உங்களுக்கு காய்ச்சல் வந்திருக்கிறதா? கட்டாயம் வந்திருக்கும்! ஒரு வேளை இல்லையென்றால் ஒரு பெரிய வெங்கயாத்தைக் குறுக்கால வெட்டி இரண்டு கஷ்கத்திலும் வைத்து ஒரு இரவு படுத்தால் காலையில் காய்ச்சல் வரும். ஸ்கூல் அரையாண்டு பரீட்ச்சைக்குப் படிக்கவில்லையே என்ற கவலைக்கு ஒரு நண்பன் சொன்ன உபதேசம் தான் இது. நான் இதுவரை முயற்சி செய்ததில்லை. நீங்க வேணா பார்த்துட்டு சொல்லுங்க :)
இந்த ஒருவார காய்ச்சலுக்கெல்லாம் அஜீஸ் டாக்டர் தரும் பென்சிலின் ஊசி மற்றும் கசப்பான மருந்த்துக்கு மேல் மாமா சொல்லும் பிரிஸ்கிரிப்ஷன் "ல்ங்கணம் பரம ஔஷதம்" - அதாவது பச்சத் தண்ணி கூட வாயில படக்கூடாது. வயிறு ஒட்ட ஒட்ட கிடந்தால் நாலாவது நாள் சண்முக பவான் பரோட்டா சால்னாவிலிருந்து, பொதுவாக பார்த்தாலே குமட்டிக் கொண்டு வரும் கோதுமை ரவை உப்புமா வரை எல்லாவற்றையும் ஒரே சமயத்தில் தின்று தீர்க்கவேண்டும் என்ற பசியும் வெறியும் வரும். அந்த மாதிரி இந்தியாவிலிருந்து வந்த பிறகு எந்த ராஜா எந்த நாட்டை ஆண்டாலும் வாரத்துக்கு மினிமம் ஒரு சினிமா பார்க்காவிட்டால் எனக்கு காய்ச்சல் வருகிறது. இவற்றில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு ப்ளாக் அடிக்க யோசிக்கும்போது நல்ல காரணங்களுக்காக நினைவில் நிற்பது மிகச் சில.
ஒரிஜினல் வந்த பிறகு தான் பார்பேன் என்று பிடிவாதமாக இருந்த சிவாஜி பார்த்த போது இதற்காகவா இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்று ஆகிவிட்டது. பாட்டும், ரஜினியின் மேக்கப் மற்றும் கெட்டபுகள் தவிர நீங்கள் ரஜினி ரசிகராயிருந்தால் தவிர பார்ப்பதற்கு ஒன்றும் இல்லையோ என்று தோன்றியது. ரஜினியிடம் அந்த பழய துள்ளலைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருந்தது. மற்றபடி படத்தில் இருத்ந பிரம்மாண்டமும் செய்திருக்கும் செலவையும் பார்க்கும் போது கூடக் கொஞ்சம் செல்வழித்து ரூம் போட்டு யோசித்து ஸ்கிரிப்டிலும் கதையிலும் கொஞ்சம் நேரம் செலவழித்திருக்கலாம் என்று தான் தோன்றியது. ஷ்ரேயா ஆக்சிடன்ட் ஆன அம்பாஸிடர் கணக்கா நெளித்து நெளித்து ஆடுகிறார்(நடக்கிறார்), வந்து போகிறார். சொல்வதற்கு ஒன்றுமில்லை.
ரொம்ப நாளாக பார்க்கவேண்டும் என்று நினைத்து சமீபத்தில் தான் பார்க்கமுடிந்த ஒரு நல்ல படம் "குப்பி". தொப்புளைக் காட்டும் ஒரு அயிட்டம் சாங், மசாலாவுடன் ஒரு கதை முடிச்சு, திருப்பம், அம்மா செண்டிமென்ட் என்று கதையமைப்பதற்கு கொஞ்சம் மெனெக்கெட்டால் போதும். ஆனால் முடிவு முதற்கொண்டு எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மைச் சம்பவத்தை விறுவிறுப்பாக படமாக்குவது என்பது என்னைப் பொறுத்தவரையில் சவாலான விஷயம். சவாலை மிகத் திறமையாகக் கையாண்டு விறு விறுப்பாக எடுத்திருக்கிறார்கள். படத்தில் சிவராஜனாக வரும் இயக்குனர் (அப்பிடித்தானே?) பாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார். ஈ.ழ பிண்ணனி அதிகம் தெரியாத எனக்கு "நாங்கள் தவறு செய்திட்டோம் அதனால் தண்டனையை அனுபவிக்கிறோம்" என்று சொல்வது மட்டும் கொஞ்சம் சினிமாத்தனமாக இருந்தது. மும்பை குண்டுவெடிப்பை பிண்ணனியாக கொண்ட "ப்ளாக் ப்ரைடே" படத்தை விட இந்தப் படம் பல மடங்கு சிறப்பாக இருப்பதாக எனக்குப் பட்டது. அண்ணி மாளவிகா நடிப்பில் எனக்கும் ரொம்பவே நம்பிக்கையுண்டு. கலக்கியிருக்கிறார். ஒரு அழுத்தமான படம் எப்படி எடுக்கலாம் என்று இந்த திரைக் கதையிலிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்.
ஓ.கே ரகத்தில் நினைவில் நிற்பது இன்னொரு திகில் பேய்ப் படம் "சிவி". சமீபத்தில் திகில் படங்களே வராத நிலையில் இந்த படம் ஓ.கே சொல்லலாம். ஆனால் வர வர பேய்க் கதைகளெல்லாம் இப்போது போர் அடிக்க ஆரம்பித்துவிட்டது. எல்லா பேய்ப் படங்களிலும் பெண் பேய்களையே காட்டுகிறார்கள். அதுவும் நம்மூரில் வரும் பேய்ப் படங்களிலெல்லாம் இந்தப் பேய்களை பெண்ணாயிருக்கும் போது யாராவது ரேப் செய்திருப்பார்கள் அது அப்புறம் பேயாகி அஷ்வினி ஹேராயில் விளம்பரம் மாதிரி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும். பயமுறுத்த வசதியாக தலையை விரித்துப் போட்டுக்கொண்டாலும் கதையிலாவது கொஞ்சம் வித்தியாசம் காட்டவேண்டாமா? பாதிரியார், மாதாக் கோயில் மணியோசை, ரேப் செய்வதற்கு முன்னால் ஒரு நெஞ்சை நக்குகிற பாட்டு, குழாயில் தண்ணீர் ரத்தமாகுகிற கண்றாவி, இன்னும் பேய்களெல்லாம் எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை(இதில் வெளிநாட்டு பேய்களும் விதிவிலக்கில்லை)...இதுல மூனு நாலு டப்பா நைசில் பவுடரைவேறு முகத்தில் அப்பிக்கொண்டு ரா..ரா ஜோதிகா மாதிரி கண் மை வேறு. ஏம்பா புதுசா ஐடியாவே கிடக்கலையா..இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? - பார்முலாவா மாத்துங்கப்பா. புதுமுகங்கள் நடிப்பில் மெனெக்கெட்டு இருக்கிறார்கள். ஓ.கே ரக கதைக்கு திரைக்கதை மிக உதவியிருக்கிறது, திரைக்கதைக்கு சபாஷ் சொல்லலாம்.
சத்தம் போடாதே - இயக்குனர் வசந்த் என்பதால் எதிர்பார்ப்பு நிறைய இருந்தது. படம் மீண்டும் ஓ.கே ரகம். திரைக்கதையை போரடிக்காமல் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால் கதை சம்பிரதாய க்ளைமாக்ஸ் எதுவுமில்லாமல் டக்கென்று முடிந்துவிடுகிறது. உண்மைக்கதை அப்பிடி இருப்பதால் அவ்வாறு அமைத்திருக்கலாம். அனால் மசாலா இல்லாத ஒரு விறுவிறுப்பான க்ளைமாக்ஸ் இருந்திருந்தால் சபாஷ் போட வைத்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. காதல் கோட்டையில் அவ்வளவு பில்டப் ஏற்றி...கடைசியில் தேவயாணி ட்ரெயினிலிருந்து டோய்ங் என்று குதிக்கும் போது இவ்வளவு சிம்பிளாக முடித்துவிட்ட்டார்களே என்று எனக்கு ஒரு ஏமாற்றம் வந்தது...அதே தான் இங்கும் தோன்றியது. பிருத்விராஜ் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறி வருகிறது. பஞ்ச் டயலாக், அலட்டலான நடிப்பு எதுவிமில்லாமல் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எனக்குள் பட்சி சொல்கிறது. இப்போதைக்கு எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஃபேவரிட் ஆக்டர் இவர் தான்.
அடுத்து தலைவர் படத்தை தவிர ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருக்கும் படம் "ஓரம்போ". ட்ரைலர் முன்னோட்டத்திலே எதிர்பார்ப்புகளை கூட்டியிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று. மும்பை (நானாபடேகர்) படங்களின் சாயலில் பட்டையக் கிளப்பியிருக்கிறார்கள். எப்படி வந்திருக்கிறதோ என்று ஆர்வம் மேலோங்குகிறது. ஐய்யா சாமி சொதப்பிடாதீங்கப்பூ.
Monday, October 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//இன்னும் பேய்களெல்லாம் எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை//
//இந்தப் பேய்களை பெண்ணாயிருக்கும் போது யாராவது ரேப் செய்திருப்பார்கள் அது அப்புறம் பேயாகி அஷ்வினி ஹேராயில் விளம்பரம் மாதிரி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு பயமுறுத்தும்//
Adra sakka, imposition ezhudhinadhula, correctah post potinga ;)
Jayachandran (Devayan(a)i நைட்டி advertisement varuvanga, same type of Raasathi)
Cinema Aviyal, oru Kalakal Aviyal
(Sun TV top10 movies style padichukalaam) ;)
பேய் படங்கள் எடுப்பவர்கள் சொதப்புறாங்க என்பதை அழகா"கல்யானமாகாதவங்க எடுக்கிறாங்க"ன்னு அழகா சொன்னீங்க குருநாதா!இது நச் நச் நச்:-))
//நீங்க வேணா பார்த்துட்டு சொல்லுங்க :)//
அது பொய் என்பதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
//பேய்ப் படம் "சிவி"//
இப்படி ஒண்ணு வந்திருக்கா?
//எங்கள் வீட்டில் எல்லாருக்கும் ஃபேவரிட் ஆக்டர் இவர் தான்.//
யூ மீன் இரண்டாவது பேவரேட்?
// ஏம்பா புதுசா ஐடியாவே கிடக்கலையா..இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? - பார்முலாவா மாத்துங்கப்பா //
ICU-வில் இருக்(கப்போ)கும் டுபுக்கு அவர்களுக்கு,
Get well soon.
;-)
ம்ம்ம்... அவியல் நல்லா இருக்கு...
இலவசக்கொத்தனார் கேள்விதான் எனக்கும்...அதென்ன 'சிவி'? என்ன படமோ..ஆனா நல்ல வேள நீங்க பாத்தீங்க அத..
//அஷ்வினி ஹேராயில் விளம்பரம் மாதிரி தலையை விரித்துப் போட்டுக்கொண்டு //
//எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை//
இல்லாட்டி இந்த மாதிரி முத்துக்கள் உதிர்ந்திர்க்குமா!!!
Super review!
//அண்ணி மாளவிகா நடிப்பில் எனக்கும் ரொம்பவே நம்பிக்கையுண்டு//
அண்ணி? மாளவிகா???
அவருக்கே அந்த நம்பிக்கை இருக்குமோ என்னமோ? நீங்க எதுக்கண்ணே வேஸ்ட்டாக... ? :-)
Kadavuley... You are hilarious. But Sivaji-ya ippadi sollitiye.. I enjoyed watching it. In fact watched it twice. :) Second time with appa here.
Adhu seri, adhu enna last day dhrogam? I don't rememeber. And as for thangamani getting scared of me, please, you expect me to belive that. Thangamani, irundhalum indhu konjam over.
Hmm, ennai visit panni vera ippodhaikku thappichutta. Innoru chance enakku kedaikkamala pogum, appo pathukkaren.
'லங்கணம் பரம ஒளஷதம்'சாப்பாட்டுக்கு மட்டுமல்ல! சிந்தனைக்கும்தான் என்று சில கால் சிந்தனை பட்டினி கிடந்து இப்போது பட்டை கிளப்பும் post மூலம் நிரூபித்திருக்கிறீர்கள்.
சிவாஜி பற்றி அத்தனை பத்திரிக்கைகளும் விளம்பர வருமானத்திற்காக ஜால்ரா அடிக்கும் போது தைரியமாகவும் diplomatic ஆகவும் நீங்கள் எழுதியிருப்பது மகிழ்ச்சி. எழுத்தாளர் சுஜாதா முதல் அத்தனை பேரும் சில்லரை எண்ணுவதில் குறியாக கதையை கோட்டை விட்டது வெட்கப்படவேண்டிய விஷயம்.Hypeனால் இந்த தண்டத்தையும் விற்கமுடியும் என நிரூபித்திருக்கிறார்கள்.
அண்ணே! ஆட்டோவ கிளப்பிடாங்க அண்ணே!!!!!
//இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? - பார்முலாவா மாத்துங்கப்பா. //
ஹிஹி, என்ன இப்பவேல்லாம் உங்களுக்கு ரெம்ப தைரியம் வந்துடுச்சு போலிருக்கு? போன பதிவுல என்னனா மாமியார் ரசத்தை நொள்ளை சொல்றீங்க, இந்த பதிவுல என்னனா இப்படி..? :p
நான் சும்மா ஒரு தடவை தெரியாம உளறினதுக்கே பின்னி பிரிய கழட்டிடாங்க எங்க வீட்டுல. :))
உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தமிழ் சினிமாவில் வர அனைத்து படங்களையூம் பார்ப்பது நம் கடமை என்ற வாக்கிற்கு ஏற்றபடி வாழும் மாவீரன் டுபுக்கு அண்ணனுக்கு ஒரு வணக்கம்.
நீங்க ஒரிஜினல் சிடி.. நான் பெரிய திரை என்று முடிவு கட்டு அது படியே பாத்துட்டோம்ல. நமக்கு ஒகே :)
குப்பி - பாக்கல...
சிவி - நண்பன் சாட்டில் மானிட்டர் முன்பு விழுந்து கேட்டுக்கிட்டான் வேண்டாம் னு.. :)
சத்தம் போடாதே - வசந்த் பாடல் காட்சிகளை உருவாக்க காட்டும் ஆர்வத்தை கதையிலும் திரைக்கதையிலும் காட்டலாம்.
நீங்க மேற்கொண்டு பார்க்க வேண்டிய படங்கள்
மலைக்கோட்டை - சண்டைக்கோழி 2 பார்ட்
மருதமலை - டிபிகல் அர்ஜுன் படம்
உடம்பு எப்படி இருக்கு - டிபிகல் ராஜசேகர் படம்
நம் நாடு - உடம்பு எப்படி இருக்கு ரீமேக் (மூலப்படம் மலையாளம்)
தவம் - டவுன்லோடு பண்ணியாச்சு இன்னும் பாக்கல.
தமிழ் எம்.ஏ - நோ கமெண்ட்ஸ்
Hi,
UNGA PHOTO BLOG LA UPDATE PANNA BETTER A IRUKUM..
டுபுக்ஸ்,
// இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா? //
ஆஹா! என்னா ஒரு பாயிண்ட்டு? சீக்கிரமே நீர் ஆணாதிக்கவாதியாகக் கடவது! :)
யோவ்! எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் போடுவேன்னு இம்போசிசன் எயிதுனா போதுமா? செயல்ல காட்டு மேன்!
ஆணி - ஓ அப்பிடியா இன்னும் அந்த ஜெயச்சந்திரன் தேவயாணிய பார்கல :(
அபி அப்பா - என்னங்க அந்த குருநாயர விடலையா இன்னும் :)). படமெடுக்கிறவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் பத்தலை போல :)
இலவசம் - வெச்சுப் பார்த்து வொர்கவுட் ஆகலையா? ஊத்திக்கிச்சா? ஆமாமா நீரு என்னத்தானே முதல் பேவரிட்ல ஆக்டர்ல சேர்தீர்?? :))
பாலராஜன் கீதா - வீக்கெண்ட் தான் பொதுவா படிப்பாங்க :) அதான் அவங்க ப்ளாக் படிக்கும் போது வூட்டுலயே இருக்கமாட்டேனே.
கேர்ல் ஆப் டெஸ்டினி - ஹீ ஹீ ஓவரா புகழறீங்க...ரொம்ப நன்றி ஹை
பிரகாஷ்- நீங்க "வாள் மீனுக்கும்..வெலங்கு மீனுக்கும்" மாளவிகாவச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். நான் சொன்னது அவஙக இல்ல...இவுக "அண்ணி" சீரியல்ல நடிச்சாங்களாம்..அதான் அந்தப் பெயராம்...(ஜே.ஜேல கூட நடிச்சிருக்காங) இவுக நல்லா நடிக்கிறாங்கண்ணே...
வித்யா - ரஜினி ரசிகையாயிட்டியா? உன்னால் முடியும் தம்பி கமல மறந்துட்டியா ? :P...முதல்ல போஸ்டப் போடு போஸ்டப் போடு...
ஷ்ரிதர்- சுஜாதா - கரெக்டாக பிடித்தீர்கள். நான் அதை மறந்துவிட்டேன். சுஜாதா தேவையே இல்லை இந்தக் கதைக்கு. ஆனால் சுஜாதாவின் சினிமா கதை மீது எனக்கு எப்பவோ நம்பிக்கை போய்விட்டது.
ராம் - ஆஹா..கிளப்பிட்டாங்களா...ஐ ஆம் தி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்
அம்பி - டேய் நீ எதுக்குடா சீரியல் மாதிரி அத அடிக்கடி ரீவைண்டு பண்ணி சொல்லிகிட்டே இருக்கே...நானே இங்க கவனத்த திசை திருப்ப கஷ்டப் படவேண்டி இருக்கு...நீ வேற...பின்னி எடுத்துட்டாங்களா..பலே சபாஷ்...கவலப்படாத இப்பத் தான் குடும்பஸ்தானகிட்டு இருக்க :))
நாகை சிவா - வாங்கண்ணே. லிஸ்டுக்கு ரொம்ப நன்றி. மருதமலை, மலைக்கோட்டை, நம் நாடு இதெல்லாமும் பார்த்தாச்சு. இவங்களெல்லாம் ரொம்ப நம்பிக்கையூட்டறாங்க...(நாமும் எந்த முன் அனுபவுமும் இல்லாமல் படமெடுக்கலாம்ன்னு...தயாரிப்பாளருக்கு ரொம்பத் தான் தைரியம்)
ப்ராஹாரிகா - வற்வங்கள பயமுறுத்தவேணாமேன்னு பார்த்தேன். போட்டோ போட்டா எதாவது சினிமால சான்ஸ் வாங்கிக் குடுப்பீங்களா...??
இளவஞ்சி - வாருமைய்யா...நக்கலு. அதான் பதிலு போட்டுக்கிட்டு இருகேனே...(உங்க ப்ளாக்ல சொல்றீங்களா?..இதோ வந்து போட்டுக்கிட்டே இருக்கேன் )
idhukku dhan sollaradhu, you should be visiting me more often and more regularly. And as for me, am always a rajini fan, appo appo, sila nalla padangal vera yaaranum pannina, adheiyum paappen. :P
http://srivids.blogspot.com/2007/07/sivajisecond-time.html
http://srivids.blogspot.com/2007/07/summa-adhiruthilla.html
idhellam post illama vera enna?
இப்போ ராச்ஆத்தி நைட்டி போடறாங்காளா:))0
கண்மை வேற..
மன்னவனே பாட்டு நினைவு இருக்கா.
கேஆர் விஜயா எல்ல்லா இடத்துக்கும் பாய்ந்து பாய்ந்து பயம் காட்டுவார்.
அதிலேயும் சோகம் பார்த்தோம் நாங்க. இப்பத்தான் இப்படி சிரிப்பாப் போச்சேப்பா:)))
//ஷ்ரேயா ஆக்சிடன்ட் ஆன அம்பாஸிடர் கணக்கா நெளித்து நெளித்து ஆடுகிறார்(நடக்கிறார்), வந்து போகிறார்//
உங்களுக்கு அப்படி என்னதான் கோபம் அவரோடு? அமைச்சரவைக்கும் தகுதி இல்லாதவர் என்று ஒதுக்கி விட்டீர்கள்.
Nice post.
//
இன்னும் பேய்களெல்லாம் எத்தனை நாட்களுக்குத்தான் ஒயிட் கலர் ராசாத்தி நைட்டி மற்றும் கவுனை மட்டுமே போட்டுக்கொண்டு உலாத்துமோ தெரியவில்லை(இதில் வெளிநாட்டு பேய்களும் விதிவிலக்கில்லை)...
இதுல மூனு நாலு டப்பா நைசில் பவுடரைவேறு முகத்தில் அப்பிக்கொண்டு ரா..ரா ஜோதிகா மாதிரி கண் மை வேறு. ஏம்பா புதுசா ஐடியாவே கிடக்கலையா..இல்லை படமெடுக்கிற உங்களுக்கெல்லாம் கல்யாணமாகவில்லையா?
//
அண்ணே கல்யாணம் ஆனா பேய் பயம் தெளிஞ்சிடுமா??
அவ்வ்வ்வ்
pada vimarsanam nalla irundhadhu.nalla peipadam varadullanra kuraikku neengale kuduthikitta samadhanam super,adhane parthen,ennada innum kala varaliyennu,thangamani,ponghiezhunga,mara thamizhacchi prove panna vendama?
nivi.
haha..
Sivaji padam vanthu kittathatta oru varusham aana apprama, vimarsanama..!
Nallave adakki vasikareenga :P
Sivaji padathai pathi ithu maathiri ezhuthine bloggers ku comments la dharma adi kuduthangale appo.inge onnum illaya ..
Chey sappunnu aayiduthey!
பாஸூ...குப்பியில சிவராசனா நடிச்சவர் பேரு ரவிகாலே. இவரு மும்பை தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். டைரக்டரு பேரு ரமேஷ். அப்புறம் 'சத்தம் போடாதே' படத்தை என்னால சகிக்க முடியல. நல்ல ஸ்கிரீன் ப்ளேதான். இருந்தாலும் நித்தின் சத்யாவோட கொடுமை தாங்க முடியலை. அடுத்தாப்ல 'ஓரம்போ'வை ரொம்ப எதிர்பார்க்கிறீங்களாக்கும். என்ன கொடுமை டுபுக்கு இது?
அண்ணாத்த குப்பி நல்ல படம் . ஒகே . ஆனா ஷ்ரெயா ஆக்சிடென்ட் ஆன அம்பசிடர் அபப்டின்னு சொல்லி மனச உடைச்சிட்டீங்க ! எதொ ஒரு Benz ,ஒரு BMW ந்னு சொல்லி இருந்தா கொஞம் ஆறுதலா இருந்திருக்கும்.
ஹே ராம்,
காமடியான, நடுநிலையான பதிவு. முதல் நாளே படித்து விட்டேன். வேலை மிகுதியால் இன்றுதான் பின்னூட்டம் இட முடிந்த்தது. லேட்டா வந்துட்டு லேட்டஸ்ட்டா வந்தேன் என்று டயலாக் விடுவது நம்மவர் சங்கத்து ஆட்களுக்கு அழகில்லலை.
அது சரி வாரத்திற்கு மூணு பதிவு வாக்குறுதி என்ன ஆச்சு????
சினிமா விமர்சனம் மாதிரி, டிவி நிகழ்ச்சிகள் பற்றியும் விமர்சனம் எழுது டுபுக்கு.
விஜய் டிவியில் சொம்புவின் அலம்பல் தாங்கலை. அதை பற்றி எழுதேம்பா...
என்றும் அன்புடன்
ஸ்ரீராம்.
வித்யா - யெக்கோவ் அதான் வந்து கமெண்ட் போட்டிருக்கேன்லா :)
வல்லிசிம்ஹன் - எப்பா...அந்த பாட்டுல கே.ஆர்.விஜ்யா கொடுத்த காசுக்கு ஓவராவே நடிச்சிருப்பாங்க....:)))
சபேஸ் - நானும் ஷிரேயா ரசிகர் மன்றத்துலேர்ந்து கல்லுவிடுவாங்கன்னு பார்க்கறேன் சவுண்டயே காணோம் :))
மங்களூர் சிவா - பயம் தெளியாது பழக்கமாயிடும் அவ்வ்வ்வ்வ்வ்:)))))
நிவி - ஏங்க நீங்க வேற ஏத்திவிடறீங்க..தங்கமணி ஏற்கனவே மறத்தமிழச்சி தான் உங்க சப்போர்ட்ல பின்னிப் பெடலெடுத்துடப்போறாங்க :))
சௌம்யா - அப்பிடியா உங்க ப்ளாக்லயா...அது என்னமோ தெரியலைங்க...கமெண்ட் எண்ணிக்கை எகிறிச்சா. நம்மளையெல்லாம் ஏனோ கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க :)
ஆடுமாடு - நிறைய தகவல் வெச்சிருக்கீங்க...ஃபீல்டுல பாட்டெழுதறவுக இல்லாம இருக்குமா? ஏங்க ஓரம்போக்கு என்னங்க...ட்ரைலர் பிடிச்சிருந்தது :)
சதீஷ் - வாங்கைய்யா...என்னடா ரசிகர் மன்றத்துலேர்ந்து சவுண்டே இல்லையேன்னு பார்த்தேன்...பரவாயில்லை ரசிகர் மன்றம் இருக்குன்னு தெரிவிச்சிட்டீங்க.... :))
ஸ்ரீராம் - வாரத்துக்கு மூனு பதிவு - காய்ச்சல் வந்திரிச்சுபா அதான் முடியலை. இனிமே தாக்கு பிடிக்கப் பார்க்கறேன். விஜய் டீ.வீ இங்க வீட்டுல போடலையே அதான் சொம்ப பார்க்கவே இல்லை. அனாலும் அவர் அலட்டல் யூ.டியூப்ல ஒன்னு பார்த்தேன்...தத்துவமா உதிர்த்திருந்தாரே?? (நடு நடுவில உண்மைவேற :)) )
அனானி - நன்றி. அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் ஒழுங்கா பண்ணிடுங்க
Post a Comment