Tuesday, December 11, 2007

சேலஞ்ச் - நன்றி

என்னாடா சேலெஞ்ச்ன்னு சொல்லி ஓட்டெல்லாம் போடச்சொல்லிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் மாதிரி எஸ்ஸாகிட்டானேன்னு நினைச்சிருப்பீங்க. ஆபிஸ் வேலை பின்னுதுங்க. மெயில் கூட பார்க்கமுடியலை.அது ஒரு பக்கம் இருக்கட்டும், ஸ்கூல் எக்ஸாம்க்கு படிக்கும் போது ஒரு மாசத்துக்கு முன்னாடியே புல்ஸேக்ப் பேப்பர்ல தேதியெல்லாம் போட்டு படிக்கறதுக்கு பளானெலாம் போட்டு, அதையெல்லாம் நாளைக்கு நாளைக்குன்னு அப்பிடியே கேரி பார்வர்ட் செய்து, எக்ஸாமுக்கு முந்தின நாள் ராத்திரி படிக்க ஆரம்பித்து ஹாலுக்குள்ள போகும் வரை படித்து சில முக்கிய கொஸ்டின்களை சாய்ஸில் விட்டுக்கலாம்ன்னு நினைத்துப் போனால், நாம சாய்ஸ்ல விட்ட கேள்விகளெல்லாம் ஒரெ ஆப்ஷன் சாய்ஸில் வரும். அது மாதிரி நான் சாய்ஸில் போயிடும் என்று மசாலாவுக்காக சேர்த்த கஷ்டமான ரெண்டு ஆப்ஷன்களை அதிக வோட்டு போட்டு குடுத்திருக்கிறீர்கள். வோட்டு போட்ட அத்தனை சனத்துக்கும் கோடானு கோடி நன்றியைய்யா !!

இதெல்லாம் இந்த மூஞ்சிக்கு தேவையான்னு அனானி கமெண்ட் வரும் என்று நினைத்தேன். ஆனால் ஓட்டு போட்டு பழி வாங்கிவிட்டார்கள் என்று நினைக்கிறேன். ஏஞ்ஜலினா ஜோலி எந்த ஊரில் இருக்கிறார் என்பது கூட தெரியாது. பிராட் பிட் நடித்த ட்ராய் படம் பார்த்திருக்கிறேன். தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார். அதே உதறலாய் இருக்கிறது. கனவில் ஏஞ்ஜலினா ஜோலி வருவதை விட பிராட் பிட் தான் அதிகம் வருகிறார் (அவர் உதைப்பது மாதிரி கனவுய்யா...ஓ...அவனா நீயிய்யுன்னுலாம் கேக்காதீங்கப்பூ..என் கவலை எனக்கு :)).

படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக...

ஏஞ்ஜலினா ஜோலி ஆப்ஷனுக்கு கள்ள வோட்டு போட்ட அருள் தவிர உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

இந்த சேலஞ்சுகளை 2009 புதுவருட பிறப்புக்குள் செய்து முடிக்கப் பார்க்கிறேன். ஏஞ்ஜலினா அம்பாள் அருள் புரியட்டும்.

16 comments:

இலவசக்கொத்தனார் said...

அப்புறம் படத்தில் நடிச்சா உடனே கட் அவுட் பாலாபிஷேகம் -இதெல்லாம் வேணும் அப்படின்னு பதிவு போட்டா மவனே பின்னூட்டம் கூடப் போட மாட்டோம் சொல்லிட்டேன்.

ILA (a) இளா said...

ஏற்கனவே ஒரு சுலோகம் இருக்கு தெரியுங்களா? அதை ஞாபகம் வெச்சுக்கோங்க "இப்படி உசுப் உசுப்பேத்திதான் ஒடம்பு ரணகளமா இருக்கு"

Priya said...

First time reading ur blog. Really very funny and interesting to read.
Specially this one is very hilarious.
//ப்ளாக் பார் டம்மீஸ்//

நாகை சிவா said...

நம்ம ஏதுக்கு ஒட்டு போட்டோமோ அது தான் வெற்றி பெற்று இருக்கு.

உங்க ஊர் பக்கம் வரும் போது அடிச்சு பிடிச்சு அந்தம்மா கலந்துக்குற பார்ட்டில போய் வெட்க விட்டு கேட்டு விடுங்க. அவங்களும் சோ ஸ்வீட் னு உங்க கன்னத்தோட கன்னத்த தேய்ச்சுட்டு உங்க ஆசையை நிறைவேத்திடுவாங்க...

:)

Anonymous said...

>> தொடையெல்லாம் கும்முன்னு காட்டிக்கொண்டு சண்டையில் பின்னிப் பெடலெடுப்பார்.

- யார் தொடைனு சொல்லவே இல்லையே.. :))

Anonymous said...

like this
- crow malaila nanajalum enn roof pottu nest kattala?

-crow eppadi ammava kandupidikum?

Itz me!!! said...

All the Best!!!

ambi said...

பாக்கலாம் என்ன பண்ண போறீங்கனு? :p


//அவங்களும் சோ ஸ்வீட் னு உங்க கன்னத்தோட கன்னத்த தேய்ச்சுட்டு உங்க ஆசையை நிறைவேத்திடுவாங்க...
//
அதுக்கப்புறம் வீட்டுக்கு தான் போயாகனும்! என்பதை இந்த தருணத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். :p

dubukudisciple said...

enna guru..
ennavo varathu moonu pathivu appadi ippadinu ellam poteenga.. kadaisila masathuku moonu pathivu agidichi.. idula inda savalla eppadi jeika poreengalo theriyala..
seri jeikalena collect agara paisa ellam engaluku thaane?? :)

மங்களூர் சிவா said...

அதுதானே வோட்டு போடாமலா ஏஞ்சலினா ஜூலிக்கு 48 வோட்டு விழுந்திருக்கு!!

//
நாகை சிவா said...
நம்ம ஏதுக்கு ஒட்டு போட்டோமோ அது தான் வெற்றி பெற்று இருக்கு.

உங்க ஊர் பக்கம் வரும் போது அடிச்சு பிடிச்சு அந்தம்மா கலந்துக்குற பார்ட்டில போய் வெட்க விட்டு கேட்டு விடுங்க. அவங்களும் சோ ஸ்வீட் னு உங்க கன்னத்தோட கன்னத்த தேய்ச்சுட்டு உங்க ஆசையை நிறைவேத்திடுவாங்க...

:)
//
டபுள் ட்ரிப்பிள் க்வாடர்புளட் ரிப்பீட்டேய்

//
ambi said...
பாக்கலாம் என்ன பண்ண போறீங்கனு? :p

//அவங்களும் சோ ஸ்வீட் னு உங்க கன்னத்தோட கன்னத்த தேய்ச்சுட்டு உங்க ஆசையை நிறைவேத்திடுவாங்க...
//
அதுக்கப்புறம் வீட்டுக்கு தான் போயாகனும்! என்பதை இந்த தருணத்தில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். :p
//
அம்பி டெய்லி ஜெலுசில் அல்லது டைஜின் சாப்பிடவும்
:-))))))

ஆடுமாடு said...

//படத்துல நடிக்கிறதப் பத்தி என்ன சொல்ல...அது எனக்கு தண்டனையா இல்ல உங்களுக்கு தண்டனையான்னு என்னால நிச்சியமா சொல்ல முடியலை :)) ஆடுமாடு அண்ணாச்சி உங்களத் தான் மலைபோல நம்பியிருக்கேன்...கைவிட்டுறாதீக//

டுபுக்கு நான் சொன்னா சொன்னதுதான். மனசு நினைச்சுட்டா என் பேச்சே நானே கேக்க மாட்டேன்(?1)
நீங்களே நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் புடிச்சுட்டு வந்து நடிக்க வச்சுருவம்லா.
ஸோ.. கவலைய விடுங்க...விடுங்க...விடுங்க...

Anonymous said...

all the best.neenga nadikka porapadathoda nooravathu nall vizhaavukku naanga ellorum lorrylla varrom,ooru muzhukka poster adikkirom, eppadi adikkinum kodittu kattunga,naanga kalakarom parunga!!!!!!!!
NIVI.

Anonymous said...

Hello Dubuks

After the changes to your blog page, I am not able to read the posts in firefox any longer. It seems it is related to the alignment of the article.

If you dont mind can you take a look and fix it?

I very much appreciate it.

Murali
KS, USA

Anonymous said...

Thalaivaa, ennaaikku vanththaaalum eththanai NaaL kazichchu vanthaaalum vayiRu valikka chirikka vachchitiRInGkappaaa ... enakku onGka blagallaaam chEththu oru CD pOttuth thaNthirunGka ...
illa, NaanE thiruttu CD supply aarambikkalaamaannu yOchikkiREn ... :) ...

athillaaiyum blaak faar tammIs patichchu chirichchu chirichchu ... eppaaa chema rakaLai ...

What a fantastic way to start my winter vacation! It was a great treat reading all your blogs that I missed so long ...

Dubukku said...

கொத்ஸ் - அதெல்லாம் கேக்கவமாட்டேன்....நீங்களே சொல்லாம செய்வீங்கன்னு தெரியும் ;P

இளா - இதெல்லாம் மனப்பாடமான ஒன்னுங்க

வள்ளி - வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க :)

நாகை சிவா - நீங்கதானா அது இப்படி மாட்டுவிட்டது :)) நீங்க சொன்ன வழி ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரியலை....பார்ப்போம்


Youknow who - டேய் சக்ரா :))) நான் பிராட் பிட் பத்தி தான் சொன்னேன். நீ யாருன்னு நினைச்ச?

அனானி - யாருங்கோவ் அது ? :) ரொம்ப யோசிக்க வைக்கிற கேள்வியா வேற கேகறீங்க :))

itz Me - ஆஹா நன்றி...உங்க விட்டுக்காரர் கிட்ட சொல்லி ஹெல்ப் பண்ணச் சொல்லுங்க :))

அம்பி - நானே கொஞ்சம் கற்பனை பண்ணி சந்தோஷப்பட்டா கரெக்டா வந்து கெடுத்திருவியே :))

டுபுக்குடிசைப்பிள் - இப்படி பெயர வைச்சிக்கிட்டு சபைல மானத்த வாங்கறீங்களே :)) ஆபிஸுல ரொம்பப் படுத்கறாங்க...கூகிள் பக்கத்துக்கு கூட போகமுடியலைன்னா பார்த்துக்கோங்களேன் !!

மங்களூர் சிவா - நீங்களுமா மாட்டிவிட்டது :)) அதே அதே அவனுக்கு வயத்தெரிச்சல்ங்க...அதான் நியாபகப் படுத்துகிறேன்.ன்னு...போட்டுக் குடுக்க அலையறான்..

ஆடுமாடு - ஹப்பாடா வயத்துல பால வார்த்தீங்க...அண்ணாச்சி...இந்தப் புள்ள அசின் இருக்குல்லா...அதுலயோ இல்ல அந்தப் புள்ள மீரா ஜாஸ்மினோ பாருங்க அண்ணாச்சி...கோச்ச்ச்சுக்கிடாதீங்க ஊருகாரன் பார்த்துக்கோங்க :)))))))))))))))
(அட கிரகம் பிடிச்சவனேன்னு ஓடி போயிறாதீங்க சொல்லிப்புட்டேன் ஆமா)

நிவி - ஆஹா...பாசமலரே ஆனந்தக் கண்ணீர் வருதும்மா... அனேகமா என் முதுகு மட்டும் தான் படத்துல தெரியும்...அதுனால அதுக்கேத்த மாதிரி ஒரு கான்செப்ட் தயார் பண்ணிறலாம் :)))

முரளி - அண்ணே...ரொம்ப மன்னிச்சிக்கோங்க..இப்போ ஜஸ்டிஃபைய தூக்கிட்டேன். இப்ப கரெக்ட்டா தெரியுதான்னு பாருங்க. ரொம்ப நன்றிங்க உங்க ஆர்வத்துக்கு.

மதுரா - யெக்கா என்ன ரொம்ப நாளா காணோம் நம்ம பக்கத்துல...எப்படி இருக்கீங்க..இருந்தாலும் ஓவராத் தான் புகழறீங்க கூச்சமா இருக்கு. அதுக்குள்ள உங்களுக்கு வெகேஷன் ஆரம்பிச்சாச்சா??குடுத்து வைச்சவங்க..

ஆடுமாடு said...

//இந்தப் புள்ள அசின் இருக்குல்லா...அதுலயோ இல்ல அந்தப் புள்ள மீரா ஜாஸ்மினோ பாருங்க...//

அசின் அக்கா மும்பையில் வீடு பாத்து செட்டிலாயிடுச்சு. இனிமே இந்தி படங்கள்தானாம்.

மீரா தாயி... மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கூட சுத்திக்கிட்டு இருக்கு. அது தமிழ்பக்கம் வர ஐடியா இல்லையாம்.

ஆமா... இவங்களுக்கு அப்பாவா நடிக்க நிறைய பேர் இருக்காங்களே... நீங்க ஏன்?

இதுதான் என் மெயில் ஐடி:
egjira@gmail.com
உடனே பதில் போடவும்.

Post a Comment

Related Posts