Friday, July 07, 2006

நெல்லையில் வலைப்பதிவர் சந்திப்பு

அன்பான வலைப்பதிவாளர்களே! வரும் ஆகஸ்டு மாதம் ஐந்தாம் தேதியோ ஆறாம் தேதியோ நெல்லையில் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இந்த சந்திப்பு மிக மிக விஷேஷமானது. மற்ற அகில இந்திய/ இன்டர்நேஷனல் வலைப்பதிவர் சந்திப்புகள் மாதிரி நீங்கள் சாப்பிடும் போண்டாவுக்கு நீங்களே காசு கொடுக்கவேண்டாம். சந்திப்புக்கு வரும் வலைப்பதிவர்களுக்கு இலவச சைவ ரொட்டிசால்னா ஏற்பாடு செய்யப்படும். இந்த அறிவிப்பை உபயோகப்படுத்தி சில விஷமிகள் மாமா,மச்சான், மாப்ள கூட்டத்தைக் கூட்டி வந்து இலவச ரொட்டிதானம் நடத்திவிடுவார்கள் என்பதால் வலைப்பதிவர் சந்திப்புக்கு வருபவர்கள் முன்னமே தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். அடையாள அட்டை தயாரிப்பதற்கு உபயோகமாக இருக்கும். நெல்லை மைந்தர்கள் வலைபதிவுலகத்தில் நிறைய இருந்தாலும் எத்தனை பேர் நெல்லைக்கு வரமுடியும் என்று தெரியாததால்..தயவு செய்து பின்னூட்டத்திலோ, r_ramn at yahoo dot com என்ற மின்ன்ஞ்சலிலோ தொடர்பு கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டம் மட்டும் கூரையைப் பிய்த்துக் கொண்டு வந்தால் இதையே முப்பெரும் விழாவாக மாத்திவிடுவோம்.

என்னைத் தவிர ஒருதருமே வராவிட்டாலும் இந்த வலைப்பதிவர் சந்திப்பு எங்க வீட்டு அடுக்களையில்(ரொட்டி சால்னா தவிர்தலாக) கண்டிப்பாக நடந்தே தீரும் என்று உறுதியுடன் சொல்லிக்கொள்கிறேன்.

கடலென புறப்பட்டு ஆதரவு தாரீர்.

20 comments:

Anonymous said...

oru bangalore trip podungalen kudumbathodu

verum salna mattum illamal briyaniyum samaithu virundhu vaikiren

bt

expertdabbler said...

ipdi ellam sonna epdi?

aluthama surukama solren paarunga..

blog ulagin tsunami, thirunelveli theeran, london sooran, thamizhagathin vidivelli, indraya thamizhagam...

"டுபுக்கு அழைக்கிறார்" *

thaedhi : 5th of aug 2006, nyaayiru maalai mani 4.30 mudhal 6 PM varai...

:D

*
varubavargalukku briyani + quarter dubukku selavil kudukapadum...

expertdabbler said...

naanum en friends um varlaamnu irukkom...

friends peru..

pasupathi pandian
john pandian
matrum avargaladhu sishya kedigal!!

epdi vasadhi??

பொன்ஸ்~~Poorna said...

//மற்ற அகில இந்திய/ இன்டர்நேஷனல் வலைப்பதிவர் சந்திப்புகள் மாதிரி நீங்கள் சாப்பிடும் போண்டாவுக்கு நீங்களே காசு கொடுக்கவேண்டாம்.//

//என்னைத் தவிர ஒருதருமே வராவிட்டாலும்//
என்ன தைரியத்துல முதல் வாக்கியத்தைச் சொன்னீங்கன்னு தெளிவா புரியுது!!! ;)

Syam said...

வரலாற்றில் இடம் பெற போகும் முப்பெரும் விழாவிற்கு வாழ்த்துக்கள்...
(பின்ன முப்பெரும் விழால ஒரே ஒருத்தர் மட்டும் இருந்தா வரலாறு தான ) :-)

capriciously_me said...

ennoda air tickets anupa vendiya mugavari....err...will mail it to you :)

thanks for sponsoring my flight...

Anonymous said...

இதெல்லாம் கொஞ்சம் ஒவருன்னு தோணுது, எத்தனை பேரு அல்வா குடுக்க போறாங்களோ, பார்ப்போம்.

[ 'b u s p a s s' ] said...

ஏனுங்க.... ரொட்டி வாங்க ரேஷன் கார்டு கொண்டுகிட்டு வரனுங்களா?

Anonymous said...

// நெல்லையில் வலைப்பதிவர் சந்திப்பு

தலைப்பை பார்த்ததும் ஆச்சரியப்பட்டு போனேன். வலைப்பதிவு சந்திப்பு வரலாற்றில் நெல்லை சீமையின் பெயரையும் இணைத்ததற்கு வாழ்த்துக்கள்.

ஆகஸ்ட் 15 வாக்கில் நீண்ட விடுமுறை வருவதால் ஆகஸ்ட் 5 வாக்கில் ஊர்ப்பக்கம் வருவது கடினம். முப்பெரும் (!!!) விழாவாய் அமைய வாழ்த்துக்கள்

ambi said...

அண்ணாச்சி! நாம ரெண்டு பேரும் சந்திக்க போவதை இப்படி ஒரு விழாவா எடுத்துபுட்டீங்களே..? :)
புல்லரிக்குது போங்க!

இடம் நெல்லையா? அம்பையா?

தேதி மாற்றம் உண்டா? aug 7, 8 or 9 may be fine. who are other co-bloggers..?

Anonymous said...

WA, tirnelveli kke halwa vaa? enne statement solliteenga...

andha daiyiriyathule thaan dubukku saar tirunelveli le vizhaa kootaraar.
varavangalukku aaluku kaal kaal kilo alwa pottalam kodutharamlei..enne.

Anonymous said...

I thought you are in London??? Any plan of arranging a flight for bloggers flying from UK to Nellai? Add me too ;)

Dubukku said...

bt- thangachi, romba tight schedule this time.Mudinha kandippa varrom. Will update here If I change my plans. Many thanks for your invitation...(cha thirunevelila irundhirukka koodatha neenga :P)

PK - ada ada ada...ithukku than padichavangala pakkathula vechukanumngrathu...aanalum tsunamilam konjam over. (Quarter adhu ithunu ethavathu eduthu vudatehengaiya...kootam kooraiya picchukkum appuram thundu thaan..)
Anne party kudurana kuduthutu poren...adhukkethukku avangalam koopitikittu :)

பொன்ஸ் -யெக்கா...எதுக்கு மேற்கோளெல்லாம் காட்டி மானத்த வாங்கிறீங்க...டேய் அக்காக்கு ஒரு பார்சல்....

Syam - ரொம்ப நன்றியண்ணே....உங்க ஆதரவு என்னிக்கும் நமக்குத் தேவை

Dubukku said...

Capri - air ticket thaane..konjam porunga...naanga poitu andha ticketa anuppi vekirom...
enna thanks ellam sollikittu :P

WA- ஓவரா..இதுவா...இப்படியெல்லாம் முப்பெரும் விழாவ அவமதிக்காதீங்க

busspass - ரேஷன் கார்டு இல்லைன்னா வோட்டர்ஸ் ஐடென்டிட்டி கார்டு இல்ல பாஸ்போர்ட் இருந்தாலும் ஓகே...ஆனா இதுக்கெல்லாம் வீட்டுக்குப் பார்சல் கிடையாது :)

Dubukku said...

Vignesh - அடடா...உதைக்குதே...என்னாங்க....ஏற்கனவே ஏகப்பட்ட பேர் வராங்க...நீங்களும் வரமாட்டேன் சொன்னா எப்படீங்க...கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ட்ரை பண்ணுங்க தல

ambi - வேற் யார் வராங்கன்னு சபைல கேட்டு மானத்த வாங்காதடா...
நிறைய பேர் வரேன்னு அல்ரெடி புக் பண்ணியிருக்காங்க...அனேகமா அடுக்களை தான்ன்னு நினைக்கிறேன்...:)

anony - kootam serndhirukkaratha paartha aalaalukku oru kilove kudukalam :)))

injey - //Any plan of arranging a flight for bloggers flying from UK to Nellai?//

Plan ellam civil engineering friend kitta solli irukken...detaileda pottu thareennu solli irukkar :))

நெல்லைக் கிறுக்கன் said...

ஆஹா.. நான் ஊர்ல இல்லாத நேரத்துல என்ன வரச்சொல்லுதீரே. அடுத்த வருசம் வருவீருல்ல அப்ப உம்ம நேர்ல பாத்து பேசுதேன்.

உம்ம நெல்லை மாநாட்டு படங்கள் எல்லாத்தயும் பாத்து மனச தேத்திக்கிடுதேன்.

ரொட்டி சைவ சால்னா மட்டும் தானா, இல்ல ஆம்லெட்டும் உண்டா?

இராமச்சந்திரன் said...

ஒருத்தன் கொஞ்ச நாள் ஊர் பக்கம் வரலைன்னு முடிவெடுத்தா...உடனே ஆரம்பிச்சுருவீங்களே கொண்டாட்டத்தை. சரி முடிஞ்சா proxy arrange பண்றேன்.

வாழ்த்துக்கள்.

நீங்க ஊருக்கு போறீங்களா என்ன ?

நாகை சிவா said...

நான் கேட்க இருந்த கேள்வியை எங்கள் சங்க மகளிர் அணி தலைவி ஏற்கனவே கேட்டு விட்டதால் அவர்களுக்கு நன்றி கூறி விடைப் பெறுகின்றேன்.
நன்றி.
டுபுக்கு ஜஸ்ட் மிஸ்

Dubukku said...

நெல்லைகிறுக்கன்- யோவ் முடிஞ்சா வாருமேயா...உங்களல்லா பார்க்கலாம்ன்னு பார்த்தா ஒருத்தரும் வரமாட்டிக்கீங்களே...:(((

இராமச்சந்திரன் -நீங்களும் வாங்களேன்யா ஆமாய்யா தனிமெயில் தட்டியிருக்கேன் :)

நாகை சிவா - உங்க சங்கத் தலைவி சொன்னமாதிரி தான் ஆகும்போல இருக்கு இங்க...அனேகமா அடுக்களை தான் :))

Selva said...

eppa, neenga pesudhadha kettaale pasikke! Enga irukkeeya? Naan ippa london la..

Namma ooru aalunga inga yaarachum irundha oru mail a podungalen.. jeyand@gmail.com

Post a Comment

Related Posts