Saturday, April 26, 2008

அப்பிடி இப்பிடி

நலம். உங்கள் பக்கமும் விரும்புவதும் அதுவே.

வேலை வேலை ஓயாத வேலை. வூட்டில சின்னப் புள்ளையா மூக்கை ஒழுகிக் கொண்டு ஒன்னும் செய்யாதிருந்த காலத்தில் எப்படா ஷூ சாக்ஸ்லாம் போட்டுக் கொண்டு பள்ளிக்கூடம் போவோம் என்றிருந்தது. அப்புறம் காலேஜ் எப்போ போவோம்ன்னு இருந்தது. காலேஜ் போகும் போது எப்படா வேலைக்கு போய் செட்டிலாகப் போறோம் என்று இருந்தது. இப்ப எப்படாப்பா ரிட்டயர் ஆகி திரும்ப ஒன்னுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கப் போகிறோம் என்று இருக்கிறது.

யாரடி நீ மோகினி எதிர் பார்த்த அளவு அவ்வளவு சூப்பராக இல்லை. படத்தில் நயன் தாரா நான் நீந்திப் புரண்டு குளித்த அம்பாசமுத்திர ஆற்றங்கரையில் காலை நனைக்கிறார். ஆற்றங்கரையைப் படத்தில் பார்த்தது ஜில்லென்று இருந்தது. படத்தில் அவரை விட அவர் தங்கையாக வரும் நடிகை துறு துறுவென்று இருக்கிறார். வெரி க்யூட் என்று (ரெண்டு மூனு தடவை) சொன்னதை ஜொள்ளு என்று தங்கமணி தப்பிதமாக அர்த்தம் கொண்டு அவரைப் பற்றி ஆராய்ச்சி எல்லாம் செய்து வாயெல்லாம் பல்லாக "இப்படி க்யூட்டா இருக்கும் போதே நினைத்தேன் அவ பெயர் அதா தான் இருக்கனும்ன்னு" என்று சொன்ன போது பதினைந்து வருடமாகியும் இன்னுமா இந்தப் பெயர் கொண்டவர்களிடம் ஏமாந்து கொண்டு இருக்கிறேன் என்று தோன்றியது.

சுத்தமாய் எதிர்பார்ப்பே இல்லாமல் எடுத்த விதத்தில் பிடித்திருந்த படம் கண்ணும் கண்ணும். படத்தில் பிரசன்னாவின் அலட்டலில்லாத நடிப்பும் திரைக்கதையும் அழகாக அமைந்திருக்கின்றன. படத்தில் பிரசன்னாவும் நான் ஜொள்ளு விட்ட அதே குற்றாலம் பராசக்தி கல்லுரியில் ஒரு பெண்ணை காதலிக்கிறார். அது எப்படி சிக்கலில் முடிகிறது என்பது தான் கதை. வித்தியாசமான கோணத்தில் அனுகியிருக்கிறார்கள். முடிவில் எனக்கு சுத்தமாக ஒப்புதல் இல்லை என்றாலும் பார்க்காதவர்களுக்காக இங்கே அதை விவரிக்காமல் விட்டு விடுகிறேன்.

லண்டன் இந்திய ஹை கமிஷன் இன்னும் அதே நிலையில் தான் இருக்கிறது. என்ன இப்போது டோக்கன் நம்பர் படி கூப்பிடுகிறார்கள், ஆனால் இன்னமும் பழைய படி டீ குடிக்க அடிக்கடி போய்விடுகிறார்கள். இங்கே தனி நபரை சொல்லவில்லை...ஒருவர் போகும் போது இன்னொருவரை அங்கே அமர வைக்க வக்கில்லாமலா இருக்கிறது? ஹை கமிஷனர் சென்னை மாம்பலம் ஸ்டேஷனில் டிக்கட் ரிசர்வேஷன் ஆபிசில் ட்ரெயினிங் எடுக்கச் சொல்லலாம் போல இருக்கிறது. ஒன்பதரை மணிக்குப் போய் இரண்டு மணி வரை தேவுடு காத்துவிட்டு வந்தேன். நடுவில் ஒரு நடுத்தர வயது அம்மணி நான் சின்ன வயதில் இருந்த போது இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தேன் அப்புறம் இந்த நாட்டில் குடியுரிமை வாங்கிவிட்டேன் ஆனால் எனது பழைய பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. அதோடு நம்பர் கூட எதோ ஏ என்று ஆரம்பிக்கும். இப்போ ஓ.சி.ஐ. வாங்குவதற்க்கு அதைக் கேட்கிறார்கள் எனக்கு ஒரு லெட்டர் தர முடியுமா என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தார். இரண்டு நாளில் புது பாஸ்போர்ட் தந்துவிடுற சுறுசுறுப்பை கொஞ்சம் ப்ரெண்ட் ஆபிஸில் ஒழுங்கில் காட்டினால் இந்தியாவைப் பற்றி அங்கு வருகிறவர்களுக்கு கொஞ்சம் மதிப்பு ஏற்படலாம். எந்த எம்பஸியிலும் நடக்காத "வாட் த ஹெக் இஸ் ஹாப்பனிங் ஹியர்" என்று வருகிறவர்கள் போகிறவர்களெல்லாம் வாய் விட்டுக் கேட்டு மண்டையிலடித்துக் கொள்ளும் அவலம் இருக்காது.

கவுன்சில் சர்வீஸ் பற்றி சர்வே எடுக்க வீட்டுக் கதவைத் தட்டிய புண்யவான் பத்தாவது கேள்வியாக "நீங்கள் பாலிவுட் படத்தில் எதாவது நடித்திருக்கிறீர்களா உங்களைப் பார்த்தால் பாலிவுட் ஹீரோ மாதிரி இருக்கிறது" என்று கேட்டபோது சரி சரி...அதான் சர்வே பதிலெல்லாம் ஒழுங்கா சொல்றேனே அப்புறம் எதுக்கு இந்த அல்வா..? இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்குன்னு சொன்னாலும் விடாமல் பிடிவாதம் பிடித்தார். ஒன் நிமிட் என் செகரெட்டரியைக் கூப்பிடுகிறேன் திரும்பவும் கேளுங்கள் என்று தங்கமணியைக் கூப்பிட்டு அவர் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டேன். தங்கமணி இது நான் செஞ்ச செட்டப் தான் என்று நம்பினாலும் அப்பிடியே அந்த ஆளைத் துரத்தி இருக்கவேண்டும். எல்லா கேள்வியையும் கேட்டு விட்டு அந்த ஆள் மும்பை இந்தியால எங்க இருக்கு தெக்கையா வடக்கையான்னு நாயகன் கமலோட பேரன் மாதிரி கேட்டுவிட்டுப் போய்விட்டான். இப்போ தலை வாருவதற்க்கு கண்ணாடியைப் பார்த்தால் கூட "காந்த்...விருச்சிக காந்த்...நீங்க வில்லானா இருந்துட்டு ஹீரோவா அறிமுகம் ஆகுறீங்களா இல்லை ...எடுத்த எடுப்பிலேயே ஹீரோவா அறிமுகமா" என்று ஓட்டு ஓட்டுவென ஓட்டுகிறார். இனிமேல் கவுன்சில் சர்வேக்கு கண்டிப்பாய் ஆதரவு அளிப்பதாக இல்லை.

24 comments:

Geetha Sambasivam said...

http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_25.html

ஆயில்யன் said...

//காந்த்...விருச்சிக காந்த்...நீங்க வில்லானா இருந்துட்டு ஹீரோவா அறிமுகம் ஆகுறீங்களா இல்லை ...எடுத்த எடுப்பிலேயே ஹீரோவா அறிமுகமா" என்று ஓட்டு ஓட்டுவென ஓட்டுகிறார்//

:))))))))))))))

Anonymous said...

Oh my God!!! The last few lines of the post made me laugh like crazy!!!

Good One Dubukks!
-Arun.

கிருத்திகா ஸ்ரீதர் said...

அப்படி இப்படி கடைசியா உங்க வழக்கமான் டாபிக்குக்கு வந்துட்டீங்களே... வாழ்த்துக்கள் (சீக்கிரமே ஒரு இயக்குனர் உங்களை பதிவு பண்ணி உங்க ரொம்ப நாள் ஆசையை (புலம்பலை) நிறைவேற்றுவதற்கு)

ambi said...

//நீங்க வில்லானா இருந்துட்டு ஹீரோவா அறிமுகம் ஆகுறீங்களா இல்லை ...எடுத்த எடுப்பிலேயே ஹீரோவா அறிமுகமா//

ROTFL :)))

btw, ஆத்தங்கரையில் இப்போ தண்ணி கரை புரண்டு ஓடுகிறது. எதுக்கு விடுவானேனு அகஸ்தியர் அருவியிலும் தலைய காட்டிட்டு வந்தேன். :))

Uma said...

ungal urainadiayin kurumbuthanamthan ....highlight

blog on


after u blog on Life is....i got one dvd,pottupatha open ne ahale
disappointed ...i m trying to get another one
uma

Anonymous said...

Dubukku

Your usual flow is missing. Looks like you have 'Sindhanai Sikkal'. Wish you get back to your usual mood.

Regards

Anonymous said...

Hi Dubukku....

eppadi irukeenga.... romba naal aachu unga blog ellam padichu... trying to catch up in one go... eppavum pola kalakittu irukeenga....

ரசிகன் said...

//அவர் தங்கையாக வரும் நடிகை துறு துறுவென்று இருக்கிறார். வெரி க்யூட் என்று (ரெண்டு மூனு தடவை) சொன்னதை ஜொள்ளு என்று தங்கமணி தப்பிதமாக அர்த்தம் கொண்டு//

ஹா..ஹா..:))))

கலக்கலா இருக்குங்க மாம்ஸ் உங்க எழுத்துக்கள்:)

அதுவும் ஜொள்ளித் திரிந்த காலங்கள் படிச்சுப்புட்டு ரொம்ப ரசிச்சேன்:)

Munimma said...

unga wife blog panrangala? padikka innum konjam swarasyama irukkum pola irukku ;-)

kannum kannum la, best part was kutralam, apparam prasanna. nalla storiesla (mattumey) nadikirar.

Unknown said...

யோவ் என்னையா ப்ளோக் இது.??.பாதி தூக்கத்துல இருந்து எழுந்து எழுதினியா?? நீ இந்த தபா எழிதினத பாக்க சொல்லோ ராம்கோ ல CIGFA டீம் ல் நீ வேலை பண்ண லட்சணம் தான்யா ஞாபகம் வருது. ..வேலை ஒரே வழவழா கொழகொழ னு இருந்தாலும் கடசீல ஒரு ஜோக் தட்டி விட்டு எஸ்கேப் ஆனத எப்படி மறக்க முடியும்?? இன்னும் ஒரு முறை இந்த மாதிரி பதிவு வந்தால் உங்க வண்டவாளம் (கஜா) நெல்லை எக்ஸ்பிரஸ் மாதிரி தண்டவாளத்துல ஏறிடும் சாக்கிரதை... தில் இருந்தா இன்னொரு பதிவுல பிளேடு போடு பாக்கலாம்.. இதுக்கு உங்களுக்கு நகைச்சுவை சக்ரவர்த்தி னு பட்டம் வேற .. கீதா மேடம் உங்கள மாதிரி ஆட்கள் எல்லாம் எத்தி விடறது நாலதான்....................................................

Anonymous said...

hi dubukku..
seeing your post after a long time...may i pls have your personal email id pls..want to have some information from you..

regards,
delhi..ramakrishnan

Anonymous said...

என்னா?....ஒரே வேலை...நேரமே இல்லைனு புலம்பறது...ஆனா வூட்ல குந்திகினு...நல்லா ஒவ்வொரு படத்தையும் பாத்துட்டு (இதுக்கு மட்டும் நேரம்...இருக்குமே) அதுக்கு விமரிசனம் எழுதறுது...

உங்க ப்ளாக் "சினி ப்ளாக்" லேபல் ஆகிடாம பாத்துக்கோங்க தல...

Anonymous said...

ramachandran ketta kelvi thaan naanum kekkaren.. adhenna eppo pathalum time illai time illainu pulambal anaa post mathram cinema, shopping, picnic pathi podareenga....

Geetha Sambasivam said...

mmmmm?அப்புறம் ஒண்ணுமே எழுதலை???/ நேரம் இல்லையோ?

ஓகே, இனிய மணநாள் வாழ்த்துகள், உங்களுக்கும், தங்கமணிக்கும். உங்கள் இரு பெண்களுக்கும் மனமார்ந்த நல்லாசிகள், உங்க இரண்டு பேருக்கும் ஆசிகள். 13-5-2008 தானே??????

Geetha Sambasivam said...

அட, 13-ம் தேதி மே தானேன்னு கேட்க நினைச்சு, தேதியை அழுத்திட்டேன்! :))))

Sanjai Gandhi said...

//காந்த்...விருச்சிக காந்த்...நீங்க வில்லானா இருந்துட்டு ஹீரோவா அறிமுகம் ஆகுறீங்களா இல்லை ...எடுத்த எடுப்பிலேயே ஹீரோவா அறிமுகமா" என்று ஓட்டு ஓட்டுவென ஓட்டுகிறார//

ஹிஹி... ஜூஜூஜூப்பரு...

Munimma said...

13th aa? ingeyum athey athey.

enga joota?

Dubukku said...

கீதா மேடம் - உங்க பட்டத்துக்கு மிக்க நன்றி ஆனா அங்க சொன்ன மாதிரி இதெல்லாம் எனக்கே ஓவரா இருக்கு:)) இங்க பாருங்க ஒருத்தர் இத மேற்கோள் காட்டி வேற திட்டறார் என்னை.. :))

ஆயில்யன் - :))

அருண் - :)) எனக்கு தினம் பொழப்பே இந்த மாதிரி தான் ஓடிக்கிட்டு இருக்கு இங்க :))

கிருத்திகா - ஹீ ஹீ அய்ய இது சும்மானாச்சுக்கும் எனக்கு ஆசையே இயக்குனர் ஆகுறது தான் :))))))

அம்பி - நானும் அடுத்த மாசம் அப்பிடித்தான் அதுனால வயிறு எரியவே இல்லை :)))

உமா குமார் - மிக்க நன்றி மேடம். நல்ல படம் கட்டாயம் பாருங்க

அனானி - ஆமாங்க. கொஞ்ச நாளாய் மன அழுத்தம் ஜாஸ்தியா இருக்கு. அதுனால தான் ப்ளாகும் பண்ணலை. இருந்தாலும் உங்களோடெல்லாம் டச் விட்டுப் போகக் கூடாதென்னு தான் போட்டேன். கூடிய சீக்கிரம் பழைய படி போட முயற்சிக்கிறேன்.

சுபா - வாங்க நல்லா இருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க. கலக்லாம் இல்லீங்க இங்க பாருங்க மக்கள் காறித் துப்பறாங்க :))

ரசிகன் - மிக்க நன்றி நண்பரே. ஊக்கமாய் இருக்கிறது உங்கள் பாராட்டு.

முன்னிம்மா - இல்லை இன்னும் இல்லை. பார்க்கிறவங்ககிட்டையெல்லாம் இவரு என்னோட பினாமி நான் தான் ப்ளாக் எழுதறேன்னு சொல்லிக்கிட்டு திரியறாங்க...ஆமாம் நானும் குற்றாலத்தை ரசித்தேன்.

ராமச்சந்திரன் - வந்துட்டீங்களா கரெக்டா திட்டறதுக்கு :))) என்னம்மோ கூட வேலை பார்த்த மாதிரி சும்ம எடுத்து வுடுறீங்க. வேலை பற்றி பேசுவதை தவிர்க்கலாமே. அது வேறு இது வேறு. I take my work seriou and probly I dont prefer to discuss that in this forum. Hope you will understand. கீதா மேடம் சொன்னது எனக்கே ஓவராத் தான் தெரியுது அதுக்கு நீங்க அவங்களைச் சொல்லனும் :)

Dubukku said...

ராமகிருஷ்ணன் - வாங்க. சக்ரா நீங்க பேசினத பத்தி சொன்னார். ஈமெயிலும் குடுத்திருக்கார்ன்னு நினைக்கிறேன். முடிந்த போது மெயில் அடியுங்கள்.

இராமச்சந்திரன் - மன அழுத்தம் ஜாஸ்தியா இருக்குங்க ...இதுல கிரியேட்டிவிட்டி வொர்க் ஆக மாட்டேங்குது. சினிமா பார்க்கிறது மன அழுத்தத்தை போக்குறதுக்கு :)))

ரோஷினி - நன்றி.

பாவை - டைம் இருக்குங்க...ஆனா மென்டல் பிரஷர்ல நம்ம க்ரியேட்டிவிட்டி தான் வொர்க் ஆக மாட்டேங்குது. அதோட ஏனோதானோன்னு போஸ்ட் போடவும் மனசு இல்லை. இதுக்கே அல்ரெடி மக்கள்ஸ் காறித் துப்பறாங்க :))

கீதா மேடம் - வாங்க . ஆமாம் இன்னிக்கே தான். மிக்க நன்றி உங்க ஆசிர்வாததுக்கு. தன்யனானேன். சந்தோஷமா இருக்கு உங்க ஆசி கிடைத்ததுக்கு

சஞ்சை - ஹீ ஹீ நன்றிங்கோவ்...அது காதல் படத்துல வருமே அந்த டயலாக் தான்

முனிம்மா - உங்களுக்கும்மா.,அட இது சூப்பர்..வாழ்த்துக்கள்.

ஜாம்பஜார் ஜக்கு said...

//இப்ப எப்படாப்பா ரிட்டயர் ஆகி திரும்ப ஒன்னுமே செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கப் போகிறோம் என்று இருக்கிறது.//

:))))


இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

இலவசக்கொத்தனார் said...

எல்லாரும் சொல்லிட்டாங்க. நான் என்னத்த சொல்லப் போறேன். வழமையான பதிவு போடும் போது சொல்லுங்க வரேன்.

tamizatamiza said...

±ýÉ Ò¦Ã¡ìÃõ¼...«Ð...§¸ÅÄÁ¡É ¬ð¼õ...ÊÅ¢ìÌ ¦ºýº¡÷ ¸¢¨¼Â¡¾¡?¿¡ý ¦º¡øÅÐ Á¡É¡¼ Á¢ļ ÀüÈ¢¾¡ý.

Ashwin said...

O... neenga ambai-a? Naa munneerpallam...ipo detroit le jaagai...

Remembering sujatha's nakkal when reading your blog...

Naana keedhu ba..

Post a Comment

Related Posts