Tuesday, February 05, 2013

மினி ஸ்கர்ட்

"சே அவள் பக்கத்தில் உட்கார்ந்திருக்க மாட்டேனா" -  நான் என்னையே சபித்துக் கொண்டிருந்தேன். வேலைக்குப் போக அப்படி ஒன்றும் அவசரமில்லை. அது என்னமோ தெரியவில்லை, எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அந்த பாதாள ரயில் கிளம்புவதற்கு நிறைய நேரம் இருந்தது. எப்போதும் விண்டோ சீட் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டே வருவேன், இன்றும் அப்படித் தான். ஒவ்வொரு சீட்டாய் பார்த்துக் கொண்டே வரும் போது - ஒரு சீட்டில் அவள் மட்டும் இருந்தாள். மிக அழகாய் இருந்தாள். அதவிட மிக அழகாய் ஒரு மினி ஸ்கர்ட் அணிந்து கொண்டிருந்தாள். கால் மேல் கால் போட்டுக் கொண்டு பதவிசாய் அமர்ந்திருந்தாள். ஸ்கர்ட்டின் நடுவில் இருந்த பிளவு அவள் தொடையை பளீரென்று டாலடித்துக் கொண்டிருந்தது. யானை தந்தத்தின் நிறம் அவள் மேனி. அவ்வளவு தான் பார்த்தேன். இத்தனையும் மீறி அனிச்சையாய் அவளுக்கு முந்தின சீட்டில் போய் உட்கார்ந்துவிட்டேன். சே...அவளுக்குப் பக்கத்து சீட் காலியாய் தான் இருந்தது. படெக்கென்று அங்கு உட்கார்ந்திருக்க மாட்டேனா. சொன்னேனே எப்போதும் இப்படித் தான் ஆகும் எனக்கு. அவளுக்கும் என்னைப் போல விண்டோ சீட் பிடிக்கும் போல.

"மே ஐ ஹாவ் யுவர் டிக்கெட் ப்ளீஸ்" என்று டிக்கெட் பரிசோதகர் கேட்ட போது நான் அவளைப் பற்றிய நினைவுகளிலிருந்தேன். சட்டென்று ஒரு ஐடியா தோன்றியது. அவர் அவளிடம் டிக்கெட் சரிபார்த்துக் கொண்டிருந்த போது "ட்ரெயின் எத்தனை மணிக்கு ரெட்டிங் போய்ச் சேரும்?" என்று கேட்பது மாதிரி அவளைப் பார்க்க திரும்பினேன். பிரம்மஹத்தி அவளை முக்காலேவாசி மறைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தான். எனக்கு என்று வந்து சேர்வார்களே. திரும்பி விட்டேன். ஆனாலும் கிடைத்த நூலிழை நேரத்தில் பார்த்ததை மனதில் ஃபோட்டோ எடுத்து விட்டேன். தொடையில்  வைத்திருந்த கையும், செதுக்கினாற் போன்ற காலும் மட்டுமே தெரிந்தது. டார்க் மெருன் கலர் ஸ்கர்ட் அவள் நிறத்தை தூக்கலாக காட்டியது. பாந்தமாய் நெயில் பாலீஷ் போட்டிருந்தாள். அதில் இலை போல் ஏர் பிர்ஷ் டிசைன். அவள் பக்கத்திலிருந்த சீட் காலியாய் தான் இருந்தது. அதில் ஸ்கர்டுக்கு மேட்சிங்காய் ஹாரட்ஸ் ஹாண்ட்பேக் வைத்திருந்தாள்.

மோகன சிலை என்பார்களே அது மாதிரி இருந்தாள். ஆள் பாதி ஆடை பாதி. இன்னும் முகத்தை மட்டும் சரியாய் பார்க்க முடியவில்லை. பேசாமல் இடம் மாறி அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று தோன்றியது. ரொம்ப கூட்டமில்லாமல் ஏகப்பட்ட சீட் காலியாய் இருக்கும் போது அவள் பக்கத்தில் உட்கார்ந்தால் ஏதாவது தப்பாய் நினைத்துக் கொள்வாளோ? எழுந்து யாரையோ எதிர்பார்த்து பார்ப்பது மாதிரி பின்னால் பார்த்தேன். தலையை திருப்பும் போது மீண்டும் அவளைப் பார்த்தேன். முகம் ரொம்பவே அழகாய் இருந்தது. நேர்த்தியாய் ஐபிரோஸை செதுக்கியிருந்தாள். மாசு மருவில்லாத பளீரென்ற முகம். அழகான உதட்டில் உறுத்தாத கலரில் லிப்ஸ்டிக். தோள் வரை பாப் கட்டில் முடி. ஏதோ ஒரு சினிமா நடிகையை நினைவு படுத்தினாள். ரொம்ப ரொம்ப ரொம்பவே அழகாய் இருந்தாள். அவள் ஸ்கர்ட்டும் அந்த பளீரும் எனக்கு கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது.

கண்ணை மூடிக்கொண்டு திரும்பவும் அவளை நினைத்துப் பார்த்தேன். திடீரென்று யாரோ சன்னமாய் தொடுவது போலிருந்தது. திரும்பினால் உதட்டில் ஒரு சங்கடமான புன்னகையுடன் அவள் தான். " சாரி தூங்கும் போது எழுப்பிவிட்டேனா... மேலே..." என்று விரலைக் காட்டினாள். என் சீட்டுக்கு மேலே யாரோ வைத்திருந்த ஹோல்டால் பையில் பால்புட்டியிலிருந்து லேசாக பால் ஒழுகிக் கொண்டிருந்தது. பால் ஒழுகி தரையில் தான் சொட்டிக் கொண்டிருந்தது. கவனமாய் இல்லாவிட்டால் என் மேல் விழுந்திருக்கும். அதை சுட்டிக்காட்டத் தான் கூப்பிட்டிருக்கிறாள்.

"ரொம்ப தேங்கஸ்" - கொஞ்சம் கூடுதல் நட்புடன் சொன்னேன். இதை விட்டால் சான்ஸ் கிடைக்காது இதான் சாக்கு என்று படக்கென்று எழுந்து கொண்டேன். என் பையையும் எடுத்துக் கொண்டு நின்று கொண்டே வேறு சீட் தேடுவது மாதிரி பார்வையை விட்டு அவளிடம் வந்து நிறுத்தினேன்.

"இஃப் யூ டோண்ட் மைண்ட், நான் இங்க உங்க கிட்ட உட்காரலாமா"

"ஓ யெஸ், நோ இஷ்யூஸ் அட் ஆல்" அவளும் மிக எளிதாய் ஒத்துக் கொண்டாள்.

எனக்குப் படபடப்பாய் இருந்தது. உட்காரும் போது எங்கள் தோள்கள் லேசாய் உரசிக் கொண்டன. அவள் அணிந்திருந்த பெர்ஃப்யூம் மயக்கியது. அவள் கண்களில் சினேகமான ஒரு புன்னகை இருந்தது.

அவளே அறிமுகப்படுத்திக் கொண்டாள் "என் பெயர் நேத்ரா. அட்வர்டைசிங் எக்ஸிக்யூட்டிவாய் இருக்கிறேன்..தற்போது வேலை விஷயமாய் போய்க்கொண்டிருக்கிறேன்...நீங்க..?." -

அவளின் தன்மையான பேச்சு எனக்கு ஆறுதலாய் இருந்தது. "என் பெயர் ஸ்வப்னா...நான் சாஃப்ட்வேரில் இருக்கிறேன். ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே. நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க ஸ்கர்ட்டும் ஆக்சசரீஸும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. எங்க வாங்கினீங்க...? எப்படி கேக்கிறதுன்னு தெரியாம இவ்வளவு நேரம் முழிச்சிக்கிட்டு இருந்தேன்...."

36 comments:

Nat Sriram said...
This comment has been removed by the author.
Nat Sriram said...

வாவ்..கதை மேலே எவ்ளோ ட்விஸ்ட்ஸ்..;)

bandhu said...

எப்படா ட்விஸ்ட் வரும்னு எதிர்பார்த்துகிட்டே படிக்கறது ஒரு சுகம். நீங்கள் ஏமாற்றவில்லை!

Akhila said...

Superb!!!!

ஹாலிவுட்ரசிகன் said...

நான் தான் ரொம்ப எதிர்ப்பார்த்துட்டேன் போலயிருக்கு.. awww :)

அமர பாரதி said...

Oh fire party.

Unknown said...

வர்ணணையைப் பார்த்தால் புனைவு மாதிரி தெரியவில்லை கிளைமாக்ஸ்சில் நல்ல புள்ளையாகிட்டிங்க...!

வல்லிசிம்ஹன் said...

அதானே நம்ம டுபுக்கு நல்ல பிள்ளையாச்சே. கண் கண்டதைக் காட்சியாக வர்ணித்தாலும் தடுமாற மட்டாரேன்னு நினைச்சேன்:)

நல்லா முறுக்கித் துவைத்து உலர வைத்துவிட்டீர்கள். சுபர்ப் நரேஷன் அண்ட் அ ஃபண்டாஸ்டிக் ட்விஸ்ட்.

சேக்காளி said...

//மோகன சிலை என்பார்களே அது மாதிரி இருந்தாள். ஆள் பாதி ஆடை பாதி. இன்னும் முகத்தை மட்டும் சரியாய் பார்க்க முடியவில்லை. பேசாமல் இடம் மாறி அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளலாமா என்று தோன்றியது. ரொம்ப கூட்டமில்லாமல் ஏகப்பட்ட சீட் காலியாய் இருக்கும் போது அவள் பக்கத்தில் உட்கார்ந்தால் ஏதாவது தப்பாய் நினைத்துக் கொள்வாளோ? எழுந்து யாரையோ எதிர்பார்த்து பார்ப்பது மாதிரி பின்னால் பார்த்தேன். தலையை திருப்பும் போது மீண்டும் அவளைப் பார்த்தேன். முகம் ரொம்பவே அழகாய் இருந்தது. நேர்த்தியாய் ஐபிரோஸை செதுக்கியிருந்தாள். மாசு மருவில்லாத பளீரென்ற முகம். அழகான உதட்டில் உறுத்தாத கலரில் லிப்ஸ்டிக். தோள் வரை பாப் கட்டில் முடி. ஏதோ ஒரு சினிமா நடிகையை நினைவு படுத்தினாள். ரொம்ப ரொம்ப ரொம்பவே அழகாய் இருந்தாள். அவள் ஸ்கர்ட்டும் அந்த பளீரும் எனக்கு கண்ணை உறுத்திக் கொண்டிருந்தது. எப்படியாவது அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. கண்ணை மூடிக்கொண்டு திரும்பவும் அவளை நினைத்துப் பார்த்தேன்.//
இந்த கணத்தில் அந்த கொடூரம் அரங்கேறியிருந்தது."எப்படியாவது அவள் பக்கத்தில் போய் உட்கார்ந்து கொள்ளவேண்டும் என்று ஆவல் அதிகரித்த போதே" அவளருகே சென்று அமர்ந்திருந்தால் அந்த கொடூரம் அரங்கேறாமல் தடுத்திருக்கலாம்.
v
v
v
v
நான் உட்கார நினைத்த இருக்கையில் அந்த கொடூரம் "ஸ்வப்னா" உட்கார்ந்து விட்ட பின்பு,என்ன செய்ய முடியும் இப்போது?.
எப்பூடி?

நான் said...

நல்லாயிருக்குதுப்பா

அறிவிலி said...

அதானே... டுபுக்கு எதிர் சீட்டுக்குத்தானே நியாயமா ஆசைப்படனும்னு ஒரு சந்தேகம் ஆரம்பத்துலேயே வந்துது.

அறிவிலி said...
This comment has been removed by the author.
Unknown said...

Very nice dubukku, your characteristic style. Sujatha style :-) Lakshmi

Anonymous said...

Nala vedekai parthitu... aunty kita adi vanga kudathunu... eppadi elam kathai soluthu parungooo.. fraud uncle.

Anonymous said...

Kathai mudikum pothu Thangamani pathanga thane, udane twist vachingalakkum .enna oru puthisalithanam

Sh... said...

எப்படி இப்படி!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

ha ha...eppadinga eppadi ellam? ...:)

மனம் திறந்து ...(மதி) said...

நான் அப்பவே நெனைச்சேன்... டுபுக்குன்னா முதல்லே உட்காந்துட்டு அப்புறம் தானே சால்ஜாப்பெல்லாம் செய்வார்... :)))

Unknown said...

sir, very last moment you changed the climax. But quite interesting....

Sudalai Muthu said...

Hi Mr.Renga,

I'm your blog follower, ( but this is the first comment :) :) ), native is Tenkasi,,, aathanga, courtallam, right now in Reading UK for two weeks.
yes, enjoying the climate....

அருணா செல்வம் said...

சூப்பர்...!!

balutanjore said...

dear dubuks
idhuthan dubukku touch
sonnalum spllatiyum neenga ambai sujatathan(kochukka vendam)

pl continue best wishes

balutanjore said...
This comment has been removed by the author.
Unknown said...

:)

Balaji Ramakrishnan said...

ஒரு வருஷத்துக்கு முன்னாடி "Some good blogs in Tamil" ன்னு போட்டு கூகுள் பண்ணினேன். அதுல உங்க blog உம் இருந்துது. பிளாக் பேரு "டுபுக்கா!!" அப்பிடீன்னு தான் முதல்ல படிக்க ஆரம்பிச்சேன். எழுத்து சுஜாதா நடை மாதிரி ரொம்ப எளிமையான தமிழ்ல, நகைச்சுவை கலந்த நடை. கடைசி ட்விஸ்ட், சான்சே இல்ல, பின்னீட்டீங்க பாஸ்!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

மிஸ்டர் டுபுக்கார்,
உங்களது பதிவிற்குள் தேடுவதற்கான பொறியை உங்களது பதிவின் அமைப்புப் பக்கம் (ப்ளாக் பேஜ் லேஅவுட்) மூலம் செயல்படுத்தவும்.

உங்களது டோர் பதிவின் சுட்டி தேவைப்பட்டு தேடினேன்..தேடினேன்.....தேடினேன்......................ஸ்ஸ்ஸ்......

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

வகைகள், தேடுகுறி எதுவும் பதிவுப் பக்கத்தில் தெரியவில்லை..பேஜ் லே அவுட் என்று ஒன்று இருக்கிறதே,அதைப் பார்ப்பதே இல்லையா? முதலில் இவற்றை(லேபிள்ஸ், சர்ச் பார்) செயலாக்கவும்.

Dubukku said...

நட்ராஜ் - :) :)

Bandhu - ஹப்பா வயிற்றில் பால் வார்த்தீர்கள். மிக்க நன்றி :)

அகிலா - மிக்க நன்றி மேடம்

ஹாலிவுட்ரசிகன் - ஹா ஹா :)) நன்றி சாரே

அமர பாரதி - எனக்குத் தெரியாதுங்க அவங்க அப்படியான்னு :P

வீடு சுரேஸ்குமார் - அப்படீங்கிறீங்க. இனிமே ஜாகிரதையா இருக்கேன் ;)

வல்லியம்மா - பாராட்டுக்கு மிக்க நன்றிம்மா. எம்மேல இவ்வளவு நம்பிக்கையா அவ்வ்வ்வ் :))

சேக்காளி - :))) ஏதாவது உள்குத்து இருக்கா உங்க முடிவுல :P

நான் - மிக்க நன்றிங்கோவ்

அறிவிலி - இங்க எங்க ஊர் நெடுந்தூர ட்ரெயின்ல ப்ளைட் மாதிரி ஒரே பக்க சீட் தான் பெரும்பாலும் இருக்கும். நடுவில மட்டும் ஒரே ஒரு டைனிங் டேபிள் மாதிரி ஒரு சீட் பேமிலிக்காக இருக்கும்.

லக்‌ஷ்மி - மிக்க நன்றிங்க. அவரு பெரிய வாத்யார்ங்க

அனானி - அங்கிளா....யேய்யாருப்பா இந்த அனானி :))))

அனானி - ச்சே சே...அதுக்காகலாம் கதைய மாத்த முடியுமாங்க

ஷ் - ஹீ ஹீ அப்படி தான் :P நன்றிங்கோவ்

பொயட்ரி - :))

அப்பாவி - ஹீ ஹீ நீங்களுமா :))


மனம் - அடடா கரீக்டா சொன்னீங்க

மதன் - சார்லாம் வேண்டாங்க சும்மா டுபுக்குன்னே கூப்பிடலாம். மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு

சுடலை முத்து - ஆஹா சூப்பர். தென்காசியா...ரெட்டிங்கா :))) நான் லண்டன்ல இருக்கேன் அடிக்கடி வருவேன். இங்க இன்னொரு தென்காசி நண்பரும் இருக்கிறார் :)

அருணா - மிக்க நன்றிங்க

பாலு - மிக்க நன்றி சாரே உங்க பாராட்டுக்கு. பெங்களூர் வாசம் எப்படி இருக்கு. அந்த சுஜாதா மேட்டர் விடமாட்டிங்கிறீங்க :)

விஜய்குமார் - மிக்க நன்றி சாரே

Dubukku said...

பாலாஜி - மிக்க நன்றிங்கோவ் உங்க பாராட்டுக்கு. உங்க (முழு) பேர்லயே எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான்.


அறிவன் - என்னோட டெம்ப்ளேட் ஒரு தலைவலிங்க. அது பழைய incompatible template. எதாவது பிரச்சனை வந்தா சரி பண்றதுக்குள்ள முழி பிதுங்குது. அதுனாலயே டெம்பிளேட்ட தொடுவது கிடையாது. இருங்க பார்க்கிறேன். சரி டோர் பதிவ எதுக்கு தேடினீங்க ????

புரட்சி தமிழன் said...

நல்லா தப்பிக்க வழிதெறிஞ்சிருக்கு இருந்தாலும் எனக்கு உண்மைமீது சந்தேகம்

ஆனந்தி said...

வணக்கம் டுபுக்கு சார்... நான் உங்க பகுதிக்கு புது வரவு... ஒரு பக்கத்துலயே உங்கள ரொம்ப ரசிக்க வச்சிடீங்க... இனியும் இதை நீங்கள் தொடரவேண்டும் என்று உங்கள் ரசிகையின் பணிவான வேண்டுகோள்...

(முதல்ல இந்த கதைய படிக்க ஆரம்பிச்சதும் .. ஏதோ எசக்கு பசக்க இருக்குமோ.. னு நினைச்சேன்.. ஆனா கடைசில... ஏமாத்திடீங்க பா...)

நாடோடிப் பையன் said...

Unexpected twist. Good short story.

அப்பாதுரை said...

ரொம்ப நல்லா எழுதியிருகிங்க. பாராட்டுக்கள்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

|| சரி டோர் பதிவ எதுக்கு தேடினீங்க ????||

ஒரு நண்பருக்கு பகிர வேண்டியிருந்தது..பின்னர் ஒரு வழியாகக் கிடைத்தது..

என்ன காரணத்திற்காகப் பகிர வேண்டியதிருந்தது என்று மறந்து போய் விட்டது..பழைய மின்மடல்களைத் தேடினால் கிடைக்கலாம்.பொழுதுதான் இல்லை. :))

ஜெகா said...

'I want to ask you somthing' என்ற தலைப்பில் நான் எழுதிய சிறுகதையை கொஞ்சம் பட்டி டிங்கரிங் செஞ்சு போட்ட மாதிரி இருக்கே பாஸ் :(

Dubukku said...

புரட்சி தமிழன் - :))) என்று உங்களுக்கு புன்னகையை மட்டும் இப்போதைக்கு ;)

ஆனந்தி - மிக்க நன்றி உங்கள் ஊக்கமான பின்னூட்டத்திற்கு. கண்டிப்பா அடிக்கடி எழுத முயற்சி செய்கிறேன்.

நாடோடிப் பையன் - மிக்க நன்றி சாரே

அப்பாதுரை - மிக்க நன்றிங்கோவ்

அறிவன் - சரி விடுங்க

ஜெகா - அண்ணே உங்க கதையை நான் படித்ததில்லை. எனக்கு அடுத்தவர் படைப்பை பட்டி டிங்கரிங் பார்த்து நம்ம பெயரில் போடுவது பழக்கமுமில்லை உடன்பாடுமில்லை. உங்க பின்னூட்டத்திலிருந்து இன்று தான் உங்க வலைப்பக்கத்திற்கு என்னுடைய முதல் வருகை . ஆர்வத்தில் உங்க கதையைம் படிக்கலாம்ன்னு தேடிப் பார்த்தேன் கிடைக்கலீங்களே? அந்த கதைக்கு லிங்க் கிடைக்குமா?. என்னுடைய படைப்பு எனது அன்றாட வாழ்வில் நடக்கும் சம்பவங்களை வைத்து ஒரு புனைவு அவ்வளவே.
ஒருவேளை உங்களுக்கும் எனக்கும் ஒருத்தருக்கொருத்தர் பாதிப்பில்லாமல்/காப்பியடிக்காமல் இருவருக்கும் ஒரே மாதிரி ஐடியா தோன்றியிருக்கலாம். இது கூட எனக்கு முன்னால் அவ்வளவு நம்பிக்கையில்லை ஆனால் எனக்கு இந்த அனுபவம் சமீபத்தில் இரண்டு/மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது (குறும்பட விஷயத்தில்)

Post a Comment

Related Posts