Friday, September 22, 2006

நெல்லை சந்திப்பு விபரங்களும் படங்களும்

மொத்தம் ஆறு பேர் வருவதாகச் சொல்லியிருந்தார்கள். ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணிக்கு சந்திப்பதாக பேசிக்கொண்டோம். இதில் வீட்டிலிருந்து தங்கமணியையும் குழந்தைகளையும் வேறு கூட்டி வரச் சொல்லியிருந்தார்கள். கடைசி நேர குழப்பங்களலால் அவர்களை கூட்டிச் செல்ல முடியவில்லை. என்ன ட்ரெஸ் போட்டுக் கொள்ள என்பதிலிருந்து எல்லாமே கொஞ்சம் டென்ஷனாக இருந்தது. எங்கள் வீட்டிலிருந்து ஒரு மணிநேரம் ஆகும் என்று எதற்கும் இருக்கட்டும் என்று ஏழு மணிக்கே கிளம்பிவிட்டேன்.

எல்லோரும் வந்தவுடனே அங்கிருந்து சாப்பிடப் போகலாம் என்று பேசிவைத்திருந்தோம். சந்திப்பிற்கு எட்டு மணிக்கே போய்சேர்ந்துவிட்டேன். என்னைத் தவிர ஒருவரும் வரவில்லை. அதற்குள் பக்கத்தில் நல்ல ஹோட்டல் தேடி போண்டால்லாம் ஸ்டாக் இருக்கா என்று விசாரித்து வைத்தேன். அப்புறம் நேராக சந்திப்பதாக பேசிக் கொண்ட இடத்திற்கே போய்விட்டேன். என்னை அடையாளம் கண்டுபிடித்துவிடுவார்கள் என்று மிக நிச்சயமாகத் தெரிந்தது. சுதந்திர தினம் நெருங்கிக் கொண்டிருந்ததால் அங்கங்கே போலீஸ் தலைகளைப் பார்க்க முடிந்தது. முதலில் என்ன பேசுவது என்று ஒத்திகை பார்த்துக்கொண்டேன். நேரம் ஆக ஆக எனக்கு டென்ஷன் அதிகரித்தது. கைத்தொலைபேசி இல்லாததால் ஒருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தமிழ்மணம் நட்சத்திர முறை சரிதானா, தேன்கூடு போட்டியில் இந்த முறையாவது வெற்றி கிடைக்குமா என்றெல்லாம் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

சரியாக ஒன்பதேகாலுக்கு நெல்லை எக்ஸ்ப்ரெஸ் ட்ரெயின் வந்தது. இரண்டு அக்காக்கள், அக்கா குழந்தைகள் என்று மொத்தம் சரியாக ஆறு பேர். அக்கா பையன் கூட்டத்தில் ஒளிந்து கொண்டிருந்த என்னை மிகச் சரியாக கண்டுபிடித்து விட்டான். "என்னாங்கடி விளையாடுறீங்களா..ஒரு மனுஷன் எவ்வளவு நேரம் தான் காத்துகிடப்பான்...இன்னமும் உங்களுக்கெல்லாம் பொறுப்பே வரலை போலிருக்கே ஊர்லேர்ந்து வந்த தம்பிய பார்க்க இப்படியா ஆடி அசைஞ்சு வரது? " என்று ஒத்திகை பார்த்த வசனத்தை பேசி வாங்கிக் கட்டிக் கொண்டு ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வீடு சென்றோம்.

நெல்லை சந்திப்பு புகைப்படம் காண இங்கு சுட்டவும்.


பி.கு - என்ன செய்யறதுங்க...நெல்லைப் சந்திப்ப இப்படித்தான் ஒப்பேற்ற வேண்டியிருக்கிறது. சந்திப்பை அறிவித்த இரண்டு வாரத்துக்கு மருந்துக்கு கூட யாரும் அதைப் பற்றி மெயில் அனுப்பவில்லை. அம்பி வேறு இது தெரியாமல் டோட்டல் டேமேஜ் செய்து கொண்டிருந்தார். கவுண்டமணி பாணியில் "யெப்பா போதும்ப்பா..ப்லிம் அந்து போச்சு..நிப்பாட்டுப்பா..பின்னியெடுத்துட்டாங்க" என்று சொல்லியும் அவர்பாட்டுக்கு சமாளித்துக் கொண்டிருந்தார். இந்த லட்சணத்தில் சிவஞானம்ஜீ வேறு அவர் பங்குக்கு எண்ணையை ஊற்றிக்கொண்டிருந்தார். அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன் என்று நொந்து போயிருந்த சமயத்தில்.. வலைப்பதிவுகளை வாசிக்கும் நண்பர் சங்கரபாண்டி மட்டும் நான் பதினோராம் தேதி தான் அந்தப்பக்கம் வருவேன் அந்த தேதியில் வைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டிருந்தார். பட்சி சிக்கிக்கிச்சு என்று எனக்கு ஒரே சந்தோஷம். ரொம்ப கஷ்டம்..இருந்தாலும் உங்களுக்காக பெரிய மனது பண்ணி மாற்றுகிறோம் என்று பதிலனுப்பியும் மனுஷன் கடைசி நேரத்தில் கடுக்கா கொடுத்துவிட்டார். ஹூம் கிளிக்கு ரெக்கை முளைச்சிடுத்து ..கிளி பறந்து போயிடுத்தூ... ஒரு வேளை எனக்கு ஜாதகத்துல போண்டா தோஷம் இருக்குமோ??

37 comments:

Anonymous said...

nellai sandhipu padam-konja neram photo parhtu puriyalai

semms bulb-unga previous post madhiri ;-)

bt

சிறில் அலெக்ஸ் said...

படத்தப் பாக்குறவரைக்கும் நிஜமாவே சந்திப்பு பற்றிய பதிவுன்னு நெனச்சேன். :)

திரும்பப் படிக்கும்போது சிரிப்போ சிரிப்பு.

:)

Kumari said...

Paavamnga neenga. Aanalum padikkum bodhu sirippu thaan varudhu :D

Mohan Madwachar said...

:-)

http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்ற
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

மணியன் said...

திருநெல்வேலிக்கே அல்வாவா ?

Vidya said...

Not Bad. Nalla oru sandhippu after how long did you say? And for how long did you folks have your meeting. Un paadu paravaillai, makkal innum pakka meet ellam panreenga..

Enakku sollu, oru friend ennadanna, 3 varushama, maanju maanju ezhudharan, but sollavey illai. Inga oruthi, oru vaaram edho olarathukkla, pona pottumnu, anonymous-a comment adikkama, per pottu, konjam modest-a pannina thittranga.

Idhula, anga bonda dhoshama... En irukkadhu, ellam, andha gaalathu, lunch time saabama irukkum :P

Super-a irukku. Am going thru most of your blogs these days and enjoy pannaren.. At times, it feels like, I get transported to 2000 lunch times. Just that it has gotten better than what it used to be. Excellent Dubukku!

siva gnanamji(#18100882083107547329) said...

போட்டோ யாருங்க எடுத்தது?
சுதந்திர தின நெரத்திலெ ஜங்க்ஷ்ன
படம் எடுத்தீங்களா?இருக்காது-படம் வேற நல்லா இருக்கே.

Anonymous said...

//ஒரு வேளை எனக்கு ஜாதகத்துல போண்டா தோஷம் இருக்குமோ??//
Bonda doshamei thaan !!! ha ha.

on a different note... when the time is right (for all)... it will all happen, just a matter of time. What say?

Syam said...

ஏங்க உங்க நக்கலுக்கு ஒரு அளவே இல்லயா...நானும் அப்படி ஒரு சந்திப்பு இருக்கானு போய் பார்த்தா அட ஆமா நிஜமான சந்திப்பு தான் :-)

Anonymous said...

டுபுக்கு-க்கு இவ்வலவு பில்டப்பு (அம்பி) குடுத்துக் கூட எல்லாரும் உங்களூக்கு போண்டா (அல்வா) குடுத்துடாங்களே...!ஹா ஹாஹா ஹா......

கடைசியிலே இதுக்குதானா (போண்டா) நீங்க 100 பவுண்டு குடுத்தது..? ஆஹா....அம்பி உங்கள நல்லாவே பழி வாங்கிட்டாரு...ம்ம்ம்ம்ம்ம்...

chandru said...

Hello Dukku,

UNGA BLOGA ROMBA NAALA PADICHITU VAREN..ROMBA NALLA ERUKU..UNGALODA WRITING SLANG SUPER..VERY HUMOUROUS..
TIME KAEDAICHA VISIT MY PHOTOBLOG
www.aduro-ingenium.blogspot.com

Porkodi (பொற்கொடி) said...

aaah nellai la irundhu varinga nu ipdiya halwa kudupinga.. aasaiyaa photova click paninene enna sollanum enna sollunum :(

SLN said...

Although the post itself was predictable (especially having read the other post about the Nellai Santhippu), the photo was a nice touch :)

SLN

Anonymous said...

இதோ சொன்ன மாதிரி நானும் புது தமிழ் பிளாகு ஆரம்பிச்சுடேன். டைம் கிடைக்கும் போது கொஞ்சம் வந்து பாருங்க.


http://injeyulagam.blogspot.com

ambi said...

//ப்லிம் அந்து பொச்சு..நிப்பாட்டுப்பா..//
he hee, LOL. naama otta vechu padam ottovom illa?
enna anna, antha 1000 poundu kadaisi varaikkum tharave illaye?neenga. :D

btw, flicker site blocked. pls send me to my ID. very curious to see pics.

Porkodi (பொற்கொடி) said...

ambi ninga kuda than enaku ore oru porkasu kuda tarala.. 1000 pound kekaringa?

Anonymous said...

Hello Dubbuku nanbareh,

Good to see your posting after a month long time, used this time to read ur archives, they are simply excellent,

Excellent by the way, AMBAL (Anjelino Jolie) Rasiga mandram arambikaringala, just a thought, also AMBAl is coming to India 1st October 06 hope to bombay for a film shooting (film shooting in pune). Just oru kosuru thagaval.

Keep writing,

Prakash

Anonymous said...

Your archieves are not accessable..
:-((

aparnaa said...

hi. i realy enjoyed reading ur blogs for past 2 days ..i couldnt control laughing loud reading most of ur blogs.i was born and bought up from courtallam and so i was able to feel the places and i felt like recollecting my own memories too..
great work ...i have joined ur fan club too ..waiting for ur next post.
regards,

Anonymous said...

//அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன்//... too good. I was also fooled by your "Nellai Santhippu" photo. Very good post - this one and previous one.

Venkat.

Jeevan said...

Dubukku unga akkava parthaa padi ketinga, ithu romba overpa. The photo's in the Flickr are very beautiful, Kuttralam aruvigal, rubber estate ellam pramatham. naala enjoy panniga pola:)

aparnaa said...

hi ,
I read ur jollu stories just now..
very interesting to know that u participated in interunivercity youth festivals.. in fact i also participated from sri parasakthi college.i have performed in many youth festivals and many compatitions in our district.i am very curious to know in which year u participated..if u are from Ambai arts college.. r u shivakumar anna's set (one who draws well ) ??
just curious ..

Anonymous said...

Hehe.. sorry, but I can't stop giggling.

யாத்ரீகன் said...

aha.. 3rd continous post i'm laughing like anything... romba naazh kalichu vandhaen... you made the day dubuks.. great..

Dubukku said...

bt - haha naane ethana tharam vangarathu...neengalum konjam vaanga vendama :))

சிறில் அலெக்ஸ் - ஹா ஹா ஏமாந்தீங்களா :)

Kumari - aamanga romba paavanga naanu. neengalavathu othukareengale :)

leomohan - தங்கள் வருகைக்கு நன்றி. கண்டிப்பாக உங்கள் தளங்களுக்கும் வருகிறேன். :)

மணியன்- இல்லை திருநெல்வேலி அல்வா :)

Dubukku said...

vidya - hehe did u read the story full?? There was no bloggers meet..just was misleading with my text and Tirunelveli railway station is also called "Sandhippu". I have used this to make some fun (or have attempted to atleast)

Sivanjyanamji - படம் நல்லாருக்கில்ல...அதுலேர்ந்தே தெரியவேண்டாமா நான் எடுக்கலைன்னு :))

Suresh - enna sir seriousa irangiteenga...but what you say is true

Syam - ஹா ஹா மாட்டிக்கிட்டீங்களா இதத் தானே எதிர்பார்த்தோம். ஒழுங்கா திருநெல்வேலிக்கு வந்திருந்தீங்கன்னா..சந்திப்பு நடத்திருக்கலாம்ல

சுமதி - ஆமாங்க..மொத்தமா அல்வா குடுத்திட்டாங்க அடுத்த தரம் சென்னை/ பெங்களூர்ல தான் :)

Chandru - many danks for the compliments. Surely will visit your photoblog soon :)

Dubukku said...

பொற்கொடி- :)) enna ottikitu irundheengalla...nalla venum :)

SLN - hmmm guess panniteengala...tcho tcho

injey - ஆபிஸ்ல பயங்கர வேலை ...தோ வந்துடறேன்....

Ambi - sorry da...marandhutten...will send it shortly (photova sonnen)

Porkodi - nalla kelunga

Dubukku said...

Prakash - danks a lot. Rasikar mandram koodiya seekiram arambichuruvom :))

anonymous - i hope its rectified now..dont know why but keeps happening in blogger

appu - danks..a lot for your compliments. neengalum namboor pakkama :))

Venkat - danks danks...neengalum emarndheengala. athukku thane post podarathu (just kidding kochukatheenga):)

Dubukku said...

Jeevan - yes those photos are beautiful. But naan edukala...vera yaaro eduthirukanga. Andha flickla yee avanga yaarunu pottirukku parunga

Appu - nice to know that. Haiyaiyooo dangeraa irukeengale...seri I am not from ambai arts. I am from spkc.I know that shivakumar too. He is from Ambai arts isn't? (by any chance did you attend the state level youth festival meet @Tiruvalluvar college papanasam...(in 1993/ 94 )??

Dubukku said...

thewoman - danks danks

யாத்திரீகன் - danks.glad that you enjoyed it :)

aparnaa said...

hi,
i attended the one in chennai(state level organized by nehru yuva kendra) and national level youth festival in b'lore. and shivakumar anna attended the both with us ..we were the batch selected from our university.do u know vidhyameenakshi from ur college? she did msc micro ..
ur face seems to me familiar..but i am not sure..in our batch we had venkat anna (from ur college -msc physics) who used to play miruthangam,kottu,tabla etc for our dance and songs...do u know him ?? he is not working in kanchepuram deemed university.
anyhow its very interesting to read ur blogs..waiting for ur next one..
do convey my regards to ur wife and kids.

Appu said...

அடுத்த சந்திப்பு எப்போனு சொல்லுங்க உங்க விமானம் மலையாளக் கரையை தொடும் முன் meet செய்வொம்.

பொன்ஸ்~~Poorna said...

டுபுக்கு, அடுத்து ஒரு லண்டன் சந்திப்பு போடுங்களேன்.. லண்டன் ரயில்களைப் பற்றி யாரோ கொஞ்ச நாள் முன்பு படம் போட்டிருந்தாங்க.. "சந்திப்பு"களையும் போட்டீங்கன்னா கண் குளிர பார்த்துக்குவோம்..

Anonymous said...

Hello Dubukku nanbareh,

Unga email id/phone irundha thevalaaam, edhukunah, namma Umakrishna nammaku dosth, indha diwaliku getogether arrangement nadakudhunu kelvipataen, adhuthaan ungaluku phone adikalaamnu, eppadi sowgariyamoh kudunga , enna okvah.

Cheers
ViswaPrakash

மு.கார்த்திகேயன் said...

//அட ஏங்க இந்த கொலைவெறி ...இங்க நானே சொந்த செலவுல சூன்யம் வைச்சிக்கிட்டு எடுக்கிறது தெரியாம திண்டாடிக்கிட்டு இருக்கேன்//

hahaha..cool wordings dubukku..

இராமச்சந்திரன் said...

பேசாம "ஒரு நிமிடக் கதை" எழுதலாம்...நீங்க. பில்ட்-அப் குறையாம பாத்துக்கிட்டீங்க. அப்புறம் ஒரு சின்ன திருத்தம்.

பி.கு-ல ப்லிம் அந்து போச்சுக்கு பதிலா "பொச்சு" அப்படின்னு போட்டு இருக்கீங்க. கொங்கு தமிழ் ஏரியா-ல அது கெட்டவார்த்தை. மாத்திருங்க.

ரொம்ப நாள் வராதவன் வந்து கமென்ட்ஸ் விட்டுருக்கேன். பின்னூட்டத்துல என்ன பத்தி நாலு வரி கூட எழுதனும்...ஓ.கே யா ?

Dubukku said...

Uma - hahah aabisla kallathanama avasara avasarama padicha ippadi thaan puriyathu :))

appu - :) danks. I hope I have clarified through emails now :) Nice to know abt you. Nalla velai naan comment adichavanga yaravathu vandhu inga comment potta konjam shock ahiduven :)

Zeno - அப்படீங்கிறீங்க?? உண்மையாவா? கரெக்டா சொல்லுங்க..செஞ்சிருவோம் :)

பொன்ஸ் - நக்கலு ஆங்....?? லண்டன் சந்திப்பு பத்தி தான் இணையத்துல நிறைய படங்கள் இருக்கே :))

Viswa - it was nice talking to you :) lkng fwd to meet you in the gettogether :)

Karthikeyan- danks but athu namma thalai vadivelu sonnathunga...naan just use pannikitten :P

இராமச்சந்திரன் - வாங்கய்யா..இப்போ தான் வழி தெரிஞ்சுதா?? என்னய்யா இத்தன நாளா காணோம்?? நீங்க சொன்ன பிழைய சரி பண்ணிட்டேன். பல்வேறு பாஷையில கெட்டவார்த்தை தெரிஞ்சு வைச்சிருக்கிறதப் பார்த்திருக்கேன்..ஆனா பல்வேறு வட்டார மொழியில தெரிஞ்சு வைச்சிருக்கீங்க...?? :))))

Post a Comment

Related Posts