நீ கல்யாணி தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...
என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்
நீங்க தான் காண்டிராக்ட்டா...காசியாத்திரை குடை சின்னதா இருக்கே...நல்ல பெருசா வாங்க வேண்டாமா...பட்டுப் பாயெல்லாம் நல்ல வாங்கியிருக்கேளா...காட்டுங்கோ பார்க்கட்டும்
ஏன்டா அந்தப் பையனோட ஏடாகூடமா பேசிண்டு இருந்தியா சித்திப்பாட்டி வந்து உம்பிள்ளை இந்த வயசுலயே பம்பாய் செக்ஸப் பத்தி பேசிண்டு இருக்கான்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டு போறா?
ம்ம்..அந்த குண்டத் தூக்கி உன் சித்திப்பாட்டி மண்டையில போடு பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு....இந்த வயசுல அந்தக் கிழத்துக்கு இதெல்லாம் தேவையா..ஓரமா உட்கார்ந்து ராம ராம சொல்லச் சொல்லு புண்யம் கிடைக்கும்
எத்தன தடவை சொன்னேன் இந்தப் புடவை வாங்காதேன்னு ...உன் கலர் கம்மியா காட்டறதுன்னு...அங்க பாரு எல்லாரும் எப்படி ஜம்முன்னு வந்திருக்கான்னு..அந்த பச்சைக் கலர் புடவை சூப்பரா இருக்கு இல்ல், இந்த மெருன் கூட ரொம்ப நல்லா இருக்கு....அந்த பர்பிள் அடிச்சிக்கவே முடியாது அம்சமா இருக்கு
போதும் போதும் புடவைய கிரிட்டிசைஸ் பண்றேன்னு எல்லாரையும் நைசா பார்த்து ரசிச்சது...புடவை தான் நீங்க சொன்னத வாங்கலையே தவிர உங்களுக்கு பிடிச்ச செருப்பு தான் போட்டுண்டு வந்திருக்கேன்
அட போடா ஒன்னும் தேற மாட்டேங்குது...போனவாரம் ஒரு குஜ்ஜூ கல்யாணத்துக்கு போயிருந்தேன்...புடவைய கட்டினா கூட மாராப்ப அந்தப் பக்கமா போட்டு என்ன ஸ்டைலு....இட்லி இட்லிதான் சப்பாத்தி சப்பாத்தி தான்..துக்டா துக்டாவா போட்டுக்கிட்டு பாட்டென்ன ஆட்டமென்ன பட்டயக் கிளப்பிருச்சில்ல..எல்லாரையும் கட்டிப்பிடிச்சி இல்ல வரவேற்கிறாங்க...இதமாதிரியா வணெக்கெம்ம்ம்ம்ம்ன்னு கையக் கூப்பிறாங்க..
மாமி உங்களுக்கு மடிசார் கட்டிவிடத் தெரியுமா...சித்த கல்யாணப் பொண்ணுக்கு கட்டிவிட்டுங்கோளேன்...யாரோ கட்டிவிட்டு துணியடைச்ச சோளக்கொல பொம்மை மாதிரி இருக்கா...
ஏன்னா அங்க ரூம்ல இருக்காளே அதான் என்னோட ஒன்னு விட்ட அத்தை
நினைச்சேன்...அடேயெங்கப்பா...உருளக்கிழங்கு போண்டாவ தின்னுட்டு....அங்க அடிச்ச கப்புக்கு உங்க அத்தை ஒன்னு விட்டிருக்கமாட்டாங்க ரெண்டு மூனு விட்டிருக்கனும்...என்னா நாத்தம்டா சாமி...மனுஷன் மூக்கு மசிரெல்லாம் கருகிப் போச்சுல்ல...
சீ...நான் என்ன சொல்றேன் நீங்க என்ன..பேசறீங்க அத்தை காதுல விழுந்திடப் போகுது.
என்ன...மாப்பிள்ள என்னைப் பத்தி ஏதோ சொல்றார் போல இருக்கே...
இல்ல...நான் இல்ல அத்தை உங்க பொண்ணு தான்...- இது தான் எங்க 'ஒன்னு' விட்ட அத்தை...'ஒன்னு' விட்ட அத்தைன்னு உங்களப் பத்தி மண்டபம் ஃபுல்லா நாற அடிக்கிறா..
மாப்பிள்ளை ரொம்ப தமாஷ் பேர்வழிபோல இருக்கே...இருக்கட்டும் இருக்கட்டும்
ஆமாமா இருகட்டும்...இருக்கட்டும்.அத்தை எதுக்கும் நீங்க கொஞ்சம் அடக்கி வாசிங்கோ....
ஏன்டா கிச்சு உன்னை எங்கெல்லாம் தேடறது....மாப்பிளை இந்த பிராண்டு செண்ட் தான் யூஸ் பண்ணுவாராம் ஓடிப் போய் ஸ்பென்சர்ல வாங்கிண்டு வந்திரு
அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...
இங்க மாப்பிள்ளைய பார்த்தீங்கல்ல...எல்லாம் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி தான் வைப்போம்... உங்க மூஞ்சிக்கு பன்னீர் பாட்டிலே ரொம்ப அதிகம்.
ஏம்பா வேஷ்டி கட்டிக்கோ...கட்டிக்கோன்னு படுத்தற நீ பாட்டுக்கு கட்டி விட்டுறுவ அவுந்தா அப்புறம் உன்னை நான் எங்க தேடறது? இதே மாதிரி படுத்தினியான்னா அப்புறம் ஒன்னு விட்ட அத்தைகிட்ட மாட்டிவிட்டுறுவேன்.
சார் அங்க மாப்பிள்ளை சொந்தக்கார ரூமுக்கு அனுப்பின காப்பில சர்கரையே இல்லையாம்...கொஞ்சம் பார்த்து சொல்லி அனுபுங்களேன்...
நம்ப மல்லிகா புள்ளை அமெரிக்கால இருக்கானாம் வரன் பார்த்திண்டு இருக்கா...ரொம்ப நல்ல பையன்..கை நிறைய சம்பளம்.அமெரிக்கால அவாத்து கொல்லைக்கதவ திறந்தா புஷ்ஷோடு ஆம் தெரியும்ன்னா பார்த்துக்கோங்கோளேன்...நம்ப வசுந்த்ரா ஜாதகத்தை தாங்கோ நானாச்சு முடிச்சுவைக்கிறேன்.
ஏன்டி பர்ஸ்ட் நைட்டு ஹோட்டல்லயாமே...ரொம்ப நன்னா டெக்கரேட் பண்ணுவாளாமே...எங்க காலத்துல எங்களுக்கெல்லாம் வீட்டு மாடியிலதான்...அதுவும் நெல்லு மூட்டைய ஓரமா வெச்சுட்டு பூ போட்டு வைச்சிருப்பா..அங்க தான் எல்லாமே ஹூம்....
விசாலம்...பொண்ணுக்கு எல்லாம் சொல்லிக்குடுத்திருக்கியோ...பதவிசா நடந்துபாளொன்னோ..
பாட்டி அதெல்லாம் உங்ககாலம்....நம்ம ராது சும்மா புகுந்து விளையாடிடுவா..ஏண்டி ராது அப்படிதானே..?
போடா அந்தப் பக்கம்...பொம்மனாட்டிகள் இடத்துல ஆம்பிளங்களுக்கு என்ன வேலை...
என்னடா மச்சான் கல்யாணத்துக்கு கவனிக்கவே மாடேங்கிற வாட்டர் பார்டி ஒன்னும் கிடையாதா...
டேய் மெதுவா பேசுடா சித்தப்பா காதுல விழுந்திடப் போகுது ராத்திரி மொட்டைமாடில பசங்களோடு ஏற்பாடு ஆகியிருகுடா..கலக்கிடுவோம்...வாங்கி வைச்சாச்சில்ல...
ஏன்டா உன் சித்தப்பா ரொம்ப ஜாலின்னு நினைச்சேன்..ஸ்ட்ரிக்ட்டா?
போடாங்க...அவரு கவுத்தினார்னா உனக்கு பாட்டில் தான் மிஞ்சும்...மடாக் குடியன்டா கட்டுப்படியாகாது..பெருசுங்களலாம் தனியா போகுதுங்க...லூஸுல விடுடா...உளறிக் கவுத்திறாத
ஏன்டி சித்ரா உன் புருஷன் உன்னையே சுத்தி சுத்தி வராறே என்ன சொக்குப் பொடி போட்டு வைச்சிருக்க...
சித்ரா என்ன சொக்குப் பொடி போட்டான்னு நான் சொல்லட்டுமா...&(*£&£&^&£^%&!^ !&"!^"^ &*£&%£$£^& £*"^! %£&£^%&$*$^ ^$!^"%!"&
இப்படித் தான் போன தரம் உஷா ஊட்டி டூருக்கு போன போது..&"*(*&"£(*(&£ $$"£^^!^"*&& ஏன்டி உஷா அந்தக் கதைய சொல்லேன்...
ஏன் எனக்கு உங்க கதை தெரியாதே....இவ டெய்லி &*&£&**!*" ^*&!&"*!"& %&^^&*!^"*& ^&&^!*
எல்லா ஆம்பிளங்களும் இப்படி தான் &£(£&£&$&^$&**!*&£&!&&"
எந்தக் காலத்துலடி இருக்க இப்போல்லாம் &*&**"&*£"& &£ ^$&& $*$£ £$$!££$" £&£&$&^$&**!*&
%^*&£^£&&£ பொண்ணுங்களுக்கு&&*&£ காலம்பற &&(*£"(*^£&
ஏன்டி கல்யணமான பொண்ணுங்க மாதிரியாடி பேசறீங்க...கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம..
ஏய் இவள யாருடி இங்க விட்டா...ஏய் நீ போய் உன் வயசு கல்யாணமாகத பொண்ணுங்களோடு போய் சைட் அடி போ இங்க எல்லாம் வராத....
ஏன்டி சுஜா அங்க அவாளுக்கெல்லாம் தலகாணி வந்திருக்கான்னு பாரு...இல்லைன்னா எடுத்துக் குடு..மசமசன்னு நிக்காத
ஏன் உன் சீமந்தப் புத்ரன எங்க...கூப்பிட்டு சொல்லவேண்டி தானே...
ஏன்டி ராகவ் நேத்திலேர்ந்து ஓடியாடி எம்புட்டு வேலை பண்ணினான்...இப்போ கூட ராதுவ கொண்டுவிடறதுக்கு கூடப் போயிருப்பான்..
ஆஹாஹா....ரொம்ப தேறிட்டமா...பாசத்துல மெகாசீரியல் அம்மாவையும் மிஞ்சிருவ...மண்டபத்து டெரெஸ்ல போய் பாரு உம்பிள்ளை சரக்கடிச்சுட்டு பிரெண்ட்சுகளோடு மிதந்துண்டு இருப்பான்...சே என்ன பொழப்புடா இது கிழங்களுக்கு தலைகாணியக் குடு போர்வையக் குடுன்னு...நானும் இனிமே பாட்டிலடிச்சிட்டு மட்டையாயிடப் போறேன்..
சத்தம் போட்டுத் தொலையாதடி..பாட்டி காதுல விழுந்திடப் போறது..
ஏன்டி ராது எல்லாம் நல்லபடியா நடந்துதுல்ல?...சந்தோஷமா இருந்தியா?
ம்ம்...என்னம்மா வெவஸ்தையே இல்லாம இதெல்லாம் கேட்டுண்டு...எம்பராஸ் பண்ணாத...
ஹேய் கல்யாணப் பொண்ணு வாம்மா கண்ணு..உன்னைத் தான் காலைலேர்ந்து தேடிக்கிட்டு இருக்கோம். மாட்னடி மவளே ..நீங்க போங்கம்மா நாங்க கேட்டுக்கிறோம். என்னாடி பையன் எப்படி..? தேறுவானா...?..கழுத்தக் காட்டு பார்ப்போம்..எங்கெல்லாம் என்ன பண்ணியிருக்கான்ன்னு பார்ப்போம்
ஏய் போங்கடி....உத படப் போறீங்க....
புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாம் பேக் பண்ணி தனித் தனியா டப்பால போட்டு இன்டிவிஜுவலா போட்டிருக்கோம். வழியில பஸ்ஸுலயே சாப்பிட வசதியா எல்லாத்துக்கும் ஸ்பூனும் போட்டிருக்கோம். வாட்டர் பாட்டிலும் இருக்கு. வசதியா இருக்கும்.
விசாலம் கண்ணு கலங்காத பொண்ண அனுப்பி வைக்கனும்...கடல் தாண்டி போறா, போற இடத்துல நன்னா இருக்கனும்..சிரிச்ச முகத்தோடு அனுப்பு...அதுவும் சின்னது நீ கண் கலங்கினா அப்புறம் அதுவும் கழுத்த கட்டிண்டு அழும்.
அழாத ராது...ப்ளைட் ஏறறதுக்கு நாங்க ஏர்போட்டுக்கு வருவோம்... என்னென்ன ஊருக்கு எடுத்துண்டு போகனும்ன்னு அப்புறம் வாக்கா சொல்லு அம்மா பேக் பண்ணி வைக்கிறேன் என்ன
இதுல அப்பளம் வைச்சிருக்கேன்...ராகவ் பிரெண்டு அங்க தான் எம்.எஸ் பண்றானாம் வந்து பார்த்துக்கிறேன்னு சொல்லியிருக்கானாம். அடிக்கடி ஃபோன் பண்ணு என்ன...யாராவது வந்து போறதான்னா சொல்லு எதாவது குடுத்துவிடறேன்....உடம்ப பார்த்துக்கோடி வேளா வேளைக்கு சாப்பிடு என்ன...
டேய் ...அந்த ப்ரீத்தி பின்னாடியே துப்பட்டாவ பிடிச்சிண்டு சுத்திண்டு இருக்காத ஒழுங்கா படி என்ன...சீகிரமே நீயும் அங்க வந்திரு...என்ன..
அம்மா இங்க இப்ப ஒரே குளிர்..நீ இங்க வந்துட்டு போனதுக்கு அப்புறம் சிண்டு உன்ன ரொம்ப தேடறான்...அடிக்கடி ஏங்கி ஏங்கி அழறான்.....ஜூன்ல நாம ராகவ் மாமா கல்யாணத்துக்கு போறோம்ன்னு சொல்லி சமாதானம் பண்ணி வைச்சிருக்கேன்..
நீ ராது தானே...ஏன்டி பார்த்து எம்புட்டு நாளாச்சு..நல்ல இளைச்சுட்டியேடி..ஏது ஒன்னோடு போறும்ன்னு நிப்பாட்டியா இந்தக் காலத்துல எல்லாரும் ரெண்டு பெத்துக்கறாளேடி...
என்னோடு வெள்ளைக்கல் ஜிமிக்கியப் பார்த்தேளா...மண்டபத்துக்கு கிளம்பும் போது இந்தப் பையில தான் போட்டுவைச்சேன்...சிண்டு தான் பைய நோண்டின்டு இருந்தது..கொஞ்சம் தேடிக் குடுங்களேன்
....
...
....
Wednesday, May 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
67 comments:
என்னங்க, இன்னிக்கு கல்யாண நாளா ?
//அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...//
//உங்க மூஞ்சிக்கு பன்னீர் பாட்டிலே ரொம்ப அதிகம்.//
நினைச்சு நினைச்சு சிரிக்க வச்சுட்டீங்க. எல்லா கல்யாணத்துலயும் ஒரு தடவையாவது காதுல விழற பொலம்பல் + சமாளிப்பு.
கலக்கல் தலைவா.....அம்பி கல்யாண சம்பாஷணைகள் அப்படியே கேட்டது போல இருக்கு...ஆமா, தி.ரா.ச் சாரும் அந்த பார்டிக்கு போனாரா?, இல்லையா?
மதுரையம்பதி..
கலக்கல் தலைவா.....அம்பி கல்யாண சம்பாஷணைகள் அப்படியே கேட்டது போல இருக்கு...ஆமா, தி.ரா.ச் சாரும் அந்த பார்டிக்கு போனாரா?, இல்லையா?
மதுரையம்பதி..
கலக்கல் தலைவா.....அம்பி கல்யாண சம்பாஷணைகள் அப்படியே கேட்டது போல இருக்கு...ஆமா, தி.ரா.ச் சாரும் அந்த பார்டிக்கு போனாரா?, இல்லையா?
மதுரையம்பதி..
கலக்கல் தலைவா.....அம்பி கல்யாண சம்பாஷணைகள் அப்படியே கேட்டது போல இருக்கு...ஆமா, தி.ரா.ச் சாரும் அந்த பார்டிக்கு போனாரா?, இல்லையா?
மதுரையம்பதி..
Arumaiyaana post.....Radio vachu record panneengala allathu unga ammani tta help kaetteengala?...
Thala.. many interesting dialogues of course with your Original Dubukku kind of Stylu.
Bombay Sex goes to the top.. excellent :: next comes "onnu" vitta athai..every incident was excellent to read. Mind blowing.. phenomenon. am getting a feeling as if I had attended a local marriage.."unga karpana sakthikku kandippa ennoda shottu.. eduthukunga thala.. "
Aana onnum mattum purila la.... 4 post kku 1 post la kandippa neenga gujju gujiliya pathi ezhudhama irukkardhilla..Unga thambi Ambi Phone pannirundhaar last week..neenga london la ella kalyanatha vida Gujju Kalyanthukku thaan adhiga importance kudupeengalam?
adhuvum correctaa andha kalynathukku mattum thangamani akkava vittutu thaniya poveengalaame.. edhukku thala?? Chappathi Chappathi thaan Rotti Rotti thaana nu check pannava?? Appadiye cycle gap la sondha kadhaya eduthu vidreengala?? yen avanga Vanakkathukku badhila #$@$# pannuvaanga nu thaana..
Thala konjam adangunga.. Thangamani akka tta Ivlo adi vaangiyum mudhugu puncture aana apparamum kooda neenga adangama aadareengenna ..Unmayiliye neenga "Romba Nallavaru thala".. Thangakka.. next time gujju kalyanamnaa veetla night thodappakkattaya readya vachurunga...Thodapathukku daily velai vekkara oray namma thala thaaan...
நடத்தும். அப்படியே அந்த சென்சார் பண்ணின டயலாக் எல்லாம் தனிமடலில் அனுப்பும். அதை நான் முன்னாடி படிச்ச ஸ்டைலில் இருக்கான்னு பாத்துடலாம். :)))
Sensational.. Hats of to u man..
Thania sirikiratha officela ellarum oru maathiri paaka arambichutaanga..
கலக்கல்!!!
LOL :) :) இதெல்லாம் பாத்தா, உங்க மெயின் பிஸினசே கல்யாணத்துக்கு போறது தான் போலிருக்கு... :D :D..
ஹாய் டுபுக்கு,
ஓய் எனக்கு ஒரு சந்தேகம், கோவிச்சுகாதேள், இந்த டயலாக்கெல்லம் எத்தனை கல்யாணத்துல போயி ஒட்டு கேட்டேள்?
இல்லை,, இதுக்காகவே கல்யாணத்துக்கு போற பழக்கம்லாம் உண்டோ? ஹி..ஹி..ஹி..ஹி..(கோவிச்சுக்க வேண்டாம், சும்ம தமாஷுக்குதான்)
ஹாய் டுபுக்கு,
கலக்கல்...சும்மா நச்சுனு இருக்கு. சும்மா சொல்லக் கூடாது, இது மாதிரியெல்லாம் எழுத நீங்களே இன்னொரு தடவை பிறந்து தான் வரனும்.. சூப்பர்ப்...ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்
:-))
//இ. கொ. வுக்கு அனுப்பும் போது அப்படியே எனக்கும் ஹிஹி....
டுபுக்கு,
அந்த £$$!££$ பகுதிகள் ஒரே கிளுகிளு! ரசித்துப்படித்தேன்!!
( ஏன்யா வயித்தெரிச்சலை கெளப்பறீரு? அதெல்லாம் என்னவா இருக்கும்னு மண்டை காயுது. காலம்போன காலத்துல கற்பனை குதிரைகூட ஓடமாட்டேங்குது! :( )
சூப்பரு.....
சென்சார் பண்ணாத பகுதிகளுக்கு தனி அழைப்பு வேணுமா என்ன? நானே என்னையும் அழைச்சிக்கறேன்..
அட்டகாசம் போங்க!! think tank ங்கரது ரொம்ப பொருத்தம்......
தம்பியோட கல்யாணம் அட்டென்ட் பண்ணாத ஃபீலிங்க்ஸ் தெரியுது. ஒரே ஃபீலிங்ஸ் ஆஃப் இந்தியாவா இருக்கே! :P
pattaiya kilapparadhu na enna nu ipo puriyudhu :-) ambi kalyanathukku poga mudiadha varuthathai unga wedding anniversaryum serthu flash back otikringla? ;-)
ama 'endi radhu paathu embuttu naalachu'- brahmin slangla embuttu unda?!
சென்சார் பண்ணாத பகுதிகளுக்கு தனி அழைப்பு வேணுமா என்ன? நானே என்னையும் அழைச்சிக்கறேன்..
Me too pls...
//உங்க அத்தை ஒன்னு விட்டிருக்கமாட்டாங்க ரெண்டு மூனு விட்டிருக்கனும்...// இதெல்லாம் ரொம்ப ஓவரப்பா! ஒரே சிரிப்புதான் போங்க. நல்ல நடை.
பகிர்ந்தமைக்கு நன்றி டுபுக்கு.
அண்ணா.. ஒரு கல்யாணத்துக்கு போய்ட்டு வந்த ஃபீலிங்ஸ்! என்ன சாப்பாடு தான் மிஸ்ஸிங்!
adada guruve!!
chancea illa!!! kalakiteenga.. ambi kalyanathula keta pathi dialogue iruku..
neenga varalenu enaku konjam varutham thaan..
naan ambikite sonnen neenga varalena naanum vara matennu..ana avaru kekala..serinu poitu vanthen
அடப்பாவிங்களா...ஸ்பென்சர் வரைக்கும் கிச்சு ஓடனுமா.....ஏன்டி உங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு தண்ணில ரெண்டு சொட்டு பன்னீர விட்டு லோக்கல் பாட்டில்ல அடைச்சு வைச்சு செண்டுன்னு ஏமாத்தினீங்களே அதெல்லாம் இப்போ இல்லையா...திருந்திட்டீங்களா...
Super nga na
beautiful!
HI Ram,
U R certainly not like the Indian cricket team, I would say you are at par with Australia in terms of Consistency (with your sattire). This post is like another world cup for australia, they came (you came back after a great post) they saw (you gave another great post) they conquered (you won the hearts of the readers).
I really dont know what to write, the previous 27 posts have covered everything what i wanted to write,
Sappattu dialogues are missing, every incident like panner perfume (are u that unlucky fellow), onnu vitta attai, Girlie talks, container belly Chittappa, Chinna Kudai for kasi yattirai etc - everything was simply superb.
Really made me to think of attending a marriage whenever i am in India Next.
This time around, I was reading the post from my cabin at office, once heard my laughing sound, my colleagues have come in and wanted to check if I am still sane, I have decided not to read the blog from office anymore.(probably that is the reason the comment is coming in all AAngilam)
Reply to your coments to my comment on the last post: A. I have already told you that nammallam nakkeran madiri, comment adikattan laayakku, creativity konjam kammi, nalla pesalam, ezhuda varadhu. B. You kept silent on the request post on Lollu of Simbhu.
rest in next. Endrum Anbudam
Sriram
ஏண்டி வத்சலா.... நம்ம தங்கமணி ஆம்படையான் அவ்ளோ நன்னா ப்லாக் எழுதரானாம். இப்ப கூட ரொம்ப நன்னா கல்யாணத்த பத்தி எழுதிருக்கானாம்.லண்டனே அல்லோலகப்பட்றதாம். தங்கமணிய விட்டு சுத்தி(யால) போட சொல்லனும்.
நல்ல பதிவு
முதலில் ஆரம்பிக்கும்போது 'நீ கல்யாணி தானே'. முடிக்கும்போது 'நீ ராது தானே'. தல சிம்ப்ளி ப்ரில்லியன்ட்.
தல கலக்கல் போங்க !!!:)))
'ஒன்னு விட்ட' அத்தைக்கு புது விளக்கம் இப்பதான் பாக்கறேன். அனுபவம்தான் பேசுதுன்னு நெனைக்கிறேன்.
என்ன ஆனிவர்ஸரியா இன்னைக்கி?
ஆக மொத்தம் உசிலை ஸ்டைல்ல சொல்லனும்னா-
பதிவுன்னா டுபுக்குதான். பேஷ், பேஷ்.
பிரமாதம் தலைவா.. பின்னிட்டீங்க. நான் இதுவரைக்கும் பிராமணர் வீட்டு கல்யாணம் எதுக்கும் போனதில்லை. அதனால அப்படியே ஒரு அய்யர் வீட்டு கல்யாணத்துல இருக்குற மாதிரியே இருந்துச்சு. குறிப்பா அந்த சென்ஸார் பண்ணப்பட்ட பகுதிகள்...ம்... ரகசியமா மெயில் அனுப்புங்களேன்.
Enna plaaan ungaluku.. eppadi puttu puttu vechuteengale...20 days la my sister wedding.. ennala attend panna mudiyala.. but unga blog padichutu andha "peelings" ellam poyeee pochu...hehehe..
anonymous - இல்லீங்கோவ் சமீபத்துல தான். ஆனா இது சொத்ததுல ரெண்டு கல்யாணம் ஒரே வாரத்துல. ஒன்னையும் அட்டண்ட் பண்ண முடியல...சொந்த பந்தங்களெல்லாம் அங்க ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரே ஃபீலிங்ஸா இருந்தது அதான்.
லெஷ்மி - அது !!! அந்த சமாளிப்பு சொன்னீங்கபாரு அதுக்கே உங்கள பாராட்டனும்.:P
மதுரையம்பதி - நன்றிங்க. அட நீங்க வேற தி.ரா.ச சார் தான் பார்ட்டிக்குப் போனார். நான் போக முடியலை :(
ஐந்து கமெண்ட் போட்டதுக்கு ஐந்து நன்றி சொல்லிக்கிறேன் :)
kalias 's' dasan - டேங்க்ஸ் எல்லாம் கூட்டத்தோடு கூட்டமா ஒட்டு கேட்டது தான்:)
Ramachandran - யோவ் பாராட்டுக்கெல்லம் ரொம்ப டேங்க்ஸ் ஆனா போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு போறீங்களே நியாயமா...யாரு நான் குஜ்ஜு கல்யாணத்துக்கு அடிக்கடி போறேனா...எனக்கு குஜராத் எந்தப் பக்கம் இருக்குன்னு கூட தெரியாது ஏன்யா இப்படி வம்படி பண்றீங்க...அம்பி சொன்னான்னா எதுக்கு சொல்வான்னு தெரியாதா அவன் தான் ரசகுல்லா பஞ்சாபி குதிரைன்னு அலையறான்...நான் நல்ல பையன்ங்க...
சொல்லமறந்துட்டேனே...என்னோட தங்கமணிகிட்டேந்து நல்லா வாங்கப்போறீங்க...தங்கமணியக்கா தங்கமணியக்கான்னு கூப்பிட்டீங்கல்ல...நல்ல வேணும் உங்களுக்கு
கொத்ஸ் - அதே ஸ்டையிலு தான்...எல்லாம் உங்களுக்குத் தெரியாததா.. :))
Analyzt - ரொம்ப டேங்கஸ் :)
பிரசன்னா - நன்றி ஹை
Ace - ஆமா கல்யாணத்துக்கு முன்னாடி அப்பிடித்தான்...அப்புறம் ஐந்து வருடங்களுக்குப் பிறகு இப்போ தான் சமீபத்துல ஒரு கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்
Sumathi - ஆமா கல்யாணத்துக்கு இதுக்குன்னே போயிடுவோம்ல...அதுவும் அந்த கல்யாணமான அக்காக்கள் வம்பளப்பு ரொம்பவே ஜாலி
நீங்க வேற நாங்க ஒட்டு கேக்கிறதுக்கே கூச்சப்படமாட்டோம் இதுல கோபப் படறதாவது :))
அந்த ரெண்டாவது கமெண்ட் நான் கோச்சிக்கப்போறேனேன்னு போட்ட கமெண்ட்தானெ :P
நாகை சிவா - ஹை ஆசை தோசை, பர்ஸ்ட் அக்க்வுண்ட் ட்ரான்ஸ்பர் அப்புறம் தான் டயலாக்ஸ் :)
இளவஞ்சி - என்னைய்யா கற்பனை குதிரை ஓடமாட்டேங்குதா ...வயசாயிடிச்சா.. என்னம்மோ போங்க :))
இராமநாதன் - வாங்க சென்சார் பண்ணாத பகுதிகளைத் தான் நானே போட்டுட்டேனே...ஓ நீங்க சென்சார் பண்ணினத சொல்றீங்களா...அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் ப்ளீஸ் :)
Radha Sriram - ஹைய்யோ ரொம்ப டேங்க்ஸ்ங்க
கீதா சாம்பசிவம் - ஆமாங்க நீங்க தான் கரெக்டா பிடிச்சீங்க...அதேதான் ஒரே ஃபீலிங்க்ஸ்
Porkodi - ஆமா ஒரே ஃபீலிங்கஸ். ஓ உண்டே திருநெல்வேலி பக்கமெல்லாம் சொல்வாங்களே இம்புட்டு நேரமா எங்கடா போயிருந்தன்னு
நிலா - நன்றி. பதில் அனுப்பியிருக்கிறேன் :)
தேவ் | Dev- அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் ப்ளீஸ் :)
மாசிலா- மிக்க நன்றி மாசிலா :)
காயத்ரி - தங்கச்சி எனக்கு கல்யாணத்துக்கு போக முடியாத ஃபீலிங்க்ஸ்ல சாப்பாட பத்தி தோணவே இல்லை :)
dubukudisciple - எனக்கும் உங்களை சந்திக்க முடியாததுல ரொம்ப வருத்தம் தான். அடுத்த தரம் பெங்களூர் கண்டிப்பா உண்டு மீட் பண்ணிடுவோம் :)
பாம்பே செக்ஸ் & ஒன்னு விட்ட அத்தை சூப்பர் ROTFL...மொத்தத்துல கலக்கல் தல...ரொம்பவே பீல் பண்ணிட்டீங்க போல :-)
//அப்படியே அந்த சென்சார் பண்ணின டயலாக் எல்லாம் தனிமடலில் அனுப்பும்//
எனக்கு ஒன்னு.....:-)
News from Prasanna - நன்றி ஹை :)
Monu - டேங்கஸ் மாமே
Sriram - உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. ரொம்ப குளிரடிக்கிறீங்க...But your comments are very encouraging. Many thanks for taking paing to type them. I am glad that you enjoy my posts.
Regarding starting a blog -
அதெல்லாம் இல்லீங்க...ஒரு ரெண்டு போஸ்ட் போட்டீங்கன்னா சரியாயிடும். :)
சிம்பு எனக்கும் அதே எரிச்சல் தான் ஆனா நீங்க சொன்ன அந்த ப்ரோக்ராம் (நல்லவேளை) பார்க்கலை.போன பதிவுலயே ரிப்ளை பண்ணனும்ன்னு நினைச்சேன் விட்டுப்போச்சு மன்னிச்சுக்கோங்க
dagulmama - வாங்க மாமா ..ரொம்ப டேங்க்ஸ்
ஜொள்ளுப்பாண்டி - வாங்க பாண்டி நன்றி ஹை
நாகு (Nagu)- ஹைய்யோ கற்பனைங்க வமபுல மாட்டாதீங்க :))
இன்னிக்கில்லை சமீபத்துல. ரொம்ப டேங்க்ஸ்
ஆழியூரான் -இதுவரைக்கும் போனது இல்லையா..ஆச்சரியமா இருக்குங்க..அடுத்த கல்யாணத்துக்கு..கூப்பிட்டா போச்சு :) மெயில்ல தானே அனுப்பிருவோம்...அதுக்கு முன்னாடி அந்த அக்கவுண்ட் ட்ரான்ஸ்பர் மேட்டர கொஞ்சம் கவனிங்க :))
Sriram (2) - ஹைய்யோ சகோதரி கல்யாணத்துக்கு போகலியா உங்க ஃபீலிங்க்ஸ் என்னால புரிஞ்சிக்க முடியுது. நீங்கள் இந்தப் பதிவை ரசித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி
All this time I thought you visit Kalayana Mandapam only when you need a new pair of shoes. I am surprised that you even listen to dialouges!!!
நல்லா ரசிச்சு சிரிச்சேங்க.
இந்த "ஒண்ணு விட்ட அத்தை", "பாம்பே செக்ஸ்" மேட்டர் ரொம்ப கலக்கல் :))
nadaswara music, poo vasanai ellam adikka arambichuduthu inda post padikumbodu
great post!!oru kalyanathukku poittu vandha effect.ungalin nagaichuvai unnaruvu paaratirkuriathu.
nivi.
excellent. 2001 la enga kalyaantathukkapram endha kalyaanathukkum pogalai.idhai padichu innum yekkamaa ayiduchu. definite-a en chithappa paiyan mariage ku poganum. mmm... superb post Dubuks. serious-a thangamani dhane andha girlie talks laam sonnaanga? ok ok.. UmaKrishna (en blogger id ku ennamo ayiduchu, i can't login)
last post la anniversary ku wish panninadhum naan dhan - Umakrishna
Oru Kalyanathukku poituvantha feel yanakku;) humours writing as usual dubukku!!
"பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு" hahaha...
my comment for last post is missing?
Take care:)
கல்யாணத்துக்கு போனா பந்திக்கெல்லாம் போகமாட்டியளோ?... சாப்பாட்டு பந்தில வர்ற டயலாக் ஒன்னு கூட இல்லியே ஓய்.
கலக்கல் பதிவு... முடிவு சூப்பராயிருந்தது...
அனானி - ஆமாங்க பராக்கு பார்க்காத போது இதத் தான் கேக்கிறது :)
கதிரவன் - ஹீ ஹி நன்றிங்கோவ்..
பாவை - வீட்டுல ரெண்டு கல்யாணம் ஒரே வாரத்துல இங்கேர்ந்து ரொம்ப ஃபீலிங்கா இருந்தது அதான்
நிவி - ரொம்ப டேங்க்ஸ் :))
உமா கிருஷ்ணா - ம்ம்ம்ம் ஒரே மலரும் நினைவுகள்ன்னு சொல்லுங்க...ஆமாங்க இங்க வந்த அப்புறம் நன்ங்களும் அதே கேஸ் தான் ஒரு ஃபங்க்ஷனுக்கும் போறது இல்லை. உங்கள் வாழ்த்துக்கு ரொம்ப நன்றி
ஜீவன் - ரொம்ப நன்றி. போன போஸ்டுக்கு கமெண்ட் போட்டது இருக்குமே? மாடரேஷன் கூட செய்யறதில்லையே நான்?
செந்தில் - அட நீங்க வேற இந்த போஸ்ட் போடும் போது காய்ஞ்சு போய் இருந்தேங்க அதான் சாப்பாடு பத்தி போடல...
kalakkals thaan ponga! enna payithiyama aakiteega! officela ellorum oru mathiri paakaranga.
appidiye, engaathu kalyanam mathiri nalla t.veli thamizh manam (except for athai of course -hilarious!)
"embuttu and imbuttu" sounds so much like my paati - typical t.veli tambram.
Anna orkut tenkasi $ courtallam community la unga link kuduthukkalaama?
:D nostalgic... thanks bossu
Adadadaaaa :):) edhuvume solla mudiala ....unga kitta innum pala pala thiramaigal irukkum polarke !!!!
யப்பா ஏதோ ஒரு பதிவுல நீங்க சினிமா எடுக்க ஆசைபடுறதா சொல்லியிருந்தீங்க,,
உங்க ஜொள்ளித் திரிந்த காலம், கொஞ்சம் நான் கெட்டு.. இப்ப கல்யாணம் இதெல்லம் படிச்சு பார்த்தா, உங்களால ஏதாவது ஒரு கதையகூட ஜனரஞ்சகமான திரைக்கதையா தரமுடியும்னு தோனுது..
'கல்யாணம்' - இந்த பதிவு எழுதப்பட்ட விதம் ஒரு மணிரத்தினம் படம் பார்த எஃபெக்ட் கொடுத்தாலும் ரசிக்கும் படி இருந்தது..
அதுவும் அந்த சைக்ளிக் ஃபினிஷிங்கு சூப்ப்ர்..
இந்த கமேண்ட நீங்க பார்பீங்களானு தெரியாது.. இருந்தாலும் பாரட்டுக்கள்!!!!
Hilarious :) The next time I attend a wedding, I guess, I will laugh out loud :)
Well written :)
hi,
super postnga, oruthar sonna maatheri officeila sirpa romba kashtapatu adakkunien....
Mathan
ஏன்டா அந்தப் பையனோட ஏடாகூடமா பேசிண்டு இருந்தியா சித்திப்பாட்டி வந்து உம்பிள்ளை இந்த வயசுலயே பம்பாய் செக்ஸப் பத்தி பேசிண்டு இருக்கான்னு குண்டத் தூக்கிப் போட்டுட்டு போறா?
ம்ம்..அந்த குண்டத் தூக்கி உன் சித்திப்பாட்டி மண்டையில போடு பாம்பே சென்செக்ஸும் ஒரு விதமான செக்ஸுன்னு நினைக்கிறா பாரு....இந்த வயசுல அந்தக் கிழத்துக்கு இதெல்லாம் தேவையா..ஓரமா உட்கார்ந்து ராம ராம சொல்லச் சொல்லு புண்யம் கிடைக்கும்
HAIYOOOOOOOO....MUDILA SAMIIIII... UMMA POST LAM THANIA UKANTHU PADIKKA KUDATHU VOIII......(LOSU'NU NINAIKARANGAPA....) THANIYA SIRIRCHU SIRICHU VAIRU PUN AIDUCHU... DR. FEES ANUPI VAINGA...
படித்தேன். atmosphere-ரை நன்றாகக் கொண்டு வந்திருக்கிறீர்கள். சுருளிராஜன், வடிவேலு டைப் நகைச்சுவையைத் தவிர்த்தால் நல்லது... என் பதிவில் இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு “டயலாக்” என்று ஒரு குட்டி சீரிஸ் போடப்போகிறேன். பாருங்கள். நகைச்சுவை எழுதுவது எப்படி என்ரு ஒரு கட்டுரை வெகு நாட்களுக்கு முன்பு எழுதினதையும் போட நினைத்துள்ளேன்.
பத்தாயிரம் வாலா சரவெடி-ங்ணா....
அன்புடன்,
ஒவ்வாக்காசு.
thaarumaaru...
aiyyo sami ennala mudiyala, sirichi sirichu...vai,vairey valikkuthu.
mani ippo 3:35 am. Umma blog ellathaiyum padichuttu thaan thoonga poratha iruuken.....
Hillarious....super..
இதெல்லாம் பாத்தா, உங்க மெயின் பிஸினசே கல்யாணத்துக்கு போறது தான் போலிருக்கு... :D :D..
அருமை...அட்டகாசம் !!
i just remember one of the sujatha story.. beginning and ending would be the same.. nice try
remba arumai sir
super'''''[;;;;;;]
Post a Comment