நல்ல சுளீர் காரத்துடன் கூடிய மிக்ஸரோ காராசேவோ,ஒமப்பொடியோ, மசாலா கடலையோ, பஜ்ஜியோ கொறித்துக் கொண்டே சூடாய் டீயோ காப்பியோ குடித்திருக்கிறீர்களா? கேள்வியே அபத்தம். கட்டாயம் குடித்திருப்பீர்கள். இல்லாவிட்டால் திரும்பப் போய் அம்மாவின் கர்பப் பைக்குள் சௌகர்யமாய் படுத்துக்கொள்ளலாம். பிறந்தே இருக்கவேண்டாம். கொறிக்கும் பலகாரத்தின் காரம் நாக்கில் இறங்கி டீயின் சூட்டோடு ஹாட்டாய் டுயட் பாடும் போது டாப்பாய் இருக்கும். விட்டதா அதோடு. நாக்கு நம நமங்கும். இப்படி சமீபத்தில் எனக்கும் நாக்கு நமநமத்தது. என்றைக்கா... சரியாப் போச்சு, சில பதிவுகளுக்கு முன்னால் பேஸ்புக்கில் குத்துவிளக்கைப் பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா அதற்கு ரெண்டு நாள் கழித்து.
விஷயம் இது தான். அன்றைக்கு பொழுதுபோகாமல் ஆட்டோகிராஃப் படத்தை திரும்பப் பார்த்தேன். நீ.தா.என்.பொ.வவையும் ரெண்டாவது தரம் பார்த்தேன்.பார்த்துவிட்டு தேமேன்னு கண்ணை மூடிக் கொண்டு படுத்துக் கொண்டிருந்திருக்கலாம். இப்ப தோன்றுகிறது ஆனால் அன்றைக்கு? நாமும் ஏதாவது ஒரு காது குத்து விசேஷம் வைத்து, ஸ்கூல் படித்துக் கொண்டிருந்த போது வடை வாங்கிக் கொடுத்து ரூட்டு விட்டுக் கொண்டிருந்த பெண்ணை (பார்க்க -1 , பார்க்க -2 ), பத்திரிக்கை குடுப்பது மாதிரி குடுத்து பார்த்து வரலாமா என்ற உள்ளே உறங்கிக் கொண்டிருந்த ஆர்வம் பிராவகமாய் கொப்பளிக்க ஆரம்பித்துவிட்டது. தப்பான எண்ணத்துடன் எல்லாம் இல்லை, சும்மா இப்போது அந்த பெண் எப்படி இருப்பார், அப்படியே தங்கமணிக்கு இதான் உன்னோட சீனியர், வணக்கம் சொல்லிக்கோமான்னு சும்மா எந்த கல்மிஷமும் இல்லாமல் அந்த நாட்களை கலாய்க்கலாம் என்ற எண்ணம் தான். ஆனால் இந்த மாதிரி ஃபீல் குட் சீனெல்லாம் சினிமாவில் தான் சரிபடும் நேரில் நிச்சயம் உதைபடும் என்ற நிதர்சனம் நிச்சயமாய் தெரிந்ததால், இதயம் முரளி மாதிரி ஒளிந்து கொண்டு பேஸ்புக்கில் ப்ரொபைல் போட்டோவை மட்டுமாவது பார்ப்போம் என்று தேடு தேடு என்று தேடினேன்.
இந்த கூகிள் இருக்கிறதே கூகிள் - இணையில்லா வரப்பிராசதம் - என் எதிரிகளுக்கு. ங்கொய்யால என் பேரை டுபுக்கு என்று மாற்றி வைத்துக் கொண்டாலும் நான் யாரிடமிருந்தெல்லாம் ஒளிந்து கொள்ள நினைக்கிறேனோ அங்கெல்லாம் கரெக்ட்டாய் போட்டுக் கொடுத்துவிடும். ஆனால் பாருங்கள் நானும் மேற்படி ஆளை தேடு தேடுன்னு தேடுறேன் என்ன பெரிய புடலங்கா கூகிள், என்னுடைய வடை சுந்தரியைத் தவிர மற்ற எல்லாரையும் காட்டுகிறது. இதுல சப்பான், கொரியா என்று வேற்று நாட்டு ஆம்பிளைக் கபோதிகளை வேறு காட்டி இவனா பாரு என்கிறது. என்னத்தடா கோட் எழுதியிருக்கீங்க, உங்கள நம்பி யாஹூக்கு வேற துரோகம் பண்ணிட்டேனேடான்னு நான் நொந்து மிக்ஸரை வாயில் அரைத்துக் கொண்டே சூடான டீயை உறிஞ்சிக் கொண்டிருக்கும் போது தான் பொறி தட்டியது. மேற்படி முன்னாளை காலேஜ் படிக்கும் போது எதேச்சையாய் ஒரே முறை ஒருவர் வீட்டில் பார்த்திருக்கிறேன் அவரின் புதல்வி தங்கமணியின் கிளாஸ்மேட். சில பல மனக் கணக்குகள் போட்டு தங்கமணியின் அந்த க்ளாஸ் மேட் நம்மாளின் சொந்தம் என்ற முடிவுக்கு வந்தேன். அது எப்படி என்ற விபரங்களை கம்பேனி சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் பராக்கப் பார்க்காமல் விஷயத்தை மட்டும் பார்ப்போம்.இப்பேற்பட்ட தருணத்தில் தான் நான் முதல் பத்தியில் சொன்ன மிக்ஸர் காரம் - சூடான டீ விளைவால், தங்கமணியின் க்ளாஸ்மேட் வழியாக என வடை சுந்தரியைப் பற்றி துப்பு கிடைக்கலாம் என்று நாக்கு நமக்க ஆரம்பித்தது.
நல்ல படம் இல்ல...
ம்ம்ம்
ஸ்னேகா காரெக்டரும் சரி சமந்தா காரெக்ட்டரும் சரி அருமையா சித்தரிச்சிருக்காங்க.
ஹ...அதானே..
இல்ல அது இல்ல..வாழ்க்கைல ப்ரண்ட்ஸ் பெரும் பங்கு வகிக்கிறாங்க இல்ல.
....
ஸ்கூல் காலேஜ் ஃப்ரெண்ட்ஸ் கூடலாம் டச்சுல இருக்கணும்.ரொம்ப முக்கியம்
ஓகோ..
நான் என் ஸ்கூல் மேட்ஸ், காலேஜ் மேட்ஸ் சில பேர் கூடலாம் இன்னும் நல்ல டச்சுல இருக்கேன்.
ப்ச்..எங்க நான் சில பேர் கூட மட்டும் தான்
அப்படில்லாம் விட்றக்கூடாது
..ம் அப்புறம்..
முயற்சி எடுக்கணும்.
டீ குடிச்சாச்சா...
உன் எல்லா ஃப்ரண்ட்ஸோடயும் நீ டச்சுல இருக்கணும். அதுக்கு நான் உதவி பண்றேன்
ஓகோ...நான் யார் கூடலாம் நான் டச்சுல இருக்கணும்?
பொதுவா சொன்னேன். உன் க்ளோஸ் ப்ரெண்டுன்னு சொன்னியே அவள இப்போதைக்கு கால் பண்ணினயா..?
இன்னும் கொஞ்சம் மிக்ஸர் சாப்பிடுங்க....
குடு குடு...நீ தந்து நான் என்னிக்கு வேண்டாம்னு சொல்லியிருக்கேன்
ம்ம்...அப்புறம்...நான் வேற யார் கூடலாம் டச்சுல இருக்கணும்..
நீ காலேஜ் படிக்கும் போது <<மேற்படி க்ளாஸ்மேட் >> உங்க செட்டு தானே
இல்லியே அவ ஜுவாலஜியாச்சே
இருக்கலாம், வேற க்ரூப்பா இருக்கலாம் ஆனாலும் அவங்க கூட டச்சுல இருந்தா தப்பில்லை. அதான் நட்போட சிறப்பு. முகநகன்னு ஆரம்பிச்சு தகதகன்னு திருவள்ளுவர் நட்பு பத்தி ஒரு குறள் எழுதியிருக்கார் பாரு அப்படியே அசந்துட்டேன்
அடேங்கப்பா....மிக்சரோட அப்படியே சூடா இந்த டீயையும் குடிங்க...ஆறிடப் போகுது
அங்கே தான் தப்பு செய்துவிட்டேன். அந்த டீயைக் குடித்திருக்கக் கூடாது. சும்மாவே உளறுவதற்கு கேட்க வேண்டாம் இதுல தங்கமணி கிவ் அண்ட் டேக் இன்ஷுரன்ஸ் பாலிசி ஏஜன்ட் எனபது தெரியாமல் உளறினால் கேட்க வேண்டுமா.
போன தரம் ஊருக்குப் போயிருக்கும் போது அந்த ஜூவாலஜி பொண்ணப் பார்த்தேன். உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்கார்ன்னு உங்கள பத்திக் கூட கேட்டா.
ஓ அப்படியா, அவ அப்பாவ எனக்கு நல்ல தெரியும். நல்ல மனுஷன். அவளுக்கு கூட எங்க ஊர்ல சொந்தக்கார பொண்ணு இருந்தான்னு நினைக்கிறேன, என் ஸ்கூல்ல தான் படிச்சாங்கன்னு நினைக்கிறேன்...
தங்கமணிக்கு க்ரோர்பதி அமிதாபச்சன் மாதிரி ஒரு விரலை கன்னத்தில் வைத்துக்கொண்டு என்னையே ஊடுருவி உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்.
மிக்ஸர்ல என்ன பருப்பு ஃப்ரை பண்ணிப் போடுவாங்க, கடலப் பருப்பா...
இன்னமும் பார்த்துக் கொண்டிருந்தார்.
ம்ம்...யாரு அநத சொந்தக்கார பொண்ணு, நீங்க வடை வாங்கிக் குடுத்த சுந்தரியா?
உன்னை கேப்டன் டீம்ல சேர்த்தா bagisத்தான் தீவிரவாதி இண்ட்ராகேஷனுக்கு ரொம்ப உதவியா இருப்பன்னு நான் அதற்கப்புறம் அவரை புகழ்ந்ததெல்லாம் எடுபடவே இல்லை. நேராய் சைடாய் எந்த விதமாய் கேட்டாலும் தங்கமணி அசைந்தே கொடுக்கவில்லை. "எனக்கே உங்க கதைய கேக்கிறதுக்கு கேவலமா இருக்கு இதுல உங்க வடை சுந்தரியப் பத்தி இந்த பொண்ணு கிட்ட வேற கேட்கணுமா..எனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு"என்று என்னை லோ லோவென்று அலைய விட்டுக் கொண்டிருந்தார். நடுப்பட்ட காலத்தில் என்னவெல்லாமோ செய்து எல்லா சேர்ச் இஞ்சின்லயும் தேடிப் பார்த்தேன் ம்ஹூம் ஒன்னும் சிக்கவே இல்லை. மானஸ்தனாச்சே, அடுத்த நாலு மணி நேரம் நச்சரிக்கவே இல்லை.அதற்கப்புறம் தான் நம்ம பிரம்மாஸ்திரத்தை எடுக்க வேண்டியது தான் என்று முடிவு செய்து "பார்த்துட்டேன் உன் கண்ணுல அந்த பயத்த பார்த்துட்டேன்...கவலப் படாத நான் சும்மா பேச்சுக்குத் தான் கேட்டேன் அவ கிட்ட பேசக் கூட மாட்டேன் ஜஸ்ட் எப்படியிருப்பான்னு ஒரு ஆர்வம் அவ்வளவுதான் ஆனா அதுக்காக உன்ன கைவிட்டுட மாட்டேன்" என்று பிரயோகிக்க, குருதிபுனலில் தலைவர் கமல் சொல்லுவாரே அந்த ப்ரேக்கிங் பாயிண்ட் க்ர்ர்ர் தூ என்று ஒர்க் அவுட் ஆக ஆரம்பித்தது. அப்புறம் கிடைத்த சந்தர்ப்பத்தில் எல்லாம் அந்த பயத்தை நினைவூட்டியதில் அடுத்த இரண்டாவது நாள் "இதெல்லாம் ஒரு பொழப்பு" என்று பயந்து "சரி நான் கேட்டுச் சொல்றேன்" என்று கை மேல் பலன்.
மூன்றாவது நாள் தங்கமணி ஃபோனை எடுத்த போது இல்ல வேண்டாம் என்று தடுத்துவிட்டேன்.தங்கமணிக்கு ஒரே ஆச்சர்யம். அவர் தவறாக எடுத்துக் கொள்ளவில்லை என்று எவ்வளவோ எடுத்து சொல்லியும் அந்த வாரம் முழுவதும் என்னை எவ்வளவோ வற்புறுத்தியும் நான் ஒத்துக் கொள்ளவே இல்லை.
இங்கேயே சீனை கட் செய்து எல்லாரும் தியேட்டரைக் காலி செய்து விட்டுப் போனால் நான் தான் கே.டி.குஞ்சுமோனின் ஜெண்டில்மேன்.
ஆனால் என் கதை எனக்குத் தானே தெரியும். ஹூம் ஐபோன் SIRI மாதிரி புதுசா வாங்கின ஆண்ட்ராய்ட் போனில் கூகிள் S-voiceன்னு ஒரு லேடி கம்ப்யூட்டர் அசிஸ்டெண்ட் இருக்கிறது. அவன கால் பண்ணு, இந்த அப்ளிகேஷன ஓப்பன் பண்ணு என்று வாய்ஸ் ரெக்கக்னிஷனில் சொன்னதையெல்லாம் சிரமேற்கொண்டு செய்யும். சும்மா எப்படி ப்ரோக்ராம் பண்ணியிருக்காங்கன்னு டெஸ்ட் பண்ணுவோம்னு "you are too good; will you marry me"ன்னு டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். "I would rather be your assistant"ன்னு காறித் துப்பிவிட்டது.
இந்த கம்ப்யூட்டர் பெண்ணே இவ்வளவு தெளிவா இருக்குன்னா நம்ம கிரகம் சரியில்லாம தங்கமணி ட்ரை பண்ணி ஒரு வேளை நம்ம வடை சுந்தரி எனக்கு டுபுக்குன்னு யாரையுமே தெரியாதுன்னு சூடன அடிச்சு சொல்லிடிச்சுன்னா...அப்புறம் அவ்வ்வ் நான் ஜீப்புல ஏறின ரவுடின்னு வீட்டுல இருக்கிற இமேஜ் என்ன ஆவது, வடை சுந்தரியைப் பற்றி நான் உருகி உருகி இங்கே இன்னும் நான் எழுதவேண்டிய பதிவுகள் என்னாவது..
ஹூம் ஓஷோவோ அப்துல் கலாமோ சொல்லியிருக்காங்கல்ல - நம்பிக்கை தானேங்க வாழ்க்கை.
Wednesday, January 09, 2013
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
ஓஷோவோ இல்லை கலாமோ சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை:-)))))))
நம்பினார் கெடுவதில்லை- நான்கு மறை தீர்ப்பு.
மரை கழலாமல் இருக்கணும்.
எத சொல்றது, எத விடறது, எல்லாமே சூப்ப்ர். வரிக்கு வரி ரசித்து, சிரித்தேன்.
சூப்பர்..இந்த விசாரணைல பல உண்மைகள் வெளிவரும் போலருக்கே :))
:-))))
பூர்வ ஜென்மத்தில் எந்த ஊரில் இருந்தீங்க?
ஆஹா..ஏதாச்சும் க்ளூ இருந்தா தா தம்பி.எனக்கு அம்பை,கல்லிடையில் இரண்டு ஃப்ரெண்ட் இருந்தாங்க.முதல்ல அவுங்கள கண்டுபிடிச்சு அப்படியே....சுந்தரியை கண்டு பிடிச்சுடலாம்.நம்பிக்கை தானே வாழ்க்கை.
awesome, kalakitinga !! loved reading every word. nice capture of expression, enaku sathyama padam mathiri neenga sonathellam oduchu, unga veetla :) location vera palagina idam aacha, apdiyay thathroobam!
keep writing forever :)
Deeksh
Intha Google irukke Google..ennama code eluthirukaanga :-) athu moolama thaan unga blog ah kandupidichein!! Very nice. I just couldn't stop laughing on reading this and ur old blogs.
Keep writing sir.
This is Deepa from Melbourne, Australia..
Unga pugaz ulagam pooram kodi katti parakuthu ponga :-))
Wow!!!Super!!!
Medi claim policy irruka. All the best.
Laughing out loud reading it - Ditto story of my home! :) Not just undergrad in India but we did grad school in USA from same location - too many girls of his interest are good friends of mine. We have a hilarious time with this routine :) ... He does use the Brahmastram (I burst out laughing reading your words!) too ...
பின்னிட்டீங்க தலீவா!!
உங்களின் யதார்த்த நடைக்கு நானும் ஒரு ரசிகன் ....அருமை!!!
Very good sir....Simply superb....I cant stop laughing...Officla ellarum oru mathiri paakaranga...
எல்லாம் சரிதான் ஆனா இந்த நீ.தா.என்.பொ.வவை ரெண்டாவது தரம் பார்த்தேன்னு சொன்னதைத்தான் தாங்க முடியலை. அந்தப் படத்தை எப்படி ரெண்டாவது தடவையா பாதீங்கன்னு கொஞ்சம் விளக்கமா இன்னொரு போஸ்ட் போடுங்க தலைவா. நாங்கல்லாம் படிச்சு விளக்கமா புரிஞ்சுக்கறோம்.
ROFL :-))
What happened to Ammanchi of Ammanchi.blogspot.com? not seen at all ?
Suresh Krishnan
துளசி - டீச்சர் நான் சொன்னது சும்மா டமாசு டமாசு.நீங்க சொன்னா கரீக்ட்டாத் தான் இருக்கும்
shh - மிக்க நன்றிங்கோவ்
Natraj - நீங்க விசாரிக்கவே வேணாம்...நானே நிறைய உளருவேன் ;)
VijayaShankar - ஏங்க :)))
அமுதா - பிரச்சனையே வேணாம்க்கா...எதாவது செய்யப் போயி கடைசீல உங்க பிரண்டோட சொந்தாமாகிடப் போகுது. ம்ஹூம் எதுக்கு வம்பு ;)))))
தீக்ஷன்யா - ஆமாம் நீங்க இங்க இருந்த போது வேற நிறைய இந்த மாதிரி பார்த்திருக்கீங்க (இனிமையான நாட்கள்)...கேக்கவா வேணும் :))) மிக்க நன்றி
தீபா கார்த்திக்- மிக்க நன்றி உங்கள் முதல் வருகைக்கும் ஊக்கமான கமெண்டுக்கும் :) உங்களுக்கு பதிவுகள் பிடிச்சது பற்றி மிக்க சந்தோஷம்
சேது - மிக்க நன்றி சாரே
அனானி - எதுக்கும் இருக்கட்டும்னு அடுத்த ஜென்மத்துக்கும் சேர்த்தேஎ எடுத்துட்டேன் :))
Kookaburra - ஹா ஹா உங்க வூட்டுலயும் இந்தக் கதை தானா...//too many girls of his interest are good friends of mine// அத சிரிச்சிக்கிட்டே சொல்றீங்க பாருங்க அது தான் சூப்பர் :)) God Bless
Dinesh - மிக்க நன்றி தலைவா
சங்கே முழங்கு - மிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு
மதன் - மிக்க நன்றி சாரே. உங்களுக்குப் பிடித்தது பற்றி மிக்க சந்தோஷம்
மது - விளக்கமாலாம் சொல்ல முடியாது ஒரே வார்த்தைல சொல்லணும்னா சமந்தா :)
சுரேஷ் கிருஷ்ணன் - மிக்க நன்றி. அவர் இப்போது அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கிறார் :)
Wow Dubukku,
As usual, you rocked!!
After a long time,I laughed like hell.
Ungalai yezhudha vaikkum thangamanikku vazhththukkal!!
Regards,
Vikram Balaji
Excellent
nice read
epdiyo unga blog ku thaduki vizhuthen
reading marathon panren rendu naala
ella postum padichutu thaan vida poren :-)
Post a Comment