முருகன் கோயிலில் சைக்கிள் கேப்பில் காரை பார்க் செய்யும் போது போதே தெரிந்துவிட்டது அன்றைக்கு கோவிலில் கூட்டம் எக்கச்சக்கம் என்று. "என்னங்க இவ்வளவு கூட்டம்.?..." என்று தங்கமணிக்கு குரலில் கவலை தொற்றிக்கொண்டது. கதவைத் திறந்துகொண்டு நுழைந்த போது சென்ட்ரல் ஹீட்டிங்கையும் தாண்டி ஜனசமுத்திரத்தின் வெப்பம் முகத்தில் தாக்கியது. இந்தப்பக்கமாய் தானே மெயின் முருகன் சன்னிதி இருந்தது என்று பக்கத்தில் இருப்பவரிடம் சந்தேகம் கேட்க வேண்டியிருந்தது. தீபாராதனை காட்டும் தருணத்தை ஒரு பக்திமான் வேகமாய் கோயில் மணியடித்து தெரிவிக்க, பக்கத்திலிருந்த இன்னொரு பக்திமான் துள்ளிக் குதித்து என் கை வழியாக மண்டையை நுழைத்து, முருகனை நினைத்துக் கொண்டு, தெரிந்த ஜனத்தின் பின்புறத்தை நோக்கி கண்ணத்தில் அரகரா அரகரா என்று போட்டுக் கொள்ள "என்னடா இன்னிக்கு வெண்பொங்கல், சாம்பார் சாதத்திற்க்கு ஏகப்பட்ட காம்பெடிஷன் இருக்கும் போல இருக்கே" என்று எனக்கும் கவலை தொற்றிக் கொண்டது. சர்கரைப் பொங்கல் கிடைக்காது என்பது நிச்சயமாய் தெரிந்தது.
கோவில் நோட்டிஸ் போர்டில் "கந்த சஷ்டி முதல் நாள்" என்று எழுதிப் போட்டிருந்தார்கள். வீக்கெண்ட், தீபாவளிக்கு அடுத்த நாள் என்று அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. "இதுக்குத் தான் விசேஷம் இல்லாத நாளா பார்த்து கோவிலுக்குப் போகலாம் என்று தலை தலையா அடித்துக் கொண்டேன்...இப்ப பாரு முருகனே க்யூல நின்னாலும் சர்கரைப் பொங்கல் டவுட்டு தான்" என்று தங்கமணி பக்கம் திரும்பினால், அவர் சோத்துக் கவலையே இல்லாமல் கண்ணை மூடி முருகனை வேலோடு பிடுங்க முயற்சி செய்துகொண்டிருந்தார். சரவணபவன் பக்கத்தில் தான் இருக்கு என்றாலும் அன்றைக்கு கோயில் வெண்பொங்கல், சாம்பார் சாதம் என்று மூடு செட் செய்துவிட்டதால் விட்டுப் போக மனதில்லை. இந்த மாதிரி விசேஷ நாட்களில் இருக்கும் ஒரே ஒரு சின்ன அட்வான்டேஜ் கூட்டத்தை சமாளிக்க கோயிலில் டபுள் ஸ்வீட் போடுவார்கள். முதல் பந்தியில் சில பேருக்கு ராஜயோகமாய் ரெண்டு ஸ்வீட்டும் கிடைக்கும்.
திடீரென்று கோயில் நிர்வாகம் ஸ்பீகரில் கந்தசஷ்டி கவசம் போட, நின்று கொண்டிருந்த கூட்டம், நல்ல சம்மணம் போட்டு உட்கார்ந்து கோரஸாய் சூலமங்கலம் சகோதரிகள் கூட சேர்ந்து கவசம் சொல்ல ஆரம்பித்விட்டது. போச்சு "இதுல நடுவே டிங் டிங்குன்னு மீசிக்லாம் வருமே" என்று எனக்கு ஆயாசமாகிவிட்டது. நான் சின்னப் பையானாக இருந்த போது ஊரில் கந்த சஷ்டி சொல்கிறேன் என்று ஆடிய போங்கு ஆட்டமெல்லாம் இந்த பக்தகோடிகள் ஆடுகிற மாதிரி தெரியவில்லை. ஆஞ்சநேயர் பக்கம் அப்பிடைசராக வடை ஏதாவது குடுக்கிறார்களா என்று பார்க்கலாமென்று இடம் நகர்ந்தேன். அப்போது தான் ஆஞ்சநேயர் சன்னிதியில் அவரைப் பார்த்தேன். ஆளைப் பார்த்தால் என்னை மாதிரி வடையை நோட்டம் விட வந்தவர் மாதிரி தெரியவில்லை. வெள்ளையும் சொள்ளையுமாய் நல்ல பதவிசாக இருந்தார். பத்து விரலில் பன்னிரெண்டு மோதிரம் போட்டிருந்தார். பெரிய பெரிய மோதிரமாய், கட்டைவிரலில் ஒரு பெரிய மோதிரமும் அது விழுந்துவிடாமல் இருக்க ஒரு சின்ன வளையுமும் போட்டிருந்தார். ரெண்டே பேர் தான் இருந்தோம் என்பதால் சினேகமாய் சிரித்துக்கொண்டோம்.
"தம்பிக்கு ஆஞ்சநேயர்னா இஷ்டமா" என்று அவரே பேச்சை ஆரம்பித்தார்.
"ஆமா இஷ்டம், அதுவும் வடைமாலை சாத்தி இருந்ததுன்னா ரொம்பவே இஷ்டம்"
"ஹா ஹா..உங்களை எனக்கு பிடிச்சிருக்கு தம்பி" என்றார். என்ன்டா ஒரு வரி பேசினதுக்கே இப்படி பிடிச்சிருக்குன்னு சொல்கிறாரே என்று கொஞ்சம் கவலையாயிருந்தாலும், எனக்கு ஒரு வரி கூட பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே கத்ரீனா கைஃபை பிடித்துவிட்டது நியாபகத்து வந்து நிம்மதியானேன்.
"அப்புறம் தம்பி என்ன பண்றீங்க" என்று வினவ "வெண்பொங்கலுக்காக வெயிட்டிங்ண்ணா" என்று நான் உண்மையைச் சொல்லாமல், பொதுவாக பேச ஆரம்பித்தோம். சாம்பார் சாதத்தை தற்காலிகமாக மறக்க எனக்கு அந்த அரட்டை தேவைப்பட்டது. இங்கிலாந்து குளிர், ப்ளைட் ப்யூவல் சர்சார்ஜ் என்று சாத்வீகமாய் போய்கொண்டிருந்தவர் திடீரென்று "இவனுங்களையெல்லாம் நிக்க வைச்சி சுடனும்" என்று சொடக்கு போட்டு டி.ஆர் மாதிரி கொதிக்க ஆரம்பித்தார்.
"எவ்வளவு பெரிய பெயரு கிடைக்கவேண்டியது நம்மளுக்கு. எவ்வ்ளவு பேர் விளையாட வராங்க...எப்படி கட்டியிருக்கனும்...ஒவ்வொரு ஊர்ல கக்குஸே பெட்ரூம் மாதிரி ஜம்ன்னு வைச்சிருக்கான் இவனுங்க பெட்ரூம கக்குஸ் மாதிரி கட்டியிருக்கானுங்க...எத்தன கோடி அடிச்சிருக்கானுங்க..."
"...."
"பெயருல மட்டும் கல்லுமாடி மண்ணுமாடின்னு இருந்தா போதாது தம்பி ...நாம கட்டுற கட்டடம் பெயர சொல்லனும் ...பார்த்தீங்களா இங்க நம்மூர் பெயர எப்படி போட்டோ போட்டு நாறாடிச்சிட்டானுங்கன்னு ..."
"ஆமாங்க சார் என்னாலா ஆபிஸ்ல தலையக் காட்ட முடியலை...பார்க்கிறவன் எல்லாம் உனக்கு எவ்வளவு கமிஷன் தேறிச்சுன்னு நக்கல் அடிக்க ஆரம்பிச்சிட்டானுங்க..."
"சுத்த வேஸ்டு தம்பி நம்மூர்...என்ன பண்ணியிருக்கனும்....மைதானத்துக்கு நடுவுல வரிசையா நிக்க வைச்சு இவனுங்கள் சுட்டிருக்க வேண்டாமா?...செஞ்சாங்களா...இல்லையே...கடைசி நாள் கூப்பிட்டு மைக்குல இல்ல பேசச் சொல்லி மரியாதை...சரி கடைசிலயாவது ஏதோ செஞ்சு கொஞ்ச நஞ்ச மானத்த காப்பாத்தினாங்க...அத விடுங்க இப்போ என்ன நடக்குதுன்னு பாருங்க..."
பயங்கர கோபத்தில் முகம் சிவக்க, அவர் கைகளை வீசிப் பேசிக்கொண்டிந்தார். எனக்கு கோவிலுக்குள் கந்த சஷ்டி சொல்லாமல் இப்படி கத்திப் பேசினால் வெண்பொங்கல் கிடையாது என்று பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ என்று பயம். இரண்டாவது மகள் தேடி வந்து வந்து சட்டையை இழுக்க.."இருங்க சார் பொண்ணுக்கு பசிக்குதாம் சாப்பாடு ரெடியாயிடுச்சான்னு ஒரு பார்வை பார்த்துட்டு வந்துவிடுகிறேன்" என்று வாய்தா வாங்கி சமையல் கூடத்திற்கு நழுவினேன்.
ஒரு ஆறு வயது குழைந்தோயோடு அப்பாவுக்கு என்று சொல்லியும், "மெயின் தீபாராதனை முடிஞ்ச பிறகு தான் சார் சாப்பாடு"ன்னு கையை விரித்துவிட்டார்கள். ஆனால் டபுள் ஸ்வீட் உண்டு என்பதை கன்பேர்ம் செய்து கொண்டேன். வேஸ்டாக வெயிட் செய்வது எனக்கு பிடிக்காது.
"என்ன தம்பி பொண்ணுக்கு ரொம்ப பசிக்குதா" என்று மோதிரக்கை மாமா சமையல் கூடத்திற்கே வந்துவிட்டார். இரண்டு மகள்களும் வெண்பொங்கலைப் பார்த்தாலே காத தூரம் ஓடுவார்கள். இருந்தாலும் அவர்களுக்காக நானே வாங்கி கடமையாற்றுவேன். வேஸ்ட் செய்வதும் எனக்கு அறவே பிடிக்காது.
"ஊழல் பெருகிடிச்சு தம்பீ இங்க பாருங்க நம்மாளு எழுபதினாயிரம் கோடிங்கிறாங்க. நிலையா இல்லாம அஞ்சு வருஷத்துகொரு தரம் தேர்தல்ன்னு இருக்கறதுக்கே இவ்வளவு அடிக்கிறாங்களே இவங்கள நிக்க வைச்சு சுடவேண்டாமா?"
"எத்தனை ப்ரோகர்கள், எத்தனை வியாபார காந்தங்கள்...எவ்வளவு பேருக்கு எவ்வளவு கோடி போயிருக்குன்னு பாருங்க....இந்த ராடியா பாருங்க பங்காளி பிரச்ச்னை மாதிரி இவரு வருவாரு இவர்கிட்ட பேசுங்க அவர தள்ளுங்கன்னு சொல்லுது...அவரு என்னாடான்னா...சரி அவர இவர்கிட்ட பேசச் சொல்லுன்னு.....மாடு விக்க போனா கூட ப்ரோக்கர்ன்னு பதவிசா சொல்லிக்கிறாங்க...இவனுங்க தொழிலதிபர், பத்திரிகையாளர்ன்னு..தூ ஊர அடிச்சு உலைல போடறதுக்கு இதெல்லாம் ஒரு பொழைப்பா"
"பிரதம மந்திரிய பாருங்க...அவரே சொல்லிட்டார் அவரு இதுல ஊழல் பண்ணலன்னுன்னு சொல்றார் எந்த ஊர்லயாவது நடக்குமா? ஒரே வழி எல்லாரையும் க்ரவுண்டுல வரிசையா நிக்க வைச்சி சுடனும் சுட்டுத் தள்ளனும்ங்கிறேன்" மோதிரக் கை மாமா லண்டனுக்கு ஆட்டோ வராது என்ற தைரியத்தில் சவுண்டாய் பேசிக்கொண்டிருந்தார்.
"லஞ்சம்ங்கிறது அக்சப்ட்டட் நார்ம் ஆகிடிச்சு, ஊழல்ங்கிறது இப்போல்லாம் கட்சிகளுக்கு பெருமைக்குரிய விஷயமாகிடிச்சு. அவன் இவ்வளவு அடிச்சா நாம அதுக்கு ஒரு படி மேல போய் நிக்கனும்ன்னு வெறியா இருக்காங்க..மக்கள் சேவை எங்க இருக்குன்னு சொல்லுங்க? இன்னிக்கு ஊழல் செய்யாத கட்சின்னு ஒன்னுமே கிடையாது. யார் குறைவா ஊழல் செஞ்சிருக்காங்கன்னு தான் பார்க்க வேண்டியிருக்கு...அதுவும் கபடி மேட்ச் மாதிரி ஸ்கோர் மாறிகிட்டே தான் இருக்கு. எல்லாம் ஓட்டு போடற ஜனத்த சொல்லனும்...இவனுங்களுக்கு அறிவு எங்க போச்சு.... வோட்டு போட்டவன் வயித்தலடிச்சா அடுத்த தரம் அவனுக்கு வோட்டு போடாத வேற யாருக்காவது போடு. எவ்ளோ பெரிய பவர் அவங்க கையில இருக்கு தெரியுதா அவுங்களுக்கு? அவங்களையும் எல்லாரையும் நிக்க வைச்சு சுடனும்ங்கறேன்"
மோதிரக்கை மாமா 'கால் ஆஃப் ட்யூட்டி' வீடியோ கேம் மாதிரி எல்லாரையும் நிக்க வைச்சு சுட்டுக்கொண்டிருந்தார். அவர் பேசியதில் நிறைய பாயிண்ட்ஸ் மனதில் குறித்துக்கொண்டேன். அடுத்த தரம் பர்த்டே பார்ட்டியிலோ, கெட் டுகதரிலோ சொந்த சரக்கு மாதிரி எடுத்து விடுவதற்கு உபயோகப் படும். இதற்கு நடுவில் கந்த சஷ்டி முடிந்து கூட்டம் சமையல் கூடம் நோக்கி வர, முதல் பந்தியில் மாமாவுக்கும் எனக்கும் வடை, டபுள் ஸ்வீட்டுடன் வெண்பொங்கல் கிடைத்தது. சர்கரைப் பொங்கலை பார்த்தவுடன் தான் "சாப்பாட்டுல தமிழன் நிக்கிறான்ல" என்று மாமா கொஞ்சம் கூலாகிவிட்டார். சாம்பார் சாதம் திவ்யமாயிருந்தது.
கார் பார்க்கில் விடைபெறும் போது மாமாவுக்கு சொந்த ஊர் மதுரைக்கு பக்கம் என்று தெரிந்தது. "என்ன சார் இடைத் தேர்தல்ல நோக்கியா என்95 ஃபோன், ரொக்கம், வெள்ளிகுத்துவிளக்குன்னு ஏகத்துக்கு குடுத்தாங்களாமே அப்படியா..? பேப்பரில் பக்கம் பக்கமாய் படித்தேன்" என்று எனக்கு ஆர்வம் தாங்காமல் கேட்டேன்.
"அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க தம்பி...அந்த மாசம் பார்த்து என் ரெண்டாவது பெண்ணோட பிரசவத்துக்கு டெல்லிக்குப் போயிட்டோம். ஏகப்பட்டது குடுத்திருக்காங்க இன்னும் என்னல்லாமோ சொல்றாங்க...எனக்கு ஒன்னும் கிடைக்கல....எத்தன தரம் ஓட்டு போட்டிருப்பேன்..அந்த நன்றிக்காவது பக்கத்து வீட்டுல குடுத்துட்டு போயிருக்கலாம்ல...அடுத்த தரம் ஓட்டுக்கு வரட்டும் இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்"
Saturday, November 27, 2010
Subscribe to:
Post Comments (Atom)
44 comments:
ஹா ஹா ஹா! ரொம்ப நாளாச்சு இப்படி உங்க போஸ்ட் படிச்சு விழுந்து விழுந்து சிரிச்சு. you are back to the form, Dubukku! :)
மோதிரக்கை காரரின் சவுண்ட் அட்டகாசமா இருந்துச்சு..
மனுஷன் உதார் விடறதுக்கு நிறைய மேட்டர குடுத்துருக்கிறாரு....
கடைசியில சுடுவதற்கு சொன்ன காரணம் எல்லாத்தையும் தூக்கி சாப்பிட்டுருச்சு...
சரி நம்ம கும்மி கோஷ்டில , பெட்டு கட்டுனவங்க கட்டு பெட்டுனவங்க எல்லாத்துக்கும் சர்க்கரை பொங்கல் (அல்வாக்கு பதிலா ) கொடுத்திட்டிங்களே ...சூப்பர்.. தொடரட்டும் உமது சேவை...சொல்லியல்ல அடிக்கிறிங்க...அடுத்த தேதி சொல்லலியே....
சொக்கா! சொக்கா! டுபுக்கு அண்ணாச்சி போஸ்ட்ல முதல் தடவையா வடை,பொங்கல், புளியோதரை & ஒரு கிண்ணம் நிறையா திரட்டிப்பால் எல்லாம் தக்குடுவுக்குதான். சொன்ன பேச்சை காப்பாத்தின எங்க ஊர் மாப்பிளைக்கு ஒரு ஓஓஓ போடுங்கப்பா!! பாஸ்டன் நாட்டாமை சார்! சியாட்டில் சிங்காரி அக்காவை இனிமே நாம செளஜன்யமா வம்புக்கு இழுக்கலாம், வாத்யார்தான் பதிவு போட்டுட்டாரே!!...:)
என்றும் வம்புடன்,
தக்குடு
அடப்பாவிகளா! யூசர்னேம் பாஸ்வேர்ட் டைப்பிட்டு வரர்த்துக்குள்ள வடை & புளியோதரை போச்சே!!..:( மூனாவது வந்ததுக்கு திரட்டிப்பால் மட்டும் எடுத்துக்கறேன்!!ஹும்ம்ம்ம்ம்.....
கோவிலுக்கு போனோமா சேவிச்சோமான்னு இல்லாம உண்மையான பக்தைகளை எல்லாம் கிண்டல் பண்ணிட்டு பொங்கலுக்கு பொங்கறவங்களை எல்லாம் வரிசையா க்ரவுண்ட்ல நிக்க வெச்சு சுடணும்ங்கறேன்!!!
கடைசில அடுத்த பதிவு எப்பமுன்னு சொல்லவேயில்ல.. இங்க ஒரு கோவில் மாதிரியான கோவில் இல்லாதது ரொம்ப பீலிங்கா இருக்கு.
//வேஸ்டாக வெயிட் செய்வது எனக்கு பிடிக்காது.
வேஸ்ட் செய்வதும் எனக்கு அறவே பிடிக்காது.//
நல்ல பாலிசிண்ணே..!!இப்டியே மெயின்டெய்ன் பண்ணுங்க..!!
///"சாப்பாட்டுல தமிழன் நிக்கிறான்ல" என்று மாமா கொஞ்சம் கூலாகிவிட்டார்//
:)
:-) முறை ய மீறினாலும், எனக்கு சந்தோசம் தான். இந்தியா, பாகிஸ்தான் match -ல நான் எப்பவும் பாகிஸ்தான் சைடு தான். பாகிஸ்தான் கெலிச்சா நான் சொன்னது நடந்தது-ன்னு சந்தொஷபடுவேன். இந்தியா கெலிச்சா, தேசப்பற்று மனச நிறச்சிடும். அதே மாதிரி உங்க போஸ்ட் வந்தா டபுள் ஸ்வீட் தான் :-)
:))
:))
நீ ஆடு தல
செம்ம...
எப்படி தல இதெல்லாம்............
By
Haji
Dubai
aha
dear dubukku
romba naal achuu ipdi sirichu
amam madurai pakkam eppo varuvinga?
(auto ready aga irukku)
balu vellore
வாத்யார்..
27ம் தேதி கன் மேரி போஸ்ட் போட்டு இந்த கேடியக்கா மூஞ்சில கரிய பூசினதுக்கு டான்க்ஸ், நீ தொடர்ந்து கலக்கு வாத்யார், நாங்களும் என்சாய் பண்றோம்.
அப்புறம் ஒரு மேட்டர் தல - //கந்த சஷ்டி சொல்லாமல் இப்படி கத்திப் பேசினால் வெண்பொங்கல் கிடையாது என்று பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ // இதுல ஒரு பொருள் குற்றம் இருக்கு தல. புரியுதா??
தக்குடு தம்பி : எங்க தல ப்ளாக்ல வடை வாங்குறதுக்கு ஒனக்கு இன்னும் கொஞ்ச நாள் ஆகும், நீ இப்பத்தானே டுபுக்கு ரசிகர்கள் முன்னேற்றக் கழகத்த்தில அப்ரண்டிசா சேந்ந்திருக்க, நாங்க எல்லாம் எவ்ளோ நாளா கழகக் கண்மணிகளா இருக்கோம், அவ்ளோ சீக்கிரம் விட்ருவோமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//எனக்கு ஒரு வரி கூட பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே கத்ரீனா கைஃபை பிடித்துவிட்டது நியாபகத்து வந்து நிம்மதியானேன்.//
So you are my competitor???
karumame kannayinara "pongal vanginoma sweet vanginommannu irukkardha uttutu parunga....ippa evvalavu avasthai".thevai illama ennakku vera tension!!!!!
appuram...vidunga boss...koil pongal illana enna..thangamani kitta sonna mundhiri paruppoda pongal seiyya poranga!!!!
nivi.
Haha. Good one :-)
Hi Dubukku,
I am a regular reader of your blog.
sonnadhu bol nov 27 blog ittatharkku nanri !!
It rocked as usual.
:-)))))))))
இந்த போஸ்டுக்கு எல்லாம் படிக்காமலே பின்னூட்டம் போடணும் சார் :-)
Srini
//பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ//
பட்டர் பிளாக் லிஸ்டில் சேர்த்தால் என்ன..நீங்க தான் எங்க எல்லாரோட ப்ளாக் (blog) லிஸ்டில் first இருக்கீங்களே ! :)
உங்களுக்கு வடை, டபுள் ஸ்வீட்டுடன் வெண்பொங்கல் கெடைசிருக்கலேனா ரொம்ப ஏமாற்றமா இருந்திருக்கும் ...எங்களுக்கும்..ஹி ஹி :) because u wudnt hav written this post out of disappointment!
//Chella Nilaa said...
உங்களுக்கு வடை, டபுள் ஸ்வீட்டுடன் வெண்பொங்கல் கெடைசிருக்கலேனா ரொம்ப ஏமாற்றமா இருந்திருக்கும் ...எங்களுக்கும்..ஹி ஹி :) because u wudnt hav written this post out of disappointment//
செல்ல நிலா : நீங்களும் தக்குடு பாண்டி மாதிரி அப்ரண்டிஸா? வாத்யார் பத்தி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்களே? பொங்கல் கிடைக்காம போயிருந்தா நம்ம வாத்யார் இந்தியா போன போது பதிவர்களை ஏன் பாக்க முடியலன்னு சொல்லி பதமா கிண்டி ஒரு அல்வா கொடுத்தார் பாருங்க அதுமாதிரி பதமா ஏன் கோவில் பொங்கல் நல்லா இருக்காதுன்னு ஒரு பதிவு போட்டிருப்பார்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Super!!!!!!
Ending sema super..:D
//"இதுல நடுவே டிங் டிங்குன்னு மீசிக்லாம் வருமே"//
இதுதான்ய உம்ம டச்சு
பாஸ்டன் ஸ்ரீராம் - ஆமாங்க... வெகுளியா யோசிச்சிட்டேன்!
Hello டுபுக்கு - உங்களுக்கு உலகமெல்லாம் "நலம் விரும்பிகள்" போலிருக்கு!!
மிக்க நன்றி மேடம். எப்படியிருக்கீங்க. குட்டீஸ் எப்படி இருக்காங்க. அவங்க சுட்டித்தனைத்யெல்லாம் படிச்சிக்கிட்டே இருக்கேன். ஆபிஸ்லேர்ந்து கமெண்ட தான் முடியலை. (உடனே கமெண்டினா பதில் மரியாதையாயிடும்ல அதான் :)) )
பத்மநாபன் - மிக்க நன்றி தல. ஆமாம் அந்த மாம(என்) நம்ம உள்ளையும் நிறைய இருக்கார். அடுத்த பதிவு பொட்டாச்சுல :))
தக்குடு - சாரிடா வட போச்சு :)) திரட்டிப் பால் - டேய் அது எனக்கும் ரொம்ப பிடிக்கும் தெரியுமில்ல
பொற்கொடி - எல்லாம் இருக்கட்டும் பெட்டு பத்தி வாய தொறக்க மாட்டீங்கிறீங்க..என்னாச்சு மேடம்?
சேலம் - இத மாதிரி நிறைய பாலிசி கைவசம் இருக்கு :)))
சர்வேசன் - இல்லியா பின்ன :)
டாடிஅப்பா - ஐய்யோ என்னங்க விளக்கமெல்லாம் சொல்லிக்கிட்டு உங்க அன்பும் நல்லெண்ணமும் எனக்கு தெரியும்..தப்பாவே எடுத்துக்கல...கவலையே படாதீங்க
சென்ஷி - அண்ணே நீங்க ஆரம்பிச்சு வைச்சீங்க பாருங்க அப்புறம் எல்லாம் இப்படியே போணியாயிடிச்சு
அகமது சுபைர் / கார்கி - வாங்க நன்றி அடுத்த தரம் வெறும் ஸ்மைலி ஒத்துக்க மாட்டேன் சொல்லீட்டேன் ஆமா
வித்யா - நன்றி மேடம்
ஹாஜி - ஏங்க ஓட்டுறீங்க :))
பாலு - மிக்க நன்றி நண்பரே. மதுரைக்கு போன தரம் வந்திருந்தேன். அடுத்த தரம் முயற்சி வரும் போது சொல்றேன்
ஸ்ரீரம் - //கந்த சஷ்டி சொல்லாமல் இப்படி கத்திப் பேசினால் வெண்பொங்கல் கிடையாது என்று பட்டர் ப்ளாக் லிஸ்ட் செய்துவிடுவாரோ // இதுல ஒரு பொருள் குற்றம் இருக்கு தல. புரியுதா??
// - எம் சிற்றறிவுக்கு பிரியலையே??? தயவு கூர்ந்து விளக்குவீங்களா?
மோகன்குமார் - ஆகா நீங்களுமா...உங்க கிட்ட மெயில் ஐடி இருக்கா?? :P
நிவி - நீங்க ரொம்ப ஸ்மார்ட்ங்க...என் வாயக் கிண்டினா தங்கமணி நீங்க எதிர்பார்க்கிற பொங்கல் கிண்டுவாங்கன்னு எதிர் பார்க்கறீங்க அப்படி தானே...ஏங்க ஏங்க :)))))
ஐஷ் - வாங்க.மிக்க நன்றி ஹை.
விக்ரம் பாலாஜி - ஹப்பா எப்படியெல்லாம் உங்கள கமெண்ட் போட வைக்க வேண்டி இருக்கு பாருங்க. மிக்க நன்றி உங்க பாராட்டுக்கும் தொடர்ந்த ஆதரவுக்கும்.
அறிவிலி - :))) மிக்க நன்றி ஹை
ஸ்ரீ - :))) நைஸ் ஒன்
செல்ல நிலா - ஏங்க கோயிலுக்கு போய்ட்டு வெறுங்கையோட வந்தது எல்லாம் ஒரு காலம் அப்போ நான் பேச்சிலரா இருந்தேன்..ஒரு பயலும் மதிக்க மாட்டான் ....இப்போல்லாம் குடும்பத்தோடு அட்டாக் பண்ண ஸ்ட்ராடிஜி வைச்சிருக்கேன்ல :))))
ஸ்ரீராம் - யோவ்...என்ன வம்புல மாட்டி விடறதுலயே இருக்கீங்க. உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேட்கனும்ணு இருந்தேன். இந்த என்றும் அன்புடன் இத ஒவ்வொரு தரமும் டைப் அடிப்பீங்களா இல்ல ஆட்டோ சிக்னேச்சர் மாதிரியா எப்பூடீன்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சிப்போம்ல
பொயட்ரீ- மிக்க நன்றி ஹை
சௌம்யா - :))அது எனக்குள்ளும் இருக்கிற மோதிரக்கை மாமா மாதிரி தான் :)))
கால்கரி சிவா- நீங்க சொல்றீங்க கேடுக்கறேன். ஆனா அண்ணாச்சி உண்மையச் சொல்லனும்னா எனக்கு இன்னிக்கு வரைக்கும் சத்தியமா இந்த டச் மேட்டர் பிடிபடவே இல்லிங்க..நிஜமா சொல்றேன்.
செல்ல நிலா - ஆமாங்க. பாஸ்டன் ஸ்ரீராம் ஒருத்தர் மட்டுமே நூறு பேருக்கு சமம். பார்த்தீங்ல்ல என்றும் அன்புடன் அண்ணாச்சிக்கு என் மேல எவ்வளவு அன்புன்னு :))))
// - எம் சிற்றறிவுக்கு பிரியலையே??? தயவு கூர்ந்து விளக்குவீங்களா?//
ஒரு க்ளூ தரேன் - பட்டர் கந்த சஷ்டி கவசம் சொல்ல மாட்டார் எனவே நீங்க க.ச.க சொல்லவில்லை என்றாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார் - இப்போ புரியுதா??
//இல்ல ஆட்டோ சிக்னேச்சர் மாதிரியா//
நாக்கு மேல பல்லை போட்டு இப்படி ஒரு வார்த்தையை கேட்டுட்டியே வாத்யார்??
உங்க எல்லார் மேலயும் எவ்ளோ அன்போட நான் ஒவ்வொரு முறையும் டைப்பறேன் தெரியுமா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
// - எம் சிற்றறிவுக்கு பிரியலையே??? தயவு கூர்ந்து விளக்குவீங்களா?//
ஒரு க்ளூ தரேன் - பட்டர் கந்த சஷ்டி கவசம் சொல்ல மாட்டார் எனவே நீங்க க.ச.க சொல்லவில்லை என்றாலும் ஒண்ணும் சொல்ல மாட்டார் - இப்போ புரியுதா??
Boston நண்பரே !! உங்க லாஜிக் கரெக்ட் தான். ஆனா நம்ம 'தல' சொன்னதில் பொருள் குற்றம் இல்லை. இது புரியனனும்னா நீங்க Boston Ashland ல இருக்க மகாலட்சுமி கோவிலுக்கு போகணும் . அங்க சைவ, வைஷ்ணவ வழிபாடு ஒரே இடத்தில தான். பட்டர் நன்னா காதை தீட்டி வெச்சிண்டு இருப்பார். நீங்க சத்தமா சஷ்டி கவசம் சொல்லிட்டு...எவ்வளவு வெண்பொங்கல் கிடைச்சது-ன்னு ஒரு கமெண்ட் போடுங்கோ பாக்கலாம் :-)
மக்களே!! எனக்கு ஹரியும் சிவனும் ஒன்னு தான். என் பெயர் ஹரிஹரன் ..so நோ பொலிடிக்ஸ் ப்ளீஸ்
அன்றைக்கு கோயில் வெண்பொங்கல், சாம்பார் சாதம் என்று மூடு செட் செய்துவிட்டதால் விட்டுப் போக மனதில்லை//
உண்மைங்க.. நாங்க இப்ப ஐய்யப்பூஜையில் செட் செய்திருக்கம்..:)
//மக்களே!! எனக்கு ஹரியும் சிவனும் ஒன்னு தான். என் பெயர் ஹரிஹரன் ..so நோ பொலிடிக்ஸ் ப்ளீஸ்//
அட ராமா.. இதென்ன வம்பாப் போச்சு?? ஹரிஹரன் சார் எனக்கும் அப்படித்தான், In fact, உருவ வழிபாட்டையே கேள்வி கேட்கும் ஒரு குழப்பமான நிலையில்தான் நான் இருக்கிறேன். நான் என்னிக்கும் ஹரிக்கும் ஹரனுக்கும் அல்லாவுக்கும் ஒரு வித்தியாசமும் கண்டதில்லை.
நான் சும்மா தலையை கலாய்க்கறதுக்கு கமெண்ட் போட்டேன்.
அப்புறம்: நான் Ashland கோவிலுக்கு ரெகுலரா போறவந்தான். ஒவ்வொரு ஐயப்பன் அபிஷேகத்துக்குப் போவேன், நீங்களும் பாஸ்டன் ஏரியாவிலிருந்தா சொல்லுங்க, கண்டிப்பா சந்திக்கலாம்.
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாஸ்டன் ஸ்ரீராம்!! உங்க அன்புக்கு நன்றி. நான் 3 மாசம் on -site வந்தப்போ (2007 - இல்), ஒரு புரட்டாசி சனிக்கிழமை போய் நம்ம கோவில் 'கவனிப்பு'-ல மயங்கி 4 முறை போயிட்டு வந்தேன். [சாப்பாடு போட்டு ...2 நாளைக்கு வர மாதிரி கையிலயும் கட்டி குடுக்கரான்கப்பா!! ]
Next டைம் வரப்போ சொல்லறேன்...மீட் பண்ணலாம்.
போன மாசம் UK போனேன். Trafalgar Square -ல தீபாவளி கொண்டாட்டம். நம்ம தல-ய தேடி தேடி பார்த்தேன். ப்ரியா படத்தில ரஜினி மாத்ரி பாடாத குறை தான்...
தல - நம்ம blog தோழர்களுக்கு ஒரு குடும்ப பாட்டு ரெடி பண்ணுங்க ப்ளீஸ்
பந்தயப் பணம் நூறு டாலர் அனுப்ப என்னுடைய பேங்கி போனேன், அவன் என் அக்கவுண்டில் மினிமம் தொகை இல்லை அதனால இருக்க 100ஐ தர முடியாதுங்கறான், மினிமம் போட உங்க கணக்கில் இருந்து 5000 யூ.எஸ் டாலர் அனுப்பி வெச்சா, 100 உடனடியாக வந்து சேரும் :)))
//பந்தயப் பணம் நூறு டாலர் அனுப்ப என்னுடைய பேங்கி போனேன், அவன் என் அக்கவுண்டில் மினிமம் தொகை இல்லை அதனால இருக்க 100ஐ தர முடியாதுங்கறான், மினிமம் போட உங்க கணக்கில் இருந்து 5000 யூ.எஸ் டாலர் அனுப்பி வெச்சா, 100 உடனடியாக வந்து சேரும் :))) //
கேடியக்கான்னு சரியாத்தான் பேரு வச்சிருக்கு உங்களுக்கு. :)
நீங்க போடற சண்டையில என்கிட்ட தனியா பெட் கட்டித் தோத்த பந்தயப் பணம் $1000த்தை மறந்திடாதீங்க, சம்பளம் வந்ததும் அனுப்பி வச்சிடுங்க
என்றும் அன்புடன்
உங்க அன்புத் தம்பி
பாஸ்டன் ஸ்ரீராம்
//எனக்கு ஒரு வரி கூட பேசாமல் பார்த்த மாத்திரத்திலேயே கத்ரீனா கைஃபை பிடித்துவிட்டது நியாபகத்து வந்து நிம்மதியானேன்//
சமீப காலமா உங்க போஸ்ட்ல கத்ரீனா ரெம்ப வர்றாங்க... எனகென்னமோ டவுட்ஆ இருக்கு... பட் கத்ரீனா மேல நம்பிக்கை இருக்கு... (ஹி ஹி ஹி)
Porkodi / நாட்டாமை -
நம்ம கழகத்தோட போன பொதுகுழு கூட்டத்துல இந்த Bet பத்தி agenda ல இல்லையே... கழக உறுப்பினர் (இளையோர் பிரிவு) என்ற முறையில் எனக்கும் விளக்கம் சொல்லியே ஆகணும்... இல்லேனா டெய்லி ஒரு போஸ்ட் போடுவேன் என்பதை பணிவன்புடன் மிரட்டி கொல்கிறேன்....
அருமையாக எழுதப்பட்டுள்ளது. நம் நாட்டின் கிட்டத்தட்ட ஒவ்வொருவரின் மனநிலயும் இது தான்.
-சுபாஷ்.
அய்யயோ ஒறே ஜாலியா இருக்கு வாசிக்க . இதுல இருந்து ஏதாவது கத்துக்கிட்டோமா?
டாடிஅப்பா / ஸ்ரீராம் - ஓ நீங்க ரெண்டு பேரும் கோயிலில் உண்டக்கட்டி சாப்பிடும் சங்கத்தில சக மெம்பரா...ஓக்கே ஓக்கே
பொற்கொடி - நல்லாத் தான் போடுறீங்க பிட்ட, சரி சரி ரங்கு அக்கவுண்ட்லேர்ந்து நான் கேட்டேன்னு சொல்லி ட்ரான்ஸ்பர் பண்ணச் சொல்லி ஆர்டர் போடுங்க...பேங்கில ஒன்னும் சொல்லமாட்டாங்க :))
அப்பாவி தங்கமணி - ஹைய்யோ நீங்களுமா...ரொம்ப நல்ல எண்ணம்ங்க உங்களுக்கு. அந்த பெட் நீங்க சங்கத்துல லீவு லெட்டர் குடுக்காம ஆப்சன்ட் ஆன போது நடந்த மேட்டர்
சுபாஷ் - மிக்க நன்றி..ஆமாங்க அதைத் தான் பிரதிபலிக்க முயற்சி செய்திருக்கிறேன் ஹூம்ம்
சுபா - மிக்க நன்றிங்க...//இதுல இருந்து ஏதாவது கத்துக்கிட்டோமா? // என்னைப் பொருத்தமட்டில் ஒன்னும் இல்லீங்க...ரொம்ப ஆப்ஷன் இருப்பதாய் தோன்றவில்லை
Superb blog. Have been passing time by reading your blog for the past one week. Innikku WFH panra en husband enna pathu porama padara alavukku sirichutten. Nice job. Keep writing.
BTW, amba samudram romba sooper ooru. Down south is my fav place.
//இப்ப பாரு முருகனே க்யூல நின்னாலும் சர்கரைப் பொங்கல் டவுட்டு தான்" என்று தங்கமணி பக்கம் திரும்பினால், அவர் சோத்துக் கவலையே இல்லாமல் கண்ணை மூடி முருகனை வேலோடு பிடுங்க முயற்சி செய்துகொண்டிருந்தார்.//
ROTFL...கலக்கல் :)
//"அந்தக் கொடுமைய ஏன் கேக்கறீங்க தம்பி...அந்த மாசம் பார்த்து என் ரெண்டாவது பெண்ணோட பிரசவத்துக்கு டெல்லிக்குப் போயிட்டோம். ஏகப்பட்டது குடுத்திருக்காங்க இன்னும் என்னல்லாமோ சொல்றாங்க...எனக்கு ஒன்னும் கிடைக்கல....எத்தன தரம் ஓட்டு போட்டிருப்பேன்..அந்த நன்றிக்காவது பக்கத்து வீட்டுல குடுத்துட்டு போயிருக்கலாம்ல...அடுத்த தரம் ஓட்டுக்கு வரட்டும் இவனுங்கள எல்லாம் நிக்க வைச்சு சுடனும்" //
Labels: புனைவியல் ???
:)
கலக்கல் தல .நீயும் என்ன மாதிரியே புத்திசாலி யா இருக்கிறே . கீப் இட் அப்
Sh... - மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. ஹைய்யோ ரங்கு வயத்தெரிச்சலை கொட்டிக்கிட்டேனா :)) ஹீ ஹீ அம்பாசமுத்திரத்த பத்தி நாலு வார்த்தை பெருமையா சொன்னதுக்கு மிக்க நன்றி.
கைப்புள்ள - மிக்க நன்றி தல /புனைவியல்/ :)))
முத்தமிழ்வேந்தன் - ஹீ ஹீ மிக்க நன்றி உங்க வாழ்த்துக்கு :))
Post a Comment