Friday, January 25, 2013

விஸ்வரூபம்

மு.கு - இது முழுக்க முழுக்க பட விமர்சனம் அல்ல. விமர்சனம் ஒரு பகுதி அவ்வளவே. நீங்கள் இந்தப் படத்தின் ட்ரைலரைப் பார்த்திருப்பீர்களயானால், அதை வைத்து விஸ்வரூபம் படத்தின் சில அடிப்படை கதை கட்டமைப்புகளை  யூகித்திருப்பீர்களேயானால்  இந்தப் பதிவை தாராளமாகப் படிக்கலாம். இல்லை விஸ்வரூபம் - விஷாலா விஜயான்னு கேட்கும் பச்சைக் குழந்தையாக இருந்தால் ப்ளீஸ் அப்படியே அப்பீட்டு, ஏன்னா இந்தப் படம் தமிழ்ப் படம், இதில் கமல் நடித்திருக்கிறார் போன்ற பல ஸ்பாயிலர்கள் இருக்கின்றன.

படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் இந்தப் படத்தின் மீதான தடை பற்றி. படம் பார்ப்பதற்கு முன்பாகவே, ஒரு கமல் ரசிகனாக அல்ல- ஒரு திரைப்பட ரசிகனாய் எனக்கு இதில் சுத்தமாய் உடன்பாடு இல்லை. படம் பார்த்த பிறகு கேட்கவே வேண்டாம். என்னைப் பொருத்தவரை படத்தில் முஸ்லீம்களையோ இஸ்லாமையோ குறை சொல்வது மாதிரி காட்சிகள் எதுவும் இல்லை. படத்தின் டைட்டில் முதல் அரபிக் மொழி மாதிரி டிசைன் செய்திருக்கிறார்களே என்று தோன்றலாம். கதை ஆப்கானிஸ்தானில் ஆரம்பிப்பது மாதிரி இருக்கிறது. ஆப்கானிஸ்தான்காரர்களையெல்லாம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டில் லுங்கியுடன் அலைவது மாதிரி காட்டமுடியாது அல்லவா அது போன்று தான் படம் நெடுகவே தவிர, எதையும் திணித்ததாய் தோன்றவில்லை. ஆட்சேபம் தெரிவிக்கும் குழுவினரும் நண்பர்களும் ஒரு முறை படத்தைப் பார்த்தால் இது உறுதியாகி, இதற்காகவா இவ்வளவு சவுண்டு விட்டோம் என்று நினைக்கத் தோன்றும்.

அமெரிக்காவையும் இன்ன பிற நாடுகளையும், இஸ்லாம், கிறுத்துவம் உட்பட பல மதங்களையும் வறுத்து, துவைத்து தொங்கப் போடும் ஆவணப் படங்களும், திரைப்படங்களும் ஆயிரம் இருக்கின்றன. சொல்வது அவர்கள் படைப்புரிமை, எடுத்துக் கொள்வதும் கொள்ளாததும் நமதுரிமை என்ற கோட்பாடில் மற்ற நாடுகளில் இதை freedom of experssionஆகவே எடுத்துக் கொள்கிறார்கள். இந்த freedom of expression- க்கும் ஒரு வரையறுக்கப் படாத ஒரு நாகரிக எல்லை இருக்கிறது. அதைத் தாண்டும் போது பார்ப்பவர்களுக்கான வயதை நிர்ணயம் செய்வதுடன், சொல்லப்படுவது ஆட்சேபமாய் இருக்கும் பட்சத்தில் அதையும் மட்டுறுத்துவதற்காகத் தான் சென்சார் போர்ட் இருக்கிறது. திரும்பவும் சொல்கிறேன் இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய அளவுக்கெல்லாம் காட்சிகளே இல்லை. மாறாக நான் வுட்டாலக்கடி விடுவதாக நீங்கள் நினைத்தாலும் சரி, படத்தைப் பார்த்து எனக்கு சில இஸ்லாமிய பழக்கங்களின் மீது மதிப்புத் தான் வந்தது. தமிழ் சினிமாவில் சிறுவர் சிறுமியர் பார்க்கும் காட்சிகளில் அவர்கள் வயதுக்குத் தகாத தொப்புளும் மாரும் தெரிய உடையோடு வெளிப்படையாய் புணரும் காட்சிகளுக்கு இருக்கும் tolerance கூட freedom of expression க்கு இல்லை என்பது மிக வருத்தமான விஷயம். இப்படியே போனால் அப்புறம் தமிழ் திரைக்காவியங்களில் அல்கொய்தாவுக்கு தலைவராக ஐயரை அப்பாயிண்ட் செய்து அக்னிஹோத்ரம் தான் வளர்க்க வேண்டி வரும். எப்படியோ வாரயிறுதியில் பார்க்கலாம் என்று ஆபிஸ் விட்டு வரும் வழியில் முடி வெட்டிக் கொண்டிருந்தவனை, இன்னும் ஒரு மணி நேரத்தில் படம் என்று தெரியவந்து புடுங்கினது போதும் என்று அரக்கப் பரக்க முதல் நாளே பார்க்க வைத்த பெருமை இந்த சர்ச்சைக்கே சேரும்.

சரி நம்ம படத்துக்கு வருவோம்.இந்த தடை சர்சை காரணங்களால் ஒரு கமல் ரசிகனாய் படம் எப்படியிருந்தாலும் சூப்பர் என்று தான் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது கமல் ரசிகனாய் எனக்கே ஒவ்வாது. படத்தின் ப்ரொடெக்க்ஷன் வேல்யூ சும்மா அதிரடி. அதாவது செய்த செலவுக்கு கொடுத்திருக்கும் பிரமாண்டம் அருமை, ஹாலிவுட் ரகம். சங்கருக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு தமிழுக்கு புதிய உச்சம். ஆஃப்கானிஸ்தான் குகைகளாகட்டும், அடிச்சு தூள் கிளப்பும் சண்டைக் காட்சிகளாகட்டும் அவற்றில் செய்திருக்கும் சி.ஜி.ஐயாகட்டும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள். ஒரு டைரக்டராக, ப்ரொடியூசராக கமல் இந்த இடங்களில் ஜொலிக்கிறார்.  படம் ஆரம்பித்து முதல் அரை மணி நேரம் படம் படு விறுவிறுப்பாய் போகிறது. கமலின் பெரிய பலவீனமே அவரின் பலவீனம் தெரியாமல் இருப்பது தான். அவரின் வசனங்கள் பல காமெடி தருணங்களில் கிச்சு கிச்சு மூட்டுவதாய் நினைத்து எழுதப்பட்டிருக்கிறது ஆனால் எனக்கு கொஞசம் கடியாக இருந்தது. கம்யூனிகேஷன் என்பது காம்ப்ளிகேட்டடாகத் தான் இருக்கவேண்டும் என்பது இல்லை. சொல்ல வந்த விஷயத்தை என்னதான் ஜார்கனெல்லாம் போட்டாலும், தெளிவாகச் சொல்லும் பட்சத்தில் "என்னம்மா சொல்லியிருக்கார்பா  கலக்கிட்டார் இல்ல" என்று சொல்லவைக்கும். "அண்ணன் என்னண்ணே சொல்ல வராரு" என்று பக்கத்திலிருப்பவரை பிராண்ட வைக்காது. படத்தில் பல இடங்களில் சொல்வது புரிந்தாலும் என்ன/எதுக்கு சொல்ல வருகிறார்கள் என்று யோசிக்க வேண்டியிருந்தது.

ராக்கெட் லாஞ்சர் ஹெலிகாப்டர் சகிதம் போடும் சண்டைக் காட்சிகள் கலக்கலாய் எடுக்கப் பட்டிருந்தாலும் அவற்றை சுற்றி வரும் திரைக்கதை சில இடங்களில் பலத்த தொய்வுடன் பின்னப் பட்டிருக்கிறது.ஆன்டிரியா படத்தில் எதுக்கு என்றே தெரியவில்லை. ரெண்டு ஹீரோயின் இருந்தா க்ளாமரா இருக்கும்ன்னு நினைச்சுட்டாரோ தலை? பூஜா குமார் நாக்கைச் சுழட்டி சுழட்டி பேசும் NRI ஐயர் தமிழ் சரியான கொடுமை. பல இடங்களில் ப்ரேக் போடுகிறது. இந்த இடங்களில் ஒரு எழுத்தாளராய், டைரக்ட்டராய் கமல் தவறிவிட்டார். இடைவேளைக்கு முன்னால் கொஞ்சம் கொட்டாவி வருகிறது. நல்ல திரைப் பின்னணி இசை என்பது பல இடங்களில் மௌனமாகவே வரும் என்பது ஒத்துக் கொள்ள வேண்டிய விஷயம் தான். ஆனால் இந்தப் படத்தில் ரொம்ப ஓவராகவே மௌனமாக இருந்து பல காட்சிக்குத் தர வேண்டிய டெம்போவை கொடுக்கத் தவறியிருக்கிறது என்று நினைக்கிறேன்.இரண்டாம் பாதியில் கொஞ்சம் திரும்ப உட்கார வைக்கிறது.


எடிட்டிங்கில் கமல் நிறைய மூக்கை நுழைத்திருப்பார் என்பது எனது திண்ணமான எண்ணம். கொஞ்சம் கத்தரி போட்டு டைட்டாக திரைக்கதையை நகர்த்தியிருந்தால் குருதிப் புனலை விட பத்து மடங்கு சூப்பர் ஆக்‌ஷன் படமாய் வந்து பிச்சு உதறியிருக்கும். ஆனால் திரைக்கதை தொய்வினால் அந்த அளவிற்கு இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.

இந்த குறைகள் எல்லாம் இருந்தாலும் இந்த பிரமாண்டமான, ஹாலிவுட்டுக்கு நிகரான முயற்சிக்கு கமலுக்கு ஒரு ஷொட்டு. தமிழ் சினிமா வரவேற்க வேண்டிய முயற்சி.

11 comments:

இலவசக்கொத்தனார் said...

http://www.tamiloviam.com/site/?p=2546

வொய் திஸ் காப்பின்னு கேட்டு இருப்பேன். ஆனா மொதல் அரை மணி நேரம் விறுவிறுப்புன்னு சொல்லி காப்பி இல்லைன்னு நிரூபிச்சுட்ட!!

அடுத்த, இந்த எழுத்துப்பிழைகளை ஒரு தடவை படிச்சு சரி செய்யணும் கண்ணா!!

தினேஷ் ராம் said...

//ஆன்டிரியா படத்தில் எதுக்கு என்றே தெரியவில்லை.//

விஸ்வரூபம் - 2ல் முக்கியமான கதாபாத்திரம் 'ஆன்டிரியா' தான் ;)

#படம் இன்னும் முடியலண்ணே!! ;)

Ramya Bala said...

Cha, enna thaan irundhalum correcta elutharomnu therinjalum..how can u vittu kuduthufy kamal ya....

Anonymous said...

very interesting reading your writtings

Madhuram said...

I stopped checking for updates here because everytime I'll return disappointed. Sari neenga dhaan Kamaloda perriiyya visiri aache kandippa review pottirupeenga nu vandhen. Sari inimel Deepavaliku deepavali kooda post kidaiyadhu Kamaloda adutha padam varumbodhu dhaan adutha postunnu ninaichu scroll down panna, varisaiya post pannirukkenga! Unga thalaivar madhiriye unpredictable! Happy New Year to you and your family Anne!

ராம்ஜி_யாஹூ said...

thanks eager to watch

Madhu Ramanujam said...

The technical aspects of the stunts are a million times better when compared to any other movies out of our place. Good to see that people are starting to value these technicalities. And yes, I totally agree with the fact that they could have tried to make the movie more easy to comprehend for the regular Joe. Especially the scene where the suicide bomber tries to enjoy the swing...Most people didn't seem to get it and were calling him a lunatic right in the movie hall and I was wondering why in the world these guys came to watch this movie.

And as an extra, a couple of 5 year olds continuously whining in the row behind me....dear lord. I don't understand how come they bring such young kids into a movie hall to watch movies like this without any kind of regard for the U/A certification of the movie. The worse part is that the father of those kids got extremely pissed off at me for asking him to keep their kids quite!

Kavitha said...

Honest review!

மனம் திறந்து ...(மதி) said...

Considering what Kamal has achieved with this film, on technical grounds: This is one small step for Kamal, but one giant leap for Tamil Cinema.:-) :-) :-)

Considering what TN Govt. has achieved with this ban, on a long term basis: This is one small misstep for a state Govt., but one giant blow for Freedom of Expression and Communal Harmony. :-( :-( :-(

Dubukku said...

கொத்ஸ் - நல்ல வேளை தப்பிச்சேன் :) எப்படி நீயும் இதே இதே? :)

சாம்ராஜ்ய ப்ரியன் - ஹா ஹா ...இனிமே ரெண்டாவது பாகம் தலைவர் எடுப்பாரு :)))

Ramya Bala- இதுதாங்க நம்ம ஆட்களுக்கே உண்டான சிறப்பு. All die hard fans of Kamal would the first to critisize naa..unlike...you know which க்ரூப் ;)

அனானி - மிக்க நன்றிங்கோவ்...அப்படியே உங்க பெயரையும் போட்டிருக்கலாமே

மதுரம் - உங்களுக்கும் குடும்பத்துக்கும் புத்தாண்டு வாழ்துகள். //Unga thalaivar madhiriye unpredictable/// - இத காம்ப்ளிமெண்டாவே எடுத்துக்கறேன் :))) டாங்க்ஸ்

ராம்ஜி - பார்த்தாச்சா :)

மது - கரெக்ட் கொஞ்சம் எடிட்டிங் இழுத்துப் பிடிச்சிருந்தா படம் பட்டாசா இருந்திருக்கும். பின்னாடி குழந்தையின் அழுகை வேறா. எனக்கு நம்மூர் ஆட்கள் கிட்ட பிடிக்காத விஷயம் இது ஒன்னு தான். இதே இங்கிலீஷ் படமாயிருந்தா எங்க ஊர்ல வெளிய போகச் சொல்லியிருப்பாங்க. இது குழந்தைங்க குற்றம் இல்லை சின்னக் குழந்தைகளை படத்துக்கு கூட்டி வரும் பெற்றோரின் பொறுப்பற்ற தன்மை. அழுதா வெளிய கூட கூட்டிப் போக மாட்டாங்க. ஸ்ப்ப்பா அடுத்தவஙகளும் காசு குடுத்து தானே பார்க்கிறாங்க அவங்க நிம்மதியா பார்க்க வேண்டாமான்னு நினைக்கவே மாட்டாங்க. Only happens in desi movies and with desi makkals.

பொயட்ரி - நன்றிங்கோவ்

மதி - கரீக்ட்டா சொன்னீங்க இப்போ பாருங்க என்ன நடக்குதுன்னு. சில பல சுயலாபங்களுக்கான அரசியலாகிடிச்சேன்னு வருத்தமா இருக்கு

Unknown said...

முஸ்லிம்கள் இந்த படத்தை விளம்பரப் படுத்தவில்லை என்றால் "உண்மையாலும்" கமல்ஹாசன் தன வீட்டை பறிகொடுத்து விட்டு அமெரிக்காவில் தஞ்சம் அடைந்து இருப்பார்

படம் அவ்வளவு அபத்தம் பாவம் தமிழக மக்கள் ஏமாற போகின்றார்கள்

Post a Comment

Related Posts