக நீங்கள் அப்படி நினைத்தாலும் இதைச் சொல்லிக்கொள்கிறேன்.

அடுத்த வாரத்திலிருந்து கண்டிப்பாக முடிந்தாலும் முடியாவிட்டாலும் எழுதுகிறேன். மார்ச் 9ம் தேதிக்கு முன்னால் அடுத்த பதிவு கண்டிப்பாக இருக்கும்.


தமிழ்மண விருதுகளில் தேர்ந்தெடுத்ததிற்க்கு மனமார்ந்த நன்றி.

24 comments:

ILA (a) இளா said...

குறும்படம் என்னாச்சி? ஏதோ பேய் பெச்சாசெல்லாம் வரும்னு இருந்தோம்

வீணாபோனவன் said...

வாழ்த்துக்கள்.

-வீணாபோனவன்.

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள் டுபுக்கு!

ரொம்ப நாளா அப்ஸ்காண்டு!

Anonymous said...

வீணாப்போனவன் வாழ்த்தும்போது வெளங்காதவன் வாழ்த்தக் கூடாதா என்ன?

வாழ்த்துக்கள்!

Anonymous said...

வாழ்த்துக்கள் டுபுக்கு!

Anonymous said...

தல நாங்களும் வாழ்த்துவோம் தல!

Anonymous said...

தல நாங்களும் வாழ்த்துவோம் தல!

Anonymous said...

அண்ணன் டுபுக்கு அவர்களை மனதார வாழ்த்துகிறோம்!

கோவி.கண்ணன் said...

வாழ்த்துகள் !

Mahesh said...

வாழ்த்துகள் ராம் !!!

பூத் பங்களா குத்தகை முடிஞ்சுதா இல்லயா? எப்பொ டெலிவரி டேட்?

Unknown said...

Hi Ranga.. We all understand that the world is in the midst of strict recession and hence forget all the dissapointment by fellow friends in this blog. The reason for disappointed might be to the matter of fact that everyone in the blog have tasted the blend of comical way for your narration. Please do not worry!! DUTY FIRST and next comes the post.Hope the blog members wud agree to this.

Thala, Mathapadi ootula thangamani akka and koindhais ellam sowkiyam thaanungale...

BTW My hearty Wishes for your Tamizhmanam Award. May god shower you more blessings like this in all the coming years!!

Cheers!!

Unknown said...

தல!! எனக்கென்னவோ நம்ம ப்ளாக் makkal எல்லாரும் வேணுமின்னே பேரை மாத்திவச்சு உங்கள indirectaa திட்டுராங்களோனு தோணுது.??. இல்லேன்னா.. வீணாபோனவன், வெளங்காதவன், தண்டச்சோறு, பொறம்போக்கு என்று பேர மாத்தி வச்சு உங்கள இந்த வெளு வெளுக்கறாங்க ? பயபுள்ள ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிப்பைன்களோ?

வாழவந்தான் said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துக்கள்!!
படம் எப்போ ரிலீசு?
ஒரு லிங்க போட்டுவுட்டா நாங்களும் பாப்போம்ல..

குப்பன்.யாஹூ said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் , விருதுகள் கிடைத்தமைக்கு.

மணி ரத்னம், ஷங்கர், கமல், ஏ ஆர் ரஹ்மான் போல தங்களிடம் இருந்தும் இனி வருடத்திற்கு ஆறு அல்லது எழு தரம் மிக்க சுவை மிக்க பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

குப்பன்_யாஹூ

Anonymous said...

Link aa pottu viduppu...

Anonymous said...

//If you are realy interested resign your job and go to srilnaka and fight for Tamil, Tamil eelam

etc.//

http://salemsenthil.blogspot.com/2009_02_01_archive.html

இதில் குப்பன் யாஹூ கூரியுருப்பது சரியா? ஒட்டு மொத்தமாக தமிழையும், தமிழர்களை குறை கூறுவது போல் உள்ளதே ... மிக

வருத்தமாக உள்ளது .

ருத்ரன்

Anonymous said...

THANKS FOR THIS POST
HOW ABOUT ANOTHER DOSE OF JTK

RBSMTANJORE

Anonymous said...

வாழ்த்துக்கள் டுபுக்குஜி. நான் தஞ்சை ஜெமினி. நீங்கல்லாம் எம் ஜி ஆர் மாதிரி. படுத்துகிட்டே ஜெயிக்கிற ஆளு. ஓட்டே கேக்க வேணாம்.
அது என்ன கவனம் வேற பக்கம் இருக்குன்னு சொல்லீருகீங்க.blog எழுதறத விட வேற உருப்படியான வேல இருக்கற மாதிரி சீன் போடறதுக்கா.நேத்து வந்தவங்கள்ளாம் வாரத்துக்கு மூணு பதிவ போடறாங்க.உங்களுக்கு என்ன ஆச்சி. வந்து ஆனா ஆவன்னா வாச்சும் எழுதீட்டு போங்கப்பு. படிச்சிட்டு சிரிச்சி தொலைக்கிறோம்

Anonymous said...

congratulations and this certainly calls for celebrations.indhamadhiri niraya ezhudhanum niraya award vanganumnnu ummachiya vendikiren.appuram neenga mani rengikku padam edukka poringgannu theriyum aanal 2 varushathukku oru padam thaan koduppennra madhiri 2masathuukku oru post poduvennu sonna nyayama???niraya ezhuduveergal enra edhirpaarpudan
nivi.

Anonymous said...

ஆமா 6 மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு வரி கட்டனுமே அதை எப்படி நியாபக படுத்துவ?"

"அதான் டுபுக்கு பதிவு போடுவாரே அப்ப கட்டினா போதும்
ISTHRIPOTTI

Anonymous said...

ஆமா 6 மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு வரி கட்டனுமே அதை எப்படி நியாபக படுத்துவ?"

"அதான் டுபுக்கு பதிவு போடுவாரே அப்ப கட்டினா போதும்
ISTHRIPOTTI

Anonymous said...

வாழ்த்துக்கள்.:-)
karthik.

Sriram said...

விருது மேட்டர் சூபர்... சும்மா கலக்கு கலக்குனு கலக்கறீங்க. நீங்க வேலை எல்லாம் முடிச்சுட்டு அப்பறமா blog அனுப்புங்கோ... நாங்க அது வரை வெயிடீஸ்...

Dubukku said...

இளா- இந்தோ போட்டாச்சிங்கோவ்...பார்த்துட்டு திட்டறத திட்டுங்கோவ்


வீணாப்போனவன் - ரொம்ப டேங்க்ஸ் நீங்க வந்த முஹூர்த்தம் கும்மி சங்கத்துலேர்ந்து நம்மள இப்போத் தான் கண்டுகினுருக்காங்க பாருங்க

சிபி - ஆமாம் அண்ணாச்சி...வீக்கெண்டும் க்ளாசஸ் வேற போகிறேன் அத்தோட வேலைகள் வேற மென்னிய பிடிச்சிருச்சி

வெளங்காதவன் - இத்தன நாளா கண்டுக்காம விட்டுட்டியே நைனா...ஆஹா ஏன் வாழ்த்தக்கூடாது ...குடுத்துவச்சிருக்கனுமே ....நடத்துங்கோவ் :))))))))))))

உருப்படாதவன் - ரொம்ப நன்றிங்கோவ்

தண்டச்சோறு - ஆகா வாங்க தல ...உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி

கொவி.கண்ணன் - ரொம்ப நன்றி உங்க வாழ்த்துக்கு

மஹேஷ் - இதோ போட்டாச்சு...

ராமச்சந்திரன் - ரொம்ப நன்றி உங்கள் புரிதலுக்கும் வாழ்த்துக்கும். நெரமெடுத்து வந்து கMஎண்டுவதற்க்கும் மிக்க நன்றி. வீட்டில் அனைவரும் நலம் உங்கள் வீட்டிலும் அனைவரும் நலமென்று நம்புகிறேன் விரும்புவதும் அதுவே.
அட நீங்க வேற இவ்வளவு நாளா இந்த கும்மி சங்கம் நம்ம ப்ளாக கண்டுக்கவேஇல்லை.இப்போ தான் பெரிய மனசு பண்ணி வந்திருக்காங்க...பாசக்கார பயபுள்ளைங்க...ஜாலியா கும்மியடிக்கிறாங்க அடிக்கட்டுமே :))

வாழவந்தான் - மிக்க நன்றி உஙகள் வாழ்த்துக்கு...இதோ போட்டாச்சு சார்

குப்பன் - மிக்க நன்றி உஙகள் வாழ்த்துக்கு..நீங்க ரொம்ப பெரிய ஆளோடலாம் நம்மள கம்பேர் பண்றீங்க...நான் சின்னப் பையன் ...இருந்தாலும் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா தெரியாது கீழே ஒருத்தர் உங்கள் கமெண்ட் பற்றி வருத்தப்பட்டிருக்கிறார் - உங்கள் பார்வைக்கு

அனானி - இதோ போட்டாச்சு சாரே

ருத்ரன் - உங்கள் வலி எனக்குப் புரிகிறது. உண்மையைச் சொல்கிறேன் எனக்கு அரசியலில் அவ்வளவு ஈடுபாடு கிடையாது அதிலும் இலங்கை அரசியல் பற்றி சுத்தமாகவே தெரியாது ஆனால் அவர்களின் வலி நன்றாக தெரியும். இங்கே எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள்...பொதுமக்களாய் அவர்கள் படும் வேதனை நன்றாகப் புரியும். இந்த அரசியலில் அப்பாவி பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது வருத்தமான விஷயம்.

அர்பிஎச்ஸெம் - இப்போ குறும்படம் போட்டிருக்கிறேன் அடுத்து அதை முயற்ச்சிக்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கு மிக்க நன்றி

தஞ்சை ஜெமினி- போட்டீங்களே ஒரு போடு ....எத்தனை போட்டியில தோத்திருக்கேன் தெரியுமா...அப்புறம் கவுரவமா நடுவர் ஆகிட்டேன்..இப்போ தான் இரன்டாவதா ஜெயிச்சிருக்கேன்...இதுல நீங்க வேற உட்கார்ந்து ஜெயிப்பேன் படுத்துகிட்டே ஜெயிப்பேன்னு ....:))) இனி அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்

நிவி - வாங்க உங்க வாழ்த்து ரொம்ப தெம்பா இருக்கு.கண்டிப்பாக நிறைய எழுத முயற்சிக்கிறேன்...சில சமயம் நிறய விஷயங்களினால் முடியாம போயிடுது அதான். ஆனால் கண்டிப்பாக முயற்சிக்கிறேன். மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு

இஸ்திரிபொட்டி - வான்க்க ரொம்ப சந்தோஷமா...எல்லாம் அபி அப்பாவ சொல்லனும் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

கார்த்திக் - மிக்க நன்றி தல :)

ஸ்ரீராம் - ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு. கலக்கலாம் இல்லை...இப்போ தான் கிடைச்சிருக்கு...இதுவரைக்கும் ஒரு தரம் தான் வாங்கி இருக்கென். மத்ததெல்லாம் ஊத்தல்ஸ் தான். மிக்க நன்றி உங்க ஆர்வத்துக்கு...

Post a Comment

Related Posts