மு.கு- இந்தப் பதிவு ரொம்ப நாள் முன்னாடி வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் அட்லாஸ் வாலிபராய் இருந்த போது(அவங்க போறாத நேரம்) எழுதியது. இங்கே மறு பதிப்பு செய்துகொள்கிறேன்.
***************************
“உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்” - எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?” அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.
ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.
“ஹலோ டாக்டர்…ஐ ஆம் சந்திரா”
“சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை”
“ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?”
“ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க…ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?”
“மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது…எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்” - சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.
“வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே…அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?”
“எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்…அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்” அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.
“மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே” பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.
“யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..”
“ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?”
“எக்ஸாட்லி”
“இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்…இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்…நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்…இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது”
“எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா…அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் “
“ஹூம்…வெல்டன் அப்புறம் என்ன…”
“என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்”
“இன்ட்ரெஸ்டிங்…ம்ம்ம்….ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
“கேள்விப் பட்டிருக்கிறேன்…”
“மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்…நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்
“எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்”
“சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்…என்ன சொல்லுகிறீகள்”
“செலவு..”
“நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்…நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்…ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா”
சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.
“பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்” ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.
“ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்…இதோ கிளம்புகிறேன்…இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்…அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்”
டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது…துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.
பி.கு - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்…போதும் நிறுத்திகிரலாம் :)
Thursday, May 24, 2007
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
இந்தப் பின்னூட்டம் இடப்பட்ட நேரம் 99:99
டுபுக்கண்ணே, கதா காலட்சேபத்துல எனக்கு புடிச்சது கடைசி பி.கு தான். கலக்கிபுட்டீக. உங்களுக்கே ரொம்ப அந்த வாட அடிச்சதுனால தான இப்படியெல்லாம் பி.கு எல்லாம் போடறீங்க.
சாவித்திரி வாடை அடிக்கவில்லை, ஆனால் சுஜாதா வாடை குடும்பத்தோடு கும்மி அடிக்கிறது இங்கே.
சாவித்திரியும் இல்லை சுஜாதாவும் இல்லை வெறும் கருவாட்டு வாடைதான் வருது.
எக்ஸலண்ட் !!!
மிகவும் ரசித்தேன்...!!!
சுஜாதாவெல்லாம் சொல்லறது கொஞ்சம் ஓவரா தெரியல்ல?...
முடிவு என்னன்னு முன்னாடியே யூகிக்க முடியுதே.. என்ன செய்ய..?
என் வாட்ச் கூட 88.88 காட்டுகிறது. அதுக்கு சனிப்பெயற்சியோ.
mhm.. agree with Maduraiyampathi. btw, many more happy returns of the day. ungalukku badhila kozhambi poi Chakra ku wish pannitten 2 days munnadiye hi hi.. have a nice day
- UmaKrishna
நல்லாவே இருக்கே கதை... ஆனா, சொல்றதுக்கு முன்னாடியே சுஜாதா வாடை ரொம்பவே அடிச்சுது.
Dubuuku sir, very nice story.
Hello vallisimhan 88:88 kaatinaa no problem. 7 1/2 kaatinaa dhaan sani. Yezharai pidichuruthu ooy !!!
30yrs munnadi!! neenga yezhudina kadhai nalla dhan irukku......aana..Sujatha vaada adicha kooda parava illai..romba bore adichiduchu...Adhutha post-la pls bring back the energy.
Ungal blog-a padikka ododi vara yengalai yemathadheenga!
புதுசோன்னு நினைச்சுட்டு வந்தா அதே பழைய கதைதானா? கஷ்டம்! நிஜமாவே எனக்கு இப்போ ஏழரைச் சனி! :)))))))))))
hallo sir,
thro the blogs of Geetha mami & Porkodi, I visited your blog & found the posts interesting to read.I was born & brought up( ella ella naanadhaan valandhen) in Chidambaram & studied upto my U.G there.Then came to Chennai for higher studies - athampppa C.A-innu solluvangale(appa,amma matrum kudumbathooda).Avanavan higher studies-na foreign povan.Namakku appallam madras-e foreign than. Now Last 1 yr I am alone in Sadui Arabia as Investment Consultant in Saudi stock market(Yaaradhu kavunndamani madhiru - Naattula indha Consultant thollai thaanga mudiyallappa-innu koovaradhu)Nice to note that you were in Ramco Systems for sometime.I know Mr.PRV(athamppa Mr.Venkatrama Raja and his wife Smt.Nirmala Raja very well)
Do you know they are running a school in Velachery by name Arsha Vidha Mandir(next to Latha Rajni's ashram school)My wife is the Principal of that school from inception in 2001-02. Nice meeting you thro this blog.Still finding difficulty in tying in Tamil.PL tell me how to do so & also how to link my blog with others - Namba Computer-la Konjam weak -HI HI HI
enna guruve
ippadi pazhaya posta potu emathiteenga..in between enaku theriyama neenga bday kondadineengala???
sollave illa
MANY MORE HAPPY RETURNS OF THE DAY
Dubukku saar... ungal writings rombavum rasaikam padi irukku... ithu varaikum comments potathu kidaiyathu...manikavum...keep up the good work...
Belated B'day wishes!
- Lalitha
Thala... why repeatings?? Sarakku theendhu pocha..Tamil cinema maadhiri?? irukkadhey.?. "neenga enna nenaikkirenganna.. 2 vaarathukku post podalenna.. ivanunga kitta anavasiyamaa mannippu kettu vazhiyanum.. naalukku naal namma image koodi varumbodhu pera keduthukkama.. pazhasa dhoosi thatti blog la serthutta.. oray kallula pala maanga adikkalaam nu " neenga kanuvu kaandradhu pudriyudhu.. birthday nu kelvi patten.. 40 vayasa?? 40 vayasaana naai gunam nu solraangale.. unmaya thala.. neenga nandri marakka matteenga nnu sonnen.. hee.. hee...
Kooda padicha Kuranga marakkala apparam eppadi nandriya mareepeenga.. ippadi sonnadhukku kochukitteengalaa... cho cho.. nalla kochukunga.. inimay idhu maadhiri dabba postukku idhaan ungalukku badhil mariyadhai
Unga thangamniya akka nu kooptaa enakku odhaya.. nalladhu.. inemay Thangamani maami nu koopidalama?? illa Thangamani Amma nu vilikkardha?? illa Thangamani Paatti nu koopta sariyaguma..?? illa manbumigu puratchi thalavi Thangamani ni nu koopidradhuaa? (ungala thirumanam seidhadhu miga periya puratchi adhanala indha adaimozhi thagum ;-) ) ..choice is urs thala.. pesama Akka ve nalla irundhirukkum.nu yosikireenga lla.. summa poravana yenda sorinju vittom nu feel pandreengala....romba yosikka vachuteenga...... -)
Thala..Karpanai Gudhiraya thatti vidunga.. apparam paarunga.. applauseaa.... :-)
btw Manipayal: PRV's daughter got married to Ramalinga Raju's (Satyam) son. adhayum potrukkalaam.. Ungala therinjadha PRV sollave illai.. it reminds me the vivek comedy "enakku IG ya nalla theriyum :-)) so just on the lighter side no hart peelings...
ஹ்ம்ம்... கொஞ்சம் முன்னாடியே ஊகிக்க முடிஞ்சதுதான்... ஆனா... அரைகுறையா முடிச்ச மாதிரி இருக்கே.
சுஜாதாவின் ஒரு சிறுகதையை நினைவுபடுத்துவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. 'திருமணம்' என்ற வார்த்தையை மறந்துவிடும் ஒரு பாத்திரம் வரும். ஆனால் அதன் முடிவில் ஒரு சடக் திருப்பம் இருக்கும்.
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் :-)
Oohh, kadaisiyila onga peru ramachandranaa(sari sari, S.Ve.Sekhar madhiri modhallendhey en peru ramachandran-thannu kadikaadenga.Neenga lighta sonnalum darkaa sonnalum adhudhan unmai.Yes my wife also attended that mega marriage in Hydrabad.BTW belated B'day wishes.Unga photova patha 40 madhiri theriyallaiye? Naa nenaichen oru 39 1/2 irrukummnu?(sssshhhabbba Thangalada saami-innu Solradhu kekkaradhu)
erkanave padichirundhalum,its certainly worth one more time.sir ungalladuya ezhthu pani veramadhiri.continue with your humour posts.
nivi.
last two posts a than padichitu varen.. new here... so didnt find the post old... sujatha nu illa.. all sci-fi guys write like this.. even sujatha's style resembles some western authors.. ana intha post konjam mottai ya mudinjathu pola irunthuthu...
but profile says chinese tiger year bet '65 to '84.. which is '74... epdi 40 years varum ?? kolaputhu...
Hey Ram
Belated B'Day wishes to you, came to know just now with the comments written by my fellow readers.
send your email id to nsriram73@gmail.com to get a greeting card next time around or your snail mail details for me send a real gift, choice is yours hence make a wise decision.
Regarding the post, Idu enna chinna pullai thana ma illa irukku?? Sujatha vaadaiya :idhu konjam overaa therialai?? ungalukkum remake mania pudichirukka? (tamil movie industry madhiri), Kadai Nalla irundathu,but this is not we come here for, indha oru pakkai kadaiyathan 15-20 varushama Kumudathila padikiikrena, ingayuma??? Now, a great and hilarious post is due from you, use all your 40 year old (Iyya, I am much younger) Kusumbhu in it.
Looking forward to have the pleasure of the next post immediately (late pannapadathu sollitten) and to receive your email.
Endrum Anbudam
Sriram
Thala unga usual humor is missing! Mudivu enna?
first time to your blog! nice to read. by the way Brain science research is coming up with lots of interesting findings these years. You might wish to read the book On Intelligence by Jeff Hawkins.
You've been tagged!
http://desigirlposts.blogspot.com/2007/05/tag-indian-writing.html
கதை சூப்பர். ஆனா கதை அரம்பிக்கும் போதே முடிஞ்சிருச்சி. இன்னும் கொஞ்சம் பெரிய கதையா இருந்திருந்தா நல்லா ரசிக்க முடியும். அதே இல்யுஷன் ப்ரசாத்துக்கும் தெரிய வரும்ன்னு கதை படிக்கிற எல்லாருக்குமே முன்னமே தெரிஞ்சிருக்கும். ஆனா அதுக்கப்புறம்தானே கதையே?
அருமையான கதை
Dubuks,
Sujatha vadai yum ellai muniyaandi vadaiyum ellai, Yerkanaveh namma vavaasangamla padichurunthaen, still interesting to read it...
Andha clock digitalnu ninikiraen, could be LCD Problem :)...(Watch repair pannaravan no specialised in LCD)
Idhukaaga enna sherlock nu sollidaadhinga
மணிகண்டன் - :))
Lakshman - ஹீ அதான் நானே சொல்லிட்டேனே.. அவரு வாடை அடிக்காம எழுதமுயற்ச்சி பண்ண முயற்சிக்கிறேன்
இலவசக்கொத்தனார் - ஏன் ஏன் இந்த கொலவெறி??? வொய் மிஸ்டர்?
செந்தழல் ரவி - அப்பாடா நீங்க ஒருத்தர் தாங்க வயத்துல பால வார்த்தீங்க... ரொம்ப நன்றி :))
மதுரையம்பதி - ஏன் ரொம்ப ஓவர்ன்னு நினைக்கிறீங்கன்னு புரியலையே...?? நான் சொல்ல வந்தது என்னான்னா...அவரு சயன்ஸ் ஃபிக்க்ஷன்ல புகுந்து விளையாட்டாரு...அதனால் எது எழுதினாலும் அவரு வாடை அடிக்காம தவிர்கறது கொஞ்சம் கஷ்டம்ன்னு :)
ஆழியூரான் - நெக்ஸ்ட் மீட் பண்றேன் :))
வல்லிசிம்ஹன் - புது வாட்ச் வாங்க dueவோ?? :)
UmaKrishna - நன்றி ஹை. எனக்கு புரியலை ஏன்னுன்னு? ஒரு வேளை சுஜாதா எழுத்தில் டுபுக்கு வாடை அடிக்கிதுன்னு சொல்லியிருந்தா ரொம்ம்ப்ப்ப்ப ஓவர் ஒத்துக்கிறேன்...ஆனா நான் என் எழுத்தில தான் அவரு வாடை அடிக்கிறதப் பத்தி சொல்றேன்? பிரியலையே??
Arunram - நன்றி. அது தவிர்கறதுக்கு முயற்சி பண்றேன் :))
அனானி - ஹப்பாடா நீங்களும் பால் வார்த்தீங்க போங்க...நன்றி
லங்கினி - போர் அடிச்சிருச்சா...ஓப்பனா சொன்னதுக்கு நன்றி. வரும் பதிவுகளில் முயற்சி செய்யறேன்
கீதா - இப்போ சந்தோஷமா இருப்பீங்கன்னு நினைக்கிறேன் :))
மணிப்பயல் - வாங்க சார். மிக்க நன்றி இந்தப் பக்கம் வந்ததுக்கு. ப்ப்ஹோ உங்களுக்கு P.ஆஆற்.Vஈ. ய தெரியுமா....:)) ஹைய்யோ நீங்க வேற நான் வேற ராமச்சந்திரன் வேற...நான் ரொம்ப சின்னப் பையங்க...என்னப் போய் அந்த பெரிசுன்னு நினைச்சிட்டீங்க போல
dubukudisciple - வாங்க உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இருந்தாலும் கண்டுபிடிச்சிட்டீங்க பாருங்க....அங்க நிக்கிறீங்க...இங்க சொல்லாம இருந்ததுக்கே என் வயச 30 40ன்னு ஏலம் விடறாங்க....இதுல நான் என்னோட இருபத்தி ஐந்தாம் பிறந்த நாளை சொல்லியிருந்தேன்னு வைச்சிக்கோங்க...அப்புறம்...சரி விடுங்க...
லலிதா - மிக்க நன்றி மேடம். இனிமே கமெண்ட் போட ஆரம்பிச்சிடுங்க.. வாழ்த்துக்கு மிக்க நன்றி.
ராமச்சந்திரன் - வாங்க திருப்தியா...???சாப்பாடு ஆச்சா...?? இங்க இனிமே தான். மணிப்பயலுக்கு பதிலடிச்சிருக்கேன். பார்த்துக்கோங்க...ஐடென்டிட்டி தெஃப்ட் பண்ணாதீங்கய்யா...:)))
Sridhar Venkat- வாங்க - மிக்க நன்றி. இனி வரும் பதிவில் முயற்சி செய்கிறேன்.
மணிப்பயல் - அண்ணே இப்போ தெளிஞ்சிருக்கும்ன்னு நினைக்கிறேன்....அந்த 40 வயசுப் பெருசு நான் இல்லை. நான் வேறு ராமச்சந்திரன் வேறு :))
நிவி - மிக்க நன்றி. இது மாதிரி வேண்டாம்ங்கிறீங்களா???
Shhhhhh - நீங்க தாங்க கரெக்ட்டு.அவங்க சும்மா நம்ம பெர்சனாலிட்டியப் பார்த்து புகை விடறாங்க....இப்போதாங்க சமிபமா கவார்டர் செஞ்சுரி அடிச்சிருக்கேன் :P
Sriram - அண்ணே வாங்கண்ணே...மிக்க நன்றியண்ணே வாழ்த்துக்கு..(ஆட்டோ கீட்டோ அனுப்பிராதீங்க...மெயில் போடறேன் :) ). ஒரே பாணியில டார்ட்டாய்ஸ் சுத்தினா அப்புறம் அதுவும் திகட்டி போர் அடிச்சிடும்..(உங்களுக்கும் எனக்கும்) அதான் நடுவுல சும்மா இந்த மாதிரியெல்லாம் ட்ரை பண்றேன். கண்டுக்காம...சும்மா வழக்கம் போல காறித் துப்பிடுங்க :))
Jeevan - இப்படியெல்லாம் கேக்கப்பிடாது சொல்லிட்டேன் :))
திரு - அந்தப் புத்தகம் படித்தது இல்லை படிக்கிறேன். பரிந்துரைக்கு மிக்க நன்றி.
DesiGirl- ஆகா எனக்கு பிடிச்ச டாபிக்..கூடிய சீக்கிரம் போடறேன்.
செந்தில் - மிக்க நன்றி. இந்து நமக்கு கொஞ்சம் புதுசு அடுத்த தரம் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்கிறேன்
Aani Pidunganum - வாங்க சார். மிக்க நன்றி ஹை. நீங்க சொன்னா சரியாத்தேன் இருக்கும்.... :)
சும்மாதான் சொன்னேன். ரொம்ப ரென்சனாவாதீங்க....
இலவசக்கொத்தனார்- இங்கயும் நோ டென்ச்னப்பு...நானும் சும்மாத்தேன் கிண்டுதேன் :))
Thala...naa ungalkku 40 vayasu aayidichaannu mattum thaan ketten... but manipayal adha unmai aakkittar.... manipayal has twisted the whole show..adhula kulir kaayara sugam irukku.. appa.... solli maalala.
Btw ungala thala nu solren.. unga thangamaniya akka nu vilikkiren... (sari andha matter ennachu... inemay eppadi vilikka?? Akkave oka vaa) enakku eppadi 40 vayasunu solreenga..?.. irukkum...oru velai.. unga arivumudirchukku 40 vayasukku irukkumo...ennavo ponga.. thala.. Su(jatha)tta Kadhaikku ivlo periya buidlup over nu thonudhu
Dubuks,
//இதுல நான் என்னோட இருபத்தி ஐந்தாம் பிறந்த நாளை சொல்லியிருந்தேன்னு வைச்சிக்கோங்க...//
Ethanai varushama indha statement sirikaama sonninganu sonna , ennakum vasadhiya irukum
//மதுரையம்பதி - ஏன் ரொம்ப ஓவர்ன்னு நினைக்கிறீங்கன்னு புரியலையே...?? நான் சொல்ல வந்தது என்னான்னா...அவரு சயன்ஸ் ஃபிக்க்ஷன்ல புகுந்து விளையாட்டாரு...அதனால் எது எழுதினாலும் அவரு வாடை அடிக்காம தவிர்கறது கொஞ்சம் கஷ்டம்ன்னு :)//
சும்மா ஒரு கலாய்த்தலுக்காகத்தான் சுஜாதாவை இழுப்பது ஒவர் என்றேன்....மத்தபடி, நீங்க சொன்ன மாதிரி அவரை தவிர்ப்பது கடினமே.
//எனக்கு புரியலை ஏன்னுன்னு? ஒரு வேளை சுஜாதா எழுத்தில் டுபுக்கு வாடை அடிக்கிதுன்னு சொல்லியிருந்தா ரொம்ம்ப்ப்ப்ப ஓவர் ஒத்துக்கிறேன்...ஆனா நான் என் எழுத்தில தான் அவரு வாடை அடிக்கிறதப் பத்தி சொல்றேன்? பிரியலையே??//
ada ennapppa maduraiyampathi namakku munnalaye vandhu ellathayum sollipudaraaru... same here, neenga adhai mention pannatti naanga vaadai adikkudhu nu solli iruppom, neengale mention pannittadhaala, vera ennatha solradhu adhan... hi hi, don't mind - UmaKrishna
OMG it haapend to me also for past 5 years when i see my mobile laptop wall clock and all places when i see the times it will like 11:11 01:01 02:02 12:34 11:12 everything like this ... it happend for me past five years day by day .. when i read your story i realy shoched and panic.. i change my mobile 10 times not for this reason but when every time i update my mobile this thing happens . but i feels that as my lucky mobile ,,, but i read your story i feel panic ... i dont know what to do .. ooooh shock see see the time when i type this suddenly i see my mobile the time shows that 01:02 ... i dont know what to say ,,,,
Post a Comment