Wednesday, November 21, 2007

சேலஞ்ச் டுபுக்கு

இவனுக்கு வேற வேலையே இல்லைப்பா
இதெல்லாம் சும்மா...பப்ளிசிட்டி ஸ்டண்ட்
வேஸ்ட் ஃபெல்லோப்பா இவன்
இந்த மாதிரி அறிக்கைவிட்டு ஹிட் கவுண்ட ஏத்த பாக்குறான்
கொங்ய்யால...கேடிப்பயடா இவன்...மத்தபடி சேரிட்டின்னு சொல்லி இவனும் பப்ளிசிட்டி தேடிக்கிறான்
பார்போமே சொல்றத செய்யறானான்னு ..இல்லைன்னா முகத்த எங்க கொண்டு வைச்சுக்கறான்னு பார்க்கத்தானே போறோம்.


இந்தப் பதிவை படித்துவிட்டு இப்படியெல்லாம் உங்களுக்கு என்னைப் பற்றி தோன்றலாம். தோன்றினால் தாராளமாக திட்டலாம் தவறே இல்லை. பெரும்பாலானவை அப்பட்டமான உண்மைகளாக இருக்கலாம்.

நயன் தாரா திரும்பவும் ஸ்லிம்மாகியாச்சே அமைச்சரவையில் சான்ஸ் குடுக்கலாமா, "மீ" நடிகைக்கு "மா"ன்னாவோட கல்யாணமாயனமாமே...உண்மையாயிருக்குமா? என்ற சமூக சிந்தனைகள் போக மிச்சம் இருந்த சொச்ச நேரத்தில் வாழ்க்கையை சுவையாக்க (இன்ட்ரெஸ்டிங்காக்க) வெள்ளைக்காரார்கள் கையாளும் சில யுக்திகளைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தெரிந்து நம்மூரில் எட்டு வருடங்கள் முன் வரை இந்த சேரிட்டி ஃபண்ட் ரெய்சிங் ரொம்ப பிரபலமில்லை. தீபாவளி நேரத்தில் க்ரூப் ஃபோட்டோவுடன் குமுதம், விகடனில் வரும் உதவும் கரங்கள் ஒரு பக்க அட்வர்டைஸ்மண்டை தவிர எதுவும் பார்த்த நியாபகமில்லை. நல்ல மனதுள்ளவர்கள் அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து டொனேஷன் குடுப்பார்கள்.

வெளிநாடுகளில் இந்த மாதிரி சேரிட்டிக்காக பணம் சேர்ப்பதை கொஞ்சம் சுவையாக செய்கிறார்கள். தன்னார்வலர்கள் (ஹப்பாடா நானும் சுத்த தமிழ்ல ஒரு வார்த்தை போட்டாச்சு) எதாவது ஒரு சவாலை ஏற்றுக்கொண்டு அதைச் சொல்லி பணம் சேர்ப்பார்கள். உதாரணத்துக்கு நான் இந்த சேரிட்டிக்காக லண்டண் மராத்தனில் ஓடுகிறேன், நான் ஓடி முடித்தால் நீங்கள் இந்த சேரிட்டிக்கு உங்களால் எவ்வளவு முடியுமோ அதை தருவேன் என்று உறுதி செய்யலாம்(ப்ளெட்ஜ்) என்பது போல. எங்க ஆபீஸில் வித்தியாசமாக செய்கிறேன் பேர்வழி என்று ஏழு பேர் கொண்ட வெள்ளைக்கார கும்பல் ஒன்று இந்த சேரிட்டிக்காக நாங்கள் இரண்டு மாத்த்திற்கு மீசை வளர்க்கிறோம் உங்களால் முடிந்ததைத் தாருங்கள் என்று ஏகப்பட்ட கலாட்டா செய்தார்கள். இதில் ஏற்கனவே ஆப்பிஸில் மீசை உள்ள ஒரே ஆள் நான் மட்டும் தான். நானும் இந்த சேரிட்டியில் இருக்கிறேன் என்று நினைத்த ஆட்களும் உண்டு. கடைசி நாள் ஆபிஸ் விழாவில் இவர்கள் மைக்கில் மீசை வைப்பதில் உள்ள கஷ்டங்களை(??!!) பகிர்ந்து கொண்டார்கள். இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய் போய் என்னம்மோ டிரிப்பிள் எக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்கிற ரீதியில் கதாகாலேட்சேபம் பண்ணிவிட்டு போய்விட்டார்கள். அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப்போ பார்தாலும் ஒரு நமுட்டு சிரிப்பு சிரிப்பதாக எனக்குத் தோன்றும். "அடி சண்டாளி...எனக்கு இந்த படியிலேர்ந்து இறங்கற நடிப்பைத்தவிர எதுவும் தெரியாது" என்று சொல்லிவிடலாமா என்று வாய் நமநமக்கும்.

சரி விஷயத்துக்கு வருகிறேன். சரி வாழ்க்கையில் ஏதாவது சுவாரசியமாய் செய்யலாமே, அதையும் எதாவது ஒரு நல்ல காரியத்துடன் இணைத்து செய்யலாமே என்று சில நாளாய் யோசித்துக் கொண்டிருந்தேன். ஐந்து சவால்கள் தோன்றின. இதை மேலும் சுவையாக்க அதில் மூன்றை எடுத்துக் கொண்டு ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றலாம் என்று ஒரு எண்ணம். இந்த மூன்றில் ஒன்று என்னுடைய சாய்ஸாக அல்ரெடி செலெக்ட் செய்துவிட்டேன்.

மீதி இரண்டை உங்கள் வோட்டுக்கு விட்டு இருக்கிறேன். மேலே சேர்த்திருக்கும் தேர்தல் பொட்டியில் இருந்து எனக்காக ஒன்றை டிசம்பர் இரண்டாம் தேதிக்குள் தேர்ந்தெடுங்கள். (ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துவிடுவேன்) அதிக வோட்டுக்க்ள் பெறும் இரண்டை நான் சவாலாக எடுத்துக்கொள்கிறேன். நான் ஏற்கனவே எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு சவாலோடு சேர்த்து எடுத்துக்கொள்ளும் மூன்று சவால்களையும் நான் முடிக்கும் பட்சத்தில் நீங்களும் என்னுடன் சேர்ந்து சேரிட்டிக்கு எதாவது பணம் தர விரும்பினால் அதையும் எனக்கு தெரியப் படுத்தலாம்.(கட்டாயமில்லை) இது போக நானும் ஓவ்வொரு சவாலுக்கும் இவ்வளவு என்று ஒரு தொகையை ஒதுக்கி இருக்கிறேன். சவால்கள் கடுமையானதாக இருக்குமென்று நான் நம்புவதாலும், நான் இருக்கும் இடம் கருதியும் ஒரு வருடத்திற்குள் முடிக்கப் பார்க்கலாம் என்று இருக்கிறேன். விபரங்கள் அடுத்த பதிவில். இதெல்லாம் கிடையாது நான்வுடறேன்டா சவால்ன்னு குரல் குடுத்தாலும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். என் உடம்பு எவ்வளவு அடிவாங்க முடியும் என்பதை கணக்கில் கொண்டு ஒரு வேளை அந்த சவாலையும் நான் எடுத்துக்கொள்ளலாம். ரெடி ஸ்டார்ட் மீஜிக்.

30 comments:

ILA (a) இளா said...

template Su***s. the previous one was better..

துளசி கோபால் said...

பிட்சு......இங்கெயுமா??????

Anonymous said...

இன்னாபா டெம்ப்ளேட் இது? நம்ம டுபுக்குதானா இல்லாங்காட்டி யாராச்சும் ஹாக் பண்ணிட்டாங்களா?

Baby Pavan said...

நான் ஓட்டு போட்டுட்டேன்...எனக்கு 2 வயசு தான் ஆகுது ஓட்டு செல்லுமா.

இலவசக்கொத்தனார் said...

யக். என்ன டெம்பிளேட் இது. ஒரே சிவப்பா இருக்கு? கண்ணை உறுத்துது. முதலில் மாத்துங்க. அப்புறமா வந்து பதிவைப் படிக்கிறேன்.

இலவசக்கொத்தனார் said...

கண்ணு வலிச்சாலும் படிச்சு வோட்டு போட்டாச்சு. இதுக்கு எதாவது சேரிட்டி உண்டா?

பினாத்தல் சுரேஷ் said...

வோட்டு போட்டுட்டேன். (கொத்ஸ் கேள்விதான் இங்கேயும்:-)

சாரிட்டி பண்றது நல்ல விஷயம்தான், ஆனா அட்வைஸ் கேக்க ஆரம்பிச்சா முடியாம இழுத்துகிட்டே போகும்.. எனவே அட்வைஸ் கேக்காதீங்க, இதான் என் அட்வைஸ்.

படிக்கட்டுல இறங்கற சவாலான காட்சிக்கப்புறம் அப்படியே ஆக்ஷன் ஹீரோவா டெவலப் ஆவீங்கன்னு பாத்தா மீசை வச்சிருக்கீங்களாமே!!

Girl of Destiny said...

போஸ்ட்மேன் ரோல் என்ன, ரயில் பிடிக்க போற மாதிரி அவ்ளோ ஈஸி-னு நெனச்சீங்களா?
;-)
சவாலே சமாளி!

dubukudisciple said...

seringa.. naan vote panniyachu..aanalum ennavo romba biaseda irukura mathiri iruku savaal ellam...
iduku bathila...
1) india vuku next year vanthu enna pakkanum.
2) enna nagaichuvai padivu ezhutha vaikanum ippadi eduthu irukalam

Anonymous said...

sir ,already voted.new template o.k aaana old was good.seekirame orupadaathila nadichhu aduu 100 naal oda engal vazhthukkal .aanal thangamani heroineaa nadichha thaan naanga parpom.eppadi idea?
nivi.

ஆடுமாடு said...

//ஏதாவது ஒரு பாடாவதி படமானாலும் பரவாயில்லை, "சார் போஸ்ட்"ன்னு ஒரு போஸ்ட்மேன் ரோல் கூட பரவாயில்லை, ஒரு தமிழ் திரைப்படத்தில் சின்ன ரோலில் நடிக்கவேண்டும்//
இது மற்றும் வடிவேலு மேட்டருக்கு என்னால் ஆன உதவியை உங்களுக்கு செய்றேன். என்ன பண்றது நம்ம ஊர்க்காரரா வேற இருக்கீங்க.
நானும் ஓட்டு போட்டுட்டேய்ன்.

Anonymous said...

yes, unga prev template was neat. ideas?? don't ask, just do what you like to do. - umakrishna

நாகை சிவா said...

வோட்டு போட்டது வேற. ஆனா கடைசி சவாலில் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம. அதுனால் அதே முயற்சி பண்ணுங்க...

இப்போதைக்கும் முன்னிலையில் இருக்கும் சவால் வேண்டாம். ஒரு வேளை அது நடந்தா, அதை பாத்துட்டு இப்ப மத்தவங்களை பாத்து நொன்னநாட்டியும் பேசுற மாதிரியே இந்த ஆளுக்கு இந்த பொழப்பு எல்லாம் தேவையானு ரொம்ப கேவலமா பேசுவோம்... அதுனால பாத்து :)

Sridhar said...

என்னா டுபுக்கு மச்சி!

லண்டன்லேர்ந்து தூக்கி உன்ன சீனாவில எங்கியாச்சும் projectல தூக்கி போட்டுட்டாங்களா! blog எல்லாம் ஒரே red ஆ இருக்கு!

Deekshanya said...

என்ன நடக்குது,ஒன்னும் புரியலை! புது template எல்லாம் கலக்கறீங்க! சூப்பரப்பு!

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

டெம்ப்லட்டை உடனே மாத்தவும்.

Girl of Destiny said...

header-ல இருக்க டுபுக்கு board நல்லாருக்கு! பிட்சு template-க்கு இது தேவலை!

Unknown said...

இந்த post வைச்சு காமெடி எதுவும் பண்ணலயே? Will you act as per the vote results ;)

ஆடுமாடு said...

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக டெம்பிளேட்டை மாற்றியதற்கு நன்றி...நன்றி...நன்றி...

Anonymous said...

Anna,
New template superra irrukku.ahmmm.. first savalley try pannunga.....:)

Sambar Vadai said...

Dubukku,

You are invited.

http://sambarvadai.blogspot.com/2007/11/blog-post_16.html

thanks in advance

Anonymous said...

Please remove your photo from the new template or atleast paste a photo where you!! are smiling :-)

ambi said...

ஓட்டு எல்லாம் போன வாரமே போட்டாச்சு, கமண்ட் இப்ப தான்.
ரசிக கோடிகளின் விருப்பத்தை ஏற்று டெம்ளேட் மாத்தியதுக்கு நன்றி ஹை.
எவ்ளோ வயசானாலும் உங்க பால் வடியற முகம் மாறாம அப்படியே இருக்கு. :)))

Vidya said...

Too much of joblessness.. Ennathukkelam oru ambition irukkanumnu vevestha illama pochu. Enna seyyya.... I haven't voted. I dont like any of the 5 :)

Anyways, I like this template. Thank goodness, easy for the eye to read. I tried reading in that red template of yours.. But sorry, couldnt :)

Dubukku said...

இளா - மாத்திட்டேன் அண்ணே...:) பீட்பேக்குக்கு நன்றி :)

துளசி - அட வேறஎங்க பார்த்தீங்க?

பிரகாஷ் - நானேதான்...சும்மா ட்ரை பண்ணி பார்த்தேன் அமோக வரவேற்பு கிடைச்சதுனால மாத்திட்டேன் :))

பேபி - அட கண்டிப்பா செல்லும்...உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் :)

கொத்ஸ் - நன்றி மாத்தியாச்சு....கண்ணுவலிச்சாலும் ஓட்டு போட்ட உங்களுக்கும் ஒரு ஸ்பெஷள் நன்றி.

பினாத்தல்ஸ் - யோவ்...ஒட்டு போட்டுட்டு குசும்பு தானே...பெயரக் கெடுக்காதீகப்பூ...ஏற்கனவே டுப்புக்குன்னா ஒரு மாதிரி பார்க்கிறாங்க :))

மதி - அப்பிடீங்கிறீங்க...அதுக்குத்தானே சவாலா போட்டிருக்கோம்...பார்ப்போம் :)

டுபுக்குடிசைப்பிள் - அதெல்லாம் கண்டிப்பா வந்து..உங்கூட்டுல சப்பிடுவோம்ல...(எப்படி துண்டு போட்டேன் பார்த்தீங்களா ? :) )

நிவி - ஓட்டுக்கு போட்டுட்டு நல்ல கிளப்புறீங்க பீதிய...அவங்க ஹீரோயினா நடிச்சு இங்க தான் ஏற்கனவே ஓடிக்கிட்டு இருக்கே (வாழ்க்கையே ஒரு நாடகம்ன்னு யாரோ ஒரு ***னந்தா சொல்லியிருக்காராமே )

உமா - இருந்தாலும் சும்மா ஒரு ஜாலிக்குத் தானே..ஓட்டு போட்டீங்களா??


நாகை சிவா - நீங்க படத்துல நடிக்கிறதப் பத்தி தானே சொல்றீங்க..அதெல்லாம் நம்ம கைல இல்லீங்க சும்மா (கேவலமா) கலாசுங்க...ஒரு நடிகனுக்கு இதெல்லாம் கலைவாழ்க்கையில ...:)))

ஸ்ரீதர்- சீனாலேர்ந்து திரும்ப வந்துட்டோம்ல இப்போ...பரவாயில்லையா??

தீக்க்ஷன்யா - ஹப்பாடா நீங்க ஒருத்தர் தாங்க நல்லா இருக்குன்னு சொல்லியிருக்கீங்க டேங்க்ஸ்

சமான்யன் - மாத்தியாச்சுங்கோவ்

மதி - நன்றி. என்னது தேவலையா...பெண்டு நிமிர்ந்து போச்சுங்க :))

ந.சு.கிருஷ்ணன் - இல்லீங்க வோட்டு பிரகாரம் நடப்போம் :)

ஆடுமாடு - ரசிகர்கள் - அண்ணாச்சி காமெடி பண்ணாதீங்க நண்பர்கள்ன்னு சொல்லுங்க

தம்பி - எனக்கும் அதான் ஆசை ஆனா வோட்டு டெபாசிட்டு தேறாது போல இருக்கே

சாம்பார்வடை - நன்றி பதிவும் போட்டாச்சு

வெங்கட் - அது போட்டோகிராபர் மிஸ்டேக்....நான் ஆஆன்னு பார்த்துகிட்டு இருக்கும் போது எடுத்திட்டார் :)

அம்பி - எனதம்பின்னு சொல்லிக்கிட்டு நீயே ஏண்டா உனக்கு சூன்யம் வைச்சிகிற??

வித்யா - நீ இன்னும் திருந்தவேஇல்லையா :)) என்னப் பத்தி தெரிஞ்சும் என்கிட்ட ஆம்பிஷனெல்லாம் எதிர்பார்க்கிற பாரு ஹைய்யோ ஹைய்யோ :)) ஒழுங்கு மரியாதையா ஓட்டு போடு இல்லீனா நடக்கறதே வேற...

மங்களூர் சிவா said...

//
இதில் சில மூதேவிகள் மைக் கிடைத்ததே என்று ஆபாசமாய் போய் என்னம்மோ டிரிப்பிள் எக்ஸ் படங்களில் நடிப்பவர்கள் தான் மீசை வைத்துக்கொள்வார்கள் என்கிற ரீதியில் கதாகாலேட்சேபம் பண்ணிவிட்டு போய்விட்டார்கள்.
//
aiyayoo

apdi paathaa indiala 90% xxx actors thaan
:)))))

மங்களூர் சிவா said...

//
அதிலிருந்து ஆபிஸிலிருக்கும் சில பெண்கள் என்னை எப்போ பார்தாலும் ஒரு நமுட்டு சிரிப்பு
//
En sirikka maataaaluga!!!
:))))

மங்களூர் சிவா said...

//
ஒருத்தருமே வோட்டு போடலைன்னா நானே கள்ளவோட்டு போட்டு ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுத்துவிடுவேன்
//
adhukkellam avasiyam irukkaadhu

மங்களூர் சிவா said...

vote pottaacchu

ambitionlaaam romba "Chappaiyaa" irukku

'angelina julie'kitta oru spl kiss vaanganumnu atleast irukka pdaadhaa??
:-))))

Anonymous said...

ஹி டுபுக்கு,பிளாக் நல்லா இருக்கு,டிசைன் பிரமாதம்.கீப் இட் அப்!!!!!!!

Post a Comment

Related Posts