ஐல் ஆஃப் வைட் சென்றிருந்த போது வந்த நண்பரை சமீபத்தில் சந்தித்தேன். ஐல் ஆஃப் வைட் பிரயாணத்தின் போது தான் நண்பர் அறிமுகம். அந்த மூன்று நாள் கேம்பில் மொத்தம் இருந்த ஒன்பது பேரில் மூன்று பேர் வலைப்பதிவர்கள். நாங்கள் மூவரும் அவ்வப்போது வலைப்பதிவுகள் பற்றி பேசி (மற்றவர்களை கடுப்பேத்திக்) கொண்டிருந்தோம்.
சமீபத்தில் நண்பரைச் சந்தித்த போது இன்னொரு நண்பரும் கூட இருந்தார். இந்த இன்னொரு நண்பர் கொஞ்சம் அப்பிராணி சமீபத்தில் தான் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார் என்பதால் அப்படி ஆக்ட் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.
"அப்புறம் டுபுக்கு சொல்லுங்க உங்க ப்ளாக் வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு?"
"ஏதோ உங்க புண்யத்தில ஓடிக்கிட்டு இருக்கு"
"ப்ளாக்ன்னா என்னாங்க?"- இன்னொரு நண்பர்க்கு ப்ளாக் பரிச்சியமில்லை.
"அவர் சொல்றத விட நான் சொல்றேன்" என்று ஆரம்பித்தார் நண்பர்.
"முன்னாடியெல்லாம் இந்த ஐ.டி பசங்க வெட்டிக்கா சம்பளம் வாங்கிட்டு மெயில்- சாட் போக, பிரெண்ட்ஷிப் டே, அம்மாவாசை டே, பௌர்ணமி டேன்னு உலகத்துல இருக்கிற உருப்படாத 'டே'க்கெல்லாம் ஒரு நாய்க்குட்டி படமொ, பூனைக்குட்டி படமோ போட்டு க்ராபிக்ஸ் வேலையெல்லாம் காட்டி செண்டி தாக்கி, என்ன மாதிரி நீயும் வெட்டியா இருந்தா இத இன்னும் பத்து வெட்டிங்களுக்கு அனுப்புன்னு இல்லைன்னா இன்னும் பட்து நாளைக்குள்ள மென்னியப் பிடிக்கிற மாதிரி ஆணி பிடுங்கற வேலை வந்திரும்ன்னு மிரட்டி மெயில் தட்டி விடுவாங்க, இதுல எவனோ ஆரம்பிச்சுவைச்ச ஐடியா ப்ளாக்"
"ஓசில குடுக்கறானேன்னு இவனுங்களா தலைக்கு ரெண்டு மூனு பளாக் ஆரம்பிச்சு அதுல கன்னா பின்னான்னு தோணினதையெல்லாம் எழுதுவாங்க"
"என்னத்த பத்தி எழுதுவாங்க?"
"எல்லாத்தையும் பத்தி தான். ஜார்ஜ் புஷ்ஷே மன்னிப்பு கேள் என்பதில் தொடங்கி, ஐ.நா சபை அடுத்து செய்யவேண்டிய பத்து விஷயங்கள் வரை எல்லாத்தையும் கவர் செஞ்சிருவாங்க. இதுல நடுநடுவில கதை கருமாந்திரம், வெங்காயம் போடாமல் வெங்காய பக்கோடா செய்வது எப்படி, பின்நவினத்துவமும் பாரிஸ் ஹில்டனும், சிங்கப்பூரில் சூச்சா போன அனுபவம்ன்னு வகை தொகை இல்லாம எழுதுவாங்க"
"ஆஹா பெரிய எழுத்தாளர்கள் ரேஞ்சுன்னு சொல்லுங்க.."
"ஆமாமா அப்பிடித் தான் நினைப்பு இவங்களுக்கெல்லாம். இந்த வெட்டி வேலைய படிச்சிட்டு ஊர்ல இருக்கிற மத்த வெட்டிங்களெல்லாம் "ஆஹா சூப்பர் பிரமாதம் பட்டயைக் கிளப்பிட்டீங்கண்ணே, லவங்கத்தை லவட்டிட்டீங்கண்ணேன்னு இவங்களுக்கு கமெண்டு போடுவாங்க. உடனே இவங்களும் அவங்க வைச்சிருக்கிற ப்ளாக்குக்கு போய் நீங்களும் 'நிக்கிறீங்கண்ணே'ன்னு பதில் மரியாதை செஞ்சிருவாங்க"
"அடடே பரவாயில்லையே.."
"ஆமா இப்படியே இவங்களுக்குள்ளயே ஒருதர ஒருதர் நெஞ்ச நக்கி பதிவர் வட்டம், சதுரம்ன்னு ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"
"அப்புறம்?"
"அப்புறமென்ன..ஆபிஸ்ல மிச்சப் பொழுதும் போக வேணாமா...அதுக்கு சாதி, மதம், ஆணியம், பெண்ணியம் ,பெருங்காயம்ன்னு ஆரம்பிச்சிருவாங்க. அது அடிதடியாகி போகப் போக வடிவேலுக்கு ஃபோன் வந்த கதையா உங்கம்மா உங்கக்கான்னு போய் படிக்கிறதுக்கே காதப் பொத்திக்க வேண்டியிருக்கும்.."
"ஐய்யையோ ச்சீ ச்சீ...எப்பிடிங்க இதெல்லாம் செய்ய்றாங்க"
"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல.."
"ஓகோ"
"இந்த சண்டையில ஒரே சுருதியில் சிங்கியடிக்கிறவனுங்களெல்லாம் ஒரு க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க.."
"ம்ம்ம்..அப்புறம்"
"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."
"என்ன டுபுக்கு ஒன்னும் சொல்ல மாட்டீங்கிறீங்க...சைலண்ட்டா கேட்டுக்கிட்ருக்கீங்க"
"ஹீ ஹீ நாளைக்கு உங்க புண்யத்துல இதையும் ஒரு போஸ்டா போட்டிருவேன்ல :))"
நணபர் எனக்குத் தெரியாமல் அடக் கருமாந்திரமேன்னு தலையிலடித்துக் கொண்டிருக்கலாம்.
பிகு - நண்பர் சொன்னதோடு நானும் கொஞ்சம் மானே தேனே பொன்மானே போட்டு பாடியிருக்கிறேன் :))
Thursday, November 15, 2007
Subscribe to:
Post Comments (Atom)
36 comments:
Yov ennaya dubukku, ithellam oru pathiva... Anda sarasarangalilum irukirare blogle neengathan periya aalunu ellarum solranga neenga ennadanna oru paisakku priyojanam illatha oru post potirukeenga... Ellam asattu thairiyam, namma aalunga thane yetha potalum padichitu "supera irukkunu" comments poduvangannu parkureenga... Sariyanaaaaaaaaaaaaaaaaaaaaaa mokkkkkkkkkkaaaaaaaaaaa postttttttt ithu.
// பட்டயைக் கிளப்பிட்டீங்கண்ணே, லவங்கத்தை லவட்டிட்டீங்கண்ணேன்னு//
:))))
கரண்டு கட்டானா எழுதறது, காய்ச்சல் வந்தா எழுதறது, எழுத மேட்டர் இல்லைன்னா கொசுவர்த்தி சுத்தறதுன்னு எம்புட்டு இருக்கு.
அப்புறம் வலையுலகிற்கே பிரத்தியேகமான வார்த்தைகளான சொ.செ.சூ, கும்பி, அனானி பத்தி எல்லாம் உங்க நண்பருக்குச் சொல்லித் தரலையா?
என்னதான் இருக்கட்டும், இப்படி ஒரு பதிவு போட்டு 'நிக்கிறீங்கண்ணே'!!
(பதில் மரியாதையை முதலிலேயே செஞ்சாச்சு, இப்போ நீர் செய்ய வேண்டிய வேலையை சரியா பண்ணிடும்.) :))
எனது லேட்டஸ்ட் பதிவு படிச்சிட்டீங்களா?
அப்படீன்னு நேரடியா சொல்லாம மறைமுகமா வேற ஜல்லியடிச்சி விளம்பரம் செய்வாங்களே? அத்த பத்தி பேசலையா உங்க நண்பர்?
Anony -
//Anda sarasarangalilum irukirare blogle neengathan periya aalunu ellarum solranga //-
ஐயைய்யோ யாரோ தப்பாச் சொல்லியிருக்காங்கங்க் அண்ணே/அக்கா உங்ககிட்ட...அந்த தப்பையெல்லாம் நான் செய்யமாட்டேன்.
//Ellam asattu thairiyam, namma aalunga thane yetha potalum padichitu "supera irukkunu" comments poduvangannu parkureenga//
ஹீ ஹீ கண்டிப்பா கிடையாது. காறித்துப்புவீங்கன்னு நல்லாவே தெரியும் :))
//Sariyanaaaaaaaaaaaaaaaaaaaaaa mokkkkkkkkkkaaaaaaaaaaa postttttttt ithu//
ஹா ஹா உண்மையச் சொல்றீங்க...இதுக்கு எதுக்கு அனானியா வர்றீங்க தாராளமா பெயர் போட்டுக்கலாம். Seriously No offence will be taken for Criticism on my posts. :))
சுதர்சன் - அவரு கொஞ்ச நாளாத் தான் ப்ளாக் படிக்கிறார்ன்னு நினைக்கிறேன்..இருந்தாலும் அதுக்குள்ல பாயிண்ட பிடிச்சிட்டார்
கொத்ஸ் - அவரு இப்போதான் பிரிச்சு மேய்ஞ்சிக்கிட்டு இருக்கார் நினைக்கிறேன். கொஞ்ச நாள்ல தெரிஞ்சிரும் :))
//இப்போ நீர் செய்ய வேண்டிய வேலையை சரியா பண்ணிடும்//
செஞ்சிருவோம்
சூப்பர் பதிவு..
பட்டையக் கிளப்பிட்டீங்க, லவங்கத்தை லவட்டிட்டீங்க, சோம்பை சுவைச்சுட்டீங்க, ஏலக்காயை இடிச்சுட்டீங்க..
அப்படியே என் பதிவுக்கும் வந்து இதே போல உங்கள் மேலான கீழான பக்கவாட்டான கருத்துக்களை வேண்டிக்கொள்கிறேன்.
முகமூடி - ஆஹா அப்படியே..பேசிக்கிட்டே .நைஸா போஸ்டர ஒட்டிட்டீங்களே..இதெல்லாம் அப்பிடியே வரது தான் இல்ல? ஹூம் நானும் இதுல இன்னும் தேறலை
பினாத்தலார் - யோவ் எல்லாரும் நீரும் போஸ்டர ஒட்டிட்டீரா...சரி சரி நானும் வந்து லவங்கத்தை லவட்டிடறேன்...:))
// இந்த வெட்டி வேலைய படிச்சிட்டு ஊர்ல இருக்கிற மத்த வெட்டிங்களெல்லாம் "ஆஹா சூப்பர் பிரமாதம் பட்டயைக் கிளப்பிட்டீங்கண்ணே, லவங்கத்தை லவட்டிட்டீங்கண்ணேன்னு இவங்களுக்கு கமெண்டு போடுவாங்க. //
No more comments. :(
தலைவர்கள் வழியில் நானும் ஒரு போஸ்டர் ஒட்டிக்கிறேம்பா.
இதுதான் நம்ம லேட்டஸ்ட் போஸ்ட்.
யப்பா! இதேல்லாம் உங்க பிரண்டு சொன்ன மாதிரி இல்லையே!
ஏகப்பட்ட உள்குத்து, வெளிகுத்து, கும்மாங்குத்து எல்லாம் இருக்கே! நடக்கட்டும், நடக்கட்டும். :)))
பின்னூட்டம் போடறது. நாந்தான் ஃபர்ச்ட்னு தம்பட்டம்.
பாக்கறது,கேக்கறது,படிக்கறது எல்லாத்தையும் பதிவு போடறது.
அப்புறம் பரண்லேருந்து எடுத்துப் போடறது.
இதெல்லாம் விடலாமா.
டுபுக்கு !!!! இந்தப் பதிவு நிஜமாவே சூப்பர்:))
But all said and done, this post had a lot of truth and humor in it. Laughed a lot.
//"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."//
That was good. And the worst part is its true.
உங்க நண்பர் Mr.உண்மைவிளம்பிக்கு ஒரு ஒஹோ!
இந்த மானே, தேனே மசாலா ஐட்டம்ஸ் சேர்த்த உங்களுக்கு இன்னோன்னு!
சிங்கப்பூர் அனுபவம், பட்டை லவங்கம் கெளப்புறது...LOL!!!
Iduellam poogaichal pidichathuga sollurathu. Idukkellam naama poi rombave allatikka koodathu.
This is as much tamil typing in english I can do. Let the bloggers continue to blog and the steamers (poogaichal people) continue to steam.
ROFL post again!! :-)
'தனியா நிக்கணும்'னு குழந்தைல எந்திரிச்சு நின்னதுலருந்தே முடிவு பண்ணிட்டீங்க போலருக்கே! இப்படி அநியாயத்துக்கு உண்மையைச் சொன்னா தாங்குமா? தாங்காது சாமி. அதோடு வாயை வேற கிண்டறீங்க. ஐயோ ஐயோ ஜனகராஜ் மாதிரி தலை வெடிக்கறதுக்கு முன்னாடி ரூம்ல புகுந்துக்கிட்டு பூட்டிக்கிட்டேன்! :-))
நல்லா இருங்கண்ணே. ஒங்க புண்யத்துல நாலு சனம் படிச்சு சிரிச்சு மானம் மழை பேஞ்சு ஊரு நல்லாருக்கட்டும்.
இந்தப் பதிவைப் 'படிக்கத் தெரியாத' சில வலைப்பதிவர்களுக்கு யாராச்சும் படிச்சுக் காட்டினா நல்லது.
பாராட்டுகள்!
இதிலெல்லாம் கலந்துக்காம தேமேன்னு பதிவு போட்டு - மறு மொழியே இல்லாம - என் கடன் பணி செய்து கிடப்பதேன்னு எத்தனியோ பேரு. அப்புறம் பதிவே போடாம மறுமொழியாப் போடுறவங்க எத்தனி பேரு = வலை உலகம் பல மாதிரி - ஒவ்வொண்ணும் ஒரு மாதிரி
niraya unmaiya thairyimai veliya sollirkeenga.ivallovu nallavara neenga!!!!!!aana comment varalannaulum paravallena ezhuthum sincere sigarangalai parattta venamma.
nivi.
//"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல//
பாஸூ...என்னை டார்க்கெட் பண்ற மாதிரி இருக்கு.
//
சூப்பர் பதிவு..
பட்டையக் கிளப்பிட்டீங்க, லவங்கத்தை லவட்டிட்டீங்க, சோம்பை சுவைச்சுட்டீங்க, ஏலக்காயை இடிச்சுட்டீங்க..
//
ரிப்பீட்டேய்ய்
//"அட நீங்க வேற...இதையெல்லாம் சொந்த பேர்ல செய்யமாட்டாங்க...எதுக்கு ஆபிஸல டெக்னாலஜி இன்வெஸ்ட்மண்ட் பண்ணி சம்பளத்துக்கு உட்கார்த்திருக்கான்...ஆபிஸ் தொழில் நுட்பங்களை எல்லாம் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்ல, இன்டர்போலே ரூம் போட்டு உட்கார்ந்து யோசிச்சாலும் கண்டுபிடிக்க முடியாத லெவெல்ல் டெக்னாலஜி லெவல் காட்டுவாங்கல்ல//
இதல்லாம் ஜகஜம்தானுங்க
//
பின்னூட்டம் போடறது. நாந்தான் ஃபர்ச்ட்னு தம்பட்டம்.
இதெல்லாம் விட்டுட்டீங்களே
//
ரிப்பீட்டேய்
இப்படிக்கு
புரட்சி ரிப்பீட்டர்
மங்களூர் கிளை
(எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை)
enna guruve..idu
avanga pona payanathoda photos podarthu.. avangaluku pidicha nadigai nadigaroda padangal podarthu..poti vaikarthu namma koths mathiri.. thodar kavithaigal ezhutharthu ... rangamani/thangamani arimugam kidaikarthu.. veedu parthu tharathu idu ellam vituteengale..
adigama blog nala hotella sapta anubavam g3 akkaku iruku kelunga solluvanga..
ஹலோ டுபுக்கு,
//க்ரூப் ஃபார்ம் பண்ணிருவாங்க"//
சரியான உள்குத்து, ஆமா இதனால தான் நீங்க இந்த ஊனியன்ல சேரலயோனு தோனுது. சூஊஉப்ப்பர் கலக்கல், கலக்குங்க குருவே.
அது மட்டுமா போதா கொறய்க்கு யாரு தலைவி, தனிப் பெருந்தலைவினு லாம் வேற போட்டி, மொத கமெண்டு யாரு போடறது அப்பறம் அதுல யாருக்கு என்னலாம் குடுக்கனும் னு வேற நடக்குது. இதெல்லாம் விட்டுட்டீங்களே. சரிசரி அடுத்த பதிவுல வரும்ல....நிஜமாவே சூப்பர்.
Thala,
enna poruthavarai arumaiyana post. Ennakum sila hints kidaichuruku, edhu ellam post podalaamnu...;)
As ambi said, some hidden ullkutthu irukarapola thonudhu. Aana unga paal vadiyara mugatha paartha niyabagathula ;) ullkuthu vechu ezhudhalanu teriyudhu.
//"எங்கயாவது போற வழியில ரெண்டு பேர் தெரியாம மோதிக்கிட்டாங்கன்னா...உடனே ஹோட்டலுக்கு போய் போண்டாவோ பஜ்ஜியோ தின்னு கொண்டாடி...அங்கயிருக்கிற கூட்டத்தையும் சேர்த்து கவர் பண்ணி போட்டோ எடுத்து...மாபெரும் வலைபதிவர் மாநாடுன்னு சொல்லி...அதையும் ப்ளாக்ல போட்டிருவாங்க."//
Oru london blog maanadu potu padam potu aaluku oru post podalameh, idhuvum nallairuku. Paarthu sollunga.
Yenunga vandhu oru salaam potupongaa namma areala vandhu.
நீங்க போட்ட மானே தேனே தான் சூப்பர் :)
//உடனே இவங்களும் அவங்க வைச்சிருக்கிற ப்ளாக்குக்கு போய் நீங்களும் 'நிக்கிறீங்கண்ணே'ன்னு பதில் மரியாதை செஞ்சிருவாங்க"
//
இங்க தாண்ணனே நீங்க நிக்குறீங்க :)
Appoo..Blog for Dummies ...nu Solreengaa..!
ஹே ராம்
உன்னுடைய டாப் 10 காமெடி பதிவுகளில் இது கண்டிப்பாக இடம் பெற வேண்டிய ஒன்று.
பெரியாரிசம் மற்றும் பின் நவீனத்துவம் ஆகியவை மிஸ்ஸிங்.
இந்த கருமத்துக்குத்தான் நான் எழுதுவதில்லை, தமிழ்மணத்தில் வரும் அனைத்து படித்தாலும் டுபுக்கு பதிவில் மட்டுமே பின்னூட்டம் இடுகிறேன்.
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்
Naan romba recenta than unga blogs padikaren. Eneku indha blogs ellam ennanu oru doubt irundhadhu, adhu ippa clear aayiduchu :-)
Unga profile paarthen, neenga Kallidaikurichinu potirukireenga. Ennoda nativevum Tirunelvelithan. Ennoda Chinna thaatha, paati, Mudhaliappapuram Streetla irundhaanga (old No. 62, My thaatha's name is Seshan, my Athai's name is Akila) Hope you know them.
சபேஸ் - என்னங்க ஃபீல் ஆகிட்டீங்களா? அது சும்மா விளையாட்டுக்குங்க...ஹுர்ட் ஆகியிருந்தா மன்னிச்சிருங்க..
அம்பி - டேய் கும்மாங்குட்தெல்லாம் இல்லைடா..எதாவது கலகத்த உண்டுபண்ணிடாதப்பா :))
வல்லிசிம்ஹன் - ஆமாங்க அதெல்லாம் விட்டுப்போச்சு..நீங்க வேற சும்ம கலாசாதீங்க :))
வித்யா - அட நீயும் அதுக்குள்ள தமிழ் வலைப்பதிவுகள பிரிச்சு மேய்ஞ்சிட்ட போல :))
கேர்ல் ஆப் டெஸ்டினி - ஹீ ஹீ உண்மைக்கு என்னைக்கும்மே மதிப்பிருக்கும்ன்னு பெரியவங்க சொன்னது இதத்தானோ ?? :))
ஷோபனா - ஆமாங்க நாம அப்பிடி சொல்லித்தான் நம்ம பொழப்ப ஓட்டனும் :))
சி.வி.ஆர்- நன்றி ஹை :
வற்றாயிருப்பு சுந்தர் - ஆஹா நீங்க எதோ மேட்டர் வைச்சிக்கிட்டு சொல்லத் துடிக்கிறீங்க போல...சும்மா அனானியாவாது சொல்லுங்க ...பொழுது போகனும்ல :)) உங்க பாராட்டுக்கு நன்றி :)
சீனா - ஆமாங்க, பலனை எதிர்ப்பார்க்காம கடமையைச் செய்கிற லட்சியவாதிங்கள விட்டுட்டேன் :))
நிவி - ஆமாங்க அந்த கடமைவீரர்கள் பணி விட்டுப்போச்சு :)
ஆடுமாடு - ஆஹா இங்கொருத்தர் எங்க வீட்டுல குதிரே இல்லைங்கிறாரே ..அப்போ நீங்க தானா அது :))) (நான் சொல்றது அனானிய வந்து கெட்ட கெட்ட வார்த்தையில வையறவங்கள :)) )
மங்களூர் கிளை - கலக்கறீங்க :))) ரிப்பீட்டேய் :)))
டுபுக்குடிசைப்பிள் - அட நைஸா நீங்க செஞ்ச சேவையையும் சேர்த்துக்கிட்டீங்க போல :))) இந்த கவித தொல்லைகுடுக்குறதப் பத்தி சொல்லவும் விட்டுப்போச்சு :))
சுமதி - ஐய்யைய்யோ நான் வேற குரூப்பை சொன்னேங்க..ஊனியன் பத்தி நான் மூச்சே விடலைங்க :)) தீபவாளில மீந்து போன பாமையெல்லம் இங்க வந்து வெடிக்கிறீங்களே நியாயமா?
ஆணி - ஹீஹீ தல உங்க ஏரியால தான் கேம்ப் போட்டிருக்கேன்..ஒரு நாள் கண்டிப்பா வரேன்...ப்ளாகர்ஸ் மீட் போட்டிரலாம்...போண்டாக்கு ஏற்பாடு பண்ணுங்க....:))))))
நாகை சிவா - அப்பிடீங்கறீங்க?? ...நீங்களும் இஙகதாண்ணே நீக்கிறீங்க :))
சௌம்யா - நான் எதுவும் சொல்லலீங்கோவ்...எல்லாம் மேலயிருக்கறவன் சொல்றான் :)
ஸ்ரீராம் - ஹீ ஹீ அந்த லெவலுக்கெல்லாம் எனக்கு எழுத தெரியாது..அது ஏன் அதெல்லாம் என்னான்னே தெரியாது :)) ஏதோ மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்...நீங்க வேற ஏத்திவுடுறீங்க :)) இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிங்கோவ் !
கீதா - வாங்க மேடம். வெல்கம். எனக்கு அம்பாசமுத்திரம் ஆனாலும் கல்லிடைக்குறிச்சியும் அத்துப்படி. கண்டிப்பா எங்க வீட்டுல உள்ளவங்களுக்கு தெரிஞிருக்கும் கேட்டு சொல்றேன் :) உங்க ப்ரொபைல் எனேபிள் பண்ணலையா...உங்க ப்ளாக் அட்ரெஸாவது சொல்லலாமே?
Hey, I see a change of template.. Looks okay. :) but I did like the simplicity of the old one.
And as for reading tamil blogs, is it not the case with any blog.. except for some who just write for the joy of writing :)
ennanga template ellam change paniyacha?? edavathu ashram open panra idea iruka?? aduku thaan intha mathiri oru blog poteengala????
அட டெம்ளேட் மாத்தியாச்சா? லன்டன்ல மழை வர போகுது. :)))
*ahem, அண்ணே நீங்க திமுகவா? :D
velai vetti illama post pottu kadupethi..... sari sari... vidunga.....
oru kariyam pannalame ulaga alavila irukkia tamilarkalai thunai kondu , munna project madurai la pannina maadiri,
oru muyarthiyaka oru sandilyan illaina kalki novella 3d animationla padama pannalame
yevalavo pandrom, ithai kooda panna maatama?
Ennaathuuu !!! neenga kallidaikurichiyaaaaa !
entha theru ! yaroda pullaiyandan neenga !
Ennada..arivu ippadi thaandavamaaduthey nu nenachen ! ellam ooru pakkam odara thanni than karanama ! besh !
Naanum antha oor kaariyakum :)
வித்யா - என்க்கும் அதான் பிடிச்சுது ஆனா அதுல ஏதோ பிரச்சனை இருக்கு. ஆர்க்கைவைஸ் வேலை செய்யமாட்டேங்குது. அப்புறம் இந்த் தேர்தல் பொட்டி போடனுமா அப்கிரேட் செய்யணும்ன்னு சொல்லிட்டான். சரி கொஞ்ச நாள் கலர்புல்லா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்.
டுபுக்குடிசைப்பிள் - ஆசிரமம்...ஆஹா இது கூட நல்ல ஐடியாவா இருக்கே :)0
அம்பி - ரெண்டு நாளா இங்க பிச்சு வாஙுது மழை.அட நீவேறடா எதாவது கிளப்பிவிடாத.
வினய் - ஐடியா நல்லா இருக்குங்க (சீரியஸாவே) ஆனா இங்க வார்தை மட்டும் வரமாடேங்குது :))
சௌம்யா - ஹைய் நீங்களுமா...எனக்கு அம்பாசமுத்திரம் :) ஆனா தங்கமணி கல்லிடைகுறிச்சி தான். எனக்கும் ஊர் அத்துப்படி. ஆஹா இப்படி ஊர்காரங்களெல்லாம் இங்க வந்துட்டா நான் ரொம்ப ஜாக்கிறதையா இருக்கணும் போல இருக்கே :)) (தனி மெயில் அடிங்க விபரம் தர்ரேன் r_ramn atttt yahoo dottt com)
haiyo haiyo... ore comedy dhan ponga.. silar sonna maadhiri ulkuthu velikkuthu irukkum polarukke? apram Mr. Aani ku neenga pona varusham thirunelveli junction-la potta blogger maanadu pathi theriyaadho? - umakrishna
Post a Comment