Wednesday, July 09, 2008

தசாவதாரம்

நலம் நலமறிய ஆவலெல்லாம் அடுத்த பதிவுல :) முதல்ல தசாவதாரம் பத்தி சொல்லனும். 'கங்கா ஸ்நானம் ஆச்சா' மாதிரி, ஃபோன் ஈமெயில், சேட்ன்னு எல்லா இடத்துலயும் 'தசாவதாரம் ஆச்சா'ன்னு ஆகிப்போனது.

படம் பற்றி ரொம்ப எதிர்பார்ப்புடன் இருந்ததால் அதுபற்றிய நியூஸ், க்ளிப்ஸ், போட்டோஸ், விமர்சனம் என்று எல்லாவற்றையும் தவிர்த்துவந்தேன். இது ஒரு விதமான ஷோஆஃப் என்றாலும் எதிர்பார்த்து பார்க்கும் (சிவாஜி உள்பட) எல்லா படங்களுக்கும் இந்த மாதிரி விரதமிருந்து பார்ப்பது தனி குஜால்சாகத் தான் இருக்கிறது.

ஓபனிங் சீனில் புஷ், கலைஞ்ர் உட்பட ஒரு பெரிய கூட்டத்தில் கமல் உரையை ஆரம்பிக்கும் போது "அடடா ஓப்பனிங் இன்னும் கொஞ்சம் சூப்பரா இருந்திருக்கலாமே"ன்னு மனதில் தோன்றி மறைவதற்க்குள் 12ம் நூற்றாண்டு காட்சி வந்துவிடுகிறது. அட்ரா சக்கை இது மேட்டரு..அதானே தலீவர் கலக்காமலாபூடுவார்ன்னு நிமிர்ந்து உட்கார வைத்தது. "அடியேன் ராமானுஜ தாசன்"னு பாடி காட்டி சவுண்ட் விடும் போது கும்முன்னு இருந்தது. சாண்டில்யனையும் சுஜாதவையும் அரை அரைக் கிலோ கலந்து குடுத்திருப்பாரோ தலீவர் என்று பட படப்பாய் இருந்தது. ஆனால் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.

கதை நகர நகர ஒரு ஹாலிவுட் சுமார் ரக மசாலா கதையை தமிழ் படுத்தியிருக்கிறார்கள் அவ்வளவு தான். பணத்தையும் கமலையும் பிரதானப் படுத்தி பிசினஸ் பண்ணியிருக்கிறார்கள். சரி திரைக்கதையாவது கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம். ங்கொய்யால லாஜிக் எல்லாம் முதல் ரீலிலேயே பெருமாளோடு கட்டி கடலில் போட்டுவிட்டார்கள் போல. தசாவதாரம் என்று பெயர் வைப்பதற்க்காக கமலுக்காக பத்து கேரக்டர்களை உருவாக்கி கதையில் திணித்திருக்கிறார்கள். இதில் NaCl என்று சொன்னதுக்கப்புறம் முழுக்கதையும் தெரிந்துவிடுவதால் படம் எப்படா முடியப்போகிறதுன்னு இருக்கிறது.

மேக்கப் எல்லாம் ரொம்ப ரொம்ப சுமார் ரகம். தசாவதாரம் எல்லாம் குஷ்டாவதாரமாக தெரிகிறது. அதுவும் புஷ், வெள்ளைக்கார கமல், இஸ்லாமிய கமல், பாட்டி கமல் எல்லா பாத்திரத்துக்கும் மேக்கப் படு உறுத்தலாக இருக்கிறது. எனக்கு இந்தப் படத்தில் வெள்ளைக்கார கமலைப் பார்க்கும் போது ரெட் சிட்டிசன் பட கிழ அஜீத் தான் நியாபகத்துக்கு வந்தார். இதுக்கு சிவாஜி ரஜினியின் வெள்ளைக்கார கெட்டப்பே எவ்வளவோ மேல். போகப் போக படத்தில் குறுக்கையும் நெடுக்கையும் போகிறவர்களைக் கூட அது கமலாக இருக்குமோ இது கமலாக இருக்குமோன்னு அயர்ச்சியைத் தருகிறது.

அசின் பாத்திரத்தின் அலட்டல்கள் மகா கேவலமாக இருக்கின்றன. சரியான லூசு மாதிரி சித்தரித்திருக்கிறாகள். வசனத்தையாவது தலீவர் வேறு யாரிடமாவது கொடுத்திருக்கலாம். அசினோடு காமெடி ட்ராக் நிறைய இடங்களில் பிசுபிசுக்கிறது.

சப்பான் கமல், சிங் கமல் மற்றும் ஜெயப்பிரதா பாத்திரங்கலெல்லாம் கதையில் பத்துக்கு ஒன்னு கணக்குக்காகத் தான், கதைக்கு இம்மியும் சம்பந்தமில்லை. சப்பான் கமல் கேரக்டரை ஒரிஜினல் சப்பான்காரருக்கும், ரா அதிகாரி கமலை எஸ்.பி.பிக்கும் குடுத்திருக்கலாமோ என்று எனக்குப் பட்டது.

படு சொதப்பலான படத்தில் ரசிக்கமுடியும் கமலின் நடிப்பைக் கூட மேக்கப் மறைத்து கெடுத்து குட்டிச்சுவராக்கியிருக்கிறது. மற்றபடி கமல் படம் பார்ப்பது ஒரு தனி அனுபவம்...அது அவர் ரசிகர்களுக்குத் தான் தெரியும்ன்னுலாம் ஜல்லி அடிக்கமாட்டேன். படம் ரொம்ப சுமார் ரக படம். கமல் ஸ்டாண்டர்ட்டுக்கு ரொம்பவே சுமார் தான். ஹே ராம் க்கு கதையும் திரைக்கதை வசனம் எழுதிய கமலா இந்தப் படத்துக்கு? நம்பவே முடியவில்லை.

தலீவா அடுத்த பத்துல இருபது கேரக்ட்டர் பண்ணலாம், ரவிக்கை போடாத புடவை கட்டும் அசின் கேரக்டரையும் நீங்களே பண்ணலாம்ன்னு ஏதாவது ஒரு கூறு கெட்ட கபோதி சொல்லும், நம்பிக்கினு இறங்கிடாத தலீவா...ஒழுங்கா உங்க பாணியிலேயே எடுங்க தல.

27 comments:

sriram said...

welcome back Dubukku after a loooooooooooong gap, Me the First, will come back for again for a detailed pinnoottam
endrum anbudan
Sriram, Boston

Ramc said...

Leave the Kamal touch in Dasavatharam, But here in this post even Dubukku touch is missing ?!

Dasavatahram partha effect-o?

technical vishayam ethai pathiyum sollaliye ?

Kuselan songs kettacha ? ;)

-Ramc

Thamiz Priyan said...

///சப்பான் கமல் கேரக்டரை ஒரிஜினல் சப்பான்காரருக்கும், ரா அதிகாரி கமலை எஸ்.பி.பிக்கும் குடுத்திருக்கலாமோ என்று எனக்குப் பட்டது.///
எனக்கும் அதே தான் தோன்றியது... :)
கடைசி பஞ்ச்.... :)

இலவசக்கொத்தனார் said...

என்னது காந்தி செத்துட்டாரா?

Sumathi. said...

ஹலோ டுபுக்கு,

சென்னை வாசம் எப்படி இருந்தது?

அது சரி,இந்த சாதுவுக்கு எத்தனை பேரு போண்டா வாங்கி குடுத்தங்க, ப்ரஸ் மீட்ல என்னலாம் தீர்மானம் போட்டீங்க ,என்னலாம் நிறைவேத்தினீங்க? இதெலாம் எப்போ போடுவீங்க?

Anonymous said...

citizen kezha ajith pathi solreengalo?? Red-la kezha Ajith kedayaathe!!

INJEY! said...

Glad to hear similar opinions around. I have beens saying the same thing in my blog. But you have made it funnier to read as usual.

INJEY! said...

One fellow blogger wrote explanations for his 10 roles. Check it at http://hikrish.blogspot.com/2008/06/dasavatharam-purpose-and-explaination.html.

Anonymous said...

ennapa romba nallachu?paravalliye nada nilamayil vimarsanam panna dubukku.good
-isthripotti

Anonymous said...

Paarapatcham paakkaama thititeenga, adhukkagave oru Thumbs up kudukkanum, indha padhivikku.

Andha 10 explanations for roles ellam summa kadhai, no strong reasoning. Logic ellathayum thookkipottanga.

Enakkennamo kadhai-thiraikkadhai mattum Kamal ezhudhittu vasanam Crazy Mohan kitta kuduthirundha atleast konjam comidi-aavadhu irundhirukkumnu thonudhu. Romba emaatram thaan. Padathula konjam rasikka mudinja vishayangal, Balaram Naidu, andha Broadway Kumar (MS Baskar) pesara englipis -- thideernu shootingna extra dhudhu dhora -- approm andha 12 nootrandu matter ellam summa build up thaana?

KRTY said...

என்னதான் சொல்லுங்க.. கமல் படம் பார்க்கரதே, ஒரு தனி அனுபவம் !! :)

Anonymous said...

dasavatharam parthututhan vera padamnu,wait panni partha,thalaivar ippadi kowthitare.annalum unga kadaisi para... thalaivar pannamattar.....nambuveme
-isthripotti

rapp said...

அண்ணே, ஒரே இன்ப அதிர்ச்சியா போச்சு, புதுப் பதிவு பார்த்து. சீக்கிரம் உங்க சென்னை வலைப்பதிவர் சந்திப்பனுபவம், அம்பி அண்ணன் அண்ணியோட டிஸ்சார்ஜ தள்ளி வெச்சி போண்டா மற்றும் இன்னபிற ட்ரீட் செலவுகள்ள இருந்து தப்பிச்சது:):):) , அப்புறம் நெல்லை எப்படி இருந்தது, விருந்துல எல்லாம் பால் பாயாசம் போட்டாங்களா இல்ல சேமியா(புழு) பாயாசம் போட்டாங்களான்னு டீடெயிலா எழுதுங்க

Syam said...

நான் இன்னும் படம் பார்க்கல அதுனால அப்பீட்டு... :-)

Ramya Ramani said...

டுபுக்கு அண்ணா WelCome Back!!

\\முதல்ல தசாவதாரம் பத்தி சொல்லனும். 'கங்கா ஸ்நானம் ஆச்சா' மாதிரி, ஃபோன் ஈமெயில், சேட்ன்னு எல்லா இடத்துலயும் 'தசாவதாரம் ஆச்சா'ன்னு ஆகிப்போனது.\\

நீங்களும் Usual நக்கல் Start பண்ணியாச்சா!!


\\போகப் போக படத்தில் குறுக்கையும் நெடுக்கையும் போகிறவர்களைக் கூட அது கமலாக இருக்குமோ இது கமலாக இருக்குமோன்னு அயர்ச்சியைத் தருகிறது.\\

ரிப்பீட்டே!! :))

Anonymous said...

:) ஸுப்பர் விமர்சனம் டுபுக்கண்ணே. Welcome back.

Anonymous said...

டுபுக்கு போஸ்ட் மாதிரி இல்லையே!!!

ஆனா சீனியர்/ஜூனியர் பின்னூட்டம் கலக்கல்.

-அரசு

Anonymous said...

welcome back from india.en thalaivar padathila irundha positive points onnu kooda neenga sollala?kamal konjam logiclla sarukkina kovam en varudhu.ethirpaarpugal vaanathai en thodukiradhu!oru all 40 pera adikkara logic ellam paarthu pazhagina naam en commercial movie seivathil vangiya adiyai peridu paduthikirom.kamal oru creative genius.sila padangal ayarchiyai tharalam,aanal andha menekedalkalai paarata vendum enbathu enathu thazhmaiyana karuthu.nivi.

ambi said...

@dubukku, என்னது? இந்தியாவுக்கு கிழக்கிந்திய கம்பனி வந்துடுச்சா? :)

@கொத்ஸ்ண்ணா, என்ன ரொம்ப லேட்டஸ்ட் கமண்ட் போட்ருக்கீங்க? :p

இந்த ஆத்துக்கு அந்த கரைல இருக்கறவுங்களே இப்படி தான்.

பாக்க வாப்பா!னு கூப்டா பத்துக்கு வந்து நிப்பாங்க. :))

ambi said...

//அம்பி அண்ணன் அண்ணியோட டிஸ்சார்ஜ தள்ளி வெச்சி போண்டா மற்றும் இன்னபிற ட்ரீட் செலவுகள்ள இருந்து தப்பிச்சது//

ஊருக்கே தெரிஞ்சு போச்சா இந்த விசயம்..? :))

Anonymous said...

Kamal should NOT do movies with K.S.Ravikumar anymore.i would say, KSR is the bad influence in this movie.(just like he created hype whether rajni will enter into politics or not,at that time in the movie "muthu"- 'vara vendiya nerathla correct-a varuven', 'common katchi..etc, NOW he confuses the audience whether kamal is an ATHEIST or theist)


The Shrek

Dubukku said...

ஸ்ரீராம் - மிக்க நன்றி நண்பரே. பின்னூட்டம் போட்டுட்டு அப்பிடியே அப்பீட்டா?..:)) படம் பார்த்தீர்களா? உங்களுக்கு பிடித்திருந்ததா?

ராம்சி - இந்த டுபுக்கு டச்லாம் எனக்கே ஓவரா இருக்குங்க :)) படத்துல எனக்கு டெக்னிகல் சமாச்சாரம் எதுவும் ரொம்ப மனசுல ஒட்டலை. ஒருவேளை ரொம்ப எதிர்பார்த்து ஏமாந்ததினால் இருக்கலாம் !

தமிழ்ப்ரியன் - அதே அதே சேம் ப்ளட் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி :))

இலவசம் - ஆமாம்யா எனக்கே நேத்திக்கு தான் தெரியும் :)

சுமதி - வாங்க மேடம் அதெல்லாம் கண்டிப்பா எழுதறேன் :)) சென்னை சூப்பர்

குட்டி - ரொம்ப கரெக்ட் கொஞ்சம் டென்சனாகிட்டேன்...இதோ திருத்திடுறேன். சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி

இஞ்ஜே - இன்றைக்கு உங்கள் பதிவைப் படித்தேன் எனக்கு கதை கூட ரொம்ப நார்மலான கதையாகத் தான் தோன்றியது அதைவிட திரைக்கதை தான் மிக சொதப்பல் ...நீங்க குடுத்த அந்த லிங்கில் ஹீ ஹீ படத்துல அந்த பத்து அவதார கண்டுபிடிப்பு எனக்கென்னம்மோ காதலா காதலா தான் நியபகத்துக்கு வருது :))))


இஸ்திரிபொட்டி - வாங்க...நடுவுநிலமையெல்லாம் இல்லீங்க என்னோட எண்ணங்களைப் பகிர்ந்துகிட்டேன் :))

குண்டலகேசி - எக்ஸாக்ட்லீ எனக்கு திரிஅக்கதை கூட வீக்காத் தான் தோன்றியது. நீங்க சொன்ன மாதிரி கிரேஸி வசனத்தையாவது ஒப்பேத்தி இருப்பார் :)) எம்.எஸ் பாஸ்கர் - சான்ஸே இல்லாத ஆக்டர்ங்க...எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனோ இவருக்கு வாய்ப்பு அவ்வளவு கிடைக்க மாட்டேங்குது

கீர்த்தி - ஆஹா கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க :))


இஸ்திரிபொட்ட்டி - அதே அதே

ராப் - யெக்கோவ் எப்படி இருக்கீங்க? இதோ ஒன்னு ஒன்னா போடறேன்

ஸ்யாம் - நானும் இப்படி தான் தசாவதாரம் ஒரு பதிவு கூட படிக்காம இருந்தேன்... :))

ரம்யா - அக்கா வாங்க. வரவேற்புக்கு நன்றி. நிறைய பேருக்கு படம் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்

கதம்பம் - நன்றி யெக்கோவ்

அரசு - நான் தாங்க பொட்டி தட்டு போட்டேன் :)) எது இந்த காந்தி தாத்தா மேட்டரா?

நிவி - வாங்க வாங்க...நீங்களே கேளிவியை கேட்டுட்டு பதிலையும் சொல்லிட்டீங்க....எல்லாம் எதிர்பார்ப்புனால தான். கமலின் க்ரியேட்டிவிட்டியை விட அவரின் எக்ஸிக்யூஷன் எனக்கு ரொம்ப பிடிக்கும். செய்யறதை நேர்த்தியாக செய்வார் அது என்னைப் பொறுத்தவரையில் இந்தப் படத்தில் இல்லை. அதுவே எனது ஏமாற்றத்துக்கு காரணம்.

அம்பி - எல்லாம் சொல்லுவடா ராசா...ஒழுங்கா புது அப்பாவா லட்சணமாய் போய் குழந்தைக்கு நேப்பி மாத்திவிடுடா...

ஷ்ரெக் - கே.எஸ்.ரவிக்குமார் எல்லாம் படத்தில் கமலை தவிர மத்தவங்களை வேலை வாங்க தாங்க...ஆனா இங்க கமலின் ஈடுபாட்டிலேயே எனக்கு நிறைய சறுக்கல்கள் தெரிகிறது அது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

rapp said...

அண்ணே பின்னூட்டத்துக்கு பதிலையே இன்னைக்குத்தான் போட்டீங்க, அடுத்தப் பதிவு என்னைக்கு போடப் போறீங்க? கொஞ்சம் சீக்கிரமா எழுத்துப்பணியை ஆரம்பியுங்கள் அண்ணாத்தயாரே:):):)

I am not said...

I have been reading your blog reecntly. I have read the entire series of jolli thirindha kaalam and other links below that.
I have to say this. You are somewhere near to sujatha in your writings.
Regarding this post, brilliant... especially neenga ajitha kalaaicha vidham super.

I am not said...

solla marandhuten
ungaloda jolli thirindha kaalam, sujatha voda "srirangathu devadhaigal" levelukku irundhadhu... naan romba rasichen..

Agn! Sharman said...

Dubukku,

It was fun reading your blog on Dasavathaaram.

I was wondering... internetaandey blogmattum illenna un thala vedichu sithari unga ootaa nasthi panni irukkumoonnu...

ennandrey?

-agnisharman
www.simplymalayalees.com

Karthik K Rajaraman said...

Dubukku mamaa, Thank you very much for your wonderful posts!

Karthik, New York, USA

Post a Comment

Related Posts