Sunday, December 03, 2006

என் இனிய...

சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விட்டேன். இது ஒன்றும் புதிதில்லை என்றாலும் மன்னிக்கவும். அக்டோபர் மாதத்திலிருந்து ஆபிஸ், வீடு, வருத்தப் படாத வாலிபர் சங்கம் என்று எனக்கு திரும்பிய பககமெல்லாம் ஆப்பு தான். இன்னும் வேலைப்பளுவும் மன அழுத்தமும் குறைந்த பாடில்லை. இன்னும் தொடரும் என்று நினைக்கிறேன். அதுவரை இங்கு வழக்கம் போல் வந்து போக முடியாது, அட்டென்டன்ஸ் குறைவாகத் தான் இருக்கும் ஒன்றும் குறைந்துவிடாது! மெயிலிலும் இங்கே பின்னூட்டத்திலும் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அட்லாஸ் வாலிபர் மாதம் செம ஊத்தல். இதற்கு மேலும் சொதப்ப முடியாத படி சொதப்பிவிட்டேன் என்று நினைக்கிறேன். இதில் ஒரு சயின்ஸ் பிக்க்ஷன் கதை வேறு உள்ளடக்கம். மைக்கும், கேட்பதற்கு நாலு பேரும் கிடைத்துவிட்டால் தியாகராஜ பாகவதர் எங்க தாத்தா தான்னு குஷி பிறப்பது போல இன்னும் என்னவெல்லாமோ எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த்தேன். நேரம் ஓடிவிட்டது, கொஞ்சம் லேட்டாக போய் வாய்பளித்தமைக்கு நன்றி சொல்லப் போனால் "ரொம்ப ஊத்தாத, கிளம்பு காத்து வரட்டும்" என்று லாகினைப் பறித்து விட்டார்கள் :) வாய்ப்புக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றியும், சொதப்பியதற்க்கு மன்னிப்பும்.(அதாவது மன்னிப்பு நான் கேட்டுக்கிறேன்)

நடுவில் என்னடா இயந்திரமயமான வாழ்க்கை என்று வெறுத்துவிட்டது. என்னத்தையோ தேடி ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆபிஸ், வீடு, வாசல், பணம்,மீரா ஜாஸ்மின் ,பிட்ஸா, பொங்கல், பினாயில் - அடப் போங்கடா எல்லாம் மாயை போதும் என்றாகிவிட்டது. ஏதோ சயன்ஸ் சானலில் இன்னும் டிரில்லியன் ஒளி ஆண்டிற்கு அப்பால் இன்னொரு பால்வெளி (மில்கி வே) இருக்கிறது என்று காட்டினார்கள். இந்த அண்ட வெளியில் நாமெல்லாம் தூசு. வாழப் போவதாக நினைத்துக் கொண்டிருக்கும் நூறு ஆண்டுகளில் எத்தனை தேறப் போகிறதோ...இதற்கு இந்த நாய் படாத பாடு...பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு. அப்புறம் சரவணா பவனில் மிக்ஸட் வெஜிடபள் பராட்டா சாப்பிட்டுவிட்டு, ஸ்வீட் பீடா போட்டுக் கொண்டே பல்லைக் குத்திக் கொண்டிருந்த போது "ஹகூனா மடாடா" (Hakuna Matata) தத்துவம் சித்தித்தது.

இடைப்பட்ட காலத்தில் சில நல்ல படங்களையும் வழக்கம் போல் ஏகப்பட்ட குப்பைகளையும் பார்த்து வைத்தேன். பாலாஜி எஸ் ராஜன் தயவில் "ப்ளாக்" (Black) ஹிந்தி படம் பார்த்தேன். ஹாலிவுடில் சிலபேர்கள் எடுப்பது மாதிரி நம்மாட்கள் நுண்ணிய உணர்வுகளை மையப் படுத்தி எடுக்கவே மாட்டார்களா என்ற ஏக்கத்தை இந்தப் படம் சிறிது போக்கியிருக்கிறது. "ப்ளாக்" பிழியப் பிழிய அழ வைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது.அட்லீஸ்ட் தொண்டையையாவது அடைக்கும் நான் கியாரண்டி. ராணி முகர்ஜி நடிப்பை ஏற்கனவே பார்த்திருக்கிறேன். அமிதாப் பச்சன் நடிப்பை இப்போது தான் பார்க்கிறேன் (அவர் படமெல்லாம் ரொம்ப பார்த்ததில்லை). இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். படத்தில் வரும் குடும்பம் தான் கொஞ்சம் செயற்கைத் தனமாக இருக்கிறது ஆனால் இந்த இருவரின் நடிப்புக்காக அதையெல்லாம் மன்னித்துவிடலாம்.


வீட்டில் வேறு கட்டுமான வேலை ஆரம்பித்தாகிவிட்டது. டீ.வி கம்ப்யூட்டர் எல்லாவற்றையும் குப்பயோடு குப்பையாக கட்டி வைத்திருக்கிறோம். கன்னிகா வந்ததிலிருந்து இப்போதான் தங்கவேட்டை பார்க்க ஆரம்பித்தேன்...தக தகவென்று இருக்கிறார்..ஹூம் வீட்டு வேலை முடியும் வரையில் அவர் தொடர்ந்து தங்கவேட்டையில் இருக்கவேண்டும் என்று முருகனுக்கு இரண்டு ரூபாய் முடிந்து வைத்திருக்கிறேன்.

வீட்டைக் கட்டிப் பார் கல்யாணம் செஞ்சு பார்ன்னு பழமொழியெல்லாம் பிரெஞ்சு காண்டிராக்டரிடம் சொல்லிப் பார்த்தேன், பத்து பைசா கூட குறைக்கமாட்டேன் என்று கறாராக சொல்லி விட்டார். இந்த பழமொழியெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டும் ஏன் கல்யாணம் கட்டிக்கிட்டன்னு நக்கல் வேறு. செங்கல் லோடு இறக்குகிற அன்னிக்கு அவனை தங்கமணி கிட்ட போட்டுக்கொடுக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். வீட்டை இடிக்க ஆரம்பித்தைலிருந்து வீடு முழுக்க ஒரே தூசி. எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது.

எல்லா சாமான்களையும் ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டிவிட்டு இன்னொரு பெட்ரூமில் ஒண்டிக் குடித்தனம் நடத்திக் கொண்டு இருக்கிறோம். இதற்கு நடுவில் டுபுக்கு ஊரை விட்டு ஓடிப் போய் உத்த்மனாய் வாழ ஆரம்பித்துவிட்டார் என்று யாரும் கதை கட்டிவிட்டுவிடக் கூடாதே என்று ஒரு அட்டெண்டன்ஸ் போட்டுக்கிறேன்.

கொஞ்ச நாள் வெளிஉலக தொடர்பே இல்லாமல் ப்ளாக் உலகை திரும்ப வந்து பார்த்தால் தமிழ் வலையுலகில் நிறைய மாற்றங்கள். போண்டாவும், பூரிக் கிழங்குமாய் களை கட்டிக்கொண்டிருந்த வலைபதிவர் சந்திப்புகளை போண்டா வேண்டா சங்கம்...கருத்தரங்கம் எல்லாம் நடத்தி கட்சி,சங்கமெல்லாம் உருவாகிவிடுவார்கள் போல இருக்கிறது. அடப்பாவிகளா...அப்போ ஓசி போண்டாவெல்லாம் அவ்வளவு தானா? இது வரைக்கும் ஒரு ஓசி போண்டா கூட தேத்தலையே..கருத்தரங்க தலைப்புகளையெல்லாம் வேறு பார்த்தால் பயமாய் இருக்கிறது.மக்கள் திருந்திருவாங்க போல இருக்கே...

எல்லாம் சரி..நடுவில் நான் ஒரு படத்தில்(சினிமா அல்ல) வேறு நடித்திருக்கிறேன் என்று சொன்னால் நம்புவீர்களா? அடுத்த பதிவில்...விபரமாய் எழுதுகிறேன்.

39 comments:

துளசி கோபால் said...

நேத்து ஒரு கிறிஸ்மஸ் பரேடில் உங்களை நினைச்சாராம் கோபால்.
ஒரு அலங்கார வண்டியில் dubuqee ன்னு இருந்துச்சாம்:-))))

Anonymous said...

டுபுக்கு!

எங்க கல்லூரி நண்பரை நாங்க அப்படித்தான் அழைப்போம். என்னடா இவரு கேவலமா இந்த பேர வச்சிருக்காரேன்னு முதலில் தோனிச்சி. அப்புறமாத்தான் அக்கம்பக்க பதிவாளர்கள் சொன்னாங்க, இவரு ப்ளாக்ல பெரிய ஆளுன்னு. அப்புறம், அப்படியே உங்க profileஅ பாத்தா 'அட நம்மூரு'.

அதுக்கப்புறம் முடிவு பண்ணிட்டேன். இனி இந்த ஆள கொடய வேண்டியதுதான்னு. நானும் புதுசா ப்ளாக் ஆரம்பிக்கிறேன் தல. வந்து அர்ச்சன பண்ணிட்டுப் போங்க.

Syam said...

வந்துடார்யா...வந்துட்டாரு...

//பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு.//

காரியத்துல கரெக்டாதான் இருக்கீங்க...எத்தன நாளைக்குதான் நம்ம பிகருங்கள தேடிட்டு இருக்கறது...ஒரு ரெண்டு வருசத்துக்கு பிகருங்க வந்து உங்கள பார்க்கனும்னு நல்ல ஐடியாதான்..எப்போனு சொல்லுங்க நான் தான் முதல் சீடன் :-)

இலவசக்கொத்தனார் said...

சரி, இப்போ என்ன? எழுத கைவசம் மேட்டர் எதுவும் இல்லை. அதானே? அதுக்கு என்ன இப்படி எல்லாம் பில்டப்பூ?

நாங்க எல்லாம் மேட்டர் இல்லாம சும்மா கட் பேஸ்ட் பண்ணி வாழ்கையை ஓட்டலை? அந்த மாதிரி எதனாச்சும் பண்ணு நைனா.

இலவசக்கொத்தனார் said...

ஆமாம் நம்ம பக்கம் டுபுக்கு டிசைப்பிள் (dubukku disciple) அப்படின்னு ஒரு ஆள் வந்து இங்கிலிபீஸ் பின்னூட்டம் எல்லாம் போட்டு இருக்காரே? என்ன நடக்குது?

அவராண்ட நான் என்ன சொன்னேன் தெரியுமா? இதுதான் -
//ஆஹா! டுபுக்கு மடம் ஆரம்பிக்கிற அளவு போயாச்சா! சரிதான், இனிமே அந்த ஆள் கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும் போல இருக்கே.//

இங்க வந்தா நீரும் என்னமோ சாமியாரா போறது பத்தி பேசிக்கிட்டு இருக்கீரே. எனக்கென்னமோ சரியாப் படலை, அம்புட்டுதான்.

Boston Bala said...

இணையத்தின் சின்னக் கலைவாணரே... ; )

வருக : )

Anonymous said...

ஹாய் டுபுக்கு,
நான் நினைச்சேன், என் தொல்லை தாங்க முடியாமத்தான் நீங்க கானாம போயிட்டீங்களோன்னு? அப்புறமா தோனிச்சு, "அட பொது வாழ்க்கையில இது எல்லாம் சகஜமப்பான்னு," ஆனாலும் திடீர்ர்ன்னு ஒரு சந்தேகம் வரவர உங்களுக்கு விசிறிங்க வேறா அதிகமாயிட்டு வராங்களா,அதனால இந்த பிளாகயே வித்துடலாம்னு முடிவு பன்னிட்டீங்களோ?னு,
அப்பறமா பாத்தா ஒரு நாள் திடீருன்னு
புதுசா..பெரிசா.. "dubukku world.com" னு
ஆஹா,,, உக்காந்து யோசிச்சேன்....ஆஹா நீங்க தானா இது?

சரி எப்படி இது எல்லாம்? ஒன்னுமே புரியலயே...!(அந்த Mrs.dubukku superooooooo super appu)

சரி எது எப்படியோ திரும்பி வந்ததுல சந்தோஷம் தான்..

Unknown said...

ஆகா டுபுக்கு மன்னிப்பு.... இதெல்லாம் கேட்டு எங்களைச் சென்டிமென்ட் செங்கல் வைச்சு அடிச்சி காயப் படுத்தி நன்றின்னு மாவுக் கட்டு போட்டு டோட்டல் டேமேஜ் பண்ண சதி திட்டமாத் தீட்டிறீரு..

நாங்க ஒத்துக்க மாட்டோம்... மறுபடியும் கூப்பிடுவோம் வந்து நின்னு நிதானமா ஆப்பை எல்லாம் அள்ளிகிட்டுப் போகணும்ய்யா ஓ.கே வா

HEARTY WELCOME BACK TO BLOG

மு.கார்த்திகேயன் said...

டுபுக்கு, காணாமல் போனது சரி தான்..
ஆனால் கறுப்புகலர் கட்டம் போட்ட என்று காணாமல் போனவர் போஸ்டரை பார்த்தேன்..ஒரு வேளை அம்பி பண்ண காரியமோ

Welcome Back dubukku :-))

aruna said...

Looks like its a vacation time for the blog world. Most ppl were in break too ! Welcome back!!

unga veettu camcorder-la nadichannu mattum solleeratheenga. makkal tension aayiduvaanga..

SLN said...

Irukkeengalaa.

Veettu vela mudichittu, enna / engala, pudhu (refurbished) manai pugu vizhaavukku koopidunga. Kooptu, kandippaa bonda (vaavathu) kodunga

Cheers
SLN

Anonymous said...

வாங்க டுபுக்கு,

என்னடா ரொம்ப நாளா ஆளக் காணுமே‍ன்னு பாத்தேன்..அப்பப்போ வந்து அட்டென்டன்ஸ் போட்டுட்டு போங்க.

//பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு//

ஒரு வ.வா.சங்கத்து ஆளு நீங்க இப்டி யோசிக்கலாமா ?

Anonymous said...

வாங்க டுபுக்கு,

என்னடா ரொம்ப நாளா ஆளக் காணுமே‍ன்னு பாத்தேன்..அப்பப்போ வந்து அட்டென்டன்ஸ் போட்டுட்டு போங்க.

//பேசாமல் ஒரு ரெண்டு வருஷத்துக்கு சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா என்று பலமான யோசனை வேறு//

ஒரு வ.வா.சங்கத்து ஆளு நீங்க இப்டி யோசிக்கலாமா ?

நாமக்கல் சிபி said...

பொறுமையா எல்லா வேலையும் முடிச்சிட்டு வாங்க!!! உங்களுக்காக நாங்க எல்லாம் காத்திருக்கோம்...

ஆதிபகவன் said...

வாங்க டுபுக்கு.....ஆமா, படத்தில யாரும் உங்கள் வச்சி காமெடி கீமடி பண்ணலியே!!

Deekshanya said...

So happy to see you back.
1) Congrats on your new home
2) Thoosiku naduvay post potta nall manam vaalga
3) Padathula vera nadichingala - ethuna french ,german movie nu solli esc aaga koodathu padathoda peru, details elam tharanum. Nanga ,blog ulagam elarum antha padatha nichyam parthutu, unga nadipa pathi oru discussion nadathuvom...
and again welcome back!! Regards to thangamani and kids!!
-Deeksh

இராமச்சந்திரன் said...

நீங்க நடிச்சதுதான...பாத்துட்டேனே...திருட்டு வி.சி.டி வந்திருச்சில்ல...(மருதநாயகம் எடுத்த வரைக்கும் இருக்கு...வேணுமா ?)

aparnaa said...

welcome back ANNA!!
என்னடா ரொம்ம நாளா கானோம்மேன்னு பார்த்தேன்..
when u get time try to visit my blog page ;-)

Vidya said...

Good to see there some thing new here after that Orkut post. Looks like you have visited my space. Thanks for the same. R is doing fine. Hope makkal at home are fine at your end too.

Great to read something from you after a long break!

take care!

Vidya said...

And hey Congrats man! I missed that in my previous comment! Have fun and enjoy that process. Its something so awesome and I know you would come with some 20 odd posts on the very subtle nuances of building a house and am waiting for all that! CONGRATS once again!

கைப்புள்ள said...

//வாய்ப்புக் கொடுத்த சங்கத்தினருக்கு நன்றியும், சொதப்பியதற்க்கு மன்னிப்பும்.(அதாவது மன்னிப்பு நான் கேட்டுக்கிறேன்)//

இதுக்காகத் தாங்க நீங்க சித்தாளு வேலை பாத்துக்கிட்டு இருந்த அந்த ரெண்டு மாசமும், ஒவ்வொரு நாளும் வந்து எட்டிப் பாத்து பல்பு வாங்கிக்கிட்டுப் போனது. எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்களோ?
:))))

ப்ளாக் நானும் ஒன்றிப் போய் பார்த்த படம். பாத்துட்டு ரொம்ப நாளைக்கு ஒரே ஃபீலிங்ஸ் தான் போங்க. ராணி முகர்ஜி, அமிதாப் ரெண்டு பேரோட ரேஞ்சையும் வெளியுலகுக்குக் காட்டுன படம்.

//கன்னிகா வந்ததிலிருந்து//
ஏதேது விட்டா அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆக்கிடுவீங்க போலிருக்கே? அக்காவோட பேரு Kanika(கனிக்கா), நம்ம பாஸ்டன் பாலாவோட ஜூனியர். (ஒரு வேளை தங்கவேட்டைக்காக இப்பப் பேரை மாத்திட்டாங்களா என்னன்னு தெரியாது)
:)

சரி, வூட்டைக் கட்டறதுக்கு முன்னாடி ஓசியில வீடு கட்ட இலவசக் கொத்தனார் கையில் ஒரு கொட்டேஷன் வாங்கிருக்கலாம்ல?

Swamy Srinivasan aka Kittu Mama said...

wecome back dubukks :)

Divya said...

\"எல்லா இடத்திலும் மண் பரவியிருக்கிறது. சாப்பாடு மண்ணு மாதிரி இருக்குன்னு தங்கமணியிடம் தெகிரியமா சொல்ல முடிகிறது\"

Good to see the same humorous Dubukku back to the Blog world!!

Anonymous said...

thangal thirumbi vanthathil santhosam...niraya ezhutha vazhthukal

Jeevan said...

dam damaal dumeal dumaal... enna puriyalaiya kaanama ponna dubukku thriumbi vathirukkarula athan intha pattasuellam vedichi varaverkerean!

"சாமியாராக போய்விட்டு திரும்ப வரலாமா" samiyarra ponna thirumbi atheaya edathuku varamudiyathu, 123 count panna thaan poganum, naraiya pearu anga thaan poiettu irukkanga Lol!!

Black is a good movie, i havent seen, should see it soon. Take care Friend:)

Ms Congeniality said...

vanakkam anna :-) Onga thangamani ya kettadha sollunga. Pics paathen archive la..such a sweet family..suthipotukonga :-)

நெல்லைக் கிறுக்கன் said...

என்னடா அண்ணாச்சிய ரொம்ப நாளாக் காணுமே, உடம்பு கிடம்பு சரியில்லையோ அப்படின்னு பதறிப் போய் பாத்தா, அய்யா கனிகாவ டிவில ரசிச்சுக்கிட்டு இருந்தீகளாக்கும்...

நானும் கனிகா ரசிகர் தான் வே. கொஞ்சம் நம்மூரு சாடை இருக்குல்ல அந்த பிள்ளகிட்ட.... வரலாறு படம் பாத்தீரா?

Dubukku said...

துளசி - ஐய்யோ அப்பிடியா...தன்யனானேன்...ரொம்ப நன்றி சொன்னேன்னு சொல்லுங்க.


chinnathambi- இங்க வீட்டுல வேற மாதிரி சொல்றாங்க...நான் சீரியஸா நடிச்சாலே காமெடியா இருக்குமாம்...அட நீங்க வேற எதாவது கிளப்பிவிடாதீங்க :)

ஜி - பெரிய ஆளெல்லாம் இல்லீங்க...சின்னப் பையன் தான். வாங்க வாங்க..கலக்குங்க

syam - சுஷ்ஷ்ஷ்ஷ்..corporate missionலாம்...அடக்கி வாசிக்கனும். தெளிவா இருக்கீங்க...நீங்க தான் முதல் சீடன்.

இலவசக்கொத்தனார்- ஆனாலும் என்மேல இவ்வளவு காண்டா...உங்களுக்கு?...ஏங்க ஏங்க... நானும் டுபுக்கு சிசைப்பிள் மேடம் கிட்ட சொன்னேன்...வேற பெயர் எதாவது வைங்க மேடம்ன்னு...கேக்கலை...ஏதோ அவங பேர சொல்லி ரெண்டு வேளை சப்பாத்தி தேத்திக்கிட்டு இருக்கேன் வீட்டுல..

Dubukku said...

Boston Bala- என்னாது....இது எப்போலேர்ந்து....எதுவார்ந்தாலும் பேசித் தீர்த்துக்கலாம்....இப்படி பட்டமெல்லாம் கொடுத்து பழிவாங்காதீங்க....
(இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளமாக்கிட்டாங்ய்ங்க..)

Sumathi - அட நீங்களுமா??சும்மா உசுப்பேத்தாதீங்க...இருக்கிற கூகிள் அட்சென்ஸ்ல அஞ்சு பைசா தேறமாட்டேங்குது..இதுல சைட்ட எவனாவது வாங்குறதாவது....

Dev -உங்க அன்பு என்ன புல்லரிக்க வைக்குது...சும்ம சொல்லபிடாது வைத்தலபாக்கு வைச்சு அழைச்சு ஆப்படிக்கிறீங்க...நல்லா இருங்கப்பூ :)
வாழ்த்துக்கு மிக்க நன்றி

மு.கார்த்திகேயன்- இருக்கும் இருக்கும் அவனாத் தான் இருக்கும்...வாழ்த்துக்கு மிக்க நன்றி.

Aruna - danks. illa illa ...partheengala naan seriousa sonna kooda makkal nambavee mattengranga

SLN - kandippanga.koopadarom vaanga. danks for the wishes.

Dubukku said...

கதிரவன்- நன்றிங்க...முயற்சி செய்யறேன். வ.வா. ஆளுங்க தான் சங்கம் ஆசிரமமெல்லாம் யோசிப்பாங்க... :)

வெட்டிப்பயல் - பொறுமையா வாடா...உன் தொல்லை இல்லாம நாங்க கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கோம்ன்னு சொல்றீங்களோ?? :)

ஆதிபகவன் - நான் சீரியஸா நடிச்சாலே காமெடியாத்தேன் இருக்கும்...ஹூம்...உன்னால் முடியும் தம்பி கமல் மாதிரி ஆகனும்ன்னு ஆசை தான்...ஹூம் எங்க....

Deekshanya - danks danks. hmmm French German padathula nadikka enakkum romba aasai thaan...chance vara matenguthe...


இராமச்சந்திரன்- ஹீ ஹீ...குளிர அடிக்கிறதுக்கு நம்மூர் காரன அடிச்சிக்க முடியாதுப்பா...நான் அப்பிடியே ஐஸ் பொட்டியா மாறிட்டேன் போங்க...

Dubukku said...

Aparnaa - ரொம்ப நன்றி.சும்மா டுப்புக்குன்னே கூப்பிடுங்க...அறிஞர் அண்ணா ரேஞ்சுக்கு கூப்பிடாதீங்க....கண்டிப்பா உங்க வலைப்பக்கமும் வரேன்.

Uma - danks mam. will try surely.

Vidya - heey I was trying to comment in your page but its not allowing me.yup everyone is fine. long time no mails? hehe 20 posts...oh yes :))

கைப்புள்ள - வாங்க தல..உங்க மெயில் பார்த்தேன்...ரிப்ளை பண்ணல...மன்னிசுக்கோங்க..கூடிய சீக்கிரம் நீங்க சொன்னத செஞ்சிடறேன்...
பெயராங்க முக்கியம்??....A Rose is a Rose is a Rose illaya??....வாயப் புடுங்கி வம்புல மாட்டிவுடுறீங்களே?? :))

Kittu - danks mame

Divya - danks a lot for your wishes

Dubukku said...

Anonymous - மிக்க நன்றி. நிறைய எழுத முயற்சிக்கிறேன்.

Jeevan - hehe yes atha summa 2 varushathukku. Yeah watch Black when you get a chance...excellent movie.

Ms.Congeniality - வாம்மா தங்கச்சி...என்னையும் சேர்த்து தானே சொல்றீங்க...ஹைய்யோ....எவ்வளோவு நாளாச்சி என்ன இந்த மாதிரி யாராவது சொல்லி :))

Dubukku said...

நெல்லைகிறுக்கன்- ரொம்ப நன்றிவே. இந்தப் பக்கத்துலேர்ந்து பார்த்தா...நம்மூரு சாடையா தெரியுது அந்தப்பக்கத்துலேர்ந்து பார்த்தா வடநாட்டு சாடையாவும் தெரியுது....(நடுவுல தங்கமணி மட்டும் என்னைய பார்த்தா துடைப்பக்கட்டாயாத் தான் தெரியுது)

வரலாறு படம் எங்கவே பார்க்க? அதான் டி.வி பொட்டிய தூக்கி கிடப்புல போட்டாச்சுல...

Dubukku said...

Uma - அவங்கக்கா உங்கூர்ல கம்ப்யூட்டர் அகாடெமில படிச்சிருக்கலாம்..அவங்க வேணா உங்கூரா இருக்கலாம்...இந்தப் பிள்ள எங்கூராத் தான் இருக்கும்.

விவேக்குக்கு அசிஸ்டென்டாவா??நான் எப்பிடி அத மிஸ் பண்ணினேன்???

Syam said...

//நீங்க தான் முதல் சீடன்//

குருவே...கும்பிட்டுக்கறேங்கோ... :-)

Anonymous said...

Duppukku...

sulekhala.. Blog divisonla unnoda ella blogum podu....

first rank vangina.. sulekha unaku prize kodupanga..

lot of gift cards and useful redem.

na onnum sulekhakku marketing pannala...

pannuratha ethachum usefula akkalam....

ni duppuka erukkalam athukaha.. makku dupukku ella smart dupukka erukka paru...

Divya said...

Dubukkuworld inauguaration eppo????

meera jasmine vanthu thiranthu vaika porangla ??

thirappu vizhavukku engaluku invitation unda??

மண்டு said...

Invitayion எங்க நைனா?

Dubukku said...

Syam - ஆஹா வாங்க வாங்க சந்தாலாம் கட்டியாச்சா? :)

anonymous - danks for the info. Inniku Poi parkaren :)

Divya - ada neenga vera somberithanathunala adhu appidiye irukku...seekaram site podaren ungalukkellam invitation illamalaya?

மண்டு - invitation புது சைட்டுக்குத் தானே?? ரெடியானவுடனே உங்களுக்கெல்லாம் சொல்லாமலையா? (வேற யார் அங்க வரப் போறாங்க?)

umagopu - romba danks. Wish you and your family a very happy and prosperous new year !!

Post a Comment

Related Posts