Monday, November 10, 2008

அம்மமா சினிமா

மிகவும் பிடித்த ஒரு டாப்பிக்கில் தொடர் விளையாட்டிற்கு அழைத்த மகேஷ்க்கும், கைப்பிள்ளைக்கும் மிக்க நன்றி.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

சும்மாவே கொசுவத்தி சுத்தறதுக்கு கேக்கவேண்டாம்..இதுல இந்த மாதிரி வேற கேட்டா?...நினைவு தெரிந்து பார்த்த முதல் சினிமா எனபதை விட நினைவு தெரிந்து மனதில் பதிந்த ஒரு சினிமா பற்றிய உண்மை சம்பவம். ரொம்ப சின்ன வயது என்பதால் தனியாக சென்று தியேட்டரில் சினிமா பார்ப்பதற்கு பெர்மிட் கிடைக்காத மூக்கை ஒழுகிக் கொண்டு டவுசரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்த காலம் அது. ராஜா ராணி, உம்மாச்சி(சாமி) படங்கள் என்றால் உயிர். எங்க ஊர் கல்யாணி தியேட்டரில் வெற்றி விநாயகர் (அல்லது விநாயகர் துணையா என்று சரியாக நியாபகமில்லை) படம் போட்டிருந்தாரகள். பக்கத்து ஊரில் சொந்தக்கார வீட்டில் விசேஷம். குடும்பத்தோடு எல்லோரும் போயிருந்தோம். மாமா பையன் ஒருவன் என்னை விட மூன்று நாலு வயது பெரியவன், ஆனால் தனியாக தியேட்டர் போவதற்க்கு பெர்மிட் வைத்திருந்தான். என்னையும் அவன் தம்பியையும் இழுத்துக் கொண்டு, திரும்ப எங்க ஊருக்கு வந்து படத்துக்கு போய்விட்டோம். முக்கால் வாசி தரை அல்லது பெஞ்ச் டிக்கெட்டுக்குத் தான் காசு இருக்கும். அன்றைக்கு தரை டிக்கெட்டில் தெலுங்கு டப்பிங்கில் விநாயகர் தரிசனம். விநாயகர் வீட்டில் கோவித்துக் கொண்டு காட்டிற்கு தவம் பண்ண போகிறார். அப்போது வழக்கம் போல் ஜெயமாலினி விநாயகர் இருக்கிறாரே என்று வெட்கமே இல்லாமல் சிறு துணியை அணிந்து கொண்டு, கையில் ஒரு ஆப்பிளையும் வைத்துக் கொண்டு ஆடுகிறார். சரி இதோ டேன்ஸை முடித்துவிடுவார் என்று பார்த்தால் ஜெயமாலினி ஆப்பிளை கன்னம், மற்றும் இன்ன பிற இடங்களில் வைத்துக் கொண்டு சிம்பாலிக் ஆனந்த நடனம் புரிகிறார். வேறு வழியில்லாமல் அப்புறம் முகத்தை மூடிக்கொண்டு ஓட்டைக் கண்ணால் பாட்டு முடிந்துவிட்டதா என்று பார்த்தேன். விநாயகரும் என்னை மாதிரி கண்ணை மூடிக்கொண்டு பாவ்லா காடிக்கொண்டிருந்திருப்பார் போலும், பாட்டு முடிய கொஞ்ச நேரமாகிற்று. படம் முடிந்து மாமா பையன் வீட்டுக்கு போனால் அங்கே விசேஷ வீட்டில் எல்லாரும் எங்களை தேடிக்கொண்டிருந்ததாகவும், பதறிப் போனதாகவும் பயங்கர டோஸ். அப்புறம் எங்க வீட்டுக்கு வந்தால் இங்கேயும் பயங்கர டோஸ். என்னுடைய இரண்டாவது அக்கா வேறு பனிஷ்மெண்டாக பாட புஸ்தகத்தை எடுத்து வரச் சொல்லி விதி பட சுஜாதா மாதிரி ஏகப்பட்ட கேள்விகள் கேட்டு பெண்டை நிமிர்த்திவிட்டார். அப்புறம் கடைசியில் போனது விநாயகர் படம் என்றவுடன் அக்காவிற்கு பயம் வந்துவிட்டது. அக்கா பயங்கர விநாயகர் பக்தை. ஷாம்பூ வாங்குவதிலிருந்து டீச்சர் வரவில்லை என்பது வரை விநாயகர் மேல் சத்தியம் பண்ணினால் தான் ஒத்துக் கொள்வார். விநாயகர் மேல் அவ்வளவு லவ்ஸ். அப்புறம் அவர் விநாயகருக்கு நமஸ்காரம் செய்து ஆன்டி க்ளைமாக்ஸாகிப் போனது. சே இத முதலிலேயே சொல்லியிருந்தால் அவ்வளவு சேதாரமாகிப் போயிருக்காதே என்று இன்றுவரை அடிக்கடி எனக்குள் சிரித்துக்கொள்வேன். அதோடு ஜெயமாலினி ரஜினி லகலகலகலகலகன்னு சொல்லுகிற மாதிரி உடம்பெல்லாம் குலுங்க ஒரு ஸ்டெப் போடுவார் பாருங்கள் நரசிம்மராஜுலுவின் எல்லா படத்திலும் பார்க்கலாம்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

23ம் புலிகேசி. இந்தியா சென்றிருந்த போது என்னுடைய மகள்களுக்கு அங்குள்ள தியேட்டரை காட்ட கூட்டி போயிருந்தேன். அந்த முறை சென்னை செல்லவில்லையாதலால் அம்பையில் தியேட்டருக்கு போயிருந்தோம். வெற்றிகரமான நூறாவது நாள் என்று போஸ்டர் அடித்துவிட்டார்களே என்று அந்த தீயேட்டரில் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். மொத்தம் பதினைந்து பேர்கள் எங்களையும் சேர்த்து. உட்கார்ந்த இடத்தில் ஃபேன் போடவில்லையாதலால் ஃபேனை தேடி தேடி உட்காரவேண்டியிருந்தது. அப்பவும் புலிகேசி வரும் போது மஞ்சள், சிவப்பு பல்பெல்லாம் எரிய விட்டு ஸ்பெஷல் எபெஃக்ட் காட்டி மெருகேற்றிக்கொண்டிருந்தார்கள். எக்ஸ்ட்ரா ஸ்பீகரில் காது ஜவ்வு தான் கிழிந்துவிட்டது.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

எங்க விட்டு தியேட்டரில் வாரத்துக்கு எப்படியும் ஐந்து அல்லது ஆறு படம் கண்டிப்பாக ஓடும். அவ்வளவு சினிமா பைத்தியம் நான். பெயர் சொல்லாமல் - சமீபத்தில் வந்த ஒரு மூன்று நாலு படம் பார்த்தேன் ஆனால் இவற்றில் இரன்டு படங்களில் பாதியிலேயே தூங்கிவிட்டேன். எப்பேற்பட்ட அரதப் படத்தையும் உட்கார்ந்து பார்க்கும் நான் தூங்கியது தங்கமணிக்கு பயங்கர ஷாக். ஸ்க்ரிப்ட்டும் ஸ்ட்ராங்காக இல்லாமல் கதையும் வலுவாக இல்லாமல் எப்படி இவ்வளவு பைசாவை போட்டு படமெடுக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது. 'இது....படம்' ன்னு சொல்ல வைக்கும் அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தமிழ்படம் வந்து கொஞ்ச நாட்களாகிறது. ஜெயம்கொண்டான், ராமன் தேடிய சீதை நல்ல படங்கள் தான் ஆனால் அதுவும் இந்த ரகம் கிடையாது. "பொய் சொல்லப் போறோம்" ஆர்வத்தோடு பார்க்கக் காத்திருக்கிறேன்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய இருக்கிறது. ஐம்பது பைசாவுக்கு பெஞ்ச் டிக்கெட், இருபத்தியைந்து பைசாவுக்கு பெரிய மைசூர்பாகு என்று 75 பைசா பட்ஜெட்டில் நானும் ஒரு நண்பனும் பார்த்த கிருஷ்ணா தியேட்டர் ராஜா ராணி/ உம்மாச்சி படங்கள் மிகவும் தாக்கியிருக்கின்றன.

இது தவிர உன்னால் முடியும் தம்பி, சலங்கை ஒலி, அன்பே சிவம், மகாநதி, குருதிப்புனல். கமல் ரசிகனாயிருப்பதால் இந்த படங்களை சொல்லவில்லை. இந்த படங்களுக்கப்புறம் தான் கமல் ரசிகனானேன் இந்த படங்களைப் பார்த்த பிறகு ரசிகனாயிருப்பதில் ஆச்சரியமேதுமில்லை. ஆனால் இதில் கமலின் குருதிப்புனல் தயாரிப்பு தைரியத்தைப் பார்த்து ரொம்ப மலைத்திருக்கிறேன். ஆடியோவிலேயே பல லட்சங்களை தமிழ் சினிமா பார்க்துக்கொண்டிருந்த கால கட்டத்தில் கமல், அர்ஜுன் மாதிரி பெரிய பெயர்களை வைத்துக்கொண்டு பாட்டே இல்லாமல் ஒரு முழு நீள ஆக்க்ஷன் படங்களை பண்ணுவதற்கு தில் வேண்டும். படத்தின் ட்ரைலர் பார்த்த நாள் முதாலாகவே படம் எப்போ வரப்போகிறது என்று ரொம்ப காத்திருந்தேன். எதிர்பார்ப்பு வீணாகவில்லை. ஆனால் அதற்கப்புறம் ஆக்க்ஷன் படமென்றால் கூட்டத்தோடும் தத்துவத்தோடும் ஒப்பனிங்க் சாங், பஞ்ச் டயலாக், க்ளைமாக்ஸ் பைட், நடுவில் ரெண்டு ஐயிட்டம் சாங் என்று தமிழ் சினிமா பழைய பார்முலாவுக்கே போய்விட்டது வருத்ததை அளிக்கிறது.

தாக்கிய வரிசையில் ரோஜாவிற்க்கு ஒரு முக்கிய இடம் உண்டு.(இந்த படத்தை பற்றி வேறொரு கேள்வியில்) பழைய படங்களில் நிறைய படங்கள் தாக்கியிருக்கின்றன. காதலிக்க நேரமில்லை மறக்க முடியாத ஒன்று.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சுயநலத்தனாமாக இருந்தாலும் உண்மையாகச் சொல்லவேண்டுமென்றால் அன்றாட தமிழ் சினிமா அரசியல் எதுவும் என்னை பாதிக்காமல், என் வயிற்றிலடிக்காமல் இருப்பதால் என்னை எதுவுமே தாக்கவில்லை. இவற்றையும் செய்தியாக பார்த்திருகிறேனே தவிர ரொம்ப ஃபீல் ஆனது ஒரே ஒரு விஷயத்தில் தான். இந்தத் துறையில் காலூன்றி பெயர் வாங்குவ்து கஷ்டம் அதுவரை என்னதான் சூப்பராய் வேலை செய்தாலும் அது வேறொருவர் பெயரில் தான் அவரும் என்று கேட்டது ரொம்ப பாதித்தது. உறவினர் ஒருவர் மிக நன்றாக புகைப்படம் பிடிப்பார். சினிமா துறையில் ஒரு படத்தில் அவர் தான் ஸ்டில்ஸ் எடுத்ததாகவும் ஆனால் வேறொருவர் பெயரில் தான் படம் ரிலீஸானது என்று கேள்விப்பட்ட போது அதை ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டில்ஸே இந்த நிலையென்றால் அசிஸ்டண்ட் டைரக்ட்டர்களின் நிலை ஹூம்ம்ம்ம்ம்.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

சம்பவம் என்றால் சீரோ என்பதால், சம்பவம் என்பதை விஷயம் என்று மாற்றிக்கொள்கிறேன். உடனே நியாபகத்துக்கு வருவது காதலுக்கு மரியாதை க்ளைமாக்ஸ். ஒரு அழுத்தமான திரைக்கதை. ஃபாசிலின் மேல் எனக்கு மிகப் பெரிய மரியாதையை உண்டுபண்ணிய படம். இதை பல முறை பார்த்து நிறைய பாடங்கள் கற்று இருக்கிறேன். அதே போல் இந்த மாதிரி ஒரு காட்சிக்கு எப்படி பிண்ணனி இசை அமைப்பது என்று இளையராஜ ஒரு விரிவாக்கப் பாடமே எடுத்திருப்பார். அற்புதமான காம்பினேஷன்.

அதே போல் ரோஜா. மணிரத்னத்தின் திரைக்கதையமைப்பு இந்த படத்தில் சொல்லி மாளாது. பார்ப்பவரின் மனநிலையை கரெக்ட்டாய் திரைக்கதையில் எக்ஸ்ப்ளாயிட் பண்ணியிருப்பார். இந்த படத்தின் பிண்ணனி இசையைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு புது ட்ரென்ட் செட்டராய் அறிமுகமான ஏ.ஆர்.ஆரின் ரிச்னஸ் இன்றும் இந்தப் படத்தைப் பார்க்கும் போதெல்லாம் ஆச்சரியப்பட வைக்கும். தீவிரவாதிகளின் தீவிரதத்தை இசையில் அப்படியே கொண்டுவந்திருப்பார். சவுண்ட் இன்சினியரிங் என்ற வார்த்தையை ஏ.ஆர்.ஆர். வந்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். மணிரத்தினம், ஏ.ஆர்.ஆர் காம்பினேஷனில் எனக்கு மிகவும் பிடித்த இன்னொரு படம் திருடா திருடா. இந்தப் படத்தின் "ராசாத்தி என் உசிரு என்னுதில்லை" என்னுடைய ஆல் டைம் பேவரிட்.

சமிபத்தில் வந்த தாம் தூம் பட சவுண்ட் இஞ்சினியரிங் சூப்பராய் இருக்கிறது. வீட்டில் ஹோம் தியேட்டர் இருந்தால் இந்த படத்தின் ஐங்கரன் ஒரிஜினல் டி.வி.டியை போட்டு பாருங்கள் நான் சொல்வது புரியும். டோல்பி 5.1 மிக்ஸிங்க ரசித்து பண்ணியிருக்கிறார்கள்.

இவை தவிர நிறைய தமிழ் படங்களில் தொழில்நுட்பம் பிடித்திருந்தது. ஆனால் துரதிஷ்டவசமாக பெரும்பாலும் அந்த படங்கள் கமெர்ஷியல் வெற்றி பெறாததால் இந்த தொழில்நுட்பங்கள் உரிய கவனத்தைப் பெறாமல் போயிருக்கின்றன. உதாரணமாக ஓரம்போ படத்தின் எடிட்டிங் மற்றும் வசனம். எனக்கு மிக பிடித்தது. படமே ஒரு வித்தியாசமான லைட் ஹார்ட்டெட் களம். பாலுமகேந்திராவின் காமிரா கோணங்கள், பி.சி.ஸ்ரீராமின் லைட்டிங், தோட்ட தரணி மற்றும் சாபு சிரிலின் கலை சொல்லிக்கொண்டே போகலாம்.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இப்போ இரண்டு வருடமாய் ரொம்ப இல்லை. வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி. முக்கியமான விஷயங்களை எல்லாம் கரெக்ட்டாய் சொல்லிவிடுவார். முன்னாடி லிங்க் எல்லாம் எடுத்துவைப்பார். சினிமா வண்டு, நண்டு, தவளை என்று எங்கிருந்தெல்லாமோ நாலெட்ஜ் டெவெலப் பண்ணுவார். எனக்கு இந்த விஷயங்களை விட அதோடு வரும் படங்களை எங்கிருந்து விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கரெக்ட்டாய் எப்படி பிடிக்கிறார்கள் என்று தான் புத்தி போகும். அப்புறம் நான் படிக்கிற மாதிரி அதிலிருக்கும் படங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று இப்போ எங்கே படித்தார் என்பதைக்கூட சொல்ல மாட்டேங்கிறார். மிஸ்டர் மியாவ், லைட்ஸ் ஆன்....ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அட நீங்க வேற ஏங்க என் வாயக் கிளறிக்கிட்டு...


7. தமிழ்ச்சினிமா இசை?

உலகத் தரத்திற்க்கு கொஞ்சமும் சளைத்ததில்லை. பின்னிப் பெடலெடுக்கிறார்கள். தமிழ் சினிமா பெருமைப் படும் லெவலில் தான் இருக்கிறது.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஓ நிறைய. கலைப் படங்கள் என்பதைவிட மற்ற மொழிகளில் பாப்புலர் தான் நிறைய பார்த்திருக்கிறேன். தெலுங்கு படம் பார்க்க ஆரம்பித்ததற்கு முக்கிய காரணம் பொம்மரில்லு. அந்த படத்தின் ஒரு பாட்டை பார்த்துவிட்டு படத்தைப் பற்றி என்ன ஏதென்று தெரியாமல் வாங்கிப் பார்த்தேன். ஜனரஞ்சகமாக ஒரு விஷயத்தை எப்படி சொல்வதென்று பாடம் நடத்தியிருந்தார் இயக்குனர். அதே போல் மலையாளத்தில் தன்மாத்ரா. சமீபத்தில் வெட்னஸ்டே இந்திப் படம் பார்த்தேன். இரவு பதினொன்றரைக்கு ஆரம்பித்து ஒன்றரை வாக்கில் முடித்தோம். சமீபத்தில் என்னை மிக தாக்கிய படமாகிவிட்டது. படம் பார்த்துவிட்டு ஒரு அரைமணிநேரம் வெத்து ஸ்கிரீனையே பார்த்துக்கொண்டிருந்தேன். படத்தை கண்டிப்பாக வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள். ஒரு இரண்டு மணி நேரம் கட்டிப்போட்டுவிடுவார் இயக்குனர். பாட்டு கிடையாது, சினிமாவுக்கே உண்டான பிலடப் கிடையாது, எந்த விஷயத்தையும் சுத்தி தொடுவதெல்லாம் கிடையாது. படம் விறு விறு விறுவென போய் முடியும் போது தான் உங்களுக்கே சுயநினைவு வரும் அவ்வளவு ஒன்றிப் போய்விடுவீர்கள். வெரி ஹைலி ரெக்கமெண்டட். ஆங்கில படங்களில் நிறைய. லார்ட் ஆப் த ரிங்க்ஸ் டாப்பில் இருக்கிறது. இந்த படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கங்கள் ஏராளம். 'தி வில்லேஜ்', 'லைப் இஸ் பியூடிபுல்' இன்னும் நிறைய இருக்கிறது.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஹீ ஹீ நேரடி தொடர்பு கான்ட்ரிப்யூஷன் என்ற ரீதியில் இதுவரை இல்லை. சில பேரை தெரியும் என்ற வரையில் தான். ஆனால் ஒரு நாள் நான் ஒரு தமிழ் படம் கண்டிப்பாக இயக்குவேன். அது மேம்பட உதவுமா என்றெல்லாம் காலமும் மக்களும் தான் சொல்லவேண்டும். இந்த ரிஸ்க் எடுக்கத் தயங்கும் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் போன வருடமே போங்கடா நீங்களும் உங்க வேலையும்ன்னு தூக்கி எறிந்துவிட்டு சினிமா துறைக்குள் நுழைந்திருப்பேன்...பார்ப்போம்.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ரொம்ப நல்லாவே இருக்குன்னு நினைக்கிறேன். திறமைக்கு குறைச்சலே இல்லை.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

இந்த சமாச்சாரங்கள் செய்திகள் பத்திரிகைகள்...etc இதையெல்லாம் விட்டுவிடுங்கள், சினிமா கிடையாது என்றால் வாரத்துக்கு ஆறு படம் பார்க்கும் என்னை மாதிரி அடிக்டுக்கு என்ன அகும்...? கை காலெல்லாம் விலுக்கு விலுக்குன்னு இஸ்துக்கும்.


இச்சங்கிலியைத் தொடர நான் அழைக்க நினைக்கும் ஐவர்.

வழக்கம் போல இங்கே வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் தான். யாரெல்லாம் இதுவரை இந்த தலைப்பில் எழுதலையோ அவர்கள் எல்லாரையும் அழைக்கிறேன். எனக்குப் பிடித்த இந்த தொடரில் மற்றவர்களின் கருத்துக்களையும் ஆர்வத்தோடு படித்துக்கொண்டிருக்கிறேன் ஆகவே இதுவரை எழுதவில்லை என்றால் எழுதுங்கள். நன்றி.

30 comments:

Unknown said...

me the firstu............

Unknown said...

//ஓரம்போ படத்தின் எடிட்டிங் மற்றும் வசனம். எனக்கு மிக பிடித்தது. படமே ஒரு வித்தியாசமான லைட் ஹார்ட்டெட் களம்//
I liked very much about the Editing and Story dialogue... even Climax too

குப்பன்.யாஹூ said...

மிக அருமையாக எழுதி உள்ளீர்கள்,

விடுபட்ட கேள்விகள்:

முதல் நாள் முதல் காட்சி பார்த்த திரைப்படம் எது?

எந்த படம் அதிகமான முறை பார்த்தீர்கள்? ஏன்?

கல்லிடை சக்தி திரை அரங்கு பற்றி எழுதாதது மிகவும் வருத்தம்.


குப்பன்_யாஹூ

இலவசக்கொத்தனார் said...

தொடர் விளையாட்டு எல்லாம் விளையாட மாட்டேன் எனச் சொல்லும் டுபுக்கு சினிமா தொடர் மட்டும் எழுதியதற்குக் காரணம் மேட்டர் பஞ்சமா எனக் கேட்க மாட்டேன்!

சக்தி பற்றிக் கூறிய குப்பன் வைராவி அண்ணாவை சொல்ல மறந்தது ஏன்?

Anonymous said...

Romba interesting-aana sangili. Ennaala padhivu podaama irukka mudiyalai.

குப்பன்.யாஹூ said...

இலவச கொத்தனார் அண்ணாச்சியும் தாமிரபரணி நாகரீகம் சேர்ந்தவரா.

வைராவி அண்ணா, நெல்லை கலைவாணி எல்லாம் எழுதலாம், எல்லார் வீட்லயும் இப்பொழுது தங்கமணிகளும் பதிவு படிப்பதால் விட்டு விட்டேன்.

என் கேள்வியை திருத்தி கொள்கிறேன்:

முதல் நாள் முதல் காட்சி முதல் தடவை பார்த்த படம் எது?

முதல் நாள் முதல் காட்சி பார்த்த படங்கள் எவை?

ரூபினி மற்றும் குஷ்பூ இருவரது படங்களும் ஒரே தினத்தில் வந்தால் டுபுக்கு முதலில் தேர்வு செய்யும் படம் எது?

குப்பன்_யாஹூ

Mahesh said...

அப்பாடா... ஒரு வழியா எழுதிட்டீங்க... கல்யாணத்துக்கு கூப்ட்டோம்... வளைக்காப்புக்காவது வந்தீங்களே :)))))

சூப்பர்ங்க...நீளமா இருந்தாலும் சுவாரசியமா இருக்கு... ஓரம்போ வை நானும் ரொம்ப ரசிச்சு பதிவுலயும் எழுதினேன். நீங்களும் ரசிச்சது சந்தோஷமா இருக்கு...

அப்பப்ப நம்ம கடைப்பக்கமும் ஒரு எட்டு வந்து எட்டிப்பத்துட்டுப் போங்க :))))

ambi said...

//வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி.//

ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல? :p

சக்தி தியேட்டர்களின் ஸ்பெஷல் உம்மாச்சி படங்களை பத்தி நாலு வரி எழுதி இருக்கலாம், பரவாயில்லை, ஒரு தனிபதிவா வந்தாலும் தப்பில்லை.

@குப்பன் யாஹு & கொத்ஸ்,
நீங்களுமா? :p

Anonymous said...

appa oru valiya pathiva pottachu!!!!nallaruku.neelamana ana interesting.வீட்டில் தங்கமணி தான் பிலிம் நியூஸ் ஆனந்தி. முக்கியமான விஷயங்களை எல்லாம் கரெக்ட்டாய் சொல்லிவிடுவார். முன்னாடி லிங்க் எல்லாம் எடுத்துவைப்பார். சினிமா வண்டு, நண்டு, தவளை என்று எங்கிருந்தெல்லாமோ நாலெட்ஜ் டெவெலப் பண்ணுவார். எனக்கு இந்த விஷயங்களை விட அதோடு வரும் படங்களை எங்கிருந்து விஷயத்துக்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் கரெக்ட்டாய் எப்படி பிடிக்கிறார்கள் என்று தான் புத்தி போகும். அப்புறம் நான் படிக்கிற மாதிரி அதிலிருக்கும் படங்களை மட்டும் தான் பார்க்கிறேன் என்று இப்போ எங்கே படித்தார் என்பதைக்கூட சொல்ல மாட்டேங்கிறார்.ingayum athe than. -isthri potti

Anonymous said...

naan inum konjam interestinga eythir parthen. oru velai yerkanave (jeyam koondu sambar-3 velai fullkattu- jeyamalini,manalane mangaiyin pakkiam)padichathala irukumo-isthripotti

Anonymous said...

holiday sep09,2007 la vantha post-isthripotti

Anonymous said...

தல,

JTK 2.5 சீக்கிரம் போடுங்க.......

:))

Kathir.

மன்மதக்குஞ்சு said...

நீளமான பதிவாக இருந்தாலும், இவ்வளவு நாள் காத்திருந்த்தற்க்காக சரியான தீனி என்றே சொல்ல வேண்டும். உங்களது அனைத்து பதிவுகளையும் படித்து விட்டேன். ப்ளாக்கை 3 அ 4 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே படித்திருக்க வேண்டும். நிறைய மிஸ் பண்ணியிருக்க தேவையில்லை.

"பெட்டெர் லேட் தென் நெவெர்".

தங்கள் எழுத்து பணி தடையின்றி தொடர வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகிறேன்.

பாசகி said...

ரொம்ப நல்ல comeback. ஆனா இதெல்லாம் பத்தாது, continue ஜொள்ளித் திரிந்த காலம் please :-)

வள்ளி நாயகம் said...

அண்ணாச்சி, ஜொதிகா வ சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க. மக்கள் வெயிட்டிங்....

Blogeswari said...

Nalla tag. time kedaikkumbodu padivu podaren

மன்மதக்குஞ்சு said...

"நீண்ட பதிவானாலும் சுவையான அருமையான கானல்நீர்" என "taminglish.com"ல் கோர்த்து விட்டுள்ளேன். முன் அனுமதியின்றி இணைத்ததற்க்காக மன்னிக்கவும்.

Unknown said...

நைனா.. நானும் உங்க ஊராண்ட ஒரு தபா போய் இருந்தேன் சும்மா சொல்ல கூடாது ஊரு பட சொக்க இக்கீது பா.. நம்ம பெருமாள் இருக்கிறாரே அதாம்பா லட்சுமி வராக பெருமாள் எங்க ஊட்டு தங்கமணியோட கொலதேய்வமாம்!! அங்க சன்னதி தெருவிலியே அவங்க ஊரு சாதி சனத்தோட ஊட்லியே தங்கிடோம்ல.. ஆனா ஒரு துரை இங்க சொல்லி இருக்காரே "ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல?" கொஞ்சம் இல்ல நரியவே இக்கீது.. வாணாம்பா நமக்கு ஏன் பொல்லாப்பு அப்பறம் உங்க வீட்ல தொடப்பம் எப்படி பிய்யுதோ அது மாதிரி என்னையும் லாடம் கட்டிடும் எங்க வூட்டு தங்கமணி.. அமாம் சும்மாங்காட்டியும் உம்மாச்சி உம்மச்னு ரீல் காட்டுறியே நெசமாலும் சாமி தான?? இல்ல கஜாவ அப்படி சொல்றிய நைனா...என்ன செய்யறது.. நீங்கோ பிஞ்சிலயே பழுதவங்கலாச்சா நீங்கோ என்ன சொன்னாலும் ரெண்டு அர்த்துதுல தானே எடுத்துக்கு வேண்டி இருக்கு.. என்ன நான் சொல்றது ??? பல நாள் கழிச்சு ஒரு நல்ல போஸ்ட்.....வாழ்க வளமுடன்

Anonymous said...

மகேந்திரனையும் (இயக்குநர்), அசோக்குமாரையும் (ஒளிப்பதிவு) வுட்டுட்டீங்க....(இதை சொல்லாம விட்டா ...நீங்க 30 வயசுக்கு கீழ அப்டீன்னு நாங்க நம்புவோம்னு ..நீஙக நம்பாதீங்க)...

Anonymous said...

seekirame t.r. kannakka nadippu,kadhai,thiraikadhai vasanam,music ,editing direction by dubukkunnu ungal neenda nalaya kanavu ninaivvaga vazhtukkal.aa solla marandhuteene padam premierekku marakkamal koopidungal,60 addi cha adi cutout veikka naangal thayar...
nivi.

Anonymous said...

thank god you started blogging again.do u know how many times i have visited your blog and found it without any new updates and waited 4 new posts.I remember long back u registered a domain name.wht happened to it?

ambi said...

//ஒரு துரை இங்க சொல்லி இருக்காரே "ஹிஹி, கல்லிடைகாரங்களுக்கே கொஞ்சம் வம்பு ஜாஸ்த்தி இல்ல?" கொஞ்சம் இல்ல நரியவே இக்கீது.. //

வாங்க இராமசந்திரன், நல்லா இருகீங்களா? :))

Anonymous said...

அம்பி, என்னத்தான் கேட்டீங்கன்னு நெனைக்கிறேன்...(இன்னொரு இங்கிலீஷ் ராமச்சந்திரன் வேற இருக்காரு). நான் நல்லா இருக்கேன்...யூ.எஸ்.ஏ தான் ஆட்டம் காணுது. அப்டேட் பண்ண மேட்டர் இருக்கு....உங்க கிட்டயும் அண்ணாத்தே டுபுக்கு கிட்டயும் தொலைபேசி-ல மாட்லாடறேன்.

Unknown said...

அய்யா தமிழ் ராமசந்திரன் ஸாரு.. அது என்னபா தொரை கரீகிட்டா நா சொன்ன கருத்த கோந்து கணக்கா எட்து ஓட்டிகினு என்ன தலைவா நல்லாகீரியா கேட்டா நீங்க குறுகால பூந்து "என்ன தானே கேட்டேன்னு?" சைக்கிள் கேப்ல பூந்து வணக்கம் சொல்றீங்கோ..அமெரிக்கா எப்போ நைனா தமிழ்நாட்டுக்கு போய் டாஸ்மாக்ல ஊதிக்கிட்டு ஆட்டம் ஆடிச்சு ?? எங்க ஊரு பெரியவரு அன்னைக்கே சொன்னாரு.. மேல எறுரோம்னு மெதப்புல இருக்காத... கீழ ஊயந்தா பல்லு கூட தேறாதுன்னு..இப்போ ஒலகத்துல.. அல்லா நாடும் தான் இதே தெரு கூத்த தான் ஆடுது..கடவுளாண்ட உங்க பாரத்த எறக்கி வையுங்க.. உங்களுக்கு ஒரு கொறையும் வராது

Anonymous said...

துரை (ராமச்சந்திரன்) அய்யாவுக்கு, அம்பியோட கமென்ட்டுல மொத வரி உங்களுக்கும், ரெண்டாவது எனக்கும்னு பிரித்துப் பொருள் கண்டதுனால இந்த குழப்பம். யாரை சொன்னா என்ன..."எல்லாம் போய்ச்சேரும் கண்ணனுக்கே...."

உங்க ஆறுதலுக்கு நன்றி. என்ன ரொம்ப மிஞ்சி போச்சுன்னா...இங்க ஒரு நமஸ்காரத்தை போட்டுட்டு... "ஸொர்க்கமே என்றாலும்...அது நம்மூரு போல வருமா...." - ன்னு பாட்டு பாடிக்கிட்டே மூட்டைய கட்டவேண்டியதுதான். வந்த குறிக்கோள் எல்லாம் நிறைவேறி ரொம்ப வருஷமாச்சு.

Dubukku said...

நெல்லைகாந்த் - வாங்க உங்களுக்கும் அந்த படம் பிடித்ததா...ஆமாம் க்ளமாக்ஸும் வித்தியாசமாக இருந்தது.

குப்பன் - வாங்க சார். நல்லா இருக்கீங்களா. உங்கள் கேள்விகளுக்கு பதில். முதல் நாள் முதல் காட்சி பார்த்த திரைப்படம் எது? - இது வரைக்கும் எதுவுமே இல்லை. ஆனால் குடுமத்தோடு முதல் நாள் மூன்றாம் காட்சியாக முதல் மரியாதை பார்த்த நியாபகம் இருக்கிறது. சின்னப் பையனாக இருந்ததால்...படம் புரியவே இல்லை. பாதியிலேயே தூங்கிவிட்டேன்.

எந்த படம் அதிகமான முறை பார்த்தீர்கள்? ஏன்? - தமிழில் சலங்கை ஒலி மற்றும் உன்னால் முடியும் தம்பி. அதிக பட்சமாக ஆறு ஏழு முறை பார்த்திருப்பேன். படமாக்கிய விதமும், கதையும், கருவும் தான் இவற்றில் பிடித்தது. ஆங்கிலத்தில் லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் இதுவரை இருபதுக்கும் மேற்பட்ட முறை பார்த்திருப்பேன்...படத்தில் ஓவ்வொரு ப்ரேமிலும் இயக்குனரின் உழைப்பு தெரியும்.
கல்லிடை சக்தியில் ஏடாகூட படம் பார்த்ததில்லை நல்ல படம் மட்டும் பார்த்திருக்கிறேன் (சத்தியமாக)

கொத்ஸ் - யோவ் எப்பையா தொடர் விளையாட்டு எழுத மாட்டேன்னு சொன்னேன்..? அந்த சாதனை தொடரில் விஷயம் எதுவும் இல்லை என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள அவ்வளவு தான். இன்னும் கோவம் குறையலையா? :))

குண்டலகேசி - அழைப்பை ஏற்றுக்கொண்டதுக்கு மிக்க நன்றி. நீங்களும் சுவாரசியமாக எழுதி உள்ளீர்கள்.

குப்பன் - முடிவாத் தான் கிளம்பியிருக்கீங்க...ரூபினி/குஷ்பூ ரெண்டுமே கிடையாது....என்னை மாதிரி யூத்துக்கு ஏத்த கேள்வியா கேளுங்கையா... :))))


மகேஷ் - சாரிங்க ரொம்ப நாளாகிடிச்சு மன்னிச்சிகோங்க. கண்டிப்பா வரேங்க...ஆபிஸில பார்க்கமுடியறதில்லை வூட்லேர்ந்து தான் இப்படி அர்த்த ராத்திர்ல பார்க்கனும். இதோ வந்துகிட்டே இருக்கேங்க..


அம்பி - உண்மையை சொன்னனும்னா சக்தி தியேட்டருல பார்த்த முதல் படமே உங்க அம்மா அப்பா கூட தான். நீ அப்போ ரொம்ப குழந்தை. சிவாஜி நடிச்ச சிவந்த மண் அங்க தான் பார்த்தேன். இன்னமும் நல்லா நியாபகம் இருக்கு.

இஸ்திரிபொட்டி- தங்கமணிகளெல்லாம் க்ரூப்பாத் தான் கிளம்பியிருக்காங்க போல...அவ்வ்வ்வ்வ்வ்வ்
அடுத்த தரம் சுவாரசியம் குறையாம இருக்க கவனம் எடுத்துக்கறேன்.

கதிர் - வாங்க பதிவு பிடிக்கலைங்கிறத எவ்வளவு நாசூக்கா சொல்றீங்க...:)) இதோ போட்டுக்கிட்டே இருக்கேன்.

மன்மதக்குஞ்சு - வாங்கைய்யா...உங்கள் ஆர்வத்திற்க்கும் டயம் எடுத்துக்கொண்டு பழைய பதிவுகளுக்கும் போட்ட கமெண்டுக்களுக்கும் மிக்க நன்றி. உங்கள் வாழ்த்து மிக்க ஊக்கமாய் இருக்கிறது,.

வான்க இதோ பொட்டாச்சு

வள்ளி - வாங்கண்ணே..இதோ போட்டாச்சு...சந்தோஷமா இருக்கு நீங்க காத்துக்கிட்டு இருக்கீங்கன்னு சொல்லும் போது...தாமததிற்க்கு மன்னிக்கவும்.

ப்ளாகேஸ்வரி - வாங்க உங்கள மாதிரி ஃபீல்டுல இருக்கறவங்க போட்டா சுப்பாரா இருக்கும்...ஐ ஆம் தி வெயிட்டிங்

மன்மதக்குஞ்சு - அதெல்லாம் கேக்கவே வேண்டாம்...தாராளமாய்...(லிங்க் மட்டும் குடுத்திருங்க ...விளம்பரத்துக்காகும் :))) )

ராமசந்திரன் - வாங்கைய்யா,,,நீங்களும் கல்லிடை மாப்பிள்ளையா,...யோவ் அது நிசமான சாமி படம்யா...பச்சப் புள்ளைய கெடுக்கப் பார்த்தீங்களே...:)))

இராமசந்திரன்(தமிழ்) - தமிழ்ல ஒன்னும் இங்கிலீஸ்ல ஒன்னுன்னு ரெண்டு ராமசந்திரன் இருந்தா குழப்புதுய்யா...யோவ் நீர் சொல்லாட்டியும் இங்க 30க்கு கீழ் தான் :))

நிவி - நீங்க டீ.ஆர விடமாட்டீங்களா :)))) 60 அடியா உங்க நல்லெண்ணம் தெரியுது :))))

அனானி - ஒரு டம்மி பெயராவது போடக்கூடாதா...இங்க வந்து அடிக்கடி பார்த்ததுக்கு மிக்க நன்றி. அந்த டொமைன் பொயே போச்சு... என்ன மாதிரி கமிட்மென்ட் இல்லாதவன்களுக்கு அதெல்லாம் லாயக்கில்லை

ராமசந்திரன்ஸ்/அம்பி - வழக்காடு மன்றம் சோக்காத் தான் இருக்கீது....நோட்டிஸ் பீஸ ஒழுங்கா ட்ரான்ஸ்பர் பண்ணிடுங்க..

Vettipullai said...

Sir, Unga blog eppavume ennakku pidikkum. But kattayama hospital bill ungallukku anuppa poren. Avolo vayaru vali... sirichi than... Continue please.

Anonymous said...

awesome blong..vizhundu vizhndhu sirichen..

sivaranjini said...

Pls watch "Saving Private Ryan" english film.
it will definitely hit ur brain and heart.

sivaranjini said...

Pls watch "Saving Private Ryan" english film.
it will definitely hit ur brain and heart.

Post a Comment

Related Posts