நான் முடிவெட்டிக்கொண்டால் எதாவது விசேஷமாக நடக்கும். அதுவும் முடித்திருத்துபவர் ரொம்ப மெனெக்கெட்டு திறமையெல்லாம் காட்டி கரிச்சான் குஞ்சு ரேஞ்சுக்கு கரம்பியிருந்தால் அதிவிசேஷமாக சம்பவங்கள் நடக்கும். ரெகுலராக பஸ்ஸில் வரும் லொட லொட பாட்டிக்குப் பதிலாக அழகான வெள்ளைக்கார குட்டி வந்து ஆட்டையாம்பட்டிக்கு வழி கேட்பாள். "இம்புட்டு நாளா எங்கம்மா போயிருந்த...மண்டைய கரம்பிட்டு வந்தவுடனே கரெக்டா வந்துடறீங்களேம்மா.." என்று மூக்கை உறிஞ்சிக் கொண்டே வழியைச் சொல்லுவேன்.
இப்பேற்பட்ட கரம்பின முஹூர்த்ததில் ஒரு நாள் பிரபல ஆங்கில சக ப்ளாகர் பெண்மணியிடமிருந்து தொலைபேசி அழைப்பு. விஷயம் இது தான் அந்த அம்மணி என்னுடைய லண்டன் குண்டுவெடிப்பு சம்பவ அனுபவத்தை ஒரு நிமிட டாக்குமென்டரியாக எடுத்து இங்கிலாந்திலுள்ள ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் போட்டிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். எனக்கு தலைகால் புரியவில்லை. " டாக்குமென்ட்ரியா?..அதுவும் நான் நான் நானே நடிக்கனுமா...என் ஃபோட்டோவ முன்ன பின்ன பார்த்திருக்கீங்களா??ஓ நாம நேர்லயே பார்த்திருக்கோமா..உங்களுக்கு ஓ.கேவா...என்னது நாளைக்கே ஷூட்டிங்கா..." இந்த முறை கரிச்சான் குஞ்சு யோகம் பலமாகவே இருந்தது. இரண்டு வாரம் டைம் கேட்டால் அதுக்குள்ளயாவது மண்டையில் கொஞ்சம் புல் முளைத்துவிடாதா என்று கேட்ட வாய்தாவெல்லாம் தள்ளுபடியாகிவிட்டது. சரி அவங்க கேமரா குடுத்து வைத்தது அவ்வளவு தான்னு நேரம் காலமெல்லாம் குறித்துதாகிவிட்டது.
இருபத்திநாலு மணிநேரம் போதாதா. வீட்டில் அலம்பல் படலம் ஆரம்பமாகியது. போன் அடித்தால் "அனேகமாக மணிரத்னமாகத் தான் இருக்கும்...இந்த டைரக்டர்ஸ் தொல்லை தாங்கமுடியலை...மனுஷன் எவ்வளவு போன் கால்ஸ் தான் அட்டெண்ட் பண்ணுவான்...நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு" -ஆரம்ப கட்ட அலம்பல்களுக்கெல்லாம் தங்கமணி கண்ணாலேயே எரித்துக் கொண்டிருந்தார். எதற்கும் இருக்கட்டும் என்று கண்ணாடி முன்னாடி "ஹலோ ஐ ஆம் சஞ்சய் ராமசாமி" டயலாக் பேசி பழகிய போது, அங்கே ப்யூஸ் புடுங்கி காதில் புகை வர ஆரம்பித்துவிட்டது. "எப்படி இருந்த நான்....இப்படி ஆகிட்டேன்..." அசரீரியாக பதில் தாக்குதல் ஆரம்பித்தது.
"இந்த பாரும்மா...நடிப்புல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக்கூடாது...கவலப்படாதே...எனக்கு கதவை திறந்துவிடற மாதிரி ஒரு லேடி காரெக்டர்க்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க...உன்ன வேணா ரெக்கமெண்ட் பண்ணறேன்.."
****
ஒரு மாலை இளவெய்யில் நேரம்...
அழகான...இலையுதிர்.காலம்..
****
"தோடா....நீங்க போறதே சார் போஸ்ட்ன்னு முதுகு மட்டும் தெரியற போஸ்ட்மேன் காரெக்டருக்கு இதுல என்ன வேற ரெக்கமெண்டா..வேண்டவே வேண்டாம்..நான் இப்படியே இருந்துட்டு போறேன்..."
"அப்பாடா எங்க ஒத்துக்குவியோன்னு கவலையா இருந்தது. கவலபடாத வேற ஏதாவது நல்ல காரெக்டர் மாட்டிச்சினா சொல்றேன். இதுக்கு கனிகாவ கமிட் பண்ணிக்கிறேன்.
"ஐய்யோ.பாவம் கனிகா.."
"ஒரு உலகக் கலைஞன் வேல்யூ தெரியாம பேசாத...என் திறமைய பார்த்து சப்பான்லேர்ந்து சாக்கிசான் கூப்பிட்டாக...பின்லாந்துலேர்ந்து பீட்டர் ஜாக்ஸன் கூப்பிட்டாக..."
"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."
ம்ஹூம்...எனக்கு காதில விழலையே, ஒரு நடிகனுக்கு கலையுல வாழ்க்கையில இதெல்லாம் ரொம்ப சகஜம் என்று ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போய்விட்டேன். லீவு இல்லாததால் ஆபிஸில் பெர்மிஷன் சொல்லிவிட்டு போயிருந்தேன். ஒன்றுக்கு இரண்டு ப்ளாக் உலக பிரபல பெண்மணிகள் - டைரக்டர்ஸ். "கேரவேனெல்லாம் ரெடியா.." என்று லேசாக அலம்பியதில் இதுக்குத் தான் இந்த மாதிரி கேரக்டரையெல்லாம் கூப்பிடாதேன்னு சொன்னேன் - விழியாலே பேசிக்கொண்டார்கள். கிடச்ச சான்ஸும் கோவிந்தா ஆகிடப் போகுதே என்று அப்புறம் நல்ல பிள்ளையாக அவர்கள் சொல் பேச்சு கேட்க ஆரம்பித்தேன். ஒரு அம்மணி அடிக்கடி தெலுங்கில் மாட்லாடிக் கொண்டிருந்ததில் எனக்கு ஒருவேளை இது தெலுங்கு டப்பிங் படமாக இருக்குமோ என்று டவுட் வந்துவிட்டது. தெலுங்கு டாக்குமென்ட்ரியாக இருந்தாலும் சும்மா பேச்சு துணைக்காச்சு என்று இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்.
"இப்ப நாம நீங்க ஆபிஸுக்கு ட்யூப்ல போற மாதிரி எடுக்கப் போறோம். நீங்க அப்பிடியே படியில் இறங்கி வர்றத எடுக்கப்போறோம்...கேஷ்வ்லா அப்பிடியே இறங்கிவாங்க..."
"ஓ இவ்வளவு தானா...இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்.." என்னுடைய அலம்பலை அவர்கள் அவ்வளவாக ரசிக்கவில்லை. எனக்கு ஏனோ பாரதிராஜா ஷூட்டிங்கில் பளாரென்று கன்னத்தில் அடிப்பார் என்று படித்ததெல்லாம் நியாபகத்துக்குவந்து... "ஹீ ஹீ சும்மா டமாசு....இருங்க நான் இறங்கி வர்றேன்...கரெக்டா இருக்கா பாருங்க" என்று நல்ல பிள்ளையாக நடிக்க ஆரம்பித்தேன்.
அதுக்கப்புறம் நான் வித விதமான படிக்கட்டுகளில் நடித்தேன் நடித்தேன் நடித்துக் கொண்டே இருந்தேன். ஒரு பெரிய படிகட்டில் நான் மேலிருந்து கீழே நடிப்பதாக ஒரு சீன். பயங்கர சேலஞ்சிங்காக இருந்தது. மேலேருந்து கீழே பாதி வழியில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு மாமா நடுவில் நாயைக் கூட்டிக்கொண்டு வந்து விட்டார். கட் சொல்லி திரும்ப படிக்கட்டில் மேலேறி நடிக்கச் சொல்லிவிட்டார்கள். அடுத்த முறை ஒரு ட்ரெயின் வந்து கூட்டம் திபு திபுவென வந்து விட்டது. வேற வழி? திரும்பவும் ரிப்பீட்டு. இப்படியே பத்து டேக் வாங்கி ஓகே ஆன பிறகு அந்த அம்மணி கேமராவில் தப்பான செட்டிங் இருப்பதை கண்டு பிடித்தார். எனக்கோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. ஆப்புள் ஜூஸ் கேட்டால் அந்த அம்மணிகள் கேமரா மேல் இருந்த கடுப்பில் என்னைக் காட்டிவிடுவார்களோன்னு பயந்து கேட்கவேஇல்லை. லண்டன் அண்டர்கிரவுண்டிலேயே திருப்பதி மலை ஏறுவதாக நினைத்துக் கொண்டு இன்னும் நாலு தரம் படிக்கட்டில் நடித்தேன்.
ஒரு வழியாக கடைசியில் படிக்கட்டு நடிப்பு ஓகே ஆகி நான் பெருமூச்சு விட்ட போது...அவ்ளோ தான் வீட்டுக்குப் போலாம் என்று பேக்கப் சொல்லிவிட்டார்கள். என்னது அவ்ளோதானா..என்னங்க இன்னும் டூயட், ட்ரீம் சீக்வென்ஸ்...இதெல்லாம் எடுக்கவே இல்ல என்று எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அதெல்லாம் க்ராபிக்ஸில் அட்ஜஸ்ட் செய்துவிடுவோம் என்று சொல்லிவிட்டார்கள்.
ஹூம் தமிழ்ப்ளாகர் படமெடுத்திருந்தாலாவது போண்டாவோ சமோசாவோ கிடைத்திருக்கும். மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க...போண்டா கூட வேண்டாம்...சும்மாவே நடிச்சுத் தரேன். தெலுங்கு டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை குடுக்கப்படும்.
பி.கு - படத்தை நான் பார்த்துவிட்டேன். என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது. படம் இன்னும் போஸ்ட் புரோடக்க்ஷன் ஸ்டேஜ்ஜில் இருக்கிறது. கிராபிக்ஸில் எப்படியாவது எனது பெர்சனாலிட்டியை ஏத்தமுடியுமா என்று கேட்டிருக்கிறேன். படம் ரிலீஸானவுடன் பகிர்ந்து கொள்கிறேன். படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...
Friday, December 29, 2006
Subscribe to:
Post Comments (Atom)
42 comments:
//படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார்.//
வாழ்க்கையே ஒரு நாடகம், அதில் நாம் எல்லாம் வெவ்வேறு பாத்திரத்தில் (சமையல் பாத்திரம்னு நெனச்சீங்கனா நான் பொறுப்பு இல்ல) நடிக்கும் நடிகர்கள்னு உங்க தங்கமணிக்கு தெரிஞ்சிருக்கு.
:-)))))
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஹாஉ டுபுக்கு,
//"இலியானா..கௌஷா இவங்களெல்லாம் வந்திருக்காங்களா என்று ஒருதரம் ஏமாற்றத்தோடு சுத்திப் பார்த்தேன்."//
//"மீரா ஜாஸ்மின், கனிகா கால்ஷீட் இருந்தால் சொல்லுங்க"//
அது சரி, இப்படியெல்லாம் வேற ஆசை இருக்கா உமக்கு?
//"ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க.."//
தங்கமணி சரியா தான் புரிஞ்சு வச்சிருக்காங்க.....
கவலை படாதீங்க,நம்ம டிவி சீரியலில் எல்லாம் உங்கள மாதிரி உலகக் கலைஞனுக்கு நல்ல வரவேற்பு இருக்கு. ஒரு கை பாத்துடலாம்ல....
ஹாய் டுபுக்கு
உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்
"இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்"
சரிசரி எப்போ ரிலீஸ்? அதச்சொல்லுங்க முதல்ல...நாங்களும் உங்க நடிப்பை பார்க்க வேணாமா?
உங்க பழைய பதிவெல்லாம் படிக்க என்ன வழி?
Archives=error404
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
டுபுக்கு,
நன்றாய் சிரித்தேன்:-))
போஸ்ட் ப்ரொடக்ஷன், கிராபிக்ஸ் வேலைகள் மொத்தமாகவும் சில்லறையாகவும் பினாத்தல் கிராபிக் சென்டரில் செய்துகெடுக்கப்படும் (பிழை இல்லை:-))
அப்படியே அடுத்த சீனிலே (2007லே)ஒரு பிளாக்கரா வந்து பத்து பதிவு போடறீங்க.. எல்லாத்துக்கும் பின்னூட்டம் பிச்சுகிட்டு போவுது..
கிளைமாக்ஸிலே எல்லாரும் உங்களுக்கே ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைக்கிறாங்க.. (நம்புங்க சார்.. நடக்கும்)
//படத்தை பார்த்தலிருந்து தங்கமணி "அப்படியே நடிச்சுக்கிட்டே மாடிக்குப் போய் வர்ஷாவோட ட்ரெஸ்ஸ எடுத்துக் கிட்டு வாங்க...அப்படியே நடிச்சிக்கிட்டே கடைக்குப் போய் பால் வாங்கிட்டு வாங்க"ன்னு ஏகப்பட்ட சான்ஸ் குடுக்கிறார். ஒரு உலகக் கலைஞன.....ஹூம் சரி வேணாம் விடுங்க...//
ஒரு உலக கலைஞன் ஒரு சின்ன டாக்குமெண்டரிக்கு நடிச்சி கொடுத்தது டாக்குமெண்டரி தயாரிப்பாளர்கள் செஞ்ச பாக்கியம். உங்களை அண்டர்கிரவுண்ட்ல மலையேற வச்சாங்களா? நீங்க உம்னு ஒரு வார்த்தை சொல்லுங்க அண்டர்கிரவுண்டே இல்லாம பண்ணிடலாம். என்னது ஆப்பிள்ஜூஸும் குடுக்கலியா? போனா போவுது விட்டுடுங்க...நாம ஆஸ்கர்ல பாத்துக்கலாம்.
:)
கண்ணுல தண்ணி வர்ற அளவுக்குச் சிரிக்க வைச்சிட்டீங்க. வழக்கம் போல டாப் க்ளாஸ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
செம காமெடி!!!
உங்களுக்கு மவுண்ட் ரோடில் ஒரு கட் அவுட் வைக்க ஏற்பாடு செய்கிறோம். முடிந்தால் பாலபிஷேகமும்.
- லஷ்மண் ஸ்ருதி
கைப்புள்ள டாப் கிளாஸ் போஸ்ட்னு உங்க பதிவை அறிமுகப்படுத்திவச்சாரு.. வந்து பார்த்தா அப்படியே உண்மை! அலம்பல் தாங்கமுடியலப்பா :-D உங்க சிஷ்யை பதிவில் கௌஷா படம் பார்த்தப்புறம் உங்க பழைய வலைப்பூவை ஒருமுறை பார்த்திருக்கேன், அப்புறம் இப்ப தான். இனி ரெகுலரா வருவேன் :-)
என்னது.. மறுமொழியிட்டா உடனே வருது? நீங்க தமிழ்மணம் மறுமொழி நிலவர சேவையில இல்லையா?
//இந்த மாதிரி இறங்கி வர்றதெல்லாம் அசால்டா இடது கையாலயே பண்ணுவேன்//
நீங்க அந்தர் பல்டி அடிச்சி தலை கீழா இடது கையால ஏறி இறங்குகிற வித்தையெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கீங்க...
இராம நாராயனன் re-entry'க்காக ஒரு hero தேடுறார்... போறீங்களா ?
:)
//நீயே எடுத்து அய்யா வீட்டுல இல்லை அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கார்ன்னு சொல்லிடு//
:) :)
:))))))))))
படம் ரிலீஸ் தேதி சொல்லுங்க, பாலாபிஷேகம் என்ன, beer-அபிஷேகமே செஞ்சிருவோம்.
Cheers
SLN
தலைவா,
படம் என்னைக்குனு சொல்லுங்க... அடிச்சு தூள் கிளப்பிடலாம்...
ரசிகர் மன்றத்துக்கு தனியா டிக்கெட் ரெடி பண்ணிடுங்க...
//தலைவா,
படம் என்னைக்குனு சொல்லுங்க... அடிச்சு தூள் கிளப்பிடலாம்...
ரசிகர் மன்றத்துக்கு தனியா டிக்கெட் ரெடி பண்ணிடுங்க... //
வெட்டிப் பயலை வலி மொளிகிறேன் :))
இந்தப் பதிவில் வந்ததிலையே நல்ல டைரக்டர் உங்க தங்கமணி தான் :))))
Thoparra, namba dubukku anna cinima padathula nadikurraram!! Congrats:)
oru malai surangapathiel naanum erangi earngi,erangi erangi vanthean... lol!!
WISH YOU AND YOUR FAMILY A HAPPY NEW YEAR!
Let all ur wishes comes alive:)
ஆட்டையாம்பட்டி டெண்ட் கொட்டாவுல்ல இப்போவே படத்துக்கு க்யூ கடி நிக்குறோம்ண்ணா.. பொட்டியை சட் புட்டுன்னு படமெடுத்த அம்மணியை அனுப்பச் சொல்லுங்க.. மறக்காம அப்படியே தமிழ்ல்ல நேம் வைக்கச் சொல்லிருங்க.. ரிலீஸை வெளுத்துருவோம்ண்ணா..
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ரொம்பவே "மூட்" அப்செட் ஆகியிருந்த நான் உங்க பதிவைப் பார்த்ததும் மூட் மாறி நல்லாச் சிரிச்சுட்டு இருக்கேன். நன்றி கைப்புள்ளக்குத்தான் சொல்லணும், அவர் தான் உங்க பதிவைப் படிக்கச் சொன்னார். அப்புறம் தங்கமணிக்கும் உங்களுக்கும், குழந்தைகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். என்னோட பதிவுக்கும் வந்து வாழ்த்தியதற்கு நன்றி.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
Wishing you and your family a happy new year, dubuks.
குருவே!!
நாங்க எல்லாம் எதுக்கு இருக்கோம்!! கவலை படாதீங்க!!! படம் ரீலீசுக்கு கௌஷா, இலியான என்ன இன்னும் யார் யார் புதுசா அழகா வராங்களோ எல்லாரையும் கூப்பிட்டு பெரிய விழா எடுத்துடலாம்!!!
Wish you and your family a happy new year
nice post! nalla eluthi irukinga. Padam vantha odanay engaluku solunga.. enga thala documentry padathula ipo nadikirar, seekrama tamil, telugu, malayalam, hindi, kannada, spanish padathulayum parkalamnu iruntha, //என்னைத் தவிர படத்தில் எல்லாமே நன்றாக இருக்கிறது// apdinu solitingalay.. its ok. better luck next time :)
Dubuku....
Super
Surya
Dubai
butterflysurya@gmail.com
"ஆமா...சொல்லமறந்துட்டேனே...காலைல ஸ்பீல்பெர்க் கூப்பிட்டாக ...டைனோசருக்கு டூப்பா நடிக்கிறதுக்கு ஆள் வேணுமாம் உங்கள கேட்டாக..க்க்ர்ர் தூ.."
haha..ரொம்ப நாளைக்கு அப்பறம், வாய் விட்டு officela control பண்ண முடியாம சிரிச்சேன்!!
அடுத்த oscare award nominee ready!!!
நன்மனம் -ஹீ ஹீ தத்துவமெல்லாம் சொல்றீங்க....
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நன்றி.
Sumathi - ஏங்க..ஆசை தானங்க படறேன்...?? :P என்னாது டி.வி. சீரியலா?...அதுக்கெல்லாம் நாள் இருக்கு. :))வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சிந்தாநதி - படம் டைரக்டர் தலையச்சவுடனே உங்களுக்கு சொல்லாமலயா? அதென்னமோ தெரியல ஆர்கைவ்ஸ்லாம் முகப்பு பக்கத்துலேர்ந்து மட்டும் தான் தெரியுது. பதிவுக்குள்ள போய் க்ளிக்கினா தெரிய மாட்டேங்குது. ஏன்னு தெரியல...நானும் என்னம்மோ செஞ்சு பார்க்கிறேன்....அதனால முகப்புலேர்ந்து க்ளிக்குங்க தெரியும். ஆர்வத்துக்கு நன்றி.
பாலராஜன்கீதா -வாழ்த்துக்கு நன்றி.
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
சுரேஷ் (penathal Suresh)- வாங்க தல...கேகிறதுக்கு நல்லாத்தேன் இருக்கு :)) தேன்கூட்டுல மட்டும் காட்டு காட்டுன்னு காட்டிடறாங்க :)) உங்கள் சேவை எங்களுக்குத் தேவை. ஆதரவுக்கு மிக்க நன்றி தல
கைப்புள்ள - மிக்க நன்றி தல. உங்க பின்னூட்டம் ரொம்ப ஊக்கம்ளிப்பதாக இருந்தது. உங்க உங்கபின்னூட்டத காட்டி தான் நேத்திக்கு வீட்டுல இருந்த இடத்துலயே சாபாட்டைத் தேத்தினேன் :)) (ஆனாலும் நீங்க என்ன ரொம்ப புகழறீங்க... கூச்சமா இருக்கு )
Lakshman - அடா அடா அடா...வருகைக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிங்க...அப்போ செலவெல்லாம்??... :P
சேதுக்கரசி- வருக வருக. உங்க ஆதரவுக்கும் மிக்க நன்றி. ஓ...கைப்புள்ள தான் ரெக்கமெண்டா...கைப்புள்ள...உங்களுக்கு என்ன கைமாறு செய்வேன் :))
ஆமாங்க...கமெண்ட் மாடரேட் செய்யல...
buspass - யோவ் அடக்கி வாசிங்கைய்யா...நீங்களே தங்கமணீக்கு எடுத்து கொடுக்கிறீங்களே...நியாயமா..:))
SLN- வாங்க மிக்க நன்றி. அப்படியே மெய்சிலிர்க்குது...எந்த பீர் கபீரா??
வெட்டிப்பயல் -எல்லாரும் போட்டு பின்னுறீங்களே...இத வெச்சே ஒரு மாசம் வீட்டுல பந்தாவுடலாம் போல இருக்கே....ரொம்ப நன்றி தல
பொன்ஸ் - யெக்கா...அடா அடா இவ்வளவு ஆதரவா...இப்பவே கண்ணக் கட்டுதே...
Jeevan - danks danks..aama ellam unga thalaiyeluthu thaan naanlam nadikka vandhirukken :))
danks for your wishes and wish you a very happy new year !!
Dev- தமிழ்ல நேம்...சபாஷ் :P
உங்க ஆதரவு என்னிக்கும் தேவை. நிஜ சினிமாலயே நடிக்கலாம் போல இருக்கே :))
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
கீதா சாம்பசிவம் - உங்கள் மூடை மாற்ற இந்த பதிவு உதவியது பற்றி மிக்க மகிழ்ச்சி. உங்க வாழ்த்துக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.
Kartick- வாழ்த்துக்கு மிக்க நன்றி கார்த்திக் உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Sundaresan - Many thanks and wish you and your family a very happy new year !!
Sudha - ஆஹா சிஷ்யைன்னா இப்படியல்லவோ இருக்கவேண்டும்...போட்டு தாக்கறீங்க.போங்க...
Deekshanya - உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி :) ஹா ஹா...கிண்டல் தானே..நானெல்லாம் நடிச்சு எத்தன தடவ எடுத்தாலும் நல்லாவ வரப் போகுது :))
Uma - danks.grrrr dinosurukku doopaa...grrrr. Sumar body...requirement idikuthee paravallaya? :p
Surya - romba danks adikadi vanga.
aparnaa - ரொம்ப நன்றிங்க..ஆஸ்கரா...அட இது கூட நல்லா தான் இருக்கு (கேக்கிறதுக்கு) :))
உ.மு.த வுக்கே இந்த நெலமையா ? ("கரிச்சான் குஞ்சு" - பேர் நல்லாயிருக்கு. ஒருவேளை இந்த டைட்டில்-ல தங்கர் பச்சான் டைரக்ட் பண்ணி, ஷங்கர் தயாரிச்சாலும் தயாரிப்பாங்க. ஸோ இப்பவே டைட்டில் ரிஜிஸ்டர் பண்ணிக்குங்க)
//ஆமாங்க...கமெண்ட் மாடரேட் செய்யல...//
இவ்ளோ சூப்பரா எழுதறீங்க.. தமிழ்மணம் மறுமொழி நிலவர சேவையில் இல்லாம இருக்கிறது நியாயமா? :-(
:-)))))))))))) dubuks sir..belated Puthaandu Nazhvaazhthukazh.. :-D
cracked me up, big time!! a belated intro to yr blog - how do you get the tamil font btw?
Hilarious! Tamizh padikka theriyaada en friends ellarukkum padichi kaatiten. Konjam late-a sonnalum, pramaadam!!!
உங்க தேசி பண்டிட் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பினா bounce ஆகுதே?
All - ரொம்ப நன்றி
சேதுக்கரசி - அப்பிடியா என்னா? க்கு ட்ரை பண்ணுங்க
தெளிவா சொல்லுங்க.. எதையோ விட்டுட்டீங்க.. முகவரியைன்னு நினைக்கிறேன் :)
ஐய்யோ...ரொம்ப சாரிங்க...தமிழ்ல டைப் செஞ்சுட்டு அப்புறம் முகவரி நிரப்ப மறந்துபோயிட்டேன்.
கீழே குடுத்திருக்கேன் பாருங்க.
r_ramn at yahoo dot com
adada...neraya dadavai vandu pathu onnum post ille sari bloguku muzhuku potuteenga polirukkunu emandu poiten. Inni9ku akasmatha vandu patha satham illam ithanai post u. Oru genral notice anupa koodado...
anyway star ayiteenga...filmfare award vandalum varum ille oscar e va..namlai ellam marandudadeenga.
டுபுக்கு,
படியில பதட்டத்தோட இறங்க சொன்னாங்களா? இல்ல, லண்டன் குண்டுவெடிப்பு டாக்குமெண்ட்ரின்னு சொன்னீங்க. அநேகமா தீவிரவாதி தப்பிச்சு போற சீனா இருக்க போகுது.
பட்டைய கெளப்பறீங்க தல.
கோடம்பாக்கம் பக்கம் கொஞ்சம் வாங்க இவனுங்கள எல்லாம் ஓரம் கட்டீடலாம்
இவனுங்க அழும்பு தாங்கல!!
Post a Comment