Tuesday, October 25, 2005

அறுசுவை

போன வாரம் ரொம்ப பிஸியாக ஓடி விட்டது. வீட்டில் மனைவிக்கு உடல் நலக் குறைவு. ஐய்யா தான் ஆல் இன் ஆல் அழகுராஜா. குழந்தை பராமரிப்புலேர்ந்து சமையல் நேரம் வரை பார்பதற்குள் எட்டு புள்ளை பெத்த மாதிரி உடம்பு பென்ட் நிமிர்ந்துவிட்டது. பொதுவாக மனைவி சில ஸ்பெஷல் பதார்த்தங்கள் செய்தால் என்னிடம் தான் உப்பு, உரப்பு சரியாக இருக்கா என்று பார்க்கச் சொல்லுவார். இதனாலேயே எனக்கு மனதில் அறுசுவை நடராஜன் என்று நினைப்பு இருப்பதாக அடிக்கடி மரியாதை செய்வார்.

ஸ்பெஷல் பதார்த்தங்களுக்கே உப்பு உரப்பு பார்க்கும் எனக்கு சாதரண சமையலா பெரிது என்று சென்னா மசாலா செய்ய இறங்கினேன். தேவையான கிரேவி தயாரானதும் உப்பு உரப்பு ஸ்டையிலா போட்டு ஸ்பூனால் எடுத்து டேஸ்ட் பார்த்தால் ஒரே உப்புக் கரிப்பாக இருந்தது. சரி கொஞ்சம் எலுமிச்சை ஜூஸ் விட்டு சரி பண்ணிவிடலாமென்று விட்டு விட்டு மீண்டும் சரி பார்த்தால் உப்பே இல்லை. அப்புறம் தான் மணடையில் உரைத்தது. உப்பு போட்ட ஸ்பூனாலே டேஸ்ட் பார்த்தேன் என்று. மீண்டும் கொஞ்சம் உப்பைப் போட்டு விட்டு சரி பார்த்தால் சரியாகி இருந்தது. டின்னில் இருந்து சென்னாவை போட்டு கொதிக்கவிட்டு பார்த்தால் மீண்டும் உப்புக் கரியாக இருந்தது. கடங்காரன் டின்னில் உப்புத் தண்ணியில் சென்னாவை வைத்திருக்கிறான். சரி மீண்டும் எலுமிச்சாபிஷேகா தான் என்று தெளித்ததில் மூடி சென்னாவில் உள்ளே விழுந்து ஜூஸ் பொல பொலவென சென்னாவில் கொட்டிவிட்டது. மூடியை சென்னாவில் தேடி எடுக்கும் போதே தெரிந்துவிட்டது என்ன லட்சணமாக இருக்குமென்று. கர்பஸ்தீகள் கூடத் தொடமாட்டார்கள் அப்பிடி ஒரு புளிப்பு. இருந்தாலும் தேவாமிர்தமாக இருக்கு என்று சொல்லிக்கொண்டே முழுங்கி வைத்தேன். "உனக்கு உடம்பு சரியில்லை சென்னா மசாலா சாப்பிடக்கூடாதென்று டாக்டர் சொல்லி இருக்கார்" - மனைவிடம் வள்ளுவர் பெயரால் பொய்மையும் வாய்மையிடத்திவிட்டு சொன்ன கையோடு மிச்சத்தை ஆபிஸுக்கு எடுத்துக் கொண்டு போய் தூரப்போட்டிருக்கவேண்டாமோ...மனுஷன் சாப்பிடுவானா இத என்று மனதிற்குள் சொல்லிவிட்டு கையை வீசிக்கொண்டு சென்று பிட்ஸா சாப்பிட்டுவிட்டேன். ஆத்துக்காரர் ஆசையோடு பண்ணிவைச்சதை டேஸ்ட் பார்த்துவிட்டு "இதெல்லாம் ஒரு பொழப்பா..." என்று நேற்றெல்லாம் ஒரே புகழாரம் தான்.

மற்றபடி தீபாவளி பார்ட்டி பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வருகிறவர்கள் எண்ணிக்கை 51 தொட்டுவிட்டது. இடத்திற்கு சொல்லியாகிவிட்டது, சாப்பாடுக்கு சொல்லியாகிவிட்டது. வேலைகள் மளமளவென்று நடந்துகொண்டிருக்கிறது. நான் சக்ரா பாலன் என்று கான்பரன்ஸ் கால் போட்டு நல்லா அரட்டை அடித்துக்கொண்டிருக்கிறோம். இது போக இதுபற்றி திருமதி.உமா கிருஷ்ணாவிடம் வேறு அரட்டை. பிரமேலதா பாலன், உமா கிருஷ்ணா என்று ஒரு கூட்டமாக வேலை செய்துகொண்டிருக்கிறோம். பாட்டு, ம்யூஸிக் , நடனம் என்று ஒரே கும்மாளமாய் இருக்கிறது. நாளைக்கு விளையாட்டுக்களைப் பற்றி சொல்கிறேன். பார்டி மூலமாகவும் இந்த ப்ளாக் மூலமாகவும் புதிதாக நிறைய நண்பர்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களைப் பற்றி இன்னொரு நாள் எழுதுகிறேன். அடுத்த ஜொள்ளித் திரிந்த காலத்தை வெள்ளிக்கிழமைக்குள் பதிந்து விடுகிறேன். அதுவரைக்கும்...

27 comments:

TJ said...

Arasiyalla idhellam saadharanam dubukku..
Kooda vera maanila kaaranunga irundha, avanga kitta 'This is how it is made at our place' appadenu naakoosama adichu vittu kilambiduvom. Paavam aathala andha kadhai udhavadhu..

Diwali kondattam kalakunga all the best!! Atlantickku andha pakkathilerndu naa kalandhukarein.

Anonymous said...

Dubukku One small question sweet pannalum oppu orappu pathu solluvingala :)

k

Anonymous said...

Ippidi edhavadhu nadantha thaan ladies-oda arumai theriyardhu ungalukkellam. My brother also your category only. "Arusuvai" case thaan. Vera onnum seiya theriyadhu. Ana, commentsku mattum onnum kuraichale illai. :)

JVC said...

dubukks, eppadi irundha neenga...

Uma Krishna said...

paravaa illai dubukks; ennai maadhiri sila ladies-se trial and error la samaikkum bodhu neenga ipdi pannadhula thappu illai. aanalum neengallam bachelor ra thaniya indha oorla kashta pattu irundheenganna samaiyal nalla therinju irukkum.

Uma Krishna said...

uma krishna vodu arattai adithu kondu irukkiren nu solli irundhale podhum; naan vera enna seiyaren adhai thavira?

Premalatha said...

சமயல்கூட தெரியாம என்னா நீங்கள்லாம் ஒரு ஆம்பிளையா? அதுவும், சன்னா வைக்கத்தெரியாதா? அதிலயும் டின் சன்னா !!!! ஆம்பிளை வர்க்கதுக்கே அவமானம்.

Random Access said...

suvaiyana anubhavam :) Diwali ai nandraga nanbargaludan magizhavum..naan ingu pattasu kooda kolutha iyalaamal thavithu kondirukkiren :(

Random Access
The search has just begun !!!

Usha said...

sari samatha vatha kozhambu vedaikai karinnu easy ah try panni manathai kaapathikakoodada...arambame channava??? aanalum neenga innocent daan, illena pannina oozhalai marika theriyamal apapdiye vechuttu poi ippadee maatipeengala!!
naane kekanumnu irunden, jolli thirindadai ambonnu vitootu poittengalennu...ok, time till friday then!!

Dubukku said...

TJ - amam TJ very true. theriyatta kadhai vidlaam:)

Anonymous - Sweet pannum pothu sweet podhumaanu parthu solluven ;P

Kirithika - ethana naala kaathukittu irundheeenga.....brothera sollara maadhiri enna kalasina maadhiri irukke :)

Dubukku said...

jvc - chhp...enna pannarathu JVC...nakku keka matenguthe..

Uma Krishna - very true bachelora irundha samayal trial n error curve mudinjirukkum :) haiyaa neengalavathu support pannereengale...enna

Dubukku said...

சமயல்கூட தெரியாம என்னா நீங்கள்லாம் ஒரு ஆம்பிளையா? - Yeen samaikath theriyaata pombalaiya thaan irukanuma enna? :P


Random - feel so sorry. Inga anniku aabees undu. So sayangalam thaan diwali.

Dubukku said...

Usha - vatha kuzhambum, vendaikai kariyum easyya enna? will try those.
Amanga...naan romba aiyoo pavam ga....romba nalla paiyanga...

(ungalukkagave friday kulla JTK post panna try pannaren)

Uma Krishna said...

support pannannu illai i appreciate your intention to help your wife when she is not well. that is important rather than what you cook and how the taste is. enakku therinju neraiya veetla aambilainga lounge la ukkandhutte vettiyaa pozhudhai pokkuvaangale ozhiya kaai kooda cut panni thara maattaanga. andha vagaiyila neenga better. i'm so lucky krishna is also very good in that aspect.

Premalatha said...

Yeen samaikath theriyaata pombalaiya thaan irukanuma enna? :P

That is our birth right:D

இராமச்சந்திரன் said...

என்னப்பா...ஏதாவது ஒரு கமென்ட் ஸிஸ்டம் வைங்கப்பா.....மாங்கு...மாங்குனு தமிழ் டைப் அடிச்சு போஸ்ட் பண்ணி (அப்போ பழைய ஸிஸ்டம் லின்க் தான் எனாபிள்டா இருந்தது) கொஞ்ச நேரம் கழிச்சு பாத்தா ஒண்ணும் இல்லை.

எனிவே...டுபுக்ஸ்...சமையல் ஒன்னும் பெரிய விஷயம் இல்லை....பொதுவா நம்ம சொதப்பறது உப்பு & காரத்துலதான். இதுல உப்பு மொதல்ல கம்மியா போட்டு அப்புறம் யாருக்கு எப்படி தேவையோ அவங்க சாப்பிடும் போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். காரமும் மொதல்ல கம்மியா ஆரம்பிங்க..ஒரு 4 அல்லது 5 தடவைக்கு அப்புறம் கைப்பக்குவம் வந்துரும். ஒரு முக்கியமான விஷயம் ..."பீர்" குடிச்சுட்டு உப்பு & காரம் செக் பண்ணாதீங்க. சரியா தெரியாது.

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு 11 வருஷமா நாந்தான் சமையல் பண்ணி சாப்பிடூவேன். நல்லா சமைப்பேன். ப்ரெண்ட்ஸ்க்கும் என் சமையல் ரொம்ப புடிக்கும். கல்யாணத்துக்கு அப்புறம் ஆத்துக்காரி என்னை விட நல்லா சமைக்கறதுனால...நான் எஸ்கேப் from kitchen. (friends-க்கெல்லாம் சமைச்சிருக்கீங்க...எனக்கு ஒரு நாள் ரெஸ்டு குடுத்து நீங்க சமைக்க கூடாதானு புகார் வரும்...அவங்களுக்கு குற்றம் கண்டுபிடிச்சே பழகினதுனால...நான் ஜூட் தான்...)

பி.கு: கேன் சென்னா பண்ண தெரியாதது கொஞ்சம் ஓவர் தான்....

[ 'b u s p a s s' ] said...

dubbuks,

naanellam ungala vida konjam expert, avlo variety seivvaen. ore channa kuruma've rendu vaati panninaen'na different'a varumakkum. taste paththi theriyaathu, pakkathu veetla saaptruvaen.

Narayanan Venkitu said...

Nalla kadhai ungal Chenna Kadhai.!! Paavam adjust panna romba kashtap pattu irukkireergal.!!

Manaivi udambu viravil gunamaga en prarthanaigal?

Deepavalai..kondattangalukku en vazhththukkal.!

Anonymous said...

inna maaa, Velli kilamai aayaachu innum post kanome ??? Seekiram sonna varrthya kaapathi post podavum. ya know that we from Ambasamudram keep our word ;-)

Jeevan said...

arumaiyana samaiyal, samaiyal na athu Dubukku samaiyal than bash bash.

Random Access said...

Neenga abscond aaradha paatha veetla unga purse a gaali pannirpaanga pola irukku! hihihi, ensoy!

Aamam, im still lucky, im still a ondi kattai!

Random Access
The search has just begun !!!

Dubukku said...

Uma Krishna - yes I understand. To be honest my wife takes care of everything in the kitchen when she is ok and never lets me in for the mess I create :)

Premalatha - yeah I know :)

Ramachandran - யோவ் நீங்க டைப் அடிச்சது TamiDubbukku.blogspotல் கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கும் சமைக்கத் தெரியும். இப்போ எல்லாம் டச் விட்டுப் போச்சு ! அதென்ன கேன்சென்னான்னா ஓவர். கேன்ல வெறும்ன வெந்து தானே வைச்சுருப்பான் இதுனால சமைக்கிறது எப்பிடி ஈ.ஸியாகும்?

Dubukku said...

buspass - semaya kalakareenga? :P
Narayanan - romba danks for dropping by. Amam romba kashtama thaan irukku. But adjust panna try pannikitu irukken :) Diwali party romba nalla irundhuthu

Muthusamy - konjam work overloaad ayiruchu baa...adhan mudiyala...sorry. (Still Ambasamudram karan nippanlaa)

Jeevan - hehe neenga saapidathunala solreenga

Dubukku said...

Random - innum illa :) konjam work jaasthiyaadichu athan mudiyala..

இராமச்சந்திரன் said...

கேன் சென்னா ரொம்ப ஈ.ஸினு சொல்ல வந்தேன். உப்பு போட கூடாது. ப்ரிஸர்வேஷனுக்காக அதுல ஏற்கனவே உப்பு இருக்கும். ஒரு கடாய்ல கேன் சென்னாவ போட்டு...அதுல கொஞ்சம் மஞ்சள் பொடி, (தேவையானால்) காரபொடி, தக்காளி துண்டுகள் தேவையான அளவு, வெங்காயம், கேப்ஸிகம் நறுக்கி போட்டு அடி பிடிக்காம கிளறி விட்டுக்கொண்டே இருக்கணும். தண்ணீர் கேன்ல ஏற்கனவே இருக்கறதுனால தனியா தேவையில்லை. நல்ல கொதி வந்து க்ரேவி மாதிரி ஆனப்புறம் ...இறக்கிவிடலாம். அவ்ளோதான் மேட்டர். சப்பாத்தி பரோட்டாவுக்கு நல்லா இருக்கும்.

malaikootaiyilirundhusuresh said...

Miga pramadhamaga ezhudhi irruka bhaa. Namma baazhaiyala sollanumna, chumma keecitta bhaa...Azhagana, pechu nadailla, nagaichuvaiyum thinuchi..solla vandhadhai miga arumayaga solli irrukeenga.
I am facinated the way you write tanglish(both ways of tamizh in engligh and english words in tamizh) are GREAT!.
Could not stop laughing in the office, probably i wud be isolated hereafter from others.
Edhulla oru Ulagarindha unnmai ennana, mathaavanooda vedhanayum vaitherichallum thaan mattaravarukku sirripaa irrukum(including me today).
Great keep it up. Anyway, wondering who I am, I am Suresh,friend of Uma Krishna who came to the deepavali function.

Dubukku said...

Ramchandran - Mukkiyamana matter a vittuteengale...Channa Masala powder or garam masala powder :)

Suresh - Hi, how are you? Thanks for dropping by and taking time to registering your comments. :) Stay in touch :)

Post a Comment

Related Posts