Thursday, March 09, 2006

நாய்ப் பொழப்பு

நாய்ப் ப்ரியர்களைப் பார்த்தால் எனக்கு சில சமயம் ஆச்சரியமாகவும் பொறாமையாகவும் இருக்கும். எனக்கு நாய் ராசி அத்தனை சுமூகமாக இல்லை. இப்போதும் நாயைப் பார்த்தாலே கொஞ்சம் அல்ர்ஜியாக இருக்கும்.(கல்யாணமானதிலிருந்து பயத்தை இப்படித் தான் அலர்ஜி என்று ஸ்டைலா சொல்லிக்கறது. நிறைய இருந்தாலும் கொஞ்சம் என்று சொல்லிக் கொள்வது ஸ்டையில் இல்லை பேஷன்).

சின்ன வயதில் எல்லா வாண்டுகளையும் போல நானும் நாயைக் கண்டால் பயமில்லாமல் தான் இருந்தேன். நாய்க்காக தெருத் தெருவாக நாயாய் பேயாய் அலைந்த காலம் அது. தெருவில் எதாவது ஒரு நாய்க் குட்டி தெரியாமல் வந்துவிட்டால் அதற்கு பிஸ்கெட் போட்டு, ஜிம்மி என்று பெயர் சூட்டி கொஞ்சி, குட்டிக்கரணம் அடிக்க சொல்லிக்கொடுத்து அது கழுத்தில் ஒரு கயிற்றைக் கட்டி கல்யாண ஜானவாசம் மாதிரி தெருத்தெருவாகப் பட்டினப் பிரவேசம் போய், கடைசியில் அப்பா வந்து என் முதுகில் ஒன்று வைத்து அதை ரிலீஸ் செய்வார். சின்ன வயதில் நாய் வளர்க்கவேண்டும் என்ற் ஆசை இருந்தது. ஆனால் எல்லாவற்றையும் ஒரு பாழாய்ப் போன குரங்கு வந்து கெடுத்து விட்டது. குரங்கு என்றால் நிஜமான குரங்கு. எங்க ஊருக்கு பக்கம் தான் பாபநாசம், குற்றாலம் என்பதால் சில சமயம் குரங்குகள் கூட்டம் கூட்டமாய் தெருவில் வந்து எங்களுக்குப் போட்டியாக அட்டகாசம் செய்யும். தெருவில் ஒருத்தரையும் நடமாட விடாது. கையில் எதை வைத்திருந்தாலும் பிடுங்கிக் கொள்ளும். மொட்டை மாடியில் வத்தல் வடாம் காயப் போட்டிருந்தால் டேஸ்ட் பார்த்து உப்பு கூடக் குறைச்சல் சொல்லும். சில விவகாரமான குரங்குகள் சினிமா ஹீரோ மாதிரி பாத்ரூமிலிருந்து துண்டை எல்லாம் எடுத்துக் கொண்டு ஓடிவிடும். அந்த வானரப் படையை எங்கள் வானரப் படையால் மட்டுமே சமாளிக்க முடியும் என்பதால், தெருவில் குரங்கு வந்தாச்சு என்றால் "ஏய் குரங்கு வந்தாச்சு போங்கோடா போய் விரட்டுங்கோ..." என்று எங்களை கடமை அழைக்கும். கவுட்டைவில்லு என்றால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. Y மாதிரி மரக் கொப்பை உடைத்து அதில் சைக்கிள் ட்யூப்பை கத்தரித்து கட்டி செய்யும் அத்தியாவசியமான ஆயுதம். அதில் குறி வைத்து அடிப்பதில் கிராமத்துப் பக்கம் கில்லாடிகளாய் இருப்பார்கள். அதைப் பார்த்தால் மட்டும் தான் குரங்குகள் ஒட்டம் எடுக்கும். ஆனால் இந்த ஆயுதம் இல்லாமலே எங்கள் வானரப் படை சத்தம் போட்டும் சிறிய கல்லை எறிந்தும் அந்த வானரப் படையை ஓட்டி விடும்.(பெரிய கல்லை எறிந்து அந்த வீட்டு ஓட்டைப் பெயர்த்துவிட்டால் அந்த வீட்டில் வசிக்கும் பெரிய குரங்கு பிடித்துக் கொள்ளும் அதனால் தான் சிறிய கல்) ஆனால் என் நேரம் ஒரு நாள் இந்த ஆயுதம் எதுவும் இல்லாமல் நான் குரங்கை விரட்டப் புறப்பட்டேன். வழக்கம் போல் சத்தம் போடாமல் நான் "ட்டூர்ரிங்...ட்டூர்ரிங்" என்று ஒரு டியூனாக சத்தம் போட போக ஒரு தாட்டையன்(பெரிய) குரங்குக்கு என்ன எரிச்சலோ நான் போட்ட அந்த மீசிக் பிடிக்கவில்லை போல, என் மேல் பாய்ந்துவிட்டது. ஹ..யாரு எங்கிட்டயேவா...அலறியடித்துக் கொண்டு ஒரே தள்ளாக அதை தள்ளிவிட்டு ஓடிவிட்டேன். கையில் விரல்களுக்கு மேலே ஒரு விழுப்புண்ணோடு அன்று தப்பித்தேன். பின்னாளில் குரங்குகளுக்கு அந்த மீசிக் போட்டால் கோபம் வருமா என்று ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். ஆனால் எங்கம்மா ஏதோ ஒரு பாட்டி சொன்னா என்று குரங்குக் கடி வைத்தியமாக மோரில் வீபூதி மற்றும் இன்ன பிற அயிட்டங்களைப் போட்டு மூன்று வேளை குடிக்கச் சொன்னது அந்தக் குரங்குக் கடியை வாழ்வில் மறக்க முடியாததாகச் செய்துவிட்டது. மருந்தை விட குரங்குக் கடியே எவ்வளவோ மேல். கடிப்பட்டா திரும்ப இந்த மருந்தைக் குடிக்கவேண்டுமே என்று ஆராய்ச்சியை ஐடியாவை மூட்டை கட்டி வைத்தேன்.

அதற்கப்புறம் "உலகத்திலேயே குரங்கு கடி வாங்கியிருக்கிற ஒரே ஆள் நீதாண்டா" என்று ஓட்ட ஆரம்பித்தார்கள். அதற்கு நானும் "ஆமாம் குரங்கு குரங்கையெல்லாம் கடிக்காதாம்" என்று பதில் சொல்வேன். அந்தக் குரங்குக் கடிக்கப்புறம் நாயையும் எனக்குப் பிடிக்காது. எல்லாம் ஒரே கழுதைகள் தான் என்ற நினைப்பு வந்து விழுந்துவிட்டது. கொஞ்சம் வளர வளர இந்த வெறுப்பு பயமாக அதாவது அலர்ஜியாக மாறிவிட்டது. அதற்கு எங்கள் வீட்டுக்குப் பக்கமிருந்த ஒரு திமிரெடுத்த நாய் தான் காரணம். டாக்ஸி டிரைவர்கள் மிச்சச் சாப்பாட்டை சாப்பிட்டு நல்ல கொழுகொழுவென்று இருக்கும். இப்படி குண்டாயிருப்பதாலே அந்த நாய்க்கு மனதில் பெரிய புலி என்ற நினைப்பு. புலி மாதிரி தான் நடக்கும். அதற்கு என்னைக் கண்டால் ஏனோ எகத்தாளம். நான் பாட்டுக்கு தேமேன்னு போயிக்கொண்டிருந்தாலும் விடாது. என் கூட பெரியவர்கள் இருந்தால் உறுமும். ஒரு நாள் நான் தனியாக போன போது துரத்த ஆரம்பித்துவிட்டது. பஸ்ஸ்டாண்டை மூன்று தரம் சுத்திய பின்னும்... விடுகிற வழியைக் காணோம். நாலாவது தரம் ஏதோ ஒரு பஸ் கிளம்ப நான் அதில் ஏறிய பிறகு தான் ஓய்ந்தது. அப்புறம் கையில் காசு இல்லாமல் நாய் துரத்திய கதையை புலம்பி, கண்டக்டர் சிரித்துக் கொண்டே இறக்கிவிட்ட போது ஒட்டு மொத்த நாய் வர்க்கத்தின் மேலும் அதீத அலர்ஜி.

இந்த நாய்களுக்கு என் மேல் இருக்கும் லவ்ஸ் சொல்லி மாளாது. கொஞ்சம் பெரியவனாகி காலை ஆறு மணிக்கு ட்யூஷனுக்குப் சைக்கிளில் போகும் போது வாத்தியார் வீட்டுத் தெருவில் ஒரு வெக்கங் கெட்ட நாய் என்னையே குறி வைத்து துரத்தும். தொடர்ந்து மூன்று சைக்கிளில் நாங்கள் போனாலும் என்னை எப்பிடியாவது பிடித்து விடும். இந்த நாய்க்காவே என்ன தான் முன்று தெருவை நாய் மாதிரி சுத்தி அந்தப் பக்கமாக வந்தாலும் மூக்கில் வேர்த்த மாதிரி கரெக்டாக அங்கேயும் காத்திருக்கும். இதற்காகவே தூரத்திலேயே நல்ல சைக்கிளை விரட்டி விட்டு காலை தூக்கி வைத்துக் கொள்வோம். இருந்த போதும் ஒரு தரம் இந்த இழவெடுத்த நாயக்கு பயந்து கீரைக்காரியின் மேல் சைக்கிளை விட்டு வாங்கிய வசவுகள் நாய்ப் பகையை ஜென்மப் பகையாகிவிட்டது. இவ்வளவு ஆனதுக்கப்புறம் நான் ஜாக்கிரதையாக இருந்ததால், அவை எனக்குப் பயந்து அப்புறம் என்னிடம் ரொம்ப வைத்துக் கொள்ளவில்லை.


சமீபத்தில் லண்டனிலிருந்து புறநகர் ட்ரெயினில் ஒரு நாயைப் பார்த்தேன். அதுவரை கண்ணுக்குட்டி சைஸுக்கு நாய் பார்த்திருக்கிறேன்..இந்த நாய் கரடி சஸுக்கு இருந்தது. இது போததென்று நூறு சத்யராஜும், ராஜ்கிரனும் சேர்ந்தது மாதிரி புஸு புஸுவென முடி வேறு. ஒரு சீமாட்டி கூட்டிவந்திருந்தார். ரொம்ப செல்லம் போல ட்ரெயினில் நாய்க்குப் போரடிக்கக் கூடாதே என்று சாப்பிடுவதற்கு பிஸ்கெட், விளையாடுவதற்கு கிலுகிலுப்பை, படுத்துக் கொள்ள பஞ்சு போன்ற போர்வை என்று எல்லாமே கொண்டுவந்திருந்தார். நாய் இருந்த சைஸுக்கு சீட்டுக்கு நடுவில் நுழைந்து வருவதற்கு ரொம்பவே சிரமப் பட்டது. வழியில் எல்லாரையும் "சௌக்யமா சௌக்கியமா" என்று விசாரித்துக் கொண்டு வந்த நாய் என் மடியில் வந்து தலை வைத்துப் படுத்துக் கொண்டு விட்டது. எனக்கு எங்கம்மா கொடுத்த மருந்துக் கல்வை நியாபகத்துக்கு வந்து முகத்தில் அலர்ஜி அப்பட்டமாக தெரிந்தது. பயத்துல எதாவது மீசிக் போட்டா எசகுபிசகா கடிச்சுத் தொலைஞ்சிருமே என்று பயந்து நடுங்க, நல்லவேளை சீமாட்டி "வாடா ராஜா வா" என்று அடுத்த சீட்டுக்கு கூட்டிக் கொண்டு போய்விட்டார்(நாயைத் தான்).

அப்புறம் "எனக்கு ஃபர் கொஞ்சம் அலர்ஜி " என்று சமாளித்து அடுத்த கம்பார்ட்மென்டுக்குப் போய்விட்டேன். என்னை மாதிரியே இன்னொருத்தியும் குரங்குக் கடி வாங்கியிருப்பாள் போல அவளும் அலர்ஜி என்று சொல்லி கம்பார்ட்மென்ட் மாறிவிட்டாள்.

வீட்டில் இப்போதும் "நாய் வளர்க்கலாம்" என்று அடிக்கடி கூட்டணி சேர்வார்கள். நானே கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு குலைத்துக் காட்டி, ஓடியாடி, சின்ன மகளின் ஓட்டையும் எடுத்துக் கொண்டு மெஜாரிட்டி இல்லையென்று சொல்லி தீர்மானத்தை தள்ளிப் போட்டுவிடுவேன்.

55 comments:

கைப்புள்ள said...

உங்க கதை பரவால்லீங்க டுபுக்கு. நாய் கடியோ கொரங்கு கடியோ வாங்குனா கூட பரவால்லை...நம்ம கதையை கொஞ்சம் கேளுங்க. :(-

இந்த தடவை சென்னைக்கு வீட்டுக்குப் போயிருக்கும் போது...வீட்டுல புதுசா ஒரு நாய் படுத்துருந்துச்சு. எங்கம்மா வந்து கேட்டைத் தொறக்கும் போது...புது ஆளான என்னைப் பாத்து நாய் பயங்கரமா கொலச்சுது...நாய் கொலச்சது கூட எனக்கு பெருசா தெரியல...நாயை சமாதானம் படுத்த எங்கம்மா சொன்னத கேட்டு தான் ஒரு நிமிசம் ஆடிப் போயிட்டேன். அப்படி என்ன சொன்னாங்களா "டேய் டைசன்! ஒன் அண்ணண்டா". வீட்டுல நாய் வளத்தாங்கன்னா அண்ணன், தம்பி, மாமன், மச்சான் எல்லாமுமா நாம தான் இருக்கணும்.
:)-

ramachandranusha(உஷா) said...

டுப்புக்கு சூப்பர். சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணியே வந்துடுச்சு.
கை. பு உங்க தம்பிய விசாரிச்சதா சொல்லுங்க :-))))

யாத்ரீகன் said...

>> குரங்கு என்றால் நிஜமான குரங்கு
>> குரங்குகளுக்கு அந்த மீசிக் போட்டால் கோபம் வருமா
>>எதாவது மீசிக் போட்டா
>> இன்னொருத்தியும் குரங்குக் கடி வாங்கியிருப்பாள் போல
>> ஓடியாடி, சின்ன மகளின் ஓட்டையும் எடுத்துக் கொண்டு

டுபுக்கு.. சான்ஸே இல்லை.. :-)))) 200 பவுண்ட் டிஸ்கவுன்ட் தர சிபாரிசு தரலாம் :-)))

கைப்புள்ள said...

//கை. பு உங்க தம்பிய விசாரிச்சதா சொல்லுங்க :-))))//

நமக்கு ஒரு "cousin sister"உம் இருக்குதுங்க சித்தப்பா வீட்டுல...அவங்களையும் விசாரிச்சதா சொல்லனுங்களா?

தமிழ் தாசன் said...

உகரீட்டா சொன்னீங்க டுபுக்கு...

நமக்கும் அந்த அலர்ஜி (கொஞ்சமில்ல நிறையவே) உண்டு.. அப்ப ஒரு நாள் டுரைய்ங்ங்ங்ங்ங்ங் ( அதாங்க பிளாஷ் பேக் ). கிரிக்கெட் விளையாடும் பொழுது (நம்ம தான் அப்ப பேட்டிங்) ஒரு திரு நாய்... மண்ணிக்கவும் தெரு நாய் அந்த பக்கம் வந்துச்சு.. நம்ம கை சும்மா இருக்காம Bat ஆல காத்துல வீசி ரவுசு விட்டுட்டேன். அதுவும் ரவுசு பன்றேனு, தொரத்த ஆரம்பிச்சுருச்சு.. நான் ஓட... நாய் ஓட.......... இப்படியே ரண்டு stump க்கும் இடையே நானும் அதுவும் சேர்ந்து இருபது ரன் எடுத்தாச்சி....... எல்லா பயல்வொலும் சிரிக்கிறானுங்க... பல் வலியும்....நாய் கிலியும் தனக்கு வந்தாதான் தெரியும்னு நெனச்சுக்கிட்டே ஓடினேன்...பயங்கரமா மூச்சு வாங்கி, என்னால ஓட முடியாம டக்குன்னு நின்னுட்டேன். அது கிட்ட வந்த அப்புறம் திரும்பவும் Bat ஆல காத்துல வீசினேன் ( இது ரவுசு இல்லீங்க....ஓட முடியாம).......அது ஒரே ஓட்டமா ஓடிடுச்சி.......அடடா.......இந்த ஐடியா.........முதலே தோனுச்ச்சினா........தேவயில்லாம இருபது ரன் எடுத்திருக்கமாட்டேன்.....

Paavai said...

naama devarku apram, idhudan next in my favourite list - pakkathu work stationlendu etti pathaanga naan sirikara satham kettu ... excellent

Muthu said...

Dupukku,
kalakkal pathivu. :-)).

B o o said...

Chance e illai. One of your best posts. VPS. (Equivalent to ROTFL -Vizhundhu Perandu sirichen!)
.(பெரிய கல்லை எறிந்து அந்த வீட்டு ஓட்டைப் பெயர்த்துவிட்டால் அந்த வீட்டில் வசிக்கும் பெரிய குரங்கு பிடித்துக் கொள்ளும் அதனால் தான் சிறிய கல்) - was the best line. Hats off to you.

Unknown said...

நான் மட்டும் தான் நாய் துரத்தியதில் நாய்களின் மேல் எப்பொழுதும் ஒரு கண்ணை வைத்திருந்தேன் என்று நினைத்திருந்தேன் :)...

நீங்க பாபநாசமா? என் அப்பாவிற்கு கல்லிடைகுறிச்சி[நான் வளர்ந்தது உடுமலை]. நானெல்லாம் சின்ன பையானா இருக்கும் போது குரங்கு பாக்கவே கல்லிடைக்கு போக அடம் பிடிப்பேன்.

இராமச்சந்திரன் said...

என் அம்மாவின் சித்தியும் (அம்மாவோட அம்மா தங்கை), அத்தையும் (அம்மாவோட அப்பா தங்கை) கல்லிடைல (டுபுக்குக்கு பக்கத்து ஊர்) தான் இருக்காங்க. அவங்க இரண்டு பேருக்குமே பெரிய குடும்பம். அடிக்கடி ஏதாவது ஃபங்ஷன் இருக்கும். திருநெல்வேலில அவ்வளவா குரங்கு கெடயாது. கல்லிடைல போன எடத்துல குரங்க பத்தி தெரியாம நான் சீண்ட, அது என்னை துரத்த (almost jumped on me and scratched my back), கண்ணு மண்ணு தெரியாம ஓடி சாக்கடையில் விழுந்து...இவ்வளவுக்காகவும்...அடிஷனலா என் அப்பாகிட்டயும் அடி வாங்கினது இன்னும் மறக்க முடியாது.

Balaji S Rajan said...

நாய் ஒரு நன்றியுள்ள பிராணி. உங்க வீட்டுல ஆசை பட்றதுல ஒன்றும் தப்பு இல்லை. இந்த ஊர்ல ரொம்ப லொள்ளு... இரண்டு வேளை வாக்கிங்... அப்புறம் கொடுமை எதுவும் பண்ணிட்டா கம்பி எண்ண வேண்டியது தான்... பார்த்து லொள்ளுங்க.... அப்புறம் ஜொள்ளுகின்ற காலம் மாதிரி லொள்ளுகின்ற காலம்னு ஒரு போஸ்ட் போட வேண்டியது தான்....

Karthik Kumar said...

//இது போததென்று நூறு சத்யராஜும், ராஜ்கிரனும் சேர்ந்தது மாதிரி புஸு புஸுவென முடி வேறு.

super ovvamainga idu.

sema kalakkal. super padivu

வெளிகண்ட நாதர் said...

உங்க நாய்கடி, இல்ல நாய் கதை, நல்ல டமாஷூ போங்க!

Anonymous said...

Aiyo... dubukku....

excellent... each and every line was good... The complete team stood up to see, why am I laughing so much.... No one knows tamil here... So I just forwarded the link to all my tamil friends.... Ippadi oru vishayathai udane kamichu sirikka., pakathil oru tamil aalu illatha varutham innikku than vanthathu ponga...

appadiyum vidalai., ellam phone panni discuss panni sirikaren...

Kaipullai story and all the comments are also so good... cann't stop laughing

daydreamer said...

sirichu sirichu vayiru valikudhu. naai na lesa ninaikave koodathu. chinna vayasula pakkathu veetu state bank gopal nyabagam vandhuchu cycle la en cousin kooda night show poitu thiruppi varum podhu kaila oru kuchi. (naaya veratta) adha vida super en cousin avana thittinde varuvaan yeanna ivan cycle pinnadi carrier la rendu kalayum thooki vechi kundhi ukkandhukittu varuvaan.... cycle merikarathukulla uyir pogudhunnu en cousin thittuvaan.. so naai naale naalu adi nagandhu nikkaradhu nalladhu..

Yours Truly said...

Naai padaadha paadu kaeLvi pattrukkaen. Idhu naai kitta, padaadha paatu patta kadhayaa illa irukku :)

Naan UK vandha, ungaLukku kaNdippaa naai kutti gift paNNradhunnu mudivu paNNitaen, with all non-election-type promises from u that u wont desert it :-P

Usha said...

aha. Ippo purinjudu sabapathyku ein ivlo mariyadai kudukireengannu!!
Inda maadiriyana nai bayathukku ore pariharamthaan - vangidunga onnu. appuram mor kashayamellam thevaiye illai.
Very funny post.

Anonymous said...

nai polappu.....polandu kattitinga dubukku.Your style i mean your writting only [ not the alergi] is very enjoiable.I became regular visiter.
saras

லதா said...

சுஜாதாவின் ஓ என் இனிய இயந்திரா / மீண்டும் ஜீனோ புகழ் ஜீனோ எங்காவது சகாய விலையில் கிடைத்தால் ஒன்று வாங்கிப் பழ(க்)கி, பயத்தை ஐ மீன் அலர்ஜியைப் போக்கிக்கொள்ளுங்கள்
:-)))

expertdabbler said...

:)))
konnuteenga :)

PS: enakkum dog na allergy. maintain a safe distance...

neighbour said...

chaa... indha UK naaiyellam seri illai.. Bad doggie...

parunga namma ooru naiyukum, kornagukum irukara arivu indha Uk naiku illai..

veetula naai vaanga koodaathunu neengalae naai vesam podreenga pola iruku..

[ 'b u s p a s s' ] said...

ஹி..ஹி.. டுபுக்கு..செம ரகளை.

நானெல்லாம் single நாயா இருந்ததுனா தத்துவ பாட்டு பாடிகிட்டே (தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு...இதில் நாயென்ன..அடியே நீ என்ன) தப்பிச்சிருவேன்...

ஆனா அவங்க "family reunion" நடக்கும் போது தெரியாதனமா நம்மள பாத்தா விசாரிக்காம விட மாட்டாங்க. மினிமம் மூனு தெரு வரைக்கும் கொண்டு வந்து விட்டுட்டு தான் போவாங்க.

நானும் முதல்ல ஒரு ரெண்டு மூனு தரம், நம்ம சிம்பு ரேஞ்சுக்கு "ஏய்ய்ய்ய்ய்ய்...." எல்லாம் சொல்லி பாத்தேன்.. நான் "ஏய்ய்ய்" சொல்லி வாய் மூடுறதுக்குள்ளே நானே ஓட ஆரம்பிச்சதுதான் சோகம்.

இவ்ளோ லொள்ள வச்சிக்கிட்டு திரியருதுங்க நாய் வண்டிய பாத்ததுமே துண்ட காணோம் துணிய காணோமுனு ஓடுனத பாத்தப்போ ஆச்சர்யமா இருந்தது. automatic'ஆ நாய் வண்டி driver'ஆ நாம் ஏன் ஆக கூடாது? அப்படீன்னு முடிவு செஞ்சுட்டேன்.

அப்புறம் என் அம்மாகிட்டே ஒரு நாள் இத பத்தி சொல்லும் போது "நல்லா வாயேன்..என்ன..சில சமயம் வீட்டுக்கு ரெண்டு மூணு நாய்கள குடுத்துடுவாங்க"னு சொன்னவுடனே அமைதியாயிட்டேன்.

ஒரே ஒரு வருத்தம்... நாயா பேயா நான் கத்துகிட்ட பாடத்த

"Tackle தெருநாய் in 21 days, special edition" குடுக்க முடியலயேன்னு தான் வருத்தம்!

Anonymous said...

pona padhivukku ungalai thittinene
adhanal vandha nyabagamo :-)

appadi irundhal indha postai enakku sun music blade dheena stylela kadicate seidhirukkalam
hmmm...

sathyaraj/rajkiran uvamai brilliant

- thangaachi
neengal kettukondadhal inimel "bangalore thangaachi"

Anonymous said...

dubuks, chinna vayasula, mottai maadila, pattam vittundu irundhappo, oru time, korangu koottam vandhu, naa konjam seenda, enna praadichaa illa kadichadhaa therila, but en kaila oru thadam....annikki night, enakku mandhirichu vittu, edho kalimbu ready panni adha apply panninaanga...oru periya amali....till now, my cousins make fun of that event....now, i can show your post that one other person had kurangu kadi ;-))) kalakkal post.

Anonymous said...

Hi Dubukkana,
me too alergic (fear? or whatever) with dogs. some people cuddle them, kiss them even on mouth (thank god, not french kiss). they drool on cloths, sofa,bed & blanket. i can't stand this as the same people talk about hygeine & stuff.some people keep rats, possum,some kind of lizards as pets;thats disgusting.

at the same time pets owned by 'whites' are quite and gentle (even barks with low voice, stops immediately as signalled by owners, may be thats because if they harm people in any manner the 'fines' are very high )

btw your posting is so funny as usual.

Anonymous said...

yov mango, puthu site thirappu vizhavukku ithellam over build up... i thought u've closed this site... so i dint come here for long time... see, now i've to read so much in a single day... it would have been much easier if i read regularly...
subbu,

Anonymous said...

adadaa pona post padichittu blog-a izhuthu mooda poreengannu nenechu i was about to throw a party. Che waste

Dubukku said...

Kaipullai - வாங்க கைப்பு...உங்க கதை சூப்பர். ஆமா உங்க தம்பி டைசன் நல்லாருக்காரா? :P

Usha - வாங்க உஷா ...உங்கள சிரிக்கவைக்க முடிஞ்சதுல சந்தோஷம் :)

yaathirigan - யோவ்...நக்கல் விடாதீங்கய்யா...அன்னிக்கே எல்லாத்தையும் அழுது தொலைச்சாச்சு...இப்போ வந்து டிஸ்கவுண்டா...கணக்குல கழிச்சுக்கலாம்ன்னு சொல்றாங்க

Dubukku said...

Londonkaran - Welcome here danks. No worries about the typo's. Ippidi namma blog patthi naalu per kitta sollunga :)
(btwn do I know you? are you Ramkumar whom I gave you lift? )

Kaipullai - எதேது ரொம்ப பெரிய குடும்பம் போல நீங்க?

தமிழ்தாசன் - வாங்க தமிழ்தாசன்! உங்க கதையும் வேடிக்கையாத் தேன் இருக்கு. நாம வேணா எல்லாரும் சேர்ந்து ஒரு சங்கம் ஆரம்பிக்கலாமா? :P

Paavai - danks. Glad that you liked it. Teamla onnum prechanai aahidalaye ennala? :)

Muthu - Vanga Muthu...danks :)

Boo - romba danks :) Glad that you too liked it...

Uma - ohh danks. romba puhalndhu koocha pada vekareenga...

Karthik - வாங்க ஆமா கார்த்திக் கல்லிடைல புல்லா குரங்குக் கூட்டம் தான். நானும் கல்லிடைலேர்ந்து தான் பெண் எடுத்திருக்கேன் (ரெண்டு வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது)

Dubukku said...

Ramachandran - ஆஹா நீங்களும் குரங்கு கிட்ட மாட்டிக்கிட்டு இருக்கீங்களா? ரொம்ப சந்தோஷம் :)

Balaji - நன்றியுள்ள பிராணியெல்லாம் சரிதாங்க ஆனா இந்த விஷயம் நாய்க்கு தெரியுமா? எதுக்குங்க வம்பு...நான் ஜூட்

Karthic - danksga...adhu unmai thaane? :P

வெளிகண்ட நாதர் - இப்போ நினைச்சா டமாசாத் தான் இருக்கு ஆனா நாய பார்த்தா தான்...பயமா இருக்கு

Dubukku said...

Lakshmi - danks glad that you enjoyed. Ada romba puhalatheenga romba koochama irukku. Aana mail la link fwd pannunga hit count koodattum :))

Sri - Ada ennanga neenga vera vambula maati vidareenga...naan summa etharthama sonnenga :)

daydreamer - danks. Amaanga pinnadi utkarndha kaala thooki vechukalam but naam ottum pothu appidi panna mudiyathu. If there is not enough pace ...naai kitta vaasama maatikiduvom

Yours Truly - haiyooo venamnga...pls ...ellarum maati vidarathuleye irukeengle :))

Dubukku said...

Usha - aamanga unga Sabapathy kitta konjam solli veinga naan romba nalla paiyannu :)

Saraswathi - ohhh danks...vanga vanga vandhikittee irunga :)

Latha - அந்த நாயெல்லாம் நல்ல நாய்ங்க...சொன்ன படி கேட்கும்...ஹெல்பெல்லாம் பண்ணும்...ஆனா இதுங்களெல்லாம்....என்னத்த சொல்றது

DRaj - appidi podu So I am not alone isit :P

PK - vanga vanga vandhu sangathula serndhukonga ...:)

neighbour - amaanga namma pozhappu appidi aahip pochu enna panna

Buspass - அய்யா உங்க கிட்ட நிறைய தெரிஞ்சிக்கனும் போல இருக்கே...இவ்ளோ ஆராய்ச்சி பண்ணி வைச்சிருக்கீங்க...நம்மள மாதிரி அப்ராணிகளுக்கு உதவற மாதிரி எதாச்சும் பண்ணுங்க....

Dubukku said...

bangalore thangachi - This triggered on the london dog day incident. But ippo enna ungalukku kadicate seinjutta pochu... :)

Sundaresan - appidi podu neengalum kurangu kadi partya...ippo thanya sandhoshama irukku :))) same here I can show your comment now to my ppl :)


Guru - enna thideernu anna aakiteenga? I dont have anything against the dogs except for some **ahem** alergy :P

Subbu - suthha waste yaa..adhan tuesday post pannuvennu solli irundhenla...vandhu parka vendama...naatamai maathiri neengale theerpu sollita eppidi?

WA - Neenga party kudunga naan vena moodidaren...atleast appiyaavadhu neenga party kudunga parpom

கைப்புள்ள said...

//Karthik - வாங்க ஆமா கார்த்திக் கல்லிடைல புல்லா குரங்குக் கூட்டம் தான். நானும் கல்லிடைலேர்ந்து தான் பெண் எடுத்திருக்கேன் (ரெண்டு வரிகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது)//

Thalaiva! Indha madhiriyana vishayangal dhaan naan unga padhivula romba rasikkaradhu...appadiye rendu vishayathai link panni oru bit ottureenga paarunga...adhu...unga kitte vandhu konjam tuition eduthukkarane idhukku?

Idhellam eppadi varudhunnu...ketta Ilaiya thalapathi Vijay maadhiri adhellam thaana varudhunu simplea solliduveenga...irundhalum kettu vekkiren...eppadinga ippadi pinnureenga?

Anonymous said...

Kaipullai ipdi ellam pesuradhukku tuition eduthukka poreengala? nalla irundhaa seri :)

Annen paarty Chennai Dosaila dhaan CM amma vara neram paathu arrange pannanum, Bill mattum unga thalaila dhaan :D

Anonymous said...

That was funny. Hah, as usual.

Just one thing,
"இந்த நாய்களுக்கு என் மேல் இருக்கும் லவ்ஸ் சொல்லி மாளாது" -What's the meaning of maalaathu?

Anonymous said...

Aaaha, indha vishayathula I side the minority. Man's best friend-aache. Adhaan. Previously I had a German Shepherd Dog. Saved us out of tight spots a few times, if you know what I mean ;)

@ the woman:

Maaladhu = Kattupadiyagaathu. Shall not be sufficient. Right?

ambi said...

Thoda! side gapulla kallidaila irukkra naan, enga manni (Athaan unga thangamani) ellaraiyum ethoo kootamnu pootu vaangrengooo?

venaam, aprom pala pala unmaigala naan udaikka vendi irukkum.
ungala kingkong nu enga manni sonnathu thappe illai :)

லங்கினி said...

Hi Dubukku,
Namakkellam naai mela konjam bhayam-o allergy-o illa Sir, Mariyadhai avlo dhan.

Naai left side-la vandha vazhi vittu right side poiduven....

Dubukku said...

கைப்புள்ள -ஆஹா கிளம்பிட்டான்யா கிளம்பிட்டான்யா... சரி சரி இப்படி நாம ஒருத்தர ஒருத்தர் புகழ்ந்துக்குவோம்...நான் உங்க ப்ளாக்லயும் நீங்க என் ப்ளாக்லயும்...ஓ.கே? டீல்.. :))

WA - thoda...ithula CM vera set serthukareengala? bill thane vanga vanga kanaku theerthuralam

the woman - danks. சொல்லி மாளாது = can't say enough.
Naalaikku test vaippen ...ozhunga revise pannikonga :)

Krithika - German Shepherd aaa? neengallam andha minority aa? kuduthu vechavanga...yes they are very helpful (to their owners ) I agree :)
Kattupadiyaagathu is also right

ambi - vaadi vaa...udane ching chong thatiduviye manniku :))

Langhini - danks for dropping by and commenting. aamaanga adha mariyaathainum sollalam...hehe ippidi thane samalikkanum :P

Anonymous said...

Hi Dubukku,

Really, ur explanation is fantastic. yennala serippa control pannave mudiyaleenga. Hats off.

Natty said...

rofl :D nandri thala

Unknown said...

நாங்கல்லாம் பயப்படவே மாட்டோம்

அந்தபக்கம் போனா தானே பயப்படனும் . கோட்டை தாண்டி நீயும்(நாயும்)வரக்கூடாது நானும் வரமாட்டேன்.

Krishna Kumar.S said...

Hai,

Excellent write up. I am also having an idea to write in tamil. After seeing yours I have got some serious ideas.

Well done!

I adopt dogs and give food. But I am still afraid of dogs. I have got some bad experience of dogs chasing my cycles.

Anonymous said...

I am slightly confront with you over your Profile,there you said there is no strict meaning for the word "Dubukku".

You must have some experience language slang in Chennai and as well as Madurai.

In madurai,People used to abuse minors as "Pudukku".I hope you wont ask me to explain the word again Pudukku.Please seek some Madurai Tamils to explore the meaning of the same.

The same words tried by some Chennai native people.But their pronounciation spelled incorrectly as dubukkku.Then some of the college students used this word with their collegues.So the word "Dubukku" nurtured by Chennai College students only.We must credit this kind of Tamil words for them.I am lucky to be fluent in Madurai Tamil and Chennai Tamil slang.

suky said...

first time..unda blog padikkaren. its so nice.. unga style of writing is very captivative.. oru chinna Ananda vigadan..appusami kadhai padicha madhiri irukku.. :)

Karthik K Rajaraman said...
This comment has been removed by the author.
Karthik K Rajaraman said...

Kurangu Meesic Maamaa! Kalakkarel Pongo!

Unknown said...

கவுட்டைவில்லு என்றால் உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. Y மாதிரி மரக் கொப்பை உடைத்து அதில் சைக்கிள் ட்யூப்பை கத்தரித்து கட்டி செய்யும் அத்தியாவசியமான ஆயுதம்.


correct...enga vur pakkam ithuku pear VUNDI VILLU...

கடுகு said...

உங்கள் நாய் புராணம் படித்தேன். நன்றாக உள்ளது. பிலிம் காடிய மாதிரி இருந்தது.. நடுவில் இன்னும் கொஞசம டயலாக் வரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் . பள்ளிகூட “ வியாசக் கட்டுரை சாயல் வந்துவிடும். மற்ற கட்டுரைகளையும் படித்து விட்டு பிறகு எழுதுகிறேன். பொடி எழுத்தாக இருக்கிறது. அத்துடன் எழுத்துகள் ஏதோ கலரில் உள்ளன....
கமலாவும் கண்மணியும் என்ற கட்டுரை என் BLOG-ல் இருக்கிறது. அது கமலா நாய் வளர்த்த் புராணம். படித்துப் பாருங்கள்.. -- கடுகு

Anonymous said...

sooparu...kaigal nadunga idhai type seigiren....en vaazhkaiyil naan santhitha(santhithu odiya) pala naaygal ninaivukku vandhana!

tamil soriyan said...

kaipulla super

Anonymous said...

Hi All,
I am regular reader. I want to share a real incident.

I had a friend in Chennai. He is a sports man from Kerla. He is very afraid of Dogs.
We went to Midnight movie. On the way we were welcomed by a dog , it was keept on barking.
My friend told sportsman, his name was jawahar.
Jawahar , barking dog does not bite you please follow us.
He did not move any step. Replied to us "You know and i know that barking dog does not bite, How can you sure that the dog know it?!!!"
Enakku theriyum, uninakkum theriyu, kolaikira naai kadikkathunnu , aana, antha naaikku theriyma ?
Keettan. We are still laughing about it.
Enjoy!

Dee said...

"நானே கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு குலைத்துக் காட்டி, ஓடியாடி, சின்ன மகளின் ஓட்டையும் எடுத்துக் கொண்டு மெஜாரிட்டி இல்லையென்று சொல்லி தீர்மானத்தை தள்ளிப் போட்டுவிடுவேன்."

ROFL. You're too funny. Love, love your writing style. I just started reading all of your blogs. Totally loving them. India-la college time-la irukkara feeling.

Unknown said...

i know my friends sambandhi couple got frightened by the dog ...left the house in a hurry...
then i understood that their relationship got strained...and they never visit their SAMBANDHIS HOUSE
but this couple still continue to maintain the dog....

Post a Comment

Related Posts