Wednesday, October 19, 2005

ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...9

For previous Parts -- >Part 1      Part 2     Part 3     Part 4    Part 5    Part 6    Part 7    Part 8

வறுக்காத ரவை கேட்டதும் கண்ணாடிக் கிளி ரொம்பவே குழம்பிப் போனாள்.
"ரவையா?
"ஆமாம் கேசரி செய்வார்களே அதே ரவை"
"கேசரியா?!%?"
"ஆமாம் பெண் பார்க்க வரும்போதெல்லாம் செய்வார்களே..கேசரி"
இந்த மாதிரி விழாக்களில் பையன்கள் சகட்டு மேனிக்கு கலாய்ப்பான்கள் என்பதால் நான் அவளை கலாய்க்கிறேன் என்று முடிவே கட்டிவிட்டாள்.
"இப்ப உங்களுக்கு என்ன வேண்டும்..."
"ரவை வேண்டும்..வறுக்காதது"
"..." அவளுக்கு என்னத்திற்கு ரவை வேண்டும் அதுவும் வறுக்காத ரவை வேண்டும் என்று புரியவே இல்லை. நான் அவளுக்கு கேசரி செய்ய சொல்லிக்குடுக்கலாமா இல்லை மிருதங்கம் வாசிக்கும் முறை பற்றிச் சொல்லிக்குடுக்கலாமா என்று யோசிப்பதற்குள் அடியில் பற்றிக் கொண்டால் போல் ஒருவன் ஓடிவந்தான்.
"ஹீ வான்ட்ஸ் கேசரி..ஐ டொன்ட் நோ வொய்" - கிளி அவனிடம் இங்கிலீஸில் பாட்டு பாடியது.
"கேசரியா..?"
"இல்லை கேசரி செய்யற ரவை...மிருதங்கம் வாசிக்கறதுக்கு கொஞ்சம் வறுக்காத ரவை வேணும்"
"மிருதங்கத்துக்கு ரவையா... எதுக்கு?" - நான் கடலை போடுவதற்கு என்னமோ ரவை கேட்ட மாதிரி மிரட்டினான்.

கிளி கேட்டிருந்தாலாவது விலாவாரியாக சொல்லியிருப்பேன்.. இந்தத் தடியனுக்கு சொல்லிக்குடுப்பதற்கா எங்க மாமா என்னை மிருதங்கம் படிக்க வைத்தார்..

"ரவை இல்லாட்ட மிருதங்கத்தில் சரியா சத்தம் வராது. தொட்டு தொட்டுன்னு தான் வரும்"

"ஏன் தொட்டுனக்கு தொட்டுனக்குன்னு தான் வாசிங்களேன்.." - நக்கல்

தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது. "இல்ல வறுக்காத ரவை கிடைக்குமா.." என்று பழைய பல்லவியையே பாடினேன்.

"எங்க காலேஜில் ரேஷன் கடையெலாம் இல்ல சாரி ஹீ ஹீ" கிண்டல் அடித்துவிட்டு கிளியைப் பார்த்து சிரித்தான். பக்கத்தில் கிளி இருந்தால் எல்லாப் பையன்களுக்கும் வரும் நக்கல் சின்டிரோம் தான். கிளியும் சுமாராய் சிரித்து வைத்தது.

"....உங்க காலேஜில் ஹாஸ்டல் இருக்குமே அங்கே மெஸ் என்று ஒன்று இருக்குமே அங்கே கேட்டால் கிடைக்கும் அதான் கேட்டேன்" - கிளி நான் கடலை பார்ட்டி என்ற சந்தேகம் போய் ஜென்டில்மேன் தான் என்று புரிந்து கொண்ட மாதிரி தெரிந்தது.

மேற்காலே போய் பீச்சாங்கைப் பக்கம் போன்னு வழிகாட்டிவிட்டான். கிளிக்கு மட்டும் "ரொம்ப தேங்ஸ்" என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.

போகிற வழியில் எதுக்கும் இருக்கட்டும் என்று பரதநாட்டியப் பெண்களிடமெல்லாம் வறுக்காத ரவை கிடைக்குமா என்று வறுத்துக் கொண்டே போனோம். மெஸ்ஸில் ரவை கிடைத்து வாங்கிக் கொண்டுவரும் போது அந்தப் பெண்களிடம் ரவை கிடைத்து விட்டது எங்களுக்காக கஷ்டப்பட்டுத் தேடவேண்டாமென்று திருப்பியும் ஒரு தரம் வறுத்து விட்டுப் போட்டியில் வாசித்தேன். கண்ணாடிக் கிளி நான் எப்பிடி வாசிக்கிறேன் என்று பார்த்துவிட்டு கை தட்டினாள்.

இப்படியாக நான் யூத் பெஸ்டிவல் போய்வந்துகொண்டிருந்த காலத்தில் தமிழ்நாட்டுப் பல்கலைகழங்களுக்கு இடையே நடத்தும் இன்டர் யுனிவேர்ஸிட்டி பெஸ்டிவல் நடத்தும் பொறுப்பு எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்தது. இந்த விழா எங்கள் ஊருக்கு பக்கத்திலிருக்கும் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரியில் நடப்பதாக முடிவாகியிருந்தது. மிகவும் அருமையான இடம். பொதிகை மலையில் அமைந்திருக்கும் கல்லூரி இது. மலையில் ரொம்பவும் ஏறாமல் ஆரம்பத்திலேயே இருக்கும். கல்லூரி அமைந்த இடமே ரம்மியமாய் இருக்கும்.

போட்டி காலேஜ்களுக்கிடையே இல்லாமல் பல்கலைக்கழகங்களுக்கிடையே நடக்கும் என்பதால் எங்கள் பல்கலைக்கழக குழுவை தேர்ந்தெடுப்பதற்காக எங்கள் மாவட்ட கலூரிகளுக்கிடையே போட்டி வைத்தார்கள். அவற்றில் சிறந்தவர்களை ஒரு குழுவாக எங்கள் யுனிவர்ஸிட்டி சார்பாக பங்கேற்க வைப்பார்கள்.

இந்த இடத்தில் குற்றாலம் பராசக்தி கல்லூரி பற்றி சொல்லிவிட வேண்டும். குற்றாலம் என்றால் உங்களுக்கு அருவி நியாபகத்துக்கு வந்தால் எங்க ஊர் வயசுப் பசங்களுக்கு பராசக்தி கல்லூரி தான் நியாபகம் வரும். அவ்வளவு அருமையான கல்லூரி. பெண்கள் மட்டுமே படிக்கக் கூடிய டீம்ட் யுனிவர்ஸிட்டி. அதுவும் எங்கள் கல்லூரி தான் அவர்களுக்கு அந்த வட்டாரத்திலேயே பக்கம் என்பதால் இரு கல்லூரிகளுக்குமிடையே இருக்கும் இணக்கம் அதிகம்.

தகுதிப் போட்டியே பலமாக இருந்தது. தகுதிப் போட்டி முடிந்ததும் உடனே முடிவை அறிவிக்காமல் ஊருக்குப் போய் லெட்டர் போடுகிறோம் என்கிற ரீதியில் அறிவித்தார்கள். இல்லாவிட்டால் காலேஜுகளுக்குள் சண்டை வரும் என்று நினைத்தார்கள் போலும். நானும் சரி ஆச்சு அம்புட்டுத்தான் என்று வந்துவிட்டேன். போட்டி நடப்பதற்கு முந்தின நாள் வரை தகவலே இல்லை. முந்தின நாள் குண்டு வாத்தியார் க்ளாஸ் நடக்கும் போது நடுவில் வந்து நான் செலெக்ட் ஆகியிருப்பதாகச் சொன்னார். மெடல் வாங்கிவந்தால் காலேஜுக்குப் பெருமை என்று இன்னும் எதெல்லாமோ சொன்னார். எனக்கு எங்க டீமில் வேறு யார் யார் இருப்பார்கள் என்று தயக்கம். ஒருவழியாக லிஸ்டை நைசாக லவட்டிப் பார்த்தேன்.


எங்கள் யுனிவர்ஸிட்டி குழுவில் மொத்தம் பதினாறு பேர்கள். பத்து பெண்கள் - அனைவரும் பராசக்தி கல்லூரியிலிருந்து. என்னையும் சேர்த்து ஆறு ஆணக்ள். ஐந்து பேர் திருநெல்வேலி கல்லூரிகளிலிருந்து. அட்ரா சக்கை அட்ரா சக்கை...மனம் குதூகலித்தது.


--இன்னும் ஜொள்ளுவேன்



27 comments:

Anonymous said...

அடாடா.. கடைசியில.. முடிஞ்சதும் கிளி கிட்ட.... டான்க்ஸ் சொல்லுவீங்கனு பார்த்தா... அதைப்பத்தி ஒன்னுமே இல்லையே :-(



பி.கு:
ஏற்கனவே டுபுக்கு, தமில்டுபுக்கு இப்படி ரெண்டு வலைப்பதிவு, இப்போ காமெண்ட்ஸ்-லயும் ரெண்டா :-))))

Random Access said...

idhu aanalum alavukku minjina build up irukku...kadavulukku thaan velicham...illana veetu kili padikkara mabbula konjum extra jollings a? ;)

Random Access
The search has just begun !!!

[ 'b u s p a s s' ] said...

ennanga? kannadi kili matter thrilling'a irukum nenancha, idly payyan vanthu sothapittaane...

aangalukku aangale yethiri..!!

unga jolli'thirinthathula success rate romba kammi pola...illa venuminitte unga home ministry'kkaga adakki vaasikireengalaa...?(especially after ur umtk buildup )

cheers.

Usha said...

appadaaa.....En karpanaile,pona vaarathilendu ungalai mudugile mridangathoda pathu "vandaaap" nu vayai polandunde irunda kannadi kili. Thanks for resolving the tension for me!!! Ravai- aduvum varukaada ravai - adai vechu ithanai amarkalama - vallavanukkum pullum ayudam ngaradu sariyathaan irukku. penai perumalakkaradu kelvi pattirukken - neenga varukaada ravaya varutha kadalai akkiteengale!!
Listai pathadulendu mridanga practice ku mele kiligalukku thoondil podara plans nadandirukkum polirukku.....seekiram anda kadai......

Jeevan said...

Very nice.

Anonymous said...

tamil mega serial romba pakkadeenga dubukku...vara varam suspense vechu chappunu mudikkareenga...

இராமச்சந்திரன் said...

உமா கிருஷ்ணா...உ.மு.த அவனை ஒரு கை பாத்தா....மிருதங்கம் வாசிக்க ரெண்டு கை வேணுமே. ... அவன் ஆள் எப்பிடினு தான் நம்ம உ.மு.த சொல்லிட்டாரே....("வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது"...)

Anonymous said...

Yaathirigan - கொஞ்சம் பொறுத்துக்கோங்க...இந்த வாரம் தமிழ்டுபுக்குக்கு மங்களம் பாடப் போறேன்.


Random Access- கொஞ்சம் பில்டப் ஜாஸ்தியாடுத்தோ...சாரி பதிவோட நீளத்துக்காகத் தான் அங்க நிப்பாட்டினேன்...
யோவ்...வீட்டுக்கிளி படிச்சா அடக்கி வாசிப்பாங்கய்யா...கூட சொன்னா "மரியாதை" பலமா இருக்கும்..நீங்க பேச்சுலர்ன்னு நினைக்கறேன் அதான் உங்களுக்குத் தெரியலை. அதுமட்டுமில்லை...இந்த விஷயமெல்லாம் அவங்களுக்கு ஏற்கனவே தெரியும் அதனால தான் ஓகே. இல்லாட்டா சொல்லியிருக்கவே மாட்டேன். நோ எக்ஸ்டிரா ஜொள்ளிங்கஸ்..:)

Dubukku said...

Buspass - success rate hehehe you will know in the final episode (which is not far away)

Usha -உங்க கற்பனையை நான் பூர்த்தி செஞ்சேனா தெரியாது. அந்த ரவை மேட்டர் எல்லாம் தானா நடந்ததுங்க ..எல்லாம் அவன் செயல். ஆனா நான் நல்ல பையன் (நீங்க யாரும் நான் சொன்னா நம்பமாட்டீங்க எனக்குத் தெரியும் கலிகாலம்டா).


ராஜ் - இல்ல அதுக்கப்புறம் பார்க்கல. பெயர் - நோண்டி நொங்கெடுக்காதீங்க...தெரியும் அதெல்லாம் சென்ஸார் (வூட்டுல அதெல்லாம் சொல்லலீங்கோ) போச்சு...,இத வூட்டுல படிக்கும் போது மாட்டிக்கப்போறேன்.

Dubukku said...

Uma - ஆமாங்க...நான் பயந்த சுபாவம்...அதோட ரொம்ப நல்லப் பையன். உன்னால் முடியும் தம்பில டைரக்டர் கட் சொன்னவுடனே சண்டைய நிபாட்டிடுவாங்க...இவன் கையவே கட் பண்ணிடுவானே...... அதான்

Jeevan - Romba danks thaleeva...happy that you are reading these now a days :)

anonymous - thanks for the honest feedback. Sorry...I just stopped it for post length in the previous post. Didn't mean to buildup and disappoint you. :)

Dubukku said...

Ramachandran - ஆமாம் தலீவா...மிருதங்கம் வாசிக்கனுமேன்னு பார்த்தேன்...இல்லீன்னா நடந்திருப்பதே வேற... (ஹீ ஹீ கொஞ்சம் பயமாயிருந்ததுன்னு தான் சொன்னேன்...ரொம்ப பயமாயிருந்ததுன்னு சொல்லிலீயே)

Anonymous said...

Dubukks...pls continue this Tamil Blog..I love ur Tamil ..and the way its expressed...

Jeevan said...

Yes friend, i changed to Windows XP, that's why i can read tamil.

இராமச்சந்திரன் said...

ஒன்னு தெரியுது. நம்ம ஆளு (உ.மு.த) அந்த வாட்ட சாட்டமான ஆளுக்கு பயந்தத விட வீட்டு ஆளுக்கு ரொம்ப பயப்படராப்ல.

தல...டிஸம்பர்ல கல்லிடை போறேன். ஏதாவது "போட்டு" குடுக்கணுமா ?

expertdabbler said...

>>தொட்டு நக்கறதுக்கு இதென்ன மாம்பழப் பச்சடியா.. கேட்டிருப்பேன் வேளைக்கு இருபது இட்லி நோகாம சாப்பிடுவது மாதிரி திடகாத்திரமாக இருந்ததால் கொஞ்சம் பயமாக இருந்தது

ROTFL dubuks. sameebathula naan rombo rasichu siricha line idhu...
:))

capriciously_me said...

lol dubukku...soopera poradhu kadhai...

Dubukku said...

Anonymous - romba danks. :)

Jeevan - excellent!!

Ramachanran - யோவ்...என்னம்மோ நீங்க பயப்படாத மாதிரி.. (சாரி உங்கள திருப்பி போன்ல கூப்பிடமுடியல...)
கல்லிடைல யாராவது பார்த்தீங்கன்னா கேட்டதா சொல்லுங்க..

Dubukku said...

PK - danks :)

Anonymous said...

Hi,

I have been reading your blog for the last one month... It is excellent... Particularly, I enjoyed the blog dated 4th Oct..

All the incidents are good ones and it is fun without hurting others...

When is your next posting? waiting for it...

Best Wishes!

TJ said...

Thalaiva,
Indha kadhai swarasyamo swarasyam. Ethanai dhadava venalum kekalam/padikkalam ;)

Anonymous said...

Enjoy reading your blog. I can relate to every corner in Ambai/Kallidai/ SPKC/ Parasakthi etc. I know the Hindi Maami also (If you are from Ambasamudram) I did go to her for hindi class. (Same street).
I have been reading your blog for past few months.
Write to me when you have a minute.

Muthusamy
President
Chicago Tamil Sangam

Anonymous said...

www.chicagotamilsangam.org is the website. (I know it badly needs a face lift )

Dubukku said...

Lakshmi - Hi, thanks for your comments and dropping by. done the next post today :)

tj - dankss :) hope you are settling down there? When are you flying out?

Muthusamy - aha ungalukkum Ambasamudramaa? welcome here. Glad to know you. Whats your email? Probly we might know each other?

capriciously_me said...

paatheengala...naan edho otta koodaadhennu commentina neenga enna madhikkave maateengareenga X-(
pk-ku danks...enaku mattum enna vaam? ;)

Dubukku said...

Capri - haiyoooo sorry ma...just overlooked and missed replying to you thatsit nothing intentional.(danks for pointing this out without any grudge)
Ungalukku Romba danks ...:)

Anonymous said...

muthus101atyahoo vil mail anuppavum. Athu dhaan yennoda mail id.
Anbudan
Muthusamy

Ps - Veetila yenna Kallidaikurichiyaa ? Veerapurmaa ? Varagha purama ? illai dhimmaraja samuthirama ?

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

என்ன இங்க இங்கிலிப்பீஸு கிடையாதா?

http://thamizarhal.blogspot.com ல இருந்து எட்டிப்பார்த்தேன்.

தொடர்ந்து தமிழில்தான் எழுதுற உத்தேசமா?

சரி சரி ஜமாயுங்க.

என்ன தமிழில் எழுதுற மத்தப் பதிவிலயும் ப்ளொக்கரின் பின்னூட்ட வசதியைக் கொடுத்திருங்க.

தீபாவளி வாழ்த்துகள் டுபுக்கு & தங்கமணி.

-மதி

Post a Comment

Related Posts