Sunday, February 28, 2010

வித்துவான்

எஸ்.பி.பியின் என்னோடு பாட்டு பாடுங்கள் நிகழ்ச்சி பார்க்கும் போதெல்லாம் வயத்தெரிச்சலாய் இருக்கும். நானும் பெரிய வித்துவான் ஆகி இருக்கவேண்டியவன். சில பல துரதிஷ்டங்களால் முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் பாடுவதை மட்டும் இன்றளவில் விட்டதே கிடையாது. சந்தோஷமாய் இருக்கும் போது தனியாக ரூமில் பாடுவேன். சில சமயம் கலையுணர்வு மிஞ்சி காலை ஒன்பதேகாலில் இருந்து ஒன்பதரை வரை நாலு மணி நேரம் அசுர சாதகம் பண்ணுவேன். ஆனால் என்னோட வீக் பாயிண்டே எந்தப் பாட்டானாலும் முதல் வரி மட்டுமே வார்த்தைகள் கரெக்ட்டாய் வரும். அடுத்த வரியிலிருந்து கொஞ்சம் மானே தேனே பொன்மானே வந்துவிடும்...இந்த சின்ன சறுக்கல் மட்டும் இல்லாவிட்டால் பெரிய வித்துவானாகி இருக்கவேண்டியவன் ஹூம்...

நான் பாட ஆரம்பித்த அறுபத்தி எழாவது வினாடி தங்கமணி "பூனையை காப்பாத்துங்க பூனையை காப்பாத்துங்க"ன்னு அலறிக் கொண்டு வருவார். என்ன பூனை...எங்க...ஏன் காப்பாத்த வேண்டும் ஹ... கேட்கவே மாட்டேனே. "இங்க யாரோ பூனையை கழுத்த நெரித்து, அது கதறுவது மாதிரி இருந்தது...அதான் ஓடோடி வந்தேன்..." என்று கேட்காவிட்டாலும் அவராகவே ஒரு விளக்கமளிப்பார். "இனிமே பாட்டு பாடினா நான் பாடறேன்னு அனௌன்ஸ் பண்ணிட்டு பாடுங்கோ...என்ன ஏதுன்னு தெரியாமல் நாங்களெல்லாம் பதற வேண்டியிருக்கு"ன்னு ஆதங்கப் படுவார். இங்க நான் என்ன ஆல் இந்தியா ரேடியோல அனௌன்ஸ் பண்றதுக்கா சாதகம் பண்றேன்...ஒரு வித்துவானோட பீலிங்ஸை புரிந்துகொள்வே மாட்டார்.

எல்லாம் கொஞ்ச நாள் தான். ஒரு தரம் நாள் சாதகம் பண்ணும் போது இந்த வித்துவானுக்கே தெரியாமல் அதை ரெக்கார்ட் செய்து என்ன ஏதுன்னு சொல்லாமல் வாக்மேனில் என்னை கேட்க விட்டு, அப்புறம் நான் பூனைய காப்பாத்துங்க பூனைய காப்பாத்துங்கன்னு பதறி, சங்கீத வித்துவான் ஆசையை விட்டுவிட்டேன். விட்டுவிட்டேன் என்றால் முழுதாக எல்லாம் இல்லை. அந்த மாதிரி கெட்ட பழக்கம் எங்க குடும்பத்திலேயே கிடையாது. ஐ.ஐ.டிக்கு ஆசைப் பட்டு சேர முடியாவிட்டாலும்.. கஷ்டப்பட்டு என்ட்ரன்ஸ் எழுதி என்.ஐ.ஐ.டியிலாவது சேர்ந்துவிடுவோம். சங்கீத வித்துவான் ஆக முடியாவிட்டாலும் பூனை மேட்டருக்கப்புறம் நாம ஏன் ஒரு மிமிக்கிரி வித்துவான் ஆகக் கூடாது என்று குறிக்கோளை மாத்திவிட்டேன். ஊரில் நான் காலேஜ் படிக்கும் போது மிம்க்ரி பண்ணப் போறேன்னா, "முந்தினனா ராத்திரியே நல்லா ஊற வைச்சுடு...அப்போதான் அரைக்கும் போது பதமா வரும்"ங்கிற ரேஞ்சுக்குத் தான் மிமிக்ரியைப் பத்தி தெரியும். ஒருத்தரும் இல்லாத ஊர்ல கம்பு நட்டவன் தான் ராஜான்னு ஊர்ல மிமிக்ரில கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் போட்டிருந்தேன்."அடக்கம் அமரருள்...etc etc" திருவள்ளுவர் நமக்கா சொல்லி இருக்கிறார்?

முன் ஒரு நாளில் "செந்தாழம் பூவில்"-ஜேசுதாஸ் ஆரம்ப ஹம்மிங்கை எப்படியாவது அலேக்காய் பிடித்து ரிப்பீட் அப்ளாஸ் வாங்கிவிட வேண்டும் என்று அசுர சாதகம் கொண்டிருந்த போது, தங்கமணி "ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் சோத்துக்கு ஊளையிடுவது மாதிரி இருக்கு தாங்கமுடியலை" என்று என்கரேஜிங்காய் பீட்பேக் குடுத்திருந்தார். அதனால் முதலில் நாயில் இருந்து மிமிக்கிரி ப்ராக்டீஸை ஆரம்பிக்கலாம் என்று நண்பர்களிடம் ஐடியா கேட்டது தப்பாய் போய்விட்டது. இந்த உலகம் இருக்கே உலகம்... ரொம்ப போட்டியும் பொறாமையும் நிறைந்தது. நான் பாட்டுக்கு நாய் பூனைன்னு சாதகம் செய்து கொண்டிருந்தால் இன்னொரு நண்பர் 'சில்க் ஸ்மித்தா' வீட்டு நாய் நமீதா விட்டு பூனைன்னு கான்செப்டை இம்பரவைஸ் செய்து கைதட்டை வாங்கிக் கொண்டுப் போய்விட்டார். அப்புறம் "தம்பீ இங்க வா..தொழில்ல போட்டி இருக்கலாம் பொறாமை இருக்க கூடாது"ன்னு அவரை கூப்பிட்டு சமாதானக் கூட்டம் போட்டு ‘சில்க் சுமிதா’ வீட்டு நாய் அவருக்கும், ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் எனக்குமாய் பங்கு போட்டுக் கொண்டோம். ஆனாலும் மனிதர்களுக்கு சினிமா மோகம் ஜாஸ்தி சார்... ஐய்யோ பாவம் ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாயாச்சேன்னு கொஞ்சம் கைத்தட்ட வேண்டாமோ... ம்ஹூம் சினிமா மோகத்தில் சிதறுண்டு சிக்கியிருக்கிறான் தமிழன்னு சும்மாவா சொல்லியிருக்கார் டாக்டர்.

ஒருதரம் மிஸ்கால்குலேஷன் ஆகி தொடர்ச்சியாய் ரெண்டு நாள் குளித்தது, உடம்புக்கு ஆகாமல் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் குரல் தெளிவு பெற இரண்டு வாரங்கள் பிடித்தது. "கடவுள் ஒரு பிகர் வீட்டு ஜன்னலை மூடினால் இன்னொரு லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறப்பார்"ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? நம்ம கம்மின குரலின் ஜியாக்ரபி தெரியாமல்..."அடேங்கப்பா...அப்படியே கலைஞர் மாதிரி பேசறீங்களே...நீங்க மட்டும் போன்ல பேசினா உடனே டி.வி பொட்டிய எடுத்து என் கைல குடுத்திடுவா"ன்னு ஒரு நண்பர் அள்ளி விட, அதுவரை சற்று தூங்கிக் கொண்டிருந்த மிமிக்கிரி வித்துவான் முழித்துக் கொண்டுவிட்டார். அப்புறம் கலைஞர், வீரபாண்டிய கட்டபொம்மன், டைனோசர், வெக்கம் கெட்ட கழுதை என்று வெரைட்டியாய் - மிரட்டலாய் மிமிக்கிரி வித்துவான் ப்ராக்டீஸை ஆரம்பித்தேன்.

ஆனால் தங்கமணிக்கு இதெல்லாம் துளியும் பிடிக்கவில்லை. கொஞ்சம் குரலை ட்யுன் செய்ய அவர் உதவியை நாட வேண்டி இருந்தது. "இந்த இழவுக்கு உங்க பாட்டு வித்துவான் பேராசையே எவ்வளவோ பரவாயில்லை, டைனோசர் குரலுக்கு புளிச்ச மோரைக் கொண்டா தோசமாவ கொண்டான்னு என் உசிரு போகிறது. உங்க சாதகத்தால பக்கத்து வீட்டுக்காரன் கூடிய சீக்கிரம் கவுன்சில்ல கம்ப்ளெயின்ட் குடுக்கப் போறான் "ன்னு ரொம்ப சலித்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். அவர் சலித்துக் கொண்டதாலோ இல்லை நம்ம பெர்பார்மன்ஸ் கண்திருஷ்டியிலோ என்னம்மோ, பெப்பரப்பேன்னு திறந்திருந்த தொண்டை திரும்பவும் அடைத்துக் கொண்டு குரலுக்கு பதிலாய் வெறும் காத்து மட்டுமே வர ஆரம்பித்தது. (சனிக்கிழமை மட்டும் நீராடுன்னு பெரியவங்க சொன்னத கேட்காததால் வந்த பிரச்சனை)


தங்கமணியோட சித்தப்பாவோட பெரியம்மாவோட மாமியோட நாத்தனார் ஒருவர் "கொதிக்கிற வெந்நீர்ல சொட்டு தேனோட இந்தப் பொடிய ரெண்டு ஸ்பூன் நன்னா கலக்கி குடு, நம்ம பாபநாசம் டேம் மதகு மாதிரி தொண்டை தானா திறந்துடும்" என்று அக்ஸ்தியரோட பேத்தி மாதிரி சித்த வைத்தியப் பொடி ஒன்றை குடுத்தார். தங்கமணி 'மனாளனே மங்கையின் பாக்கியம்' என்று யாரோவோட நாத்தனார் சொன்ன ரெண்டு ஸ்பூனுக்கு பதிலாக நாலு ஸ்பூன் ‘நன்னா’ கலக்கி., அதை குடித்துவிட்டு எனக்கு வாயோடு வயத்தோடு கலக்கி, கணீரென்று இருந்த வித்துவான் குரல் மக்கி துருப் பிடித்த பித்தளைப் பாத்திரத்தை தேங்காய் நார் வைத்து தேய்க்கும் சத்தம் மாதிரி மாறி விட்டது. அத்தோடு மிமிக்கிரி வித்துவான் ஆசையும் கானல் நீரானது. "இதுக்குத் தான் எங்காத்துக்காராளோடு வம்பு வெசுக்காதீங்கோ"ன்னு தங்கமணி பூச்சாண்டி காட்டிக் கொண்டிருந்தாலும் எனக்கென்னம்மோ தங்கமணி மருந்துப் பொடி டப்பாவில் சீயக்காய் பொடியை கன்ப்யூஸ் செய்திருப்பாரோ என்ற பயங்கர சந்தேகம் இன்றளவில் இருக்கிறது.

இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் எப்படியாவது எதிலாவது வித்துவானாகிவிடுவேன் சார்.

53 comments:

Ananya Mahadevan said...

வடை வடை வடை!

Ananya Mahadevan said...

மக்கி துருப் பிடித்த பித்தளைப் பாத்திரத்தை தேங்காய் நார் வைத்து தேய்க்கும் சத்தம் மாதிரி மாறி விட்டது - என்னால முடியல! சூப்பர்.. டுபுக்கு டச்!

தக்குடு said...

வந்தேன்! வந்தேன்!......:)

தக்குடு said...

//"கடவுள் ஒரு பிகர் வீட்டு ஜன்னலை மூடினால் இன்னொரு லேடீஸ் ஹாஸ்டல் கதவை திறப்பார்"ன்னு முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள் அல்லவா?// ஆமா, ஆமா, அந்த நம்பிக்கைல தான் வாழ்க்கை ஓடிண்டுருக்கு.

கானகம் said...

நெஜமாவே சிரிச்சு முடியலை..

எப்படி இப்படி? ”சுய எள்ளல் அட் இட்ஸ் பீக்” அப்படின்னு பீட்டர் வூட்டு என் அன்பையும், ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன்...

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிஸ்க்கால்குலேசன் ல தொடர்ந்து ரெண்டு நாள் குளிச்சீங்களா...

சிரிச்சி மாளலை..

இருந்த டென்சென்ல்லாம் உங்க் அபோஸ்ட் படிச்சி போயிடுச்சு.. நன்றி..

எங்க வீட்டு வித்வான் போடறது மானே தேனே மட்டும் தான்.. அது ஆரம்பிச்சதும் என்னோட அஸிஸ்டெண்ட் ரெண்டும் பேரு ம் “ அப்பா ப்ளீஸ்’ ந்னு சொல்லும்படியா ரெடி செய்து வச்சிருக்கேன்.. ;)

அறிவிலி said...

//ஒருதரம் மிஸ்கால்குலேஷன் ஆகி தொடர்ச்சியாய் ரெண்டு நாள் குளித்தது, உடம்புக்கு ஆகாமல் தொண்டை கட்டிக்கொண்டுவிட்டது//

இவ்வளவு கேர்லெஸ் ஆசாமியா நீங்க? சே.. சே... ஜாக்கிரதையா இருங்க.. உடம்பு விஷயத்துல பொறுப்பா இருக்க வேணாம்???

☀நான் ஆதவன்☀ said...

:))) கலக்கிட்டேள் போங்கோ!

Unknown said...

:))) by prabhakar

Unknown said...

only சிரிப்புதான். well done.

Bhaskar said...

மருத்துவர் தமிழ் குடி தாங்கி அவர்களை டாக்டர் அப்பிடீன்னு சொல்லி உங்களோட ஆங்கில அடிமை உணர்வை வெளிபடுதிட்டீங்க.

It took 5 minutes to type the above using tranliterate!!

Like all men, you seem to be not getting any support from home ruler!!.

விதை வளர தண்ணி ஊத்தாம அமிலத்த ஊத்தினா வித்வான் எப்பிடி உருவாக முடியும் ? !!

Porkodi (பொற்கொடி) said...

ஹையோ டுபுக்கு, வரிக்கு வரி quote பண்ணனும் போங்க! இதுக்கு தான் மிருதங்கத்தோட நிறுத்திக்கணும்ங்கறது! :)))

தங்கமணியின் யாரோவோட நாத்தனார் குடுத்த பொடி என்ன என்பதை தங்கமணியை ஒரு தகவல் அனுப்ப சொல்லவும், இங்கயும் அதுக்கு தேவை இருக்கு. :D

ambi said...

ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது..? :P

(எதையோ ஊதினா சரி!)

Deepa said...

sirippu vidhvan agiduvinga

பத்மநாபன் said...

எப்படி டுபுக்கு ? வரிக்கு வரி நகைச்சுவை ...வார்த்தைக்கு வார்த்தை ஒரே கலக்கல் ... உங்களுக்கு பொடி, எங்களுக்கு இந்த பதிவு முச்சூடும் .... சிரிச்சே கலங்கிரிச்சு...... கோட் எல்லாம் பண்ண முடியாது.... பதிவியே வெட்டி ஓட்டனும் .... நானும் கர்சிப் போட்டுட்டேன் .

ராம்ஜி_யாஹூ said...

you could have added your audio file too, then we can judge and tell whether you are a vidhwaan or vitthu vaan.

emohansydney said...

"அப்பா பாடப்போறேன்"னு மிரட்டி, உங்க குழந்தைக்கு எப்போவாவது சாப்பாடு ஊட்டியிருக்கீங்காளா?:))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

உங்க வித்துவான் ஆசை எல்லாம் இருக்கட்டும். உங்க தங்கமணி கிட்ட கொஞ்சம் அந்த பொடிமேட்டர் கொஞ்சம் கேட்டு சொல்றீங்களா. எங்க வீட்டுல கூட இந்த நாய் பூனை தொல்லை கொஞ்சம் ஓவரா இருக்கு. அந்த ரகசியம் உங்க ப்ளாக்ல போஸ்ட் பண்ணினா உங்க ப்ளாக் ஐ தினம் மூணு தரம் சுத்தறேன்னு வேண்டிக்கறேன்...

sriram said...

சூப்பர் போஸ்ட் ரங்கா, அடிக்கடி எழுதுங்க
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Kavitha said...
This comment has been removed by the author.
Kavitha said...

Washington-il thirumanam padikkara madhiri irukku unga writing style. Pg Woodhouse, Saavi varaisaila senthuruveengannu ninaikkiren. Thanks for making us happy!

சர்ணா said...

காலை ஒன்பதே காலிருந்து ஒன்பது வரைக்கும் எந்த ஊர்ல சார் நாலு மணி நேரம்??
அது நாலு இல்ல.. காலு

BTW இப்போ தான் ஆரம்பிச்சுருக்கேன்... ரொம்ப நல்லா இருக்குண்ணோய்..!

After reading this i postponed my thought of blogging for unknown months

Thanks for the entertainment

கைப்புள்ள said...

வணக்கம் டுபுக்கு சார்,

ரொம்ப நாளைக்கப்புறம் உங்க போஸ்டுல கமெண்டு போடறேன். ஆனால் இது ரொம்ப நாளைக்கப்புறமான வருகை இல்லை. எந்த வரியை quote செய்து கமெண்ட் போட்றதுன்னே தெரியலை...ஒவ்வொரு வரியும் சரவெடி...சிரிச்சி சிரிச்சி கண்ணுல தண்ணி நிக்குது.

//Deepa said...
sirippu vidhvan agiduvinga
//

ஏற்கனவே அவரு மகாவித்வானுங்க.

Anonymous said...

dubukku sir,

sirichi sirichi...kannula thanner vandhu vitadhu...you rock....enakkum en rengamanikkkum silent agreement....paada arambicharna....silenta bajjiyo,bakkodavo alladhu edho oru tiffin koduthuduven...edhukku pasiyil thavikkira manushana paadi..adha naan kettu...nnu thonum.
ps..unga thangamani kitta andha podiyoda recipe kettu sollavum.royalty vennunna koduthidaren..please punniyama pogum....
nivi.

Anonymous said...

Hi,

After so many months, I saw a wonder blog in ur blogspot.. Serichu serichu vaitha vali vanthuduchu...rumba naal kalichu rumba funny ya ezhuthi irukkeenga.. :-) .. Back to form...

SweetVoice.

CS. Mohan Kumar said...

கலக்கல். பழைய டுபுக்குவை பார்க்க முடிஞ்சது

The Print Lover said...

"ஐ.ஐ.டிக்கு ஆசைப் பட்டு சேர முடியாவிட்டாலும்.. கஷ்டப்பட்டு என்ட்ரன்ஸ் எழுதி என்.ஐ.ஐ.டியிலாவது சேர்ந்துவிடுவோம்"

ROFL :) Good to see you back to regular blogging. Pls dont pull a disappearing act again. Loved this post.

Girl of Destiny said...

another superb laugh! great going and great to see frequent posts...
sonnadhu naala kannu pattuda poguthu...dhayavu seidhu keep 'em coming!!

balutanjore said...

sonnalum sollatiyum neenga AMBAI SUJATHA than.
ippo varavara kalki madhiri kalakkugirirgale.

please continue writing

(KALKI engal pakkathu oorthan)

balasubramanyan vellore

Madhuram said...

Neenga dhaan already comidy vidhvan agiteengale! Then why worry?

Oru vela thangamaniku poramaiyo? Neenga romba nalla paadi nalla peru vangida poreenganu.

Yaaro enna adika varaa madhiri irukku.

roguegene said...

Superb post :) unga next short film ku ungaloda oru blog post aye eduthu pannunga..enna ketta unga moviekana story unga blog layae irukunu dan solven.. each time i read it enaku oru padame kanla oduthu..
but the problem is ungala mathri andha dialogues yaralayum deliver panna mudiyumanu than therla.. but no probs.. neengale nadichuralam.. :)

Perumal Kuppusamy said...

Hello Dubukku,
This is the first time I am posting the comment.
Its really good.I cant control my laugh.
Great Job!!

Subramanian Vallinayagam said...

"‘சில்க் சுமிதா’ வீட்டு நாய் அவருக்கும், ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் எனக்குமாய் பங்கு போட்டுக் கொண்டோம். ஆனாலும் மனிதர்களுக்கு சினிமா மோகம் ஜாஸ்தி சார்... ஐய்யோ பாவம் ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாயாச்சேன்னு கொஞ்சம் கைத்தட்ட வேண்டாமோ... ம்ஹூம் சினிமா மோகத்தில் சிதறுண்டு சிக்கியிருக்கிறான் தமிழன்னு சும்மாவா சொல்லியிருக்கார் டாக்டர்"

I read this post and laughed a lot. ezhuthil oruvarai sirikaa vaippathu romba kashtam, ana athu ungalukku romba easy aaga varukirathu. keep posting.

Matangi Mawley said...

i m a bathroom singer! whatever u felt after seeing that show- I can very well relate to that! May be time has played not so fairly this time.. but- engalukkum kaalam varum!

good blog...

jai vinayak said...

A Friend of mine is in deep serious trouble and needs help! Please help if you can by contacting and giving this information

to law enforcement agencies i.e. police and press in every city plus law and order entities of all kinds ASAP!!! Help and

spread this news to everyone and save his life!! Pls note this is a campaign against Bangalore Police who are partnered with

Real Estate gangsters of Bangalore and are torturing him and all his contacts for the past 3 months. He has been severely

beaten on atleast 35 occassions and police is not interested. He has fallen ill ( due to food poisoning by the gangsters) on

more than 9 occassions in the past 3 months!!pl contact press international and indian and every other contact you know who

can save from these ghastly criminals! HELP!! FAST and URGENT!!! Pl note he cannot go to the cops since its the cops who

themselves along with politicians are chasing him all over the country!

And these gangsters have targetted him since he is all alone in the world with no one for family (all having died since he

was 16) and therefore they thought that he would be the easiest target to make some quick money by taking over his belongings

i.e. car, laptop etc since it is becoming tough to find a target with property these days.ANd he has built the blog in

desperation and atleast I wouldn't a victim like him to prove each and everything prior to offering help!


Pl read...

Real Estate gangsters are after me to kill me! I am surrounded by 100 gangsters in various guises at all times!!!! I can be

killed any moment and Bangalore police working for the criminals are themselves chasing me the whole country for the past 3

months! And they're after me to kill me in a very strange way i.e. psychological manipulation of circumstances around me!

Please help save my life. Pls read http://truthbottle.blogspot.com for all detailed information of this country wide chase by

bangalore police and real estate gangster network who are supported by criminal MLAs based out of Bangalore and Karnataka.

This is not a joke! Their idea is to completely cut me off from any and every kind of help that can come to me by spreading

vague stories about me or by telling that I have gone insane! I will be killed in a few days which is inevitable but you

still have this to know who did it!International media ...everyone pl call all and break what is one of the greatest mafia

secrets known in the world!!Most required is someone who is in the media or someone having strong contacts in media to break

it to the world ASAP!!


Even if you cannot help you can still help in spreading the news to as many as possible which can possibly help me in a big

way and by calling up police in any city of India and providing them this information, since I am constantly surrounded by

gangsters at all times



jai vinayak
IIMB Batch of 2000
http://truthbottle.blogspot.com

call press or media ...or anyone you can !!

Anonymous said...

ஐயா,
உங்க போஸ்ட ஆபீஸ்ல வெச்சு படிச்சு, சிரிப்ப அடக்கமுடியாம திணறி, பக்கத்துல உக்காந்திருக்கரவங்க "இவன் என்ன லூசா" னு லுக் விட்டு...

ஏன் சார் இப்படி...

எனிவேஸ் கீப் இட் அப்.. சூப்பர் போங்கோ...

குவைத் ஸ்ரீராம்

சக்திவேல் விரு said...

டுபுக்கு அண்ணா கலக்கி புட்டுடேல் போங்கோ நல்ல நகைசுவை இடுகை படித்த அனுபவம் கிடைச்சுது .

பத்மா said...

கடுகு ப்ளாக் இருக்கு பாருங்க அதுபோலே ஒங்க இடுகையும் செம காமெடி .keep it up

Mahesh said...

ரொம்ப நாள் கழிச்சு வரேன்... சாரி...

விடுங்க சாரே.... நம்மளை மாதிரி வித்துவான்களோட வித்வத் எல்லாம் சாதாரணமாகப் பட்டவங்களுக்கு புரியாது. நம்ம கடைக்கு ஒரு நடை வாங்க... அப்பறமா நானும் நீங்களுமா ஹங்கேரி போலாம் :)))))))))))))))))))

லங்கினி said...

kalakkal post...Unga blog-a office-la padikkave mudiyadhu..but what to do anga dhane naan vetti-a irukken :)

Dubukku said...

அநன்யா - வாங்க மிக்க நன்றி :)

தக்குடுபாண்டி - ஆஹா சாமியாராய் இருந்தவனா இப்படி பேசறது?...:))

ஜெயக்குமார் - வாங்க சார்..மிக்க நன்றி உங்க பாராட்டுக்கும் ஆதரவுக்கும். தங்கள் ஆதரவு என்றும் நமக்குத் தேவை

முத்துலெட்சுமி - ஆமாங்க கொஞ்சம் கம்ப்யூட்டர் மிஸ்டேக் ஆகிடிச்சு அதான்...மிஸ்க்கால்குலேசன் . மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு. கரெக்ட்டா தான் பழக்கி வைச்சிருகீங்க வீட்டுல...இப்போ என் பொண்னுங்களும் இதையே தான் சொல்றாங்க

அறிவிலி - ஆமாங்க கொஞ்சம் அஜாக்கிரதையா கம்ப்யூட்டரை நம்பிட்டேன் :))

நான் ஆதவன் - வாங்கோ...டேங்க்ஸ் டேங்க்ஸ்....:))

பிரபாகர் - ஹீ ஹீ வாங்க மிக்க நன்றி :)

ழு - டெங்க்ஸ் :))

பாஸ்கர் - //விதை வளர தண்ணி ஊத்தாம அமிலத்த ஊத்தினா வித்வான் எப்பிடி உருவாக முடியும் ? !// சும்மா நச்சுன்னு சொல்லிட்டேங்க சார்...கெக்கிறவங்களுக்கு கேக்குதான்னு பார்ப்போம் :)))

பொற்கொடி - வாங்க மேடம் :) பாருங்க நீங்க ஆரம்பிச்சு பொடிக்கு ரொம்ப டிமாண்ட் ஆகிப் போச்சு...ராயல்டி முறையில் தங்கமணி விற்கலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்க. நான் தான் ரயில் மார்க் சீயக்காய் பொடியை இப்படி பெயர் மாத்தி வித்தா பிரச்ச்னைன்னு சொல்லி வைச்சிருக்கேன் :))

அம்பி - எங்க ஊத விடறாங்க ஹும்

தீபா - அதுக்கு தான் முயற்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்

பத்மநாபன் - ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கும் அன்பிற்கும். கடமைப் பட்டுள்ளேன்.

யாஹூராம்ஜி - நீங்க என் மேல வெச்சிருக்கிற நம்பிக்கை என்னை புல்லரிக்க வைக்குது :)) அதையும் ஒரு நாள் போட்டுறுவோம் :))

சிட்னி மோகன் - அதெல்லாம் சர்வ சாதாரணமா நடக்கும்ங்க

அப்பாவி தங்கமணி - ஓக்கே இப்பவே சுத்த ஆரம்பிங்க...:)) இந்த தொழில் ரகசியம் என்னான்னா...ரயில் மார்க் சீயக்காய் பொடியை வாங்கி உங்க வீட்டு மருந்துப் பொடியில கலந்துடுங்க அப்புறம் பாருங்க எஃபக்ட்ட

ஸ்ரீராம் - மிக்க நன்றி ஸ்ரீராம். உங்க பாராட்டுக்கும் என்றும் குறையாத அன்பிற்கும்.

பொயட்ரீ - அந்த புக்க ரொம்ப நாள் தேடி ரெண்டு நாள் முன்னாடி தான் கிடைச்சுது. இப்ப தான் படிக்க ஆரம்பிச்சுருக்கேன்

சர்ணா சுப்பு - ஓ அப்படியா இப்ப மாத்திட்டாங்களா...வாங்க ரொம்ப நன்றி உங்க பாராட்டுக்கு. ஆனா நீங்க ப்ளாக் ஆரம்பிக்கிறதையெல்லாம் தள்ளிப் போடாதீங்க..கையோட ஆரம்பிச்சுடுங்க

Dubukku said...

கைப்புள்ள - வாங்க சார். எப்படி இருக்கீங்க வீட்ல எல்லாரும் நலமா. மிக்க நன்றி உங்க அன்புக்கும் பாராட்டுக்கும். கடமைப்பட்டுள்ளேன்.

நிவி - அட உங்க வீட்டு டெக்னிக் ரொம்ப நல்லாயிருக்குங்க...அடிக்கடி இப்படி டிபன் கிடைக்கும்ன்னா தொடர்ந்து சாதகம் பண்ணலாமே :)))

சுவீட்வாய்ஸ் - வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு.

மோகன்குமார் -மிக்க நன்றி சாரே

தி ப்ரின்ட் லவ்வர் - மிக்க நன்றி சாரே. ஐய்யோ சொல்லாதீங்க...அப்படி சொன்னாலே ஏதாவது வேலை வந்துடுது :))))


கேர்ல் ஆஃப் டெஸ்டினி - மிக்க நன்றி மேடம். // அடிக்கடி...// ஹீ ஹீ :)))

பாலு தஞ்சாவூர் - வாங்க உங்க அன்பிற்கு மிக்க நன்றி :)) கல்கி அவர் - மகா வித்வான்ங்க :))

மதுரம் - நீங்க தான் இந்த வித்துவானோட திறமைய கரெக்டா புரிஞ்சி வைச்சிருக்கீங்க...ரொம்ப டேங்க்ஸ்ங்க :))))

ரோக்ஜீன் - வாங்க சார். முழு நீள படம் எடுக்கிற நாள் அதிக தூரத்தில் இல்லை. மெதுவாக நகர்ந்து கொண்டிருக்கிறேன் பார்ப்போம். உங்க நம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன் மிக்க நன்றி :))

பெருமாள் குப்புசாமி - மிக்க நன்றி உங்க முதல் கமெண்ட வரைவழைக்க முடிந்த இந்த போஸ்ட் பற்றி மிக்க மகிழ்ச்சி :)

சும்ரமண்யம் வள்ளிநாயகம் - மிக்க நன்றி சார் உங்க பாராட்டுக்கும் அன்பிற்கும். மிக்க ஊக்கமாய் இருக்கிறது.

மாதங்கி - நன்றி. நீங்களும் நம்மள மாதிரி பாடகரா :P //May be time has played not so fairly this time.. but- engalukkum kaalam varum!// ஐய்யைய்யோ நான் ஒன்னுமே சொல்லலையே ஏன் இந்த கோவம்

Dubukku said...

Jai vinayak - I have to admit I initially thought your comment is just a spam and then I thought it was just a msg trying to create sensation. I empathise with you that its difficult to fight established hooliganism. But if I were you I would go collecting the facts (beyond just names and mobile numbers) and then approach the media. There are lots and lots of media people here in the blog world and all media does have emails published. You may try them as well?

குவைத் ஸ்ரீராம் - ஆஹா பாஸ்டன் மாதிரி இப்போ குவைத் ஸ்ரீராமா ...வாங்க வாங்க மிக்க நன்றி உங்க பாராட்டுக்கு..

வேலுபையன் - மிக்க நன்றி சாரே

பத்மா - மிக்க நன்றி. கடுகு பளாக் வைச்சிருக்காரா அந்த முகவரி கிடைக்குமா ப்ளீஸ். தேடிப்பார்த்தேன் சிக்க வில்லை :((


மகேஷ் - அதே அதே....கண்டிப்பா ஹங்கேரி போகலாம். அங்க போனா கச்சேரி கிடைக்குமா?? :))


லங்கினி - மிக்க நன்றி ஹை. //..but what to do anga dhane naan vetti-a irukken :)// என்ன சொல்ல வர்றீங்க...வீட்டுல ரொம்ப பிசின்னா :))))

Madhuram said...

Dubukku, thank you very much for visiting and your comment. Reg. pictures "ella pugazhum ranguvukke". Enga veetu photography vidhvan avaru. Aana enna sila samayam ennoda blog uyir vazharadhe avar edukkira photos naala dhaanu appappa konjam digital camera vileya film kaatuvaaru.

The camera is Cannon EOS 350. He also has got a couple of extra lenses. Adhukkum enakkum romba dhooram. Vera edhavadhu info. venumna kettu solren.

Dubukku said...

மதுரம் - ரொம்ப கலக்கலா இருக்குங்க உங்க சைட். தங்கமணி ஆர்வத்தோடு படிக்கிறேன்னு சொல்லி இருக்கார்...(அதுலேர்ந்து எவ்வளவு சமைக்கிறார்ன்னு பார்ப்போம்..:))) ) புகைப்படங்கள் எல்லாம் மிக மிக அருமை. எனது வாழ்த்துகளை ரங்குவிடம் கண்டிப்பாக சொல்லவும். DOF பார்த்தவுடனேயே நினைத்தேன் மிக ப்ரொபஷனலாய் இருக்கிறது.

D. Chandramouli said...

Your writing style is akin to Savi's and Crazy Mohan's. Do you remember Crazy Mohan's dialogue in a Kamal movie Panchathanthiram wherein the writer would have played a laugh riot with the words 'munnadi, pinnadi'. Seriously, you should try your hand in writing for comedy movies. We always know what some one means 'tube light'. A friend of mine once said of the same thing differently - 'village tube light'. Remembering my teen age years in a village midway between Tiruvarur and Nagapattinam, I recall how long it took for the tube light in my house to come to life! Dubukku: I like your style, it is immensely pleasurable. Rarely there are occasions for us to laugh out loud. We all have become serious these days. But reading a couple of blogs of yours makes me uncontrollable with laughter. Great job. Keep it up. Thanks. D. Chandramouli, Jakarta, Indonesia

Arul Kumar P அருள் குமார் P said...

Aiyyo saami,sirithu ,sirithu vairey punna poiduchu. Bath room la kulikkum pothu padichatha nenachu siruchittey kulichen.Bathroomma vittu veliya varum pothu oru koottamey enna paithuyakaran maathiri parthuchu...
( I am following you...) ( Romba latta ulla varono..!?)

Arul Kumar P அருள் குமார் P said...

//செந்தாழம் பூவில்"-ஜேசுதாஸ் ஆரம்ப ஹம்மிங்கை எப்படியாவது அலேக்காய் பிடித்து ரிப்பீட் அப்ளாஸ் வாங்கிவிட வேண்டும் என்று அசுர சாதகம் கொண்டிருந்த போது, தங்கமணி "ரெண்டு நாள் பட்டினி கிடந்த நாய் சோத்துக்கு ஊளையிடுவது மாதிரி இருக்கு தாங்கமுடியலை"//
Eppadi sir Ippadi yellam....

Anonymous said...

Wowww super post. Vote ungalukku than

bandhu said...

ஹய்யோ! சூப்பர் காமெடி! ஒவ்வொரு லைன்லயும் காமெடி! எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க?

Kicha the great said...

Dear Dubukku Sir,
Thank you for a very lively and healthy comedy. Yours is simply great. Some time, you resemble Sujatha. May be both of yours are direct from the heart, as intimately felt. In fact, your writing tempt us to try our hand in writing and at the same time give us jitters to try.
Best Regards
VSS

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... நல்ல நகைச்சுவை...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை

உங்களின் தளம் வலைச்சரத்தில் இன்று மதுரை சொக்கன் அவர்களால் அறிமுகப்படுத்தி உள்ளது...
வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/2.html) சென்று பார்க்கவும். நன்றி ஐயா !

Unknown said...

superb post

Post a Comment

Related Posts