Thursday, December 01, 2005

கடல் புறா

சாண்டில்யனின் எழுத்துக்களை ரொம்ப படித்ததில்லை. விடலைப் பருவத்தில் குமுதத்தில் அவர் கதைகளுகளுடன் வரும் சித்திரங்களை யாரும் பார்க்கவில்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டு நைஸாகப் பார்த்து இருக்கிறேன். சித்திரங்களில் அவர் கதாநாயகிகள் எல்லாம் நல்ல வனப்புடன் இருப்பார்கள். இங்குள்ள நூலகத்தின் புண்யத்தில் அவர் எழுத்துக்களை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். சமீபத்தில் கடல் புறா படிக்க நேர்ந்தது. முதல் பாகம் மட்டும் தான் கிடைத்தது. மற்ற பாகங்கள் கிடைக்கவில்லையே என்று ரொம்ப நாளாக எடுக்காமல் இருந்தேன். இந்த முறை எடுத்துப் படித்துவிட்டேன். என்ன ஒரு விறுவிறுப்பு, காதலை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். காதல் என்பதை விட ரொமேன்ஸ் (இதுக்கு தமிழில் சரியான வார்த்தை என்ன?) என்று தான் சொல்லவேண்டும். அடாடா மனுஷன் கலக்கி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படித்த பிறகு இப்பிடி விறுவிறுப்பாக இன்னோரு நாவல் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த எனக்கு இது ரொம்பவே பிடித்தது. பொன்னியின் செல்வன் விறுவிறுப்புக்கு சற்றும் குறைந்ததல்ல கடல் புறா. ஆனால் எனக்கு நேர்ந்த கொடுமை என்னவென்றால்...பாகம் 1 மட்டும் தான் கிடைத்தது. மிச்ச பாகங்களை யாரோ புண்ணியவான் எடுத்துக்கொண்டு போய் இன்னும் திரும்பக் குடுக்கவில்லை. கதாநாயகி காஞ்சனையை நினைத்துக் கொண்டு பாயைப் பிராண்டிக் கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் விவிறுப்பாக முடித்திருப்பார். உணமையைச் சொன்னால் இதைப் படித்த அப்புறம் ஒரு காதல் கதை எழுத வேண்டும் என்று இருக்கிறது.(இதெல்லாம் ரொம்ப ஓவரோ?). உடனே இல்லை...எழுத்தை இன்னும் மெருகேற்றிக் கொண்டு.

கடல் புறா கிடைத்தால் படித்துப் பாருங்கள். Highly Recommended !

33 comments:

Premalatha said...

சாண்டில்யன் படிக்கலையா? I have read most of his works. What I like in his work is historical accuracy. He made me love history/archeaology. கடல்புறா மூணு பாகமும் படிச்சிருக்கேன். எங்க கிட்ட இருக்கான்னு தேடிப்பார்க்கிறேன்.
I will show you the places Karunaakaran visited in Google earth. There is a big temple, probably the biggest in the world, in Cambodia. I will show you that also when we meet next time.

I have yavana raani, saandilyan's master piece. I can lend you if you want.

Anonymous said...

Hello dubbukks,
Can you tell which library this is?

Anonymous said...

Kaadal kadai ezhuthanumnu aasaiyaa!!!!!!

Nichayama Vetla "Ithalluku ehoo kirukku pudichiruchu"nu Indiankku phone panni pullamburangannu ninakkiren. :-)

Onnu mattum inmai. Inthda mathiri kadai padichaa ada ennmaa kalakki irukkan; naamallum ithu maathiri ezhuthanumnu thoonum.

Koundamani Maama mathiri oru maama thaan ungha vetukku phone panni @~$thalaiya @#£$Mandaiya innu nalla buthi solla enghalaiellam kaapathunum.

Iruthaalum muyarchi pannnugha engha thaliezhuthhu padichu tholaikkirom.

பாலராஜன்கீதா said...

அன்புள்ள டுபுக்க்ஸ்,

சென்னையில் எங்கள் இல்லத்திற்கு வந்தால், கடல்புறா நாவலின் இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்களைத் தங்களுக்குப் படிக்கக் கொடுக்கிறேன். ஆனால் படித்தவுடன் திருப்பிக்கொடுத்துவிட வேண்டும். "யாரோ புண்ணியவான்" போல இருக்கக்கூடாது:-))

எங்கள் வீட்டில் எனக்கும் என் அண்ணனுக்கும் சண்டை. அவருக்குப் பிடித்தது யவன ராணி. எனக்குப்பிடித்தது கடல்புறா.

என்னதான் சாண்டில்யனின் நாவல்களை இப்போது புதுப்புது புத்தகங்களாகப் படித்தாலும், அந்தக்காலத்தில் குமுதத்தில் லதாவின் ஓவியங்களுடன் தொடர்கதைகளாக வந்ததைப் பக்கம் பக்கமாகக் கிழித்து சேகரித்துவைத்து, பிறகு பைண்ட் செய்து படிக்கும்போது இருக்கும் கிக்கே தனிதான்

Narayanan Venkitu said...

I have never read Sandilyan, though I've seen his stories in the magazines. After your review of Kadal pura..I feel like reading it now.! I think he has written a lot of stories.!! if I am right.!

Sad that you couldn't get the other volumes...good luck.

About the MATTRESS..PIRANDAL...badhram..!! badhram..!! :)

Usha said...

Thanks. Adutha courier from chennai list "kadal pura" has been included.
Romance ku sariyana Tamizh padam "sringaram" illaya?

Jeevan said...

sekerama oru love story eluthunga. Sandilyan peraiya ippathan kelvipadran.

Paavai said...

Saandilyan ezhuthai oru soft porn range kku vechu irundanga veetla periyavanga. Inime thaan padikkanum

Premalatha said...

Paavai, rombave paavam niinga.
I got to read sandilyan when I was in 4th to 5th std itself. that helped me develop my intelligence to separate between what is good and what is bad. whenever I remember sandilyan, I only remember the cleverness of the characters, the way the wars were planned, the way the country's landscape was explained and the history, and development of country through the different rulers, their influence, influenc of people from other states/countries (do you know Greeks have lot of influence in our present culture? Read Yavana raani). I do not remember anythingelse. I was lucky that people around me did not give such a bad prejudistic idea about that author. He did write very badly during his last time (Kalingaththu kaadali or something like that), but one thing I still learnt from that book was that south india, particularly Tamil nadu had a very good relationship with orissa, which is why people from irissa and we have many things in common in our cultural development.

one of my friend is doctorate in social anthropology. I learnt a lot from him. it is very interesting to learn how societies develop and how cultural mixings happen.. Sandilyan started that aarvam for me. it is bad that people look at his book with such a bad idea.

I like sandilyan better than kalki. ponniyin selvan was the only one he did not do too bad. (I have read all the five volumes of that. I have also read few other works by kalki.)

Premalatha said...

Sujatha was another author I read when I was studying fourth standard. I still remember the days I used to wait for kumudam to come and myself and my chithi used to fight for "who gets to read first".. I remembered the story by the author's name at that time itself. It was fiction.. (Kolaiyuthir kaalam, with Ganesh-Vasanth). Sujatha used a word "stiletto", I understood that it has to be a sharp object, but I did not know what exactly it was, so that word stayed in my mind and was just bothering me until I found out the meaning after I went to college!!! That kind of impacts/influence these books/stories/readings had on me.

Dubukku said...

Premalatha - I have read him before but not much. Prbly I chose a wrong one I presume. Kandippa adutha tharam Yavana Rani eduthutu vanga (or if I drop down I will collect that)

Bhaskar - Its East Ham library :)

Kumar - yooowww veetula nenaikatalum ippidiyellam eethi vittu nenaika vechiruveenga pola irukke :) Ippidi ellam miratanina ezhutha mattennu nenaicheengala? kandippa ezhuthuven :)

பாலராஜன்கீதா - உங்க அன்புக்கு ரொம்ப நன்றி.அங்க வரவரைக்கும் படிக்கலன்ன கண்டிப்பா வந்து வாங்கிக்கறேன். யவன ராணி இன்னும் படிக்கல பிரேமலதா அக்கா தரேன்னு சொல்லியிருக்காங்க வாங்கி படிச்சிட்டு சொல்லறேன். அதுவரைக்கும் உங்களோட கடல் புறா கட்சி தான். :)
ஆமா பைண்ட் புஸ்தகத்த படிக்கறதே ஒரு தனி சுகம் தான்.

ராஜ் - இல்ல இப்போதான் அவர் எழுத்துக்களைப் படிக்க ஆரம்பிச்சிறுக்கேன். முதல் நாவல் ரொம்ப பிடிக்கல (பேர் மறந்து போச்சு)

Dubukku said...

Narayanan - Ella booksum nalla irukkumnu thonala sir. Kadal pura kidaicha kandippa vaangi padichu parunga nalla irukku :)
Matress prandal - etho periyavanga sollreenga experience irundhirukkum kettukaren :)

Usha - hmmm ungalukku easy courier solliteenga hmmm
Sringaram yeah looks very close. I was searching for another one...innum nyabagam vara mattenguthu (some might argue sringaram is a sanskrit or vada mozhi)

Jeevan - haiyoo avar periya ezhuthalarnga...kidaicha padichu parunga
love story konjam porunga nalla varalana kevalama irukkum story adhan konjam satisfactionoda irukkanumnu parkaren :)

Paavai - not really..(always) but neenga nalla ponnunu vendamnu veetula nenaichirupaanga. I have read few other soft porns by leading authors (never expected them to be like that)

Dubukku said...

Premalatha - this discussion is getting very interesting ( I like this kind of topics)

Aramaba kaalam Balamithra, Ambuli Mama, Gokulam, Archies Novels spider man, irumbuk kai mayavi.

Appuram Rajesh Kumar, Pattuk kotai prabhagar, Subha

Appuram Sujataha, Balakumaran

Ippo than vahai thohaiye illama ellaraiyum padikka arambichurikken like Kalki, Devan (one of my favourites), Sandilyan, Jeyakanthan, Indhra Parthasarathy, Indhra Krishamoorthy, Devibala, Lakshmi , Sivasankari (Lakshmi and Sivasankari - both of them you can see a pattern in their subjects).

Kalki I agree Ponniyin Selvan was master piece. Sivakamiyin sabatham was also good. I didn't like Kalvanin Kaathali.

As mentioned in the post Sandilyan's Kadal Pura is nothing less compared to PS. But probly its not that voluminous (but quality is still great)

Premalatha said...

PS context-laye Sandilyan has written "mannan mahal". Can you beleive there are no heroines!! yes, indeed:) wonderful one.

Sandilyan-oda romance -m not a bad thing to read. actually, it is important that children is let to chose and let to learn everything. in fact, jeyakandan konjam soft-porn maathiri add pannuvaar (in some books only).

ennoda list

kumudam, vikatan, sujatha, sandilyan, ambuli maama, irumbuk kai mayavi

lakshmi, sivasankari, devibala, --
(not my favourite authors)

appuram, Rajesh Kumar, Pattuk kotai prabhagar, Subha

appuram Balakumaran (I can't read his books now).

marubadiyum Rajesh Kumar, Pattuk kotai prabhagar, Subha (anytime would like to read, authors)

Sivakaamiyin sabadam ippa recenta try panninen, pudikkala.

Premalatha said...

kadal puraa padichathukkappuram, I will tell you some interesting and very important history. it has global importance...:)

Premalatha said...

ramanichandran vittutteengale. :) I don't like his books.

Premalatha said...

Kural translation-la kaamathuppaal muthal kural-kku appuram time kidaikkala. first I have to compile the other two chapters. I have finished aham and puram of them you know!!!:)

பாலராஜன்கீதா said...

//சாண்டில்யண் ஒரு மொடெர்ன் கதை (மலர் மஞ்சம்)எழுதியதாக ஞாபகம். படித்திருக்கிறீர்களா.. //

"மதுமலர்" என்று நினைவு. பிறகு தொலைபேசியில் வீட்டிற்குப்பேசி உறுதி செய்கிறேன்.:-))

அன்புள்ள ப்ரேமலதா அவர்களுக்கு,

என்னுடைய லிஸ்டைக் காப்பி அடித்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன்.:-))))))

Premalatha said...

Balarajangeetha,

:-))))))))

I have also read that modern one. me too don't remember the title (ithulayum copy-ya? inthavaatti niinga!!:)))

Dubukku said...

Premalatha - Sandilyan booksellam karaichu kudichirukeenga poala :) Yavana rani marandhuratheenga eduthu vaanga (illa naan varum pothu vaangikaren)

Kural -semaya irukkum sila kuralgal anubavicchu ezhuthi iruppar (Moonavathu paal mattum thaan padichen :))) vilaka urai than romba suvarasiyama irundhuthu :) )

BalarajanGeetha - Sabaash sariyana potti..negalum seriya sandilyan rasigara irupeenga pola? great!

பாலராஜன்கீதா said...

// Sujatha used a word "stiletto", I understood that it has to be a sharp object, but I did not know what exactly it was, so that word stayed in my mind and was just bothering me until I found out the meaning after I went to college!!! //

அன்புள்ள ப்ரேமலதா அவர்களுக்கு,

பாலகுமாரனும் மெர்க்குரிப் பூக்களில் அறிவுக்கரசன் (பாவாடை) ஸ்டிலட்டோவால் கணேசனைக் குத்திக் கொல்வதையும் அதை அறிந்த கணேசனின் நண்பர் சுப்பையா அதே ஸ்டிலட்டோவால் அறிவுக்கரசனைக் கொல்வதையும் விலாவாரியாக எழுதிக் கலக்கி இருப்பார்.

அதை நீங்களும் படித்திருக்கிறீர்கள்தானே?:-))

Usha said...

Sringaram samskritama? appo sarasam??

Anonymous said...

ஏங்க டுபுக்கு, நீங்க அம்பையிலே எவிஆர்ம்வீலதானே படிச்சீங்க? அங்க நூலகத்திலே நிறைய சாண்டில்யன் புத்தகங்கள் உண்டே. அந்தப்பக்கம் சென்ற பழக்கமே இல்லையோ? சாண்டில்யன் வர்ணனைகளுக்காகவே (இடம், மற்றும் இடத்தில் இருப்பவர்கள் ;) )பலமுறை அந்த புத்தகங்களை படித்ததுண்டு.

Premalatha said...

பாலரஜன்கீதா,

மெர்க்குரிப்பூக்கள் படிக்காம பாலகுமாரன் படிச்சேன்னு சொல்லிக்கவே முடியாதே!! :)

அதுசரி,

சவுக்கடி பட்ட இடத்தை நீவிடத்தெரியா குதிரை
கண்மூடி வலியைத்தாங்கும் இதுவுமோர் சுகம்தானென்று
கதறிட மறுக்கும் குதிரை கல்லென நினைக்க வேண்டாம்
கதறிட மேலும் நகைக்கும் உலகத்தைக்க் குதிரை அறியும்

vishvanathan ஞாபகம் வருதா? :)

பாலராஜன்கீதா said...

அன்புள்ள டுபுக்ஸ் மன்னிக்கவும் கடல்புறாவில் பாலகுமாரனைப்பற்றி எழுதுவதற்காக :-))

டுபுக்ஸுக்கு நன்றிகளுடன்

அன்புள்ள ப்ரேமலதா,

தங்களுக்கு மெர்க்குரிப்பூக்களைவிட இரும்பு(க்?)குதிரைகளின் தாக்கம் அதிகமோ ?
தங்களுக்காக nth முறை மெர்க்குரிப்பூக்களை மறுபடியும் வாசித்தேன், அதில் அந்தக் கவிதை இல்லை :-(((

சாண்டில்யனின் யவனராணி, கடல்புறா போல பாலகுமாரனுக்கு மெர்க்குரிப்பூக்கள் / இரும்புக்குதிரைகளா? அவை அல்லாமல் எங்களுக்கு இன்னும் பி(டி)த்தமானவை பாலகுமாரனின் கரையோர முதலைகள், ஆனந்த வயல், அகல்யா, பயணிகள் கவனிக்கவும், பச்சை வயல் மனது, உள்ளம் கவர் கள்வன் மற்றும் பல சிறுகதைகள், இனிது இனிது காதல் இனிது போன்ற கட்டுரைகள்,.........எழுதிக்கொண்டே போகலாம்.

இயன்றால் என் மின்னஞ்சல் முகவரிக்கு தனி மடல் அனுப்பவும். balarajangeetha@yahoo.com

என்றென்றும் அன்புடன் பாலராஜன்கீதா
ராஜனின்காலை ஒடித்துவிட்டீர்களே :-(((

பாலராஜன்கீதா said...

// சாண்டில்யண் ஒரு மொடெர்ன் கதை (மலர் மஞ்சம்)எழுதியதாக ஞாபகம். படித்திருக்கிறீர்களா..
# posted by டி ராஜ்/ DRaj : December 02, 2005 1:25 AM

"மதுமலர்" என்று நினைவு. பிறகு தொலைபேசியில் வீட்டிற்குப்பேசி உறுதி செய்கிறேன்.:-))
# posted by பாலராஜன்கீதா : December 02, 2005 1:40 PM //

அன்புள்ள டி ராஜ்,

அந்த மாடர்ன் கதை பெயர் 'மதுமலர்' (தான்)
:-)))

Anonymous said...

Hello All. Don't delete please!
[url=http://acne-treatment.125mb.com/acne-treatment.htm]acne treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/proactive-acne-treatment.htm]proactive acne treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/best-acne-treatment.htm]best acne treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/acne-scar-treatment.htm]acne scar treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/natural-acne-treatment.htm]natural acne treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/acne-home-treatment.htm]acne home treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/adult-acne-treatment.htm]adult acne treatment[/url]
[url=http://acne-treatment.125mb.com/acne-treatment-product.htm]acne treatment product[/url]
[url=http://acne-treatment.125mb.com/acne-skin-care-treatment-product.htm]acne skin care treatment product[/url]
[url=http://acne-treatment.125mb.com/acne-treatment-skin-care.htm]acne treatment skin care[/url]
Thanks.

Anonymous said...

Hello All. Let's take a look. A great sollution for you.
[url=http://relagen.3webhost.info/stress-relief.htm]stress relief[/url]
[url=http://relagen.3webhost.info/stress-relief-technique.htm]stress relief technique[/url]
[url=http://relagen.3webhost.info/natural-stress-relief.htm]natural stress relief[/url]
[url=http://relagen.3webhost.info/stress-relief-tip.htm]stress relief tip[/url]
[url=http://relagen.3webhost.info/stress-relief-product.htm]stress relief product[/url]
[url=http://relagen.3webhost.info/stress-and-anxiety-relief.htm]stress and anxiety relief[/url]
[url=http://relagen.3webhost.info/link-relief-stress-suggest.htm]link relief stress suggest[/url]
[url=http://relagen.3webhost.info/herbal-stress-relief.htm]herbal stress relief[/url]
[url=http://relagen.3webhost.info/natural-stress-anxiety-relief.htm]natural stress anxiety relief[/url]
[url=http://relagen.3webhost.info/relief-stress-week-working.htm]relief stress week working[/url]
[url=http://relagen.3webhost.info/herbs-for-stress-relief.htm]herbs for stress relief[/url]
[url=http://relagen.3webhost.info/relief-sex-stress.htm]relief sex stress[/url]
[url=http://relagen.3webhost.info/stress-headache-relief.htm]stress headache relief[/url]
[url=http://relagen.3webhost.info/stress-relief-medication.htm]stress relief medication[/url]
[url=http://relagen.3webhost.info/relagen.htm]relagen[/url]
[url=http://relagen.3webhost.info/relagen-review.htm]relagen review[/url]
stress relief
stress relief technique
natural stress relief
stress relief tip
stress relief product
stress and anxiety relief
link relief stress suggest
herbal stress relief
natural stress anxiety relief
relief stress week working
herbs for stress relief
relief sex stress
stress headache relief
stress relief medication
relagen
relagen review
Don't delete this. Thanks!

Anonymous said...

Halo. You site is realy cool!
cheap [url=http://phentermine.alldating.org/phentermine.htm]phentermine[/url]
Don't delete. Help homeless children, thanks

Anonymous said...

Hello people!
buy [url=viagra.alldating.org/viagra.htm]viagra[/url]
cheap viagra online
G'night

Anonymous said...

Wazzup, thanks author.
go here [url=http://viagra-store.info/]viara[/url].
Buy http://viagra-store.info#viagra online.
Bye-bye.

janaa said...

In this books Nature discribs are Excelent! when i read a story that nature situation come arround me.suprrb!

Karsho said...

Im fan of Sandilyan.

Post a Comment

Related Posts