Thursday, January 04, 2007

புத்தாண்டு

புத்தாண்டு

சின்ன வயதிலெல்லாம் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் மாதிரி எங்கள் வீட்டில் தமிழ் புத்தாண்டு என்றால் சர்கரைப் பொங்கல், ஆங்கில் புத்தாண்டு என்றால் பால் பாயாசம் சாப்பாட்டில் இருக்கும். ஆங்கில புத்தாண்டு அன்றைக்கு ராத்திரி ஆட்டம் போடலாம். ஆட்டம் என்றால் குட்டைப் பாவாடை குமரிகளோடு கும்மாளம்லாம் இல்லை. ஹூம்... ஊரில் அதுக்கெல்லாம் ஏது வசதி. வீட்டிலிருந்து தப்பிக்க அன்றைக்கு தெரு பசங்களெல்லோரும் சேர்ந்து பஜனை மடத்தில் ஸ்பெஷல் பஜனை ஏற்பாடு செய்துவிடுவோம். (பஜனை என்றால் உண்மையான பஜனை).
மார்கழி மாதமாய் இருக்குமாதலால் பஜனை ஏற்பாடுக்கு ரொம்ப மல்லாட வேண்டியது இல்லை சுலபமாய் முடியும். ரகு அண்ணாவை நச்சரித்தால் அவர்கள் வீட்டிலிருந்து உம்மாச்சிக்கு பிரசாதமும் எங்களுக்கு கடையிலிருந்து அல்வாவும் வாங்கித் தருவார். ராத்திரி பத்து மணிக்கு ஆரம்பிக்கும் பஜனை, பதினோரு மணி வரைக்கும் அல்வா தின்ன தெம்பில் களை கட்டும். அப்புறம் நைசாக பஜனை மட பிரகாரத்த்தில் ஓரமாய் உட்கார்ந்து கொண்டு "ராக்கம்மா கையத்தட்டு" என்று இன்னிசைப்பாடல் பஜனை நடைபெறும். அங்கேயும் நான் தான் கஞ்சிரா வாசிப்பேன். "ராக்கம்மா கையத்தட்டா...? பஜனைமடத்துல பாடற பாட்டாட இது..பல்லத் தட்டு"ன்னு ஏதாவது ஒரு பெருசு வந்து பல்லவி பாடி விட்டு போகும். கரெக்டாக பன்னிரெண்டு மணிக்கு கோவில் மணி முழங்க...கோவிந்தாவோடு ஹேப்பி நியூ இயரும் சொல்லிவிட்டு வந்துவிடுவோம்.

இப்படி போய்க்கொண்டிருந்த புது வருட கொண்டாட்டங்களில் புதுவருட தீர்மானங்களை அறிமுகப் படுத்தியவர் சீனாதானா மாமா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). அறுபது வயதுக்கு மேல். அடிக்கடி மாமாவுடன் அரட்டை அடிப்பதற்கு வீட்டுக்கு வருவார்.என் வாயையும் அடிக்கடி கிண்டுவார். நன்றாக இங்கிலிஷ் பேசுவாராகையால் மாமா என்னை அவரிடன் இங்கிலீஷில் பேசச் சொல்லுவார். பசங்கள் கூட்டமாய் அரட்டை அடித்துக்கொண்டிருந்தால் அவரும் வந்து கலந்துகொள்வார். எதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாலும் கவலையே பட மாட்டார் - ஒரு உப கதை சொல்லி அவர் வழியில் பேச்சை திருப்பிவிடுவார். பசங்களுக்கு கொஞ்ச நாட்களுக்கு அப்புறம் கடுப்பாக ஆரம்பித்தது. ஓட்ட ஆரம்பித்தார்கள்.

"நான் ஸ்கூல் படிக்கிறச்சே விஸ்வனாதன் விஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான். அவன நாங்களெல்லாம் விசு விசுன்னு கூப்பிடுவோம்.." என்று சீனாதானா மாமா ஆரம்பிப்பார்.

"மாமா இவன் ஸ்கூல் படிக்கிறச்சே குஸ்வனாதன் குஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான் அவன இவங்களெல்லாம்...."- ஒரு வானரம் பதிலுக்கு ஓட்டும்.

"இந்தக் கால பிள்ளேளுக்கு பெரியவா சின்னவான்னு ஒரு மட்டு மரியாதையே இல்லை.." என்று கடுப்பாகிவிடுவார். அதுக்கப்புறம் இங்கிலிஷில் எதிர் கேள்விகள் கேட்க ஆரம்பித்துவிடுவார். "என்விரான்மெண்டல்....ஸ்பஷ்டமா சொல்லு பார்ப்போம். எம்ஜியார் மெண்டல்ன்னு கும்பகோணம் வெத்தலை போட்ட மாதிரி கொதப்பிண்டு இருக்க...நாளைக்கு இன்டர்வியூக்கு போய் இப்படி தத்து பித்துன்னு உளருங்கோ...உடனே வேலை கொடுத்து உங்கள உட்காத்திருவான்... ஸ்போக்கன் இங்லீஷ் கத்துக்கோங்கடான்னா கிண்டல் அடிச்சுண்டு இருக்கேளே" என்று அதுக்கப்புறம் சீரியஸாகிவிடுவார். சீனாதான மாமா படிப்பு ஸ்போகன் இங்க்லீஷ் என்று ஆரம்பித்துவிட்டாலே பசங்களெல்லாம் உடனே சந்தைக்குப் போனும் ஆத்தா வையும்ன்னு கம்பி நீட்டிவிடுவார்கள்.மாமாவுக்கு பிரெண்டு என்பதால் நான் அவரிடம் வைத்துக்கொள்ளவே மாட்டேன்.

இப்பேற்பட்ட சீனாதானா மாமா ஒருதரம் நியூஇயர் ராத்திரி அரட்டையில் சிறப்பு விருந்தினாராக கலந்துகொண்டார். "வாட் இஸ் யுவர் நியு இயர் ரெசொலியூஷன்?" என்று தங்கப்பதக்கம் சிவாஜி மாதிரி மிரட்டலாக கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார். பசங்களுக்கு ரெசொலியூஷனுக்கு அர்த்தமே தெரியாது. ஒரு வானரம் "ராமா கில்ட் ராவணா" என்று தனக்குத் தெரிந்த விவிதபாரதியை ஆரம்பித்தது. "இந்தியா இஸ் மை கண்ட்ரி ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்.." என்று இன்னொரு வானரம் ஸ்கூல் பிரேயரில் சொல்லுவதை ஒப்பிக்க ஆரம்பித்தது. "புதுவருஷத்துக்கு எதுக்குடா அழப்பிதழ் எல்லாம்?" என்று வானரம் என் முதுகைப் பிராண்ட..."மூதேவி அது இன்விடேஷன்...இது அதில்லை...ரெசோலியூஷன் - எங்களுக்கு இதெல்லாம் அடுத்த வருஷ செல்பஸில் தான் கவராகிறது மாமா" என்று நான் சொல்ல...சீனாதானா மாமா வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டார். அதுக்கப்புறம் அவர் க்ளாஸ் எடுத்ததில் தான் எங்களுக்கு புத்தாண்டு தீர்மானங்கள் பற்றியே தெரிய ஆரம்பித்தது. அந்த வருஷம் எல்லோரும் ஆளுக்கு ஒரு தீர்மாணம் எடுத்துக் கொண்டு கழுத்தில் போர்ட்டு மாட்டாத குறையாக தம்பட்டம் அடித்துக்கொண்டோம். மார்ச் வருவதற்குள் "டேய் நான் என்ன ரெசோலியூஷன் எடுத்துண்டேன்?" என்று மற்ற வானரங்களிடம் கேட்டு அடிக்கடி நியாபகப் படுத்தவேண்டியதாயிற்று.

அதற்கப்புறம் வருடா வருடம் நானும் எதாவது தீர்மானம் எடுத்துக்கொள்வேன். யாராவது டைரி கொடுத்தால் அதில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொள்வேன். சிலவற்றை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வரும். "அடுத்த ஒலிம்பிக்ஸில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்வேன்" என்று ஒருதரம் தீர்மானம். அந்த வருஷமே ஒலிம்பிக்ஸ் வருகிறது என்று தெரிந்தவுடன் 'அடுத்த'வை அதற்கடுத்த என்று திருத்திவிட்டேன். காலையில் எழுந்து அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் வரை நாலு பேருடன் ஓட்டப் பயிற்சி எடுத்து இரண்டு நாள் வேகமாய் ஓடினேன். மூன்றாம் நாள் நெஞ்சாங்கூட்டில் வலியெடுத்து...இனிமே என்னால முடியாதுப்பா நீங்களெல்லாம் ஒலிம்பிக்ஸ் போங்கோ நான் ஏஷியன் கேம்ஸோடு நிப்பாட்டிக்கிறேன் என்று ஜகா வாங்கி, உடம்புல பிடிக்காம விளையாடலாம் என்று அந்த தீர்மானத்தை அப்புறம் செஸ்க்கு மாற்றிவிட்டேன். அந்த வருஷத்துக்கப்புறம் இந்த மாதிரி ஒலிம்பிக்ஸ் ரேஞ்சுக்கு தீர்மானம் எதுவும் எடுக்கவில்லை. ஆனால் எடுத்த தீர்மானம் எதையும் நிறைவேற்றியதாக நினைவில் இல்லை. அதுக்கப்புறம் தீர்மானம் எடுப்பதாக இல்லை என்று ஒரு தீர்மானம் எடுத்தேன் அதுதான் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது..

நீங்க எப்படி?

கொஞ்சம் லேட் தான் இருந்தாலும்..

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

48 comments:

Boston Bala said...

:))

புத்தாண்டு வாழ்த்துகள்

கைப்புள்ள said...

//தெரிந்தவுடன் 'அடுத்த'வை அதற்கடுத்த என்று திருத்திவிட்டேன். காலையில் எழுந்து அம்பாசமுத்திரத்திலிருந்து பிரம்மதேசம் வரை நாலு பேருடன் ஓட்டப் பயிற்சி எடுத்து இரண்டு நாள் வேகமாய் ஓடினேன். மூன்றாம் நாள் நெஞ்சாங்கூட்டில் வலியெடுத்து...இனிமே என்னால முடியாதுப்பா நீங்களெல்லாம் ஒலிம்பிக்ஸ் போங்கோ நான் ஏஷியன் கேம்ஸோடு நிப்பாட்டிக்கிறேன் என்று ஜகா வாங்கி, உடம்புல பிடிக்காம விளையாடலாம் என்று அந்த தீர்மானத்தை அப்புறம் செஸ்க்கு மாற்றிவிட்டேன். //

:))ஏஷியன் கேம்ஸ் அதுக்கடுத்து வந்த வருஷங்கள்ல எஸ் ஏ எஃப் கேம்ஸ், நேஷனல் கேம்ஸ்னு போயிடலை இல்ல?
:)

//ஆனால் எடுத்த தீர்மானம் எதையும் நிறைவேற்றியதாக நினைவில் இல்லை. அதுக்கப்புறம் தீர்மானம் எடுப்பதாக இல்லை என்று ஒரு தீர்மானம் எடுத்தேன் அதுதான் இன்றளவும் ஓடிக்கொண்டிருக்கிறது..//

இப்பல்லாம் ரெசொல்யூஷனைப் பத்தியோசிக்கிறதே இல்ல. அது பாட்டுக்கு அது இருக்கட்டும் நாம பாட்டுக்கு நாம இருந்துக்குவோம்னு இருந்துக்கறது.
:)

ஜி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் டுபுக்ஸ்...

ஏன் ரொம்ப நாளா இந்தப் பக்கமே வர மாட்டேங்குறீங்க...

Syam said...

உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் குருவே....அப்பாலிக்கா வந்து படிக்கறேன் :-)

Karthikeyan said...

:))

dubukudisciple said...

குருவே!!!
லேட வந்து வாழ்த்து சொன்னாலும் வயிறு வெடிச்சு சிரிக்கிற அளவுக்கு செய்துட்டீங்க!!!!
இந்த வருடம் இன்னும் நிறைய பதிவுகளை எதிர்ப்பார்க்கிறொம்!!!
நானும் உங்களை மாதிரிதான்!!! தீர்மானம் எடுப்பதில்லைனு தீர்மானிச்சாச்சு!!!

B o o said...

கலக்கல் போஸ்ட்!

<< "மாமா இவன் ஸ்கூல் படிக்கிறச்சே குஸ்வனாதன் குஸ்வநாதன்னு ஒரு பிரண்டு இருந்தான் அவன இவங்களெல்லாம்...."- ஒரு வானரம் பதிலுக்கு ஓட்டும். <<

இந்த லைன படிச்சிட்டு 10 நிமிஷம் சிரிச்சேன். A very Happy New year to you too!

Paavai said...

Siruppu thaanga mudiyala. Unga veetla eppdi samalikranga - indha sense of humor ai... environment pronunciation.. resolutionku artham ... attagasam ...

Happy New Year greetings to you and loved ones .. keep writing

Sumathi. said...

ஹாய் டுபுக்கு,

//"எடுத்த தீர்மானம் எதையும் நிறைவேற்றியதாக நினைவில் இல்லை. அதுக்கப்புறம் தீர்மானம் எடுப்பதாக இல்லை என்று ஒரு தீர்மானம் எடுத்தேன்"//

ஆமாம், இதுவே ஒரு நல்ல தீர்மானம் தானே... கலக்கல் போங்க உங்க தீர்மானமும்......புத்தாண்டும்..!

ஆனா நீங்க இந்த வருஷத்திலிருந்து மாசத்துக்கு இல்ல இல்ல வாரத்துக்கு ஒரு பதிவாவது போடறதுன்னு ஒரு புது தீர்மானம் எடுத்துருக்கறதா நான் கேள்வி பட்டேனே... அது உண்மைதானே...(ஹி ஹி ஹி ஹி )

சேதுக்கரசி said...

சுவையான எழுத்து நடை உங்களுது :-)

Jeevan said...

"புதுவருஷத்துக்கு எதுக்குடா அழப்பிதழ் எல்லாம்?" என்று வானரம் என் முதுகைப் பிராண்ட..."மூதேவி அது இன்விடேஷன்...இது அதில்லை...ரெசோலியூஷன்" Ithu super comadingo :))))

Your childhood NY celebrations are very nice. naan resolution edukkarthoda sari.... ungala pola;)

Anonymous said...

Iam ur new fan, Just came across ur blog n now ...ooooops.....'ve gone mad of it!!!!!!!!!!!!!!!!.U r damn good man !!!!!!!!!!!!!!!!

Anonymous said...

dubuks, kalakkitteenga...happy new year to your family from us.

aparnaa said...

//ஒரு வானரம் "ராமா கில்ட் ராவணா" என்று தனக்குத் தெரிந்த விவிதபாரதியை ஆரம்பித்தது. "இந்தியா இஸ் மை கண்ட்ரி ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அன்ட் சிஸ்டர்ஸ்.." என்று இன்னொரு வானரம் ஸ்கூல் பிரேயரில் சொல்லுவதை ஒப்பிக்க ஆரம்பித்தது. "புதுவருஷத்துக்கு எதுக்குடா அழப்பிதழ் எல்லாம்?" என்று வானரம் என் முதுகைப் பிராண்ட..."மூதேவி அது இன்விடேஷன்...இது அதில்லை...ரெசோலியூஷன் - எங்களுக்கு இதெல்லாம் அடுத்த வருஷ செல்பஸில் தான் கவராகிறது மாமா" என்று நான் சொல்ல...//

எப்போ சிரிச்சு முடிப்பேன்னு தெரியல!!! உங்க அடுத்த post வரவரைக்கும் இதை நினைச்சு நினைச்சு (காயப்போட்டு) சிரிப்பொம்!!

Risha said...

chancae illa...your blog is simply awesome.A first-timer here..romba naaal kazhichu I m laughing my heart out!!Keep your good work going :-)

Anonymous said...

> அந்த தீர்மானத்தை அப்புறம் செஸ்க்கு மாற்றிவிட்டேன்

- yen da indha madhiri ellam ezhudhare? oru nimisham aaaadi poitten.

Anonymous said...

u know who the prev comment is from. due to a long hiatus from blogging, forgot the password. :)

Deekshanya said...

too good! ULTRA humourous.

Anonymous said...

:))
full swing la erangitinga pola!
Wish u a very happy new year :)

Vidya said...

Good one. Next year syllabus-la dhan varadhu. That's actually true. Its always next year illaiaya?

Happy New Year again!

Anonymous said...

Just came across while bloghopping.. great work... kiu

இராமச்சந்திரன் said...

"குஸ்வநாதன்...குஸ்வநாதன்..." - குசும்பு ஆனாலும் ரொம்பதான் ஜாஸ்தி...

நான் ரெஸல்யூஷன்-லாம் எடுத்தது கெடையாது. எனக்கு தெரிஞ்ச ரெஸல்யூஷன்லாம் கம்ப்யூட்டர் மானிட்டர் லெவல்லதான்.

New year wishes to you and your family.

Jeevan said...

Hi Friend

Jeevannin Eniya Pongal nalvazthukkal:) Have a nice time with your Family and kids!!

Karthikeyan said...

பொங்கல் வாழ்த்துக்கள்

அபி அப்பா said...

திரு.டுபுக்கு,அறிமுகப்படுத்திகறேன்.நான் அபிஅப்பா.நிற்க.(போதும் சரி உட்கார்க) தீர்மானம் புது வருஷத்தில் என்பது ரொம்ப முக்கியம்.நான் எப்போதுமே எடுத்துவிடுவேன், முக்கியமாக எனக்கு பாதகம் வராமலே. 2006ல் டிச 31ல் இரவு மெழுகுவத்தி வெளிச்சத்தில் 11.30க்கு நான்,அபிஅம்மா,அபி.....(கொசுவத்தி.....)
அபிஅப்பா: இந்த முறை நாம குடும்ப சகிதமா தீர்மானம் எடுத்துக்களாமா?

அபிஅம்மா:எடுத்துக்கலாமே.ஆனா ஒரு கண்டிஷன்.யாராவது ஒருத்தர் தீர்மானிக்கறத மத்தவங்க ஒத்துக்கனும்.ok அப்பதான் நாம ரொம்ப ஒத்துமையா இருக்கோம்னு அர்த்தம்.
(வாம்மா வா.இததான் எதிர்பாத்தேன்)

அபி:நாந்தா தீர்மானம் சொல்லுவேன்.(முந்திரி கொட்ட முந்திரி கொட்ட)

அபி அம்மா:அப்பாதான மூத்தவங்க அபி, அப்பா சொல்லட்டும்.(எவ்ளவு நல்லவங்க..கொஞ்சம் இருங்க கண்ன தொடச்சிகறேன்)

அபிஅப்பா:இன்னும் 3 செகண்டு பாக்கி.மெழுகுவதிய அனைகிறேன்.

இப்போ கும்மிருட்டு

மூவரும்: happyyyyy newww yearrr 2006

அபி: என்னப்பா சத்தம்

அபிஅப்பா: ஒன்னுமில்லைடா இரு லைட் போடுறேன்.

அபிஅப்பா:தீர்மானம் சொல்றேன் கவனமா கேட்டுகோங்க.நாம கண்டிப்பா follow பன்னனும். ok
1.இனிமேலாவது அபிஅம்மா நல்லா சமைக்க கத்துக்கனும்.
2.இந்த வருஷம் அபிஅம்மா அபிஅப்பாவ திட்டவேகூடாது.கண்டிப்பா தொட்டதுக்கெல்லாம் கை ஒங்ககூடாது.
3.ஒரு வேலை(ஒரு நாளைக்கு ஒரு வேலை)நமக்குள் சண்டை வரும்போது அபிகுட்டி உசுப்பேத்திவுடக்கூடாது.(அப்பா, எந்திரிங்கப்பா..இந்த டைமாவது ஜெயிங்கப்பா...சே என்ன குடும்பம்டா சாமி)

இப்படியாக பல தீர்மானங்கள்.

இந்த முறை டிச 31, 11.30 க்கு போன் செய்து "என்ன தீர்மானம் போட்டுக்களமா?" அதர்க்கு அபிஅம்மா "என்னங்க,டுபுக்கு சாரோட underconstruction web site பாத்தீங்களா?. நான்.."நா என்ன சொல்றேன், னீ என்ன சொல்ற?..."இல்லீங்க, நா சரியாதான் பேசுறேன். அதுல டுபுக்கு சார் மீரா ஜாஸ்மினை பத்தி சொல்லியிருப்பார்" "என்ன சத்தத்தயே கானும்..நா பேசறது காதுல ஏறுதா.." "ஏறுது ஏறுது" என்றபடி கிளாசை கீழ் வைத்தேன். அபிஅம்மா தொடர்ந்து.. "மீரா ஜாஸ்மினை பத்தி சொல்லியிருப்பார் அங்கேயிர்றுந்து scrool பன்னி பாருங்க"...அப்புடி என்ன இருக்கும்??? ஆஹா மணி 12:00 Happppppiii newww yeear 2007 கிளிங் கிளிங் கிளிங் "ஆங்..சொல்லும்மா..இன்னும் லைன்ல தான் இருக்கியா?" "என்னய தங்கமனியாயாயா மாத்தாதிங்க" குரலில் ஆவி பூந்த மாதிரி." "சரி new yearக்கு பாப்பாவுக்கும் உனக்கும் என்ன வாங்கிக்க போறீங்க" மெதுவாத்தான் கேட்டேன். பதில் வந்தது " பாட்டா...அதே தங்கமனி மாடல்". எனக்கு ஒன்னியுமே புரியலை.போன வருஷ என் தீர்மானத்துல ஏதோ மிஸ்டேக் இருக்கும் போல..இல்லாட்டி அபிஅம்மா இத்தன கோவப்படுற டைப் இல்ல.

அபி அப்பா said...

நான் இப்பதான் பார்த்தேன் அந்த கொடுமையை.(www.dubukkuworld.com)என்ன கொடுமை டுபுக்கரே இது.

அபி அப்பா said...

என் முதல் பின்னூட்டத்தில் 2வது வரியில் 2005 என்பதர்க்கு பதில் 2006 என்று பதிவு செய்துவிட்டேன். திருத்தி வாசிக்கவும்.

Visithra said...

inniya ponggal vazhtukal ;)

Anonymous said...

dubukku.. i think you have greatly been inspired by sujatha...ur narration style is outstanding...
congratz

Anonymous said...

வணக்கம் டுபுக்கு..
ரொம்ப நாள் கழிச்சு எழுதுகிறேன்.
முதலில் உங்களுக்கும் உங்கள் குடும்பதினர்க்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
செம காமடி பதிவு போங்க !!...
சிரிச்சு சிரிச்சு வயிறு வெடித்தது......
இன்னும் இது போல் காமெடியான பதிவுகளை எழுதவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...

இப்படிக்கு,
டெல்லியிலிருந்து..ராமகிருஷ்ணன்.

Anonymous said...

டுபுக்கணா...கலக்கறீங்கணா...
You have got a terrific sense of humour...

Dubukku said...

Boston Bala - ஹீ ஹீ உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்க்ள்....(இதுவும் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி)

Kaipullai - இல்ல இல்ல ஏஷியன் கேம்ஸோடு நிப்பாட்டிட்டேன்...(யாரு..சிங்கமுல்ல). இப்போல்லாம் உங்க பாலிஸி தான் இங்கயும்...அதுபாட்டுக்கு இருக்கட்டும் .:))

ஜி- உங்களுக்கும் வாழ்த்துக்கள் தல...மன்னிச்சிகோங்க...அதான் இப்ப வந்துட்டோம்ல...

Syam - உங்களுக்கும் வாழ்த்துக்கள்...யோவ் எப்பாலிக்கா? அப்பிடியே எஸ் ஸா?? :))


Karthik - :))


dubukudisciple - ஐயையோ...நீங்க தான் எனக்கு குற்ற உணர்வே குடுக்கறீங்க...இப்படி பெயர வேற வெச்சிக்கிடீங்க...உங்களுக்காகவாவது நிறைய எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி.


Boo -ரொம்ப டேங்க்ஸ்.. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Dubukku said...

Paavai - Danks and wish you the same.அட நீங்க வேற...நான் ரொம்ப நல்ல பையன்ங்க...இங்க வீட்டுல தான் சேட்டை....

Sumathi -// வாரத்துக்கு ஒரு பதிவாவது போடறதுன்னு ஒரு புது தீர்மானம் எடுத்துருக்கறதா நான் கேள்வி பட்டேனே//மிக்க நன்றி - இப்ப புரிஞ்சிருக்குமே..அதெல்லாம் வதந்தின்னு :))

சேதுக்கரசி - ரொம்ப டேங்கஸ்ங்க...ஆமா என்ன நீங்க எழுத மாட்டேங்கிறீங்க??

Jeevan - danks Jeevan. Hope you had a gala time. :)

Dubukku said...

Anonymous - haiyooo romba danks. You made my day.Fanlam periya vaarthainga...seri ethukkum peyara solli irukalamla..nick nameaavathu pottukonga :))

Sundaresan - danks same to you. Enna romba naala inga ungkala aale kanom??

Aparnaa - உண்மைலேயே ஊர்ல அந்த லெவல்ல தாங்க இருந்தோம்... :))

Dubukku said...

Risha - danks for dropping by and the compliments. good work - appideengreenga? he he will try :)

anonymous - yeah yeah I know who you are. டேய் கொஞ்சம் ட்ரை பண்ணுடா நல்ல மாதிரி படிக்க முடியும். :) :P

Deekshanya - danks...:))

PK - vanga thala. Romba naalachu ungala parthu (dont worry same for me for you site...appidiye feed readerla padichutu apeet aahidaren sorry )

Siva - :))) nice one...danks and wish you the same.

Dubukku said...

Uma - unga aasirvathathu romba danks. Enga paatiyum itha maathiri thaan ethavathu varusham poora ithe maathiri aasirvatham pannuvanga (kochukatheenga pls summa nakkal :P)

Vidya - adi paavi...athu joke...:P


Kiu - danks adikadi vaanga :)

Ramachandran - aamanga konjam thaan jaasthi. computer hmm Level kattureenga :)

Jeevan - new yearla aarmbichu pongal vaazhthu kooda solliteenga romba danks. Wish you the same (atleast adutha pongalukku vechukonga ennoda greetingsa )

Dubukku said...

karthi - vaazhthu kooda solliteenga romba danks. Wish you the same (atleast adutha pongalukku vechukonga ennoda greetingsa )

Abi Appa - ஆஹா குடும்பத்தோடு தீர்மானம் எடுத்துக்கறீங்க..கலக்குறீங்க போங்க. சாரிங்க...என் சோகக் கதய சொல்லி உங்க வீட்டு தங்கமணியையும் கிளப்பி விட்டுட்டேன்னு நினைக்கிறேன். உங்க கதை நல்லா இருந்துதுங்க படிக்கிறதுக்கு.அடுத்தவன் சங்கடம் நமக்கு எப்பவுமே சந்தோஷம் தானே :)) )
ரொம்ப நன்றி இங்க பகிர்ந்துகிட்டதுக்கு.(


Visithra - hai hows you. danks and wish you the same (bad of me to have replied so late sorry)

veerakumar - ரொம்ப நன்றிங்க. நமபளையும் பத்தி நாலுவரி எழுதியிருக்கீங்க உங்க ப்ளாக்ல...இன்னோருதரம் நன்றி.


ராமகிருஷ்ணன் - வாங்க ராமகிருஷ்ணன்..எப்படி இருக்கீங்க...ரொம்ப நன்றிங்க உங்க பாராட்டுக்கு. டெல்லில குளிர் எப்படி இருக்கு...வீட்டுல எல்லாரும் சவுக்கியம் என்று நம்புகிறேன்.

Anonymous said...

I came across this dubukku blogspot thro a fried, and on my visit, am thoroughly impressed by the writings. the narration, satire and subtle humour made me laugh. The highlight, i think, is the ability of dubukku's writings which made me identify with the writings very easily.
Keep up the Good Work.

Anonymous said...

Hi dubukku nanbareh

Asusual super post, enna nanbareh oru comment poturunaen couple of days, varaveh ellai. Appala naanum oru pudhu blog aramichurukaen ellam unga blog paarthuthaan, oru inspiration. DO give visit to my blog and give your honoroble comments.

http://aanipidunganum.blogspot.com

Prakash

Anonymous said...

thank you dubuku we enjoyed your new year resolution!!

Porkodi (பொற்கொடி) said...

நல்லா வந்துது புது வருடம்... எப்படி தான் வீட்டுல உங்கள மேய் சீச்சீ சமாளிக்கறாங்களோ ;-)

Ms Congeniality said...

hee hee hee!!Sema comedy :-)
Naan resolution laam eduthadhe illa..exam padika time table podradhe follow pannadhilla :-p

Vidya said...

Yeai, you did not understand what I meant. :( I did understand your joke. But then, even resolutions work that way. You take one and then say, next year paathukkalam.. Adhukku dhan appadi sonnen.

Try to read my comment now. Hope you get what I meant now. GRRRRRR Engayo, kaikku ettadha thoorathula irukkara dhairiyam vera enna... :>

Anonymous said...

kalakitta da.. i am here after a long time. enjoyed the post.
-Shan

Dubukku said...

Vicha - danks for dropping by and your compliments on my posts. danks to your friend too for recommending too (referral feelam kidaiyathu :P) keep visiting.

Prakash - I dont have comment moderation so not sure why your comment didn't come.Unga blogla போன வாரம் வந்து அட்டென்டன்ஸ் போட்டேன்...இனிமே அடிக்கடி வரேன்...:)

Uma Krishna - haiyooo kochukatheenga madam...summa damasu damasu...

anonymous - you are most welcome. appidiye peyaraiyum sollunga pls. :)

Dubukku said...

பொற்கொடி - அட என்னங்க இப்படி சொல்லிட்டீங்க..நான் ரொம்ப நல்ல பையன்ங்க...

Ms.Congeniality- danks. ingaiyum athe case thaan exam timetablena ennanu keppen...athellam padikka pullaingalukku

Vidya - hey hey summa ottinen...
//kaikku ettadha thoorathula irukkara dhairiyam vera enna// - athe athe...illana nee summa vitiruviya... :))

Shan - ahaaa first commentaa...danks da...adikadi vandhu poda...:)

Usha said...

hehehe...romba nalaikaprama this is a treat!

paapa said...

HI,Friend,
good job keep it up.latha

Post a Comment

Related Posts