Monday, November 22, 2010

ஜில்பான்ஸ் 221110

கொத்துபரோட்டா, கதம்பம், பிரியாணி, கூட்டாஞ்சோறு என்று ஏகப்பட்ட பெயர்களில் பரபரப்பாய் கேபிள் சங்கர் உட்பட பல வலையுலக பிரபலங்கள் நிறைய பேர் எழுதி வருகிறார்கள். நான் அந்த பெரிய லீக்கில் இல்லாவிட்டாலும், மனம் போன போக்கில் தோன்றியவற்றை அப்பப்போ தோன்றும் தலைப்புகளில் கிறுக்கி வந்திருக்கிறேன். இனிமேல் இந்த மாதிரியான அலைபாயும் எண்ணங்களுக்கு  சின்னி ஜெயந்த் இருக்கும் திசை நோக்கி கும்பிடு போட்டுவிட்டு  "ஜில்பான்ஸ்" என்று நாமகரணம் சூட்டிருக்கிறேன். என்றும் உங்கள் ஆதரவு அன்பனுக்குத் தேவை.

சமீபத்திய வெட்டிமுறிப்பு
இரண்டு கார்ப்பரேட் வீடியோக்களை எடுத்து முடித்து வருவதற்குள் நாக்கு தள்ளிவிட்டது. தற்போது ஜோத்ஸ்னா ஸ்ரீகாந்த் அவர்களின் மியூசிக் ஆல்பம் எடிட்டிங் வேலை செய்துகொண்டிருக்கிறேன். மிக அருமையான கர்னாட்டிக் ஃபியுஷன். முதல் முறை கேட்கும் போதே மிகவும் பிடித்துப் போனது. அருமையாக இசையமைத்திருக்கிறார் ஜோத்ஸ்னா. இது முடிந்தவுடன் மீண்டும் சில குறும்படங்கள் என களமிறங்கலாம் என்றிருக்கிறேன். பார்ப்போம்.

சமீபத்திய துக்கம்
சமீபத்தில் இங்கே இங்கிலாந்தில் தீ விபத்தில் ஒரு நெருங்கிய நண்பரின் மறைவு, எங்களையும் மற்ற நண்பர்களையும் குடும்பத்தோடு மனதளவில் பெரிதாக பாதித்தது. மெட்ராஸில் ராம்கோவில்லிருந்து தெரிந்த இந்த இனிய நண்பனின் திடீர் மறைவு, எனதளவில் வாழ்க்கை தத்துவங்களில் பல மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது. ஹூம்ம்ம்ம்ம்ம்

சமீபத்திய சந்தோஷம்
சினிமா தியேட்டரில் முறுக்கு விற்கும் வேலை கிடைக்க கூடாதா என்று ஏங்கிய ஒரு காலம் எனக்கு உண்டு. அப்புறம் அதுவே தியேட்டரில் முறுக்கு கடை வைத்தால் என்ன, தியேட்டர் ஓனர் பொண்ணை டாவடித்து கல்யாணம் செய்தால் என்ன என்று வயதுக்கேற்ற முதிர்ச்சியடைந்து, எதுவும் நிறைவேறவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இந்த ஆசைக்கெல்லாம் அடிப்படை காரணம் வேண்டிய போது சினிமா பார்க்கலாம் என்ற நப்பாசை தான். ஆனால் அந்த ஆசை தற்போது இங்கே யூ.கேவில் சினிவேர்ல்டின் புண்யத்தில் நிறைவேறி இருக்கு. மாதம் ஒரு தொகையை கட்டிவிட்டால் "ராசா எத்தனை படம் வேணும்னாலும், எத்தன தடவ வேணா, நினைச்ச போது பார்த்துக்கோ" என்று அன்லிமிட்டட் கார்டு ஸ்கீம் ஒன்று இருக்கிறது. இதில் ஓஹோ மேட்டர் என்னவென்றால் ஒரு மாததிற்கான சந்தா தொகை ஒன்றரை பட டிக்கெட் காசு தான். இந்த தியேட்டரில் தான் தமிழ் படங்களும் ரிலீஸ் ஆகும்.

இன்னாது காந்தி செத்துட்டாரா

என் தானைத் தலைவன் கமலஹாசன் படத்திற்கு கூட டெம்ட் ஆகாமல் காலந்தாழ்த்தி...எந்திரன் ஜுரத்தில் அன்லிமிட்டெட் கார்டு வாங்கி இரண்டாம் நாளே பார்த்துவிட்டு வந்த பிறகு தான் ஜுரம் இறங்கியது. எந்திரன் என்னை வியந்து பார்க்க வைத்திருக்கிறது. ஒரு மண்ணும் இல்லாத கதை, அலட்டல் அவுட்டேட்டட் ஐஷ்வர்யாராய், இத்தனைக்கும் நடுவில் நான் வியந்து பார்ப்பது இரண்டு விஷயங்களைத் தான்.  என்னதான் சூப்பர் படமாயிருந்தாலும் தமிழ் வியாபார மார்க்கெட் இவ்வளவு தான் என்றிருந்த ஒரு மாயையை உடைத்து, நூத்தி அறுபது கோடி போட்டு எடுத்து அதை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே திரும்ப எடுத்து எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கும் சன் பிக்சர்சின் வியாபார நுணுக்கத்தையும், தைரியமும் - உண்மையிலேயே ஒரு பிஸினஸ் கேஸ் ஸ்டடி.

(தலீவர் பாணியில்) படம் பிடித்ததா...என்றால் அதில் இருக்கும் பாடம் பிடித்தது என்று தான் சொல்வேன். மேலே சொன்ன சன் பிக்சர்ஸின் வியாபார நுணுக்கமாவது கேல்குலேடட் கேம்ப்ளிங். ஆனால் அதையெல்லாம் தாண்டி விளக்கமே இல்லாமல் வியக்க வைத்தது ரஜினி என்ற தனிமனிதரின் வெற்றி. ரஜினி மட்டும் இல்லாவிட்டால் எந்திரனின் இந்த வியாபாரம் சாத்தியமே இல்லை. மனிதரின் கரிஷ்மாவிற்க்கு விளக்கமே இல்லை.

இந்த வார கிசுகிசு
"டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியும் வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம். "அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு...எல்லாம் அடுத்த வாரமே பழைய குருடி கதவ திறடின்னு ஆகிடும்" என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றனவாம்.

26 comments:

bitsofchocolate said...

221010 என்ற தலைப்பு 221110 ஆக இருக்கவேண்டும் அல்லவா ?

Dubukku said...

கரீக்ட்டா சொன்னீங்க ரொம்ப டேங்க்ஸ் கரெக்ட் பண்ணிட்டேன்

Anonymous said...

murukku periya ra podanum

Dubukku said...

கரெக்ட் பண்ணியாச்சுங்கோவ்...மிக்க நன்றி. பெயர போட்டிருந்தா முறுக்கு ஒன்னு பார்சல் பண்ணியிருப்பேன்ல :))

ஸ்ரீதர் நாராயணன் said...

அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு :)

வந்தியத்தேவன் said...

அண்ணே நீங்கள் லண்டனிலா இருக்கிறியள் ஜில்பான்ஸ் நல்லாயிருக்கு

Mahesh said...

ஜில்பான்ஸ் - ஜாலிலோ ஜிம்கானா

வாண்ணே... வாண்ணே... எழுதறதுக்கு எதுவும் இல்லாதவங்கதான் பத்தி எழுத வருவாங்கன்னு சொல்றதை உடைச்சுடுவோம்....

//கொத்துபரோட்டா, கதம்பம், பிரியாணி, கூட்டாஞ்சோறு என்று ஏகப்பட்ட பெயர்களில் பரபரப்பாய் கேபிள் சங்கர் உட்பட பல வலையுலக பிரபலங்கள் நிறைய பேர் எழுதி வருகிறார்கள்.//

"கிச்சடி", "பா.கே.ப.இ" ங்கற பேர்ல எல்லாம் "துக்ளக்"னு ஒருத்தர் எழுதறாரே.... மறந்துட்டீங்களா?? ம்ம்ம்ம்ம்...

அப்பறம்... 'டு'வில் ஆரம்பிச்சு 'கு'வில் முடியற பதிவர் யாரா இருக்கும்?
இப்பிடி மண்டையை பிச்சுக்க வெச்சுட்டீங்களே :(

Mahesh said...

கார்பொரேட் விட்டியோ, எடிட்டிங், குறும்படம்.... ம்ம்ம்... பெரிய ஆள்ணே நீயி !!!

சேலம் தேவா said...

ஜில்பான்ஸ் ஒரே குஜாலா இருந்துச்சு..!! தொடரட்டும்..!!

sriram said...

//வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம்.//

வேணாம் வாத்யார், வலிக்குது, அழுதுடுவேன்..
இந்த மேரி டைலாக் ஒன்னாடேருந்து நெறய தபா கேட்டாச்சு வாத்யார், சொல்லாம செய்யுறதுதான் நல்ல புள்ளைக்கு அழகு.. பிரியுதா??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Porkodi (பொற்கொடி) said...

அடப்போய்யா.. அடுத்த வாரமே பழைய குருடி கதவ தொறடின்னு ஆகலே என் பேரு கொடி இல்ல.

கரெக்ட், நெருங்கிய நட்பின் மரணம் புத்திர சோகத்துக்கு கொஞ்சம் கம்மியா இருக்குன்னு கடந்த 6 வருடமா அனுபவிச்சு தெரிந்து கொண்ட உண்மை. என்னுடைய அட்வைஸ் (அதெல்லாம் கேக்கலனாலும் சொல்லுவோம்), எவ்விதமாவது இந்த சோகத்தை மனதில் இருந்து வெளிக் கொட்டவும். நான் ஏதோ அழுதோம் போச்சுன்னு நினைச்சேனே ஒழிய, மனதளவில் நம்மயும் அறியாமல் ரொம்பவே பாதிக்குது.

Porkodi (பொற்கொடி) said...

ஹஹஹ.. பாஸ்டன்.. லைன்ல இருக்கீங்க போலயே!!!! :D

வித்யா said...

\\முறுக்கு விற்கும் வேலை கிடைக்க கூடாதா என்று ஏங்கிய ஒரு காலம் எனக்கு உண்டு. அப்புறம் அதுவே தியேட்டரில் முறுக்கு கடை வைத்தால் என்ன, தியேட்டர் ஓனர் பொண்ணை டாவடித்து கல்யாணம் செய்தால் என்ன என்று வயதுக்கேற்ற முதிர்ச்சியடைந்து,\\

பரிணாம வளர்ச்சி:)))

ஆயில்யன் said...

//அட போய்யா அவருக்கு வேற வேலையே கிடையாது...அடிக்கடி இப்படித்தான் கூவிக்கினு இருப்பாரு :) //

ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய் :))

பாஸ் ஜில்பான்ஸு பேரை வைச்ச நீங்க ஒரு கில்பான்ஸியான படத்தையும் புடிச்சு போட்டிருக்கலாம் #யோசனை :)))

தக்குடுபாண்டி said...

ஹம்ம்ம்ம், எப்பிடியோ எழுதினா சரிதான்!!!..:)

அறிவிலி said...

நாளைக்கே ஜில்பான்ஸ் 231110 போடுங்க,உங்க நெருக்கமான வட்டாரத்தையெல்லாம் அதிர்ச்சிக்குள்ளாக்குங்க சொல்றேன்.

வல்லிசிம்ஹன் said...

டுபுக்கு உங்க எழுத்தை மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி.

ராம்கோ' என்று குறிப்பிட்டிருந்திர்கள். எங்களுக்கும் அங்கெ சிலரைத் தெரியும்.
பெயர் சொல்ல முடிந்தால் எனக்கு உதவியாக இருக்கும். மனசு கஷ்டப்படும் என்றால் வேண்டாம்.

மோகன் குமார் said...

Nice. Also liked the last Kisu kisu

பத்மநாபன் said...

சின்னிக்கு வணக்கம் போட்டு சிலிர்க்கும் ஜில்பான்ஸ் வெளியிட்டது ஜோர்...

அடுத்த மணிரத்னத்தை எதிர்பார்க்கிறோம்....

சோகத்திலிருந்து மீளவும் நண்பரின் ஆன்ம சாந்திக்கும் பிரார்த்தனைகள்....

அன்லிமிடெட் கார்டு வாங்கலாம்..நல்லபடங்கள் வரவேண்டுமே...

எந்திரன் ..ஆச்சர்யம் தான்..என்னை மாதிரி விசிலடிச்சான்களுக்கு தியேட்டரில் பிரமாண்டம் தான்.. ரஜினி கசக்கி பிழியப்பட்டிருக்கிறார்...

கிசு கிசு உண்மையாக வாழ்த்தும் வரவேற்பும்...

Dubukku said...

ஸ்ரீதர் - நக்கலு...ஆங்....காலம் காலம்ன்னு ஒன்னு இருக்குங்க அது உங்களுக்கு பாடம் கற்பிக்கட்டும் :)))))

வந்தியத்தேவன் - நன்றிங்கோவ்...ஆமாங்க ...லண்டன்ந்தேன்...நீங்களும் லண்டனுங்களா?

மகேஷ் - அதே அதே...சாரி தல உங்க பா.கே.ப விட்டுப்போச்சு...கோச்சுக்காதீங்க...ஆமா ஏன் ரொம்ப நாளா நீங்க எழுதறது இல்ல? பா.கே.ப போட்டு ரொம்ப நாளாச்சு போல இருக்கே? சீக்கிரம் பதிவு போடுங்க. டு..கு...ஒரு க்ளூ குடுக்குறேன் ...நடுவுல க் வரும் :P பெரிய ஆள்லாம் இல்லீங்க..சும்மா ஃபிலிம்..:))

சேலம் தேவா - மிக்க நன்றி. உங்கள் ஆசி பலிக்கட்டும்

ஸ்ரீராம் - பிரியுது பிரியுது சார். உங்கள் வலிக்கு காலம் நல்ல மருந்தாக இருக்கட்டும் :))

பொற்கொடி - மேடம் உங்க பெயர என்னவா வைச்சிக்கறதா இருக்கீங்க? சோகம் ரொம்ப உண்மைங்க...மனசு இன்னமும் அடிக்கடி அவரை நினைச்சிக்கிட்டே இருக்கு...ஹூம்ம்ம்

வித்யா - டார்வின் சொல்லியிருக்கார்ல...கரெக்டா பிடிச்சீங்க

ஆயில்யன் - முத போணியிலேயே மண்டை உடையவேண்டாமேன்னு தான் போடல...அடுத்த தரம் உங்க பேர்ல பழியப் போட்டுட்டு படத்த போட்டுறுவேன் :))

தக்குடுபாண்டி - தங்கள் சித்தன் அடியேன் பாக்கியம்

வல்லியம்மா- நான் ராம்கோ சொன்னது ராம்கோ சிஸ்டம்ஸ்...இது தான் நீங்களும் சொன்னதுன்னா r_ramn atttt yahoo dotttt com - தனிமடல் தட்டுங்க விபரம் சொல்றேன்.

மோகன்குமார் - எனக்கு அது தாங்க கொஞ்சம் வயத்த கலக்குது ....நம்ம கையில என்ன இருக்கு பார்ப்போம் :))

பத்மநாபன் - ஒவ்வொரு செக்க்ஷனுக்கும் பொறுப்பான உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி. உங்கள் பொறுப்பில் ரொம்பவே இம்ப்ரெஸ்ட். எல்லா மொழி படங்களும் வரும் என்பதால் கொஞ்சம் ஆறுதல். பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் லாபமா நஷ்டமான்னு :))

Anonymous said...

\\அடுத்த மணிரத்னத்தை எதிர்பார்க்கிறோம்....//

ஐயையோ,
ஒன்னே போதும்.
நமக்கு ஒரு பாக்யராஜ்தாங்க வேணும். திருட்டு முழி கூட இருக்கு.......

By
Haji
Dubai

balutanjore said...

dear dubuks

kadaisi para paditha udane bayangara sandhosham.

ungal theevira rasiganai ematra vendam.

balu vellore

Ramesh said...

என்னால கண்டினு பண்ண முடில தலீவா நா அம்பேல் உட்டுக்கினேன்

Jagannathan said...

’டு’ வில் ஆரம்பித்து ‘ கு’ வில் முடியும் பதிவர், பதிவுகளுக்கு நடுவில் புத்தகம் படித்துக் கொண்டிருப்பாரா? - ஜெ.

Aani Pidunganum said...

//டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியும் வலைப்பதிவர் இனிமேல் தனது வலைப்பதிவுல் அடிக்கடி எழுதி அவரது வலைப்பதிவுக்கு தப்பி வருபவர்களை கன்னாபின்னாவென்று அதிர்ச்சிக்குள்ளாக்குவது என்று முடிவெடுத்துள்ளாராம். //

Nalla vella, Aanipidunganum perula , டு" என்று ஆரம்பித்து "கு" என்று முடியல, So Escape :-)

கைப்புள்ள said...

//என்னதான் சூப்பர் படமாயிருந்தாலும் தமிழ் வியாபார மார்க்கெட் இவ்வளவு தான் என்றிருந்த ஒரு மாயையை உடைத்து, நூத்தி அறுபது கோடி போட்டு எடுத்து அதை முதல் இரண்டு மூன்று வாரங்களிலேயே திரும்ப எடுத்து எல்லாரையும் வாயைப் பிளக்க வைத்திருக்கும் சன் பிக்சர்சின் வியாபார நுணுக்கத்தையும், தைரியமும் - உண்மையிலேயே ஒரு பிஸினஸ் கேஸ் ஸ்டடி.

//

ஆடியோ ரிலீஸ், பாடல்கள் முதன்முறையாக, ரஜினி பேட்டி இப்படின்னு எல்லா விஷயத்துலயும் ஸ்பான்ஸர் புடிச்சு செம காசு பாத்துட்டாங்க. ஆனா எனக்கு என்னமோ படம் அவ்வளவு ஆகா ஓகோன்னு படலை. ஷாருக் இஸ் தி கிரேட் எஸ்கேப். Ra.One ல என்ன பண்ணப் போறாருனு பாக்கனும். படம் பாக்கலைன்னு சொன்னா "என்னது இன்னமும் பாக்கலியா"ன்னு கொலை குத்தம் மாதிரி விசாரிப்பாங்கன்னு தான் படம் பாக்க வேண்டியதாப் போச்சு.
:)

Post a Comment

Related Posts