Thursday, November 24, 2005

லண்டனிலிருந்து கனடா வரை ஜொள்ளு....

உங்கள் வாய் முஹூர்த்தம் பலித்துவிட்டது. ஜொள்ளித் திரிந்த காலம் பேப்பரில் வந்து கொண்டிருக்கிறது. ஆமாம் கடந்த ஒரு மாத காலமாக வந்து கொண்டிருக்கிறது. எனக்கே நேற்று தான் தெரியும். நண்பர் பாஸ்கர் பாலனுக்கு சொல்லி என் கவனத்துக்கு வந்தது. பிரேமலதா "ஏங்க எங்கிட்ட சொல்லவே இல்லையே" என்று அங்காலாய்த பொழுது எனக்கும் அதே வருத்தம் தான் இருந்தது பேப்பர்காரர்கள் நம்மிடம் சொல்லவேஇல்லையே என்று. லண்டன் மற்றும் கனடாவில் வெளியாகும் "ஒரு பேப்பர்" (பேப்பர் பெயரே அதாங்க) என்ற லோக்கல் நியூஸ் பேப்பர் தான் சத்தம் போடாமல் வெளியிட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தனியாக ஒரு செக்க்ஷன் குடுத்து தொடராக வந்து கொண்டிருக்கிறது.

எடிட்டரிடம் தொலைபேசியில் பேசினேன்...முதலில் இ.மெயில் அட்ரெஸ் கிடக்கவில்லை என்று ஜல்லியடித்தார். பின்னூட்டத்திலாவது தகவல் தெரிவித்திருக்கலாமே என்று மடக்கிய பிறகு சரியாக நாலரை முறை வருத்தம் தெரிவித்தார்.

"அடிக்கடி அனானிமஸ் பெயரில் சீக்கிரம் ஜொள்ளித் திரிந்த காலம் எழுதுங்கன்னு அவசரப்படுத்தியது நீங்கதானா " என்று கேட்டதற்கு சிரித்து சமாளித்துவிட்டார். இந்திய ஹைகமிஷன் பற்றியது மற்றும் பல பதிவுகளை வெளியிட்டிருப்பதாக நிறைய தகவல் சொன்னார். அட்ரெஸ்ஸை வாங்கிக் கொண்டு இதுவரை சுட்டு இட்ட பதிவுகளை தபாலில் அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கிறார். (அனுப்பிருவீங்க தானே சார்?)

என்னம்மோ போங்க ஜொள்ளு விட்டது கனடா வரைக்கும் போய்க்கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் இந்தப் பேப்பர் சென்னை தோசாவிலும் இருக்கிறதாம். இத்தனை நாள் பார்க்கவே இல்லை.

பலசரக்கு கடையில் வேலை பார்ப்பவர் நன்றாகப் பேசுவார். அவரிடம் லேசாக சொன்னேன் (சொன்னாலாவது கூடக் கொஞ்சம் கறிவேப்பிலை தருவார் என்ற நம்பிக்கையில் தான்).

"யாரு நீங்களா?? பத்திரிக்கையிலயா"

"அட ஆமாங்க"

"என்னத்தப் பத்தி எழுதறீய?"

"...அது வந்து... ஜொள்ளுவிடறதப் பத்தி.."

"ஹா ஹா எது இந்தப் பொட்டப் புள்ளகளைப் பார்த்து இளிக்கறதையா...? சும்மா உடாதீங்க......உங்க பெயர் போட்டிருக்குமா..?"

"...போட்டிருக்கும்...ஆனா டுபுக்குன்னு போட்டுருப்பாங்க..."

"டுபுக்கா?..இதென்ன பெயரு? ..ம்ம்ம்ம் என்ன பேப்பர்ல வருது?"

"...அது வந்து "ஒரு பேப்பர்"..."

"...உங்கள மாதிரி இன்டெர்நெட் பார்க்கறதுக்கு எங்களுக்கு சம்பளம் குடுக்கறான்னு நினைச்சீங்களா...சும்மா வேலை நேரத்துல விளையாடாதீங்க..."

சொக்கா....சொக்கா....

"ஒரு பேப்பர்" லிங்க் இங்கே ஆரம்பித்து...இங்கே இங்கே இங்கே

17 comments:

Anonymous said...

இந்த ஒரு பேப்பர் காரங்க இருக்காங்களே! அவங்க இப்படித்தான். சுட்டு பேப்பர்ல போட்டுருவாங்க. கேட்டா உங்ககிட்ட டபாய்ச்சமாதிரித்தான் டபாய்ப்பாங்க. இதுவரைக்கும் யாருக்கும் அவங்க தபால்செலவு போட்டு அனுப்பினதில்லை. நீங்க லண்டன்ங்கிறதால அனுப்பிருவாங்களோ என்னமோ..

அவங்களுக்கு பக்கம் நிரப்ப இப்படித்தான் இணையத்தில இருந்து சுட்டுப்போட்டுக்கிட்டு இருக்காங்க.

[ 'b u s p a s s' ] said...
This comment has been removed by a blog administrator.
[ 'b u s p a s s' ] said...

many many congratulations.

atleast, ullathu ullapadeeye "as is" copy publish panna canada naatu thozhil adibar (summa oru buildup) ungalukku oru car'o illa bus'o vaangi kudukattum.

ensoy again, watching this cool ad


cheers

Anonymous said...

Heh heh, "'Ennatha pathi ezhudureenga?' '...Adhu vandhu...jollu vidardha pathi..."

Semma response! Congratulations. :)

Chakra said...

> "...உங்கள மாதிரி இன்டெர்நெட் பார்க்கறதுக்கு எங்களுக்கு சம்பளம் குடுக்கறான்னு நினைச்சீங்களா...சும்மா வேலை நேரத்துல விளையாடாதீங்க..."


- enda.. avan mattum daan sollala... ippo avanayum solla vechuttiye.

btw, andha oc karuveppilai, tooth paste idellam vidaradha illa?

Paavai said...

Achhil ezhuthu vandi iruppadukku congratulations...

Pala sarakku kadaila poi ippadi matikka vendaamaga irundudu.

Prepare yourself for many such situations like pala sarakku kadai

Jeevan said...

Congrats Dubukku. pora pokka partha, unga Jolli thirentha kallatha Mega seriel illaina cinemava edukka poranga.

Usha said...

aha...patheengala paatheengala, neenga muyarchi edukamaye achil vandaachu. Konjam muyarchi pannina mainstream media laye padipichu ungal keerthiyai tamizh pasum ulagam muzhukka theriya panna mudiyum.
oru tamizh pathrikaikku oru piece anuppi paarungalen.
seekiram, enga peyar ellam medayil ketka athanai aarvam .vere onnum illai!!!
Vaazhthukkal dubukku. Ithanai arumaiyaana manam veesum malarai maraithu veika mudiyuma? Mudiyavum mudiyadu koodavum koodadu!!

Dubukku said...

Anonymous - ஆனா அந்த எடிட்டர் போன்ல பேசும்போது அத ஒத்துக்கிட்டார். இன்னிக்கி தபால்ல வெளியான பேப்பரை எல்லாம் அனுப்பிட்டாங்க...கிடைத்து விட்டது.

buspass - thanks. Canada thozhil adhibar bus vaangi kudkarathellam romba overngaa...:)> that ad was cool funny isn't :)

Krithika - Thanks. hehe amam enna perla ezhutharana dubukkunu sonna oru maathiri parkaranga...ithula Jollunu sonna ketkave vendam athan therinja circle la romba sollikarathe kidaiyathu

Chakra - dei naan sollala da avanukke therinjirukku nambala pathi :)
(andha paste use panni parthiya? )

Dubukku said...

Uma Krishna - hehe idhu kooda nalla thaan irukku inime ippidi sollaren danks :P

Paavai- danks. Yes yes oru velai nalla pathirikaila vandhalum ushara thaan iruppen naan than dubukkunu romba sollika matten :)

Jeevan - Thanks mate. Mega serialaaa...vendam cinemave pothum (ennamo enakku inga ellarum queuela vandhu wait pannara maadhiri ithellam romba over illa :P )

Dubukku said...

Usha - danks very much. oru velai en articles main stream media la publish aachuna I owe all that to ppl like you who have encouraged me here (****ahemm**** ippove arasiyalvathi maadhiri pesa arambichutennu nenaikaren so adakkiye vasikaren)
again danks very much for the encouraging words.

Anonymous said...

Aniyaayamaa irukke Dubukku, unga kitta sollaama epdi avunga print panalaam. Chumaavaa viteenga andha editor-aa? Contact details kudunga naan kekuren

பழூர் கார்த்தி said...

வாழ்த்துக்கள்யா..எது எப்படியொ டுபுக்கு, நீங்க கனடா நாடு வரையிலும் பிரபலமாயிட்டீங்க... கூடிய சீக்கிரம் சன் டிவி 'வணக்கம் தமிழக'த்துல வருவீங்க நினைக்கிறேன்.. வந்தா என் பேரை மறக்காம சொல்லனும், என்ன, சரியா :-))

Anonymous said...

Your style of writing is really good - with good flow and appropriate!? usage of words. Keep it up..

But one thing is not justfied... "Oru Paper" not only plagiarized your blog but also published it along with "samayel kurippugal".... perhaps target readers are other halves ;)This is not justified.

Anonymous said...

Inna Thala,

Naan Sonnennu yen kitta jaga vaangineeyale. Ippo paartheeyala...?
Super appu Superuuuu.....

Koodiay Seekram keezha vullathu nadakka povuthu Saamy.
"Indiya Tholaikaatchiyile Muthan Muraiyaaha KADAL ALAVU Jollu Vitta KADAL KADANTHA Tamizharin Iniya Anubavangal - Nihazhchiyin Thalaippuu - Sarvam JOLLU Mayam. Kaana Thavaraatheerhal..
Oliparappu Neram - Kalluri mudinthu veedu thirumpiya pin Neram".......

Super Diaglog Comedy.

//
"என்னத்தப் பத்தி எழுதறீய?"

"...அது வந்து... ஜொள்ளுவிடறதப் பத்தி.."
//

Then he asked again..

//
......உங்க பெயர் போட்டிருக்குமா..?"

"...போட்டிருக்கும்...ஆனா டுபுக்குன்னு போட்டுருப்பாங்க..."

"டுபுக்கா?..இதென்ன பெயரு?//

Adutha thaba antha kadaikku poneyalaa????? :-)
VARAVERPU EPDIIIII ......???? ;-)

//
"...உங்கள மாதிரி இன்டெர்நெட் பார்க்கறதுக்கு எங்களுக்கு சம்பளம் குடுக்கறான்னு நினைச்சீங்களா...சும்மா வேலை நேரத்துல விளையாடாதீங்க..."
//

Nalla Vela.. Yengala Pathi JOLLALIYEE... :-))) Yenna Naanga JOLLU vittatha Paarthu JOLLU VUTTTUNU keeromeee.... :-)

Koodiya Seekram Sangam & then Katchi Aarambikka Vaazthukkal.... :-)

Athu sari... Comments & response veettle paarkuraangala... ? Anne, Oyinga Saapaadu kedaikka....?? :-)

WIth REgards,
TMmaal.

Dubukku said...

WA - enna pannarathu pottutanga..sorry sollaranga..vidunga :)

Somberi Paiyan - danks. vanakkam thamizhagam lam romba overpa :)

Venkat - danks . Same thoughts here about samailyal kurippugal lol :)TMMaal - danks. romba ottatheengaiyaa. Andha kadaikku regulara poven ana adhukkappuram innum pohala. Veetula padikaranga. Ithuvaraikkum saapadu olunga kidaikuthu :) (but comments parthu Boost kudicha maathiri irukkume...appo boost vendamenu adikkadi boost cut ahuthu :)

Raj - danks. Thats the bit very encouraing :)

Murali said...

Hello Dubukka

Heartiest congrats on get published on paper :) I wish they had let you know before.

Looking forward to seeing you in Sun TV :))

Murali

Post a Comment

Related Posts