Monday, March 06, 2006

என்ன ஆச்சு டுபுக்குவிற்கு?

       காக்க காக்க கனகவேல் காக்க
      நோக்க நோக்க நொடியில் நோக்க

முன்குறிப்பு - கோபம் வாழ்க்கைக்கு எதிரி. புத்திசாலிகள் கோபப்படமாட்டார்கள். ரௌத்திரம் பழகுவதற்குப் பக்குவம் வேண்டும். பழகிவிட்டால் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பது விளங்கிவிடும். அதனால் தான் புத்திசாலிகள் கோபப்படமாட்டார்கள்- சுவாமி சுகபோதானந்தா
----------

சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னால் நான் வலைப்பதிய ஆரம்பித்த போது என்று பழங்கதை பேசினால் பொறுமை இருக்காது பளாரென்று அறைந்துவிடுவீர்கள். அதனால் நேராக விஷயத்துக்கு வருகிறேன்.

கொஞ்சம் இல்லை ரொம்பவே பயமாக இருந்தது. அதனால் தான் செவ்வாய்கிழமை என்று சொல்லிவிட்டு இன்றே பதிவைப் போடுகிறேன். பிள்ளையார் பிடிக்க குரங்கில் முடிந்தால் பரவாயில்லை, ஆனால் நான் எலியைப் பிடிக்க எருமைமாடாகி விட்டது.

டுபுக்கிற்கு யார் மீதாவது கோபமா? இல்லை.
எதாவது வருத்தமா? இல்லை.
அப்புறம் ஏன்யா இனி எழுதமாட்டேன் என்று சொன்ன? -நான் எங்க இனிமே எழுத மாட்டேன்ன்னு சொன்னேன்?

என்னய்யா குழப்பற...என்ன தான் சொல்லவர?

ஹீ ஹீ அய்யா பெரியோர்களே தாய்மார்களே அவ்வளவு சீக்கிரம் உங்களையெல்லாம் என் எழுத்து இம்சையிலிருந்து தப்பிச்சு போக விட்டுவிடமாட்டேன். இதுவரை நீங்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு ஏதோ பெருந்தன்மையா நன்றி சொன்னா பேக்கப் பண்ணி வீட்டுக்கு அனுபிச்சுருவீங்க போல இருக்கே. மெயில், போன்ன்னு கலக்கிட்டீங்க போங்க. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது உங்க பின்னூட்டததையெல்லாம் பார்த்து ரொம்பவே சென்டியாகிட்டேன். உண்மையாகவே நெஞ்ச டச் பண்ணிட்டீங்க.எனக்கு இப்போ ரொம்ப ஒரு மாதிரியாயிருக்குங்க

அப்போ என்ன தான் மேட்டர்?

ஹீ ஹீ நீங்க இதுவரைக்கும் குடுத்த ஆதரவெல்லாம் பார்த்து...கொஞ்சம் குஷியாகி எனக்கே எனக்குன்னு ஒரு (வெப்)சைட் வாங்கிட்டேன். அதானால இந்த ப்ளாக்குக்கு கொஞ்ச நாள்ல பூட்டு போட்டுவிடுவேன். அப்புறம் அங்கேர்ந்து நம்ம இம்சை தொடரும்.

"எங்களையெல்லாம் என்ன கேனையன்னு நினைச்சியா..ஏன்யா சும்மா கிடக்காம நன்றின்னு பதிவெல்லாம் போட்ட?"

இதென்ன கூத்தா இருக்கு...நீங்க குடுத்த தைரியத்துல கைக் காசெல்லாம் போட்டு வெப்சைட் வாங்கியிருக்கேன்...உங்களுக்கு நன்றி சொல்றது தப்பா? அப்போதானே அங்கேயும் வந்து ஆதரவு தருவீங்க?

"அடப்பாவி...இதச் சொல்றதுக்கு எதுக்கு ரெண்டு நாள் பில்டப் ?"

ஹை...எத்தன நாள் நீங்க இங்க வந்து படிச்சுட்டு கமெண்ட் அடிக்காம போயிருக்கீங்க...நானும் கமெண்ட் வருதா வெறும் காத்து தான் வருதான்னு தேவுடு காத்திருக்கேன்...இப்போ நீங்க மாட்டிக்கினீங்களா?? :P

மவனே நீ மட்டும் கைல மாட்டின...காலிடா
அண்ணே, அக்கா...உங்களுக்காகத் தானே முன்குறிப்பெல்லாம் போட்டிருக்கேன். நீங்களெல்லாம் புத்திசாலிங்க கோவம் வரலாமா?

சரி சரி என்ன சைட்டு சொல்லித் தொலைங்க

www.DubukkuWorld.com இதாங்க புதுசா நான் குடிபோகப் போகிற சைட். (டுபுக்கு டாட் காம் தான் ஆரம்பிக்கனும்ன்னு இருந்தேன். ஆனால் அத ஒருத்தர் ஏற்கனவே போன வருஷம் வாங்கிட்டார். கேட்டுப் பார்த்தேன் தரமாட்டேன்னுட்டார். சரி ஒரு வருஷமா அவரு மனசு மாறுவாரோன்னு காத்திருந்தாகிவிட்டது இனிமேலும் காலம் தாழ்த்த முடியாதுன்னு இது இருக்கட்டும்ன்னு வாங்கிட்டேன்.)

அட அதுக்குள்ள ஆரம்பிச்சாச்சா?

இல்லைங்க உங்களுக்கெல்லாம் சொல்லாம ஆரம்பிப்பேனா...இப்போ தான் மனை வாங்கியிருக்கேன். இன்னும் வெப்சைட் டிசைன் செய்யவில்லை. (யாராவது புண்ணியவான் நேரமும் ஆர்வமும் இருந்தால் சொல்லுங்கள் உங்கள் பெயரையும் நன்றியோடு போடுகிறேன்) இனிமே தான் வீடு கட்டனும். கண்டிப்பா பால்காய்ச்சும் விழாவிற்கு வந்திரணும் இப்போவே சொல்லிட்டேன் ஆமா.

நாங்க என்ன செய்யனும்?

ஹீ ஹீ வெப்சைட்டை ஆரம்பித்த பிறகு வழக்கம் போல உங்கள் ஆதரவை தரனும் (அதுக்குத் தானே அடிக்கடி நன்றியெல்லாம் சொல்றேன்).அதுவரைக்கும் வழக்கம் போல இங்க வாங்க.

நிற்க...என்னுடைய போன பதிவு உங்களுக்கு மனக்கஷ்டத்தை சங்கடத்தையோ ஏற்படுத்தியிருக்குமானால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (இது உண்மையாகவே சொல்கிறேன்). உங்களுக்கு என்ன திட்டனும் போல இருந்தா தாராளாமாக பின்னூட்டதிலோ மெயிலிலோ திட்டி விடுங்கள். எதோ (ஸ்கூல் படிக்கிற) சின்னப் பையன் பார்த்து செய்யுங்க...

போடுவடா போடுவ...அப்போ போன பதிவு...

இப்போ பொறுமையா போன பதிவ படிச்சுப் பாருங்க நான் என்ன சொல்ல வரேன்னு தெரியும்.

****
ரொம்ப நாளாகவே யோசித்துக் கொண்டிருந்தேன். குழம்பி குழம்பி இப்போது ஒரு முடிவுக்கு வந்து இருக்கிறேன். - இது வெப்சைட் ஆரம்பிக்கறத பத்தி

இந்த ப்ளாக்கிற்கு கூடிய சீக்கிரம் மங்களம் பாடிவிடுவேன். எனது எழுதும் ஆர்வத்துக்கு ஒரு வடிகாலாக இருக்கட்டும் என்று ஆத்மதிருப்திக்கு ஆரம்பித்து, உங்களில் சில பேரை சிரிக்க வைக்க முடிந்தது என்ற திருப்தி இருக்கிறது. எதாவது கிறுக்கி இருக்கிறேனா என்று நிறைய பேர் ரெகுலராக வந்து பார்க்கிறீர்கள். ரொம்ப நன்றி. உங்களிடம் திடீரென்று சொல்லி அதிர்ச்சி தர விரும்பவில்லை அது உங்கள் ஆதரவிற்கு நான் செய்யும் மரியாதையும் அல்ல.

-இங்கும் வைப்சைட் ஆரம்பிப்பதைப் பத்தித் தான் சொல்லியிருக்கிறேன். முன்னாடியே சொல்லனும்ல அதானே மரியாதை.

Alma மேட்டர் பாதியில் நிற்கிறது. அதை என்ன செய்ய என்று குழப்பமாக இருக்கிறது.
-குழப்பம் Alma மேட்டரை இங்கயே முடித்துவிடுவதா அல்லது அங்கே தொடர்வதா என்று

உங்களில் சில பேருக்கு இந்த முடிவு ஏமாற்றமாகவோ வருத்தமாகவோ(??!!) இருக்கலாம்...இருந்தால் அதற்காக வருந்துகிறேன்.
-ஒரு வழியா டுபுக்கு தொலைஞ்சான் என்று நீங்கள் நினைக்க எனது வெப்சைட் முடிவு பற்றி

வலையுலக ட்ரெண்டின் படி இழுத்து மூடப்போகிறேன் என்று நான் சொல்லுவது "பப்ளிசிட்டி ஸ்டண்டா" என்று நீங்கள் சந்தேகப் படலாம்.

- ஒருவேளை இல்லை என்று நீங்கள் நினைத்திருந்தால் அழித்துவிடுங்கள். சந்தேகமே வேண்டாம் பப்ளிசிட்டி ஸ்டண்டே தான் (அப்புறம் வெப்சைட்டுக்கு எப்பிடி ஹிட்டு சேக்கறதாம்?)

மீண்டும் ஒரு முறை - இது வரை நீங்கள் கொடுத்து வந்த பேராதரவிற்கு நன்றி.
- நன்றியெல்லாம் சொல்லியிருக்கேன் வெப்சைட்ட நியாபகம் வைச்சுக்கோங்க...

இன்னொருதரம் சொல்லிடறேன்...என்னுடைய போன பதிவு உங்களுக்கு மனக்கஷ்டத்தையோ, சங்கடத்தையோ ஏற்படுத்தியிருக்குமானால் நான் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். (இது உண்மையாகவே சொல்கிறேன்). உங்களுக்கு என்னை திட்டனும் போல இருந்தா தாராளாமாக பின்னூட்டதிலோ மெயிலிலோ திட்டி விடுங்கள். எதோ (ஸ்கூல் படிக்கிற) சின்னப் பையன்... பார்த்து செய்யுங்க...
(என் மனைவி நான் தர்ம அடி வாங்கப்போகிறேன் என்று இருபது பவுண்டு பெட் கட்டியிருக்கிறார்)

மற்றபடி உங்கள் மனதை புண்படுத்த வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை - எண்ட மலையாள பகவதி மீரா ஜாஸ்மின் மேல் சத்தியம்.

என்றும் மாறாத அன்புடன்
டுபுக்கு
(ஸ்காட்லாந்து யார்ட் இசட் பாதுகாப்புக்குப் பின்னாலிருந்து)

45 comments:

SnackDragon said...

டுபுக்கு ,
புதுத் தளத்தில் புத்துணர்வுடன் எழுத வாழ்த்துக்கள்.!!

Anonymous said...

Naan oru pechukku neenga dhigil padathukku music podalamnu sonnen. Indha post-a padichadukkapram solren, neenga dhigil kadhai ezhudhalam - build up avvlo superb! Adha neenga explain pannina vidham kooda - all pieces of the puzzle falling in place (sorry can't translate that :) )

Anonymous said...

Hi Dubukku,

Nalla vellai, nan fridayku appuram blog check pannave illai.... I really thank god...

enna ponga ippadi tension akiteenga?

If I read the "Nandri" post priorly would have tried my level best to call you (I don't have the phone number) and convince u to continue the blog...

All the Best! and looking forward for the house warming of DubukkuWorld

Best Wishes!

neighbour said...

ada-cha imsai tholanchudhunu rendu naal sandhoosama irundhaen adhukulla en aasaiyala man alli pootuteengalaee..

site arambinga virus eluthi hack pannuraenanu illaiyaanu paarunga...

Udhayakumar said...

அப்படி போடு போடுன்னு நான் திரிஷாகூட ஒரு டூயட்டே பாடிட்டேன். யாம் இருக்க பயமேன்! தைரியமா ஆரம்பிங்க, நாங்கெல்லாம் எங்க போயிடுவோம்.

Anonymous said...

edho en vayasai korachala sollanumnu thangaachinnu sonnen

but i think you must be atleast couple of mths or years younger to me

sari buildup edhukku theriyuma

ungala DOG nnu thittathan

tamizhla sonna konjam ellai meeriya feeling vandhudhu aana neenga adha translate panni ungalaiye thittikonga

oodu katra rangekku vandhirukeenga
meendum
vazhga valamudan

thangaachi?

Anonymous said...

hi dubukku anna........
kalakkitinga ponga.
ur prev blog made me really unhappy. chumma sorry sonna pothumaa? unga fans ellam netri kannai open panrathukulla oru super--aana hilarious post podunga.periya mansu panni manichiduvom.unga website-aa oru bang-oda announce panni irukkinga. congrats.
i usually dont comment on any blog. but now, i just cant control myself. ur thanthiram!!! reminds me of ur title-- the clever fool.ur cleverness is tht u make others beleive tht u r a fool, which is not true.waiting for ur next post......

[ 'b u s p a s s' ] said...

யோவ்.. உங்கள...
ஒரு பத்து நிமிஷம் வருத்தமாவே இருந்திச்சி... யாரவது மனசு கஷ்டப்படும்படி எதாவது சொல்லிட்டாகங்ளான்னு..இல்ல வீட்ல பூரி கட்டையால உதை விழுந்திச்சான்னு...

சக்ரா'வோட பின்னூட்டத்தப்பாத்தாவது கண்டுபிடிச்சிருக்கலாம்...

(தொண்டையை கனைத்தபடி, உச்சந்தலையில வகிடெடுத்தபடி)...தெரியலயேப்பா...

வாழ்த்துக்கள்!!

Peelamedu_bulls said...

என்ன வேணா பண்ணுங்க, ஆனா புது சைட்டும் இப்படி விதவை கோலத்துல இல்லாம கொஞ்சம் கிலுகிலுப்பா இருக்க 9தாரா, அசின் படம் இருந்தா நல்லா இருக்கும்.

Anonymous said...

Nejammave romba kavalaya poiduthu pongo. chennai la irukkara naanum bangalore la irukkara en sisterum std la unga blog a pathi pesi sirippom. (rendu perukkume niraya prechanaigal kavalaigal undu). Breath of fresh air mathiri unga blog irundhudhe poiduthe nu thukkam anustikkalamnu irundhen. Vayathula paal varthel.. romba nandri. pudbu website puguvizha eppo ennikku. nalla muhurtha naala paathu kudi pongo. vazhthukkal.

யாத்ரீகன் said...

ஒக்காமக்க... #$^#$!@^!!^#@$% ஹலோ திருமதி. டுபுக்கு.. 20 பவுண்ட் என்னங்க.. 200 பவுண்ட் நீங்க பெட் கட்டுங்க... டுபுக்கு.. நீங்க ஊரு பக்கம் வந்திராதீக....சொல்லிப்புட்டேன் ஆமா...

யாத்ரீகன் said...

என்ன நீங்க மட்டும்தான் வூடு கட்டு உதார் உடுவீங்களா.. ;-) நாங்க செய்யக்கூடாதா... ஆனா.. அம்மணி.. உங்க 20 பவுண்ட் பெட்.. நீங்கதான் ஜெயிக்கப்போறீங்க...

Premalatha said...

SSSSaaaalaa.

(http://pareshaan.blogspot.com/2006/03/gaali-gaatha.html)

Chakra said...

ennada idhu? pudu domain vaangi irukkiya.. sollave illa?

Usha said...

aha...Vaazhthukkal.
Nejammave romba varunditen ( anavasyam..hm!)
Sari pariharama paal kaachum vizhavukku oru return ticket anuppi vainga..Priyavala lakshanama vandu aasirvadam pannitu varen!

Anonymous said...

hi..wishes for ur new website..
mothalla naan enna nenachanna...jigilu yaro..ambasamuthirathil irunthu...seruppu ethavathu..parcel anupiyirupangannu..innum appadiyelaam yethuvumillaya...
Good Luck..!!!If possible give some info abt how to type in tamil using MS-Word..

Ananthoo said...

rendu naal intha sitekku varathukku leave utta ivalo galatta vaa dubuks??
hmm?? irukkattum..
yethuvum kasamusa illa ila? antha jaari matterlalam appo ok?

vaaithukal for ur new site..
petta..yaaravan dubuku site pera thara mattendran..sollu ma kannu..uttu kalasi perai vaangirlam

Paavai said...

roudram pazhaga arumayana vaippu - 20 pound collect pannunga thangamani - naan mattum roundram pazhagamal training kuduthu oru gumbalai evi vittu irukken

ponadhu pogattum - nallapadiya seekrama ezhutha arambinga - pudu veedo, indha vidavai kola blogo .. munnaiye solli irukken kai kalellam vetti vetti izhukkumnu anda paavam vendam sollitten

capriciously_me said...

over scene kadha!

Anonymous said...

Hi Dubukku,
Today only i entered to your blogspot. Very nice. I enjoied .
saras

B o o said...

And to think that I wasted my anonymity and fell for your prank. Ok, now I go back to being anonymous! But this time I am not going to be nice about it! Beware! (anything to make your wife win the bet!)

daydreamer said...

tamizhnadu arasiyalavida mosamaana thiruppangal blogs layum irukkumnu sollama solliteenga. Pudhu website la nayan thara, nameetha, surya, kamal (unnal mudiyum thambi kamal illa Vettayadu vilayaadu kamal) eva ellarum iruppanga thaane. vettayadu vila... paatu kettengala.. prayer songs mathiri irukku... adhukku pattiyal pada paadalgal thevala... yuvan nalla music pottirukkar. Chinna kuyil Chitra Thirumathi m S amma avargaloda sila paadalgala paadi oru CD veliyittu irukkanga. Nallave irukku. Kettu enjoy pannunga. Blog la thaane arasiyal mudivugal ellam.... office ku pant thaane podreenga.. illa vetti katreengala ??

Anonymous said...

dubukku!
name is really funny...

recently i started reading your blog.. it was amazing!
and very soon U said you gonna stop writing.. but i know i know i know you will somehow continue it( ul manasu sollichu!)

And it happened... thanks
congrats!
Keep going!

Paavai said...

angie ambal gadiya oru nimisham nenachu pathu irunda inda madiri solli iruppeengala - avanga manasu enna paady pattu irukkum - thannoda bhaktan blogai moodarannu nenachu

last time - dont do this ok

ambi said...

Hi dubukku anna,

oru velai, ennaku bayanthu thaan stop panna poreloonu nenachen. familyla kaati kudukka matten. (coz, yenakkum aapu vizhum)nalla velai, 3 days i didn't chked ur blog...

btw scene cinthaamani endra pattathai ungalluku vazhanguvathil perumai adaikiren.

இராமச்சந்திரன் said...

இரங்கற்பா வாசிப்பேன் எனக்கூறி - பின் இல்லை இல்லை புது வலை
அரங்கம் சுவாசிப்பேன் என்ற
அரங்கராமனுக்கு - எங்களது
சிரந்தொட்ட வாழ்த்துக்கள்.
சோற்றாலடித்த பிண்டமல்ல தமிழன்
மாற்றாந்தோட்டத்து மல்லிகை -
இவன் மணப்பான்....

Dubukku said...

Shankar / Karthik Ramas - ரொம்ப நன்றி :)

Krithika - danks ennamo solreenga ketukaren :P

Lakshmi - danks danks summa oru prank try panninen..but makkal bayangara dose vittutanga :) wishes oda nippathatheenga angayum adikadi vaanga :)

neighbour - yow enaya avlo seekaram thappichi poha vituruvena. yow site arambikarathukku munnadiye virusnu bayamuruthathaya :)

Sri - how smart hmmm :) vanga vanga kandipa vandhu kalasunga
:)

Karthik - danks but not sure whether you really read my prev. post. I am starting my own site and so will hold this offer for now. May be later. sorry. danks for dropping by.

Udhayakumar - ரொம்ப நம்பிக்கையா இருக்குங்க...ரொம்ப நன்றி. இல்லாட்டாலும் உங்கள எல்லாரையும் விடற மாதிரி இல்லை

Dubukku said...

thangaachi - romba danks.amanga ungala vida chinna paiyan than :P
oru small request unga peyar sollungalen innum rendu moonu thangachinga vandutanga adhan.Thangachi1, 2,3 nu koopida nalla illa. nick name a irundhalum paravalla :)

Thangachi2 - danks danks..partheengala ivalavu naal silent a irundhirukeenga inime regulara comment podunga :P
clever fool ellam bagiyarag,paandiyarajan pannathatha? but spot on kudos

buspass - சாரிங்க...சக்ரா வந்து சொதப்பினான்...அதான் அவன் கமெண்ட டக்ன்னு தூக்கிட்டேன்...:)

Peelamedu B - karumbu thinna kooliya pottuta pochu..(gaja sitea maathira request pannatheenga pls.)

Anonymous - sorrynga...summa damasu thane...namma site a eppo thirappom...guess pannunga...(not very difficult) small request would you mind to leave your name atleast for me to address.(even if thats a nick name fine with me. anonymous is a bit confusing). Danks to your sister too for visiting here :)

யாத்திரீகன் - யோவ் திட்டினா கூட பரவால்ல...நீங்க பாட்டுக்கு 200 பவுண்டு பைன் போட்டுட்டீங்களே இது நியாயமா..அம்மணி உங்க ஆர்க்யுமெண்ட வைச்சே வழக்க ஆரம்பிச்சிருக்காங்க

Dubukku said...

SayMee - danks very much for the wishes. Pleas do keep visiting there as well :)

Premalatha - நன்றி ஹை. நல்லா திட்டுறீங்க...அங்க அந்த போஸ்டில் சொல்லியிருப்பதையெல்லாம் நான் படிக்கவே இல்லை ...எனக்குப் புரியவே இல்லை :)

Chakra - வாடா செவாலியே....என்னா நடிப்புடா சாமி...:)


Usha - danks danks hehe ticket thaane...anupitta pochu :) But site bangalorela thaan open pannaren :P

Tina - innum adhu onnu baaki irukku. Neenga idea kuduthachula vandhirum. Luckily I dont have any female readers from Ambasamudram...
I use http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm
try this its damn easy :)

Dubukku said...

Uma - :) angayum vandhu padichu tholainga...ithellam pona janmathula pannina paavama irukkum :P


Ananthoo - aiyooo onnum kasamusalam illeenganna...danks for the wishes. andha site ku avar etho idea vechirukkaram. vidunga thalai perla enna irukku :)

Paavai - emmaadi enna neengale ivalavu kovap padureenga? auto kito anupichuratheenga ammani :)

Capri - :-(

Saraswathi - welcome here. danks for dropping by. moving soon. keep visiting :)

Boo - Ohh you too were commenting anonymously eh? hehehe...ok ok amaithi ..i have already handed over the money to thangamani :)

daydreamer - wc. ada ennaga ippidi solliteenga pant thaan. enakkum arasiyalukkum romba thooram. Asin ??? yuck :P Vettaiyadu vilayadu padam nalla varunmnu nambikittu irukken parpom

Dubukku said...

Prema - another Prema :) welcome here. danks for the wishes.

Paavai - amaanga. etho manasu irangi manichuteenganu nenaikaren habba :)

ambi - vaada vaa ...nee maatum kudumbathula sollu...mavane appuram irukku unakku :P daai...pattama thara iru gavanikkaren unna

Ramachandran - ஹைய்யோ கவிதையெல்லாம் எழுதியி...கலக்குறீங்க? எனக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம்...:) ஆனாலும் நம்மளப் பத்தி நல்லதா நாலுவார்த்தை சொல்லியிருக்கீங்க...ரொம்ப நன்றிங்க...:)

Guru Prasath said...

Hey dubukku. I think you are looking for some good website designs for your new site. Goto http://www.oswd.org . Hope it will be useful. Bye.

Balaji S Rajan said...

ஐயா வணக்கம். இன்னாம்மா கண்ணு ஒவரா ஃபிலிம் காட்டாதமா... அப்பால பேஜாரா போயிடும்.... ஓகே...வா... ஆமா... இன்னா கணக்கு.... சும்மா தனியா வெப் அது இதுன்னு.... ஏதோ இந்த கபாலி கை நாட்டா போயிடவே நீ தப்சிட்டமா.... நம்ப ஜனங்க எல்லாம் ஒரே ஃபீலிங்... காட்றாங்களேன்னு உட்றேன்.... இல்லாங்காட்டி நடக்கறதே வேற கண்ணு... சரி வர்ற்ட்டா...

expertdabbler said...

annathey,
vayithile oru kalaku kalakku aprom badam paal varthuteengo.
1 weeka a indha pakkam varalai..
ippo daan padichen..

hehe..
seri website design matter ennadhu adhu?
mudincha mail pannunga detaileda. i wud be glad to help with whatever i know

Anonymous said...

*shakes head* *sigh* *rolls eyes*

No comments. :P

Subhashri said...

the best part of ur blog so far had been the comments sessions...ezpecially this one here..
enjoi..have fun in ur new website as well..

bhooma

Yours Truly said...
This comment has been removed by a blog administrator.
Yours Truly said...

Grrrrr Illa naan edhuvum sollala. Thangamani-oda 200 pound fine-ku guarantee tharen, avvLo dhaan.

Good luck DubukkuWorld.com and keep writing and entertaining

Kartik Kannan said...

Hi,
> I am Kartik Kannan at Sulekha.com (www.Sulekha.com).
> I had the opportunity to see your latest blog post. I found it really
fascinating, and so would anybody at Sulekha blogs which brings me to an
offer I would like to make to you to substantially increase your blog's
readership and popularity.
> By creating a parallel blog on Sulekha Blogs, you can dramatically
boost the number of people viewing your posts, commenting on them and
connecting with each other. All you need to do is give us your approval
(Reply to this mail with a YES) so that we can feed your blog posts via
RSS into your customized blog page on Sulekha.
I eagerly look forward to seeing you on Sulekha!

Kartik Kannan (kartikk@sulekha.net)
Team Sulekha
I blog at www.katchucrap.blogspot.com http://kartik.sulekha.com

Dubukku said...

Guruprasath - danks for the link. will have a look . very much appreciated.

Balaji - தலீவா படமேல்லாம் இல்லீங்கோ..டமாசு டமாசு....கோச்சுக்காதபா இனிமே உஷாரா கீரேன்பா :)

PK - hehe just was a damasu :) have emailed you. romba danks.

thewoman - hehe :)

bhooma - yes very true comments give more life. I like them too :P
danks for the wishes.

Yours Truly - haiyooo 200 illeenga 20 thaan...neenga vera meetara ethatheenga. danks angayum daily vandhu attendance podanum solliten ama

Karthik - pls dont spam. I have already told that I am not interested at the moment. thanks.sorry if this sounds rude, but hope you will understand.

CVA said...

Left le indicator pottu,
Right le hand signal kaamichittu,
engeyum thirumbamal Madras auto maadhiri straight ah poiiteengaley baasu.... Kalakitel ponga....

All the very best for starting your own web site.

Angeyum Varuven Indha CVA :-)

Anonymous said...

Adappaavi Dubukkanna,
Bayandhe poiten, enra inthu naama tamil blog vaasikka arambicha neram ipdi annan blog-gukku mooduvizha panrarunnu. oruvelai ennoda 'mattamana'(madras bashai) comment-a parthu bayanthuttaaro-nu kooda nenaichen (self-reproachment)

anyway i personally ask sorry for my comments if they hurted you.(athukku than email id ketten). at one time (while typing the comment) it seems funny, when i reread in your blog at some other time, it looks awkward and bit too much. writing never conveys the real context, especially for me)

now you cleared the issue. thanks :-)

Dubukku said...

CVA - romba danks...angaiyum thodarndhu vaanga

Guru - enna thideernu anna akiteenga? hey hey dont be serious...you have not offended me at all..I dont get offended that easy atleast in this site. so feel free to keep your comments coming.

sonypsp said...

Hi Ranga,

Welcome to to world of www...

So, here I am to help you to design your new e-home...

Ungal valaipathivu veedu katta, Engineer Thevai endral... ungal ninaivirkku varuvabar.....Yar yar yar.. Adhu Naan Naan than.

ihheee... just comdedy time partha effect..

Raam Kumar

Anonymous said...

hi dubukku
i am sathis
i am too from Nellai
green tamilan from nellai
romba nalla irruku anna
i am frm coimbatore
mail pannunga
sathisrajive@yahoo.com

Post a Comment

Related Posts