படம் ஆரம்பித்த நொடியிலிருந்தே ஆக்ஷன் ஆரம்பமாகிவிடுகிறது. ஜுராசிக் பார்கிலிருந்த டைனோசர் தப்பித்துப் போய் காட்ஸில்லாவுடன் ஜல்சா பண்ணி பிறந்த மாதிரி டோ டாய் என்ற ஒரு ஜந்து. ஒன்றல்ல பன்னிக் குட்டிகள் மாதிரி வத வதவென்று ஆயிரக்கணக்கில். மாட் டேமன் கேட்கவே வேண்டாம். கல்யாண சமையல் சாதம் ரங்காராவ் மாதிரி அத்தனை காட்னோசர்களையும் பதம் பார்க்கிறார். ஒனறும் இல்லாமலேயே ஆயிரம் கதை கட்டும் உலகில், சீனப் பெருஞ்சுவரின் ஐதீகங்களுக்கும் கட்டுக் கதைகளுக்குமா பஞ்சம். பல்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டு இணைக்கப் பட்டதாக கூறப்படும் சீனப் பெருஞ்சுவரின் நதிமூலம் ரிஷிமூலத்திற்கு “ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ...” என்று நம்மூரில் இருக்கும் கதைகள் மாதிரி ஆயிரம் கதைகள் உண்டு. அதில் ஒரு கட்டுக் கதையை வைத்துக் கொண்டு கதையைப் பின்னியிருக்கிறார்கள். சீனர்கள் கண்டுபிடித்தாகக் கூறப்படும் கன்பவுடரைத் தேடி மேட் டேமனும் அவர் தோழரும் சீனாவிற்கு வருகிறார்கள். அப்படி வரும் போது சீன பழங்குடியினரிடமிருந்து தப்பிக்க ஓடும் போது ஒரு சீனப் பெருஞ்சுவரில் அமைந்த கோட்டையில் மாட்டிக் கொள்கிறார்கள். அங்கே என்ன நடக்கிறதென்பதே கதை. கதை என்னய்யா கதை, ஆக்ஷன் படம் அவ்வளவே ஆனால் சுவாரசியமாய் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள்
ஆக்ஷன் ரசிகர்களுக்கு நல்ல விருந்து. படம் ஆரம்பத்திலிருந்து நல்ல டெம்போ. கோட்டையையும், தளவாடங்களையும், சீன ஆயுதங்களையும் ரசித்து செய்திருக்கிறார்கள். அதே போல் மூன்று நடிகர்களைத் தவிர மற்ற எல்லோருமே சீன நடிகர்கள் தான். கதாநாயகி ஜிங் ட்யான் செதுக்கி வைத்த சிற்பம் மாதிரி அவ்வளவு அழகு. அதுவும் மயில்கழுத்து நீலத்தில் சீருடை அவருக்கு, அடேங்கப்பா...ஏமி ஜாக்சனையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இவரை கோலிவுட்டிற்கு கொண்டு வர நம்மூர் டைரக்டர்கள் ஆவண செய்யவேண்டும். கதையிலிருந்து இம்மி கூட விலகாமல், ஹீரோக்கு சான்ஸே கொடுக்காமல் கதாநாயகி கட்டுப்பாடாய் இருக்கிறார். கடைசியில் கூட ஒரு முத்தம் - ம்ஹூம்...ரொம்ப மோசம், மேட் டேமனை கை குலுக்கி ஊருக்குப் போய் லெட்டர் போடு என்று அனுப்பி விடுகிறார்.
சீனப் பெருஞ்சுவராகட்டும், அந்தக் கோட்டையாகட்டும் ரசித்து சீ.ஜி செய்தவர்கள் அந்த ஜந்துவை வத வதவென்று பெருக்கவிடாமல் கொஞ்சம் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கலாம். அது மட்டும் தான் உறுத்துகிறது. மற்றபடி யுத்த காட்சிகளை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு க்ளீன் ஆக்ஷன் விருந்து. படம் ஆரம்பித்தலிருந்து முடிவு வரை போவதே தெரியவில்லை.
Trailer --> https://www.youtube.com/watch?v=LVw9YdP1O-0
1 comment:
According to Stanford Medical, It's indeed the SINGLE reason women in this country live 10 years more and weigh an average of 42 pounds lighter than us.
(And realistically, it has NOTHING to do with genetics or some secret exercise and really, EVERYTHING around "HOW" they are eating.)
BTW, What I said is "HOW", not "WHAT"...
TAP this link to determine if this easy quiz can help you decipher your true weight loss possibility
Post a Comment