Friday, April 28, 2006

கிரிப்டிக் கதைகள் - காதல் கதை

முன்குறிப்பு - தமிழ் கூறும் நல்லுகம் இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்த மாதிரி கதைகளில் ஒரு சின்ன க்ளூ கதையில் இருக்கும். அதைப் பிடித்துவிட்டீர்கள் என்றால் அதற்கப்புறம் கதையை நீங்களே சொல்லிவிடலாம். கதை என்று ஒன்று ரொம்ப இருக்காது ஆனால் சொல்லும் விதத்தில் தான் எல்லாம் இருக்கிறது. இதை ரொம்ப நாளாக ட்ரை செய்யவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். முதல் முயற்சி. கேவலமாக இருந்தால் வழக்கம் போல் பின்னூட்டத்தில் காறித் துப்பவும்.
*****************************************

எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. அவள் காதலைச் சொன்னதிலிருந்தே இப்படித் தான். மஹாதேவனிடம் எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறேன்.அவள் ரொம்ப பெரிய இடம். அவ அப்பா மத்திய அமைச்சர். எனக்கு அதை நினைத்தாலே உதறும். மஹாதேவனிடம் சொன்னால் எனக்கு பித்துப் பிடித்திருக்கிறது, இந்த பயம் அனாவசியம் என்பான். ஆனால் எனகுத் தான் தெரியும் அண்ட்ராயர் தெரிய ஆறு தடியன்கள் அவள் வீட்டில் எப்போதும் காவலுக்கு இருப்பார்கள். கம்ப்யூட்டர் க்ளாசில் சேர்ந்து நான் காதலைப் படிப்பேன் என்று நினைக்கவே இல்லை. முதல் தரம் அவள் என்மீது தெரியாமல் மோதிய போதே அந்த தடியன்கள் முறைத்தார்கள். மஹாதேவனிடம் சொன்னதற்கு உலகமே இப்பிடித் தான் இதுக்கெல்லாம் பயந்தா எப்பிடிடா சினிமால்லாம் பார்த்ததில்லையான்னு கிண்டல் செய்தான். அப்புறம் ப்ராஜெக்ட் வொர்க் உன்கூட செய்யலாமா என்று அவள் கேட்ட போது என்னால் ஏனோ மறுக்கமுடியவில்லை.

அப்புறம் நீ ஏன் ப்ரெஞ்ச் குறுந்தாடி வைத்துக் கொள்ளவில்லை என்று கேட்டாள். சத்யமில் இங்கிலீஷ் படம் பார்க்கும் போது கன்னத்தோடு கன்னம் உரசி உன் குறுந்தாடி குறு குறுவென்கிறது எடுத்துடு என்றாள். நீ என்னை உண்மையிலேயெ காதலிக்கிறாயா என்று கேட்டால் முத்தம் தருவாள். மூன்றாவது தரமாய் வேறொரு நாள் கேட்ட போது முத்தத்துக்குப் பதிலாக கெட்டவார்த்தையில் திட்டினாள். உங்கப்பாவுக்கு தெரிந்தால் என்ன ஆகும் என்று நான் முகத்தை தொங்கப்போட்டதற்கு திரும்பவும் முத்தம் கொடுத்தாள். துப்பட்டாவை முக்காடு போட்டுக்கொண்டு பைக்கில் பின்னாடி ஒட்டிக் கொண்டு ரோட்டுக் கடையில் பரோட்டா வாங்கித் தா என்பாள். இப்படி ஒரு நாள் பரோட்டா சாப்பிடும் போது தான் ஒரு அண்ட்ராயர் தடியன் எங்களைப் பார்த்துவிட்டான்.

அதுக்கப்புறம் அவ அப்பா அவசரக் கல்யாணம் ஏற்பாடு செய்தார். கல்யாணமானாலும் இப்பவும் என்னைப் பார்ப்பதற்கு டெய்லி வீட்டுக்கே வந்து விடுவாள். தோளில் சாய்ந்து கொண்டு என்னிடம் பேசாமல் இருக்கமுடியாது அவளால். எனக்குத் தான் இன்னும் பயமாய் இருக்கும். எங்கள் விட்டில் எங்களை கண்டுகொள்ள மாட்டார்கள் ஆனால் அந்தத் தடியன்கள் பார்த்துவிட்டால்? மஹாதேவனிடம் சொன்னால் எல்லாம் நான் பார்த்துக்கிறேன் கவலைப் படாதே என்பான்.

வாசல் பெல் அடிக்கிறது. மஹாதேவன் தான். "அப்பா கதவைத் திறங்கோ மஹாதேவன் வந்தாச்சு"

என்ன...பையன் என்ன சொல்றான். எதாவது இம்ப்ரூவ்மென்ட் இருக்கா?

மஹாதேவனே தான். என்னப் பார்த்து என் காதல் கதையைக் கேட்காமல் இருக்கவே முடியாது அவனால்

இல்லை டாக்டர் அப்பிடியேத் தான் இருக்கான். இன்னும் அந்தப் பொண்ணையே நினைச்சுண்டு இருக்கான். அந்த மினிஸ்டர் கட்டையில போக...எம் புள்ளைய ஆள வைச்சு அடிச்சு இப்பிடி பைத்தியமா அலையவிட்டுட்டானே..உருப்புடுவானா அவன்...

அப்பா எப்பவுமே இப்படித் தான் மஹாதேவனைப் பார்த்தா புலம்ப ஆரம்பித்துவிடுவார். அவர் கவலை அவருக்கு. ஓ.கே மஹாதேவன் கிட்ட இன்னிக்கு அவ என்ன சொன்னான்னு சொல்லனும். உங்களை அப்புறமா பார்க்கறேன். டேக் கேர்.

25 comments:

லதா said...

// இப்படி ஒரு நாள் பரோட்டா சாப்பிடும் போது தான் ஒரு அண்ட்ராயர் தடியன் எங்களைப் பார்த்துவிட்டான். //

இதற்குப் பிறகு கதை படிக்கவேண்டுமா என்ன ?:-)))

Dubukku said...

Sorry Latha. I think it was too cryptic. correct seithirukken last 2 para's thirumba padichu parunga :)

Kumari said...

Indha Kaadhal pithunu solvangale, adhuva??
Irunga thirumba padikkiren. En maramandaikku purinjadhu correctanu neenga sollunga :)

Prabu Raja said...

ஹ ஹ ஹா...

ரெண்டு மூணு தரம் படிச்சதுக்கு அப்பறம் ஒரு வழியா புரியுது..

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

டுபுக்கு, நன்றாகத் தான் இருக்கிறது. முன்குறிப்பு என்று போட்டு விட்டதால், எதையோ தேடிக் கொண்டே படிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பை, 'பின்' பண்ணியிருக்கலாம் :-)

ambi said...

Mmmhm..Another good one. i think sujatha used to write these kind of stuffs.

Usha said...

Enjoyed it. very nice one.

Jeevan said...

Kathai, nalla thaan irukku.

illai doctor appadiya thaan irukkan: yaruppa intha doctor?

Jinguchakka said...

nallA irukku!
"kAdhal" padathai yevvalvau dhadavai pArtheenga?
:-)

Anonymous said...

*rolls eyes* err, *scratches head* :P Honestly, I don't understand. Never mind me.

Hope you have a good day.

Anonymous said...

athavthu dubukku sir,namaku etho varumo athai than naam pannanum,correcta??????

ambi said...

*Ahem*, forget to add a point, the Film Kudaikkul mazhai theme is also like this, right..?

இராமச்சந்திரன் said...

கதை சூப்பரப்பு....

இரண்டு நண்பர்கள் காதலைத்தவிர வேறு ஏதும் பேசாததால்...ஓரளவு இப்படித்தான் என்று யூகித்துவிட்டேன். நீங்கள் சொன்னதைப்போல் அந்த க்ளூவை சரியாக கணித்து விட்டால் யூகம் பொய்க்காது.

இதைப் படித்ததும் என் நண்பர்கள் கதை நியாபகம் வந்தது. இது வித்தியாசமானது. இங்கு (காதலன் செலவில்) தூது போனவன் காதலனாக மாறி யாருக்காக தூது போனானோ அவனிமே தர்ம அடி வாங்கினான்..(அவன் முதுகுல பதிந்த வரியைக் கூட அடி வாங்கிய 4 நாளுக்கு பிறகும் பார்த்தேன்).

Anonymous said...

modhalla suthamaa purila...apporam ellaaroda comments-um padichu, thirumbi padichen...oru maadhiri purinjirukkunnu nenakkaren....en sir? en sir ipdi? solla vandhadha theliva solla vendiyadhu dhaana? ;-))

Anonymous said...

Hi Dubukku, clue, criptic-nu solli yen tension yethureenga? simple-aana kathai. mahadevan thaan doctor.oru mananilai sariilathavan paarvaiyil kadhai selkirathu. avlavuthaane? ( enakku purinthadhu ithuve- am i right?veru ethenum vilangatha murmum irukkiratha? comments paarthu confuse ayitten- ennai thelivikkavum -nanri)

Anonymous said...

இதைபோல் ஈ-மெயிலில் ஒரு கதை படித்திருகிரேன். அக்கதையில் மகாதேவன் காபி டே செல்வான். இதில் வீட்டில் இருக்கிறான்.

ஆனால் கதை சொன்ன விதம் அருமை. வாழ்த்துக்கள்.

Dubukku said...

Kumari - correct thaanga. anaa kaathalna vandha pithu illa...adiyaalnala vandha pithu :)

பிரபு ராஜா - ரொம்ப மண்டை காய வைச்சுட்டேனா? :))

செல்வராஜ்- நன்றி செல்வராஜ். நீங்க சொன்ன மாதிரி செய்திருக்கலாம்...அனா இங்க பாருங்க...முன்குறிப்பு போட்டே நிறைய பேர் புரியலைன்னு சொல்லிட்டாங்க :)

ambi - danks. HE is a King in these kind of techniques.

Usha - ahaa romba danks

Jeevan - danks. Mahadevan thaan doctor. Doctora summa per solli refer pannaran.

Dubukku said...

jinguchakka- danks. kAdhal is a bit different story line isn't? though the end result is same :)

thewoman - ohhh sorry. But I like your spirit very much. yeah had a great day and hope the same with you.

anonymous - enna sir indha kathai kevalama irukkunu sollreenga athane? danks :)) but ithukaga anonymousa sollatheenga thairiyamave solalam:) but muyarchiya kaividuvenanu keteengana nope :P

Dubukku said...

ambi - Kudaikul mazhai yeah. This storyline is very common and there are a ton load of films which have dealt with this subject in cinemas :)

Ramachandran - haha your friends experience was very unique :)) (Minsara kanavu?) Namma makkal cinemala ella angleyaiyum kaati tholaichitanunga :))

Sundaresan - etho chinna paiyan mannichu vitrunga sir :))

Guru - You are absolutely right. The point is not the subject or story. Its the way of telling. I was experimenting it with a style I liked and wanted to try.

injey - ஆஹா...இதே மாதிரி இ.மெயிலிலும் வந்திருக்கிறதா என்ன? But you are absolutely right its the style I was playing around with.dankss

Uma Krishna - yes I didn't bother with the story. Casual writing missing...maybe because i was conscious about the style. danks for the feedback.

P B said...

mela irukira buld up lines remove pannidungo..athu mislead pannuthu. Matrapadi sooperungo.

Anonymous said...

mmmmm.. seeen so much in cinemas..

Ending seen only in reality..

Ananthoo said...

good attempt dubuks..
konjam sujatha, konjam money ratnam and konjam dubukku..so out put is good..style perfectly fine, catch a stronger case and move it fast..(ithukku thaan advises munkurippulaye kekkatheenga solrathu! easya advise kuduthomla)

Unknown said...

டுபுக்கு, கதை நல்லா இருக்கு. 7G / Rainbow Colony படம் நியாபகம் வருது..

nice twist.

:)

யாத்ரீகன் said...

ஒன்னும் புரியல சாமியோவ்.. :-)

Ram said...

Good one, Dubukku...!

Post a Comment

Related Posts