Monday, March 20, 2006

நான்கெட்டு நீகெட்டு கிரிகெட்டு

மூக்கை ஒழுக்கிக் கொண்டு யாராவது பார்க்கிறார்களா என்று சுத்திப் பார்த்துவிட்டு அதை அப்பிடியே டிரவுசரில் தொடைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த விளையாட்டு எங்க ஊரில் பிரபலமாயிருந்தது. கோலி, பம்பரம், லக்கோரி(கேள்விப் பட்டதுண்டா?), கிட்டிப்புல் (கில்லியை நெல்லை ஜில்லாவில் இப்பிடித் தான் சொல்லுவோம்) லிஸ்டில் கிரிக்கெட்டும் சேர்ந்து கொண்டது. தெருவில் எதாவது ஒரு இ.வ.வை ஏத்தி விட்டு, அது அவங்க அப்பாவை அரித்துப் புடுங்கி பேட் வாங்கும், அதை நாங்கள் எல்லாரும் சேர்ந்து பஜனை பாடுவோம். ஸ்டம்ப் செட் இல்லாத கால கட்டத்தில் நாய் மாதிரி தெருவில் ஒரு போஸ்டை விட மாட்டோம். கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டு மாமி கண்டன அறிக்கை வாசிப்பார்கள், அடுத்த போஸ்டுக்கு போய்விடுவோம்.

நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சன்னதித் தெருவில் என்றாலும் மாமாவுக்கு குழந்தைகள் இல்லாத காரணத்தினால் அவர்கள் வீட்டில் தான் பத்து வயதிலிருந்து வளர்ந்தேன். மாமா வீடு வடக்குத் தெரு. வடக்குத் தெரு சன்னதித் தெருவை விட இரண்டு மடங்கு பெரிது. அங்கு பையன்கள் கொஞ்சம் விவரம். சன்னதித் தெருவில் அவ்வளவு போறாது என்பதால் என்னை கேப்டனாக போட்டு ஒரு டீம் ஆரம்பித்தோம். "லகான்" டீம் மாதிரி தான் எங்கள் டீமும். டீமில் நானும் இன்னும் மூன்று பேரும் தான் விஷயம் தெரிந்த மாதிரி பந்தா விட்டுக் கொள்வோம். மத்ததெல்லாம் வேனில் பிடித்து வந்த மாதிரி தான் இருக்கும்.

"கன்னுக்குட்டி" கணேசன்- மஞ்சு விரட்டில் கன்னுக்குட்டியை பிடிப்பது மாதிரி தான் பந்தை பிடிப்பான். பந்து அவனை நோக்கி வந்தாலும் எதிர் கொண்டு பிடிக்கமாட்டான். பந்தைப் போக விட்டு விரட்டிப் பிடிப்பதற்கு தயாராய் ஒரு பக்கமாய் திரும்பி ரெடியாய் நிற்பான். சில சமயம் பந்து அவனை தாண்டுவதற்கு முன்னாடியே ஓட ஆரம்பித்துவிடுவான். கையை கன்னுக்க்குட்டியை பிடிப்பது மாதிரி வைத்துக் கொள்வான். "குட்டி மணி" ஸ்டெம்ப் உயரம் தான் இருப்பான். எண்ணிக்கைக்கு சேர்த்துக் கொண்ட பார்ட்டி. "பயந்தாங்கொள்ளி பாலாஜி" குட்டி மணியை விட கொஞ்சம் உசரம். ஆனால் தெனாலி மாதிரி ஸ்டம்ப், பந்து, பேட் என்று எல்லாத்துக்கும் பயப்புடுவான். பேட்டிங் போது ஸ்லோகமெல்லாம் சொல்லுவான். "காட்டான் கணேசன்" - பேட்டை சுற்றுவதைப் பார்த்தால் எல்லோருக்கும் பயமாய் இருக்கும். பந்து பேட்டில் பட்டால் சிக்ஸர் தான் ..ஆனால் பாதி நேரம் நல்ல ஜோராய் காத்து வரும். மீதி நேரம் பந்துக்கு பதிலாக பேட் தான் அவன் கையிலிருந்து பவுண்டரிக்குப் போகும். "வயித்த வலி" சேது - பீல்டிங் போது மட்டும் இவனுக்கு வயித்த வலி வரும். ஓரமாய் மர நிழலிலிருந்து தான் பீல்டிங் பண்ணுவான். வெய்யிலில் வேறு எங்கயாவது ஃபீல்டிங் செய்யச் சொன்னால் வயித்தவலி ஜாஸ்தியாகி விடும். "பேட்டிங் பாபு" - இவன் பேட்டிங்க் பண்ணி முடிந்தவுடன் கரெக்டாக வீட்டிலிருந்து "அம்மா கூப்பிட்டா" என்று ஆள் வரும், பீல்டிங் மொக்கை போட்டுவிட்டு சமர்த்தாக போய்விடுவான். "செட்டு" சுப்பிரமணி - இவனை நாங்கள் எத்து ஏத்துன்னு ஏத்திவிட்டதின் பலனாக அவன் அவங்க டெல்லி மாமாவிடம் சாமியாடி கிரிக்கெட் செட் வாங்கியவன். அதை டீமுக்கு தாரை வார்த்த வள்ளல். ஆனால் வள்ளல் க்ளீன் பவுல்ட் ஆனால் தான் ஒத்துக்கொள்வார் மத்ததெல்லாம் அவுட் இல்லை. எதிர் கேள்வி கேட்டால் செட்டை எடுத்துக் கொண்டு பேக்கப் சொல்லிவிடுவான் அதனால் இவன் பேடிங்க் பிடிக்க ஆரம்பித்தால் போல்ட் ஆகவேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுதலாக இருக்கும். "மொட்டை" மணி - நல்ல உளத்துவான்(ஏமாற்றுவான்). கீழே உருண்டு போன பந்தையும் கேட்ச் பிடித்தேன் என்று அவுட் கேட்பான். எப்பவோ மொட்டை அடித்துக் கொண்டதால் மற்ற மணிகளிடமிருந்து வித்தியாசப் படுத்துவதற்காக நிரந்தர மொட்டை மணியானான். "பந்துலு" - பிள்ளையாண்டன் தெலுங்கு மணவாடுலு.. ஆளுக்கு இருபத்தைந்து பைசா போட்டு தான் பந்து வாங்குவோம். ஆனால் பந்துக்கு பைசா பிரிக்கும் போது மட்டும் "பந்துலு" கரெக்டாக காணாமல் போய்விடுவான். கேட்டால் "நைனா சூப்பிஞ்சு" என்று தெலுங்கில் கதை விடுவான். இந்த பசங்களை தவிர இன்னும் மூனு நாலு ஏனோ தனோ அதோடு பந்தா விடுவதற்கு நாங்கள் மூன்று பேர் வேறு.

தெருவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு தனி தில்லு வேண்டும். கிரிகெட் என்றாலே மாமிகளுகெல்லாம் ஆகாது. மாமிகள் என்றால் சினிமாவில் மடிசார் கட்டிக் கொண்டு பாட்டுக்கு பின்னால் குடையை பிடித்துக் கொண்டு ஆடுவார்களே அந்த மாதிரியெலாம் கிடையாது. "எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்து வைப்பாளா"ன்னு பாட்டு பாடினா முகரக் கட்டைய பெயர்த்துவிடுவார்கள். அதுவும் பந்து அவர்கள் மேலே பட்டுவிட்டது என்றால் அவ்வளவு தான் அப்பிடியே ஓடிவிட வேண்டும். இருட்டின அப்புறம்தான் வீடு திரும்ப முடியும். அதற்குள் அந்த மாமி பந்தை அருவாமனையில் ரெண்டாக கிழித்து வீட்டில் கொடுத்து நம்மளப் பத்தி நல்லதா நாலுவார்த்தை சொல்லிவிட்டுப் போயிருப்பார். சில மாமிகள் வீட்டிற்கு முன்னால் கிரிக்கெட் விளையாட கூடாதென்று நிரந்தர ஸ்டே ஆர்டர் இருக்கும். இதையெல்லாம் மீறி விளையாடுவதில் ஒரு தனி த்ரில் இருக்கும். ஊரில் தெருக்களெல்லாம் கோமணம் மாதிரி நீளமாக தான் இருக்கும். அகலம் அவ்வளவாக இருக்காது. வீடுகளுக்கு உள்ளே அடிக்காமல் நேரே பவுண்டரி ஷாட் அடிப்பது என்பது தனிக் கலை. இதில்லாமல் எதாவது மாமி வீட்டில் அடித்து பந்து போச்சு என்றால் அடித்தவன் தான் மீட்பு பணியில் இறங்கவேண்டும். ஒரு வேளை மாமி பந்தை கைப்பற்றி "அருவாமனையேஸ்வரா" என்றால் அடித்தவன் தான் கைக்காசு போட்டு பந்து வாங்கவேண்டும்.

-தொடரும்

33 comments:

Anonymous said...

"கன்னுக்குட்டி" கணேசன் - i am still laughing. excellent post.

Jinguchakka said...

indha cycle tyre'ai kurukku vAttil vetti "rings" senju oru chinna paper urundai'yai sutri andha rings yellAthaiyum pOttu ball senjadhu illaya? Chennai'la adhu dhAn some 15 years back prabhalam. ippO irukkara idathukku cricket software dhAn'nu nenaikaraen.

Siva said...

//"மொட்டை" மணி - நல்ல உளத்துவான்(ஏமாற்றுவான்).

நானும் நெறய உளத்திருக்ரேன். :-))..
கொஞ்ச நாளாத்தான் இந்த தமிழ் வலைப்பதிவுகள பார்த்துகிட்டு வாரேன். பின்னூட்டம் விடனும்னு நினச்சுகிட்டே இருந்தேன். இது தான் என் முதல் பின்னூட்டம் !!

அருமையான வலைப்பதிவு!!

Anonymous said...

super.. as usual..
subbu,

Anonymous said...

//சில சமயம் பந்து அவனை தாண்டுவதற்கு முன்னாடியே ஓட ஆரம்பித்துவிடுவான்.//

Very good.....

i am still laughing..

Anonymous said...

உங்க பேர் என்ன அப்பு? அதை சொல்லலியே

Anonymous said...

லக்கோரி
What is this?

Is it a prelude for another blog??

Nice and hilarious post... Keep it up

Subhashri said...

reminds me of a time when in my road we used to fire a atom bomb keeping it at the window sill of the opp house..summa koluthittu odiye poiduvom..velila vandhu maami bajana paadindruppa..:)

Paavai said...

madyana neram mamis ellam radio ceylon kettunde arai thookathla irukkum bodhu, ball jannalla pattu adhu kooda - howazatnu oru alaral - mami - hair spreading and dancing.. looks like everywhere mamis have been the same ...

london leyum mami ellam ipadithaana ellai cricket aada vidarangala

Jeevan said...

Very sad that i cant read your blog, but i read your post Name in the http://thamizmanam.com/search.php?cat[]=12.

How are u Dubukku? how is your thangamani and your Kids? :)

ambi said...

Hi dubukku anna,

same blood here.. kallidailayum ipdi thaan..y so loooong gap..?

Muthu said...

:-). kalakkal dupukku.

Kowshic said...

""எங்கம்மா உங்கம்மா நம்ம சேர்த்து வைப்பாளா"ன்னு பாட்டு பாடினா முகரக் கட்டைய பெயர்த்துவிடுவார்கள்."

வா.வி.சி! LOL!!

இராமச்சந்திரன் said...

அக்ரஹார நடப்புகள் எல்லா ஊர்லயும் ஒன்னு போலதான் இருக்கும் போல (அது ஏன் சொல்லி வெச்சாப்ல அருவாமனையதான் யூஸ் பண்றா ?). ஒண்ணு கவனிச்சா தெரியும். இந்த நறுக்கற வீட்ல ..நம்ம வயசு பையன் இருக்க மாட்டான்...அல்லது அவன் நம்ம செட்ல இருக்கமாட்டான். என்ன தான் உண்மையான ப்ளே க்ரெளண்ட் கொஞ்ச தொலைவுல இருந்தாலும் (எங்க மைதானம் பாளையங்கோட்டை கோபாலசுவாமி கோவில் மேல மாடத் தெரு) நீஙக சொல்ற மாதிரி இந்த மாமிகள் எதிர்ப்புடன் விளையாடறது தனி த்ரில் தான்.

உங்களுடைய டாபிக் ஒவ்வொண்ணும் எங்க மனக்கதவை தட்டி ...பால்ய பிராயத்துக்கு எங்களையும் அழைத்துச்சென்று நிக்ழ்வுகளை அசை போட செய்கிறது.

Goodwork Keep it up.

SLN said...

Hi

First time (commenting) here. I am from a different place (Chennai) with different set of people but there is still lot of similarities to make me nostalgic.

Enjoying your humour a lot.

Thanks
Slakhs

neighbour said...

peeru yellam sooper... cha kaalori, killi, koogli, cricket hmmm yellam palaya ninaivugal..

ethanai jannal, ethnai light, ethani thitukaal vaangiroopoom..

Yellam palaiyaa ninivugal...

Kadaisiyaaa unga peru ennanu sollavae illiayae.. "trouwser pandiyaa"

daydreamer said...

10 pasangala onna valarndhathaala seasonukku thagundha padi ella vilayaatume nadakkum. chennai la road la international games (gilli, goli, 7 stones, bambaram, alisbaai (i spy thaan appdi maruvi maari pochu))ellam aada mudiyaathu. aaana veetu compoundla allowed. adhuvum madhyaanam maaminga ellarum thalaya virichu pottu nalla korattai vittukittu thoongum podhu (andha naal la avvlo serial kidayaadhu parungo) "apeeto" endru onnu kathum parunga... maaami madhyaana thookam ketta veri la "kazhichalla poga" "kattaila poga" "saniyane" "peedaye" endru paarapatchame illama sagasranaamam paaduvaanga.. jolly ya thaan irukkum.. enna onnum "sayangalam unga amma kitta pesaren" nu sollitaa thaan konjam light aa vayaru kalangum...

கைப்புள்ள said...

போன பதிவுல நம்ம போட்டுக்கிட்ட 'டீல்' பிரகாரம்...சூப்பர் பதிவு தலைவா!

//மாமிகள் என்றால் சினிமாவில் மடிசார் கட்டிக் கொண்டு பாட்டுக்கு பின்னால் குடையை பிடித்துக் கொண்டு ஆடுவார்களே அந்த மாதிரியெலாம் கிடையாது. //

புரியுது...புரியுது. க்ளாஸ்லே இங்கிலீஷ்ல தான் பேசணும்ங்கிற கட்டாயம் இருக்குற ஸ்கூல்ல சேர்ர வரைக்கும் நமக்கும் எல்லாரும் மாமியா தான் இருந்தாங்க...அங்கே சேந்ததும் அவங்கல்லாம் ஓவர்நைட் ஆண்ட்டியானது வேற விஷயம். மாமிங்க கிட்ட திட்டு வாங்கக் கூடாதுன்னு எங்க வீட்டுல ரோட்டுல கிரிக்கெட் ஆடல்லாம் விட மாட்டாங்க. அதனால வீட்டு மொட்டை மாடில அண்டராம்ஸ் கிரிக்கெட் தான். இருந்தாலும் தெருவுல கிரிக்கெட் ஆடற பசங்க ஒரு பூக்கார ஆயா மேல பந்தை அடிக்க, அவங்க அதை கொண்டு போய் சைபன்ல போட்டத எல்லாம் லைவா பெவிலியன்ல ஒக்காந்து பாத்துருக்கேன்.அதெல்லாம் ஒரு தனி சுகம்.

Anonymous said...

Miga arumayaina valai padhivu. Totally brings back memories from Triplicane.
I'd like to comment in Tamil. (though I can't speak 2 lines without an English word in it :)
Tamizhil comment seyya neengal endha "font" alladhu "editor" ai reccomend seigireergal?

Anonymous said...

மிக அருமையான வலை பதிவு, டுபுக்கு அவர்கலெ. இனி உஙல் blogக்கு நானும் ஒரு ரெகுலர். :)

Note to self: ஆஙிலத்தில் RTFM என்ரு ஒரு சொல் உல்லது . அதை எல்லொரும் புரின்து கொன்டால் Linux இயக்குவது இன்னும் சுலபம் ஆகி விடும்.

expertdabbler said...

unga post quality increase ayitte pogudhu with each passing week. pramaadham.!!wonderful humour!!

Anonymous said...

Hi Dubuks, this reminds me of my school days. i have also done all these 'fielding' 'escaping'
techniques like 'vayathavali''naina soopichu(pilicindhi)' kinda stuff. you almost covered all possible funny scenarios of alley cricket i think. nicknames are really funny.lol.great post.

Dubukku said...

anon - danks :)


Jinguchakka - Oh yesss adhuvum romba prabalam enga oorlayum :) but mela patta sema vali valikkum illa? yes very true indha kaalthula cricket software la thaan vilayada poranga

சிங்கை சிவா - வாங்க வருகைக்கும் பின்னூட்டதுக்கும் நன்றி. ஆமாங்க ஹி ஹீ நானும் நிறைய உளத்திருக்கேங்க...

subbu - danks thala

anon - danks (anon 1um neenga thaana? adhe style la irukku comment?)

Partha - உண்மையாவே எனக்கு பட்டப் பெயர் கிரிக்கெட்ல கிடையாதுங்க...இருந்தா மறைக்காம சொல்லிடுவேங்க...
(ஒரு ஜிகிடி கபாஸ்கர்ன்னு கூப்பிடும் அதத் தவிர)

Venkat - danks. Laggori - some ppl call this 7 stones. Its an interesting game. eezhu kalla verticala adukki vekainum before the opponent team gets you (by throwing the ball at you). Sema thrilling game

bhooma - amaama adha maadhiri koothellam naangalum neraiya adichirukkom with rockets :))

Dubukku said...

Paavai - inga road/street la vilayadi parthathilla...everybody goes to park. I have also played once in the park here with officemates. jolly a irundhuthu :)

Jeevan - oh no..innum font work pannalaya...sorry jeevan. danks we all are fine and hope the same with you and your family.

LondonKaran - yes very creative and funny isn't..neenga indha kaala pasangala pathi sollarathu romba unmainga...I used to say that to my daughter

Ambi - yeah I think its same everywhere. Some work pressures adhan konjam gap.

Muthu - danks Muthu :)

DNA - வா.வி.சி - ??? சிரிக்கிறீங்கன்னு மட்டும் தெரியுது :)
danks

Ramachandran -danks.ஆமாங்க கரெக்ட்..எங்க ஊர்லயும் கிரவுண்ட் கொஞ்சம் தூரம். என்ன இருந்தாலும் தெருவில விளையாடற சுகம் வருமா? உங்களுக்கு இதே மாதிரியான அனுபவங்கள் இருந்திருக்குன்னு நினைக்கிறேன்...சந்தோஷம்...


Slaks - danks for commenting and complementing. yes I think everyone would have similar experiences :))

neighbour - yes very true evlavu udaichiruppom.unmaiyileeyee enakku patta peyar illeenga..irundha thayangama solli iruppen :))

Dubukku said...

daydreamer - :) though you chennaites would have missed this ..there are many other things you ppl enjoyed which we would have missed. Yes thitu vaangama chinna vayasula vilayadatha vilayatum enna vilayattu? :)


கைப்புள்ள ...கரெக்டா டீல மெயின்டெயின் பண்ணறீங்க :)

அண்டர் ஆர்ம்ஸ் கிரிகெட் பத்தி சிட்டில இருக்கறவங்க சொல்லுவாங்க...ஆனா நாங்க அதையெல்லாம் ஒரு விளையாட்டாவே மதிக்கிறது கிடையாது :P


Newton - வாங்க வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி. வந்துகிட்டே இருங்க.. :)

அதென்ன RTFM ரொம்ப டெக்னிகலா பேசறீங்க?


PK - hehe danks. romba puhazhaatheenga sir...koochama irukku :))

Uma Krishna- danks. Nijamave enakku cricketla peyar kidayathunga...irundha thayangama sollidiven... :)

Guru - danks.
haiyoo neengalum fielding escaping aaa? :)))) Hope you didn't take any offence on the telugu stuff? :P

கைப்புள்ள said...

//அண்டர் ஆர்ம்ஸ் கிரிகெட் பத்தி சிட்டில இருக்கறவங்க சொல்லுவாங்க...ஆனா நாங்க அதையெல்லாம் ஒரு விளையாட்டாவே மதிக்கிறது கிடையாது :P//

காலை வாரிட்டீங்க பாத்தீங்களா?
:(((-

Dubukku said...

கைப்புள்ள - கோச்சுக்காதீங்க கைப்பு...நமக்குள்ள இதெல்லாம் சும்மா ஒரு டமாசு தானே...

Pathy said...

The seven stone veera vilayattu referred to as "lagori" in your blog reminds me of the Muduku pazhuthupona days of my schooling days.

I think there are lot of people to share the good times that you had. I read out your Naai Pozhappu weblog to my wife and we had a great time.

Kudos. Keep going

Pathy said...

I could not resist using Control "A","C" and Control "V", when this mail landed up almost at the same time when I was reading your Blog.

I am sure you have some similar terminologies from the "therkathi seemai"

Terms

Street Cricket is also known for its amusing usage of terms, a few of which are given below.

Mattai - Etymology Tamil - The piece of wood to be used as the cricket bat. Need not confirm to geometrical trivialities.

Gaaji - Etymology Unkown - The indian reference for an 'inning'. It is a well known fact that captains of street cricket teams always prefer to bat first irrespective of conditions.

Double Gaaji - Etymology Unkown - An excpetional scenario wherein a batsman can bat twice if there are a shortage of players in the side.

Osi Gaaji - Etymology Unkown - A scenario where some stranger wants to bat for a couple of balls just for fun and then carry on with his work

Over Gaaji - Etymology Unkown - The act of a selfish batsman who purposely retains strike by taking a single of the last ball of the over to enjoy more "Gaaji"ing

Last Man Gaaji - Etymology partly english- A scenario where the last man who is not out with all wickets down gets to play "Gaaji" with no runner. It must be noted that, the fielding team can effect run outs on both the stumps when there is L! ast Man Gaaji

Current - Etymology English - The unique and distinctive way of getting a batsman run out. When a batsman attempts a dangerous run, He could be run out by any of the fielders who just need to land their feet on the stone at the bowlers end.

Adetail - Etymology English - The most funny reference to a batsman being 'Retired Hurt'. [Derived from: At the Tail]

Return Declare - Etymology Unkown - Same as 'Adetail'. But sometimes used, when a batsman crosses a stipulated number of runs say 20 or bats for stipulated number of balls so that others can get a share of "gaaji"ing

Bongu - Etymology Tamil - The slang word used if a team unfairly cheats the other team while playing.

Full Cover - Etymology English - A situation where in a batsmen is taking a half stump guard thereby covering the complete stumps from the view of the bowler. Since stre! et cricket typically do not have a LBW it is very difficult to get a batsman out, if he covers the stump fully

One pitch catch - Etymology English - A rule where a batsman gets out when a fielder catches it even after the ball pitches once. Typically street cricket batsmen do not go for lofted shots fearing to get out (refer the first paragraphy to know why lofted shots are not allowed in street cricket)

One pitch one hand - Etymology English - A slight modification of the above rule where a fielder can use both hands if catching the ball full toss, but has to use only one hand, if the catch is "one-pitch". Typically used to increase the chances of batsmans survival

Sundu - Etymology Tamil- A great forefather of the now popular "super-sub" rule, this rule can be used if a Sothai (poor or bad) batsman's innings has to be played by a good batsman

La Ball - Etymology Englis! h - Last ball of an over

Full fast - Etymology English - Since street cricket pitches are a few yards long, a ball which is thrown with full pace and energy is considered a no ball as it will be impossible to handle such pace with short distance

Thuchees - Etymology Unknown- When batsman/any fielder gets distracted from the game due to highly technical reasons like a vehicle crossing the road when a ball is bowled (with the pitch perpendicular to the road)

Waiteees - Etymology Unknown- Same as 'Thuchees'

Common Fielding - Etymology English- Due to lack of number of fielders, it is possible that people from batting team who are not actually doing batting have to field or do wicket keeping or for that matter even umpiring

Ball Right - Etymology English- When a umpire/batsman declares a wide ball, bowler uses this term to say that the ball was not a wid! e. Typically happens because umpires are from the batting teams.

Dokku - Etymology Unknown- A derogatory term for a defensive shot. Typically a batsman is discouraged from playing such shots because of the constraints of less number of overs and because everyone in the team needs to have a fair amount of gaaji

Baby Over - Etymology English- When a bowler has no hopes of completing his over with lots of wides and no balls he is substituted by a better bowler and the over is called a Baby over, Baby because the first bowler was very amateur

Chain Over - Etymology English- When a bowler bowls two continuous overs. Typically happens when captains fail to calculate correctly the number of overs in the absence of electronic score cards

Uruturadhu - Etymology Tamil- When the bowler is unable to extract any meaningful bounce from the pitch. Sometimes used as a defensive tactic t! owards the deck.

Thadavuradhu - Etymology Tamil- (In the context of cricket) When a batsman is not able to make any contact with the ball using his bat.

Suthuradhu - Etymology Tamil- Same as slogging in cricket towards the deck.

Avishot - Etymology English- Appeal to Umpire for out(run out, catch, etc)

One Side Runs - Etymology English- When teams decide before hand that there are runs only on one side of the wicket due to lack of sufficient number of fielders

Granted - Etymology English- When a batsman hits a reasonable distance from which fetching the ball back is slightly difficult due to technical difficulties already mentioned (like vehicle crossing a road, presence of a thorny bush etc), teams agree that a fixed number of runs are GRANTED

Trials - Etymology English- This is the first ball bowled in the match and it ! is called trials. It is used to gauge the pace and bounce of the pitch and the ball by both batsman and the bowler. Note: The batsman is not supposed to hit this ball, else the fielding will demand him to go and fetch the ball. It's a kind of tactic by the fileding team to not allow the batsman to free his arms.

All-reals..first ball - Etymology English- This indicates the start of the match. Usually the batsman prefer to play "dokku".

Hit the bats after each ball (no term used) - This is the usual practice followed by the batsmen in the middle. This gives little time to take breath and also signal for a quick signal in the next ball. The best part is even if they dont want to discuss anything, they still need to hit the bats. If they miss or doesn't do it properly, they have to come back and make sure that they hit properly. Nice practice.

Dubukku said...

Pathy -vanga vanga...danks. Yes very true all of us have these wonderful childhood days isn't.

that cricket dictionary was wonderful..thanks a ton for posting it here :)

Anonymous said...

Casino Money tyuueooru
No Download Casino
It's always good to stick to such online casino website that can meet your queries whenever you want.
[url=http://www.nhgaa.org/]Casinos Online[/url]
In fact, there is no risk at all.
http://www.nhgaa.org/ - Casino Money
Ensure that the one you're interested in prefer using a trustable and ideal software that you can rely on.

Saravana arun said...

HI Dubu I am saravana from ambasamudram.Do you know chitra studio?naanga than vachirunthom arch kitta...Apparam dubu naanga freinds ellam senthu oru cricket tournament nadathurom, 3-rd varusham nadathurom sir, so ungalaala mudicha Help Panna Mudiyuma sir? Enakku pattar street-la veedu, near Siva store or valli mamy home or meeena maamy home or Ravi medical home...Sir ennaiya coctact pannunga sssarvanan@rocketmail.com march 22 to 25 Tournament Nadakkuthu. contct me sir bye take care

Saravana arun said...

HI Dubu I am saravana from ambasamudram.Do you know chitra studio?naanga than vachirunthom arch kitta...Apparam dubu naanga freinds ellam senthu oru cricket tournament nadathurom, 3-rd varusham nadathurom sir, so ungalaala mudicha Help Panna Mudiyuma sir? Enakku pattar street-la veedu, near Siva store or valli mamy home or meeena maamy home or Ravi medical home...Sir ennaiya coctact pannunga sssarvanan@rocketmail.com march 22 to 25 Tournament Nadakkuthu. contct me sir bye take care

Post a Comment

Related Posts