குருதிப் புனல் சினிமாவில் கமல் கௌதமிக்கு முத்தம் கொடுக்கும் (தல...தல..) ஏகப்பட்ட காட்சிகளில் ஒன்றில்- அவர் உம்மா கொடுத்துக் கொண்டிருக்கும் போது அவர் பையன் வந்துவிடுவான். "நான் எதையும் பார்க்கலை நான் எதையும் பார்க்கலை" என்று அவன் நக்கல் விடும் போது..."டேய் கண்ணத் தொறடா இதுல ஒன்னும் தப்பில்லை உங்கம்மாள உங்கப்பன் முத்தம் கொடுக்கிறான் . இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை, என்ன... நான் சொல்லிக் குடுக்கலைன்னா சாட்டிலைட் டெலிவிஷன் கத்துக் கொடுக்கும் அவ்வளவு தான் " - என்று தல ஒரு டயலாக் விடுவார் பாருங்கள் - அட்ரா சக்கை என்று என்னை அட போட வைத்த இந்த வசனம் - எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் உடன்பாடான ஒரு விஷயம். தற்போது எங்கள் வீட்டில் (லண்டனில்) இது தான் கலாச்சாரம். அதுக்காக எல்லாமே ஒப்பனாத் தான் பண்ணுவீங்களான்னு குதர்க்கமாய் கேட்கக் கூடாது. அபத்தின் உச்சக்கட்டம் அந்தக் கேள்வி என்பது என் அபிப்பிராயம். பாலியல் தெய்வீகமானது என்று ஒரு துருவத்திலோ அல்லது மிகவும் ஆபத்தானது என்று அதற்கு நேர் எதிர் துருவத்திலோ இருந்து பார்க்காமல் மிக இயல்பான ஒன்று என்பது தான் என்னுடைய நிலைப்பாடு (கவனிக்க - என்னுடைய = என் தனிப்பட்ட) . இது இயல்பானது என்பதை என் மகள்களுக்குப் புரியவைத்து அதைப் பற்றி ஒரு பயமோ இல்லை மிரட்சியோ இருக்கக் கூடாது என்பதில் நானும் தங்கமணியும் உடன்பட்டிருக்கிறோம். கவனிக்க - கூச்சம் என்பது வேறு- அதைச் சொல்லவில்லை. அவர்களுக்கு பாலியல் ரீதியாய் casual and general awareness இருக்கவேண்டும் எனபதில் நானும் என் மனைவியும் மிகத் தெளிவாக இருக்கிறோம். ஆனால் அதற்கு ஒரு ஆரம்ப வயது வரம்பு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
என்னுடைய இளம் பிராயத்தில் எல்லாம் பூவை கிலுகிலுவென்று க்ளோசப்பில் காட்டி தத்துவார்த்தமான பின்நவீனத்துவ குறியீடுகளுடன் கூடிய முத்தக் காட்சியோ, இல்லை கையைப் பிசையும் மேற்படி காட்சியோ டி.வியில் வந்தால் எங்க வீட்டுப் பெரியவர்களை விட நான் தான் நிறைய டென்ஷனாகியிருக்கிறேன். ஏன் என்றால் அடுத்த கேள்வி, ஹோம்வொர்க் முடிச்சாச்சா? ஹோம்வொர்க் முடிச்சா அவ்ளோதானா..? மேலே படிக்கவேண்டாமா? அப்படியே டி.வில உட்கார்ந்து விடக்கூடாது எப்போதும் படிப்ப பற்றிய சிந்தனை இருக்கணும், மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கருமமே கண்ணாயினார் என்று ஆரம்பித்து விடுவார் மாமா. அவன் அங்க முத்தம் குடுத்ததுக்கு எனக்கு இங்க பாட்டு விழும்... நானும் கண்ணாயினார் சரியான கருமம்டா என்று புத்தகத்தை எடுத்து பிரித்து வைத்துக் கொண்டு பூவுக்கு பின்னாடி அந்தாள் கலகலன்னு என்ன பண்ணியிருப்பான்னு சாக்ரடீஸ் மாதிரி சிந்தனையிலாழ்ந்து விடுவேன். இதன் காரணமாகவே எனக்கு ரொம்ப பிடித்த ராஜா ராணி படங்களில் இந்தப் பயபுள்ள முத்தம் கித்தம்ன்னு கிளம்பிரக் கூடாதே என்று எனக்கு கிலியாய் இருக்கும்.
இந்த ஆழ்ந்த பூ கலாச்சாரம் இங்கிலாந்தில் இறங்கிய ஆரம்ப நாட்களில் நடுமண்டையில் நிறைய குட்டியிருக்கிறது. டிரையினில் யுவனும் யுவதியும் இறுக்கமான அணைப்பில் - லிப் டு லிப்பில் முனைப்பாக புதையலைத் தேடிக்கொண்டிருந்த போது எனக்கு உதறலெடுத்து வியர்த்துக் கொட்டியது. பொதுவில் இப்படிச் செய்யவேண்டுமா கரெக்டா எனபதெல்லாம் புறந்தள்ளுங்கள், அது அந்தந்த நாட்டின் கலாச்சார, தனிநபர் மற்றும் சமுதாயத்தின் கூட்டு நிலைப்பாடு. இங்கே நான் சொல்ல வருவது அதல்ல. இந்த நாள் இனிய நாள்ன்னு அன்றைக்கு அந்த முத்தக் காட்சியை கேஷுவலாய் கடந்து போக முடியாத என்னுடைய மனப்பாண்மையை. என்னமோ என்னை யாரோ கையைப் பிடித்து இழுத்து கூப்பிட்ட மாதிரி ஒரு படபடப்பு, உதறல் etc etc. இன்றைக்கு இது நடந்தால் கேஷுவலாய் கடந்து போய் நல்ல வியூபாயிண்ட்டில் உட்கார்ந்து கொள்கிறேன் என்பது வேறு விஷயம்.
இங்கே வீட்டில் ஆங்கில சினிமாக்களிலோ, தமிழ் சினிமாக்களிலோ கொஞ்சம் முத்தத்தை மீறிய ரசாபாசமான காட்சி வரப் போகிற அறிகுறி தென்பட்டால் டி.வி.யை பாஸ் செய்துவிட்டு மகள்களிடம் ஓப்பனாகவே அந்தக் காட்சி அவர்களுக்கு அவர்கள் வயதின் காரணமாக உகந்ததல்ல என்று சொன்னால் சிரித்துக் கொண்டே தெரியும் தெரியும் என்று ஓடி விடுவாரக்ள் (அல்லது என்னைப் பார்த்து திரும்பி உட்கார்ந்து கொள்வார்கள் - இது காட்சியை விட இன்னும் சங்கடம்) . நான் ம்யூட்டில் போட்டு விட்டு படத்தைக் கண்டினியூ பண்ணுவேன். முன்னாடி எல்லாம் என் இரண்டாவது மகள் - நான் மட்டும் எப்படி அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம் என்று கேள்வி கேட்பாள். பதினெட்டு வயதுக்குப் பிறகு அந்தக் கேள்விக்குப் பதில் புரியும் என்று சொல்லி வைத்திருந்தேன். தற்போது அவளே சினிமா முதற்கொண்டு வயது ரேட்டிங்க் பார்த்தே தேர்வு செய்கிறாள். இந்த ரேட்டிங் விஷயத்தில் ஹாலிவுட் திரைப்படங்கள் மிக எச்சரிக்கையாக கையாளப் படுகின்றன. கெட்ட வார்த்தைள் பீப் செய்யாமல் திட்டுவதாய் இருந்தாலே வயது ரேட்டிங் கூடிவிடும். தியேட்டரில் கைக் குழந்தைகளைக் கூட வயது மீறிய ரேட்டிங் இருக்கும் படங்களுக்கு கூட்டிப் போக முடியாது. இங்கே யூ.கேவில் இது தெரியாமல் தமிழ் சினிமா திரையிடப் படும் போதெல்லாம் நிறைய நம்ம ஊர் மக்கள் குழந்தைகளைக் கூட்டி வருவார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் செக்யூரிட்டி ஆட்கள் வந்து வெளியே அனுப்பி விடுவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் லைசன்ஸுக்கு ஆபத்து வரும். வீட்டில் வயதுக்கு மீறிய ரேட்டிங் படம் பார்க்க வேண்டுமென்றால் பஞ்சாயத்து என்னிடம் வந்த பிறகே மகள்கள் பார்ப்பார்கள்.
அதே போல் மேற்கத்திய நாடுகளில் இந்த தொட்டுக் கொள்வது முத்தமிட்டுக் கொள்வது எல்லாம் சகஜமாயிருந்தாலும் அந்த "எல்லாமே" எனும் அடுத்த கட்டம் பொது வெளியில் நடப்பது அல்ல. அங்கங்கே எக்ஸப்ஷனாய் நடப்பதும் உண்டு ஆனால் அவை எக்ஷப்ஷனாய் மட்டுமே இருக்கும். தினசரி மூன்று காட்சிகள் என்று அரங்கேறாது. அப்படி எப்போதாவது அரங்கேறும் போதும் கூட ஒரு நமுட்டு சிரிப்புடன் மக்கள் கடந்து போகிறார்களே தவிர கூட்டம் கூட்டி டிக்கெட் போட்டு எக்ஸிபிஷன் நடப்பது இல்லை. குழந்தைகள் நடமாட்டம் இருக்கும் பகுதியில் இந்த முத்தக் காட்சி விரசமில்லாத வரையில் மட்டுமே ஒ.கே இல்லையென்றால் மக்கள் முனுமுனுக்க ஆரம்பித்துவிடுவார்கள். சில நேரங்களில் கூப்பிட்டு "Get a room" என்று சொல்லியே விடுவார்கள்.
ஆனால் பொது வெளியில் வராமால் இங்கே பத்தாம் க்ளாஸ் படிக்கும் போதே ரகசியமாய் திருட்டுத் தனமாய் செம்புலப் பெயல் நீர் போல கலப்பதெல்லாம் நடக்கும் எனும் போது என் மகள்களுக்கு பாலியல் பற்றி ஒரு புரிதல், ஒரு நிதானம், அவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றி எங்களிடம் சகஜமாய் பேசும் ஒரு சூழ்நிலை இருக்கவேண்டியது அவசியம் என நம்புகிறேன். நான் ஆண் என்ற கூச்சத்தின் காரணமாக என்னிடம் இல்லாவிட்டாலும் என் மனைவியிடமாவது அவர்கள் சகஜமாய் பேச வேண்டிய அவசியம் இருப்பதாய் நாங்கள் கருதுகிறோம். இந்தியாவின் கலாச்சாரமும் வெகு தூரத்தில் இல்லை. தற்கால இந்திய சினிமாவில் பூவெல்லாம் காட்டுவதில்லை, தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுக்கிறார்கள். இது இயல்பானது என்பதிலிருந்து உடம்பில் ஏற்படும் ஹார்மோன்கள் என்பது வரை கேஷுவலாய் தெளிய வைப்பது அவசியம் என்று கருதுகிறோம். ச்சே ச்சே இதெல்லாம் இங்க இல்லை என்ற நடிப்பு சென்னையில் குறைந்து ஓப்பனாய் பேசும் நாள் வெகுதூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. ஒரு மினி ஸ்கர்ட்டை அணிந்து கொண்டு பெங்களூரில் போவது மாதிரி சென்னையில் போக முடியாது என்று நிறைய பெண் தோழர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ரேப் நிறைய நடப்பதற்கு காரணம் இந்த மாதிரி உடையணிவது எனும் வாதம் அபத்தம் என்று நினைக்கிறேன். இந்த மாதிரி உடையணிவது அவர்கள் தனிப்பட்ட விருப்பம், காரண காரியம், ஆனால் அதை சகஜமாய் கடந்து செல்லும் மனோபாவம் இல்லாததே பாலியல் வன்முறைகளுக்கு காரணம் எனும் தரப்பைச் சேர்ந்தவன் நான். உடை மட்டுமே காரணமாய் இருந்தால் மேற்கத்திய நாடுகளில் பாலியல் வன்முறை எண்ணிக்கை நம் நாட்டை விட பல மடங்கைத் தொட்டிருக்கவேண்டும்.
இந்த பாலியல் புரிதல் விஷயத்தில் டாக்டர் மாத்ரூபூதம் அவர்களும் டாக்டர் ஷர்மிளா அவர்களும் தொன்னூறுகளில் தொகுத்தளித்து வந்த புதிரா புனிதமா நிகழ்ச்சியை நன்றியோடு நினைவுகூர்கிறேன். மிகக் கன்சர்வேட்டிவான தமிழ்நாட்டில் அந்த நிகழ்ச்சி வந்த காலகட்டத்தில் அது மாதிரி ஒரு நிகழ்ச்சி நடத்த நிறைய துணிவு தேவைப்பட்டது. மருத்துவ மாணவர் என்றாலும் கேள்விகளைத் தொகுத்தளிப்பது பெண் என்பது பெரிய புரட்சியாய் இருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நிறைய குடும்பங்களே வரவேற்பு அளித்தது ஒரு ஆராக்கியமான சூழ்நிலைக்கு வித்திட்டது. ஆனால் தற்போது அது மாதிரி நிகழ்ச்சிகள் வருகின்றனவா என்பது தெரியவில்லை.
இங்கே ஸ்கூலில் ஐந்தாம் வகுப்பில் வயதுக்கு வருவது பற்றி சொல்லிக் கொடுக்கிறார்கள். எட்டாம் வகுப்பில் பாலியல் பற்றியும் வயது தொடர்பான ஹார்மோன்கள் செய்யும் விளைவுகள் பற்றியும் புத்தகமும் குடுக்கிறார்கள். புத்தகத்தை அம்மாவும் பெண்ணும் மறைத்து மறைத்து பேணிக் காக்கிறார்கள். ரகசியமாய் பேசிக் கொள்கிறார்கள். ரெண்டு வருஷமாச்சு இன்னிக்கு வரைக்கும் புக்கு கைக்கு சிக்கவில்லை. கேட்டால் நான் வயசுக்கு வரலையாம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் போங்கடீங்க...என்று பத்தாம் க்ளாசில் முதல் பொஸ்தவத்தை போணி செய்து அறிவுக் கண்ணைத் திறந்து வைத்த கிங்பெல்லை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன் :)