Saturday, January 24, 2009

உள்ளேன் ஐய்யா

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.
புதுவருடம் அமர்களமாக ஆரம்பித்திருக்கிறது. நீங்க மறந்தாலும் நான் மறக்கவில்லை. பெரிய இவனாட்டம் சேரிட்டி சேலென்ஞ் என்று இரண்டு சவால்களை எடுத்திருந்தாலும் இரண்டையும் முடிக்கவேயில்லை. ஆனால் அபராதமாக குடுக்க இருந்த தொகையை இரட்டித்துவிடுவதாக வேண்டிக்கொண்டிருக்கிறேன். இந்த வருடமாவது முடிக்க முடிகிறதா என்று பார்ப்போம். இரண்டு சவால்களில் ஒன்று திரைப்படத்தில் தலையைக் காட்டுவது. ஆனால் சினிமா பித்தம் தலைக்கேறி இருக்கிறது. நடிப்பதற்கு இல்லை டைரடக்கராவதற்கு. லண்டன் ஃபிலிம் அகாடமியில் கோர்ஸ் புக் பண்ணி ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறேன்.
கிறிஸ்துமஸ் லீவில் ஒரு குறும்படம் எடுக்கவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருந்தேன். நம்ம ட்ரேட் மார்க் ஜொள்ளித்திருந்த காலத்தை குறும்படமாக எடுக்கவேண்டும் என்று ரொம்ப ஆசை. குடும்ப நண்பர் வட்டத்தில் நடிப்பதற்க்கு கேட்டதற்க்கு சரி சொன்னார்கள். பரவாயில்லை நான் இது வரை படமெடுக்கவில்லை என்றாலும் நம்பிக்கை வைத்து சரி சொன்னார்களே என்று ரொம்ப ஃபீலிங்ஸ்காக இருந்தது. அவர்கள் குடும்பத்திற்க்கு இங்கு எக்கச்சக்க நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு ஸ்காட்லாண்டிற்கு முதல் வாரம் நண்பர்களோடு போய்விட்டு வந்து அடுத்த வாரம் படப்பிடிப்பு என்று ப்ரொடெக்க்ஷன் ப்ளானிங்காயிருந்தது. ஸ்காட்லேண்ட் அருமையான இடம். இவ்வளவு நாள் இங்கிருந்தாலும் இப்போது தான் போகிறோம். நண்பரகளோடு சரி ஜாலியாக இருந்தது. லண்டன்லிருந்து ஸ்காட்லேண்ட்டின் ஒரு அத்த மூலைக்கு பத்து மணிநேரம் காரை ஓட்டிக்கொண்டேடேடே போனதில் போய் சேரும் போது நல்ல இருட்டியிருந்தது. கும்மிருட்டில் ஒரு அத்துவானக் காட்டில் தெக்காலே போய் வடக்காலே திரும்பினால் நீங்க தங்குகிற வீடு இருக்கும் என்று உத்தேசமாய் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இடம் பாலுமேந்திரா படத்தில் வருவது மாதிரி ஒரு பயங்கர காடு. மலைச்சரிவில் ஒரு கார் மட்டுமே போகக் கூடிய பாதை. சரிவில் கீழே தன்னீர் ஓடுகிற சத்தம் வேறு. மலையூர் மம்பட்டியான் பாட்டை பாடிக்கொண்டே போனால் வீடு வருகிற வழியைக் காணும். ஒருவேளை பாதை தவறிவிட்டோமோ என்றால் காரைத் திருப்பக் கூட வழியில்லை. மறக்க முடியாத சரியான திகில் அனுபவம். நம்பிக்கையே இல்லாமல் அப்புறம் எப்படியோ ஒரு வழியாக வீடு போய் சேர்ந்தோம். இப்படி ஒரு இடத்தில் திகில் படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு சாமி வந்துவிட்டது. கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள். நண்பர்களுக்கும் இங்கே நன்றியை சொல்லிக்கொள்கிறேன். ஆக இரண்டு படம் என்று ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொக்க்ஷனில் இருக்கிறது :)) சீக்கிரமே ரிலீஸ் பண்ணிவிடுவேன். நீங்க தான் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லவேண்டும்.

அதுனால தான் இங்க எழுத கொஞ்சம் லேட்டாகிவிட்டது. இருந்தாலும் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கலாம் என்று தான் இந்தப் பதிவு. தோ..... வந்துக்கிடே இருக்கேன்.

நீங்க திட்டினாலும் பரவாயில்லை...இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

58 comments:

துளசி கோபால் said...

சார்...போஸ்ட்

அபி அப்பா said...

ulleen aiya!

Rajaraman said...

inime adikkadi paarkkalaam illaiyaa.

குப்பன்.யாஹூ said...

இயக்குனருக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.

தங்களின் படத்தின் நெல்லை குமரி தூத்துக்குடி விநியோக உரிமையை எனக்கு தர வேண்டுகிறேன்.

ஏப்ரல் பதினாலு முதல் அம்பை அபிராமி, தென்காசி பத்மம், நெல்லை ரத்னா திரை அரங்குகளில் வெளியீடு.

சீ டீ, தமிழ் டாரண்ட் போன்ற இணைய தளங்களுக்கு விற்க கூடாது என்ற நிபந்தனையுடன்.
.

குப்பன்_யாஹூ

Kathir said...

வாழ்த்துக்கள் தல.

அப்புறம், JTK ல நீங்க நடிச்சா தானே பொருத்தமா இருக்கும்.......

டைரடக்கராயிருந்தா கூட நடிக்கலாமே.......

:))

Anonymous said...

Ippo nerya peru, hero cum director_a irukkaanga illa..athu maathiri neengalum try pannunga...neegalum hero kanakka azhgathaan irukkeenga... :-).

Divyapriya said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!
(இந்த வருஷத்துக்கு தான் :))

Krishnan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..wishing you all the best in your film making efforts. Me and my wife have enjoyed immensely your ஜொள்ளித் திரிந்த காலம் posts. How about thinking of bringing those posts in a book form ?

வாழவந்தான் said...

வாங்க டைரக்டர் சார்..
டுபுக்க டாப் 10 பிளாக்குல சேர்க்க சொல்லி ஸ்ரீநிவாஸ் மாதிரி மக்கள் சொல்லிடிருக்கும் போது
விவரம் இந்த சுட்டியில் ...
http://idlyvadai.blogspot.com/2009/01/10_18.html
நீங்க இப்படி அடிக்கடி காணாமல் போகலாமா??
ஏதோ ரெண்டு படம்ன்னு சொல்றீங்க அதனால சரி
என்ன இருந்தாலும் திகில் படத்த காமெடியாவும், JTK-ய திகிலாவும் ஆக்க மாடீங்கனுற நம்பிக்கைதான்..
வாழ்த்துக்கள்!!!

Mahesh said...

ஸ்வாமி... ஏமாத்திட்டேளே... அந்த சார் போஸ்ட் ரோல் இல்ல த்ரில்லர்ல பேய் ரோலாவது கெடைக்கும்னு காத்துண்டுருந்தேனே.... ம்ம்ம்ம்ம்ம்...
சரி போனாப் போறது...அடுத்த படத்துல ஹீரோவா நடிச்சுக் குடுத்துடறேன்...

புது வருஷம் நன்னா இருக்கட்டும்.

ILA (a) இளா said...

அமெரிக்க மாப்பிள்ளை, மாப்பிள்ளைத் தோழன், இப்படி ஏதாவது ஒரு முக்கியமான ரோல் இருந்தா மட்டும் சொலுங்க. கால்-ஷீட், கை-ஷீட், பெட்ஷீட், கார் சீட் இருக்கான்னு பார்க்கிறேன். வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

நாகை சிவா said...

எதையும் தாங்கும் இதயத்தை எங்களுக்கும் அருள வேண்டுகிறோம் இறைவா!

அண்ணன், படம் எப்ப ரீலிஸ்...

Anonymous said...

good to see ur post again. best wishes for your direction.

Anonymous said...

தல,

நானும் உள்ளேன் ஐய்யா படிச்சுட்டு வரேன்அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

:-)

அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

Mic Mohan ???

அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

//உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்ன்னு சொன்னா "எந்த வருஷத்துக்கு..?"ன்னு கோச்சிப்பீங்கன்னா அடுத்த வருஷத்துக்கு அட்வான்ஸா வைச்சிக்கோங்க. பொங்கல்லாம் சிறப்பா கொண்டாடியிரு...சரி வேணாம்...ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா...? வெக்கமாயில்ல....வேலை மெனெக்கெட்டு இங்க வந்து வாழ்த்து சொன்னா ஒரு மரியாதைக்கு திரும்ப ஒரு வாழ்த்து கூட சொல்ல வேணாம்...சின்னதா ஒரு டேங்க்ஸ் சொல்லக் கூடவா முடியலை..ஏன் எங்களுக்கெல்லாம் வேலையில்லையா...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.//

பாஸ் இவிங்க இப்பிடிதான் திட்டு வாங்க பயந்தா தொழில் பன்ண‌ முடியுமா விடுங்க பாஸ்

வருசா வருசம் ஜனவரில நடக்குற கூத்துதான தல இது

அன்புடன்
கார்த்திக்

Anonymous said...

Hi Dubbukku

Where exactly did you travel in scotland? If you have future plans to visit scotland again, let me know. I am living in Glasgow.

Rgds

Anonymous said...

இனிய தெலுங்கு (UGADI) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இதுதான் இன்னும் வரவில்லை.

//கூட வந்த நண்பர்களை பேசி சம்மதிக்க வைத்து அவர்களும் இல்லாவிட்டால் இவன் தூங்கும் போது கல்லைத் தூக்கிப்போட்டாலும் போட்டுவிடுவான் என்று பயந்து போய் சம்மதித்தார்கள்//

வில்லானாக நடிப்பதற்கு பயிற்சியா?

-அரசு

Anonymous said...

Thirumba post podreenga illa .. romba danks adukku..

happy new year... paavai

Anonymous said...

Thirumba post podreenga illa .. romba danks adukku..

happy new year... paavai

பாசகி said...

//...நீ மட்டும் தான் உலக மகா ஆபிஸரா?...திட்டி உங்க வாய் வலிக்க கூடாது..(ஐய்...ஐஸ் ஐஸ்..) நானே திட்டிக்கிறேன்.//

என்ன ஒரு வில்லத்தனம் :)

சரி இவ்ளோ நாள் வராத்திற்கு கதை விட்டுடீங்க,ச்சே... படம் எடுத்துட்டீங்க, அதையாவது சீக்கிரம் கண்ணுல காட்டுங்க சாமி :)

*******************************

//கார்த்திக் / பாசகி - உங்களுக்கு முன்னால் சொன்ன வாழ்த்துக்கே நன்றி கூட சொல்லாமல் பொங்கலும் வந்துடிச்சு. உண்மையிலேயே நென்சை தொட்டுட்டீங்க...அத்தோடு இந்த பொறுப்பற்றத்தன்மைக்கு என்னை வெட்கப் பட வைத்துவிட்டீர்கள். மன்னிக்கவும். உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.//

இப்படி சென்டிமண்டா பேசி ஆளை கவுத்தடறீங்க, இருந்தாலும் மறுபடியும் ஒரு 'என்ன ஒரு வில்லத்தனம் :)'

சீக்கரம் எழுதுங்க சார்...

SUBBU said...

டேங்க்ஸ் :))

Anonymous said...

junior (balachandar+mani+aamir)avargale!!unga padam super duper hitaaga vazhtukkal.heroine yaarnnu yosichhittengla.kathrinava,illiyanava,illana snehavahannu mudivu panniteengla????hollywood consider pannrengla??thangamani thaane producer and asst director!!!!eagerly expecting your films to hit the screeen.happy new year to you and your family sir.

Anonymous said...

solla marandutten,post poda late aanathal cutout 60 adillerndhu 50 adikku korachutten.
nivi.

அறிவிலி said...

இப்ப என்ன அவசரம். நாங்க இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சொல்றோம்.

அறிவிலி said...

குறும் படத்துக்காக நீங்க போடற பெரும் படத்தை பார்த்து எங்கள் ஆவல் மிகவும் அதிகமாகிவிட்டது. ரீலீஸ் தேதியை சீக்கிரம் அறிவியுங்கள்.

சிங்கை ரசிகர் மன்ற தலைவர் பொறுப்பை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.

Anonymous said...

Aiyaa dieratucker uu.... tucker aa oru padam kudunga.. !!! Oolagaa cinemavaaa parthu irrukeengaa.. Oolagaa nayaganodaa rasigaru.. Oolgaa tharathulaa padam irrukum nnu namburen. Vazhthukazh !!!

Yee... varuthu, varuthu...
Vengai veliyee varuthu...
Vengai Neethan.. seerum naalthan...

Kalakku ba.. !!!

Anonymous said...

Romba nal kalichu ippo than padikeran!! Partha news nambla pathi iruku!!!! Haha... nandri ellam vendam periya treat than venum! Dubuku saaar im sure u would have guessed who it is by now:)))

Ayyo i dint mean for it to post twice... my bad:((( sorry!

Unknown said...

என்ன மாமே.. என்ன சரக்கு தீர்ந்துருச்சா?? நீ எதுக்கு தல தனிய காட்டுக்கு போய் திகில் படம் எல்லாம்..எடுக்குற அதான் சர்வ காலமும் உங்க மூஞ்சிய தங்கமணி அக்காவும் கொயந்தைங்களும் பார்த்து பார்த்து திகிலடிச்சு போய் இருக்காங்களே.. அது போதாதா??

போஸ்ட் போட துப்பில்லை.. இதுல டகால்டி மேட்டர் எல்லாம் வேற .. தூ... இதெல்லாம் ஒரு பொழப்பா (போஸ்டா) ? என்னவோ இவரோட நண்பர்கள் கூட போனாராம்? ஒத்தையடி பாதையாம்? இவருக்கு சாமி வந்துடுச்சாம்?? எல்லாரும் சரின்னு சொல்லிடாங்கலாம்?? ,என்ன நைனா கலர் கலரா ரீல் உட்ர.. இதுல இன்னொரு glasgow அண்ணாச்சி வேற உங்க கூட கூத்தடிக்க.. முடிவு செஞ்சிருக்காரு.. கலி முத்தினது கண் கூட தெரியுது??

Unknown said...

Also My Wishes for your and your Family. a very happy and prosporous 2009..

Vaazhga Valamudan..

Anonymous said...

Ippadi usupethi usupethi thaanda odambellam ranakalama irukku.

chchumma sonnen, indha dialog-kkum, indha situation-kkum yaadhoru sambanthamum illennu oruthiyaa sollikiren ;)

Anonymous said...

adhu 'uruthiyaa sollikiren'

oru letter mistake naan yaarungarathaye kuzhappidiche! thai thamizhukku mattume ippadi oru sakthi undu! ;)

Anonymous said...

blog is very interesting....

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!!

Anonymous said...

i accidentally stumbled upon this site and what a pleasant surprise
i have read only 50% of your musings hoping to complete soon

how about accepting the titleAMBAI SUJATA

I AM AN ARDENT FAN OF SRIRANGAM SUJATA
BEST WISHES rbsmtanjore

Anonymous said...

nallla iruuke?naaaaa urua?வருசா வருசம் ஜனவரில நடக்குற கூத்துதான தல இது -iinum iintha jananga nambuthu.veetula sonnang monthly once dubukku blog ppaartha pothumnu.isthripotti
வாழ்த்துக்கள்!!!

SamIam said...

Dubukku,

Wish you a happy new year. Welcome back. Awaiting more posts from you

Anonymous said...

டுபுக்கு ஜி நான் தஞ்சை ஜெமினி தேங்க்ஸ் டு யுவர் belated விசஸ் வருங்கால இயக்குனர் சிங்கத்துக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சரி herioine மீரா மல்லிகை தானே ?

Anonymous said...

// அறிவிலி said...
குறும் படத்துக்காக நீங்க போடற பெரும் படத்தை பார்த்து எங்கள் ஆவல் மிகவும் அதிகமாகிவிட்டது. ரீலீஸ் தேதியை சீக்கிரம் அறிவியுங்கள்.

சிங்கை ரசிகர் மன்ற தலைவர் பொறுப்பை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.//தல உங்களுகே தெரியும் நான் உங்களுடைய ஆரம்பம் காலத்து ரசிகன் / வெறியன்னு. சிங்கை ரசிகர் மன்றம் , சிங்கை தற்கொலை படை , சிங்கை வெறிபடை, அன்னியார் தற்கொலை படை( ஹி ஹி ஏல்லாம் தே.மு.தி.க பாதிப்புதான்) எலலாதோட தலைவர் நாந்தான்னு. இப்போ ஒருத்தரு அந்த பதவியை யாருக்கும் தரமாட்டேன்னு சொல்லுராரூ, தல பஞ்யாத்த முடி தல....சொல்லு தல நாதான் ஒரே தலைவர்ன்னு....இப்படிக்கு,
தலயின்
சிங்கை ரசிகர் மன்றம் , சிங்கை தற்கொலை படை , சிங்கை வெறிபடை, அன்னியார் தற்கொலை படையின் ஒரே தலைவர்
எங்களுக்கு வேரு கிளைகள் கிடையாது....
அன்புடன்
கார்த்திக்( தற் சமயம் சென்னை)

Anonymous said...

தல சொல்ல மறந்துடேன் தஞ்சை தலவரும் நான்தான்... :-))

Anonymous said...

sorry

தல சொல்ல மறந்துடேன் தஞ்சை தலவரும் நான்தான்... :-))அன்புடன்
கார்த்திக்

butterfly Surya said...

வாழ்த்துக்கள்.

சினிமா பற்றிய எனது வலை பார்க்கவும். நிறை / குறை கூறவும்.

rapp said...

வாழ்த்துக்கள்:):):)

Anonymous said...

karthik,

"veru kilaigal kidaiyathu!"

ennaba ithu, verum illama, kilaiyum illama, enna vidhamana thaavaram ithu?

Kavitha said...

Your posts are awesome. Just finished reading everything. Waiting for more.

anna said...

தமிழ் சமையல்
Profiles Planet
Residence Collection
Dotnet Best
Chronicle Time
Cingara Chennai
Free Crackers

Anonymous said...

oru maasam aachi.. innum post pannaliya? indha maasam sambalam vaanga varuveengalle, appa pesikirom. thamaraikani uncle pole 'chellama' mudhukile thatti koduthalthaan neenga vazhikku varuveenga.

Anonymous said...

The fonts are not clear - may be you can make it bold. It hurts the eye. I would love to read all, but it hurts the eye. Is there anything you can do about this?

God Bless and Thanks in advance Dubukku.

Geetha

anantha-krishnan said...

dubukku sir,
unga padathukkaga wait panni kan poothu pochu.. release la edhavadhu prachanaya.. idhara sangangal ethavathu thollai kodukarangala.. ummm unnu oru varthai sollunga unga rasigarmandram allai kadalena onru thirandu ethirkkarom..

Mahesh said...

தமிழ்மண விருதுகளுக்கு வாழ்த்துகள் ராம் !!

கலக்குங்க....

ஏன் நீண்ட அமைதி? படமெடுத்து முடிச்சாச்சா இல்லயா? எப்ப ரிலீஸ்? சிங்கப்பூர்ல ரிலீஸ் உண்டா?

அப்பறம்... அடுத்த படம்... நம்மள ஞாபகம் வெச்சுக்கோங்க...

Kathir said...

தல,

தமிழ்மணம் விருதுகளுக்கு வாழ்த்துகள்

:))

ICANAVENUE said...

தமிழ்மணம் விருதுக்கு வாழ்த்துகள்!!

Dubukku said...

துளசிமேடம்/ அபிஅப்பா/- ஓக்கே உட்காருங்க

ராஜாராமன் - அடுத்த வாரத்திலேர்ந்து கணடிப்பாகங்க...

குப்பன் - வாங்க சார் நலமா. ரொம்ப சீரியஸா நம்மள நக்கல் விடுறீங்க...இதெல்லாம் அப்படியே வரது தான் இல்ல??

கதிர் - வேணாங்க...நான் முதல்ல டரைக்டரா இருந்துட்டு அப்புறமா ஹீரோ ஆகிக்கிறேன் :))

அனானி - அய்யா/மேடம் நீங்க யாரோ பெயர கூட சொல்லாம போயிட்டீங்க..உங்க நல்ல மனசுக்கு நீங்க தொட்டதெல்லாம் பொன்னாகும் நீங்க நினைச்சதெல்லாம் நடக்கும்...ஹூம்ம்ம்..தங்கமணி இது நானே போட்டுக்கிட்ட கமெண்ட்டுன்னு சொல்லிட்டாங்க...

திவ்யப்ரியா - நன்றி ஹை மேடம்.

கிருஷ்ணன் - வாங்க மிக்க நன்றி. போடலாம் தான் யாரு போடறது...புஸ்தகம் போடறவங்க யாரும் கண்டுக்க மாடேங்கிறாய்ங்களே என்ன சொல்ல :))))))

வாழவந்தான் - வாங்க வெச்சீங்களே ஒரு ஆப்பு.....நீங்க சொன்ன பஞ்ச் டயலாக நினைக்கும் போதெல்லாம் புளியக் கரைக்குதுங்கோவ்...

மகேஷ் - ஒழுங்க டயத்துக்கும் அமௌண்ட ட்ரான்ஸ்பர் பண்ணியிருந்தீங்கன்னா போட்டுக்குடுத்திருப்பேன்ன்ல...

இளா - :)))) கண்டிப்பா சொல்றேன் சார்...

நாகை சிவா - இவ்வளவு நக்கல குடுத்த இறைவன் அதக் குடுக்காமலா போயிடுவார் :))

குமார் - மிக்க நன்றி அடுத்த வாரத்துலேர்ந்து கண்டிப்பாக திரும்ப வரேன்.

கார்த்திக் - ஆமாங்க இப்படி மைக் பிடிச்ச மாதிரி அடிக்கடி பேசறேனாம்...தங்கமணி வெச்ச பேரு

பாஸ்கர் - போர்ட் வில்லியம்ஸ் பக்கம் ஒரு அழகான குக்கிராமத்தில் தங்கினோம். ஐயையோஒ முதல்லயே தெரியாம பொச்சே...க்ளாஸ்கோ வழியா தான் ஓட்டிக்கிட்டு போனோம் வந்து சோத்துக்கு ஆட்டைய போட்டிருப்போமே :)))))

அரசு - ஆமாங்க ரொம்பவே இம்சை பண்ணிட்டேன் அவங்கள

பாவை - தேன்க்ஸ் சொன்னதுக்கப்புறம் காணம போனதுக்கு ரொம்பவே கெட்ட வார்த்தையால திட்டி இருப்பீங்க...சாரி...

பாசகி - ஒரு படத்த முடிச்சுட்டேன் அடுத்த வாரம் ரிலீஸ் பண்ண்டிடுவோம்

சுப்பு - நீங்க திட்டி இருப்பீங்களே :))

நிவி - நீங்க தானெ அந்த அனானி ....ரொம்பவே எதிர் பார்க்கறீங்க...ஏதோ சின்னப் பையன் இப்போ தான் தொழில் கத்துக்கறேன்...அடுத்த வாரம் ரிலீஸ் பண்றேன்...நல்லா இல்லைனா திட்டாதீங்க

அறிவிலி - ஆமாங்க நான் ரொம்ப சீன் போட்டுட்டேனோ...படம் உங்க எதிர்பார்ப்புக்கு குறைவா இருந்துதுன்னா மெல்லம திட்டுங்க ப்ளீஸ்...இந்த ரசிகர் மன்ற நக்கல விட மாட்டீங்களா

அனானி - ஐயோ ஐயையோஒ....ரொம்பவே எதிர் பார்க்கறீங்களே....ஆண்டவா எல்லாரும் கெட்ட வார்த்தைல வையாம இருக்கணும்

அனானி - வாங்க மேடம்....நம்ம ஜொ.தி.கா பட ஹீரோயின தெரியாமலா...ட்ரீட் தானே குடுத்தா போச்சு

ராமச்சந்திரன் - வாங்க ஆமாங சரக்கு தீர்ந்து போச்சு மாதிரி தான் தெரியுது. ரொம்பவே காட்டத்துல இருக்கீங்க போல கMஎண்ட்டு ரொம்ப காரமா இருக்கே ...என்ன ஆச்சு சார்? நண்பர்களை பற்றி வேண்டாமே...ப்ளீஸ். உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனானி1 - நீங்க சொல்லாட்டியும் நானும் அதே தான் நினைச்சிக்கிறேன்..அனேகமா தர்ம அடி போட போறாங்கன்னு நினைக்கிறேன்

அனானி2 - மிக்க நன்றி
அனானி 3 - உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அனானி 4 - வாங்க ஒரே அனானி கமெண்டாஅ அகிடிச்சு இந்த தரம். உங்க ஆர்வத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி

இஸ்திரி பொட்டி - அடடாஅ கண்டுபிடிச்சிட்டீங்களே...சரி சரி ஏதோ பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க

சம்லம்- இனி கண்டிப்பா போடறேன் சார்.

தஞை ஜெமினி - வாங்க சார். வாழ்துக்கு மிக்க நன்றி. பயமா இருக்கு

கார்த்திக் - அடாடா உங்க நக்கலு உண்மையிலேயே தாங்க முடியல...ரெண்டு கமெண்டும் நீங்களா? :)))) இதுல அன்னியார் வேற...எனக்கு அடி வாங்கி குடுக்கறதே பொழப்பா போச்சு உங்களுக்கு தலைவா ப்ளீஸ் வேண்டாமே...:)))))))

வண்ணத்துப்பூச்சியார் - கண்டிப்பா வரேங்க...கொஞ்சம் வேலையா இருந்துட்டேன்...மன்னிச்சிக்கோங்க

பொயர்ட்ரி- ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு

அன்னானி - அண்ணே / அண்ணி மன்னிச்சிடுங்க...ஏதோ சின்னப் பையன் தெரியாம பண்ணிட்டேன்

கீதா - நீங்க என்ன ரெசலூஷன் வெச்சிருக்கீங்க...ரெண்டு மூனூ ரெசலூஷன்ல மாத்தி பார்த்தென் சரிய இருந்தே?? கொஞ்சம் சொன்னீங்கன்னா ட்ரை பண்ணிப் பார்க்கிறேன்...

அனந்தா - மன்னிசிடுங்க சார்...இங்க கொஞ்ச குழப்பத்திலிருந்தேன்..அதான்.அடுத்த வாரத்திலிர்நுது கண்டிப்பா போடறேன்.

மகேஷ் - மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு...படமெடுத்தாச்சு அடுத்த வாரம் ரிலீஸ் பண்றேன் இங்க

கதிர் - மிக்க நன்றி தல

i-can-avenue - உங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

Post a Comment

Related Posts