Monday, July 14, 2008

சென்னை

பி.ஏ.வில் தனியாக ஜாலியாக போனால் பக்கத்தில் ஐம்பத்தியைந்து வயது தாண்டிய மாமி பாட்டியும், பின்னால் சீட்டை காலால் அடிக்கடி எட்டி உதைக்கிற வாண்டும் உட்காரக் கடவது என்று எனக்கு எழுதி இருக்கிறது. இது போக நான் உட்கார்ந்திருக்கிற பக்கம் ஆம்பிளை கம்மனாட்டி க்ரூ மெம்பர் தான் உபசாரத்துக்கு வரவேண்டும் என்று தங்கமணியின் சாபம் வேறு பலித்து தொலைகிறது. இதுக்கு பேசாமல் கஜகஸ்தான் ஏர்லைன்சிலேயே போயிருக்கலாம்.

வேறு வழியே இல்லாமல் தூங்கிய மூன்று மணி நேரம் போக மீதி ஏழு மணி நேரத்தை ஓட்ட டாம் ஹான்க்ஸ் நடித்த சார்லி வில்சன்ஸ் வார் பார்த்தேன். ரொம்ப பிடித்திருந்தது நல்ல படம். பட ஆரம்பத்தில் ஹாட் டப்பில் வெள்ளைக்கார குழந்தைகள் பிறந்தமேனியாக குளிக்கும் போது மட்டும் பக்கத்தில் வயதான பெண்மணி இருக்கிறாரே என்று கொஞ்சம் நெளிய வேண்டி இருந்தது. அதற்கப்புறம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா எப்படி ரஷ்யாவின் முதுகில் குத்தியது என்று படம் சுத்த சைவமாக போனது. அப்புறம் பேச்சு குடுத்ததில் தான் தெரிந்தது பக்கத்திலிருந்தவர் பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர். இரண்டாவது முறை படம் ஓட ஆரம்பித்த போது திரும்பவும் ஹாட் டப் சீனெல்லாம் பார்க்காமல் ரொம்ப நல்ல பிள்ளையாக பள்ளி முதல்வரிடம் இந்தக் கால ஸ்டூடன்ட்ஸைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் ஆச்சரியகரமாக சென்னை தூத்துக்குடி ஏர் டெக்கான் கலக்கலாய் இருந்தது. அனேகமாய் அந்த ப்ளைட் மும்பாயிலிருந்தோ குஜராத்திலிருந்தோ வருகிறது. இத்துனூன்டு ட்வின் ப்ரொப்பெலர் விமானத்துக்கு கண்ணுக்கு குளுமையாய் இரண்டு ஏர்ஹோஸ்டஸ். அருமையான சர்வீஸ் வேறு.

சென்னை சென்னை தான். மைலாப்பூரென்ன, பாண்டி பஜாரென்ன, ஸ்பென்சர், சிட்டி சென்டர் ஷாப்பிங் மால்ஸென்ன...சூப்பராக இருக்கிறது. ஷாப்பிங் மால்கள் எல்லாம் நவநாகரீக நங்கைகள் வலம் வர இன்னமும் மிக அழகாக இருக்கின்றன. என்ன விலைவாசி ஒன்று தான் ஷாக் அடித்தது. "டேக் த ட்வெண்டி பைவ்"ன்னு அசால்ட்டாக மக்கள் பணத்தை வீசி எறிந்து விட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். மீறி பேரம் பேசியதில் "இந்த பேரதுக்கு ...லண்டன்ல இருக்கன்னு மட்டும் மூச்சு விட்டுறாத..கொன்னே போட்ருவாங்க"ன்னு வார்னிங்க தான் கிடைத்தது. ஒன்னே ஒன்னுங்க...நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.

துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள். ஹெம் அடிக்காத கிழித்துவிட்ட முக்கால் டவுசர் அதே துணியில் இருந்த முழுப் பேண்ட்டைவிட விலை கூடுதல். "பேசாம முழு பேண்டை வாங்கி நாமளே கிழிச்சிக்கலாமே என்ற ஐடியா வீட்டில் யாருக்கும் தோணாமல் 'உன்னை எப்படி லண்டன்ல அலோ பண்ணினாங்க..பைல்ட் கிட்ட சொல்லி போற வழியில் அரபிக் கடல்ல தள்ளிட்டு போகச் சொல்லறேன்' என்று சமுதாய அக்கறை தான் விஞ்சியது. ஆழ்வார்பேட் ஆஞ்சநேயர் கோவில் நிர்வாகத்தை ஏதோ ஒரு பாங்க் ஏற்றுக்கொண்டு டெய்லி சாய்ங்காலம் டிபன் போடுகிறார்கள். வீட்டில் எல்லாரும் அது பிராசதம் என்று பஜனை பாடினாலும் அக்காக்களின் உபயத்தில் கோயிலுக்கு போகாமலேயே டெய்லி டிபன் கிடைத்தது.

அக்கா பசங்களெல்லாம் பெரிய பையன்களாகிவிட்டார்கள். டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். பிலிம்மி சானல் புண்யத்தில் ஏஞ்சலினா ஜோலிக்கு பிறகு காலியாயிருந்த தன்னிகரலில்லா தலைவி பதவியை ஒருவழியாக நிரப்ப முடிந்தது. கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால் "என்ன மாமா நீங்க வேஸ்டாயிருக்கீங்க...இவ எப்பவோ வந்தாச்சு பேரு கத்ரீனா கைப், நாலு ஒன்னுக்கும் ஒப்பேறாத படங்கள்ல நடிச்சிருக்கா...நீங்க வேற தலைவி கொலைவின்னு அகநானூறு மாதிரி புலம்பிகிட்டு ...சல்மான்கான் எப்பவோ உஷார் பண்ணிட்டான்"ன்னு காறித் துப்பிவிட்டார்கள். இதில வேற ஒருத்தன் அவளை எல்லாரும் கூப்பிடுகிறமாதிரி "கேட்"ன்னு செல்லப் பேரு வைச்சு வேறு விளிக்கிறான்.

"டேய் உங்க எல்லாருக்கும் அரும்பு மீசை முளைச்சு பெரிய பசங்களாயிட்டீங்க ஒத்துக்கறேன்...ஏதோ உங்க ரேஞ்சுக்கு எம்மா வாட்சன் படத்தை டெஸ்க்டாப்புல போட்டுக்கோங்க வேணாங்கலை..யார்கிட்டயும் வீட்டுல போட்டுக்குடுக்க மாட்டேன் ஆனா கத்ரீனா கைப்ப மட்டும் எவன் கம்ப்யூட்டர்லயாவது பார்த்தேன்...அப்புறம் பேஜாராகிடுவேன் நானே ரொம்ப நாள் கழிச்சு ஒரு தானைத் தலைவியைக் கண்டுபிடிச்சிருக்கேன் அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது. தலைவிக்கு சொந்த ஊரு லண்டனாம். அடா அடா அடா....கேட் படம் ஒன்னு கிடைச்சா ஹாலில் ஜோராக மாட்டவேண்டும்.

சென்னை வலை மக்கள் வலை மக்கள் சந்திப்பு நல்லவேளை பிசுபிசுக்காமல் தப்பித்தது. அது பற்றி நிறைய சொல்லவேண்டுமாதலால் படங்களுடன் அடுத்த பதிவில்

27 comments:

Anonymous said...

http://www.luckykabutar.com/images/players/KatrinaKaif.jpg (watch this photo closely - this can be your desktop screensaver.

http://www.katrinakaif.org.in/


http://www.dailytimes.com.pk/images/2005/10/10/10_10_2005_katrina%20kaif.jpg

Another KK rasigan.

ஆயில்யன் said...

//துணிக்கடைகளில் ட்ரெஸ்ஸில் துணி எவ்வளவு குறைவாக இருக்கிறதோ அதற்கேற்ற மாதிரி பில்லில் கூட்டி இருந்தார்கள்.//

:))

கைப்புள்ள said...

//அத்தோட இனிமே எவனாவது செல்லமா 'கேட்'டுன்னு கூப்பிட்டீங்க அப்புறம் நான் Dog-ஆ மாறிடுவேன்னு"னு குடும்பத்தில் சொத்தை பிரிப்பதற்க்குள் போதுபோதுமென்றாகிவிட்டது.//

தலிவரு is back with a bang :)

Syam said...

//கண்டேன் சீதையை ரேஞ்சுக்கு இம்ப்ரெஸ்ஸாகி இந்த புது தலைவி பற்றி விஷயங்கள் சேகரித்தால்//

இதுக்கு தான் அடிக்கடி நம்ம ஊர் பக்கம் எட்டி பாக்கணும் :-)

Syam said...

//Another KK rasigan//

நீங்க நல்லா இருக்கணும் :-)

Bleachingpowder said...

//நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை//

இதெல்லாம் ரொம்ப ஒவரு. முனு மாசம் முன்பு சென்னை சென்ட்ரல்ல இருந்து வேளசேரி போவதற்கு ஒரு ஆட்டோவ கூப்பிட்டா அவன் இருநூற்றி ஐம்பது ருபாய்குறான், என்னப்பா ஆட்டோ A/c யான்னு கேட்டா மொறக்குறான்.

இது பரவாயில்லை இரண்டு வருடங்களுக்கு முன் Company induction காக வந்த என்னுடைய Hyderabad Collegues இருநூறு ருபாய் கொடுத்து பாரிஸ் கார்னர் போனார்கள்.

சென்னை ஆட்டோவை பொறுத்தவரை ஊருக்கு புதுசுனா டவுசர அவுக்காம வுடமாடாங்க. இது எல்லா ஊருக்கும் பொதுனாலும் சென்னை கொஞ்சம் ஒவர்.

rapp said...

கேத்ரீனா கைப்போட பெற்றோர் சென்னைலதான் இருக்காங்கத் தெரியுமாண்ணே:):):)

rapp said...

என்ன சொன்னாங்க பிரின்சி மேடம் இந்த கால குழந்தைகளைப் பத்தி, வெறும் முதல் கமண்ட மட்டும் போட்டா பொறுப்பில்லாதவளா நினைச்சிடுவீங்க இல்ல, ஹி ஹி

Sridhar Narayanan said...

//பத்மா ஷேஷாத்திரி பள்ளி முதல்வர்.//

யாரைச் சொல்றீங்க? Mrs YGP-யையா? அவங்க பையனுக்கே 60 வயசுங்க. அவங்களுக்கு நிச்சயம் 80 வயசுக்கு மேலே இருக்கும்.

உங்களுக்காக Exclusive கேத்தரீனா கைஃப் - v.v. hot.

http://www.youtube.com/watch?v=-BZF3T2KoQQ

rapp said...

அவங்க பள்ளி முதல்வர் பதிவியில் இருந்து விலகி ரொம்ப வருஷம் ஆச்சுங்க, ரொம்ப நாளாகவே அங்கு வேறு முதல்வர்கள்தான் அங்கு இருக்காங்க

Sumathi. said...

ஹலோ டுபுக்கு,

//ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை.//
ஆஹா, ஏன் நீங்க கொஞ்சம் சொல்லி குடுத்துட்டு வர்ரது தானே, என்ன திடீருன்னு ஒரு பாசம் அவங்க மேலே?

ம்ம்ம் இப்பதான் பழைய ட்ராக்குக்கு வந்து இருக்கீங்க, சீக்கிரமா முக்கியமான மேட்டருக்கு வாங்க.

Anonymous said...

Hai dubukks,

This is my first comment.

I enjoyed your style of narration.

Try to write more frequently.

Kathir.

dharma said...

dubukku sir,
I am your fan for some time and Imissed your blogs for some time but now I feel that I should'nt have.
oorukku vanthama blogger mahanadu nadathinoma athai blog elluthinama entru illamal auto rate koracchala irukku entru yen vaithu erichalai kottikerenka autokarar vasithal nalaike rate kootividuvargal
Londonill auto illai enta varutham pol irukirathu
Blogger mahanadu suspenseka irukkirathu seekram eluthungal, sme day naan BAyil Chennai trvel seithu kondu irnthen
Gowri loganathan

Anonymous said...

kat.k pathi pesina sattai yillatha salman khan vandhu round katti adipparu.trisha akka ,geneliavo,bavanavo thaan ungalukkuk saripattu varum.katkku konjam vayasiyiduchhu boss.en ungalukku thevai illadha risk??
nivi.

Anonymous said...

டெஸ்க்டாப்பில் அசின் மற்றும் பெயர் தெரியாத இன்ன பிற மாதுக்கள் மிளிர்கிறார்கள். peru kettu therinjitu engalukum sollunga.indha pothu sevaikuthane blog.isthripotti

பாபு said...

//நான் பார்த்த வரை ஆட்டோகாரர்கள் தான் ஐய்யோ பாவம். ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை//

நியாயமா?ஏற்கனவே கொள்ளை அடிக்கிறார்கள் இதில் நீங்க வேறு
2 K.M தூரம் கூட இல்லாத ரயில்வே ஸ்டேஷன் க்கு 50Rs வாங்குகிறார்கள்
இது எங்கே என்று கேட்காதிர்கள் ,சற்று சென்னை க்கு வெளியே தான்

ஆடுமாடு said...

வணக்கம் பாஸூ. நலமா?

//ஏறியிருக்கும் விலைவாசியில் ஆட்டோ கட்டணம் அவ்வளவு ஏறியிருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. பச்சையப்பாவிலிருந்து ஆழ்வார்பேட் சிக்னலுக்கு அறுபது ரூபாய் மூன்று வருடம் முன்னாலேயே வாங்குவார்கள் என்று எனகுத் தோன்றியது. இன்னமும் அதே தான். எப்படி சமாளிக்கிறார்களோ தெரியவில்லை//

இதெல்லாம் ஓவரா தெரியலை. மயிலாப்பூர் லஸ்லயிருந்து தி.நகர் பனகல் பார்க்கு போகறதுக்கு (நீங்க என்னை மீட் பண்ணும்போது 40 ரூபாய்) 70 ரூபா கேக்குறாங்க. இந்த விஷயத்தை எல்லாம் கேட்டு தெரிஞ்சுக்க கூடாதா?
ஆட்டோல போறதை விட்டுட்டு இப்பலாம் டூவீலர் பார்ட்டிகள்ட்ட லிப்ட் கேட்டு நிற்கறோமாக்கும்.

Anonymous said...

dubukkaiya nan gemini nan innakithan unga blog ku vanthen.ithana nala yenda pakalenu nenachen.avlo supera elutheerkeenga. unga writing style simply superb.nan writer sujathavoda fan.avara romba miss panren.unga blog vanthaprom enanku apdi thonala avroda writing style apdiye ungalta iruku.i feel happy when reading ur blog.keep it up please sir.

Kathirvel said...

Hilarious narration. Back to form after a long gap.

Anonymous said...

Anna,
ippo puriyudhu matteru. indhaango linkooo...

http://www.extramirchi.com/gallery/displayimage.php?album=5&pos=0

Appidiyae next next panni panni ensoy pannungo !

-Anony

Anonymous said...

டுபுக்ஸ், நெல்லையில வண்ணாரப்பேட்டை ஆர்.எம்.கே.வி பாத்தீங்களா இல்லையா? இல்லையா? அடப்பாவி! அடுத்தமுறை தங்கமணியை கட்டாயம் அழைத்துச் செல்லவும். அப்புறம் "சந்தோஷ் சுப்ரமணியம்" பாத்தீங்களா தங்கமணியோட? இல்லையா? வேஸ்ட் ஊருக்கு வந்ததே !!! :)

கத்திரினா கத்திரிக்கா எல்லாம் மட்டும் பாக்கத் தெரியுதல (இது நான் சொல்லல, உங்க தங்கமணிக்கு ஒரு ரிஹர்ஸல் டயலாக் அனுப்புறேன்!!! :) ...)
எங்க வீட்டுலையும் கத்திரினாதான் ஆட்சி! இதுல அம்மணிய காட்டிக் கொடுத்த பாவம் என்னையே சேரும்! சூப்பரா இருக்கால்லன்னு காமிச்சு, அப்புறம் ...

Anonymous said...

Hi Karthick Balasubramanim & Maami

Article about Bloggers in The Hindu.

Please visit Dubukku's blog and he will give useful inputs for the article.

I guess He is MS in Blogging & Chatting.

http://dubukku.blogspot.com/2007/05/blog-post_16.html

Bharathiyar_Rasigan (endra) Kuppan_2007

Dubukku said...

அனானி - அண்ணா காலக் காட்டுங்க....ஸ்க்ரீன் சேவரா போட்டறதா...தங்கமணி மண்டைய உடைச்சு மாவிளக்கு ஏத்திடுவாங்க...

ஆயில்யன் - சீரியஸா தாங்க சொல்றேன் :))

கைப்புள்ள - சும்மா இருங்க நீங்க வேற...உங்களை சந்திக்கலாமான்னு மெயில் தட்டி இருந்தேன் இந்திய வந்திருந்த போது...கிடைச்சுதா??

ஸ்யாம் - மன்னிசிக்கோங்க குரு..இனிமே வந்துடறேன் :))

ப்ளீச்சிங் பவுடர் - ஆனா ஏறி இருக்கிற மத்த விலைவாசியோட பார்க்கும் போது இது அவ்வளவு ஏறலைன்னு எனக்கு தோணிச்சு...ஒருவேளை நான் தவறாக கூட இருக்கலாம்...ஆனா அவங்க எப்படி ஆந்த விலைவாசியை சமாளிக்கிறாங்கன்னு எனக்கு மலைப்பாக இருந்தது.

ராப் - அப்பிடியா...எங்க எங்க?? :)) பதில் சொல்லுங்க அப்போ தான் உங்க பொறுப்பு பத்தி முடிவெடுக்க முடியும் :))

ஸ்ரீதர் - நான் சொன்ன முதல்வர் = பிரின்சிபால். இவங்க பெயர் சொன்னாங்க இப்போ மறந்துட்டேன் ஆனா கே.கே.நகர் பிரின்சிபால். யூட்யூப் அடா அடா அடா நான் பார்க்கவே இல்லை :)) நன்றி தலை

சுமதி - முன்னாடி சொன்ன மாதிரி மத்த விலைவாசிய கம்பேர் பண்ணி சொன்னேங்க...இதோ அடுத்த பதிவு போட்டாச்சு

கதிர் - வாங்க முத கமெண்டுக்கு நன்றி. இன்னொரு நண்பர் கதிரும் இங்கே கமெண்டுவார் :))

கௌரி - அட இல்லீங்க மத்ததோட கம்பேர் பண்ணி சொன்னென் விட்டா நீங்களே வீட்டுக்கு ஆட்டோ விட்டுடுவீங்க போல இருக்கே :))

னிவி - என்னது கேட்டுக்கு வயசயிடுச்சா?அது பரவாயில்லைங்க ...திரிஷாவா...அடக்கடவுளேஏஏஎ :))

இஸ்திரிபொட்டி - மத்ததெல்லாம் எனக்கு பிடிக்கலைங்க...பிடிச்சிருந்தா டீட்டெயில்ஸ் வாங்காம வந்திருப்பேனா :))

பாபு - ஆமாங்க ஷார்ட் டிஸ்டன்ஸுக்கு அதிகமா தான் கேக்கிறாங்க இங்க வர்ற எதிர்ப்பை பார்த்தா சொன்னதை வாபஸ் வாங்கிக்கனும் போல இருக்கே

ஆடுமாடு - ஆஹா அதுக்குள்ள ஏத்திட்டாங்களா...சரி சரி டென்ஷனாகாதீங்க...அப்புறம் எப்படி இருக்கீங்க அண்ணாச்சி

அனானி- வாங்க . உங்களுக்கு என் ப்ளாக் பிடித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி. ஆனா சுஜாதா கூடலாம் கம்பேர் பண்ணாதீங்க எனக்கே ரொம்ப ஓவரா இருக்கு :)) அடிக்கடி வாங்க சும்மா டுபுக்குன்னு கூப்பிடுங்க சார்லாம் வேண்டாம்.

கே- வாங்க நன்றி. அப்பிடீங்கிறீங்க??

அனானி - வாங்க தம்பி அடிக்கடி இந்க்ட மாதிரி அண்ணனுக்கு வழி காட்டுங்க...ரொம்ப டாங்க்ஸ்

மதுரா - ஊர்ல ஒரு நாள் சாயங்காலம் மட்டும் தான் இருந்தேன் அதுனால போகலை. சந்தோஷ் சுப்ரமணியம் - வர்றதுக்கு முன்னடி பொம்மரில்லு பார்த்துட்டோம் சூப்பர். -ஹீ -ஹீ உங்க வீட்டுலயும் கத்ரீனா தானா...கண்ணுல ஒத்திக்கிற மாதிரி அன்னாரின் புகைப்படம் இருந்தால் வீட்டுல சொல்லி அனுப்பச் சொல்லவும் :))

அனானி - வாங்க பாரதியார் ரசிகன். நீங்க சொல்ல வரது மரமண்டையில் ஏறவில்லை மன்னிக்கவும். ஹிந்து பத்திரிகையில் ஆர்டிகிளா? கொஞ்சம் விளக்கவும் ப்ளீஸ்.

உண்மைத்தமிழன் said...

ஏன் இப்படி எல்லாரும் தங்கமணிகளுக்குப் பயப்படுறீங்கன்னு புரியல சாமி..

டுபுக்கு அந்த 'டிவி-இதய தெய்வம்-வாரிசுகளின் வில்லங்க அலம்பல்-தங்கமணி' மேட்டரை சொல்ல மாட்டேங்குறீங்களே..?

Unknown said...

▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩

MASILAMANI FULL MOVIE!

A great new tamil movie with amazing songs!
Download the full movie in a clear version!

http://hotfile.com/links/7867032/52e78b0/Masilamani-DVDRIP_(2009).part1.rar.html
http://hotfile.com/links/7866991/cf7964c/Masilamani-DVDRIP_(2009).part2.rar.html

▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩▩

Jazz said...

I Love Katrina Kaif

Katrina Kaif Rocks said...

Very nice blog sir.

Post a Comment

Related Posts