என்னைப் பொறுத்தவரையில் வெள்ளைக்காரன் விடுமுறைக்கு போவதற்கும் நாம் போவதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. வெள்ளைக்காரன் ரெஸ்ட் எடுக்க விடுமுறைக்குப் போவான். நாம் விடுமுறைக்குப் போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கவேண்டும். இந்தியா ட்ரிப் அவ்வளவு அலைச்சல். தொடர்ந்து ரெண்டு நாள் அந்த கால ஜெயமாலினி குலுக்கு டான்ஸ் ஆடிய மாதிரி உடம்பெல்லாம் வலி பின்னுகிறது. இந்த தீவிரவாத மூதேவிகள் புண்ணியத்தில் ஏர்போர்ட்டில் நோண்டி நொங்கெடுத்துவிட்டார்கள். உள்ளூர் ஏர் டெக்கானில், நேரம் காலம் தெரியாமல் மாமியார் வீட்டிலிருந்து வந்திருந்த ரசப் பொடி இருந்த ஒரு கைப்பையை செக்கின் செய்யாமல் கையிலெடுத்துக் கொண்டு சமாளிப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. மாமியார் வீட்டிலிருந்து செய்துகொடுத்த பொடியை, கண்ணில் போட்டு ப்ளேனை கடத்துவது மாதிரியான அல்ப விஷயங்களுக்கெல்லாம் வேஸ்ட் செய்தால் வீட்டில் தீவிரவாதி ஆகி என்னைத் தொலைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை.
குழந்தைக்கு வைத்திருந்த பாலைக் கூட குடித்துக் காட்டச் சொல்லுகிறார்கள். ஏற்கனவே பால் குடிக்கப் படுத்தும் என் இரண்டாவது பெண் அந்த நேரத்துக்கு பால் குடிக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க கடைசியில் நானே பாட்டிலை லேசாக வாயில் வைத்துக் குடித்துக் காட்டினேன். நான் குடிக்கும் நேரம் பார்த்து வந்து சேர்ந்த இன்னொரு பெண் "இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?" என்கிற ரீதியில் என்னைப் பார்த்து சிரிக்க..எல்லாம் இந்த தீவிரவாத மூதேவிகளை சொல்லனும்.
இந்த முறை குழந்தைகளுக்கு உடம்புக்கு எதுவும் வராதது ரொம்ப ஆறுதலாக இருந்தது. எனக்குத் தான் வழக்கம் போல் கார்க் புடுங்கிக் கொள்ள..இருந்தாலும் இன்டேக்கை குறைக்காமல் சாப்பிட்டதில் மார்க்கண்டேயன் மாதிரி கூடாமல் குறையாமல் இருந்த வெயிட் நான்கு கிலோ ஏறியிருக்கிறது. இம்சை அரசன் பார்க்க சென்று குழந்தைகளுக்கு தியேட்டர்களை அறிமுகம் செய்தோம். எங்க ஊர் தியேட்டர்களில் இன்னமும் முக்கியமான காட்சிகளுகு சிவப்பு மற்றும் நீலத்தில் விளக்குகள் போட்டு ஸ்பெஷல் எபெக்ட் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் இன்னமும் செவிப்பறை கிழியும் அளவிற்கு வால்யூம். பாட்டு வந்தால் இன்னமும் கூடுகிறது. இந்த வால்யூமிலும் முன்னாடி இருந்தவர் எப்படி தூங்கினார் என்று ஆச்சரியமாக இருந்தது.
இந்த முறை சென்னை வழியாக இல்லாமல் பம்பாய், திருவனந்தபுரம் மார்க்கம். பம்பாய் அனுபவங்கள், மலையாளக் கரையோரம், நெல்லை சந்திப்பு, பகிர்ந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன.சரி சரி எல்லாவற்றையும் ஒரே போஸ்டில் போட்டு முடித்துவிட முடியுமா? பாஸ்டன் பாலா மாதிரி இல்லாட்டியும் ஒரு ரெண்டு போஸ்டாவது படத்தோடு போடவேண்டாமா. மெயில் வேறு குமிந்து கிடக்கிறது. இன்னமும் க்ளியர் செய்து முடிக்கவில்லை. வழக்கமாக காத்துக்கொண்டிருக்கும் அகர்வால் பெண்கள் தவிர இப்பொது ஜெயின், மற்றும் பஞ்சாபி பெண்களும் கல்யாணத்துக்கு மெயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஷாதி க்ரூப் இமெயில் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கமணி பார்ப்பதற்கு முன்னால் க்ளியர் செய்து விட்டு வருகிறேன். மீதி அடுத்த பதிவில்...:)
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
//"இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?" //
:)))) என்னை ரொம்ப படுத்தலியே.. முக ராசியா இருக்கும் ;)
வாரும் வே,
ஊருல எல்லாரும் நல்லா இருக்காகளா. மாநாடு சிறப்பா நடந்திருக்குமின்னு நெனக்கேன். நீரு இல்லாம தமிழ்மணமே வெறிச்சோடிப் போச்சு...
//என்னைப் பொறுத்தவரையில் வெள்ளைக்காரன் விடுமுறைக்கு போவதற்கும் நாம் போவதற்கும் ஒரு முக்கியமான வித்தியாசம் இருக்கிறது. வெள்ளைக்காரன் ரெஸ்ட் எடுக்க விடுமுறைக்குப் போவான். நாம் விடுமுறைக்குப் போயிட்டு வந்தா ரெஸ்ட் எடுக்கவேண்டும்.//
அது....
வாய்யா வா. சீக்கிரம் விஷயத்தை சொல்லு. ஐயாம் தி வெயிட்டிங்.
வாங்க வாங்க டுபுக்கு சார். வெல்கம் டு லண்டன்.
வந்ததும் ஒரு டிரேட்மார்க் பதிவு. சூப்பருங்க. எப்படிங்க இப்படியெல்லாம்?
//வழக்கமாக காத்துக்கொண்டிருக்கும் அகர்வால் பெண்கள் தவிர இப்பொது ஜெயின், மற்றும் பஞ்சாபி பெண்களும் கல்யாணத்துக்கு மெயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஷாதி க்ரூப் இமெயில் தொல்லை தாங்க முடியவில்லை. தங்கமணி பார்ப்பதற்கு முன்னால் க்ளியர் செய்து விட்டு வருகிறேன். மீதி அடுத்த பதிவில்...:)//
:)))) அப்ப கூட தமிழ் பொண்ணா பாக்கலை. உங்க தம்பி என்னடாண்ணா பஞ்சாப் பொண்ணோட நியூஸ்பேப்பர் நடனம் எல்லாம் பழகிட்டு இருக்காரு...உங்களுக்கு இண்டர்நெட்டுல சேட்டு பொண்ணுங்க நட்பு. அப்பப்போ தமிழ்நாட்டுக்கும் ஆதரவு குடுங்க சாமியோவ்.
:))
ஆஹா, எவ்வளவு நாளைக்கு அப்புறம் அருமையான காமடி!
----கூடாமல் குறையாமல் இருந்த வெயிட் நான்கு கிலோ ஏறியிருக்கிறது. ----
விடுமுறை ஜோராக சென்றதை இப்படித்தானே சொல்லணும் :-D
வாழ்க... வளர்க!
வாங்க வாங்க தங்கள் வரவு நல்வரவாகுக. நீங்க இல்லாம ஓட்டுறதுக்கு ஆளில்லாம கோஞ்சம் தடுமாறி போய்ட்டோம், இப்ப தான் நிம்மதியா இருக்கு.
அதென்னது குக்புடு?(குக்)-கிங் சொதப்பி (புடு)-ங்கிகிச்சி. ஏணுங்ணே சரிதானுங்களே? ஹிஹி
comedy king the great dubukku comes (back in the business)
yow chinna thambi,
avaru dubukku va maathi pottu irukkaru ya...vidumurai leyum theeviravaadhi moodhevigaL naaleyum dubukku kukbudu (read tamil) aayiruchu...sarithaanungo!!
நல்ல காமெடியான பதிவு!
:)
//மாமியார் வீட்டிலிருந்து செய்துகொடுத்த பொடியை, கண்ணில் போட்டு ப்ளேனை கடத்துவது மாதிரியான அல்ப விஷயங்களுக்கெல்லாம் வேஸ்ட் செய்தால் வீட்டில் தீவிரவாதி ஆகி என்னைத் தொலைத்துவிடுவார்கள் என்பது அவர்களுக்குப் புரியவில்லை//
:) :) :) :) :)
கூடவே ஒரு "+"
உங்க பதிவை live bookmarksல் வைத்து நிறைய முறை க்ளிக் செய்திருக்கேன், போன ஒரு மாசமா.. ஒருவழியா வந்தாச்சா? எல்லா அனுபவங்களையும் விவரமா எழுதுங்க.
mudhal thadavai ingha padhil poodarEn.
Eagerly awaiting your posts on India trip.
அப்பாடா............ வந்துட்டீங்களா?
இப்பத்தான் நிம்மதி.
( எதுக்குன்னு யாரும் கேக்கவேணாம்!)
நல்ல வேளை.. ரச பொடிய பொடியா வச்சிருந்ததால தப்பிச்சிங்க.. ரசமா வச்சிருந்தா?
:)
குக்புடு - Return of டுபுக்கு? தலைப்பே அடிப்பொள்ளி.. :)
//எங்க ஊர் தியேட்டர்களில் இன்னமும் முக்கியமான காட்சிகளுகு சிவப்பு மற்றும் நீலத்தில் விளக்குகள் போட்டு ஸ்பெஷல் எபெக்ட் குடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.// உங்க ஊர்லயுமா??
//வழக்கமாக காத்துக்கொண்டிருக்கும் அகர்வால் பெண்கள் தவிர இப்பொது ஜெயின், மற்றும் பஞ்சாபி பெண்களும் கல்யாணத்துக்கு மெயிலில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.//
he hee, antha mailsa ellam delete panna vendaam, inga fwd pannalaamee! summa! summa! pakrathuku thaan! :)
//"இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?" //
he hee, naama ellam pacha kuzhanthaigal!nu antha mavaraasiku theriyaathu polirukku! :)
//உங்க தம்பி என்னடாண்ணா பஞ்சாப் பொண்ணோட நியூஸ்பேப்பர் நடனம் எல்லாம் பழகிட்டு இருக்காரு...//
@kaipulla, ahaa, patha vechiyee paratta! :D
dubukku,
supero super
na ippa than padika arambichuruken blogs a kalakurengappa
kukpudu na enna...vara vara nama tamil cinema title mari sambanthame ellama vekarenga
நல்லா எழுதுறீங்க..உங்க சிறு வயது அனுபவங்கள் எல்லாம், என்னையும் என் சிறு வயதுக்கு அழைச்சிட்டு போகுதுங்க...
"இன்னுமா நீ பாட்டில் பால் குடிக்கிற?"
:)
Adhu seri, title enna குக்புடு??? Trip-kku apparom aaLe thalai keezhaa maaritten-nu solla vareengala? :P
பொன்ஸ்- //என்னை ரொம்ப படுத்தலியே.. முக ராசியா இருக்கும் ;) //
சின்னப் பசங்களைதான் படுத்தறாங்களாம் ;P
நெல்லைகிறுக்கன் - அட என்ன இந்த போடு போட்டுட்டீங்க? நான் எதோ சின்னப் பையன். ஊர்ல எல்லாரும் நல்லாருக்காங்க அண்ணாச்சி! மாநாடு சூப்பர்.
குழலி - உண்மைதானே?? :)
கொத்ஸ் - வந்தோம்யா...வெயிட் எ நிமிட் பார் பை நிமிட்ஸ்
கைப்புள்ள - அண்ணே வந்தவுடனேயே கவுத்துறீங்களே....அதெல்லாம் சேட் ப்ரெண்ட்ஸ் இல்லீங்க...இந்த ஷாதி வெப்சைட்டுலேர்ந்து வந்த விளம்பர மெயிலுங்க. நமக்கேது பஞ்சாபி கேர்ள் ப்ரெண்ட்ஸ்...ஹூம் நல்லாத்தேன் இருக்கும்.
Madura - நன்றிங்க. நீங்க நக்கல் கிக்கல் பண்ணலயே??
Boston Bala - எல்லாம் உங்க ஆசிர்வாதம்.
WA- ஹூம். என்னது இது...பயமே இல்லாம ரொம்ப ஓவராப் போச்சு. இதோ வரேன்.
Chinnathambi/kk/ Krithiga- அது "Dubukku is back"-ங்கிறத அப்பிடி சொன்னேன். ஹீ ஹீ சும்மா ட்ரை செஞ்சு பார்த்தேன். ரொம்பக் கேவலமா இருக்கோ? . நானே சொன்னாத் தான் புரியும்ன்னு நினைக்கிறேன் :)
நாமக்கல் சிபி- நன்றி.சிரிக்கிறீங்க + வேற குத்தியிருக்கீங்க..??..இன்னும் கல்யாணமாகலியோ?? :P
Venkataramani - நிறைய க்ளிக் செய்ததற்கு நன்றி :) ஒருவழியா வந்தாச்சு. கூடிய சீக்கிரம் போட்டுடறேன்.
Vidya - danks for your interest and comments. Will do it soon.
துளசி - எனக்குத் தெரியுமே உங்களுக்கு எதுக்கு நிம்மதின்னு? அக்கா இன்னும் ஒரு நாள் பொறுங்க...வந்து பொறுப்ப ஏத்துக்கிறேன்.
buspass - :) இதுக்கு தான் கல்யாணமாக பசங்களை எல்லாம் ஏர்போர்ட்ல பெண்ட நிமித்திறாங்க...தெரியுமுல...
ராசா - நீங்க தான் "குக்புடு"- வ கொஞ்சம் கரெக்ட்டா பிடிச்சிருக்கீங்க. அட உங்க ஊர்லயுமா?
Ambi - இப்படி பப்ளிக்கா அதக் கேட்கனுமா? வெறும்ன துப்பிக்கிட்டிருந்தவங்கள இப்படி காறித் துப்ப வச்சுட்டியே...:)) நியூஸ் பேப்பர் நடனமா...நீ நடத்து ராசா...நடத்து
Anonymous1 - -பாராட்டுக்கு ரொம்ப நன்றி. ஒரே ஒரு வேண்டுகோள். இப்படி பாராட்டும் போது தயவு செய்து பெயர மட்டுமாவது போடுங்க.(திட்டறதுக்கு பெயர் வேண்டாம்) இல்லாட்டி நானே என்னப் பத்தி மானே தேனே பொன்மானே பாடிட்டேன்னு நினைப்பாங்க அதான்.
Anonymous2 - "Dubukku is back"ngratha appidi solla try panninen. hehe inime neenga thalaiyila tharalama adichikalam :P
(aana ithu maathiri title vecha neraya per varuvanganu idea kidaichirukku :P)
kaalapayani - உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி.அடிக்கடி வாங்க.:)
Welcome back Dubukku.. Happy to know you had nice holidays. Eagerly expecting to read your trip experiences. Many were missing you in blog world :)
Welcome Back kukdubu. We all missed your posts. Hope you had a nice holiday. speak to you soon.
andha rasa podiyoda arumaiya vilakkiya vidham super. well said about vellaikaara and indian holidays. tired aanalum namba utraar uravinarai paatha thrupthi kedaikkudhe? naanga deepavalikku oorukku porome!!! vandhu rest eduthukkalaam nu dhan.
nice to know that you are back from your holidays.. hope you had fun..
waiting for you next post:-)
welcome back... eagerly awaiting for ur india trip experiences....
//தங்கமணி பார்ப்பதற்கு முன்னால் க்ளியர் செய்து விட்டு வருகிறேன். //
நீங்களும் மனைவியை தங்கமணி என்று தான் அழைப்பீர்களா? எங்கள் நட்பு வட்டத்திலும் அவ்வாறு அழைப்பதே வழக்கம்.
எல்லாம் 'அக்னி நட்சத்திரம்' ஜனகராஜால் வந்த வினை.
நல்ல பதிவு.
Yippee!! Back with a bang!!! :)))
அய்யோ நக்கலில்ல! நிஜமாவே தான். நேத்தைக்கு ஒரு மணி நேரமா பஸ் வராம மச்சான் கடுப்புல இருந்தப்ப நான் மட்டும் மாமியார் ரசப்பொடில ப்ளேன் கடத்துறத யோசிச்சு "ஈ"ன்னுட்டு சிரிச்சிட்டு ஜாலியா இருந்தேன்!
Londonkaran - danks. hehe flattering :))
Uma - danks. Ada intha tharam deepavalikku ooruku poreengala. kalakunga. grrrr enna irundhalum Deepavalikku oorla irukkarathu romba nalla irukkum..puhaiya kilapureengale..:P
Raji - yes danks. Will post soon :)
anonymous - danks. haiyooo ippidi anonymousa comment vidatheenga pls. oru nick name vechukongalen (atleast to recognise you next time)
SathyaPriyan - நன்றி.ஆமாங்க நாங்களும் எங்க வட்டாரத்துல அப்பிடித் தான். எல்லாம் ஜனகராஜ் உபயம் தான்.
Boo - he he danks. (Miss panninathukkum serthu danks)
Madura - ஆஹா ரொம்ப நன்றிங்க. பஸ் ஸ்டாப்பில உட்கார்ந்து இந்த ஏழைய நினைச்சதுக்கு :)
A very good post from you after a long time
Arvind - danks. //Afer a long time// -- appo ippothaikku nalla poste podalanu solreenga :P
Good that u visit the nelai and righten safely. ella palaium kudichitengala illa unga kulanthaiku konjam vachingala:)))
வந்துடாங்கைய்யா... டுபுக்கு... நீங்க இல்லாமல் லண்டன் கொஞ்ச நாள் ஒழுங்கா இருந்தது.... வந்துடீங்களா...இப்ப.... ஊருக்கு போயிட்டு கொஞ்ஜம் கூட குறையில போல இருக்கு... நக்கலை தான் சொல்றேன்... பால் டேஸ்ட் பண்ணீங்களாக்கும்... உள்ளுக்குள்ள நடுங்கி இருப்பீங்கன்னு தெரியும்.. ... இப்ப தான் களை கட்டுது... சும்மா சொல்ல கூடாது... ரொம்ப ஸோக்கா எழுதி இருக்கீங்க....
welcome back.. Hope ur trip was memorable.. nice foto on avani avittam.. ur wife is a good photographer :-) Airport nonsense.. Even I was a victim,pathetic experience..
:-))))))))) Superaa sirika vachuteenga....
olakkai aruvi photos kidachutha??
-nathan
Jeevan - amanga nallapadiya thirumba vandhu serndhom. Paal- ada neenga vera...:)))
Balaji - அண்ணே வணக்கம்ணே...நன்றி. நக்கல் - ஏதோ சின்னப் பையன்...மன்னிச்சி விட்ருங்க
Deekshanya - danks. Yes trip was lovely.ohh neengalum airportla mattikiteengala ch ch choo.. :)
யாத்திரீகன் -:)) danks.
nathan - Thambirabaraniya neraya photos and video eduthirukken...seekiram upload pannaren...unga alavukku irukkathu irundhalum etho...parunga
Hi,
I found your blog via google by accident and have to admit that youve a really interesting blog :-)
Just saved your feed in my reader, have a nice day :)
Post a Comment