Thursday, January 03, 2013

செல்போன்

செல்போன் பிரபலாமான ஆரம்பகாலத்தில் ஒரு மோட்ரோலா போன் வைத்திருந்தேன். ஜிம் போக வேண்டிய அவசியம் இல்லாமல் இரண்டரை செங்கல் சைஸுக்கு இருக்கும் அந்த ஃபோனை வைத்தே ஆர்ம்ஸ் ஏத்துவேன். மெட்ராஸ் வெய்யில் மாதிரி அதற்கு ரிங்டோன் வால்யூம் high higher highest என்று தான் இருக்கும். யாராவது அழைத்தால் பக்கத்திலிருப்பவரையும் சேர்த்து பதறவைக்கும். "ஆங் நல்லா இருக்கேங்க..அப்புறம் என்ன விசேஷம்" என்று ஆரம்பிக்கும் போது படக்கென்று கோவித்துக் கொண்டு ஆஃப் ஆகிவிடும். அதனாலேயே சார்ஜ் போட்டுக்கொண்டே பேச வேண்டிய நிர்பந்தம். ஒயர் வேறு நீளமாக வராது குனிந்து கொண்டே பேச வேண்டி இருக்கும். அதை விட கார்ட்லெஸ் ஃபோனிலேயே நடந்து கொண்டு மொபைல் மாதிரி பேசலாம் என்பதால் இந்த சனியனுக்கு நீங்க லேண்ட் லைன்லயே கால் பண்ணுங்கன்னு சொல்லிவிடுவேன். அப்புறம் நோக்கியா வந்து கைகொடுத்தது. செல்லமாய் சத்தமே இல்லாமல் சினுங்கும். பேட்டரியும் ஒரு நாள் முழுக்க வரும். கேமிரா கலர் ஸ்க்ரீன் என்று டெக்னாலஜி வளர்ந்து எங்கேயோ போய் விட்ட போதும் ரொம்ப நாள் ப்ளாக் அண்ட் வொயிட் நோக்கியாவிலேயே இருந்தேன்.

அப்புறம் சோனி,சாம்சங் என்று பலதும் வந்து போனாலும் எல்லா மாடல்களுமே மார்க்கெட்டிற்கு வந்து பழசாகி இரண்டு வருடங்கள் கழித்தே பிராப்தியாகியிருக்கின்றன. இந்த ஃபோனா வைச்சிருகீங்கன்னு துக்கம் கேட்கும் அளவிற்கு சில போன் மாடல்கள் வைத்திருந்திருக்கிறேன். சமீபத்தில் தற்போதைய லேட்டஸ்ட் மாடலான சாம்சங் கேலக்ஸி S3 LTE வாங்கினேன். போன் வந்ததிலிருந்து நீங்க என்ன மாடல் போன் வைச்சிருக்கீங்க என்று பார்ப்பவரை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். பத்துக்கு ஆறுபேர் மட்டுமே திரும்பவும் என்னிடம் நீங்க என்ன மாடல் வைச்சிருக்கீங்கன்னு கேட்டு நோக்கத்தை பூர்த்தியாக்குகிறார்கள்.

போன வாரம் பஸ்ஸில் ஒரு நவ நாகரீக நங்கை ஒருவர் பக்கத்தில் அமர்ந்தார். உடனே எனக்கு கால் வந்து "ஹலே துபாயா" என்று பேசவேண்டியதாகிவிட்டது."ஹீ ஹீ மை ப்ரதர் மார்க்" என்று அந்தப் பெண்ணிடம் சமாதானம் சொல்லி முடிக்கும் போது அந்தப் பெண் ஐபோன் 5ஐ கையில் வைத்திருந்தாள். இந்த முறை விடுவதாயில்லை என்று கேலக்ஸி S3 ஐபோனைவிட எப்படி உசத்தி என்று பதினைந்து நிமிடம் போட்டு தாக்கி விட்டேன். அந்த பெண்ணும் பொறுமையாய் கேட்டுக்கொண்டு ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துவிட்டார். ஹ..யாரு கிட்ட என்று எனக்குள் பெருமைபட்டிக்கொண்டிருக்கும் போது அந்தப் பெண் அசால்டாய் இன்னொரு பாண்ட் பாக்கெட்டிலிருந்து கேலக்ஸி S3ஐ எடுத்து அதில் அவருக்கு என்ன என்ன பிடிக்கவில்லை என்று பட்டியிலட ஆரம்பித்துவிட்டார்.

அப்புறம் என்க்கு வெறும் காத்து தான் வந்தது என்பதை விட முக்கியமான விஷயம்  - இப்போதெல்லாம் ப்ரதர் மார்க் துபாயிலிருந்து என்னை அழைப்பதே இல்லை.

16 comments:

Anonymous said...

good one! and me first!!!

ராம்ஜி_யாஹூ said...

பத்துக்கு ஆறுபேர் மட்டுமே திரும்பவும் என்னிடம் நீங்க என்ன மாடல் வைச்சிருக்கீங்கன்னு கேட்டு நோக்கத்தை பூர்த்தியாக்குகிறார்கள்.


superb descriptive write up as always

Anonymous said...

Anyday I can come to your blog home thinnai - read over your arattai and have a good laugh :) Dubukks you should keep writing!

sriram said...

கலக்கல் வாத்யார்,
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

அமுதா கிருஷ்ணா said...

super..

Unknown said...

Angayum oru S3 na bulb ayirukume sir. But asusual kalakkal

udhavaakkarai said...

எனக்கு S-3 ல் பிடிக்காதது ஒரே ஒரு விஷயம்தான்.ஆனால் அதே பிரச்னையால்தான் iphone 5 ம் பிடிக்காது.

Anonymous said...

Hopefully, there will be no more "AAppus" in the New Year!

Shubha

தக்குடு said...

ஹேப்பி நியூ இயர் அண்ணாச்சி!


அது ஒரு கனாக் காலம் said...

இதோ வந்துட்டன் உங்க மார்க் துபாயில் இருந்து .....

புத்தாண்டு வாழ்த்துக்கள் ( அப்பலாம் எங்கிட்ட Alcatel போன் தான் இருந்தது...ரொம்ப ரொம்ப ஹெவி )

Nat Sriram said...

சூப்பரு..அந்த மோடோரோலா ஃபோன் எனக்கும் தெரியும்..கருப்பு கலர்..ஏதோ ப்ளான் ஆஃபர்ல ஆபீஸுக்கே வந்து விப்பாங்க (தள்ளிவிடுவாங்க)..

Dubukku said...

அனானி - நன்றிங்க என்னங்க அப்புறம் கமெண்டே போடல

ராம்ஜி - உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கும் ஊக்கமளிக்கும் கமெண்டுகளுக்கும் மிக்க நன்றி சாரே

Kookaburra - பாராட்டுக்கு மிக்க நன்றி மேடம். அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்.

ஸ்ரீராம் - மிக்க நன்றி தல

அமுதா - மிக்க நன்றி மேடம்

சிவராமன் - நிஜமாங்க என்னால நம்பவே முடியல ஐபோன் S3 ரெண்டுமே அந்த அம்மணி வைச்சிருந்தாங்க :))

உதவாக்கரை - உங்களுக்குப் பிடிக்காத அதே விஷயம் தான் எனக்கும் பிடிக்கல (நீங்க விலைய தானே சொல்றீங்க? :P )

சுபா - -ஹீ உங்க வாக்கு பலிக்கட்டும் மிக்க நன்றி

தக்குடு - ஹாப்பி நியூ இயர்டா வூட்டலுயும் நம்ம வாழ்த்த சொல்லிடு :)

அது ஒரு கனாக்காலம் - ஹா ஹா என்ன மார்க்கு அடிக்கடி ஃபோன் பண்ண மாட்டேங்கிறீங்க. Alcatel-ஆ ஆஹா அதுவும் செம வெயிட்டாச்சே

நட்ராஜ் - ஹா ஹா அதே அதே ஸப்பான்னு இருக்கும். நீங்களும் பாதிக்கப்பட்ட பார்ட்டியா :)))

Madhu Ramanujam said...
This comment has been removed by the author.
அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha ha...:)

uthra said...

Whenever i read ur blog, i feel lighter and have good laughter. naaalu pera nalla sirikka vechathukku romba thanks sir.:)

Kavitha said...

iPhone 5 iPhone 5 dhan. Galaxy ellam adutha pocketil dhan irukkanum. Kitta vara mudiyathu.

Post a Comment

Related Posts