சாமஜ வர கமனாவோ, அலைபாயுதேவோ கேட்டுக்கொண்டே கேசரி பஜ்ஜியை அலேக்காய் லவட்டிட்டு, பில்டர் காப்பியை சுர்ர்ர்ன்னு உறிஞ்ஜி விட்டு, "எங்க சௌம்யா வத்தக்குழம்பு வைச்சா அடுத்த தெரு வரைக்கும் மணக்கும்" டயலாக்கையெல்லாம் கேட்டுவிட்டு, சவுகரியமாய் ஊருக்குப் போய் கலந்து கேட்டு லெட்டர் போடறோம்ன்னு பழைய சினிமாவில் வருவது மாதிரியோ, இல்லை தமிழ் மேட்ரிமோனி டாட் காம்மில் போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".
அதிலும் முதல் லவ் லெட்டர் இருக்கிறதே மிகப் பெரிய இம்சை. இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய் "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. , " சார்ட்டர்டே டிஸ்கோவுக்குப் போகலமா"ன்னு திரையுலக பாடலாசிரியர்கள் கூப்பிடாத ஒரு காலத்தில் லவ்வி எக்கச்சக்கமாய் மாட்டிக்கொண்டேன். எனக்குத் தெரிந்த லெட்டர்கள் எல்லாம் நேருமாமா தன் மகள் இந்திராகாந்தி அம்மையாருக்கு எழுதிய கடிதங்கள் தான். அதிலும் அவர் பாட்டுக்கு அந்த நாட்ட பார்த்தியா இந்த நாட்ட பார்த்தியான்னு பக்கம் பக்கமாய் மகளை கொஞ்சி இருப்பார். இப்படியெல்லாம் லெட்டர் போட்டால் "அப்படியே மெட்ராசிலயே ஒழிஞ்சு போன்னு" திரும்ப பதிலுக்கு டெலிகிராமே வந்துவிடும் என்று தீர்மானமாய் தெரிந்தால் எதுக்கு வம்பு என்று ரொம்ப நாள் லெட்டரே போட்டவில்லை.
மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர். லவ் பண்ணுபவரக்ள் அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் என்று கோட்பாடு வைத்திருக்கிறார்கள். தங்கமணி வீட்டுக்கு இந்த மாதிரி எல்லாம் அனுப்பினால் "இந்தம்மாக்கு இதெல்லாம் வராதே"ன்னு போஸ்ட்மேனே திறந்து பார்த்து அங்கே டோர் டெலிவரி செய்வதற்கு பதிலாக நேர எங்க வீட்டில் போய் வாழ மட்டையை கொழுதினாற் போல் நல்ல புகைய விட்டு, மாமா காதில் மேட்டரை டெலிவரி செய்து, "நல்லாத் தானேடா உன்னை வளர்த்தேன்"ன்னு மாமா மெட்ராஸுக்கு தேடி வந்துவிடுவார் என்பதால் இந்த ரிஸ்க் எடுக்க தெகிரியம் வரவே இல்லை.
கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும். ஏனென்றால் தங்கமணி வீட்டில் ஏகப்பட்ட காம்ப்ளிகேஷன். இந்தப் பக்க வீடு, அந்தப் பக்க வீடு எதிர்த்த வீடுன்னு ஒரே சொந்தக்காரர்கள் கூட்டுக் குடித்தனம். "மெட்ராஸுலேர்ந்து லெட்டர் வந்திருக்கு ஒரு வேளை ஐ.நா சபைலேர்ந்து கூபிட்டு அனுப்பியிருப்பாளோ என்ன அவசரமோன்னு பிரிச்சு படிச்சேன்....நேக்கில்லாத உரிமையா...கையெழுத்து இன்னும் பிடிச்சு வரனும்...கூட ரெண்டு வரி எழுதப்பிடாதோன்னு"ன்னு அரட்டையரங்கமாகிவிடும் அபாயமாய் எனக்குப் பட்டது. (எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்.)
எப்போதாவது ஒரு தரம் ஊருக்குப் போகும் போது பார்க்கப் போனால் "சௌக்யமா ஊரில் இருந்து எப்ப வந்த"ன்னு ஒவ்வொருத்தராய் கேட்டு நான் பதில் சொல்லி முடியும் போது - வீட்டுக்கு கிளம்பும் நேரமாகிவிடும். வயசுப் பையன் வந்திருக்கானே...(அவர்களுக்குள்) நிச்சயமான பெண் தானே...ரெண்டு பேரும் அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது. இதில் தங்கமணியிடம் நான் என்னத்தை பேச.
இதில் தங்கமணியின் பாசக்கார கூட்டத்தில் ஒன்று "போன வாரம் தான் அவளுக்கு பிறந்தநாள்.. உங்களுக்கு தெரியுமோ இல்லையோ..."ன்னு எடுத்துக்குடுக்கும். "ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்.
இதற்கு நடுவில் ஒரு தரம் ஊருக்கு போவதற்கு ஒரு தரம் கேப் விழுந்துவிட்டது.இதான் சமயம் என்று தங்கமணியின் உறவு வட்டத்தில் ஒருவர் "பிள்ளையாண்டன் வேறு சாஃப்ட்வேரில் இருக்கிறான். அந்த கம்பெனியிலெல்லாம் பசங்களும் பொண்ணுங்களும் திங்கள் டு வியாழன் டெய்லி டேட்டிங்கும் மத்த நாளெல்லாம் க்ளப்பிங்குமாய் ஜெகஜோதியாய் இருப்பார்கள் " என்று கிடைத்த கேப்பில் காட்சிலாவை வெட்டி விட்டார். அடுத்த அப்ரைசலில் தங்கமணி அன்பாய் ஏகப்பட்ட ஃபீட்பேக் குடுக்க..."என்னை மாதிரி மூக்கும் முழியுமாய் இருக்கும் பையன்களுக்கு சமுதாயத்தில் இந்த மாதிரி பிரச்சைனையெல்லாம் இருக்கு ஆனால் நான் நல்லவன்" என்ற வாதமெல்லாம் எடுபடவில்லை.
"கம்யூனிகேஷன் இஸ் த கீ" என்று தங்கமணி குடுத்த செமெத்தியான பீட்பேக்கில் லெட்டர் போடவேண்டும் என்று உந்துதல் ஏற்பட்டு எழுத ஆரம்பித்து...ஆரம்பித்து...ஆரம்பித்தது பித்து. "போன தடவை வந்திருந்த போது உங்க வீட்டில் குடுத்த பால்கோவா நன்றாக இருந்தது...நீயே செஞ்சதா" போன்ற அன்பான விசாரிப்புகள் லவ் லெட்டர் இலக்கணத்தில் வராததால் கொஞ்சம் தெவங்கிவிட்டேன். அப்புறம் உங்க வீட்டு கன்னுக்குட்டி எப்படி இருக்கு? தெரு நாய்க்கு காய்ச்சல் தேவலையா என்று ரீதியில் ஏதோ எழுதி வீட்டில் வேறு யாரிடமும் காட்டவேண்டாம் என்ற அபத்த டிஸ்க்ளெய்மரெல்லாம் போட்டு முடித்தேன். அதற்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாய் தேறி "கண்மணி அன்போட நான் நான் நான்" என்று தலைவர் படத்து மேற்கோளெல்லாம் போட்டு ரஜினி முத்து பட டயலாக்கையெல்லம் போட்டு முடித்து ஏதேதோ சமாளித்தேன் என்பது சப்ஜெக்ட்டுக்கு தேவையில்லாதது.
இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...
Sunday, October 31, 2010
Subscribe to:
Post Comments (Atom)
43 comments:
Me the firstu ... post nallarukkungov ...
//லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...///
ஹா.....ஹா......
:)) உலகம் அப்படித்தாங்க..
ஆனால் அந்த கண்ணால் காதலிக்கும் காலம் எவ்ளோ நல்ல ஒரு காலம் பாருங்க..
கா(த)ல் கடுதாசி எழுத்தெரியலன்னு சொல்றதுக்கு இவ்ளோ பில்ட் அப் எதுக்கு வாத்யா??
அப்புறம், அது என்ன அவ்ளோ சுலுவா சொல்லிட்ட வாத்யார்?? //மெட்ராஸ் பட்டிணம் ஒரு கெட்டுக் குட்டிசுவரான ஊர்// இதுக்கு என்னோட கடுமையான கண்டனத்தை சொல்லிக்கறேன் வாத்யார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
/எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்/
காதல் எல்லாம் யூனிவர்சல் உணர்வு இல்லைங்க.. பயம்.. பயம்தான் யூனிவர்சல் உணர்வு. உங்க தற்காப்பு உக்தி பிடிச்சிருக்கு, பதிவு போலவே :-)
இது கண்டிப்பாக ஒரு புனைவு (கற்பனை) பதிவு என்பதே என் அனுமானம்.
நீங்கள் எல்லாம் எட்டாம் வகுப்பிலேயே காதல் கடிதம் கொடுக்கும் சூழலில்(ஊரில், தெருவில்) வளர்ந்த ஆள்.
தெருவின் திண்ணைகளில் எல்லாம் அந்த பொண்ணு இவனுக்கு செட்டுப்பா, எனக்கு தான் நம்ம தெருவில் ஒன்னும் மாட்டலை ரகம்.
ஒரு பயனும் கிடைக்கப் பெறாத பதிவுலக எழுத்திலேயே இந்தப் போடு போடும் நீங்கள், காதல் கடிதம் எழுத டிவங்கிநீர்கள் என்பதை நம்ப முடிய வில்லை.
kind regards
//"ஓ காந்தி இங்கேர்ந்து தான் தண்டி யாத்திரையை ஆரம்பித்தாரா"ன்னு நான் வழிந்துகொண்டே வியக்கும் போது..."நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்"ன்னு கண்ணாம்பா டயலாக்கை தங்கமணி கண்ணாலேயே டெலிவரி செய்வார்//
டாப்பு :)))))))))))))))))))) #டுபுக்குடச்
இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று.
..... இலக்கியம்..... இலக்கியம்.....!!! ஹி,ஹி,ஹி,ஹி,ஹி....
vazhakkampola comedyla kalakalannu oru padivu pottuteenga. dinam vandu ettipathathu ponadu veen pogali inniku. thanks.
//போட்டோஷாப்பில் டச் செய்த போட்டோவை அப்லோடிவிட்டு "சோ அன்ட் சோ கம்பெனியில் சோ அன்ட் சோ சேலரி ட்ராயிங் மாநிறமான பையனுக்கு...வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய, பெரியவர்களை மதிக்கும், கடவுள் நம்பிக்கையுள்ள, எந்த தோஷமும் இல்லாத, சாப்ட்வேர் கம்பெனியில் வேலைப் பார்க்கும் பெண் வேண்டும்"ன்னு தகப்பனார் ஜாதாக பரிவர்தனை செய்ய ஆரம்பிப்பதற்கு வெகு முன்னாலேயே எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும்//:))))))
நீங்களா இந்தத் தொல்லைகளைச் சந்தித்தீர்கள்????????????
ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
//என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று.// :) typical dubukku post.
ஹாய் டுபுக்கு, //லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று// ஹா ஹா ஹா...என்னே ஒரு நல்ல மனசு. //அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்...// ஆமாம், அதுக்கென்னா? ஐய்யா,இப்போ உலகம் ரெம்ம்ம்ம்ப மாறிப் போச்சு தெரியுமா...
எங்க ஊர் ஆட்களை எடுத்தெறிந்து பேசும் இந்தப் பதிவை வன்முறையாகக் கண்டிக்கிறேன்.
என்னத்த சொல்ல என்னத்த விட! டுபுக்கு டச் பதிவு முழுக்க விரவிக்கிடக்கு:-)))) சூப்பர்!
இதுவே சூப்பரா இருக்கே..அந்த முதல் கடிதம் நிச்சயம் சூப்பராய் தான் இருந்து இருக்கும்..
இதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம். வேணும்னே நான் தூங்க போன உடனே போஸ்ட் போடுறது! மெட்ராஸை குறை சொல்றவனுக்கு எல்லாம் இப்படி தான் கஷ்டம் வருமாம்! தங்கமன்னியின் குழந்தை மேலான அக்கறையை பாராட்ட வார்த்தை தேடிக்கிட்டு இருக்கேன்னு சொல்லவும்.
//எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை// அது!!!!! அந்த பயம்!
//அப்படியே போய் ஜாலியாய் ஒரு சினிமா பார்த்துட்டு வாங்களேன்னு சொல்வதற்க்கு ஒருத்தருக்கும் வாய் வராது.// ஹிஹிஹி, விவரமானவங்க. ஆமா, நிச்சயம் ஆகியாச்சுன்னா அப்புறம் என்னா காதல்? பொண்ணு ஓகே சொல்ற வரைக்கும் லொங்கு லொங்குன்னு அலையறது வரை தான் காதல்னு நெனச்சேன்..
ரொம்ப நாளுக்கு விட்டிட்டீங்களே சார்
ஆத்துக்கு அந்தப்புறம் இருக்கறவங்களுக்கு உருப்படியா ஒரு லெட்டர் கூட எழுத வராதுன்னு எங்களுக்கு தெரியும். :)
அதே சமயம் எங்களுக்கு எத்தனை கடிதங்கள், செக்யூரிட்டி பாடிகார்டுகள், என்ன மரியாதை! என்ன மரியாதை. :))
ஹும்! கிளிய வளத்து கிங்காங் கைல குடுத்துபுட்டோம். :))
//ஹும்! கிளிய வளத்து கிங்காங் கைல குடுத்துபுட்டோம். :)) //
வேணாம், நான் ஒண்ணும் சொல்லலை..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//இதுவே சூப்பரா இருக்கே..அந்த முதல் கடிதம் நிச்சயம் சூப்பராய் தான் இருந்து இருக்கும்//
அமுதா மேடம் அழகா போட்டு வாங்க பாக்கறாங்க!!...:) டுபுக்கு அண்ணாச்சி! பதிவு நல்லா இருக்கு!!..:)
\\இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய் "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் \\
ஆத்துக்குள்ளே தங்கமணியை வைத்துக்கொண்டு, கூகுளில் "கத்ரீனா கைஃப்" தேடுபவர்க்கு
லவ் லெட்டர் எழுத வரவே வராது !! :)
katrinaku yethavathu letter ie mail panningila?
" இப்போது மாதிரி கூகிளில் "கத்ரீனா" என்று பாதி டைப் அடிக்கும் போதே "கைஃப்"ன்னு முடித்துக் குடுத்து கூடுதலாய் "...ஹாட் போட்டோஸ்ன்னு" மிச்சத்தை ப்ராம்ப்ட் செய்யும் உதவி எல்லாம் கிடையாது. "
சூப்பர் தல..!!
// மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம் //
ஹ ஹ ஹ ஹா சூப்பர் :-)
dear dubuks
romba naal appuram
arumaiyay enjayable aga irundathu miga nalla padivu
anyway happy deepavali to you and family
balu vellore
லவ் லெட்டருன்னு வந்துட்டா,டுபுக்கே டுபுக்காய்ட்டாரு.....
//அம்மாவாசை பௌரணமியானால் காதலிக்கு குரங்கு பொம்மையோ கழுதை பொம்மையோ வாங்கி கழுத்தில் பட்டுக் குஞ்சலம் ஒன்றை கட்டி "ஐ லவ் யூ" என்று எழுதி பிங்க் கலரில் உதடு படம் ஒன்றை போடவேண்டும் // வயித்த புடிச்சே சிரிக்க வச்சுட்டிங்களே ...சரியான தீவாளி வெடி...
லண்டனில் கொண்டாட இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
A good Screen play is something which makes a 2 line story that could be written at the back of the cinema ticket into a watchable 2 hour movie.Such intactly kept interest from the beginning till the end speaks about the creator. This piece of your writing deserves the same compliment - Too good...
Very good post. Reminded me of my marriage gift to my wife. it was collection of all our messages! I made a book of it and gave it as present! Reading it now and laughing at it is our favourite pass time for us!
அட ஏன்பா அவர் அதெல்லாம் நல்லா சூப்பரா எழுதுவார்.
அந்த லெட்டர் சும்மா நான் அப்பாவி நான் அப்பாவி அப்படின்னு சீன் போடறதுக்காக எழுதுன டம்மி லெட்டர்.
இப்ப கூட இந்த பதிவு சும்மா இவர் தங்கமணியை தான் அப்பாவின்னு மீண்டும் நம்ப வைக்கும் ஒரு கொசுவத்தி சுருள் முயற்சிதான்.
நம்ம வாத்தியா.... கொக்கா........
By
Haji
Dubai
//எதைத் தின்றால் பித்தம் தெளியும்ன்ன்னு ரெண்டாவது அட்டெம்ப்ட்டில் காதலாகி கசிந்துருகும் என்னை மாதிரி அபாக்கியவான்கள் சந்திக்கும் மிகப் பெரிய சவால் - "லவ் லெட்டர்".//
நிதர்சனமான உண்மை. ஆனா இப்போ எழுத சொன்னா 'ஐம்புலன்களும்' விழிப்பு பெறும். எல்லாம் ஒரு எச்சரிக்கைதான். இன்னுமே சொதப்பலா எழுதுவீங்க. (எழுதுவோம்) :-)
தங்கமணி உங்களை அந்த லெட்டர் வெச்சு கேவலமா ஓட்டினாலும், அவங்களும் அதை நல்லா n - joy பண்ணி இருப்பாங்க. ஆனா ஒதுக்கவே மாட்டங்க. அதெல்லாம் ஒரு tactics .
நீங்க சொல்லிட்டீங்க...எங்களுக்கு அந்த topic எடுக்கவே தைரியம் இல்லை.
Just read some of your posts - extremely hilarious, like the jokes in "Washingtonil Thirumanam" by Saavi. Great. Keep it up.
Such humor is rare to come by in these days.
Look forward to many of such writings from you. Many thanks.
அதெல்லாம் சரி ய்ய்....அதென்ன செளம்யா....யான்னேன்....
You???? You had issues writing the first letter?????? mmmm....can't believe that...chinnapillathanamalla irukku...
Very enjoyable posting! - R. J.
நாங்கள்லாம் 198 பக்க நோட்டு வாங்கி லவ் லெட்டர் - ஸாரி - லவ் புக் குடுத்தமாக்கும்...!
hi ranga sir, good post I enjoyed it ;)
சம்பத் - மிக்க நன்றிங்கோவ்
ஆரூரன் விசுவநாதன் - சிரிப்பாபோச்சு என் பொழப்பு உங்களுக்கு :)))
முத்துலெட்சுமி/முதுலெட்சுமி- கரெக்ட்டா சொன்னீங்க...அதுதாங்க சூப்பர் எப்போ நினைத்தாலும் இனிக்கும்
ஸ்ரீராம் - பில்டப் இல்லாத ஒரு காதல் கடுதாசியா...எச்சூஸ்மி என்ன சொல்றீங்க.. மெட்ராஸ் பட்டிணம் :))
ராம்சுரேஷ் - கரீக்ட்டா சொன்ன தல இந்த பாழப்போன பயம் என்னிக்கித் தான் போகுமோ.. மிக்க நன்றி பித்த்டலுக்கு
ராம்ஜி - வாங்க எட்டாம் வகுப்பில் கடிதமெல்லாம் குடுக்கலீங்க...வெறும் வடை மட்டும் தான் வாங்கிக் கொடுத்தேன். ஏங்க உண்மையிலேயே ஒன்னும் எழுத வரலீங்கோவ் அப்போ..சொன்னா நம்புங்கோவ் :))
ஆயில்யன் - என்ன டச்சோ...இன்னிக்கு வரைக்கும் அந்த பார்வை வந்தாலே நான் இங்கே டெர்ரர் ஆகிடுவேன்
சித்ரா - ஆமா இலக்கியம் இலக்கியம் :)))
அனானி - டேங்க்ஸ். இனிமே அடிக்கடி...வேணாம் நான் ஒன்னும் சொல்லலை
வல்லிசிம்ஹன் - ஆமாம் மேடம் என்ன பண்ண...அன்னிக்கு ஒன்னும் வரலை எழுதறதுக்கு
தீக்க்ஷண்யா - எப்படி இருக்கீங்க மேடம். நலமா? ஹீ ஹீ நம்ம பொழப்பு நாறினா இம்புட்டு சந்தோஷமா உங்களுக்கு :))
சுமதி - அட நீங்க வேறங்க...இந்த உலகம் இருக்கே பாழாய்போன உலகம்..சரி வேண்டம் விடுங்க :))
இலவசக்கொத்தனார் - யோவ் உங்க ஊருக்கு என்னய்யா வந்துது...எல்லாத்துக்கும் சும்மா சும்மா சிலுத்துக்கிறீங்க :))))
அபிஅப்பா - தன்யனானேன் மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு..ஆனா அந்த டச்ச ஓரமா வைச்சுடறேன்
அமுதா - இப்படியெல்லாம் ஏமாறதீங்கன்னு தங்கமணி சொல்லிக்கிறாங்க
பொற்கொடி - மெட்ராஸ பத்தி சொன்னது சும்மனாச்சுக்கும் எனக்கு ரொம்ப பிடிச்ச ஊர்ங்க அது :))நிச்சியம் எங்களுக்குள் மட்டும் தானே ஆச்சு அவுங்களுக்கு தெரியாதுல்லா. பொண்ணு ஓக்கே சொல்றது வரைக்கும் தான் காதல் - இந்த ஐடியா கூட நல்லா இருக்கே...ஐ லைக் இட் :))
சர்ணா - ஓக்கேண்ணா ஒக்கேண்ணா...மன்னிச்சிடுங்கண்ணா இனிமே கரெக்ட்டா இருக்கேங்கண்ணா
அம்பி - //ஆத்துக்கு அந்தப்புறம் இருக்கறவங்களுக்கு உருப்படியா ஒரு லெட்டர் கூட எழுத வராதுன்னு எங்களுக்கு தெரியும்// எலேய்ய்ய் சொல்லுவடா சொல்லுவ...லெட்டர எழுதி குடுத்தா கரெக்ட் பண்ணிக்குடுக்க உனக்கு ஒரு அண்ணன் கிடைச்சான் இல்ல ஏன் பேசமாட்ட :P:P:P:P:P
// கிளிய வளத்து கிங்காங் கைல குடுத்துபுட்டோம். // மவனே அடுத்த தரம் நான் உன்ன பார்க்கும் போது தாண்டா உனக்கு தீவாளி
ஸ்ரீராம் - நக்கலு....கூறும் கூறும் கூறிப்பாரும் :)
தக்குடு - நீதாண்டா செல்லம் பாரு உங்கண்ணன் உங்கண்ணன என்னவெல்லாம் சொல்றான் பாரு
செல்ல நிலா - ஐய்யோ நான் தேடலங்க கூகிள் இந்த மாதிரி என்ன கெடுக்கப் பார்க்கிறதுன்னு சொன்னேன் அவ்வளவு தான் :)
மோகன் தாஸ் - -ம்ஹூம் உங்ககிட்ட மெயில் ஐ.டி இருக்கா? இருதாலும் எனக்கு அனுப்பிராதீங்க...அனுப்பிராதீங்க...அனுப்பிராதீங்க
சேலம் தேவா - ஹீ ஹீ :))
சிங்கக்குட்டி - :))
பாலு - மிக்க நன்றி உங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் (சாரி அடுத்த தீபாவளிக்கு வைச்சுக்கோங்க :P)
பத்மநாபன் - மிக்க நன்றி தல. உங்களுக்கு அடுத்த தீபாவளிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்.
சுகன்யா - மிக்க நன்றி மேடம். ஏதோ சொல்றீங்க அடிக்கடி இந்த மாதிரி தங்கமணிகிட்ட ஃபோன்ல பேசும் போது சொல்லுங்க. நீங்க இருக்கிற திசை பார்த்து நன்றி சொல்லுவேன்.
பாஸ்கர் - வாவ்...சூப்பர்...நீங்க நல்லா எழுதியிருப்பீங்க புக் போட்டிருக்கீங்க...இங்க என்னத்த சொல்ல தங்கமணி போஸ்டர் அடிச்சு ஒட்டுவேன்னு மிரட்டிகிட்டு இருக்காங்க :)))
ஹாஜி - ஏங்க இன்னுமா என்ன நல்லவேன்ன்னு நம்புறீங்க??......இருந்தாலும் உங்க நக்கலான நம்பிக்கைக்கு தலைவணங்குகிறேன் :)))
டேடிஅப்பா - ஹீ ஹீ அது என்னம்மோ உண்மைதான் இப்பொ எழுதச் சொன்னா இன்னும் சொதப்புவேன்னு நினைக்கறேன் :)))) நீங்களும் சீக்கிரமே கொதித்து எழ வாழ்த்துகள்.
சந்திரமௌலி - வாங்க சார் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி தன்யனானேன்.
சௌம்யா - எனக்கு பிடித்தமான பெயரிகளில் சௌம்யாவும் ஒன்று அதான். ஆனா நீங்க நினைக்கிற மாதிரி அந்த பெயரில் ஊரில் ஒரு பெண்ணையும் தெரியாது என்னம்மோ அந்த பெயர் பிடிக்கும் அவ்வளவு தான் :))
பொயட்ரீ - அட சின்னப்பிள்ளைதனமாலாம் இல்லீங்க இது பெரிய மேட்டர்...ம்ம்ம்ம் :)))
ஆர்.ஜே - மிக்க நன்றி சார்.
பரிசல்காரன் - குடுத்துவைச்சவங்க உங்க ஊர்ல புஸ்தகமே கிடைச்சுதா...எங்க ஊர்ல ஒரு மாடல் லெட்டர் கூட கிடைக்கல :)
சுப்பிரமண்யன் - மிக்க நன்றி தல
//வெள்ளிக்கட்டியாய் சிவந்த நிறமுடைய//
எனக்கு ஒரே டவுட் தான்...வெள்ளிகட்டி சிவப்பா எங்க கிடைக்குதுனு சொல்லுங்களேன்? நான் பாத்ததே இல்ல... எஸ்கேப்...
//எனக்குத் தான் அப்படி பட்டது அவர்கள் அப்படியில்லை அப்படியில்லை - தெளிவாக சொல்லிக்கிறேன்//
ஆனாலும் புக்காத்து மனுசா மேல இவ்ளோ பயம் கூடாது டுபுக்கு சார்...
//என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று//
ஹா ஹா ஹா...நோ கமெண்ட்ஸ்... ஹா ஹா ஹா
இண்ட்ரோவே தூள் கெளப்புதே...ஒரே ஒரு வாக்கியமே ஒரு பத்தியா...இருந்தாலும் கலக்கல்.
:)
//கரும்பு படம் போட்ட ஒரு பொங்கல் வாழ்த்து அனுப்பும் போதே அன்புடன் போட்டு கையெழுத்து போட்டால் தப்பாகிவிடுமோ என்று எனக்கு உதறலெடுக்கும்.//
சூப்பர்...இன்னும் சிரிச்சி முடியலை :)
//இப்பவும் அந்த முதல் லெட்டரை தங்கமணி பத்திரமாய் எடுத்துவைத்திருக்கிறார். "என்ன இருந்தாலும் தலைவன் தலைவிக்கு எழுதிய காதல் திணையல்லவா" என்ற எனது நினப்பில் மண்ணைப் போட்டு என் மகள் பெரியவளானதும் காட்ட வேண்டுமாம். லவ் லெட்டர் எப்படியெல்லாம் எழுதக் கூடாதென்று. அது சரி......இந்த உலகம் இருக்கே உலகம்... //
செம...செம...செம...தலைவா...சாஷ்டாங்கமா விழுந்து கும்பிட்டுக்கறேன் :)
may i post this all in my blog
Post a Comment